Yarl Forum
பயந்து ஓடிய போலீசார் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள்: உலகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=14)
+--- Thread: பயந்து ஓடிய போலீசார் (/showthread.php?tid=5050)



பயந்து ஓடிய போலீசார் - Vaanampaadi - 02-24-2005

பயந்து ஓடிய போலீசார்

ஜப்பானில் டோக்கியோ நகரில் ஒரு கட்டிடத்தின் மீது மோதி நின்ற காரை நோக்கி 2 போலீசார் சென்றனர். காரை ஓட்டி வந்தவர், இந்த விபத்தின் காரணமாக கார் கதவைத் திறக்க முடியவில்லை. பேஸ்பால் விளையாடுவதற்கான `பேட்' காரில் இருந்தது. அதை எடுத்து கார் கண்ணாடிகளை உடைத்து கார் ஜன்னல் வழியாக வெளியே வந்தார்.

அப்போது அவரை நோக்கி வந்த போலீசாரைப் பார்த்ததும் அவர் பேட்டைத் தூக்கிக்கொண்டு அவர்களை அடிக்கப் போவதுபோல விரைந்தார். இதைப் பார்த்த போலீசார் பயந்து போய் ஓடத்தொடங்கினர்.

கொஞ்ச தூரம் போலீஸ்காரர்களை விரட்டிய அந்த நபர் பிறகு காரில் போய் உட்கார்ந்து விட்டார். அப்போது அந்த போலீசார் அங்கு வந்து அவரை மடக்கிப் பிடித்தனர்.

விபத்து ஏற்படுத்தியவர் அடிக்க ஓடி வந்ததைப் பார்த்து போலீசார் பயந்து ஓட்டம் பிடித்ததை ஒரு டி.வி.சேனல் படம் பிடித்து ஒளிபரப்பியது. இதைப் பார்த்து கோபம் அடைந்த ஜப்பான் பிரதமர் போலீசார் எதையும் துணிவோடு எதிர்கொள்ளவேண்டும் என்று வலியுறுத்தினார்.

தினதந்தி