Yarl Forum
நடிகை ரோஜா தாயார் மாரடைப்பால் மரணம் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: துயர்பகிர்வு / நினைவுகூரல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=17)
+--- Thread: நடிகை ரோஜா தாயார் மாரடைப்பால் மரணம் (/showthread.php?tid=5047)



நடிகை ரோஜா தாயார் மாரடைப்பால் மரணம் - Vaanampaadi - 02-24-2005

நடிகை ரோஜா தாயார் மாரடைப்பால் மரணம்: தெலுங்குதேச தொண்டர்கள் அஞ்சலி

நகரி, பிப். 24-

நடிகை ரோஜாவின் தாயார் லலிதம்மா (வயது66). இவர் திருப்பதி ரூயா மருத்தவமனை நர்சிங் கல்லூரியில் பேராசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர். இவருக்கு சில நாட் களுக்கு முன்பு இதய கோளாறு ஏற் பட்டது.

இதையடுத்து அவரை சிகிச்சைக்காக ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சேர்த்தனர். இந்த நிலையில் நேற்று காலை 8மணி அளவில் அவர் திடீ ரென மாரடைப்பால் இறந்து போனார்.

அவரது உடல் சொந்த ஊரான சித்தூர் மாவட்டம் வளசபள்ளி கிராமத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டது.

தகவல் அறிந்ததும் ரோஜா மதனபள்ளிக்கு விரைந்து சென்றார். தாயாரின் உட லைப்பார்த்து கதறி அழுதார்.

அவர் நிருபர்களிடம் கூறும் போது என் அம்மா எனக்கு சிறுவயதில் இருந்தே நிறைய சுதந்திரம் கொடுத்தார். படங் களில் நடிக்க விரும்பியபோது அவர் தடை எதுவும் சொல்ல வில்லை. நன்றாக ஊக்கப் படுத்தினார். அவரது ஒத் துழைப்பும், ஆதரவும் இல்லா விட்டால் என்னால் 120 படங் களில் நடித்துஇருக்க முடி யாது.

நான் பிரச்சினைகளில் சிக்கியபோதெல்லாம் எனக்கு பெரும் ஆறுதலாக இருந்ததது தாயார்தான். அவரது மரணம் என்னை நிலைகுலையச் செய்து விட்டது என்றார்.

நடிகை ரோஜாவின் தாயார் இறந்த தகவலை அறிந்ததும் நகரியில் இருந்து வேன், லாரி களில் ஆயிரக்கணக்கான தெலுங்குதேச தொண்டர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் வளசபள்ளிக்கு சென்றனர். அங்கு லலிதாம்மாளின் உடலுக்கு மாலைகள் அணி வித்து அஞ்சலி செலுத்தினர்.

இதையடுத்து இன்று காலை லலிதாம்மாவின் இறுதிச் சடங்கு நடந்தது.

மாலைமலர்


- Malalai - 02-24-2005

தாயை இழந்த சேய்க்கு ஆழ்ந்த அனுதாபங்கள்... Cry Cry Cry Cry