![]() |
|
செவ்வாய் கிரகத்தில் பெரிய `பனிக்கடல்' விஞ்ஞானிகள் ... - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள்: உலகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=14) +--- Thread: செவ்வாய் கிரகத்தில் பெரிய `பனிக்கடல்' விஞ்ஞானிகள் ... (/showthread.php?tid=5046) |
செவ்வாய் கிரகத்தில் பெரிய `பனிக்கடல்' விஞ்ஞானிகள் ... - Vaanampaadi - 02-24-2005 <img src='http://www.maalaimalar.com/images/news/Article/24-2-2005/24mars.jpg' border='0' alt='user posted image'> செவ்வாய் கிரகத்தில் பெரிய `பனிக்கடல்' விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு ஆம்ஸ்டர்டாம், பிப். 24- செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வாழ முடியுமா? அந்த கிரகத்தின் தட்பவெப்ப சூழ்நிலை என்ன என்பது குறித்து உலகம் முழுவதும் ஆராய்ச்சி நடக்கிறது. அமெரிக்காவும், ஐரோப் பாவும் போட்டி போட்டுக் கொண்டு இதற்கான வேலை களில் ஈடுபட்டு வருகிறார்கள். அமெரிக்காவின் நாசா விண்வெளி அமைப்பும், ஐரோப்பா விண்வெளி ஆராய்ச்சி மையமும் செயற்கை கோளை அனுப்பி செவ்வாய்க்கிரகத்தை படம் பிடித்து வருகின்றன. இந்த ஆராய்ச்சியின் முடிவில் செவ்வாய் கிரகத்தில் முன்பு கடல் மற்றும் ஆறு இருந்ததாகவும், கால நிலை மாற்றத்தால் அவை மறைந்து விட்டதாகவும் நாசா விஞ்ஞானிகள் தெரிவித்தனர். இவர்கள் கருத்துக்கு மாறான தகவலை ஐரோப்பிய விண்வெளி அமைப்பினர் தெரிவித்து இருக்கிறார்கள். செவ்வாயில் பனிக்கடல் இருப்பதாக தெரிவித்து இருக்கிறார்கள். அவர்கள் அனுப்பிய செவ்வாய் எக்ஸ்பிரஸ் என்ற விண்கலம் தற்போது செவ்வாய்க் கிரகத்தை சுற்றி வருகிறது. அந்த விண்கலம் அனுப்பிய புகைப்படத்தில் பனிக்கடல் இருப்பது தெளிவாக தெரிகிறது. இதுபற்றி விஞ்ஞானிகள் கூறியதாவது:- கடந்த சில மாதங்களாக மேற்கொண்ட ஆராய்ச்சியின் அடிப்படையில் செவ்வாயில் பனிக்கட்டி மற்றும் தண்ணீர் இருப்பது தெரியவந்துள்ளது. தூசி மற்றும் புகை மூட்டம் பனிக்கட்டியை மறைத்து இருக்கிறது. அண்டார்டிகா கண்டத்தில் உள்ளது போன்று பாறை போன்ற அமைப்பில் பனிக்கட்டிகள் காட்சி அளிக்கின்றன. அதன் அடியில் தண்ணீர் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையெல்லாம் பார்க்கும்போது மிகப்பெரிய பனிக்கடல் செவ்வாய் கிரகத்தில் உள்ளது. இந்த பனிக்கடல் 50 லட்சம் வருடத்திற்கு முன்பு உருவாகி இருக்கலாம். கிட்டத்தட்ட 500 மைல் நீள அகலத்தில் இந்த பனிக்கடல் உள்ளது. இதனால் செவ்வாய்க் கிரகத்தில் காலநிலை மாற்றம் ஏற்பட்டால் வெள்ள அபாயம் ஏற்படும் சூழ்நிலை உள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். மாலைமலர் - Malalai - 02-24-2005 பூமிக்குப் பிரச்சனை என்றால்...உதவிக்கரம் நீட்ட செவ்வாய் இருக்கு அப்ப......முந்தி சிவப்பு கிரகம் (red Planet) என்று சொன்னவை எனி வெள்ளைக்கிரகம் என்று சொல்லுவினமோ.... :wink: |