| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 351 online users. » 0 Member(s) | 348 Guest(s) Applebot, Bing, Google
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,435
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,286
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,642
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,312
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,677
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,239
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,477
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,549
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,054
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,247
|
|
|
| எது இல்லாத வாழ்க்கை வேஸ்ட் - லட்சுமிராய் |
|
Posted by: Mathan - 02-22-2005, 02:33 PM - Forum: சினிமா
- Replies (12)
|
 |
செக்ஸ் இல்லாத வாழ்க்கை வேஸ்ட்! - கலங்கடிக்கும் லட்சுமிராய்
<img src='http://cinesouth.com/images/new/22022005-THN15image1.jpg' border='0' alt='user posted image'>
இளைஞர்களை கசக்கிப் பிழியும் அழகு 'கற்க கசடற' நாயகி லட்சுமிராய்க்கு. வாய் திறந்தால் மணி சிந்துகிறதோ இல்லையோ, Honey சொட்டுகிறது.
இந்த ஆறடி உயர அழகு பிசாசு பிறந்த வருடம் 1988. மும்பை பத்மினி ஸ்கூல் ஆஃப் ஆக்டிங்கில் படித்த பின் மூன்று வருஷம் மாடலிங். கேட் வாக் நடந்து கொண்டிருந்தவரை தமிழர் இதயங்களில் நடக்க அழைத்து வந்தவர் ஆர்.வி. உதயகுமார்.
"என்னோட பிளஸ் மைனஸ் எதுவும் டைரக்டர் சாருக்கு தெரியாது. அதனால் ஜாலியாக அவர் கூட ஒர்க் பண்ண முடிஞ்சது" என்று தன்னை அறிமுகப்படுத்தியவரை கலாய்க்கும் இவர், இரண்டு முறை 'மிஸ் பெல்காம்' டைட்டில் ஜெயித்தவர்.
அப்பா ராமராய் பிசினஸ் மேன். அம்மா மஞ்சுளா. ரேஸ்மா, அஸ்வினி என இரண்டு அழகான அக்காக்கள். "ஹலோ, அவங்களுக்கு சினிமாவில் இன்ட்ரஸ்ட் இல்ல, அதனால அவங்க பக்கம் ஜொள் விடாதிங்க" என்று செல்லமாக மிரட்டும் லட்சுமிராய் நிஜத்தில் கொஞ்சம் ஆம்பளை மாதிரி.
யாராவது ஏடாகூடமாக கமெண்ட் அடித்தால் கன்னத்தில் கை பதிக்க தயங்க மாட்டாராம். அதனால் எட்டியே நின்று கேட்டோம்.
உங்களுக்கு பாய் பிரெண்ட் உண்டா?
"அப்பாவை தவிர வேற பாய் பிரெண்ட் யாருமில்லை"
செக்ஸ்?
"ஆரம்பிக்கிறது எங்கேயிருந்தாலும், எங்கே சுத்தி வந்தாலும் கடைசியில் முடியிற இடம் செக்ஸ்தான். செக்ஸ் இல்லாத வாழ்க்கை எல்லாம் ஒரு வாழ்க்கையா, அது சுத்த வேஸ்ட்" லட்சுமிராயின் கண்களில் அப்படியொரு மயக்கம்.
பாய் பிரெண்ட்ஸ் இல்லைனு பொய்தானே சொன்னீங்க?
|
|
|
| சார்ள்ஸ் மட்டக்களப்பு செல்ல விருப்பம் சிறீலங்கா அரசு மறுப்பு |
|
Posted by: Vaanampaadi - 02-22-2005, 01:36 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (12)
|
 |
இளவரசர் சார்ள்ஸ் மட்டக்களப்பு செல்ல விருப்பம் சிறீலங்கா அரசு மறுப்பு
நிகழ்ச்சிநிரலை தயாரிப்பதில் இழுபறி
21 02 2005
பிரித்தானிய இளவரசர் சார்ள்ஸ் சுனாமி பேரனர்த்த பகுதிகளை பார்வையிடுவதற்காக இம்மாத இறுதியில் 28ஆம் திகதி இலங்கை வருவார் என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் அவரது பயண நிகழ்ச்சிநிரலை தயாரிப்பதில் சிறீலங்கா அரசாங்கத்துடன் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இலங்கையில் சுனாமியில் கூடுதலாக பாதிக்கப்பட்ட கிழக்கு மாகாணத்துக்கு குறிப்பாக மட்டக்களப்புக்கு விஜயம் மேற்கொள்ள இளவரசர் சார்ள்ஸ் விரும்புகின்றார். ஆனால் அதனை சிறீலங்கா அரசு விரும்பாததுடன் அதுதொடர்பாக அதிர்ச்சியும் தெரிவித்திருக்கின்றது என்று செய்திகள் தெரிவிக்கின்றன.
மட்டக்களப்புக்கு இளவரசர் சார்ள்ஸ் செல்ல விரும்புவதாக கொழும்பிலுள்ள பிரித்தானிய தூதரகம் தெரிவித்த போது அதற்கு பதிலாக திருகோணமலைக்கு செல்லலாம் என்று வெளிவிவகார அமைச்சு கூறியிருக்கின்றது. கிழக்கு மாகாணத்துக்கு சென்று பார்வையிட்டிருந்த பிரித்தானிய தூதரக அதிகாரிகள் மட்டக்களப்பிலேயே கூடுதல் பாதிப்பு என்பதால் அங்கு செல்ல இளவரசர் சார்ள்ஸ் விரும்புகின்றார் என்று தெரிவித்திருக்கின்றனர். அதற்கு அரசாங்கத்தின் தீர்மானத்தை எதிர்பார்ப்பதாக கூறி சரியான பதிலை அளிக்காது வெளிவிவகார அமைச்சு இழுத்தடித்து வருகின்றது என்று செய்திகள் தெரிவிக்கின்றன.
இதுவரை வெளிநாடுகளில் இருந்து வரும் அரசு தலைவர்களை சிறீலங்கா அரசு கொழும்பில் வரவழைத்து பின்னர் தெறிகில் மாத்தறை உள்ளிட்ட சிங்கள பகுதிகளை காட்டிவிட்டு திருப்பி அனுப்பி வருகின்றது. வடக்கு கிழக்குக்கு பாகுபாடு காட்டவில்லை என்றும் அங்கும் நிவாரண மற்றும் மீட்பு பணிகளுக்கான பொருட்களை உரிய அளவில் அனுப்புவதாகவும் வெளிநாடுகளுக்கு பிரச்சாரம் செய்யும் சிறீலங்கா அரசு அந்த பகுதிகளுக்கு வெளிநாட்டு தலைவர்கள் செல்லாதவாறு பார்த்துக்கொண்டிருக்கின்றது. இந்நிலையில் பிரித்தானிய இளவரசர் சார்ள்சும் வடக்கு கிழக்கு பகுதிகளுக்கு செல்லாதிருப்பதை உறுதிப்படுத்தும் வகையில் அனைத்து முயற்சிகளையும் அரசு மேற்கொண்டிருக்கின்றது என்று கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில் ஜனாதிபதி சந்திரிகாவும் எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் கடந்த ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்புக்கு விஜயம் செய்ய இருப்பதாக ஓர் அறிவிப்பு வெளிவந்து பின்னர் அந்த விஜயம் நடைபெறவில்லை. அவர்களது விஜயத்துக்கு பதிலாக அன்று பிரதமர் மகிந்த ராஜபக்ச அங்கு செல்வார் என்று மற்றொரு அறிவிப்பு வந்திருந்தும் அந்த விஜயமும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Cheithikkovai
|
|
|
| அழிவுகளை பார்வையிடாததை நியாயப்படுத்த முடியாது |
|
Posted by: Vaanampaadi - 02-22-2005, 12:56 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (1)
|
 |
முன்னாள் அமெரிக்க ஜனாதிபதிகளின் இலங்கை விஜயம் தமிழ்ப் பகுதிகளில் கடல்கோள் அழிவுகளை பார்வையிடாததை நியாயப்படுத்த முடியாது
-தில்லைக்கூத்தன்-
கடந்த ஞாயிற்றுக்கிழமை முன்னாள் இரண்டு அமெரிக்க ஜனாதிபதிகளான பில் கிளின்ரன், ஜோர்ஜ் புஷ் ஆகியோர் சுனாமியின் தாக்கத்தை அறிவதற்கு பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு விஜயம் செய்தார்கள். இதன் காரணமாக, இலங்கைக்கும் சேத அழிவுகளை நேரில் காண்பதற்கு வருகை தந்தார்கள். இவர்கள் தமிழ்த் தாயகத்தில் ஏற்பட்ட அழிவுகளை பார்வையிடப் போகவில்லை. தமிழ்த் தாயகத்தில் ஏற்பட்ட பாரிய அழிவுகளை பார்வையிடாதது மிகவும் கொடூரமான செயலென்றே தமிழ் மக்கள் கருதுகின்றனர்.
இதனுடைய மர்மத்தை நாங்கள் ஆழமாகச் சிந்திப்பது அவசியமாகின்றது. இலங்கையில் இவர்களுடைய வருகைக்குரிய நோக்கத்தை எண்ணி எந்தெந்த இடங்களைப் பார்வையிட வேண்டுமென்று தீர்மானித்தது இலங்கை அரசாங்கமோ அல்லது அமெரிக்க தூதுவரகமோ என்று எமக்குத் தெரியாது. சுனாமி இனத்துவேசமோ அல்லது இனப்பாகுபாடோ காட்டவில்லை. ஆனால், தமிழ்ப் பிராந்தியத்தில் மன்னார் பிரதேசத்தைத் தவிர்ந்த, ஏனைய பிரதேசங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு விட்டன. இந்தப் பின்னணியில் அமெரிக்கப் பிரமுகர்கள், தம் தாயகத்தை பகிஷ்கரிப்பது மன்னிக்க முடியாத மிகவும் மனிதாபிமானத்துக்கு அப்பாற்பட்ட கொடூரமான செயலென்றே கருதுகின்றார்கள்.
தமிழ்ப் பிரதேசம் இருபத்து நான்கு வருடங்களுக்கு மேலாக சிங்கள ஆக்கிரமிப்புப் படைகளினால் அழிக்கப்பட்ட பிரதேசம். இருபத்து நான்கு வருடங்களான யுத்த சூழ்நிலையில் ஆரம்ப காலகட்டத்தில் தமிழர்கள் கல்வியில் முன்னேற்றமடையக் கூடாதென்ற ஒரே காரணத்துக்காக ஆசியாவில் புகழ் பெற்ற யாழ்ப்பாண நூல் நிலையத்தை எரித்து சாம்பலாக்கிய பெருமை சிங்கள ஆக்கிரமிப்புப் படைகளுக்குத்தான் உண்டு. அதன் பின்பு கடந்த இருபத்து நான்கு வருட காலங்களாக தமிழ்ப் பிராந்தியம் இலங்கை அரசாங்கத்தின் இன வெறிக்கு முகம் கொடுத்தது. அதன் பின்பு இன்று வரை தமிழர் தாயகம் சிங்கள இனவெறியை எதிர் கொள்கின்றது.
கிழக்கு மாகாணத்தில் நிகழ்ந்த கொலைச் சம்பவங்களுக்கு நிகரில்லை. வடக்கு மாகாணத்தில் மிகவும் பயங்கரமான இனப்படுகொலைகள் ஏற்பட்டன. இதன் விளைவாக இலட்சக் கணக்கான தமிழ் மக்கள் தங்கள் உயிர்களைக் காப்பாற்றுவதற்காக பிற நாடுகளுக்கு சென்று, அகதி அந்தஸ்துப் பெற்று வாழ்வதை நாம் இன்றும் காணலாம்.
வடபிராந்தியத்தில் சிங்கள விமானப் படைக் குண்டு வீச்சுக்குப் பயந்து புனித பீற்றர் தேவாலயத்தில் தஞ்சம் புகுந்த அகதிகளைக் கூட, சிங்கள் விமானப் படை குண்டு வீசி அழித்தது. குடாநாட்டில் விளையாடிக் கொண்டிருந்த பள்ளிக் கூட குழந்தைகளைக் கூட சிங்கள விமானப் படை கொன்று குவித்தது. இவற்றையெல்லாம் அவதானித்த ஐ.நா.மனித உரிமைகளைக் காப்பாற்றும் குழு ஐ.நா.சரித்திரத்தில் கேள்விப்படாத வகையில் சிங்கள அரசாங்கத்திற்கு மிகவும் மோசமான கண்டனத்தைத் தெரிவித்து தீர்மானங்களை நிறைவேற்றினார்கள்.
இலங்கைத் தமிழர்கள் அடைந்த துயரங்களையும் அவலங்களையும் சர்வதேச சமுதாயம் நன்கு அறிந்து விட்டது. அப்படியிருந்தும் இந்த இரு அமெரிக்கப் பிரமுகர்கள் தங்கள் வருகையின் போது தமிழ்த் தாயகத்தை பகிஷ்கரிப்பதற்கு யார் பொறுப்பு என்று அறிவது அவசியமாகின்றது.
இராஜதந்திர சம்பிரதாயங்களின்படி சம்பந்தப்பட்ட அரசாங்கமே அவர்களுக்கு தெரிவு செய்யப்படும் இடங்களை தீர்மானிப்பது. இது இராசதந்திர மரபு. இவற்றையெல்லாம் சிந்திக்கும் பொழுது அவர்கள் தென்னிலங்கைக்கு மட்டும் விஜயம் செய்ய தீர்மானித்தது சிங்கள் அரசாங்கத்தின் செயலென்பதே எமது கருத்து.
சமீப காலமாக சிங்கள் அரசியல் உயர் மட்டம் வட கிழக்கை பாகுபாடுகள் இல்லாமல் சகல உதவிகளையும் செய்கின்றதென்று பிரசாரம் செய்கின்றது. இவ்விதமான பொய்ப் பிரசாரங்களில் ஈடுபட்ட அரசாங்கம் அமெரிக்கப் பிரமுகர்களை வடகிழக்குக்கு அனுப்பினால், அவர்களுக்கு சகல உண்மைகளும் தெரிந்து விடும் என்ற பீதியே இயற்கையாக ஏற்படும். வடகிழக்கில் அமெரிக்க இரு பிரமுகர்களும் தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகளின் அமைப்புடன் கலந்து உரையாடல் செய்ய விருப்பமில்லாவிட்டால், அரசாங்க அதிபர்களை சந்தித்து பக்கச் சார்பில்லாத பொது மக்களுடைய கருத்துகளை பெற்றிருக்க முடியும். ஆகவே, சகல விடயங்களையும் அலசிப் பார்த்தால் இந்த அரசாங்கம் தமிழருக்கு எதிராக மிக மோசமான அரசியல் சதியென்றே நாம் கூற வேண்டும். அவர்கள் வடகிழக்கில் சென்று நேரடியாகப் பார்த்தால் 24 வருடங்களுக்கு மேற்பட்ட யுத்தத்தினால் ஏற்பட்ட சேதங்களையும் அழிவுகளையும் நேரில் பார்த்து நிச்சயமாக அவர்கள் நெஞ்சு குமுறும், கண்கள் கலங்கும்.
உதாரணமாக, சில வருடங்களுக்கு முன்பு உயர் அதிகாரியான றிச்சாட் ஆர்மிறேஜ் குடாநாட்டுக்கு விஜயம் செய்யும் பொழுது சாவகச்சேரியில் சிங்களப் படையினரால் ஏற்பட்ட அழிவுகளைக் கண்டு கண் கலங்கிவிட்டார். தன்னுடைய உணர்வுகளை பகிரங்கமாக வெளிப்படுத்தியது போற்றப்பட வேண்டிய விடயம். ஆகவே, வருகை தந்த அமெரிக்க முன்னாள் ஜனாதிபதிகள் அவர்களுக்கு வடகிழக்கிற்குப் போக விருப்பமிருந்தாலும், சிங்கள அரசாங்கத்தின் வேண்டுகோளை புறக்கணிக்க முடியாத தர்மசங்கடமான நிலை ஏற்பட்டிருக்கலாமென்பதே எமது கருத்து. ஆனால் வருகை தந்த முன்னாள் அமெரிக்க ஜனாதிபதிகள் அமெரிக்கத் தூதுவர் மூலம் வடகிழக்கிற்குப் போக வேண்டுமென்று சிங்கள அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்காதது ஒரு பாரிய தவறென்பதே எமது கருத்து. சுருங்கக் கூறின், தமிழ்ப் பிரதேசத்தில் இருபத்து நான்கு வருட காலமாக நடந்த யுத்தத்தில் ஏற்பட்ட விளைவுகளையும் அழிவுகளையும் மக்களின் அவல வாழ்க்கையையும் அதற்கு மேலாக சுனாமியின் தாக்கத்தையும் அறிவதற்கு பகிரங்கமாக ஆர்வம் காட்டாத அமெரிக்கப் பிரமுகர்களை தமிழினம் மன்னிக்க மாட்டாது.
எமது கருத்தின்படி சிங்கள அரசு செய்த அரசியல் சதி வலையில் அமெரிக்கப் பிரமுகர்கள் கடுமையாகச் சிக்கி விட்டனர். இந்த சதிக்கு வெளிவிவகார அமைச்சுக்கும் பங்கு இருக்கின்றதா என்ற கேள்வியும் உதயமாகின்றது. இந்த அமெரிக்கப் பிரமுகர்கள் இலங்கையில் எந்தெந்த இடங்களைப் பார்வையிட வேண்டுமென்று தீர்மானிப்பது இலங்கை அரசாங்கம்தான் என்றும் தங்களால் இலங்கை அரசாங்கத்துக்கு எதிராகத் தீர்மானங்களை எடுக்க முடியாதென்றும் பகிரங்கமாகச் சொல்வது அவர்களுடைய தார்மீகக் கடமை. வெந்தபுண்ணில் வேல் பாச்சினது போல்தான் இலங்கை அரசினுடைய செயற்பாடுகள் அமைந்துவிட்டன.
இந்தச் சதியில் அமெரிக்கப் பிரமுகர்கள் பகடைக்காய்களாக மாறிவிட்டனர். நிச்சயமாக தமிழ் மக்கள் சிங்கள அரசாங்கத்தினுடைய சதிக்கு எதிராக தங்களுடைய மனக்குமுறல்களை வெளிப்படுத்தி அதன் விளைவுகளை வெகு விரைவில் எதிர்கொள் அதிக வாய்ப்புக்கள் உண்டு.
அமெரிக்காவிலுள்ள தமிழ் அமைப்புகள் இந்த விடயத்தில் தங்களுடைய செல்வாக்கைப் பயன்படுத்தி அமெரிக்க செனற் சபையிலும், அமெரிக்க காங்கிரஸிலும் அமெரிக்க பிரமுகர்கள் செய்த பாரிய தவறுகள் பற்றி கண்டனங்கள் செய்வதற்கு தகுந்த நடவடிக்கை எடுப்பது அவர்களின் தலையாய கடமை.
இதேபோல், ஐரோப்பிய நாடுகளில் தமிழ் அமைப்புகள் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதிகள் செய்த பாரிய தவறுபற்றி அந்தந்த நாடுகளிலுள்ள அமெரிக்க தூதுவர்களிடம் ஒரு மகஜரை கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. சுருங்கக் கூறின், அமெரிக்க பிரமுகர்கள் செய்த தவறை தமிழர் அமைப்புக்கள் நன்கு பகிரங்கப்படுத்தி அவர்களுக்கு எதிராக அநேக மகஜர்களை கொடுப்பது அவசியமாகின்றது.
சிங்கள அரசாங்கம், ஐ.நா. செயலாளர் நாயகம் தமிழ் பிரதேசத்துக்குச் செல்ல முடியாத சூழ்நிலையை ஏற்படுத்திவிட்டது. அதேபோல், அமெரிக்கப் பிரமுகர்களுடைய செயல்பாடுகளும் அமைந்துவிட்டன. இந்தச் சதித்திட்டங்கள் தொடருமானால் இரண்டு முக்கிய விளைவுகள் ஏற்படும்.
1. தமிழர்களுடைய இறுதி அபிலாஷைகள் வெகுவிரைவில் கிடைத்து விடும்.
2. சிங்கள அரசு சர்வதேச அரங்கில் இராஜதந்திர ரீதியாக அநேக தோல்விகளை எதிர்கொள்ள ஏற்படும்.
அதன் விளைவாக, சிங்கள அரசுக்கு பொருளாதார உதவிகள் கிடைக்காமல் போகக் கூடும். அதற்குப் பதிலாக தமிழ் பிரதேசம் தனது இறுதி அபிலாஷைகளை அடைய வெகு விரைவில் சந்தர்ப்பம் ஏற்படும் தறுவாயில், இராஜதந்திர உதவிகளும் வெளிநாட்டு உதவிகளும் பெற அதிகவாய்ப்புக்கள் உண்டு. சுருங்கச் சொல்வதென்றால் வினைவிதைப்பவர்கள் வினையைத் தான் அறுவடை செய்வார்கள். அதுபோல் தினைவிதைத்தால் தினையைத்தான் அறுவடை செய்வார்கள் என்ற உண்மையை சிங்கள அரசாங்கமும் கதிர்காமரும் இன்னமும் அறிந்திருக்கவில்லை. இந்த அமெரிக்கப் பிரமுகர்களுடைய பகிஷ்கரிப்பு தமிழ் மக்களை ஓர் அணியில் நின்று தங்கள் அபிலாஷைகளை சகல துறைகளிலும் வெற்றிபெற சகல முயற்சிகளையும் செய்ய வேண்டும். இது இன்றைய காலத்தின் தேவை.
தெற்கிலங்கை யுத்தத்தினால் பாதிக்கப்படவில்லை. ஒரு சிங்கள வீடுகூட தாக்கப்படவில்லை. ஒரு சிங்களப் பள்ளிக்கூடம் அழிக்கப்படவில்லை. ஆனால் கடல்கோளினால் பாதிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் தமிழ் பிரதேசம் 24 வருட யுத்தத்தினாலும், அதற்கு மேலாக வெள்ளத்தினாலும், கடல்கோளினாலும் பாதிக்கப்பட்டது சகலருக்கும் தெரிந்த விடயம். இந்த வகையில் என்ன காரணங்களுக்காக தமிழ் பிரதேசங்களை தாங்கள் பகிஷ்கரித்தார்கள் என்ற காரணங்களை விளக்கி தமிழ் மக்களுக்கு மட்டுமல்லாமல் சர்வதேச சமூகத்துக்கும் நன்கு விளக்கம் கொடுப்பது அவர்களுடைய தார்மீகக் கடமை. இந்த விடயங்களை வெளிநாட்டு தமிழ் அமைப்புக்கள் சகல நாடுகளிலும் பகிரங்கப்படுத்துதல் காலத்தின் தேவை.
இராஜதந்திரத்தில் அமெரிக்கா முன்னேற்றமடையவில்லை என்பதற்கு இதுவோர் எடுத்துக்காட்டு. ரோக்கியோவில் நடந்த நிதி வழங்கும் நாடுகளுடைய மகாநாட்டை விடுதலைப் புலிகள் பகிஷ்கரித்தது. இதற்கு அமெரிக்கா பொறுப்பேற்க வேண்டும். ஏனெனில், இந்த மகாநாட்டிற்கு முன்னோடியாக விடுதலைப் புலிகளை அழைக்காமல் அமெரிக்கா தன்னாட்டில் ஒரு மகாநாட்டை நடத்தியது. முதிர்ச்சியடைந்த தீர்வு ஏற்படுவதற்கு விடுதலைப் புலிகளுடைய ஒத்துழைப்பும் ஒத்தாசையும் தேவை என்பதை மறந்து அமெரிக்கா விடுதலைப் புலிகளை அழைக்காமல் ஒரு மகா நாட்டை நடாத்தியது இது ஒரு பாரிய தவறு.
ஏனெனில், இராமனில்லாமல் இராமாயண நாடகம் அரங்கேற்ற முடியாது. ஏனெனில், இலங்கையில் சமாதானத் தீர்வை ஏற்படுத்துவதற்கு விடுதலைப் புலிகளின் பங்கு மிகவும் அவசியமாகிறது. அமெரிக்கா தன்னுடைய நாட்டில் விடுதலைப் புலிகளை தடை செய்திருப்பதன் காரணமாக அவர்களை அங்கே அழைக்க முடியாதென்றால் அந்த மகாநாட்டை தடைசெய்யப்படாத ஐரோப்பிய நாட்டில் வைத்திருந்தால் பிரச்சினை சுமுகமாகத் தீர்க்கப்பட்டிருக்கம்.
அமெரிக்க இராஜதந்திரம் முதிர்ச்சி அடையாதென்பதற்கு இதுவோர் உதாரணம். இதே பிழையைத்தான் இலங்கைக்கு வருகைதந்த முன்னாள் ஜனாதிபதிகள் விட்டிருக்கின்றார்கள்.
அந்த நேரம், வேறு ஒரு நாட்டில் மகாநாட்டை வைத்திருந்தால் சகல தரப்பினருக்கும் முதிர்ச்சியடைந்த தீர்வு ஏற்பட்டிருக்கும். ஆனால் அமெரிக்க இராஜதந்திரிகள் தங்களுடைய இராணுவ பலத்தையே நம்பியிருக்கிறார்கள். இந்தத் துறையில் அமெரிக்கா தோல்விகளையே எதிர்கொள்கின்றது. உதாரணமாக, வியட்நாமிய யுத்தத்தில் கோடிக்கணக்கான அமெரிக்க டொலர்களையும் இழந்து ஐம்பதினாயிரத்துக்கு மேற்பட்ட அமெரிக்க உயிர்களையும் இழந்து வியட்நாமில் கற்ற பாடத்தை இன்றும் உணரவில்லை. ஏனெனில், இன்று ஈராக், ஆப்கானிஸ்தான் நாடுகளில் இராணுவ ரீதியில் பின்னடைவைத்தான் எதிர்கொள்கிறது.
ஈராக்குடைய எண்ணெய் வழங்கலைக் கைப்பற்ற சென்ற அமெரிக்கா இன்று இராணுவ ரீதியாக அநேக பின்னடைவுகளை எதிர்கொள்கின்றது. இராஜதந்திர ரீதியில் அமெரிக்கா அநேக தோல்விகளைத்தான் சந்தித்து விட்டது. அதேபோலதான் அமெரிக்கப் பிரமுகர்கள் தமிழ் பிரதேசத்தை புறக்கணித்தது சர்வதேச அரங்கில் பாரிய இராஜதந்திர தோல்வியை அமெரிக்கா எதிர்கொள்கிறது. அவர்கள் தமிழ் தாயகத்தை பகிஷ்கரித்ததை எந்தவித கோணத்திலிருந்து பார்த்தாலும் அவர்களுடைய நிலைப்பாட்டை நியாயப்படுத்த முடியாது.
thinakural
|
|
|
| வானம்பாடியின் திரை துளிகள் |
|
Posted by: Vaanampaadi - 02-22-2005, 12:00 PM - Forum: சினிமா
- Replies (5)
|
 |
தீவிரவாதியுடன் தொடர்பு: நக்மா, மும்தாஜிடம் நேரில் விசாரணை- மும்பை போலீசார் சென்னை வருகை
மும்பை, பிப். 22-
நடிகை நக்மாவுக்கு மும்பை குண்டு வெடிப்பு தீவிரவாதியின் கூட்டாளியான ஜம்போ ரூ. 10 லட்சம் கொடுத்ததாக அளித்த வாக்குமூலம் திரையுலகை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
தாபூத்இல்ராகிம் தம்பி அனீசுக்கும் நக்மாவுக்கும் நெருங்கிய தொடர்பு இருந்தது என்றும் அவன் கூறியுள்ளான்.
ஐம்போ குறிப்பிட்ட நக்மா யார் என்பதில் குழப்பம் நீடிக்கிறது.
ஜோதிகாவின் அக்காவும் நடிகையுமான நக்மா தான் அவள் என்று முதலில் கூறப் பட்டது. ஆனால் நக்மா அதை மறுத்தார். தீவிரவாதியுடன் தனக்கு தொடர்பு கிடையாது அவன் பணம் கொடுத்ததாக சொல்லும் நக்மா நான் அல்ல. வேறு பெண் என்று அவர் கூறினார். தீவிரவாதி பணம் கொடுத்ததாக சொல்லும் பந்தரா பகுதியில்தான் வசிக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
இதையடுத்து சந்தேகப் பார்வை கவர்ச்சி நடிகை மும்தாஜ் பக்கம் திரும்பியது. இவர் டி.ராஜேந்தரின் மோனிசா என் மோனலிசா படம் மூலம் தமிழுக்கு அறி முகமானவர்.
மும்தாஜுக்கும் நக்மா என்று இன்னொரு பெயர் இருப்பதாக போலீஸ் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது. மும்பையில் பிறந்து வளர்ந்த மும்தாஜ் பிரபல தயாரிப்பாளர் தபாசு கானின் மகள் ஆவார். பூண்ட் என்ற படத்தில் அவர் நடித்துள்ளார்.
மும்தாஜுன் தாயார் 2000_ம் ஆண்டில் மும்பை தாதாக்களுடன் தொடர்பு வைத்திருந்ததாகவும் துப்பாக்கி வைத்திருந்ததாகவும் கைது செய்யப்பட்டார் என்றும் கூறப்பட்டது. அவர் தற்போது லண்டனில் வசிக்கிறார்.
இந்த குற்றச்சாட்டுகளை மும்தாஜ் மறுத்தார். எனக்கு நக்மா என்று இன்னொரு பெயர் இருப்பது உண்மைதான். ஆனால் ஜம்போ வாக்கு மூலத்தில் கூறி உள்ள காலகட்டத்தில் நான் சிறுமி அவன் சொல்லி இருப்பதுபோல பந்த்ரா பகுதியில் நான் வசிக்க வில்லை. என்தாயுடன் வெர்சோ என்ற பகுதியில் வசித்தேன். பந்த்ராவில் உள்ள பள்ளிக்கூடத்தில் படித்தேன்.
போலீசார் ஆயுதம் வைக்திருந்ததாக என் தாயாரை கைது செய்யவில்லை. என் தாய் பெயர் தபசும்கான் என்பதும் தவறு. அவர் பெயர் ருபினாகான் லண்டனில் வசிக்கிறார் என்றும் கூறியுள்ளார்.
நக்மா, மும்தாஜின் முரண்பட்ட தகவல்கள் போலீசாருக்கு குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. இருவரில் தீவிரவா தியுடன் தொடர்பு வைத்திருந்தவர் யார் என்று கண்டுபிடிக்க முடியாமல் திணறு கிறார்கள்.
நக்மா தற்போது மும்பை யில் உள்ளார். சென்னைக்கும் அவ்வப்போது வந்து செல்கிறார். இங்கு அவருக்கு சொந்த வீடு உள்ளது. சில நேரம் அபிராம புரத்தில் உள்ள தங்கை ஜோதிகா வீட்டிலும் தியாகராஜ நகரில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலிலும் தங்குவார்.
அந்த இடங்களை போலீசார் கண்காணிப்பில் வைத்துள்ளனர்.
மும்தாஜ் சென்னையிலே தங்கி படங்களில் நடித்து வருகிறார்.
தீவிரவாதியுடன் தொடர்பு வைத்திருந்தது நக்மாவா, மும்தாஜா என்று நேரில் விசாரணை நடத்த மும்பை போலீசார் முடிவு செய்துள்ளனர். இதற்காக விரைவில் அவர்கள் சென்னை வர இருப்பதாக கூறப்படுகிறது.
Maalaimalar
|
|
|
| மலபார் அஸின் |
|
Posted by: Mathan - 02-22-2005, 08:06 AM - Forum: சினிமா
- Replies (151)
|
 |
எங்கிட்ட எவனும் சிக்கல - காதல் வலை வீசும் அஸின்
கோலிவுட்டின் லேட்டஸ்ட் ஏஞ்சல் என்று யாராவது ஜி.கே. கேட்டால் அஸின் என்று அடித்துச் சொல்லலாம்.
'எம். குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி'யில் நடித்ததன் மூலம் இளசுகளின் மனங்களில் பட்டா போட்டுள்ள இந்த கேரள தேவதையின் மனசுக்குள் மட்டும் எவரும் சிக்கவில்லையாம்.
அப்படியா.... ஊர் உலகத்துல ஒரு பையன் கூடவா உங்க கண்ணுக்கு மாட்டல!? என்று கேள்விகேட்டால் இல்லை இல்லை இல்லவே இல்லை... என்று கண் சிமிட்டுகிறார்.
"ரொம்ப பேரு எனக்கு ரூட்டு விட்டிருக்காங்க. நான்தான் மாட்டல. பார்த்தவுடனேயே மனசுக்குள்ள பஜக்குன்னு ஒட்டிக்கிற மாதிரியான ஆள நானும் தேடிக்கிட்டுதான் இருக்கேன்! ஆனா அந்த மவராசன் எங்க இருக்கான்னுதான் தெரியலை.
'கொஞ்சம் மனசு, கொஞ்சம் அழகு, கொஞ்சம் அறிவு' இந்த மிக்ஸிங் சேர்ந்த ஒருத்தருக்குத்தான் என் மனசையும் கழுத்தையும் தருவேன். என்னோட விருப்பத்திற்கு வீட்லேயும் பச்சைகொடி காட்டிட்டாங்க. ஸோ என் கண்டிஷனுக்கு ஒத்து வர்ற வாலிபர்கள் விண்ணப்பிக்கலாம்" என்கிறார் பற்கள் பளிச்சிட.
ம்... அஸினின் விழியில் விழுந்து இதயம் நுழையவுள்ள அந்த அதிர்ஷ்டசாலி யாரோ!
சினி சவுத்
|
|
|
| மீண்டும் கொத்திப் பேய் |
|
Posted by: hari - 02-22-2005, 07:45 AM - Forum: கவிதை/பாடல்
- Replies (4)
|
 |
<span style='font-size:23pt;line-height:100%'>மீண்டும் கொத்திப் பேய்
சொத்தி முருங்கில் ஏறுகிறது.</span>
<img src='http://www.tamilnation.org/images/fundamentalism/monk4s.gif' border='0' alt='user posted image'>
போலிச் சாமியின் காவி வேட்டி
சாயம் கரைகிறது.
குரங்கு போட்டிருந்த மனித முகமூடி
கழன்று விழுகிறது.
சமாதானச் சங்கின் சுருதி கலைகிறது
மீண்டும்....
''கொத்திப் பேய்''
சொத்தி முருங்கில் ஏறுகிறது.
இனி கத்தும்
கல்லால் எறிந்து சண்டைக்கிழுக்கும்.
வெள்ளைக் கொடிக்கு
கொள்ளைக் காரர்கள் குருதி பூசுகின்றனர்.
கொம்பு சீவிய ''சிங்கக்காளைகள்''
சண்டைக்குத் தயாராகிவிட்டனர்.
புலுமச்சிலந்திக்கும், நட்டுவக்காலிக்கும்
பிறந்த புடையன் பாம்பின்....
நச்சுப்பற்கள் நமக்குத் தெரிகிறது.
சாந்த சொரூபத்தின் சுயரூபம்.
''டிரகுலா'' பற்களுடன் கூடிய கோரமுகம்
''எல்லாம் முடிந்தது தன்னானே
இனித் திருக்கையும் நெய்யும் தின்னானே''
நல்ல பழமொழி நமக்கும்பொருந்தும்.
கூத்துகாரர் ஒப்பனையைக் கலைத்து
உண்மை முகத்தை உலகுக்குக் காட்டினர்.
நன்றி,
''ஒரு பொல்லாப்பும் இல்லை
எல்லாமும் எப்பவோ முடிந்த அலுவல்''
''தேரடிச்சாமி'' தீர்க்கதரிசி.
நாங்கள்
ஆராத்தித் தட்டில் குங்குமம் கரைத்து
வாசலுக்கழைத்து வரவேற்பளித்தோம்
வந்திறங்கிய விமானப் பல்லக்கில்
புலுதிபடிந்த போது கூட
முத்தத்தாற்தானே ஒத்தியெடுத்தோம்
உங்களுக்குபாதம் நோகுமென்று
பஞ்சினால் அல்லவா பாதை சமைத்தோம்.
தலைவன் எழுதிய''சமாதான ஓலையை''
வெள்ளைப் புறாக்கள் எடுத்து விரைந்தன.
தங்கையிடம் தமிழீழமா கேட்டோம்?
.இல்லையே
ஒற்றையடிப்பாதை ஒன்றையே கேட்டோம்
வயிற்றுப் பசிக்கு வலைவீசக் கேட்டோம்.
இறைத்துப் பயிர் செய்ய எரிபொருள் கேட்டோம்
சலுகைகளைக் கூடத் தரமறுப்பவர்களிடம்
உரிமைகளை எப்படி எதிர்பார்க்கலாம்?
தெற்கில் தேர்தல் திருவிழாவின் போது
''சின்னமேளம்'' சிரித்து கொண்டது
பக்கவாத்தியங்கள் ''பல்லவி'' வாசித்தன.
''சொர்ப்பனசுந்தரி'' யின் நயன பாஷையில்
பலருக்கு பழையது மறந்து போனது.
இன்று
உண்மை முகத்திலடிக்கும் போது
அம்மாவும், அம்மம்மாவும்
சும்மா என்பது தெரிய வந்தது
புத்தனுக்கு 'அரச நிழலில ஞானம் விடிந்தது்'
தமிழனுக்கு அனுபவ நிழலில்' அறிவு பிறந்தது.
இனி என்ன செய்வது?
எடுத்த காவடியை இறக்கியே தீரவேண்டும்
போர் என்றால் போர் என்றான். 'பழைய கிழவன் '.
பேச்சுவார்த்தை முறிந்தால்
போர் என்றான் 'புதிய கிறுக்கன்'
இது தமிழர் மீதானபோர் பிரகடனம்.
தமிழனே என்னடா செய்யப்போகிறாய்?
கழற்றி வைத்த போருடையை
எடுத்து மாட்டு...
வீரவாளுக்கு வேலை வந்துவிட்டது
கசாப்புகடை மேசையிற் கூட
கருணை பிறக்கலாம்
பேச்சுவார்த்தை மேசையில் மட்டும்
உரிமை கிடைக்காது
இது புதிய வேதம்.
அனுபவம் தந்த ஆய்வின் முடிவு.
மட்டகளப்பில் சுற்றிவளைப்பு
தலைநகரில் தமிழர் கைது
பொன்னாலைக் கடலில் போனவர் கைது
வவுனியாவில் புதிய கெடுபிடி.
என்ன இது?
கையெழுத்திட்ட ஒப்பந்தம் என்னாச்சு?
கண்காணிப்புக் குழுவின் கண்களில்
கறுப்புதுணியா கட்டியிருக்கிறது?
பெரிய அளவில் தொடர்கிறது தமிழர் வதை
எப்படி பொறுக்கலாம்?
புலிகள் பேச்சுக்குப் போனதை
இழிவாகக் கருதியா இந்தஎடுத்தெறிவு?
பலவீனப்பட்டதாலே தான் பணிவு
என்று நினைத்தா இந்த உதாசீனம்?
பிரபாகரனின் கவச குண்டலத்தை
எந்த 'குந்தி' யும் வந்து எடுத்து போகவில்லை
ஆயுதப்போரில் அலுப்புத்தட்டி
தந்ததை வாங்கித் தலைகுனிந்து கொள்ள
பிரபாகரன் 'அரபாத' இல்லையென்பதை
அலரிமாளிகைக்கு அறிவித்துகொள்கிறோம்
கரும்புலி அணியைக் கலைத்து விட்டோம் என்று
அவர்களுக்கு
கனவிற் சொன்ன கடவுள் யார்?
ஏறிமிதிக்கும் இளம்புலி வீரரை
வேறு வேலைக்கா விட்டுள்ளோம்?
மூச்சுகாற்றே நெருப்பு மூட்டும்
பெண்கள் படையணி
கண்ணுக்கு மைபூசியா காலத்தைக் கழிக்கிறது?
கடற் புலிகள் அரிசி ஏற்றிக் கொண்டு
அமெரிக்காவுக்கா போய்விட்டார்கள்?
இல்லையே?
போருக்குத் தயாராக
சீருடையிற்தானே திரிகின்றனர்.
தங்கச்சி தப்புகண்க்குப்போட்டுவிட்டாள்.
ரத்வத்தை குடிப்பதற்கு ரத்தமா தேவைப்படுகிறது?
அட பாவி மனுஷா!
முந்தியிருந்த மந்திரிக்ள் முணுமுணுப்பது
அனுருத்தவின் காதுகளை அடைவதில்லையா?
தங்கையே!
ஈழத்தமிழரை
உன் 'அப்பன்' அடக்க நினைத்த போது
காலி முகத்திடலில் சத்தியா கிரகம்.
தமிழரை
உன் 'ஆத்தாள்' அழிக்க புறப்பட்ட போது
துப்பாக்கிப் போர் வேர் பிடித்தது
இன்று உனக்கும் அந்த நினைப்புதானா?
எச்சரித்து கொள்கிறோம்
புயலடிக்கும்.
பூகம்பம் வெடிக்கும்
மின்னல் வெட்டி முழக்கம் பிறக்கும்.
பொங்கிப் பிரவாகிக்கும் போரட்ட நதியின்
கரையெங்கும்
நீங்கள் சருகாய் ஒதுங்குவீர்
சின்னக் காற்றுக்கே கிளை முறிந்து போக
தமிழன்
உன் வீட்டுகிணற்றடியில் உள்ள ஈரப்பலா அல்ல.
இது வைரப்பனைகள் வளர்ந்துள்ள பூமி
புயலை பார்த்து பனைகள் புன்னகைக்குமே தவிர
தலையைக் கவிழ்ந்து சரிந்து விழமாட்டாது
தங்கையே!
தமிழர் கரும்பனைகள் என்பதை
கண்ணில் படுமிடத்தில் குறித்துகொள்.
போர்க்களத்திலா சந்திக்க விரும்புகிறாய்?
என்ன செய்வது
சத்தியத்திற்க்காக நாங்கள் கத்தியை எடுக்கின்றோம்.
தர்மத்துக்காக நாங்கள்
விலைகொடுக்கப் புறப்படுகின்றோம்
தர்மம் வெல்லும்
சத்தியம் வெல்லும்.!
புதுவை இரத்தினதுரை
(தாயகக்கவிஞரின் உணர்வின் வரிகள் தொடரும்........)
இக்கவிதை பற்றிய உங்கள் மதிப்பீட்டிற்கு இங்கே சொடுக்குங்கள்!
|
|
|
| காஷ்மீரில் வரலாறு காணாத பனிச்சரிவு கிராமங்கள் புதையுண்டன |
|
Posted by: vasisutha - 02-22-2005, 05:11 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (13)
|
 |
காஷ்மீரில் வரலாறு காணாத பனிச்சரிவு: பனிப்பாறைகளுக்கு அடியில் பல கிராமங்கள் புதையுண்டன
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் இதுவரை இருந்திராத வகையில் பனிச்சரிவு ஏற்பட்டு வருகிறது. திங்கள்கிழமையும் நூற்றுக்கணக்கான கிராமங்கள் இருந்த இடம் தெரியாமல் பனியால் மூடியிருக்கின்றன, ஆயிரக்கணக்கான மக்கள் அதில் சிக்கித் தவிக்கின்றனர்.
காஷ்மீர் மாநிலத்தில் தொடர்ந்து ஏற்பட்டுவரும் பனிச் சரிவில் இறந்தவர்களில் இதுவரை 84 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டதாகவும் 74 பேரைக் காணவில்லை என்றும் என்.டி.டி.வி. தெரிவிக்கிறது.
ரயில் பாதைகளும் நெடுஞ்சாலைகளும் பயன்படுத்த முடியாத அளவுக்கு பனிப்பாறைகளால் நிரம்பிவிட்டதால் போக்குவரத்து நின்றுவிட்டது. தகவல் தொடர்பும் துண்டிக்கப்பட்டிருக்கிறது. மோசமான வானிலையையும் பொருள்படுத்தாமல் இந்திய விமானப்படையின் சரக்கு விமானங்களும் ஹெலிகாப்டர்களும் உணவு, கம்பளி, மருந்துகள் போன்றவற்றை அப்பகுதிகளில் தொடர்ந்து போட்டவண்ணம் உள்ளன.
ஜவகர் சுரங்கப்பாதையில் 150-க்கும் மேற்பட்ட வாகனங்கள் சிக்கிக் கொண்டுள்ளன. தொடர்ந்து 3-வது நாளாக போக்குவரத்து இல்லாமல் அதில் சிக்கியிருப்பவர்களுக்கு ராணுவத்தினர் ஹெலிகாப்டர் மூலம் உணவுப் பொட்டலங்களைப் போட்டனர். சுரங்கப் பாதையின் தெற்கு வாசல் வழியாகத்தான் அதைப் பெற முடிகிறது. உள்ளே 300-க்கும் மேற்பட்ட இந்தோ-திபேத்திய படைப்பிரிவைச் சேர்ந்த ஜவான்கள் சிக்கியுள்ளனர்.
இந்திய விமானப்படையினர் இதுவரை 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தியுள்ளனர்.
சண்டீகர், ஜம்மு, ஸ்ரீநகர், லெ ஆகிய நகரங்களுக்கு இடையில் ராணுவ விமானங்களும் ஹெலிகாப்டர்களும் பறந்து உதவிகளை அளித்து வருகின்றன.
|
|
|
| புலத்தில் சிறுவர்மரணங்கள் |
|
Posted by: shiyam - 02-22-2005, 01:18 AM - Forum: புலம்
- Replies (14)
|
 |
புலத்தில் சிறுவர்மரணங்கள் அதிகமாக நடப்பதனை அவதானிக்கலாம் குழந்தை பிறந்த சில நாட்களிலோ அல்லது 3 4 வயதிற்குட்பட்ட குழந்தைகளே இதில் அடங்குகின்றனர் காரணங்களை ஆராய்ந்தால் சிறிய பிரச்சனைகளாகதான் இருக்கும் இங்கு குழந்தை பிறந்ததும் இறந்தால் வைத்தியர்கள் குழந்தை கருவில் சரியாக வளரவில்லை குறைபாட்டுடன் வளர்ந்துள்ளது இறந்து விட்டது என்று சாதாரணமாக கூறிவடுவார்கள் எம்மவரும் அதை கேட்டு விட்டு சிலநாட்கள் அழுது போட்டு பின்னர் தங்கள் வேலையை பார்க்க போய் விடுவார்கள். எங்கே என்ன பிரச்சனை என ஆராய்வதோ அல்லது அதற்கான சட்ட நடவடீக்கை எடுக்க முன்வருவதோ இல்லை. காரணம் என்னவெனறால் தாய் தந்தையரிற்கு போதிய மொழியறிவு இல்லையென்பதே உதாரணமாக ஆங்கிலம் பேசுகின்ற நாடுகளில் இருப்பவர்களை தவிர மற்றைய நாடுகளில் இருப்பவர்களே இந்த பிரச்சனைக்கு அதிகம் முகம் கொடுக்கின்றனர்.கர்பிணி தாய் 3 மாதங்களின் பின்னர் ஒவ்வொரு மாதமும் பெண்கள் சம்பந்தபட்ட விசேட வைத்தியரிடம் ஆலோசனையும் பரிசோதனையும் செய்தல் அவசியம் அவரிற்கோ கணவரிற்கோ மொழி தெரியாவிட்டால் வெட்கம்காரணமாக கர்ப்பம் சம்பந்த பட்ட விடயங்களில் வேறு மொழி தெரிந்த ஒருவரின் உதவியை நாடுவதும் இல்லை வைத்தியர் சொல்வதற்கெல்லாம் தலையாட்டி விட்டு அவர் என்ன ஆலோசனை சொன்னார் என்பது தெரியாமல் போவதும் குழந்தை அல்லது கருவிலிருக்கும் சிசு மரணத்திற்கு காரணமாகிறது.மற்றையது சிறுவர்களிற்கு சாதாரணமாக வருகின்ற அலர்ச்சி வருத்தங்களிற்கும் மற்ற வருத்தங்களிற்கும்வைத்தியர்களின் ஆலோசனையை நாடுவதோ அல்லது அவர்களின் ஆலோசனைi சரிவர கடைப்பிடிக்காமல் எல்லா வருத்தத்திற்கும் பெரியவர்களை போல விக்ஸ் தடவி விட்டு பின்னர் வருத்தம் முற்றிஏதாவது ஆனபின்னர் அழுது புலம்புலதில் எந்த பிரயோசனமும் இல்லை எப்பொழுதும் குழந்தைகள விடயத்தில் வைத்தியரை நாடும்போது அவர்களிற்கு மொழி பிரச்சனையானால் நன்றாக மொழி தெரிந்த ஒருவரின் உதவியுடன் நாடுவது நல்லது
|
|
|
| படித்ததில் பிடித்தது. |
|
Posted by: Thaya Jibbrahn - 02-22-2005, 01:14 AM - Forum: புலம்
- No Replies
|
 |
"மரணத்தில் முடியாது வாழ்வு" என்று கூறுமளவுக்கு எல்லா தனி மனித வாழ்வும் உயர்வானதான இருந்துவிடுவதில்லை. மரணத்துடன் மறக்கப்படும் தனிமனித வாழ்க்கையையே யதார்த்தத்தின் கண்கள் தினமும் சந்திக்கின்றன. இருப்பினும் மரணம் தம்மை துரத்திவருவதாக வாக்குமூலம் அளித்துப் பெற்றுக்கொண்ட வாழ்வினைக் கூட மரணத்தால் அழித்துவிட முடியும் என்பதை கட்டியம் கூறுவதாகவே புலம்பெயர்ந்த தமிழ்மக்களின் அவலச்சாவுகள் அமைந்து கொள்கின்றன. ஓடும் ரயிலின் தண்டவாளப்பாதையில் குளியலறையின் திரைமறைப்பில் இன்னும் எங்கெல்லாமோ தமிழர்களின் சாவுச் சங்கதிகள். இவற்றில் பெரும்பாலானவை தன்முயற்சிக் கொலைகளாகவே அமைகின்றன. வாழ்வின் இறுதிக் கணத்தையும் உவப்பானதாக வாழ்ந்து விடத் துடிக்கும் மேற்கத்தேயத்தவர்கள் மத்தியில் எம்மவர்களின் இவ்வாறான தன்முயற்சிக் கொலைக்கான காரணங்கள் என்ன? இவை இயல்பாகவே அவர்கள் மனதிலெழுந்த விரக்தி உணர்வின் வெளிப்பாடா? அல்லது வேறு ஏதேனும் தூண்டற் காரணிகளும் உண்டா? உண்மையில் அவர்களின் விரக்தி உணர்வு தான் அவர்களை இவ்வாறானதொரு முடிவுக்கு தள்ளியிருப்பினும் அந்த விரக்தி உணர்வை உண்டாக்கும் சுழ்நிலைகள் என்ன? என்பதை ஆராய்வது ஒரு சமூகப் பொறுப்புள்ள செயலாகும். அதனை இதுவரையில் எந்த "சேவைகளும்" மேற்கொண்டதில்லை என்பது வருந்தத்தக்கதாகும்.
சில காலங்களுக்கு முன்னர் சுவிற்சர்லாந்தில் இடம்பெற்ற பெண்ணொருவரின் மரணம் இவையெல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தாற் போல் அமைகின்றது. மேற்படி வள்ளி எனும் அப்பெண்ணின் நண்பர் ஒருவரே இக்கொலையைப் புரிந்துள்ளதாக பொலிஸ் தரப்பு உறுதியாக நம்புகின்றது. இது கொலையா ?தற்கொலையா? கொலையெனின் யார் அதன் சுத்திரதாரி? என்பதற்கு அப்பால் அப்பெண்ணின் கொலை பற்றி வெளிவந்த "குசுகுசுப்புகள்" கசப்பு மிக்கவை. கொலைக்கான நியாயப்படுத்தலாக வெளிவந்த வக்கிரக்குரல்களாகவே அவை இருந்தன.
பல்லினப் பண்பாட்டை குறிக்கோளெனக் கொண்டு தங்கள் வாழ்வுமுறையை நெறிப்படுத்தியுள்ள சுவிஸ்நாட்டவர்கள் மத்தியில் எங்கள் தனித்துவங்கள் சில மாற்றங்களை காணும் என்பது இயல்பு. அத்துடன் ஐநூறு ஆண்டு காலம் மாறி மாறி அடிமை வாழ்வுக்குட்பட்டிருந்த எமக்கு எது எமது பண்பாடு என்பதே வினாக்குறியாயிருப்பதும் அதேநிலையில் புலம்பெயர்ந்த நாம் "காஞ்ச மாடு எங்கோ விழுந்த மாதிரியாய்" வேற்றினப் பண்பாட்டை தலையில் தூக்கிச் சுமக்க நினைப்பதுவும் ஆத்திரத்திற்குரியதல்ல. அதுவும் குறிப்பாக இளைய தலைமுறை தங்களைச் சுற்றியுள்ள நடைமுறை வாழ்க்கையுடன் ஒன்றிய இந்த பண்பாட்டம்சங்களை தாங்களும் பின்பற்றவெண்ணுவது வியப்பானதல்ல. பண்பாடு என்பதன் உள்ளார்ந்த பொருள் புரியமால் செய்யப்படுகின்ற வியாக்கியானங்களால் இன்று எமது பண்பாடு என்பது பெண்கள் கட்டும் சேலையாகவும் ஆண்கள் இடுப்பில் சுற்றும் வேட்டியாகவும் மட்டுமே உருமாறிப்போய்விட்டதற்கு இளைய தலைமுறை எப்படி காரணமாகலாம். ?
ஒருவன் தான் காதலித்த பெண் அல்லது தன்னைக் காதலித்த பெண் தன்னை மறுதலித்து விட்டால் உடனடியாக அவன் கொலை கூட செய்யலாம். அதனை இந்த சமூகக் கட்டமைப்பு பண்பாட்டின் பெயரால் நியாயப்படுத்தி அவனைக் காப்பாற்றி விடும். ஒரு விதத்தில் இது தனிமனித உரிமைக்கு பண்பாட்டின் பெயரால் விடுக்கப்படும் அச்சுறுத்தலாகவே நோக்கப்பட வேண்டியுள்ளது. வீட்டில் உணவு சமைப்பதினாலேயே தாங்கள் அடிமைப்படுத்தப்ட்டு விட்டோம் என காட்டுக்கூச்சல் போடும் பெண்ணிலை வாதிகளின் குரல் இது விடயத்தில் மௌனவிரதம் காப்பதன்காரணம் என்ன? சில வேளைகளில் இவ்வாறான பொறுப்பு மிக்க பணிகள் மேடைகளையும் கைதட்டல்களையும் தங்களுக்குப் பெற்றுத் தராது என அவர்கள் எண்ணியிருக்க கூடும். இவர்கள் பெண் விடுதலை என கூப்பாடு போடுவதெல்லாம் விளக்கைப் பிடித்துக்கொண்டு கிணற்றில் விழுந்த கதையாகத்தான்.
நாம் பேச்சளவில் எப்படித்தான் விடுதலை விடுதலை என்று கொண்டாடிக் கொண்டாலும் பெண்விடுதலை என்பது சமூகத்தின் அடித்தளத்தில் இன்னமும் பதியமிடப்படவில்லை என்றே தோன்றுகின்றது. இதனை பெண்ணியவாதிகள் என்று தங்களுக்குத் தாங்களே அரிதாரம் புசிக்கொள்பவர்கள் உணர்ந்து கொண்டு செயற்பட முன்வருதல் பயன்தரும்.
இந்தச் சமூகப் பிணிக்கு உரிய சமூக ஆய்வொன்றின் மூலம் உரிய சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் இவ்வாறான எவரும் கண்ணீர் சிந்தாத மரணங்கள் அதிகரித்தே செல்லும்.
பெண்ணின் பெயர் மாற்றப்பட்டுள்ளது.
|
|
|
| சரிநிகர்சமானம் செய்த பாரதீ -தயா ஜிப்ரான் - |
|
Posted by: Thaya Jibbrahn - 02-22-2005, 01:00 AM - Forum: கவிதை/பாடல்
- Replies (5)
|
 |
சரிநிகர்சமானம் செய்த
பாரதீ !
வெறும் விவாகரத்து
பெற்றிடத் தானா
உந்தன் பாடல்கள் ???
நீ
மீண்டொருக்கால்
வர வேண்டும்.
உந்தன் பாடல்களை
அறம்பாட!
இது
கலி கடந்த காலம்
பழையன கழிக்கும் வெறியில்
நிர்வாணமே
நாகரீகம் ஆகலாம்.
புதியன புகுக்கும் பணியில்
தங்க விலங்கணிய
கைகள்
தண்டியாத்திரை நடாத்தலாம்.
இன்னும்
எண்ணாத எதுவுமிங்கே
இன்றைக்கே
நிகழ்ந்தும் விடலாம்.
ஆனாலும்
நீ நினைத்தது நிகழ
நிகழ் காலமொன்று
வாராமல் போகலாம்.
கோயில்கள் திருடிய
பல்லவப் பாடல்கள் போன்றே
உந்தன்
நூற்றாண்டுத் தத்துவமும்
மேடைப்பேச்சுக்கே
உரிய தென்றாகலாம்.
உன்
கண்ணம்மாவும் செல்லம்மாவும்
எங்கள்
கவிதையில் மட்டுமே
அடிக்கடி
வந்து போகின்றார்கள்.
பார்வையில் எப்போதும்
பாஞ்சாலிகள்
துச்சாதனர்களை
கை கோர்த்தபடி.
பெண்ணியம் பேசுதற்கு
பெற்றோல் செலவு கேட்கிறர்கள்.
பார்த்தாயா?
உன் பேசு பொருளெல்லாம்
காசு பொருளாகி
கடைவீதி வருவதை?
என்னையும்
ஆதிக்கவாதி என்பதாய்
தீர்;மானம் போட்டிருப்பார்கள்.
ஆனால்
நீ மட்டுமாகிலும்
என்னை மன்னிப்பாய்.
ஏனெனில்ää
நான்
எண்ணுவதெல்லாம்ää
ஒன்றின் முதுகில்
இன்னொன்று சாவாரிப்பதையல்ல!
ஒன்றின் சுமையை
மற்றொன்று பகிரும் உலகத்தையே!!
-தயா ஜிப்ரான் -
|
|
|
|