| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 444 online users. » 0 Member(s) | 441 Guest(s) Applebot, Bing, Google
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,433
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,286
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,641
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,312
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,676
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,238
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,476
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,549
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,047
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,243
|
|
|
| இலங்கை இராணுவப் புலனாய்வுப்பிரிவின் ..... ..... |
|
Posted by: Vaanampaadi - 02-21-2005, 12:15 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (1)
|
 |
இலங்கை இராணுவப் புலனாய்வுப்பிரிவின் பெயரில் சுவீடனில் வசிக்கும் கே.ரி.ராஜசிங்கம் ஜ.நா செயலருக்கு அறிக்கை.
ஞாயிற்றுக்கிழமை 20 பெப்ரவரி 2005 எஸ்.எழில்வேந்தன்
இலங்கை இராணுவப் புலனாய்வுப் பிரிவின் பெயரில் சுவீடன் நாட்டில் வாழ்ந்து வரும் ராஜசிங்கம் கணபதிப்பிள்ளை தம்பிராஜா என்பவர் ஜ.நா செயலாளர் கொபி அனானுக்கு அறிக்கை அனுப்பியமை சுவீடன் நாட்டு இரகசிய புலனாய்வுப் பிரிவால் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவ இலங்கை அரச புலனாய்வுப்பிரிவின் ஆள ஊடுருவித்தாக்குதலை மேற்கொள்ளும் தமிழ்த் தாக்குதற் பிரிவாகத் தொழிற்படும் தமிழ்த் தேசியப்படை தமிழீழ மக்கள் விடுதலைப்புலிகள் என்றும் தமிழீழ ஜக்கிய விடுதலை முன்னணி என்ற பெயரிலும் இயங்கும் உறுப்பினர்களின் சுவீடன் நாட்டுப் பொறுப்பாளராகத் தொழிற்படும் ராஜசிங்கம் கணபதிப்பிள்ளை தம்பிராஜா என்பவர் சமாதானப் பேச்சுவார்த்தைகளைக் குழப்பும் நோக்குடன் நோர்வே அரசாங்கத்திற்கு எதிராக ஜ.நா செயலாளர் கொபி அனானுக்கு அவசர கடிதமொன்றினை அனுப்பி வைத்துள்ளார். இந்தக் கடிதத்தின் பிரதியினைத் தனது ஏசியன்ரிபுனே என்ற இணையத்தளத்திலும் உடனடியாகப் பிரசுரித்துள்ளார். இந்தச் சம்பவம் உடனடியாக சுவீடன் நாட்டு இரகசியப் புலனாய்வுப் பிரிவினருக்கு சுட்டிக் காட்டப்பட்டதைத் தொடர்ந்து குறித்த தமிழ்த் தேசவிரோதிக்கு எதிரான தீவிர விசாரணையினை சுவீடன் அரசு முடுக்கி விட்டுள்ளதாக நம்பகரமாக அறியமுடிகிறது. டென்மார்க் நாட்டைத் தளமாகக் கொண்டியங்கும் தமிழ்த் தேசவிரோதக் கும்பலான கருணா கும்பலின் டென்மார்க் செயற்பாடுகளும் அவர்களின் இணையத்தின் ஊடாகத் தொடர்ந்து எவற்றையும் பிரசுரிக்க முடியாத நிலையில் இவர்கள் தற்போது சுவீடன் நாட்டைப் பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர்.
இலங்கையின் சமாதானப் பேச்சுவார்த்தைக்கு எதிராகவும் ஸ்கன்டிநேவிய நாடுகளுக்கிடையே உள்முரண்பாடுகளை ஏற்படுத்தும் வகையில் எவர் செயற்பட்டாலும் அவை மிக உன்னிப்பாக இரகசிய புலனாய்வுத்துறையால் கண்காணிக்கப்பட்டு வருமென்று சுவீடன் பாதுகாப்புத்துறை அதிகாரி ஒருவர் கருத்துத் தெரிவித்துள்ளார்.
பிற்குறிப்பு:-
ராஜசிங்கம் கணபதிப்பிள்ளை தம்பிராஜா என்பவர் யாழ்மாவட்டம் வடமராட்சி கட்டைவேலி பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தில் சேவையாற்றிய காலத்தில் பல இலட்சம் ரூபாய்கள் பணமோசடியில் ஈடுபட்டுப் பொலிசாரல் தேடப்பட நேரம் இரகசியமாக தாய்லாந்திற்குத் தலைமறைவாகச் சென்றவர்.
சங்கத்திற்கென திருமலையிலிருந்து வந்த கோதுமை மா லொறி ஒன்றினை இரகசியமாகக் கடத்தி விற்றுப் பணமாக்கியவர். தாய்லாந்து நாட்டில் ஆயுத முகவராகவும் ஜரோப்பிய நாடுகளுக்கான ஆட்கடத்தும் முகவராகவும் தொழிற்பட்டவர். நீண்ட காலத்தின் பின்னர் அகதியாக சுவீடன் நாட்டிற்கு இடம்பெயர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Rajasingham Kanapathipillai Thambirajah
Carl Wahrens V. 22 B,
763 34 HALLSTAVIK
Sweden
Source : http://www.nitharsanam.com/?art=8907
|
|
|
| கௌசல்யன் கொலையின் பின்னணியில் செயற்பட்டு வரும் ..... |
|
Posted by: Vaanampaadi - 02-20-2005, 11:52 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- No Replies
|
 |
கௌசல்யன் கொலையின் பின்னணியில் செயற்பட்டு வரும் மறை கரங்கள்
திங்கட்கிழமை21 பெப்ரவரி 2005 நன்றி தினக்குரல்
வடக்கு - கிழக்கில் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் விடுதலைப்புலிகளின் அரசியல் பணிகளை முடக்கும் அதேநேரம் கிழக்கின் ஸ்திரத் தன்மையை சீர்குலைக்கும் முயற்சிகள் தொடர்ந்தும் நடைபெறுகின்றன. புலிகள் மீதான தாக்குதல்களும் அதன் பின்னான பிரசாரங்களும் இவ்வாறானதொரு சூழ்நிலையை தோற்றுவிக்க முயல்கின்றன. போர்நிறுத்த உடன்பாடு கைச்சாத்திடப்பட்டு இவ்வாரத்துடன் மூன்று வருடங்கள் நிறைவு பெறுகின்றன. இந்தப் போர்நிறுத்தத்தால் நாட்டில் போர் நின்றதே தவிர என்ன நோக்கத்திற்காக இந்தப் போர்நிறுத்தப்பட்டதோ அதில் எள்ளளவு பயனும் எட்டப்படவில்லை. அதேநேரம் தமிழ் மக்கள் தொடர்ந்தும் துன்பங்களை அனுபவித்துக் கொண்டிருக்கையில் புலிகள் மீதான தாக்குதல் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. கௌசல்யனின் படுகொலையானது புலிகளை கடும் போக்கிற்கிட்டுச் செல்லும் சூழ்நிலையையும் தோற்றுவித்துள்ளது. கிழக்கின் ஸ்திரத் தன்மையை சீர்குலைக்கும் விதத்தில் ஆரம்பத்தில் சிறு சிறு தாக்குதல்கள் நடத்தப்பட்ட போதும் தற்போது கௌசல்யன் மீதான தாக்குதலானது கிழக்கைத் தொடர்ந்தும் குழப்பத்தில் வைத்து அங்கு ஸ்திரமற்றதொரு நிலையை ஏற்படுத்தி வடக்கு - கிழக்கை பிரிக்கும் முயற்சியை முனைப்புடன் முன்னெடுத்துச் செல்வதே அரசினதும் படையினரதும் நோக்கமாயுள்ளது.
கௌசல்யன் கொலையின் பின்னணியில் செயற்பட்டு வரும் மறை கரங்கள்
திங்கட்கிழமை 21 பெப்ரவரி 2005 நன்றி தினக்குரல்
வடக்கு - கிழக்கில் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் விடுதலைப்புலிகளின் அரசியல் பணிகளை முடக்கும் அதேநேரம் கிழக்கின் ஸ்திரத் தன்மையை சீர்குலைக்கும் முயற்சிகள் தொடர்ந்தும் நடைபெறுகின்றன. புலிகள் மீதான தாக்குதல்களும் அதன் பின்னான பிரசாரங்களும் இவ்வாறானதொரு சூழ்நிலையை தோற்றுவிக்க முயல்கின்றன. போர்நிறுத்த உடன்பாடு கைச்சாத்திடப்பட்டு இவ்வாரத்துடன் மூன்று வருடங்கள் நிறைவு பெறுகின்றன. இந்தப் போர்நிறுத்தத்தால் நாட்டில் போர் நின்றதே தவிர என்ன நோக்கத்திற்காக இந்தப் போர்நிறுத்தப்பட்டதோ அதில் எள்ளளவு பயனும் எட்டப்படவில்லை. அதேநேரம் தமிழ் மக்கள் தொடர்ந்தும் துன்பங்களை அனுபவித்துக் கொண்டிருக்கையில் புலிகள் மீதான தாக்குதல் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. கௌசல்யனின் படுகொலையானது புலிகளை கடும் போக்கிற்கிட்டுச் செல்லும் சூழ்நிலையையும் தோற்றுவித்துள்ளது. கிழக்கின் ஸ்திரத் தன்மையை சீர்குலைக்கும் விதத்தில் ஆரம்பத்தில் சிறு சிறு தாக்குதல்கள் நடத்தப்பட்ட போதும் தற்போது கௌசல்யன் மீதான தாக்குதலானது கிழக்கைத் தொடர்ந்தும் குழப்பத்தில் வைத்து அங்கு ஸ்திரமற்றதொரு நிலையை ஏற்படுத்தி வடக்கு - கிழக்கை பிரிக்கும் முயற்சியை முனைப்புடன் முன்னெடுத்துச் செல்வதே அரசினதும் படையினரதும் நோக்கமாயுள்ளது. அதேநேரம் இல்லாத ஒன்றை இருப்பதாகக் காட்டும் முயற்சியிலும் அரசும் இராணுவ புலனாய்வுப் பிரிவினரும் ஈடுபட்டுமுள்ளனர். கௌசல்யனின் கொலையின் மூலம் கிழக்கிலிருந்து விடுதலைப்புலிகளை அப்புறப்படுத்தும் முயற்சியை கருணா குழுவினர் தீவிரப்படுத்தியுள்ளதாக அரச ஊடகங்களும் சிங்கள ஆங்கில ஊடகங்களும் தினமும் பெரும் பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றன.
கிழக்கில் நிழல் யுத்தத்திலும் உளவியல் போரிலும் ஈடுபடும் இராணுவ புலனாய்வுப் பிரிவு அவ்வப்போது புலிகளின் மீதான தாக்குதல்கள் மூலம் நேரடி யுத்தத்திலும் ஈடுபடுகிறது. கருணா குழுவின் பெயரால் மேற்கொள்ளப்படும் தாக்குதல்கள் அனைத்துமே இராணுவ புலனாய்வுப் பிரிவினராலேயே மேற்கொள்ளப்படுவதாக விடுதலைப்புலிகள் நேரடியாகவே குற்றஞ்சாட்டுகின்றனர். ஆனால் அதனை மறுக்கும் போதெல்லாம் அந்தத் தாக்குதல்களில் தங்களுக்கிருக்கும் தொடர்பை தெரியாமலே ஏதோவொரு வகையில் அவர்கள் காண்பித்துவிடுகின்றனர்.
புலிகளின் முக்கியஸ்தர்கள் மீதான தாக்குதல்கள் நன்கு திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்படும் அதேநேரம் அந்தத் தாக்குதலுக்கு முன்னர் புலிகளுக்கு எதிரான ஆங்கில இணையத் தளமொன்றில் தாக்குதல்களை நியாயப்படுத்துவதற்கான காரணங்களும் வெளியாகிவிடும். கௌசல்யன் மீதான தாக்குதல் நடைபெற்ற அன்றைய தினம் கூட தாக்குதல் நடைபெறுவதற்க பலமணி நேரத்திற்கு முன்னர் அந்த ஆங்கில இணையத்தளத்தில் ஒரு விமர்சனச் செய்தி வெளியாகியிருந்தது.
கருணாவின் சகோதரர்களை புலிகள் இலக்கு வைத்துள்ளதால் அவர்கள் பாதுகாப்புத் தேடி இடம்பெயர்ந்து கொண்டிருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டிருந்ததுடன் கருணா மற்றும் அவரது சகோதரர் ரெஜி (கொல்லப்பட்டுவிட்டார்) ஆகியோரை புலிகள் அமைப்பிலிருந்து விலகுமாறு குடும்பத்தவர்களே வற்புறுத்தியிருந்ததாகவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்தச் செய்தி அந்த இணையத் தளத்தில் வெளியான அன்றைய தினமே வெலிக்கந்தை பகுதியில் வைத்து கௌசல்யன் கொலை செய்யப்பட்டார். இதன் மூலம் இந்தக் கொலையை கருணா குழுவே செய்தது என்பதை வெளியுலகுக்கு தெரியப்படுத்த வேண்டுமென்பதே அந்த இணையத் தளத்தின் நோக்கமாகும்.
இந்த ஆங்கில இணையத் தளம்தான் ஆரம்பம் முதல் கருணா தொடர்பான செய்திகளை பிரத்தியேகமாக வெளியிட்டு வருகிறது. கருணா ஹதமிழீழ மக்கள் விடுதலைப் புலிகள்' என்ற கட்சியை ஆரம்பித்துவிட்டதாக முதலில் செய்தியை வெளியிட்ட இந்த இணையத் தளம் பின்னர் ஹஈழதேசிய ஜனநாயக விடுதலை முன்னணி'யுடன் (ஈ.என்.டி.எல்.எவ்.) இணைந்து கருணா தமிழீழ ஐக்கிய விடுதலை முன்னணி என்ற அமைப்பை உருவாக்கியுள்ளதாகவும் தெரிவித்திருந்தது.
அத்துடன் கௌசல்யன் கொலைக்கு இந்த தமிழீழ ஐக்கிய விடுதலை முன்னணியின் துணைப் படையான தமிழ் தேசியப் படை (Tamil National Force - TNF) உரிமை கோருவதாகவும் கொலை நடைபெற்று மூன்றாவது நாள் இந்த இணையத் தளம் செய்தி வெளியிட்டது. எனினும் அந்தச் செய்தியில் விஷேட அம்சமொன்றிருந்தது.
அதாவது கௌசல்யனின் கொலையை தாங்கள் தான் செய்தோம் என்பதைக் கூறுவதை விட இக் கொலையை இராணுவம் செய்யவில்லை என்பதை நியாயப்படுத்துவதிலேயே இந்தச் செய்தி தீவிரம் காட்டியிருந்தது. இந்தப் படையின் அதிகாரபூர்வ பேச்சாளரான சேரன் என்பவரது பெயரிலேயே அந்த இணையத்தளம் கௌசல்யனின் கொலைக்கு உரிமை கோரும் இந்தச் செய்தியை வெளியிட்டிருந்தது.
அதேநேரம் கௌசல்யனைக் கொல்ல வேண்டிய தேவை இராணுவத்திற்கு ஏனுள்ளது என்ற கேள்வியையும் எழுப்பியுள்ள அந்த அறிக்கை கௌசல்யனை இராணுவம் கொல்ல வேண்டிய தேவையிருந்தால் அவரை விட புலிகளின் மிக முக்கிய தலைவர்களான தமிழ்ச்செல்வன் அன்ரன் பாலசிங்கம் மற்றும் தளபதிகளான பானு சொர்ணம் சூசை போன்றோர் விமானப் படை ஹெலிகொப்டர்களில் சென்று வரும் போது ஹசாம் -7' ரக ஏவுகணை மூலம் இவர்கள் அனைவரையும் ஒரே நேரத்தில் கொன்றுவிடலாமே எனவும் கூற முனைகிறது.
அத்துடன் கௌசல்யன் மீதான தாக்குதலை நடத்தியவர்களில் இருவரது பெயரையும் குறிப்பிட்டு அவர்களே இத் தாக்குதலின் பொறுப்பாளிகளெனவும் ஹரி.என்.எவ்.' பின் பேச்சாளர் சேரன் கூறுவதாக அந்த இணையத் தளம் கூறியுள்ளது.
ஒரு புறம் கருணா குழுவே இந்தத் தாக்குதலை நடத்தியதாக இராணுவம் தீவிர பிரசாரங்களை மேற்கொண்டு வருகையில் மறுபுறம் இந்தத் தாக்குதலுக்கும் படையினருக்கும் எதுவித தொடர்புமில்லையென்றும் தாங்களே இதனை மேற்கொண்டதாக தமிழ் தேசியப் படை உரிமை கோர முற்படுவதன் பின்னணி குறித்து சாதாரண மக்களே தெளிவு பெற்றிருப்பார்கள்.
கிழக்கில் தங்கள் மீது இராணுவ புலனாய்வுப் பிரிவே தாக்குதல்களை நடத்துவதாகவும் கருணா குழுவென்று ஒன்றில்லையெனவும் புலிகள் திரும்பத் திரும்ப கூறிவருகையில் கருணா குழுவும் ஈ.என்.டி.எல்.எவ்.வும் இணைந்து உருவாக்கிய தமிழ் தேசியப் படையே இத்தாக்குதல்களை நடத்துவதாகவும் படையினருக்கும் இவற்றுக்கும் எதுவித தொடர்புமில்லையெனக் கூறமுற்படுவதில் அரச ஊடகங்களும் சிங்கள ஆங்கில ஊடகங்களும் போட்டி போட்டு வருகின்றன.
அத்துடன் இந்தத் தமிழ் தேசியப் படை குறித்து மக்கள் மத்தியில் பிரபல்யப்படுத்த வேண்டுமென்பதற்காகவும் இந்தப் படை வெலிக்கந்தை தாக்குதலின் பின்னர் உஷாராகச் செயற்படுவதாகக் காண்பிக்க வேண்டுமென்பதற்காகவும் மேற்படி ஆங்கில இணையத்தளம் கடந்த வாரம் மற்றொரு செய்தியை தமிழ்த் தேசியப் படை என்ற பெயரில் வெளியிட்டது.
தமிழ்க் கூட்டமைப்பு எம்.பி.க்கள் பிரபாகரனின் கைப்பொம்மைகளாகச் செயற்படுவதால் கூட்டமைப்பு எம்.பி.க்கள் 22 பேரும் உடனடியாக இராஜிநாமாச் செய்ய வேண்டுமென தமிழ்த் தேசியப் படை கோருவதாகக் கூறி அதற்கான காரணங்களையும் அந்தச் செய்தி தெரிவித்திருந்தது.
கௌசல்யனையும் முன்னாள் எம்.பி. சந்திரநேருவையும் இராணுவத்தினர் கொல்லவில்லையெனவும் கருணா குழு அல்லது தமிழ்த் தேசியப் படையே அவர்களைக் கொன்றதாகச் சித்திரிக்கவும் அந்தப் படையே தற்போது கூட்டமைப்பு எம்.பி.க்களுக்கும் மிரட்டல்களை விடுக்கத் தொடங்கி விட்டதாகவும் காண்பிக்கும் முயற்சியே இதுவெனக் கருதப்படுகிறது.
இதேநேரம் இந்த இணையத்தள செய்தியை அரச ஊடகங்களும் சிங்கள ஆங்கில ஊடகங்களும் மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து வெளியிடுகின்றன. அத்துடன் அரச தொலைக்காட்சி ஒருபடி மேலே சென்று கூட்டமைப்பு எம்.பி.க்களின் பாதுகாப்பிற்கு தமிழ்த் தேசியப் படையால் ஹபெரும் அச்சுறுத்தல்' ஏற்பட்டுள்ளதால் அவர்களது பாதுகாப்பு குறித்து அரசு என்ன ஏற்பாடுகளைச் செய்துள்ளதென இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் தயாரத்னவை பேட்டி கண்டு ஒளிபரப்பியது.
இந்த ஆங்கில இணையத்தளம் புலிகள் மீதான தாக்குதல்களுக்குப் படையினர் பொறுப்பல்ல என்றும் தமிழ்த் தேசியப் படையே காரணமெனவும் தொடர்ச்சியாக பிரசாரம் செய்து வருகையில் தங்களுக்கும் இந்தக் கொலைகளுக்கும் தொடர்பேதுமில்லையென்றும் கருணா குழுவே இதனைச் செய்ததாகவும் காண்பிக்கும் முயற்சியில் இராணுவப் புலனாய்வுப் பிரிவு தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
இவ்விடத்தில் இராணுவ புலனாய்வுப் பிரிவின் செய்திகள் வேறுவிதமாகவுள்ளன. அதாவது கௌசல்யன் மீதான தாக்குதலை கருணா குழுவே மேற்கொண்டதை புலிகளும் நன்கறிவரெனவும் தாக்குதல் நடைபெற்ற பகுதியில் கருணா குழுவின் நடமாட்டமிருப்பதை அறிந்த புலிகள் அவர்கள் மீது தாக்குதல் நடத்த முனைவதால் வெலிக்கந்தை பகுதியில் புலிகளுக்கும் கருணா குழுவிற்கும் இடையே மோதல்கள் வெடிக்கலாமென சிங்கள ஆங்கில ஊடகங்களூடாக பிரசாரம் செய்து வருகிறது.
இராணுவ புலனாய்வுப் பிரிவின் இவ்வாறான பிரசாரச் செய்திகளை அரசின் கட்டுப்பாட்டிலுள்ள தமிழ் வானொலி குறிப்பாக ஈ.பி.டி.பி.யால் நடத்தப்படும் இதயவீணை நிகழ்ச்சி மட்டுமே ஒலிபரப்புகிறது. ஏனைய தமிழ் ஊடகங்கள் இந்தப் பிரசாரத்திற்கு எடுபடுவதில்லை.
இதேநேரம் கௌசல்யனின் கொலைக்கு இராணுவப் புலனாய்வுப் பிரிவே காரணமெனவும் கருணா குழுவென்று ஒன்றில்லையெனவும் கிழக்கில் குழப்பங்களை ஏற்படுத்த படையினரே இவ்வாறான தாக்குதல்களை நடத்துவதாக புலிகள் கூறுவதையும் தற்போது சிங்கள மக்கள் நம்புவதால் அவர்களை திசை திருப்பும் வகையில் இராணுவப் புலனாய்வுப் பிரிவு அரச மற்றும் சிங்கள ஊடகங்களூடாக பொய்ப் பிரசாரத்திலீடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
கௌசல்யனின் கொலையை அடுத்து வெலிக்கந்தை பகுதியில் ஆயுதங்களுடன் நடமாடும் புலிகள் வெலிக்கந்தை இராணுவ முகாமிற்குள் கருணா குழுவினர் மறைந்திருப்பதாகக் கூறி அந்த முகாமை திடீரென சுற்றி வளைக்கத் திட்டமிட்டு வருவதாக இராணுவப் புலனாய்வுத் தகவல்கள் கூறுவதாக கடந்த வாரம் சிங்கள ஊடகங்கள் பரபரப்பாகச் செய்திகளை வெளியிட்டன.
இதன் மூலம் கௌசல்யன் மீதான தாக்குதலுக்கு கருணா குழுவே காரணமெனப் புலிகள் உறுதியாக நம்புவது போன்றதொரு தோற்றப்பாட்டை சிங்கள மக்கள் மத்தியில் காண்பிக்க இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் பலத்த முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக தமிழ்த் தரப்பில் குற்றஞ்சாட்டப்பட்டது.
இதேநேரம்கௌசல்யனின் கொலை புலிகளை கடும் சீற்றமடையச் செய்துள்ளது. தமிழ் மக்கள் கூட இந்த விடயத்தில் புலிகள் பொறுமையாக இருப்பது குறித்து விசனமடையுமளவிற்கு நிலைமையுள்ளதால் இதற்கான பதில் விரைவில் கிடைக்குமென அரசும் படைத் தரப்பும் கூட எதிர்பார்த்திருக்கின்றன.
http://www.nitharsanam.com/?art=8929
|
|
|
| இன்னும் சில படங்கள் |
|
Posted by: Vaanampaadi - 02-20-2005, 11:10 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (3)
|
 |
<img src='http://us.news2.yimg.com/us.yimg.com/p/nm/20050220/mdf866614.jpg' border='0' alt='user posted image'>
Sun Feb 20, 7:56 AM ET
Former presidents Bill Clinton (L) and George Bush sign a guest book upon their arrival at Colombo's International Airport February 20, 2005. Clinton and Bush will visit Sri Lanka's tsunami-hit southern coast during their tour of the country. (Anuruddha Lokuhapuarachchi/Reuters)
<img src='http://us.news2.yimg.com/us.yimg.com/p/afp/20050220/capt.sge.mev83.200205115543.photo00.photo.default-384x352.jpg' border='0' alt='user posted image'>
Former US presidents Bill Clinton (right) and George Bush (left) have arrived in Sri Lanka for a tour of the tsunami-battered island nation(AFP/File/Roslan Rahman)
<img src='http://us.news1.yimg.com/us.yimg.com/p/rids/20050220/i/r1658011404.jpg' border='0' alt='user posted image'>Sun Feb 20, 6:13 AM ET
Former U.S. presidents Bill Clinton and George Bush sign the guest book upon their arrival at Colombo International airport to visit Sri Lanka's tsunami hit southern coast February 20, 2005. The U.S. has played a leading role in helping Sri Lanka's tsunami victims by providing money, donating food and deploying U.S. marines to clear debris. REUTERS/Anuruddha Lokuhapuarachchi
|
|
|
| வரவேற்க்கும் படம் |
|
Posted by: Vaanampaadi - 02-20-2005, 10:47 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (6)
|
 |
<img src='http://us.news2.yimg.com/us.yimg.com/p/ap/20050220/capt.xej10402201545.sri_lanka_tsunami_us_visit_xej104.jpg' border='0' alt='user posted image'>
Sun Feb 20,10:48 AM ET
Sri Lankan President Chandrika Kumaratunge welcomes former U.S. Presidents Bill Clinton (news - web sites), right, and George H. W. Bush, as they arrive at President's official residence in Colombo, Sri Lanka on Sunday Feb. 20, 2005. Clinton and Bush will visit Matara in southern Sri Lanka on Monday to gain firsthand information on the devastation wrought by the Dec. 26 tsunami, which pounded three-quarters of the country's coast and killed an estimated 40,000 people. (AP Photo/Eranga Jayawardena)
<img src='http://us.news2.yimg.com/us.yimg.com/p/ap/20050220/capt.srgh12002201543.bush_clinton_tsunami_srgh120.jpg' border='0' alt='user posted image'>
Sun Feb 20,10:46 AM ET
Former U.S. President Bill Clinton (news - web sites) talks with Sri Lanka President Chandrika Kumaratunga, second right, and Prime Mnister Mahinda Rajapaksen, left, before they sit down for dinner at Karmatunga's residence Sunday, Feb. 20, 2005. Right is former U.S. President George H.W. Bush. Bush and Clinton are touring the tsunami affected regions of Thailand, Indonesia and Sri Lanka. (AP Photo/Gerald Herbert)
<img src='http://us.news2.yimg.com/us.yimg.com/p/ap/20050220/capt.xej10202201439.sri_lanka_tsunami_us_visit_xej102.jpg' border='0' alt='user posted image'>
Sun Feb 20, 9:42 AM ET
Former U.S. Presidents Bill Clinton (news - web sites), ina red shirt, and George H.W. Bush, center, walk up to sign the visitors book at Bandaranayke International airport, at Katunayake, 20 kilometers (13 miles) north of Colombo, Sri Lanka on Sunday, Feb. 20, 2005. Clinton and Bush plan a visit Matara in southern Sri Lanka on Monday to gain firsthand information on the devastation wrought by the Dec. 26 tsunami, which pounded three-quarters of the country's coast and killed an estimated 40,000 people. (AP Photo/Eranga Jayawardena)
<img src='http://us.news2.yimg.com/us.yimg.com/p/ap/20050220/capt.xej10302201440.sri_lanka_tsunami_us_visit_xej103.jpg' border='0' alt='user posted image'>
Sun Feb 20, 9:43 AM ET
Former U.S. President George W. Bush (news - web sites) waves as he and Bill Clinton (news - web sites), front right, arrive at Bandaranayke International airport, at Katunayake, 20 kilometers(13 miles) north of Colombo, Sri Lanka on Sunday, Feb. 20, 2005. Clinton and Bush plan to visit Matara in southern Sri Lanka on Monday to view the devastation wrought by the Dec. 26 tsunami, which pounded three-quarters of the country's coast and killed an estimated 40,000 people. (AP Photo/Eranga Jayawardena)
<img src='http://us.news2.yimg.com/us.yimg.com/p/afp/20050220/capt.sge.mfc61.200205131058.photo02.photo.default-287x384.jpg' border='0' alt='user posted image'>
Sun Feb 20, 8:11 AM ET
Former US president Bill Clinton arrives in Sri Lanka(AFP)
|
|
|
| நக்மா பெயரில் இருப்பது கவர்ச்சி நடிகை மும்தாஜ்? |
|
Posted by: Vaanampaadi - 02-20-2005, 10:12 PM - Forum: சினிமா
- No Replies
|
 |
மும்தாஜ் தாவூத் தம்பி தொடர்பா?
மும்பை தாதா தாவூத் இப்ராகிமின் தம்பி அனீஸ் இப்ராகிமுடன் தொடர்புடைய நடிகை நான் அல்ல என்று நடிகை மு¬ம்தாஜ் மறுத்துள்ளார்.
அனீஸ் இப்ராகிமுக்கும், நடிகை நக்மாவுக்கும் தொடர்பு உள்ளதாக வெளியாகும் செய்திகளால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஆனால் அந்த நக்மா என்பது நான் அல்ல, தமிழில் இப்போது நடித்து வரும் நடிகை மும்தாஜின் ஒரிஜினல் பெயர் கூட நக்மாதான். அவரது தாயார் தபசும் கான், முன்பு வெடிகுண்டு வழக்கில் கைது செய்யப்பட்டவர்.
எனவே அவர்தான் அந்த நக்மா என்று நடிகை நக்மா தரப்பில் இருந்து புதுத் தகவலை வெளியிட்டுள்ளார்கள்.
இதை மும்தாஜ் திட்டவட்டமாக மறுத்துள்ளார். இதுகுறித்து மும்தாஜ் கூறுகையில்,
எனது ஒரிஜினல் பெயர் நக்மா கான், எனது தாயார் பெயர் தபசும்கான். 2002ம் ஆண்டு தாவூத் இப்ராகிம் தொடர்பான வழக்கில் எனது தாயாரை ¬மும்பை போலீஸார் கைது செய்ததாக நடிகை நிக்மா கூறியுள்ளது பொய்யான தகவல்.
எனது பெயர் நக்மா கான் என்பதால் இப்படி அபாண்டமாக பொய் சொல்வதா? எனக்கு தீவிரவாதிகளுடன் தொடர்பு இருந்தால், நான் ஏன் இங்கு வந்து ஆடிப் பாடி சம்பாதிக்கும் நிலையில் இருக்க வேண்டும்?
நான் மும்பையில் பந்த்ரா பகுதியில் குடியிருக்கவில்லை. அங்கிருந்து 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மல்லாட் பகுதியில்தான் வசித்து வந்தேன். அதிலும் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக சென்னையில்தான் வசித்து வருகிறேன்.
நக்மா என்ற நடிகைக்கும் தீவிரவாதிகளுக்கும் தொடர்பு இருப்பதாக தீவிரவாதி ராஜேஷ் கொடுத்துள்ள வாக்குமூலப்படி பார்த்தாலும் கூட, அந்த வருடங்களில் நான் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தேன். நடிகையாகவே இல்லை.
எனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்த இதுபோல தேவையில்லாத, சதிச் செயல் நடக்கிறது என்கிறார் மும்தாஜ்.
பாலிவுட் திரையுலகில் சைட் டேன்சராக இருந்தவர் மும்தாஜ். அவரைத் தான் டி.ராஜேந்தர் தனது மோனிஷா என் மோனலிஷா படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகப்படுத்தினார்.
Thatstamil
-------------------------------------------
தீவிரவாதிகளுடன் தொடர்பு: நக்மா பெயரில் இருப்பது கவர்ச்சி நடிகை மும்தாஜ்?
மும்பை, பிப். 20-
பிரபல நடிகை நக்மாவுக்கு தீவிரவாதி தாவூத்இப்ராகிம் கும்பலுடன் தொடர்பு இருப்பதாக புகார் கூறப்பட்டது.
பிடிபட்டவன் கொடுத்த முகவரியில் தேடியபோது நக்மா என்கிற மும்தாஜ் வசித்தது தெரிய வந்தது. இவர் தமிழ் கவர்ச்சி நடிகை. இவரது சொந்த பெயர் நக்மா.
டைரக்டர் டி.ராஜேந்தர் தனது மோனிசா என் மோனலிசா என்ற திரைப்படத்தில் அறிமுகப்படுத்தினார். குஷி படத்திலும் நடித்திருக்கிறார்.
நடிகை நக்மா வசித்த பாந்த்ரா என்ற பகுதியில்தான் இவரது வீடு உள்ளது. எனவே நடிகை மும்தாஜிக்கு தீவிரவாத கும்பலுடன் தொடர்பு உள்ளதா? என்ற சந்தேகம் கிளப்பப்பட்டு உள்ளது. இது பற்றி தற்போது விசாரணை நடக்கிறது.
மும்தாஜின் பாஸ்போர்ட்டிலும் நக்மா என்ற அவரது சொந்த பெயர்தான் இடம் பெற்றுள்ளது.
Maalaimalar
படம் நீக்கப்பட்டுள்ளது -- யாழினி
|
|
|
| 2 தலையுடன் |
|
Posted by: Vaanampaadi - 02-20-2005, 10:10 PM - Forum: செய்திகள்: உலகம்
- Replies (1)
|
 |
2 தலையுடன் பிறந்த குழந்தைக்கு ஆபரேசன்
<img src='http://www.maalaimalar.com/images/news/Article/20-2-2005/20baby.jpg' border='0' alt='user posted image'>
எகிப்தை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு ஒரே உடலில் 2 தலைகள் ஒட்டிய நிலையில் பெண் குழந்தை பிறந்தது. மனார் மகத் என்று பெயரிடப்பட்டுள்ள அந்த குழந்தையின் ஒரு தலையை எகிப்து டாக்டர்கள் ஆபரேசன் மூலம் வெற்றிகரமாக பிரித்தனர். 2 தலையுடன் அந்த குழந்தையை ஆஸ்பத்திரி நர்சு வைத்திருப்பதையும் ஆபரேசன் செய்து ஒரு தலை அகற்றப்பட்ட பிறகு அந்த குழந்தை சிகிச்சை பெற்று வருவதையும் படத்தில் காணலாம்
|
|
|
| நடிகர்-நடிகைகளுடன் மரத்தன் ஓட்டம் |
|
Posted by: Vaanampaadi - 02-20-2005, 10:08 PM - Forum: சினிமா
- No Replies
|
 |
சென்னையில் மராத்தான் ஓட்டம் நடிகர்-நடிகைகளுடன் 10ஆயிரம் பேர் ஓடினர்
<img src='http://www.dinakaran.com/daily/2005/Feb/20/flash/C1107_run.jpg' border='0' alt='user posted image'>
சென்னையில் நடந்த மராத்தான் போட்டியில் பங்கேற்று ஓடியவர்களை படத்தில் காணலாம்.
<img src='http://www.dinakaran.com/daily/2005/Feb/20/flash/C1107_run.jpg' border='0' alt='user posted image'>
சென்னையில் நடந்த மராத்தான் ஓட்டத்தில் முன்னணி வீரர்கள் பங்கு கொண்ட காட்சி.
சென்னை பிப் 20- சென்னையில் நடந்த மராத்தான் ஓட்டத்தில் சினிமா,தொலைக்காட்சி நடிகர் நடிகைகள் உள்பட 10ஆயிரம் பேர் பங்கேற்று ஓடினர்.
சென்னை ரோட்டரி சங்கமும், தமிழ்நாடு விளையாட்டு ஆணையமும் இணைந்து ஆண்டுதோறும் சென்னையில் மராத்தான் போட்டியை நடத்தி வருகிறது. இந்த ஆண்டுக்கான மராத்தான் போட்டிகள் சுனாமி நிதி திரட்டுவதற்காக இன்று காலை சென்னை கடற்கரை சாலையில் நடத்தப்பட்டது.
இதில் ஆண்களுக்கான முழு மராத்தான் போட்டிகள் 42 கிலோ மீட்டர் தூரமும். பெண்களுக்கான முழு மராத்தான் போட்டிகள் 21 கிலோ மீட்டர் தூரமும் கொண்டதாகும்.
இன்று காலை 6.30 மணிக்கு இந்த போட்டிகளை மாநகர போலீஸ் கமிஷனர் ஆர்.நடராஜ; கொடியசைத்து துவக்கி வைத்தார். ஆண்களுக்கான முழு மராத்தான் போட்டியில் கென்யா வீரர்கள் சாமுவேல் கில்ட் கண்டா, லுகாகில் மொய் உள்பட 500 பேர் கலந்து கொண்டனர். சிறுவர்களுக்கான 10 கிலோ மீட்டர் தூர ஒட்டப்பந்தயம், முதியவர்களுக்கான 5 கிலோ மீட்டர் ஓட்டப்பந்தயம் என 11 வகையான போட்டிகள் நடந்தது. இந்த போட்டிகளில் கலந்து கொள்ள சுமார் 9 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தங்கள் பெயர்களை பதிவு செய்திருந்தனர்.
போட்டிகள் சென்னை கடற்கரை சாலையில் உள்ள உழைப்பாளர் சிலை அருகில் இருந்து தொடங்கியது. அங்கிருந்து லைட்ஹவுஸ், அடையாறு, பெசண்ட் நகர் வழியாக எலியட்ஸ் கடற்கரை அடைந்து பின்னர் அங்கிருந்து மீண்டும் உழைப்பாளர் சிலைக்கு திரும்பியது. இந்த போட்டியில் சென்னை பள்ளி, கல்லுரி மாணவர்கள், விளையாட்டு வீரர்களுடன் பாகிஸ்தான், இஸ்ரேல், தாய்லாந்து, நாட்டை சேர்ந்த மராத்தான் வீரர்களும் கலந்து கொண்டு ஓடினார்கள்.
சிறப்பு அழைப்பாளர்களுக்கான 5 கிலோ மீட்டர் தூர மராத்தான் போட்டியில் நடிகர்கள் ஜீவா, ரமேஷ்கண்ணா, மன்சூரலிகான், விஜய் ஆதிராஜ;, கிருஷ்ணன், பிரேம்குமார், நடிகைகள் பூஜா, சங்கீதா உள்பட பலர் கலந்து கொண்டனர். இவர்களுடன் மாடல் அழகிகள், பிரபல விளையாட்டு வீரர்கள் கலந்து ஓடினார்கள்;. இதனை சிவாஜி புரொடக்ஷன் அதிபர் ராம்குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார். நடிகர் மாதவன் சிறப்பு அழைப்பாளராக வந்திருந்து வீரர்களை உற்சாகப்படுத்தினார். ஆனால் அவர் நட்சத்திர ஓட்டப்பந்தயம் தொடங்குவதற்கு முன்பு புறப்பட்டுச் சென்றார். இவர்கள் தவிர பல முன்னணி நடிகர்- நடிகைள் கலந்து கொள்வார்கள் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் அவர்கள் பங்கேற்கவில்லை.
மராத்தான் போட்டியில் கலந்து கொள்ளவும் அதனை வேடிக்கை பார்க்கவும் இன்று அதிகாலை முதலே கடற்கரை சாலையில் ஆயிரக்கணக்கான மக்கள் சாலையின் இரு பக்கமும் திரண்டு இருந்தார்கள். உடல் ஊனமுற்ற மாணவர்களும். மனநலம் குன்றிய இல்லத்து மாணவர்களும் மகிழ்ச்சியுடன் மராத்தான் போட்டியை கண்டு ரசித்ததோடு கலந்து கொண்ட வீரர் வீராங்கணைகளை கைதட்டியும், குரல் எழுப்பியும் உற்சாகப்படுத்தினார்கள். இது நெஞ்சை நெகிழ வைப்பதாக இருந்தது. போட்டியாளர்களுக்கும், பார்வையாளர்களுக்கும் பல்வேறு தனியார் நிறுவனங்கள் தொப்பி, குளிர்பானம், தண்ணீர் பாக்கெட், மோர் போன்றவற்றை இலவசமாக வழங்கின.
போட்டி நடப்பதற்கு ஏதுவாக இன்று காலை 6 மணிமுதல் 11 மணிவரை கடற்கரை சாலையில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு இருந்தது. கடற்கரை சாலை வாகனங்கள் திருவல்லிக்கேணி, மயிலாப்பூர். மந்தைவெளி வழியாக திருப்பி விடப்பட்டன. ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.
நிகழ்ச்சியில் ரோட்டரி கவர்னர் பெஞ்சமின் செரியன், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் பொதுமேலாளர் எஸ்.வரதராஜன், தமிழ்நாடு விளையாட்டு வளர்ச்சி கழக தலைவர் டேவிதார். ரோட்டரி முன்னாள் கவர்னர் ஆர்.கணபதி உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவில் போட்டிகளில் பெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. ஆண்கள் பிரிவில் வெற்றி பெற்றவருக்கு 2.10 லட்சம். பெண்கள் பிரிவில் வெற்றி பெற்றவருக்கு 1.05 லட்சம் உள்பட 10 லட்சத்து 62 ஆயிரம் ரூபாய் பரிசாக வழங்கப்பட்டது. இந்த போட்டியின் மூலம் திரட்டப்பட்ட தொகை சுனாமி நிவாரண நிதிக்காக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Dinakaran
|
|
|
| தமிழ் பெண்ணுடன் திருமணம்: அம்மி மிதித்த ஆங்கில வாலிபர் |
|
Posted by: Vaanampaadi - 02-20-2005, 12:45 PM - Forum: செய்திகள்: உலகம்
- Replies (5)
|
 |
பிப்ரவரி 20, 2005
ஆஸ்திரேலியா தமிழ் பெண்ணுடன் திருமணம்: 'அம்மி மிதித்த' ஆங்கில வாலிபர்
<img src='http://thatstamil.indiainfo.com/images26/marriage350.jpg' border='0' alt='user posted image'>
தஞ்சாவூர்:
ஆஸ்திரேலியாவில் வசிக்கும் தமிழ்ப் பெண், இங்கிலாந்து வாலிபரை இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டார். மணமகள் கழுத்தில் தாலி கட்டிய மாப்பிள்ளை அம்மி மிதித்து அருந்ததி பார்த்து அசத்தினார்.
தஞ்சாவூர் மாவட்டம் ஈச்சங்குடியைச் சேர்ந்த ஜானகிராமன்சாந்தா தம்பதி ஆஸ்திரேலியாவில் வசித்து வருகின்றனர். இவர்களது மகள் சுசீலா. ஆஸ்திரேலியப் பிரஜையான இவர் கர்நாடக இசையில் தீராத ஆர்வம் கொண்டவர்.
வெஸ்டர்ன்கர்நாடக இசை கலப்பு கொண்ட ஒரு ஆல்பம் தயாரிக்கும் முயற்சியில் இறங்கினார். இந்த ஆல்பம் தயாரிப்புக்காக லண்டன் சென்றபோது கிடார் இசைக் கலைஞரான சாம் மில்ஸ், சுசீலாவுக்கு அறிமுகமானார்.
இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்தனர். ஆனால், இந்திய கலாச்சாரப்படியே திருமணம் செய்து கொள்ள சுசீலா விரும்பினார். அதை சாம் ஏற்றுக் கொண்டார்.
இதையடுத்து லண்டனில் இருந்து சாமின் குடும்பமும், ஆஸ்திரேலியாவில் இருந்து சுசீலாவின் குடும்பத்தினரும் தஞ்சாவூர் வந்தனர். தஞ்சை வெண்ணாற்றங்கரையில் ஒரு ஹோட்டலில் இருவருக்கும் இந்து முறைப்படி திருமணம் நடந்தது.
மாப்பிள்ளையும் அவரது தந்தை, சகோதரர் உள்ளிட்டோரும் பட்டு வேட்டி சட்டையில் தகதகக்க, மணப்பெண் மற்றும் மாப்பிள்ளையின் சகோதரிகள், தாயார் ஆகியோர் பட்டுச் சேலைகளை அணிந்து திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
<img src='http://thatstamil.indiainfo.com/images26/marriage500.jpg' border='0' alt='user posted image'>
முழுக்க முழுக்க இந்து முறைப்படி நடந்த இத் திருமணத்தில் புரோகிதர் மந்திரங்கள் ஓத, மணப்பெண் கழுத்தில் தாலி கட்டினார் சாம். பிறகு மணமகளுக்கு மெட்டி அணிவித்தார், இதைத் தொடர்ந்து மணமக்கள் அம்மி மிதித்து, அருந்ததி பார்த்தனர்.
சாமின் பெற்றோர் அட்சதையை கொஞ்சம் டேஸ்ட் செய்து பார்த்தவாரே மணமக்கள் மீது தூவினர்.
இதையடுத்து தமிழ் சைவப் சாப்பாடும் பரிமாறப்பட்டது. வித்தியாசமான மாப்பிள்ளையைப் பார்க்க ஹோட்டலுக்குள் ஏராளமான பொது மக்கள் கூடினர்.
Thatstamil
|
|
|
|