| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 445 online users. » 0 Member(s) | 442 Guest(s) Applebot, Bing, Google
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,433
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,286
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,641
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,312
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,676
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,238
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,476
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,549
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,047
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,243
|
|
|
| இலங்கை அமைதி பேச்சுக்கு உதவ தயார்: அமிர்தானந்தமயி |
|
Posted by: Vaanampaadi - 02-20-2005, 12:42 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- No Replies
|
 |
பிப்ரவரி 20, 2005
இலங்கை அமைதி பேச்சுக்கு உதவ தயார்: அமிர்தானந்தமயி
<img src='http://www.amma-mass.org/images/ammaMain5.gif' border='0' alt='user posted image'>
திருவனந்தபுரம்:
இலங்கை மக்கள் கேட்டுக்கொண்டால் அந் நாட்டு அமைதி பேச்சுவார்தையை மீண்டும் தொடங்கி வைக்கத் தயாராக இருப்பதாக மாதா அமிர்தானந்தமயி தெரிவித்துள்ளார்.
சுனாமியால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட மாதா அமிர்தானந்தமயி இலங்கை சென்றார். அங்கு நிவாரணப் பணிகளை பார்வையிட்டுவிட்டு, இந்தியா திரும்பினார்.
தனது பயணம் குறித்து நிருபர்களிடம் கூறுகையில்,
இலங்கையில் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக அமிர்தானந்தமயி மடத்தின் சார்பில் 300 வீடுகள் கட்டித் தருவோம். இலங்கை பயணத்தின் போது அந்நாட்டு அதிபர் சந்திரிகா குமாரதுங்கா, பிரதமர் மகிந்தா ராஜபக்சே ஆகியோரை சந்தித்தேன். கம்பன்டோடா பகுதி சுனாமி நிவாரண முகாமை பிரதமரோடு சென்று பார்வையிட்டேன்.
தமிழர்கள் வாழும் பகுதிகளுக்கும் சென்று பார்வையிட்டேன். இலங்கையின் உள்நாட்டு சண்டையை தமிழ் மக்கள் உண்மையாகவே வெறுக்கின்றனர். அமைதியை விரும்புகின்றனர்.
இலங்கையின் அமைதிப் பேச்சுவார்த்தை அந்நாட்டின் உள் விவகாரம். ஆனால், அந்நாட்டு மக்கள் கேட்டுக் கொண்டால் தடைபட்ட அமைதிப் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்கி வைக்கத் தயாராக இருக்கிறேன் என்றார்.
Thatstamil
|
|
|
| டிராக்டரை ஏற்றி வாலிபர் சாகசம் |
|
Posted by: Vaanampaadi - 02-20-2005, 12:41 PM - Forum: செய்திகள்: உலகம்
- Replies (8)
|
 |
டிராக்டரை ஏற்றி வாலிபர் சாகசம்
<img src='http://www.maalaimalar.com/images/news/Article/20-2-2005/20tractor.jpg' border='0' alt='user posted image'>பஞ்சாப் மாநிலத்தில் நடந்த ஊரக விளையாட்டுப் போட்டியில் ஜகாசிங் என்ற வாலிபர் தனது உடலில் டிராக்டரை ஏற்றி சாகசம் செய்த காட்சி.
|
|
|
| மன்னாரில் புலிகள் மீனவர்கள் இடையிலான பதற்றம் தணிகிறது |
|
Posted by: Vaanampaadi - 02-20-2005, 10:15 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- No Replies
|
 |
மன்னாரில் புலிகள் மீனவர்கள் இடையிலான பதற்றம் தணிகிறது
மன்னார் பள்ளிமுனை பகுதி மீனவர்களுக்கும்இ மன்னார் பிரதேச விடுதலைப் புலிகளுக்கும் இடையே நேற்று ஏற்பட்ட முறுகல் நிலைமை தணிந்துஇ அப்பகுதியில் அமைதி நிலவுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் பள்ளிமுனை பிரதேச மீனவர்கள் இன்று கற்தொழிலுக்குச் செல்லவில்லை என மன்னார் கடற்றொழிலாளர் சங்க வட்டாரங்கள் தெரிவித்தன.
மீனவர்கள் டைனமைட் பாவித்து மீன் பிடிப்பதனால் இவர்களிடையே பிரச்சினை எழுந்ததாகக் கூறப்படுகிறது.
கடற்பரப்பிலும் மன்னார் நகரப்பகுதியிலும் நேற்று இடம்பெற்ற சம்பவங்களைத் தொடர்ந்து மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை மேற்கொண்ட சமரச முயற்சிகளையடுத்துஇ அங்கு நேற்று நிலவிய பதட்டம் தணிந்துள்ளது.
தாக்குதலுக்கு உள்ளாகிய விடுதலைப் புலிகளின் மன்னார் சின்னக்கடை பகுதி அரசியல்துறை அலுவலகம் இன்று செயற்படத் தொடங்கியுள்ளது.
இதனிடையில் வன்னிமாவட்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் மன்னார் சின்னக்கடை மற்றும் பள்ளிமுனை பகுதிகளுக்கு இன்று விஜயம் செய்துஇ விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர்களையும்இ பள்ளிமுனை பிரதேச கடற்றொழிலாளர் பிரதிநிதிகளையும் சந்தித்து நிலைமைகளை விரிவாகக் கேட்டறிந்துள்ளார்.
நேற்றைய வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக பள்ளிமுனை மீனவர் ஒருவரும்இ மன்னார் மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் அவர்களும் தமிழோசையிடம் வெளியிட்ட கருத்துகள் இன்றைய நிகழ்ச்சியில் இடம்பெறுகிறது.
BBC தமிழோசை (19.02.2005)
|
|
|
| 31 மணி நேரம் முத்தம் கொடுத்து உலக சாதனை |
|
Posted by: Vaanampaadi - 02-20-2005, 09:42 AM - Forum: செய்திகள்: உலகம்
- Replies (10)
|
 |
31 மணி நேரம் முத்தம் கொடுத்து உலக சாதனை
ஜெர்மன் ஜோடி 31 மணி நேரம் பிரியாமல் முத்தம் கொடுத்து சாதனை படைத்தது. நுரெம்பர்க் நகர் அருகே உள்ள தால்மேசிக் கிராமத்தைச் சேர்ந்தவர். மத்தியாஸ் பிரான் ஸ்டெட்டர் (வயது 24). இவரும் பமீலா ஸ்டெரன் என்ற 19 வயதுப் பெண்ணும் தொடர்ந்து 31 மணி நேரம் முத்தம் கொடுத்து உலக சாதனை புரிந்தனர்.
பவேரியன் முத்தப்போட்டி சாம்பியன்ஷிப்புக்கான ராஜா _ ராணி என்று அவர்களுக்கு கிரீடம் சூட்டப்பட்டது.
அவர்கள் சாதனை, கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பெற இருக்கிறது.
இதற்கு முன்பு அமெரிக்க ஜோடி 30 மணி நேரம் 59 நிமிடம் 27 வினாடி முத்தம் கொடுத்து கின்னஸ் சாதனை புரிந்தது.
தினதந்தி
|
|
|
| மனித குளோனிங்: ஐ.நா. தடை |
|
Posted by: Vaanampaadi - 02-20-2005, 09:41 AM - Forum: செய்திகள்: உலகம்
- No Replies
|
 |
மனித குளோனிங்: ஐ.நா. தடை
நியுயார்க், பிப். 20_
அனைத்து விதமான மனித குளோனிங்குகளையும் தடை செய்யும்படி நாடுகளைக் கோரும் தீர்மானம் ஐ.நா.சபையில் நிறை வேற்றப்பட்டது.
இந்தத் தீர்மானத்துக்கு ஆதர வாக 71 நாடுகளும், எதிராக
35 நாடுகளும் ஓட்டுப்போட்டன. 43 நாடுகள் ஓட்டெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.
இந்தத் தீர்மானம் ஐ.நா. பொதுச்சபையின் ஒப்புதலைப் பெறுவதற்கு அனுப்பப்பட்டு உள்ளது. ஒப்புதல் கிடைத்ததும் இந்தத் தீர்மானம் நடைமுறைக்கு வரும். இது வெறும் பரிந்துரை மட்டுமே. சட்டப்படியான நட வடிக்கை இல்லை.
இந்தியா, இங்கிலாந்து, பிரான்சு, சீனா, ஜப்பான் ஆகிய நாடுகள் இந்த தீர்மானத்தை எதிர்த்தன.
தினதந்தி
|
|
|
| புஷ் _ கிளிண்டன் கண்ணீர் விட்டனர். |
|
Posted by: Vaanampaadi - 02-20-2005, 09:41 AM - Forum: செய்திகள்: உலகம்
- No Replies
|
 |
சுனாமி பாதித்த பகுதிகளில் கிளிண்டன் _ புஷ் சுற்றுப்பயணம்
தாய்லாந்தில், கண்ணீர் வழிய பார்வையிட்டனர்
பாங்காக், பிப். 20_
சுனாமி பாதித்த பகுதிகளில் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதிகள் புஷ்_ கிளிண் டன் ஆகியோர் சுற்றுப் பயணம் செய்து வருகிறார் கள். தாய்லாந்தில் நேற்று அவர்கள் பயணத்தைத் தொடங்கினர். தாய்_தந் தையை சுனாமி பேரலைக்கு இழந்து விட்டு அனாதை யான குழந்தைகளைப் பார்த்து அவர்கள் கண்ணீர் விட்டனர்.
புஷ் நியமித்தார்
கடந்த டிசம்பர் மாதம் 26_ந் தேதி ஏற்பட்ட சுனாமியால் இந் தோனேசியா, தாய்லாந்து, இலங்கை, இந்தியா, மியான்மார், வங்காளதேசம் உள்பட பல நாடு களிலும் லட்சக்கணக்கானவர் கள் பலியானார்கள்.
சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி வழங்குவதற்கு நிதி திரட்டுவ தற்காக முன்னாள் ஜனாதிபதி கள் புஷ், கிளிண்டன் ஆகி யோரை இப்போதைய ஜனாதி பதி புஷ் நியமித்து இருக்கிறார்.
தாய்லாந்தில்
சுனாமி பாதித்த தாய்லாந்து, இந்தோனேஷியா, இலங்கை ஆகிய நாடுகளில் அவர்கள் சுற் றுப்பயணத்தைத் தொடங்கி உள் ளனர்.
முதன் முதலில் தாய்லாந்து சென்ற அவர்கள் அங்கு உள்ள பான் நாம்கேம் என்ற நகருக்குச் சென்றனர். அவர்களுடன் தாய் லாந்து பிரதமர் தக்சின் சின்கா வத்ராவும் சென்றார்.
ஓவியம் பரிசு
இந்த நகரில் 2 ஆயிரம் பேர் சுனாமிக்கு பலியானார்கள். பெற்றோரை இழந்த ஒரு சிறுமி சுனாமி பேரலை ஒரு கிராமத்தை தாக்கும் காட்சியை சித்திரமாக வரைந்து இருந்தார். அது 2 அமெ ரிக்க தலைவர்களுக்கும் வழங்கப் பட்டது. இதைப் பார்த்த புஷ், "இது என் மனதை உருகச் செய்து விட்டது என்றும் மறக்கமாட் டேன்" என்று கூறினார்.
[b]ஆழிப்பேரலையால் அனாதை யான சிறுவர்_சிறுமிகளைப் பார்த்ததும் இரு தலைவர்களின் கண்களிலும் கண்ணீர் வழிந்தது!
வீடு கட்டும் பணி
அருகில் உள்ள ஒரு கிராமத் துக்குச் சென்றனர். அந்தக் கிரா மத்தில் பாதிப்பேர் ஆழிப் பேர லையால் அடித்துச் செல்லப் பட்டு விட்டனர். அங்கு தாய் லாந்து ராணுவ வீரர்கள் இடிந்த வீடுகளை அப்புறப்படுத்திவிட்டு புதிய வீடுகளை கட்டும் பணியில் ஈடுபட்டு இருந்தனர். இதையும் அவர்கள் பார்வையிட்டனர்.
அதன் பிறகு 2 தலைவர்களுக் கும் பிரதமர் தக்சின் விருந்து கொடுத்தார்.
அதன் பிறகு அவர்கள் இந் தோனேசியாவுக்குப் புறப்பட் டனர்.
Dailythanthi
|
|
|
| மொபைல் போன்களை தாக்கும் வைரஸ் அமெரிக்காவிலும் .... |
|
Posted by: Vaanampaadi - 02-20-2005, 09:38 AM - Forum: செய்திகள்: உலகம்
- No Replies
|
 |
மொபைல் போன்களை தாக்கும் வைரஸ்
அமெரிக்காவிலும் கண்டுபிடிப்பு
சான்பிரான்சிஸ்கோ, பிப். 20_
கம்ப்ïட்டர்களை தாக்கும் வைரஸ் போல, மொபைல் போன்களையும் வைரஸ் தாக்கத் தொடங்கி உள்ளது.
பிலிப்பைன்ஸ் நாட்டில்தான் முதன் முதலாக 8 மாதங்களுக்கு முன்பு மொபைல் போன்களை வைரஸ் தாக்கியது. அது இப் போது அமெரிக்காவுக்கும் பரவி உள்ளது. `கபீர்' என அழைக் கப்படும் இந்த வைரஸ் மெதுவாக 12 நாடுகளில் பரவி உள்ளது. இந்த வைரஸ் உலகம் முழுவதும் மொபைல் போன்களைப் பயன் படுத்தும் 150 கோடி பேரின் அன் றாட வாழ்க்கையை ஒரு நாள் திணறடிக்கச் செய்யப்போகிறது.
இந்த வைரஸ் மொபைல் போன் பேட்டரிகளை செயல் இழக்கச் செய்யக்கூடியது.
கலிபோர்னியாவில் சாண்டா மோனிகாவில் உள்ள ஒரு கடை யில் உள்ள மொபைல் போனை வைரஸ் தாக்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
இந்தக் கடை உரிமையாளரின் மொபைல் போனிலும் வைரஸ் தொற்றி இருந்தது. இந்த 2 போன் களும் கம்ப்ïட்டருடன் இணைக் கப்பட்டவை.
இன்டர்நெட் மூலம் கம்ப்ïட் டர் வைரஸ்கள் வேகமாகப் பரவு கின்றன. ஆனால் மொபைல் போன் வைரஸ்கள் மெதுவாக புளூடூத் எனப்படும் வயர்லஸ் தொழில் நுட்பம் மூலம் பரவு கிறது.
Dailythanthi
|
|
|
| ஜனாதிபதியின் மட்டு. விஜயம் ரத்து |
|
Posted by: Vaanampaadi - 02-20-2005, 09:36 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- No Replies
|
 |
ஜனாதிபதியின்
மட்டு. விஜயம் ரத்து
ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் மட் டக்களப்புக்கான விஜயம் திடீரென ரத்துச் செய் யப்பட்டுள்ளது. நாளை அவர் அங்கு விஜயம் செய்வதாக இருந்தார்.
ஆழிப்பேரலையால் பாதிக்கப்பட்ட மட்டக் களப்பு மாவட்ட மக்களுக்கான வீடமைப்புத் திட் டத்திற்கு அடிக்கல் நடுவதற்காக ஜனாதிபதி மட் டக்களப்புக்கு விஜயம் செய்யத் தீர்மானித் திருந்தார். எனினும், இறுதி நேரத்தில் அவரது பயணம் ரத்துச்செய்யப்பட்டதாக அறிவிக்கப் பட்டது. அதற்கான காரணம் தெரிவிக்கப்பட வில்லை.
ஜனாதிபதியின் இந்த விஜயத்தைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப் பினர்கள் எதிர்த்திருந்தனர். அத்துடன், ஜனாதிபதிக்கு நேரில் எதிர்ப்புத் தெரிவிப்பதற்கான நட வடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன எனத் தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதியின் விஜயம் ரத்துச் செய்யப் பட்டமைக்கு இந்த எதிர்ப்புக்கள் காரணமா என்பது குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. அதேசமயம் பிறிதொரு சமயத்தில் ஜனாதிபதி யின் விஜயம் இடம்பெறலாம் என்று சில வட்டா ரங்கள் தெரிவித்தன.
Utayan (19.02.2005)
|
|
|
| பகிடிவதைக் கொடூரம் ? |
|
Posted by: Vaanampaadi - 02-20-2005, 09:34 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (4)
|
 |
புகுமுக மாணவர்கள் தங்கியிருந்த
வீட்டினுள் புகுந்த கும்பல் அடாவடி!
பகிடிவதைக் கொடூரம் எனச் சந்தேகம்?
திருநெல்வேலிப் பகுதியில் யாழ். பல் கலைக்கழக புகுமுக மாணவர்கள் தங்கியி ருந்த வீடு ஒன்றினுள் சிரேஷ்ட மாணவர்கள் என்று கூறப்படும் சுமார் 15 பேர் நேற்று முன்னிரவு பிரவேசித்து அங்கு தங்கியிருந்த மாணவர்களுடன் விரும்பத்தகாத செயல்களில் ஈடுபட்டனர் என்று கூறப்படுகிறது.
அங்கு புகுமுக மாணவர்கள் மீது சிரேஷ்ட மாணவர்கள் சேற்றை வாரித் தெளித்து அசிங்கப்படுத்தியதுடன் அவர்களைத் தாக்கி னர் என்றும் - சத்தம் கேட்டு அங்கு ஒன்று கூடிய அயலவர்கள் சிரேஷ்ட மாணவர்களின் செயலுக்கு தமது கடும் ஆட்சேபனையைத் தெரிவித்தனர் என்றும் -
இதனையடுத்து இரு தரப்பினருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது எனவும் பின்னர் சிரேஷ்ட மாணவர்கள் அங்கிருந்து சென்றுவிட்டனர் எனவும் - சம்பவத்தை நேரில் பார்த்த எமது செய்தியாளர் தெரிவித்தார்.
குறித்த வீட்டில் தங்கியிருந்த புகுமுக மாண வர்கள் விவசாய பீடத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் கூறப்படடது. எனினும் அவர்களுடன் தகராறில் ஈடுபட்டனர் என்று கூறப்படும் மாணவர்கள் எந்தப் பீடத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை ஊர்ஜிதம் செய்ய முடியவில்லை.
யாழ். பல்கலைகழகச் சுற்றாடலில் இடம் பெற்றுவரும் பகிடிவதைச் சம்பவங்களுடன் தொடர்புடையதே இந்தச் சம்பவம் என்று கூறிய அப்பகுதி மக்கள் மேற்படி சம்பவம் தொடர் பாகக் கடும் விசனம் தெரிவித்தனர்.
Uthayan (19.02.2005)
|
|
|
| புலம் பெயந்தவர்களின் நிவாரண பொருட்கள் கொழும்பில் தேக்கம் |
|
Posted by: Vaanampaadi - 02-20-2005, 09:33 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- No Replies
|
 |
புலம்பெயர்ந்த தமிழ்மக்கள் அனுப்பிய
சுனாமி நிவாரணப் பொருள்கள்
கொழும்புத் துறைமுகத்தில் தேக்கம்
சுனாமி ஆழிப்பேரலை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு - கிழக்கு மக்களுக்கு வழங்கவென புலம்பெயர்ந்த தமிழர்களால் அனுப்பப்பட்ட உதவிப் பொருள்கள் அடங்கிய 50 கொள்கலன்கள் கொழும்புத் துறைமுகத்தில் தேங்கிக் கிடக்கின்றன.
தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் கொழும்பு இணைப்பாளர் சந்துரு பரராஜசிங்கம் இத்தக வலை உதயனுக்குத் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்ததா வது:-
வடக்கு - கிழக்கில் சுனாமியால் பாதிக்கப் பட்ட மக்களுக்கு அரச உதவிகள் கிட்டாத நிலை யில், புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் சேகரித்து அனுப்பும் பொருள்கள் மூலமே மக் களின் தேவைகளை நிறைவேற்றி வருகின் றோம்.
மருந்துப் பொருள்கள், சிறுவர்களுக்கான போசாக்கு உணவுப் பொருள்கள் போன்றவற் றைப் புலம்பெயர்ந்த மக்கள் சேகரித்து 50 கொள்கலன்களில் அனுப்பியுள்ளனர்.
நிவாரண உதவிப் பொருள்களுக்கு சுங்க வரி அறவிடும் நடைமுறையை அரசு திடீரென அறிவித்துள்ளது. சுங்கவரி செலுத்தி இப்பொருள் களை எம்மால் பொறுப்பேற்ற முடியாது. இத னால் - கடந்த பத்துத்தினங்களாக இந்தப் பொருள்கள் துறைமுகத்தில் தேங்கியுள்ளன.இவற்றை வெளியில் எடுத்துவந்து மக்க ளுக்கு வழங்க அரச அதிகாரிகளுடன் தொடர்ந்து பேச்சுக்களை நடத்திவருகின்றோம் - என்றார் அவர். இதேவேளை -
சுங்கவரி செலுத்த முடியாத நிலையில் 150 இற்கு மேற்பட்ட கொள்கலன்களில் உதவிப் பொருள்கள் கொழும்புத் துறைமுகத்தில் தேங் கிக் கிடக்கின்றன என்று ஒரு தகவல் தெரிவித் தது.
Uthayan
|
|
|
|