Welcome, Guest
You have to register before you can post on our site.

Username
  

Password
  





Search Forums

(Advanced Search)

Forum Statistics
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244

Full Statistics

Online Users
There are currently 413 online users.
» 0 Member(s) | 410 Guest(s)
Applebot, Bing, Google

Latest Threads
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,433
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,286
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,641
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,312
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,676
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,237
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,476
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,549
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,047
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,243

 
  காவலரண் மீது சூடு; புலிகள் மறுப்பு
Posted by: Vaanampaadi - 02-20-2005, 09:31 AM - Forum: செய்திகள் : தமிழீழம் - No Replies

காவலரண் மீது சூடு;
புலிகள் மறுப்பு
முகமாலையில் உள்ள இராணுவத்தின் முன்னணிக்காவலரண் ஒன்றின் மீது துப்பாக் கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக படைத்தரப்பு குற்றஞ்சாட்டி இருக்கிறது.
இந்தச் சம்பவம் தொடர்பாகப் போர்நிறுத் தக் கண்காணிப்புக் குழுவிடம் முறைப்பாடு செய்யப்பட்டிருப்பதாக இராணுவப்பேச்சாளர் பிரிகேடியர் தயா ரத்னாயக்கா தெரிவித்தார்.
இந்தச் சம்பவம் தொடர்பாகத் தமக்கு எது வும் தெரியாது என்று விடுதலைப் புலிகள் மறுத்துள்ளனர்.

Uthayan

Print this item

  சாதனை வீரர்
Posted by: Vaanampaadi - 02-20-2005, 09:30 AM - Forum: செய்திகள்: உலகம் - No Replies

சாதனை வீரர்
<img src='http://www.jayatvnews.org/news-photos/chess-web.jpg' border='0' alt='user posted image'>
பார்வையுள்ளவர்களே, கடுமையாகப் போராடினால்தான் வெற்றிகிடைக்கும் விளையாட்டு சதுரங்கம். சென்னையைச் சேர்ந்த திரு. முத்துராமன் என்பவரோ பிறவியிலேயே கண்பார்வையற்றவர். இருப்பினும் மனம் தளராத அவர், சதுரங்கப் போட்டியில் அதிக ஈடுபாடு கொண்டு கணினி உதவியுடன் விளையாட்டு நுணுக்கங்களை கற்றுள்ளார். மாநில அளவிலும், தேசிய அளவிலும் நடைபெற்ற சதுரங்கப் போட்டிகளில் வெற்றிகளை குவித்துள்ள திரு. முத்துராமன், கடந்த மாதம் டெல்லியில் நடைபெற்ற சர்வதேச சதுரங்கப் போட்டியிலும் பங்கேற்று முத்திரை பதித்தார். கண்பார்வையுள்ளவர்களுக்கு இணையாக விளையாடக்கூடிய முத்துராமனின் ஆர்வமும், முயற்சியும், பலமுறை தன்னை பிரம்மிப்பில் ஆழ்த்தியுள்ளதாக பயிற்சியாளர் திரு.மகேஷ் கூறுகிறார். சதுரங்கம் மட்டுமின்றி பிரெஞ்ச் மொழியை கற்பது, சென்னை மாநிலக் கல்லூரியில் முனைவர் பட்டம்பெற ஊக்கமுடன் படித்து வருவது, கணினி மொழிகளை அறிந்திருப்பது என, பன்முகத் திறமைக் கொண்ட திரு.முத்துராமன், விரைவில் சர்வதேச சதுரங்க வீரர்கள் பட்டியலில் இடம்பெறவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. எதிர்வரும் தடைக்கற்களையெல்லாம் படிக்கட்டுகளாக்கி முன்னேறி வரும் திரு.முத்துராமன், தமிழகத்திற்கும், இந்தியாவிற்கும் சர்வதேச அளவில் பெருமை தேடித்தருவது உறுதி.

Jaya news

Print this item

  கண்கட்டி வித்தை
Posted by: Vaanampaadi - 02-20-2005, 09:28 AM - Forum: செய்திகள்: உலகம் - No Replies

கண்கட்டி வித்தை

திண்டுக்கல் மாவட்டத்தில், ஆந்திராவைச் சேர்ந்த மேஜிக் நிபுணர் ஒருவர், கண்களை கட்டிக்கொண்டு, இரு சக்கர வாகனத்தில் 100 கிலோ மீட்டருக்கு மேல் பயணம் செய்து சாதனை புரிந்துள்ளார்.

ஆந்திராவைச் சேர்ந்த மாயாஜால நிபுணரான எச்.ஜி.லே என்பவர் தனது மேஜிக் திறமைகளால் பல சாதனைகளை செய்து வருகிறார். இந்நிலையில், கின்னஸில் இடம்பெறும் முயற்சியாக, தனது கண்களை கட்டிக்கொண்டு, இரு சக்கர வாகனத்தில் சாலையில் பயணிக்கும் புதிய சாதனையில் ஈடுபட்டுள்ளார். திண்டுக்கல்லில் நேற்று அவர் நிகழ்த்திய சாதனையில், கூட்ட நெரிசல் மிகுந்த சாலைகளில், மக்கள் மீதும், வாகனங்கள் மீதும் மோதாமல், வெகு லாவகமாக இரு சக்கர வாகனத்தை ஓட்டிச்சென்று, அனைவரது பாராட்டுகளையும் பெற்றார். தொடர்ந்து இன்று பழனி மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் சாதனை பயணம் மேற்கொண்டு வரும் திரு. லே, தேசிய ஒருமைப்பாட்டை வலியுறுத்தி, இதுவரை நாடு முழுவதும் 30 ஆயிரம் கிலோ மீட்டர் பயணம் செய்துள்ளார்.

Jaya news

Print this item

  மலரட்டும், ஈழ நாடு!-தொ. சூசைமிக்கேல்
Posted by: hari - 02-20-2005, 07:32 AM - Forum: கவிதை/பாடல் - Replies (4)

<b>மலரட்டும், ஈழ நாடு! </b>

தொ. சூசைமிக்கேல் ( tsmina2000@yahoo.com )
<img src='http://www.webulagam.com/images/0520_prabhakaran.gif' border='0' alt='user posted image'>

தென்னிலங்கைச் செந்தமிழன்: தெளிந்த வீரன்:
சிற்றினத்தைச் சேராத சிறந்த தோழன்:
மண்ணிலெங்கும் காணாத விழுப்புண் ணெல்லாம்
மார்மீது தாங்கிநிற்கும் மறவ நெஞ்சன்:
என்னையீன்ற அன்னையீன்ற இனிய மைந்தன்:
ஈழமென்னும் தூயமண்ணின் உரிமை வேந்தன்:
தன்னையீந்து நிற்கின்றான், சரித்தி ரத்தில்
தனிமகுடம் புனைகின்றான்! தமிழா, கேள், நீ!


கடல்கொண்ட தென்னாட்டின் காலம் தொட்டுக்
கண்ணெதிரே தென்படும்இந் நாள்வ ரைக்கும்
அடலேறாய், ஆசானாய் இலங்கை மண்ணை
ஆண்டிருந்த அருந்தமிழன் அல்லல் சூழப்
படலாமோ? பச்சைரத்தம் சொட்டச் சொட்டப்
பாதகர்தம் சதிவலைக்கண் வீழ்ந்தி டத்தான்
விடலாமோ? விழித்தெழுமின்! ஒருகு டைக்கீழ்
விரைந்திடுமின், உலகத்துத் தமிழ்நெஞ் சங்காள்!


பொன்னீழத் திருநாட்டில் புகுந்து கொண்ட
போர்மேகம் கலைவதற்கோர் வழி சொல்லுங்கள்!
கண்ணீரும் கதறலுமே கதையாய்ப் போன
காட்சிகட்கோர் இறுதிதினம் குறித்தி டுங்கள்!
நன்னீரைப் பிரித்தறியும் அன்னம் போன்றே
நானிலத்தில் தமிழினத்தின் நலம் பேணுங்கள்!
என்னீசன் இணையடிமுன் இதுசொல் கின்றேன்:
இந்தியன்தான் யான் எனினும் தமிழன் அன்றோ?


இந்துமகா சமுத்திரத்தின் முத்துத் தீவில்
ஈழம்இனி எங்களுக்கோர் திருநாட் கோவில்!
அந்தமிலாச் செந்தமிழால் அறம் வளர்த்த
அச்சமிலாச் செங்கோல்தான் இனிய(ம்) மண்ணில்!
சொந்தமெலாம் சுதந்திரத்தின் ஈரக் காற்றைச்
சுவாசிக்கும் திருநாள்தான் மலரும் போழ்தில்
என்றுமிலா இன்பமெலாம் பெருகும், நெஞ்சில்!
எழுதிக்கொள்- ஈழத்துக் காளையே, நீ!


ஒருநாள், அத் திருநாளும் வந்தே தீரும்:
உயிர்த்தியாகம் தனதுபயன் தந்தே தீரும்!
ஒருமித்த பெருமிதத்தில் ஈழச் சின்னம்
ஓங்கியதோர் கம்பமதில் பறந்தே தீரும்!
தருமத்தைக் கவ்வியதோர் சூதி னுக்குத்
தமிழ்வேதம் தண்டனைகள் விதித்தே தீரும்!
குருதிப்போர் புதுச்சரிதம் படைத்தே தீரும்:
குவலயம், எம் ஈழத்தை மதித்தே தீரும்!


ஈழத்துக் காடுகளில் பயிரா கின்ற
ஈட்டியொடு போட்டியிடும் வேகம் இந்த
ஞாலத்தில் எவனுக்கும் வாரா தென்று
நாமறிவோம்: நாற்புறமும் இதையே சொல்வோம்!
ஆழத்தில் ஊன்றியதோர் உரிமை வேட்கை
அணுவேனும் அசையாது! தாய்மண் மீது
வாழத்தான் யாம்பிறந்தோம்: எமது மைந்தர்
வாழட்டும்! மலரட்டும், ஈழ நாடு!!

Print this item

  தத்தெடுக்கப்போகின்றாயா?
Posted by: Mathan - 02-20-2005, 02:30 AM - Forum: சுமுதாயம் (வாழ்வியல்) - Replies (2)

தத்தெடுக்கப்போகின்றாயா? அதற்கு.... தாயுள்ளம் அல்லவா வேண்டும்.

எல்லாருக்கும் வணக்கம்! வணக்கம்! எப்பிடி இருக்கிறீயள் எல்லாரும்? நாட்டு நடப்புகளும் ஏதோ நடந்து கொண்டிருக்கு. எனக்கும் கையில ஒரு அலுவல். ஆனா என்ன மாதிரிச் செய்யிறதெண்டு மனசொத்து ஒரு முடிவெடுக்கேலாமக் கிடக்கிது. ஒண்டுமில்லைப்பாருங்கோ! கிட்டியில அப்பாவின்ர திவசம் வருகிது. உவ்வளவு காலமும் செய்து வந்த மாதிரி இந்த வருசமும் செய்ய மனம் ஏதோ ஒத்துவரேல்லை. நாங்களெல்லாரும் செத்த ஆட்களின்ர அஸ்தியைக் கடலிலை கொண்டுபோய்க் கலக்கிறதை காலங்காலமாய் வழக்கமா வைக்சிருக்றம். ஆனால், அப்பிடி கீரிமலைக்குப் போன ஆக்களையுமெல்லே அடிச்சுக்கொண்டு போட்டிது கடல். ஏதோ காலாகாலமா இருந்து வாற வழக்கம்... தொடர்ந்து செய்தா என்ன குறைஞ்சே போகப்போறன் எண்டிட்டு சும்மா ஏதோ செய்வோமெண்டு இருக்கிறன். எங்கட அயல், உறவுகள் தான் என்ன சொல்லுதுகளோ தெரியேல்லை.
உப்படித்தான் அண்டைக்கு யாழ்ப்பாணத்திலை தெரிஞ்ச பக்கத்தாலை ஒரு மனுசன் அதுவும் 26ஆம் திகதி அண்டைக்கொண்டு செத்துப்போச்சு. அது கால, அகால எல்லாத்தையும் தாண்டின இயற்கை மரணம். சாகேக்கிள்ளை 105 வயசு மனுசனுக்கு. ஆரோ ஒரு பேரப்பொடி சொன்னானம். 'அது அப்புவின்ர கடைசி மூச்சுத்தான் சுனாமியா வந்திருக்கெண்டு'. ஏதோ பெரிய விசுவாமித்திர முனிவர்.. அவற்றை மூச்சுக்கு இருப்புக் கொள்ளேல்லை. எட! பெரிய விஞ்ஞான விளக்கம் சொல்லிறார் அவர். விசர்க்கதைக்கும் ஒரு அளவு, காலநேரம் வேணுமெல்லே. எல்லாம் முடிஞ்சாப்பிறகு சிலர் குடுக்கிற விசராட்ட விளங்கங்களை சில பெரிய பெரிய பத்திரிகைகளும் போட்டு நிரம்பி, பக்கங்களை வீணடிக்கினம்.

என்னவோ எனக்கு பெரிசா மனம் சரியில்லாமல் கிடந்திச்சு, அப்பதான் வித்தியாசமா ஒரு ஜடியா வந்திச்சு. என்ர அப்பாவுக்கும் கட்டாயம் அந்த ஜடியா நல்லாப் பிடிக்கும். வீடு,வாசல்களை இழந்து போய் அங்கங்கே எங்கட ஆக்கள் தங்கியிருக்கினமெல்லோ. அவையளுக்கு ஒரு இரண்டு நல்ல படமா என்ற செலவில போட்டுக்காட்டுவம் எண்டது தான் ஜடியா. பொறுங்கோ! பொறுங்கோ! நீங்கள் நினைக்கிற மாதிரி தமிழ்ப்படமில்லை. ஏதாவது நல்ல இங்லிஷ் நகைச்சுவைப்படங்கள், எல்லாருக்கும் விளங்கக்கூடியது. அவையளுக்கும் கொஞ்சம் ஆறுதலா பம்பலா இருக்குமெல்லே! எங்கட நாட்டு நகைச்சுவை நடிகர் ஒராளின்ர குடும்பத்திலையும் சிலரை முல்லைத்தீவிலை அலை கொண்டு போட்டிதென்று கேள்விப்பட்டனான். கிளிநொச்சியிலை அந்த ஆளின்ர நகைச்சுவைக்காட்சி படத்திலை போகேக்கிள்ளை காதும், மனமும் நிரம்பி வழியக் கேட்ட சிரிப்பொலியள்.... இண்டைக்கு... சே! ஆ.... அதை விடுங்கோ! அப்ப ஏதாவது சார்ளி சப்ளின்ர Moderm times அல்லாட்டி The great Dictator, Home alone, Baby's trip (குழந்தையின் சுற்றுலா) எண்டு நல்லதா ஏதாவது தெரிவு செய்வோம் எண்டிட்டு ஏ-9 பக்கம் போனன்.

உங்களுக்குத் தெரியும் தானே, உந்த விசயத்தில் எனக்கு சரியா விளக்கம் குறைவெண்டு. அப்பதான் ஏற்கனவே போய்ப்பழக்கப்பட்ட (முந்தியொருக்கால் நான் செருப்பு, குட்டி படங்கள் விசாரிச்ச கடை தெரியுமெல்லே உங்களுக்கு) அந்தக் கடைக்காரத்தம்பியிட்டை விசாரிப்போம் எண்டு அங்க போனன். ஆ.. அப்பு! வாங்கோ, வாங்கோ! என்ன ஒரு அதிசயமான வரவு. கனநாளுக்குப் பிறகு வந்திருக்கிறீயள். சந்தோசம்: 'தம்பி! என்னை மறக்கேல்லைப் போல? என்ன அப்பு, அண்டைய எப்படி மற்க்க முடியும்! சொல்லுங்கோ, உங்களுக்கு இந்தக் கடையில இல்லாததே! 'அந்தத் தம்பியின்ர வரவேற்பில நானும் குளிர்ந்திட்டன். பக்கத்தில ஒரு இளவட்டத்தம்பி அவசரமா துடிச்சுக்கொண்டு நிண்டிச்சு. 'தம்பி! இவரை முதல்லை கவனியும்! அவசரம் போல கிடக்கு. பாவம்" சரி அப்பு, கொஞ்சம் பொறுத்துக்கொள்ளுங்கோ! தம்பி உமக்கென்ன வேணும்? 'ஏய்...! எனக்குப் 'பக்" எண்டிச்சிது. எட பாவம் கெதியா எடுத்துக்கொண்டு போகட்டும் எண்டு விட்டால், இப்பிடி வயசுக்கு மரியாதை இல்லாமல் கடைக்காரனைப் பார்த்து ஏய் எண்டிறான். 'தம்பி! பார்க்க சின்ன வயது, நல்ல பொடியன் மாதிரிக் கிடக்கு. ஏன் உப்பிடி அவரை மரியாதை இல்லாமல் கதைக்கிறீயள்? கொஞ்சம் வாயை அளந்து பேசும்! நான் பொரிஞ்சு தள்ளினன். அந்தப் பொடி மிரண்டு மிரண்டு பாத்திச்சிது. 'ஜயோ அப்பு! அது புதிசா வந்த படத்தின்ர பேர் 'ஏய்...! எனக்கு வெட்கமாய் போச்சிது. பேந்து அந்தத் தம்பியோட கதைச்சு கன விசயத்தை அறிஞ்சு கொண்டன். நான் விசாரிச்ச படங்கள் ஒண்டும் அங்கே இல்லை. 'குழந்தையின் சுற்றுலா" மட்டும் தெரிஞ்ச ஒரு இடத்தில இருக்கிது. சாதாரணமா கிடையாதெண்டாலும் எனக்காக எடுப்பிச்சுத் தாறதாச் சொன்னார். எட நாலு பேர் சிரிச்சுச் சந்தோசமா இருக்கிறதுக்கு ஒரு படைப்பு உதவுமெண்டால் அதை எல்லாரும் எல்லாருக்கும் குடுக்க முன்வரரோனும். நீங்கள் நினைப்பியள். என்னடா ஏரம்பர் ஆங்கில மோகம் பிடிச்சுப்போய் இங்லிஷ் படத்துக்காக அலையிறார் எண்டு. அப்பிடில்லைப் பாருங்கோ. நான் சொன்னதுகள், நான் சொன்ன தேவைக்குத் தரமான ஆரோக்கியமான படங்கள், தெரிஞ்சிதோ! ஆ...! என்னால எல்லா இடத்துக்கும் ரீவி, டெக் எல்லாத்தையும் தூக்கிக்கொண்டு திரிலேயாது. வயது போன என்ரை நாரி விடாது. உங்களுக்கும் இப்பிடிச் செய்யிறது பிடிச்சிருந்தால், அந்ததந்த நலன்புரி நிலையங்களுக்குப் பொறுப்பான ஆக்களோட கதைச்சிட்டு ஒரு பள்ளிக்கூடம் லீவான பின்னேரத்தில் இப்பிடிச்செய்யலாமெல்லோ! தலைவர் போனகிழமை என்னண்டு சொன்னவர்.. 'குழந்தைகளை விரைவாக மகிழ்ச்சிகரமான எதிர்காலத்திற்கு இட்டுச்செல்லக்கூடிய புறச்சூழ்நிலையை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டியுள்ளது. விளையாட்டு மைதானங்கள், மகிழ்ச்சிகரமான பாடசாலைச்சூழல் போன்றவற்றை உருவாக்குவதன் மூலம் அவர்கள் அடைந்த அதிர்ச்சி அனுபவத்திலிருந்து அவர்களை விடுவிக்க முடியும்." என்ர குஞ்சுகள் நான் சொன்ன கசற் கிடைக்கேல்லை எண்டிட்டு இந்தியப்படங்களைப் போட நினைச்சுப்போடாதேங்கோ! சுனாமி நிலைவரம் அறிய எண்டிட்டு, குறளோவியம் தந்த கலைஞரின்ர 'சன் ரிவி" ரமில் ரொலைக்காட்சியிலை செய்தி பார்த்தன் பாருங்கோ, 'தாய்லாந்திலுள்ள நடச்சத்திர ஹொட்டல் ஒன்றை சுனாமி தாக்கும் தத்ரூபமான காட்சிகள் இதோ சிறிய விளம்பர இடைவேளைக்குப் பின்னர் காணத்தவறாதீர்கள்! எண்டிச்சினம். என்னடா கறுமம் இது? பொங்கலுக்கு வெளியிடிற புதுப்படம் மாதிரியெல்லே சொல்லினம். என்னவோ போங்கோ!

ஆ.... உந்த இந்தியாப்படங்களைப் பற்றி கதைக்கேக்கைதான் ஞாபகம் வருகிது. ஒரு எம்.ஜி.ஆர் இரட்டை வேடத்தில் நடிச்ச படம். பேர் மறந்து போனன். இரண்டு எம்.ஜி.ஆர்மாரும் கைக்குழந்தைகளா இருந்த நேரம் கொள்ளைக்காரன் நம்பியாரை எம்.ஜி.ஆரின்ர தகப்பன் கைதுசெய்து ஜெயிலுக்கு அனுப்பிறார். ஆனா நம்பியார் தம்பி வந்து அவரைக் கொலை செய்து போட்டு, அவரை இன்னும் வஞ்சம் தீர்க்கவேணும் எண்டு கெட்ட புத்தியில, தன்ர கையில கிடைச்ச ஒரு எம்.ஜி.ஆரை தானே கொண்டு போய் பொல்லாத கொள்ளைக்காரனா வளர்க்கிறார். பாருங்கோ ஒரேடியடியாச் செத்தால் தன்ர வஞ்சம் தீராதெண்டு, தனக்குப்பிடிக்காத ஆக்களின்ரை குழந்தையை தானே வளர்த்து, அதின்ர வாழ்க்கையை நாசமாக்கிற புத்தி எப்பிடியெல்லாம் போகுதெண்டு! ஆனால் அது படம். நம்பியார் பாவம், குடுத்த காசுக்கு சும்மா வந்து வில்லன் மாதிரி நடிச்சுப்விட்டுப் போனவர். ஆனா நிஜ வாழ்க்கையிலையும் உப்பிடிப்பட்ட ஈனப்புத்தியோட சில ஜென்மங்கள் இருக்கத்தான் செய்யிது! ஆரெண்டு நான் சொல்லமாட்டன்.

தத்தெடுக்கப் போகின்றாயா?? அதற்குத்தாயுள்ளம் அல்லவா வேண்டும்! பித்துப்பிடித்த பேயுனக்கு எங்கள் பிஞ்சொன்றைத் தருவோமோ! நாகர்கோவிலில் நீ எடுத்துக்கிழித்த லட்சணம் இன்னும் அகலவில்லை நெஞ்சை விட்டு பற்றி எரிகிறதடி பாவியுன் அறிக்கைகளைக் கேட்க! குரல்வளையை நசித்துக்கொண்டு 'குயிற்ரெக்ஸ்" பூசப்போகின்றாயா எங்களுக்கு? உயிரிழந்து போன எம் உறவுகளின் உடல்களைக் காட்டி உலகநாடுகளின் முன் பிச்சையெடுத்துப் பிழைப்பவளே! இப்போது உயிரோடும் உனக்கு வேணுமோடி? உன் புத்தி வேறெப்படிப் போகும்! பிஞ்சுடல்களை வைத்துப் பிழைப்பதிலே உலகளாவிய ரீதியிலே உனக்குத்தானே இரண்டாம் இடம்! தெற்கின் கரைகளிலே உல்லாசிகளிடம் சோரம் போகும் எம் சிங்களச் சோதரங்களிடம் உன் நல்லெண்ணத்தைக் காட்டு! ஒட்டுமொத்தமாய் நம்மை ஒழித்துக்கட்ட நினைப்பவளே உன் நல்லுறவுக்கான சமிக்கையின் நயவஞ்சகம் நாம் அறிந்ததுதான்! நாம் கடந்து வந்த தடங்களெல்லாம் பின்னிப்பிணைந்திருப்பவள் நீதானே! தேவனின் மடியிலும், பள்ளிக்கூட நிழலிலும் பலியெடுத்தெம்மைத் தொலைத்ததும் ஜெயசுக்குறுவில முடக்கி அட்டகாசித்ததும் எரிகிறதடி எங்கள் வயறு! நொந்து போயிருக்கும் எம்மவர் நெஞ்சத்தீ பருக்கொண்டொரு நாள் பறந்து வரும் அன்றும் கண்ணோடு உடலெங்கும் புண்ணாகிப் புழுக்கும்! எம்மனம் அப்போது சுளிக்கும்!!

நாள் முழுக்க ஒரே அலைச்சல். இண்டைக்கு வேளைக்கு நித்திரைக்குப் போகோணும் எண்டிட்டு, வேளைக்கே சாப்பிட்டுப் போய் கண் அயர்ந்தன். என்ன சோக்கான தூக்கம்! பொறுங்கோ! பொறுங்கோ! உதென்ன உங்கை நடக்கிது? ஆரோ ஒரு பொம்பிளைப்பிள்ளை கண் கூசிற மாதிரி ஆடுது. சுத்தி வர ஏழெட்டு தெரியாத அந்நியமான மூச்சையள். ஏதோ பழைய கால அரேபிய கொடியிடை நடனம் மாதிரி. அவா ஆடிறா...இவங்கள் சாய்வா படுத்திருந்தவடி காசுக்கட்டுகளை எடுத்து அவாவை நோக்கி எறியிறாங்கள். ஜயா! ஜயோ.. என்னடா கண்ராவி. போர்த்திக்கொண்டிருந்த பொம்பிளை ஒவ்வொண்டா அழிவிழ்ந்து அவிழ்ந்து எறியிது. அவங்களும் காசை வீசிறாங்கள். என்ர கடவுளே! நாசமாய்ப்போன உலகம். எக்கேடு கெட்டுசுப்போச்சிது! உதுக்கு மேலை என்ர கண்ணுக்கு முன்னால உப்பிடி ஒரு அநியாயம் நடக்க விடப்பிடாது எண்டிட்டு கிட்ட ஓடிப்போனன். 'என்ன இருந்தாலும் இந்த அளவுக்கு கழற்றி வீசிறியள். ஏன்? என்ன பிரச்சினை? சொல்லும்! 'எனக்கு காசுக்கஷ்டம். அது தான் இப்பிடிப் பிழைக்கிறன்' 'ஜயோ! முன்னாலையே எனக்கொரு சொல்லு சொல்லியிருக்கலாம் தானே. விழுந்து கிடக்கிற துணியளை எடுத்து உடுத்துக்கொண்டு என்ர வீட்டை வாரும். நீர் ஆர், எந்த ஊர் எண்டு ஒண்டும் எனக்குத் தெரியாது. ஆனா உமக்கு ஏற்பட்ட கஷ்ரம் உலகத்தில ஒரு மொப்பிளைக்கும் ஏற்படக்கூடாது. சாகும் வரைக்கும் நான் வேளாவேளைக்கு சாப்பாடும், தங்க இடமும் தந்து என்ர குடும்பத்திலே ஒருத்தியா காப்பாத்திறன்" 'ஜயோ அப்பு! எனக்கு சாப்பாட்டுக்கு கஷ்ரம் ஒண்டும் இல்லை. புதுசு புதுசா நல்ல நல்ல மொடல் உடுப்புகள் வந்திருக்கு. அதுகள் வாங்கத்தான் பணம் இல்லை" அட கடவுளே! மொடல் உடுப்பு வாங்கிறதுக்காக எவனாவது மானம் காக்கிற உடுப்பைக் கழற்றிப்போடுவானே! என்னவோ நான் அவையின்ர ஷோவைக் குழுப்பிப்போட்டன் போல கிடக்கு. அந்தப் பொம்பிளை 'யாரங்கே, பிடித்துச்செல்லுங்கள் இவனை! எண்டு கையைத்தட்டி ஓடர் குடுத்தா. இருப்புப்பிடி பிடிச்சு, சரசரவெண்டு நிலத்தில அரைய அரைய இழுத்துக்கொண்டு போனாங்கள். 'என்னை விடுங்கோ! என்னை விடுங்கோ! உன்னைப்போய் பாவம் பார்த்தேனே! என்னை விடு!! பலம் கொண்ட அளவுக்குக் கத்தினன். நினைவு வந்து முழிச்சுப்பார்த்தா எல்லாம் கனவு. 'யாரை பாவம் பார்த்னீயள்? உப்பிடிக் கத்திற அளவுக்கு ஆர் உங்களை பிடிச்சிழத்தது?? வீட்டில் சந்தேக சுனாமி அடிக்கத்தொடங்கியது. கட்டையில போற வயசில இப்பிடி ஒரு கஷ்ரம் எனக்குத் தேவையா?? ஆனாலும் அந்த முகத்தை எங்கையோ பார்த்த மாதிரிக் கிடந்திச்சிது. நித்திரை குழப்பிட்டிது. கூடவே நிம்மதியும் தான். பக்கத்திலை கிடந்த பத்திரிகையை எடுத்துப்புரட்டினன். 5 ஆண்டுகளுக்கு தேர்தல் இல்லை" படத்துடன் செய்தி போட்டிருந்திச்சு. எட... எட... ஓகோ... எண்டானம்! இப்ப தானே விளங்கியது! சரி பிள்ளையள் நான் படுக்கப்போறன், வாறகிழமை சந்திப்போம்!

ஈழநாதம்.

Print this item

  செய்யும் தொழில் தெய்வம்:சிரிப்பே சீவியம்
Posted by: Siriththiran - 02-20-2005, 01:30 AM - Forum: அறிமுகம் - Replies (22)

யாழ் களத்தில் கலக்கும் அனைவருக்கும் வணக்கம்

Print this item

  சேயற்படு உணவுகள்
Posted by: KULAKADDAN - 02-19-2005, 11:59 PM - Forum: மருத்துவம் - Replies (2)

சேயற்படு உணவுகள் [functional foods]
சேயற்படு உணவுகள் எனப்படுபவை திருப்தி தரக்கூடிய வகையில் உடலின் ஒனறுக்கு மேற்பட்ட செயற்பாடுகளில் செல்வாக்கு செலுத்துவதுடன் தமது போசணை செயற்பாடுகளுக் மேலதிகமாக உடல் சுகநலத்தை மேம்படுத்துவதுடன் நோய் ஏற்படும் வாய்ப்பை குறைப்பவையுமாகும். இவை சாதாரண உணவு வகையிலிருந்து மாறுபடாதிருப்பதுடன் சாதாரணமாக உள்ளெடுக்கப்படும் அளவிலேயே தகுந்த விளைவை கொடுப்பவையாக இருக்க வேண்டும்.

<img src='http://www.plamosa.com/yoghurt.jpg' border='0' alt='user posted image'>

சேயற்படு உணவின் ஆக்க கூறுகள்
1. நுண் உயிரிகள்
உ-ம் இலத்திரிக்கமில பகர{ரியா.
கிடைக்கும் சுக நலன்கள்-
- குடல்களில் காணப்படும் நுண்ணங்கிகளின் செயற்பாட்டை ஊக்குவித்தல்
- வயிற்றோட்டம் மலசிக்கலை குறைத்தல்
- நோயெதிர்புத்திறனை கூட்டுதல் அல்லது உறுதிபடுத்தல்
- கோலஸ்திரோல் அளவை குறைத்தல்
- குத புற்று நோய் மற்றும் நோய் விளைவிக்கும் நுண்ணங்கிகளை குறைத்தல்

கொண்டுள்ள உணவுகள்
- தயிர்
- மோர்
- யோகட்
2. நார் பொருட்கள் ஃ சமிபாடடையாத பல் சக்கரைட்டுகள்.
உ-ம் ஒலிகோ சக்கரைடடுகள் பெக்ரின்
கிடைக்கும் சுக நலன்கள்-- குடல்களில் காணப்படும் நுண்ணங்கிகளின் செயற்பாட்டை ஊக்குவித்தல்
- வயிற்றோட்டம் மலசிக்கலை குறைத்தல்
- நோயெதிர்புத்திறனை கூட்டுதல் அல்லது உறுதிபடுத்தல்
- கோலஸ்திரோல் அளவை குறைத்தல்
- குத புற்று நோய் மற்றும் நோய் விளைவிக்கும் நுண்ணங்கிகளை குறைத்தல்
- கல்சியம் மக்னீசியம் குடலில் அகத்துறுஞ்சபடுவதை அதிகரித்தல் ஜஒஸ்ரியோபொறோசிசை குறைத்தல்ஸ
கொண்டுள்ள உணவுகள்- மரக்கறி பழவகைகள்
3. விற்றமின்கள்
உ-ம் போலிக்கமிலம் விற்றமின் பி6 பி12 டி கெ
கிடைக்கும் சுக நலன்கள்- இதய நோய்களை குறைத்தல்
- ஒஸ்ரியோபொறோசி ஏற்படும் சந்தர்ப்பத்தை குறைத்தல்
கொண்டுள்ள உணவுகள்
போலிக்கமிலம- இலை மரக்கறிகள்
விற்றமின் பி6 - தானியங்கள் மரக்கறிகள் பால் இறைச்சி
விற்றமின் பி12 - ஈரல் பால் இறைச்சி ஜ சைவ தாவர உணவு உண்பவர்களுக்கு பாலும் பாற் பொருட்களுமே இவ் விற்றமினை வழங்கும்ஸ
விற்றமின் டி - முட்டை பால் மீனெண்ணெய் மதுவம்
விற்றமின் கெ - மரக்கறி பழவகைகள் தாவர எண்ணெய் வகை மீன் ஈரல்



4. கனியுப்புகள்
உ-ம் கல்சியம் மக்னீசியம் நாகம்

கிடைக்கும் சுக நலன்கள்
- நோயெதிர்புத்திறனை கூட்டுதல் அல்லது உறுதிபடுத்தல்
- ஒஸ்ரியோபொறோசி ஏற்படும் சந்தர்ப்பத்தை குறைத்தல்
கொண்டுள்ள உணவுகள்
இலை மரக்கறிகள் ; பால் இறைச்சி
ஈரல் முட்டை
5. ஒட்சியேற்ற எதிரிகள்
உ-ம் விற்றமின் ஈ விற்றமின் சி கரோட்டின் பசுந் தேயிலை ஜபுசநநn வநயஸ
கிடைக்கும் சுக நலன்கள்
- புற்று நோய் ஏற்படும் சாத்தியத்தை குறைத்தல்
- டி .என் எ ஒட்சியேற்றத்தை குறைத்தல்
- முதிர்ச்சியை குறைத்தல்
கொண்டுள்ள உணவுகள்
- விற்றமின் ஈ - மரக்கறிகள் வித்துகளின் முளையம் தாவர எண்ணெய் வகை
- விற்றமின் சி - பழ வகைகள் மரக்கறிகள்
- கரோட்டின் - பழ வகைகள் இலை மரக்கறிகள் கரட் முட்டை பூசணிக்காய்

<img src='http://www.simegen.com/writers/rabbit/carrot.jpg' border='0' alt='user posted image'>
6. புரதங்கள் பெப்ரைட்டுகள் அமினோ அமிலங்கள் உ-ம் பால் புரத முப் பெப்ரைட்டுகள்
கிடைக்கும் சுக நலன்கள்
- குருதி அழுத்தத்தை குறைத்தல்
கொண்டுள்ள உணவுகள்
- தயிர்
- மோர்
- யோகட்
7. கொழுப்பமிலங்கள்
உ-ம் ஒமேகா 3 கொழுப்பமிலம்
கிடைக்கும் சுக நலன்கள்
- இதய நோய்களை குறைத்தல்
- தோல் புற்று நோய் ஏற்படும் சாத்தியத்தை குறைத்தல்
கொண்டுள்ள உணவுகள்
- சோய அவரை எண்ணெய் நல்லெண்ணெய்
8. தாவர இரசாயனங்கள்
உ-ம் பைட்டஸ்ரரோல் ஐசொபிளேவோன்கள்
கிடைக்கும் சுக நலன்கள் குருதி கொலஸ்திரோலை குறைத்தல்
ஓமோன்களுடன் சம்பந்தபட்ட நோய்களை சீர்ப்படுத்தல்
கொண்டுள்ள உணவுகள்
- தாவர எண்ணெய்கள்
<span style='font-size:30pt;line-height:100%'>யாழ் கள உறவுகளே நல்லுணவுகளை தெரிந்து உண்டு நெடுங்காலம் வாழுங்கள் </span>
<img src='http://www.althealth.co.uk/services/info/supplements/images/spinach.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://a1020.g.akamai.net/7/1020/2226/97e4b07ac58d4b/www.icapsvitamins.com/media/CP_fruit_vegetables.jpg' border='0' alt='user posted image'>

Print this item

  Á†¡òÁ¡Å¢ý ÅÃ×
Posted by: Magaathma - 02-19-2005, 10:24 PM - Forum: அறிமுகம் - Replies (22)

Žì¸õ ¿øÖÈŢɧÃ,

¯í¸§Ç¡¼ ¸¨¾ì¸Ä¡¦ÁýÎ ¿¡Ûõ ÅóÐû§Çý.


«ýÒ¼ý Á†¡òÁ¡.

Print this item

  VOTE UN - பொருள்
Posted by: ragavaa - 02-19-2005, 06:52 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (55)

VOTE UN sanctions on LTTE?
இங்கு sanctions என்ற சொல்லிற்கு தடை என்பதே பொருளாகும்.
பலர் தவறாக பொருளுணர்ந்துள்ளார்கள்.

Sanction-
If a country or an authority sanctions another country or a person for doing something, it declares that the country or person is guilty of doing it and imposes sanctions on them.

http://www.bbc.co.uk/sinhala/

(பலரின் கவனத்திற்கு கொண்டுவருவதற்காகவே மீண்டும் இட்டுள்ளேன்)

Print this item

  ஒரு ஊர்ல... போலீசுக்கு ஜெயலலிதா சொன்ன கதை
Posted by: Vaanampaadi - 02-19-2005, 06:49 PM - Forum: செய்திகள்: உலகம் - Replies (12)

பிப்ரவரி 19, 2005

ஒரு ஊர்ல... போலீசுக்கு ஜெயலலிதா சொன்ன கதை!

சென்னை:

காவல்துறையினருக்கு குடியரசுத் தலைவர் மற்றும் முதலமைச்சரின் பதக்கம் வழங்கும் விழாவின்போது குட்டிக் கதை சொல்லி காவல்துறையினருக்கு ஜெயலலிதா அறிவுரை வழங்கினார்.


இந்த நிகழ்ச்சி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்தது.

இந் நிகழ்ச்சியில் முதல்வர் ஜெயலலலிதா கலந்து கொண்டு காவல்துறையினருக்கு பதக்கங்களை வழங்கினார். நிகழ்ச்சியில் அவர் பேசும் போது சொன்ன குட்டிக் கதை:

ஒரு ஊரில் கோவில் திருவிழா நடந்து கொண்டிருந்தது. பக்தர்கள் ஏராளமான அளவில் கூடியிருந்தனர். அப்போது திடீரென வானத்திலிருந்து ஒரு தங்கத் தட்டு கோவில் முன்பாக விழுந்தது.

அதைப் பார்த்ததும் எல்லோரும் அதை நோக்கி ஓடி வந்தார்கள். அந்தத் தங்கத் தட்டு யாருக்கு என்பதில் சர்சசை எழுந்தது. கோவிலுக்கு சொந்தமா அல்லது பக்தர்களில் யாருக்காவது அதை கொடுக்கலாமா என்று விவாதம் எழுந்தது.

அப்போது கோவில் நிர்வாகி தட்டை எடுத்துப் பார்த்தார். அதில், அன்பில் சிறந்தவர் யாரோ, அவருக்கு ஆண்டவன் பரிசு என்று எழுதப்பட்டிருந்தது. இதையடுத்து நான்தான் அன்பில் சிறந்தவன் என்று கூட்டத்தினர் மாறி மாறி கூறத் தொடங்கினர்.

இதையடுத்து கோவில் நிர்வாகி ஒரு முடிவுக்கு வந்தார். அடுத்த நாள் பகல் 12 மணிக்கு வந்து தாங்கள் செய்த அன்புச் செயலை சொல்லி தங்கத் தட்டைப் பெற்றுக் கொள்ளலாம் என்று பக்தர்களிடம் அறிவித்தார். அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

வீட்டுக்குப் போன ஒவ்வொருவரும் இரவில் தூங்க முடியாமல் தவித்தனர். தங்கத் தட்டை எப்படிப் பெறலாம் என்பதுதான் அவர்களது ஒரே சிந்தனையாக இருந்தது. தூக்கமே வரவில்லை அவர்களுக்கு.

மறு நாள் பகல் 12 மணி. எள் போட்டால் கீழே விழாதபடி ஏகப்பட்ட கூட்டம். ஒவ்வொருவரும் தங்களது அன்புச் செயலை விவரிக்க வந்தார்கள்.

ஒரு பணக்காரர் வந்தார். நான் எனது சொத்தில் ஏராளமான பங்கை ஏழைகளுக்குத் தர்மம் செய்து வருகிறேன் என்றார். அவருடைய அன்பு நெஞ்சத்தை உணர்ந்த நிர்வாகி அவருக்கே தங்கத் தட்டை அளித்தார்.

சிலருக்குச் சந்தேகம். அதைச் செய்தேன், இதைச் செய்தேன் என்று பொய் சொல்லிக் கூட தங்கத் தட்டைத் தட்டிச் சென்று விடலாமே. இந்த பணக்காரர் ஏராளமாகத் தானம் செய்கிறார் என்பதை எப்படி நம்புவது? அதற்கு என்ன சாட்சி?

இப்படி கூடியிருந்தவர்கள் தங்களுக்குள் பேசிக் கொண்டிருந்தபோதே பணக்காரர் கையில் இருந்த தங்கத் தட்டு தகரமாகி விட்டது. ஓகோ, தகுதியில்லாதவர் கைக்குப் போனால் தங்கத் தட்டு இப்படி தகரத் தட்டாகிப் போய்விடும் போலும் என்று எல்லோரும் பேசத் தொடங்கினார்கள்.

இதையடுத்து தங்கத் தட்டை எப்படியாவது தட்டிச் செல்ல, அந்த ஊருக்குப் பெரும் பணக்காரர்கள் எல்லாம் வந்து, அங்கே இந்த ஏழைகளுக்கு வாரி வாரி வழங்க ஆரம்பித்தார்கள். அடித்தது யோகம் பிச்சைக்காரர்களுக்கு. அந்தக் கோவிலை நோக்கி அக்கம் பக்கத்திலிருந்த பிச்சைக்காரர்களும் வரத் தொடங்கினார்கள்.

ஏழைகள் எல்லோருக்கும் பொருள் ஏராளமாகக் கிடைத்தது. எந்தக் குறையும் இல்லை. பாவம், பணக்காரர்கள்தான் வந்து வந்து பணத்தைத் தந்து நொந்து போனார்கள். அவர்கள் கையில் சென்றதுமே தங்கத் தட்டு தகரத் தட்டு ஆனது.

நாட்கள் நகர்ந்தன, பல நாட்கள், பல மாதங்கள் ஆகி விட்டன. ஆனால் தகுதியான ஒருவர் வரவும் இல்லை, தங்கத் தட்டைப் பெறவும் இல்லை. ஆனால் தினசரி கோவிலில் கூட்டத்துக்கு மட்டும் குறைச்சலே இல்லை.

ஒரு நாள் ஒரு கிராமத்தான் வந்தான். அவனுக்குத் தங்கத் தட்டு சமாச்சாரம் எதுவும் தெரியாது. கோவிலில் சாமி கும்பிட வந்தவன், வெளியில் உட்கார்ந்திருந்த பிச்சைக்காரர்கள் கூட்டத்தைப் பார்த்து, ஐயோ என் நாட்டில் இத்தனை ஏழைகளா? பார்க்கவே பரிதாபமாக இருக்கிறதே என்று சொல்லி அழுதான்.

கை கால் இழந்தவர்கள், கண் பார்வை இல்லாதவர்கள், ஊமைகள் இவர்களை எல்லாம் பார்த்து அவனது உள்ளம் பதறியது, உருகியது. கதறி அழுதான். உடனே கோவில் சாமியைப் பார்த்து, இந்தக் கொடுமைகளுக்கு விமோசனமே இல்லையா என்று கேட்க உள்ளே ஓடினான்.

அப்போது கோவில் நிர்வாகி அங்கு இருந்தார். அவரது கையில் தங்கத் தட்டு இருந்தது. கூட்ட நெரிசலில் தட்டை அவர் தவற விட்டார். கீழே நின்ற கிராமத்தான் கையில் அது விழுந்தது. உடனே ஒரு ஆச்சரியம் நிகழ்ந்தது.

தங்கத் தட்டு அப்படியே இருந்தது, தகரமாக மாறவில்லை. முன்னைவிட மூன்று மடங்கு ஜொலித்தது. கோவில் நிர்வாகிக்கு மட்டற்ற மகிழ்ச்சி, ஐயா, நீ தான் உண்மையான அன்பின் வடிவம். உனக்குத்தான் இந்த தங்கத் தட்டு சொந்தம் என்று கூறி ஆனந்தக் கண்ணீர் வடித்தார்.

யாருடைய உள்ளம் ஏழை எளியவருக்கு உருகுகிறதோ, யாருடைய நெஞ்சம் மனிதாபிமானத்தின் ஊற்றுக் கண்ணாக இருக்கிறதோ, அவரே அன்பிற் சிறந்தவர் என்பதுதான் இக் கதையின் கருத்து.

மனிதாபிமான உணர்வே தலை சிறந்தது என்பதை இக்கதை விளக்குகிறது. அந்த மனிதாபிமான உணர்வை, மனிதாபிமான செயல்பாட்டை காவல்துறையிடமிருந்து அதிகம் எதிர்பார்க்கிறேன் என்றார் ஜெயலலிதா.
Thatstamil

Print this item