Welcome, Guest
You have to register before you can post on our site.

Username
  

Password
  





Search Forums

(Advanced Search)

Forum Statistics
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244

Full Statistics

Online Users
There are currently 537 online users.
» 0 Member(s) | 534 Guest(s)
Baidu, Bing, Google

Latest Threads
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,432
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,286
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,641
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,312
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,676
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,237
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,476
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,549
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,047
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,243

 
  மாட்டுவண்டி சக்கரத்தை சுற்றி மின்சாரம் தயாரிப்பு
Posted by: Vaanampaadi - 02-19-2005, 11:39 AM - Forum: செய்திகள்: உலகம் - No Replies

மாட்டுவண்டி சக்கரத்தை சுற்றி மின்சாரம் தயாரிப்பு: ஆந்திர மாணவர்கள் சாதனை

நகரி, பிப். 19_

ஆந்திர மாநிலத்தில் உள்ள மகாத்மா காந்தி என்ஜினீயரிங் கல்லூரியில் ரமேஷ், பிரசன்னா சுந்தரி, சதீஷ் குமார், பரிதோஷ்குமார், நவீன் ஆகிய 5 பேர் பி.டெக் படித்து வந்தனர். இறுதி ஆண்டில் அவர்கள் ஏதாவது சாதனை படைக்க வேண்டும் என்று விரும்பினார்கள்.

சூரிய ஒளியிலிருந்து மின்சாரம் தயாரிப்பதுபோல வேறு எந்த வகையில் மின்சாரம் தயாரிக்கலாம் என்று ஆய்வில் ஈடுபட்டனர்.

மாட்டுவண்டியிலிருந்து மின்சாரம் தயாரிக்கலாம் என்று அவர்கள் கண்டுபிடித்த னர்.

மாட்டு வண்டி சக்கரம் நிமிடத்திற்கு 7 அல்லது 10 முறை சுற்றுகிறது. 6 மணி நேரம் சக்கரம் சுற்றினால் 1 கிலோ வாட் மின்சாரம் தயாரிக்கலாம் என்று கண்ட றிந்தனர்.

இந்த ஆய்வு குறித்து மாண வர்கள் நிருபர்களிடம் கூறிய தாவது:_

மின்சாரம் தயாரிப்பதற்கு ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள நவீன கருவியை மாட்டு வண்டியில் பொருத்த வேண்டும். வண்டி சக்கரம் சுற்றும் போது உருவாகும் மின்சாரம் தனியாக ஒரு பேட்டரியில் சேகரித்து வைக்கப்படும். அந்த மின்சாரத்தை பல வகைகளிலும் பயன்படுத்தலாம்.

வீட்டில் மின்விளக்கை எரிய வைப்பதற்கும் டி.வி.யை இயக்குவதற்கும் பயன்படுத்தலாம்.

கூடுதலாக மின்சாரம் தயாரித்தால் தெரு விளக்கு எரிய வைப்பதற்கு கூட பயன்படுத்த முடியும்.

மாட்டு வண்டி மூலம் மின் சாரம் தயாரிப்பதால் விவ சாயிகளுக்கும் அதிக வரு மானம் கிடைக்கும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்.

மாட்டுவண்டி மூலம் மின் சாரம் தயாரிப்பது எப்படி என்று ஐதராபாத்தில் உள்ள உஸ்மானியா பல்கலைகழகத்தில் மாணவர்கள் நவீன கருவிகள் மூலம் விளக்கி கூறினார்கள்.

இந்த முறையில் மின்சாரம் தயாரிக்கும் முறையை கண்டு பிடிக்க 3 மாதம் கஷ்டப் பட்டதாகவும் விஞ்ஞானி டேவிட் தங்களுக்கு உதவி செய்ததாகவும் அவர்கள் தெரிவித்தார்கள்.

Maalaimalar

Print this item

  பத்மநாதன் எம்.பி தனியார் வைத்தியசாலையில்
Posted by: Vaanampaadi - 02-19-2005, 11:37 AM - Forum: செய்திகள் : தமிழீழம் - No Replies

பத்மநாதன் எம்.பி தனியார் வைத்தியசாலையில்
சனிக்கிழமை 19 பெப்ரவரி 2005 நன்றி தினக்குரல்
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.பத்மநாதன் கடும் சுகயீனம் காரணமாக கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த சில தினங்களாக சுகவீனமுற்று அம்பாறை மட்டக்களப்பு வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வந்த பத்மநாதன் மேலதிக சிகிச்சைக்காகவே கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Source : http://www.nitharsanam.com/?art=8880

Print this item

  இந்தோனேஷியாவில் மீண்டும் பூகம்பம்
Posted by: hari - 02-19-2005, 09:30 AM - Forum: செய்திகள் : தமிழீழம் - No Replies

பிப்ரவரி 19, 2005

இந்தோனேஷியாவில் மீண்டும் பூகம்பம்: பயங்கர அலைகளால் பீதி

ஜகார்தா:

இந்தோனேஷியாவை இன்று மீண்டும் சக்தி வாய்ந்த பூகம்பம் தாக்கியது. கடலுக்கடியில் ஏற்பட்ட இந்த பூகம்பத்தால் மாபெரும் கடல் அலைகள் தோன்றின.


அந் நாட்டின் கிழக்குப் பகுதியில் உள்ள சுலவேசி தீவுகளின் அருகே கடலுக்கடியில் இந்த பூகம்பம், இன்று காலை 8.04க்கு (இந்திய நேரப்படி அதிகாலை 5.34) தாக்கியது. ரிக்டர் ஸ்கேலில் 6.9 என்ற அளவுக்குப் பூகம்பம் பதிவாகியுள்ளது.

கடலுக்கு அடியில் 37 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த பூகம்பத்தைத் தொடர்ந்து கடலில் மிக பயங்கரமான அலைகள் தோன்றின. 4 மீட்டர் வரை உயரமான அலைகள் கரைகளைத் தாக்கியதால் அப் பகுதியில் மீண்டும் சுனாமி வந்துவிட்டதாக பெரும் அச்சம் பரவியது.

இதனால் பௌபௌ உள்ளிட்ட பல பகுதிகளைச் சேர்ந்த சுலவேசி தீவுவாசிகள் கடலோரப் பகுதிகளை விட்டு ஓடினர். ஆனால், இந்த அலைகளால் சேதம் ஏதும் ஏற்பட்டதாகத் தகவல் இல்லை.

கடந்த டிசம்பர் 26ம் தேதி இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவுக்கு அருகே கடலடியில் ஏற்பட்ட மாபெரும் பூகம்பத்தால் தான் (ரிக்டர் ஸ்கேலில் 9) தமிழகம், இலங்கை உள்ளிட்ட தெற்காசியா முழுவதும் சுனாமி பேரலைத் பேரழிவு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

கடந்த சில நாட்களாகவே நியூசிலாந்து, இந்தோனேஷியா மற்றும் நிகோபார் தீவுகளில் மீண்டும் நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகிறது.


நன்றி : தட்ஸ்தமிழ்

Print this item

  வெலிகந்த படுகொலையும் சில கதைகளும்
Posted by: Vasan - 02-19-2005, 08:59 AM - Forum: புலம் - No Replies

எதிரிகளை விட துரோகிகளே ஆபத்தானவர்கள் என்ற தேசியத்தலைவரின் கூற்று மீண்டும் ஒருமுறை அழுத்தமாக தமிழர் போராட்டவரலாற்றில் பதியப்பட்டிருக்கிறது. தமிழீழ விடுதலைப்புலிகளின் மட்டு-அம்பாறை மாவட்ட அரசியற்துறைப்பொறுப்பாளர் கௌசல்யனும் ஏனைய 3 போராளிகளும்ää தமிழ் தேசியகூட்டமைப்பை சேர்ந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அரியநாயகம் சந்திரநேரு அவர்களும் அரச கட்டுப்பாட்டுப்பகுதியில் வைத்து எதிரிகள் துரோகிகளின் கூட்டுச்சதிக்கு களப்பலியாகியிருக்கிறார்கள்.

நிராயுதபாணிகளாகச் சென்ற போராளிகள் மீது கண்முடித்தனமான-கோழைத்தனமான தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. ஆனால் இது முதற்தடவை இல்லை. சமாதானப்பயணம் தொடங்கியதிலிருந்து தமிழர்தரப்புமீது மிலேச்சத்தனமானதும் கோழைத்தனமானதுமான தாக்குதல் பலமுறை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

நல்லெண்ண சமிக்ஞையாக புலிகள் ஒருதலைப்பட்சமாக யுத்தநிறுத்தம் அறிவித்ததில் தொடங்கிய சமாதானப் பயணம் இன்றுவரை அதே நல்லெண்ணத்துடன் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்த இடைப்பட்ட காலத்தில் தமிழர் தரப்பு தனது பொறுமையின் எல்லைவரை சென்று திரும்பியிருக்கிறது பலமுறை. இன்று அதன் உச்சத்தில் நிற்கிறது. தலைவர் தனது மாவீரர் உரையில் குறிப்பிட்டதுபோல் சமாதானமும் இல்லாமல் சரியான தீர்வும் இல்லாமல் தமிழினம் அரசியல் வெறுமைக்குள் தள்ளப்பட்டிருக்கிறது. அதன் உச்சவடிவம்தான் வெலிகந்தவில் நடந்த போராளிகளின் படுகொலை.

இனியும் இதுபோன்ற செயல்களை தமிழினம் அனுமதிக்கப்போகின்றதா... புரிந்துணர்வு உடன்படிக்கையின் சரத்துக்கள் குறித்தும் இராணுவக்கட்டுப்பாட்டு பிரதேசத்தினுள் நிராயுதபாணிகளாக செல்லும் போராளிகளின் பாதுகாப்பு குறித்தும்ää நிழல் யுத்தம் நடத்தும் புலனாய்வுத்துறையினரின் - தமிழ் துரோகிகளின் ஆயுதக்களைவு பற்றியும் இறுக்கமான முடிவுகளை எடுக்கும் நிலைக்கு தமிழர் தரப்பு தள்ளப்பட்டிருக்கிறது.

இந்தப்படுகொலைகளை முன்வைத்து நாம் சில முன் முடிவுகளுக்கு வரவேண்டியுள்ளது. இன்று தமிழ் தேசிய விரோத ஊடகங்களால் பல கதைகள் சொல்லப்படுகின்றன. இந்த சுவாரசியம் நிறைந்த கட்டுக்கதைகளின் நாயகனாக ஒருவர் சித்திரிக்கப்படுகிறாhர். அவர் பெயர் கருணா. புரிந்துணர்வு உடன்படிக்கையை கண்காணிக்க வந்ததாக சொல்லப்படும் யுத்த நிறுத்த கண்காணிப்பு குழுவும் இந்த 'கதாநாயகனை" முன்வைத்துää இது உள் முரண்பாடு யுத்த நிறுத்த மீறல் இல்லையென்று ஒரு கதையை தன் பங்கிற்கு எடுத்து விடுகிறது. சந்திரிகா அம்மையாரும் ஒரு கதை சொல்கிறார். எல்லாக் கதைகளையும் தமிழன் கேட்டுக்கொண்டிருக்கிறான்.

இப்போது நாம் மீண்டும் இக் கட்டுரையின் முதல் பந்திக்கு வருவோம். எதிரிகளை விட துரோகிகளே ஆபத்தானவர்;கள் என்றார் தேசியத்தலைவர். ஆம் இன்று எதிரிகளும் அந்நிய சக்திகளும் கருணா என்ற துரோகியை முன்வைத்து கதைகளை அவிழ்த்துவிட தயாராகிறார்கள். இலங்கை அரச எந்திரமும் அதன் புலனாய்வுத்துறையும் சில அந்நிய சக்திகளும் சமாதான காலத்தை பயன்படுத்தி தமிழர் படைக்கட்டமைப்பை சிதைத்துவிட கடும் பிரயத்தனங்களை மேற்கொள்கிறார்கள்.

இந்த முயற்சிகளுக்கு தூண்களாக நின்று தோள்கொடுப்பதற்கு தமிழர் மத்தியிலிருந்து உருவாகியிருக்கிறது ஒரு கும்பல். டக்ளஸ் தேவானாந்தாää பரந்தன் ராஜன் என்று நீளும் பட்டியலில் அண்மையில் தன்னை இணைத்துக்கொண்டவர் தான் புலிகள் அமைப்பிலிருந்து நீக்கப்பட்ட கருணா என்ற முரளீதரன். இவர் முன்ளாள் தமிழ் துரோகிகள் எல்லோரையும் தூக்கி சாப்பிட்டு விட்ட கதை ஊரறிந்தது. இனி தமிழர் வரலாற்றில் துரோகம் என்ற சொல் கருணா என்ற பெயரால் அழைக்கப்பட்டாலும் ஆச்சரியப்படத்தேவையில்லை.

இன்று வெலிகந்த படுகொலையை நடாத்தியவர்கள் சிங்கள புலனாய்வுப்பிரிவினர் தான் என்பதில் தமிழர் தரப்பிற்கு இரு வேறு கருத்துக்கள் கிடையாது. ஆனால்ää நெஞ்சுக்கு நேரே விரலை நீட்டி குற்றம் சுமத்த முடியாமல் குறுக்கே வந்து நிற்கிறார் இந்த துரோக அகராதி.

இனி இவரை வைத்து வெலிகந்த சம்பவம் போன்ற கதைகள் எழுதப்படலாம். கண்காணிப்புக்குழு உள்முரண்பாடு என்று ஒரு உபகதையையும்ää சிங்கள அரசு கண்டண அறிக்கை என்ற பெயரில் ஒரு துணைக்கதையையும் எழுதலாம். ஊடகங்கள் தம் வசதிக்கு தகுந்த படி புதுப்புது கட்டுக்கதைகள் புனையலாம். நாம் என்ன கதை சொல்லப்போகிறோம்?.

இந்த துரோகிகள் விடயம் தொடர்பாக அரசதரப்புடன் உடனடியாக பேசி சில முடிவுகள் எட்டப்பட வேண்டும். கருணாவின் நிழல் வாழ்க்கை தொடர அனுமதிக்க முடியாது - கூடாது. கருணா புலிகள் அமைப்பிலிருந்து துரத்தப்பட்டவுடன் தூங்கிப்போயிருந்த சில தமிழ்தேச விரோதிகள் தம்மை ஒருங்கிணைத்து தமது இணையத் தளங்களை தூசிதட்டி புதுப்பித்ததுடன் இன்னும் சிலவற்றை புதிதாக உருவாக்கி சிங்கள - அந்நிய உளவுத்துறையினரின் செல்லப்பிள்ளைகளாக மாறி அவர்களின் கூலிப்பணத்தில் தின்று ஊளைச்சதை வளர்க்கிறார்கள். உளவுத்துறையினரின் கைப்பொம்மைகளாக மாறி அவர்களின் தாளலயத்திற்கேற்ப ஆடி தம் பங்கிற்கு இவர்களும் தமிழர்களுக்கு துரோகக்கதைகள் சொல்கிறார்கள்.

வெலிகந்த படுகொலையை இவ் இணையத்தளங்கள் கையாண்ட விதம் மிகவும் கவனத்திற்குரியது. ஒவ்வொரு இணையத்தளமும் முன்னுக்கு பின் முரனாகவும் மாறுபட்ட விதத்திலும் செய்திகளை திட்டமிட்டு குழப்பின. ஈழப்போராட்ட வரலாற்றிலும்ää அரசியலிலும் ஆழ்ந்த அக்கறை உள்ளவர்களை விட மற்றவர்கட்கு இந்த குழப்பமான செய்திகளை இணம்கண்டு கொலையாளிகளை அடையாம் காண்பது அவ்வளவு இலகுவாக இராது.

தமிழ்தேசிய ஊடகங்கள் தவிர்ந்து சிங்களää இந்தியää சர்வதேச ஊடகங்கள் பெரும்பாலானவை இத் தாக்குதலை கருணா குழுவினரே நடத்தியதாக செய்திகளை வெளியிட்டன. இல்லாத ஒரு குழு இங்கே ஊடகங்களின் ஒரு தலைப்பட்டசமான செய்திகளினால் இருப்பதாக கட்டமைக்கப்படுகிறது. இதில் பெரும் பங்காற்றியவை உளவுத்துறையினரால் வளர்க்கப்படும் தமிழினத்துரோகிகளின் இணையத்தளங்கள் என்பதை நாம் மறந்துவிடலாகாது.

இங்கே தான் நாம் தமிழ் தேசியம் குறித்தும் அதன் சர்வதேச பரப்புரைகள் குறித்தும் ஊடகங்கள் என்ற தளத்தில் உடனடியாக தீவிரமாக செயற்பட வேண்டிய தேவவையை உணர்கிறோம். மக்களோடு மக்களாக கலந்துபோயுள்ள இந்த துரோக சக்திகளை இணம் கண்டுää புலத்திலும் தாய் நிலத்திலும் வேரறுக்க வேண்டிய பெரும் கடமை நம்முன் உள்ளது.

கருணா போன்ற துரோகிகளால் எமது பேராட்டத்தை வலுவிழக்கச்செய்யமுடியாது. ஆனால் கருணா இருப்பது போன்ற பிம்பத்தை கட்டமைத்து ஒரு மாயையை உருவாக்கி ஒரு நிழல் யுத்தத்தை புலனாய்வுத் துறையினரால் நடாத்த முடியும். வெலிகந்தவில் நடந்துமுடிந்ததும் அது தான்.

கருணா என்று தமிழீழ விடுதலைப்போராட்;டத்திற்கு துரோகமிழைத்துவிட்டு ஓடினாரோ அன்றே அவருடன் ஒட்டியிருந்த வீரமும் போர்த்திறனும் அவரை விட்டு ஓடிவிட்டது. 'கருணா குழு" என்று ஊடகங்கள் விளிக்கும் ஒரு குழு உண்மையில் கிடையாது. சிங்கள புலனாய்வுத்துறையினரின் ஒரு பிரிவினர் என்று வேண்டுமானால் குறிப்பிடலாம். அது தானே உண்மையும் கூட. இதை விட மிகவும் தந்திரமான முறையில் ஒரு வெளிநாட்டு புலனாய்வு நிறுவனம் நுNனுடுகு யும் கருணாவையும் இணைத்து தமிழீழ ஐக்கிய விடுதலை முன்னணி என்ற பெயரில் அதை ஒரு அரசியல் கட்சியாக பதிவுசெய்துள்ளது.

இது தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் என்ற பெயரிலும் இயங்கிக்கொண்டிருக்கிறது. ஆனால் இவ்விரண்டு அமைப்புக்களும் பெயரளவில் இயங்கும் அமைப்புக்களே ஒழிய எந்த விதமான வெளிச்செயற்பாடுகளும் அற்றது. செயலளவில் இவை ஒரு டுநவவநச Pயன கட்சிகள் மட்டுமே. இவ்விரு அமைப்புக்களின் இணையத்தளங்களையும் பார்த்தாலே அது புரியம். அந்நிய புலனாய்வு நிறுவனங்களின் முன்னெச்சரிக்கையான இணைப்பே இது. ஆனால் சிங்கள புலனாய்வுத்துறை சில இணையத்தளங்களினூடாக 'கருணா கும்பலை" கட்டமைக்கிறது - கதை சொல்கிறது. இங்கேதான் தமிழினம் துரோகத்தின் பலவிதமான பரிமாணங்களை எதிர்கொள்கிறது. எதிரிகளைவிட துரோகிகளை முதலில் களையவேண்டிய தேவையையும் உணர்கிறது.

சமாதான காலத்தை பயன்படுத்தி பல்வேறுபட்ட கோணங்களில் - தளங்களில் தமிழர் போராட்டத்தை சிதைக்க சிங்கள அந்நிய சக்திகள் மிக கவனமாக தந்திரமாக காய் நகர்த்துகின்றன. அதற்காக தமிழின துரோக சக்திகளை முன்வைத்து எமக்கு புதுப்புது கதைகளும் சொல்கின்றன.

எல்லாக் கதைகளையும் கேட்டுக்கொண்டு பொறுமையின் சிகரமாய் அமைதி காக்கிறார் சூரியத்தேவன். ஒரு கட்டத்தில் அவர் கதை சொல்லத்தொடங்குவார். அது தான் எல்லோருக்கும் சொல்லப்பட இருக்கும் இறுதிக்கதையாகவும் இருக்கும். ஒட்டு மொத்த உலகத்தமிழினமும் எதிர்பார்க்கும் கதையும் அதுதான்.

நன்றி: ஈழமுரசு

http://www.tamilnatham.com/articles/parani20050219.htm

Print this item

  செய்முறை - Index
Posted by: thamizh.nila - 02-19-2005, 08:33 AM - Forum: சமையல் - Replies (21)

[size=15][b]
<img src='http://www.thefilebin.com/userfiles/n1/P-kdc-01%20copy.jpg' border='0' alt='user posted image'>

1] பராத்தா
2] உருளைக்கிழங்கு ரோஸ்ட்
3] Orange Smoothe
4] கொத்தமல்லி சட்னி
5] அப்பம்
6] காளான் சூப்
7] பருப்பு துவையல்
8] Mango MilkSHake
9] காரட் சாதம்
10] கோழி65
11] பகோடா
12] அவிசு
13] சீனி சம்பல்
14] கொத்தமல்லி சம்பல்
15] கோதுமை மா ரொட்டி
16] Microwave புட்டு
17] கறி வகைகள்
18] மரவள்ளி கிழங்கு பொரியல்
19] சர்பத்




* இறைச்சித்தூள்





இப்படி இணைப்பு குடுத்தால்..சுலபமாக இருக்கும் தானே...உங்கட செய்முறைகளையும் இங்கு இணைக்கலாமா?அனுமதி உண்டா???

Print this item

  பராத்தா
Posted by: thamizh.nila - 02-19-2005, 08:24 AM - Forum: சமையல் - Replies (8)

[size=18][b]சாதாரண பராத்தா

<img src='http://www.salambazar.com/umairsImages/paratha_small.jpg' border='0' alt='user posted image'>


கோதுமை மா - 2 கப்
உப்பு - 1/2 தே.க
தேங்காய் எண்ணை
நெய் - 1/2 கப்
தண்ணி

1. நெய்யை அறை வெப்பத்திற்கு வர வைக்கவும்.

2. உப்பும், நீரும் சேர்த்து மாவை பிசைந்து கொள்ளவும்.

3. சிறிது எண்ணை சேர்த்து நன்றாக அடித்து 1 மணித்தியாலத்துக்கு வைக்கவும்.

4. தேசிக்காய் அளவு சிறு உருண்டைகளாக மாவை பிரிக்கவும்.

5. பூரிக்கட்டையின் உதவியுடன் சிறு வட்டங்களாக உருட்டி எடுக்கவும்.

<img src='http://fantes.com/images/7638springerle_small.jpg' border='0' alt='user posted image'>

6.தோசைக்கல்லில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து சுட்டு எடுக்கவும்.

Print this item

  உருளைக்கிழங்கு ரோஸ்ட்
Posted by: thamizh.nila - 02-19-2005, 08:01 AM - Forum: சமையல் - Replies (13)

<span style='color:green'>[b]உருளைக்கிழங்கு ரோஸ்ட்

உருளைக்கிழங்கு - 6
உப்பு - தேவைக்கு ஏற்ப
மிளகாய்தூள் - தேவைக்கு ஏற்ப
மஞ்சள் தூள் - 1/2 தே.க
தேங்காள் எண்ணை - 2 மே.க
கடுகு - 1 தே.க
சீரகம் - 1 தே.க

1. உருளைக்கிழங்கை சுத்தம் செய்து, தோல் சீவி, அவிய வைத்து, பனங்கட்டி அளவு துண்டுகளாக நறுக்கவும்.

2.ஓர் சட்டியில் உருளைக்கிழங்கு துண்டுகளை போடவும். அதில் உப்பு,தூள் வகையாறுகளை போட்டு. நன்றாக கலக்கவும்.

3.வேறு ஒரு சட்டியை அடுப்பில் வைத்து எண்ணையை சேர்க்கவும்.

4. கடுகையும், சீரகத்தையும் பொரிக்கவும்.[கடுகு வெடிக்கும்..தள்ளி நில்லுங்கோ]

5. உருளைக்கிழங்கையும் சேர்த்து பொன்னிறமாகும் வரை பொரிக்கவும்.

</span>

Print this item

  Orange Smoothe
Posted by: thamizh.nila - 02-19-2005, 07:47 AM - Forum: சமையல் - No Replies

[size=20]Orange Smoothe

கொழுப்பில்லாத வனிலா யோகட் - 4 கப்
கொழுப்பு குறைந்த பால் - 3 கப்
குளிர் செய்யப்பட்ட ஆரஞ்சு சாறு - 1 கப்

மேல் கூறிய அனைத்தையும் ஒன்றாக சேர்த்து blender இல் அடிக்கவும்.

Orange Smoothe = தமிழாக்கம் செய்ய முடியவில்லை. மன்னிக்கவும்

Print this item

  சுனாமி
Posted by: eelapirean - 02-19-2005, 05:56 AM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (1)

சுனாமி அனுதாபத்தில் உலகநாடுகளிடம் இருந்து வரும் உதவி பொருட்களுக்கு சுங்கவரி அறவிடுவதை சிறீலங்கா அரசாங்கம் உடனடியாக நிறுத்த வேண்டும். சுனாமி நிவாரண பொருட்கள் விரைவாகவும் உரிய முறையிலும் உரியவர்களுக்கு சென்றடைவதை உறுதிப்படுத்தும் வகையில் நடவடிக்கைகளை எடுக்குமாறு இலங்கை அரசாங்கத்திடம்ää இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதிகள் கிளிங்டன்ää ஜோர்ஜ் புஸ் ஆகியோர் வலியுறுத்த வேண்டும். இப்படி ஹொங்கொங்கில் தலைமையகத்தை கொண்டியங்கும் ஆசிய மனிதவுரிமை ஆணைக்குழு வெள்ளிக்கிழமை அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.


கடுமையான சுங்கவரிகள்ää மற்றும் அரச அதிகாரிகளின் கெடுபிடிகள் காரணமாக நூற்றுக்கும் மேலாக கொள்கலன்கள் துறைமுகத்தில் சுனாமி நிவாரண பொருட்களுடன் தேங்கி கிடக்கின்றன என்று சுட்டிக்காட்டப்படுகின்றது.
நன்றி உலகசந்தை

Print this item

  பயணங்கள் முடிவதில்லை...!
Posted by: Kurumpan - 02-19-2005, 04:44 AM - Forum: கவிதை/பாடல் - Replies (11)

இந்த
"பாலைவனச் சோலையிலே"
"நினைவெல்லாம்" "நீயா"க வந்தாய்
"இதயத்தைத் திருடாதே" எனச்
"சொல்லாமலே" இருந்து விட்டேன்
"திருடா திருடா" எனச் சொல்லியே
மனதைத் திருடி விட்டாய்
"மெல்லத் திறந்த கதவாக"
என் "உள்ளம்" திறந்து கொண்டேன்
"முகம்" தெரியாதவளிடம் - என்
"முகவரி" தொலைத்தேன்

"கேளடி கண்மணி" - இந்தப்
"பொன்மணி" "நெஞ்சினிலே"
"நினைவே ஒரு சங்கீதமாய்"
"இளமை ஊஞ்சல் ஆடுவது"
நீயடி பெண்ணே!

ஆனால்...
"காலமெல்லாம் காதல் வாழ்க" என
கோசம் மட்டுமே போடலாம்
"இருவர்" "உள்ளம்" ஒன்றானாலும்
"பறவைகள் பலவிதம்" அதில் நாம்
"பாதை மாறும் பறவைகள்"!

"ப்ரியமானவளே!"
உனை
"பிரியாத வரம் வேண்டும்" என
"ஆசை" கொண்டேன் - ஆனால்
"மின்சாரக் கனவாக"ப் போனதடி

"ஈரமான ரோஐாவே!"
"உன்னிடத்தில்" என்னைக் கொடுத்தேன்
உனக்காக என்றென்றும்
"மெளன ராகமாய்" என் "இதயம்"
"இதயகீதம்" வடிக்கும்
"களவும் கற்று மற" எனச் சொன்னார்கள்
"காத(ல்)"லும் அங்கு அடங்குமோ என்னவோ?

இனியவளே!
"புதுவசந்தம்" வராவிடினும்
என் "இதய"த்தில் நீ
"காதலுக்கு மரியாதை" கொள்ளும் என் காதலுக்கு
என்றென்றும்
<b>"பயணங்கள் முடிவதில்லை..." </b>


(ரொம்ப சினிமா பார்க்கிறதால ஏற்பட்ட குழப்பம், மற்றும்படி ஒண்டுமில்லை <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> )

Print this item