| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 386 online users. » 0 Member(s) | 384 Guest(s) Bing, Google
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,432
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,286
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,641
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,312
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,676
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,237
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,476
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,540
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,047
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,243
|
|
|
| சாதனை ஓவியர் |
|
Posted by: Vaanampaadi - 02-18-2005, 02:15 PM - Forum: செய்திகள்: உலகம்
- Replies (2)
|
 |
சாதனை ஓவியர்
<img src='http://www.jayatvnews.org/news-photos/sathanai-oviyar-web.jpg' border='0' alt='user posted image'>
சென்னை எஸ்.ஆர்.என்.எம். மெட்ரிகுலேஷன் பள்ளியில், 7-ம் வகுப்பு படித்து வரும் மாணவன் ஜனார்தனன். மின்சாரம் தாக்கியதில் கை, கால்களை இழந்த இந்த சிறுவன், நம்பிக்கையை இழக்காமல் ஓவியம் வரைவதில் ஆர்வம் காட்டி வருகிறான்.
வாயிலானல் தூரிகையைப்பிடித்து, ஓவியங்களைத் தீட்டும் ஜனார்த்தனன், இதுவரை பல்வேறு போட்டிகளில் பங்கேற்று மாநில அளவிலும், தேசிய அளவிலும் விருதுகளைப் பெற்றுள்ளான். கடந்த ஆண்டுக்கான சிறந்த குழந்தை சிந்தனையாளர் விருதும் ஜனார்தனனுக்கு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. விபத்தில், கை, கால்களை இழந்த மகனைப்பார்த்து சோகத்தில் ஆழ்ந்த தங்களுக்கு, அவனது தன்னம்பிக்கையும், ஊக்கமும் மருந்ததாக அமைந்தது என்கிறார் ஜனார்தனனின் தந்தை கேசவன். வாயால் தூரிகையைப்பிடித்து, ஓவியங்கள் வரைந்து சாதனை படைத்து வரும் ஜனார்தனன், வரும் 16-ம் தேதி, டெல்லியில் குடியரசுத்தலைவர் மாளிகையில் நடைபெறும் விழாவில் பாலஸ்ரீ விருது பெறவிருப்பது மகிழ்ச்சிக்குரிய செய்தியாகும். எதிர்காலத்தில், கணினி வரைகலை நிபுணராகத் திகழவேண்டும் என்ற கனவுடன் ஓவியங்கள் வரைந்து வரும் ஜனார்தனன், சாதனை சரித்திரத்தில் நிச்சயம் இடம்பெறுவான்.
Jaya news
|
|
|
| பூமிக்கடியில் தோட்டம் |
|
Posted by: Vaanampaadi - 02-18-2005, 02:14 PM - Forum: செய்திகள்: உலகம்
- Replies (2)
|
 |
பூமிக்கடியில் தோட்டம்
<img src='http://www.jayatvnews.org/news-photos/japan1-web.jpg' border='0' alt='user posted image'>
நிலத்தில் காய்கறிகள் விளைவதை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால், பூமிக்கடியிலும் தானியங்கள் மற்றும் காய்கறிகளை விளைவிக்க முடியும் என்று நிருபித்துக்காட்டியுள்ளனர் ஜப்பான் மக்கள்.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவின் மையப்பகுதியில், பூமிக்கடியில் இந்த தோட்டம் அமைந்துள்ளது. இங்கு நெல் போன்ற தானியங்களும், தக்காளி உள்ளிட்ட காய்கறிகளும் ஏராளமாக விளைகின்றன. சூரிய ஒளிக்கு பதிலாக, அதிக சக்தி கொண்ட மின் விளக்குகள் மூலம், காய்கறிகளை விளைவிக்கத் தேவைப்படும் வெப்பத்தைப் பாய்ச்சுகின்றனர். குறைவான தண்ணீரில் தானியங்களும், காய்கறிகளும் விளைவது, பார்ப்போரை கவருகிறது. இவை அனைத்துமே ரசாயன உரமின்றி, இயற்கையான முறையில் உற்பத்தி செய்யப்படுவது கூடுதல் சிறப்பம்சம். இதுபோன்று எதிர்காலத்தில் அதிக அளவில் பூமிக்கடியில் தோட்டங்களை அமைப்பதன் மூலம், நிலப் பிரச்னையும் தீரும், அதேபோல், வேலையில்லாமல் தவிக்கும் ஜப்பானிய இளைஞர்களுக்கு இங்கு வேலைவாய்ப்பு வழங்க முடியும் என்று, அந்நாட்டு வேலை வாய்ப்புத்துறை தெரிவித்துள்ளது.
Source : Jaya news
|
|
|
| வழுக்கைக்கு மருந்து |
|
Posted by: Vaanampaadi - 02-18-2005, 02:13 PM - Forum: செய்திகள்: உலகம்
- Replies (3)
|
 |
வழுக்கைக்கு மருந்து
<img src='http://www.jayatvnews.org/news-photos/China-Barding1-web.jpg' border='0' alt='user posted image'>
முடி கொட்டி, தலை வழுக்கையானால், யாருக்குத்தான் வருத்தம் இருக்காது. தற்போது சீன மக்களுக்கும் இதுதான் தலையாய பிரச்னை. இங்கு, 25 முதல் 35 வயது கொண்டவர்களில் 40 சதவீதம் பேருக்கு தலை வழுக்கையாகி விடுகிறதாம்.
முடி கொட்டுவதைத் தடுக்கவும், தலை வழுக்கையாகாமல் பாதுகாக்கவும் எத்தனையோ மருத்துவங்களை பார்த்து விட்ட சீன மக்களுக்கு, பிரச்னை தீர்ந்தபாடில்லை. இப்போது, இதற்குத் தீர்வாக, முடியை நட்டு செய்யப்படும் அறுவை சிகிச்சை கைகொடுத்து வருகிறது. வழுக்கைத் தலையில் நவீன கருவிகளின் உதவியுடன் முடியை நட்டு இந்த அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. இதுபோன்ற அறுவை சிகிச்சை செய்யும் மருத்துவமனைகளும் இங்கு ஏராளமாக பெருகி வருகின்றன. இந்த அறுவை சிகிச்சை மூலம் நல்ல பலன் கிடைப்பதால், இது தற்போது சீனாவில் மிகவும் பிரபலமடைந்து வருகிறது. முடியை நட்டு அறுவை சிகிச்சை செய்து கொள்ள 17 ஆயிரம் ருபாய் வரை செலவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
Source : Jaya news
|
|
|
| மழலை மேதை |
|
Posted by: Vaanampaadi - 02-18-2005, 02:12 PM - Forum: செய்திகள்: உலகம்
- Replies (3)
|
 |
மழலை மேதை
<img src='http://www.jayatvnews.org/news-photos/malalai-methai-web.jpg' border='0' alt='user posted image'>மதுரை மாவட்டத்தில் 5 வயது சிறுவன் ஒருவன் தேர்ந்த இசையமைப்பாளரைப்போல, ஆர்கன், கீ போர்டு உள்ளிட்ட இசைக்கருவிகளை லாவகமாக வாசித்து, காண்போரை வியப்பில் ஆழ்த்தி வருகிறான்.
மதுரை திருமங்கலத்தில் உள்ள தேவாலயம் ஒன்றில், இசைக்கருவிகள் வாசித்து வருபவர் திரு.ஜெயக்குட்டி. இவர் தனது மகன் எபி தேவவரத்திற்கு சிறுவயதிலிருந்தே இசைப்பயிற்சி அளிக்கத் தொடங்கினார். மேலும், தேவாலயத்திற்கு இசைக்கருவிகள் வாசிக்கச் செல்லும்போது தன் மகனையும் உடன் அழைத்துச் செல்வதையும் இவர் வழக்கமாகக் கொண்டுள்ளார். நாட்கள் செல்லசெல்ல எபி தேவவரத்தின் பிஞ்சு கைகள் இசைக்கருவிகளை இசைக்கத் தொடங்கின. ஆர்வத்துடன் இசை பயின்ற இச்சிறுவன், 5வது வயதில் ஆர்கன், கீ போர்டுகளை நேர்த்தியாக இசைக்கத் தொடங்கியதைக் கண்டு சுற்றுப்பகுதியில் உள்ளோர் ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர். அத்துடன் நொட்டேஷன் எனப்படும் இசைக் குறிப்புகளைக் கொண்டே வாத்தியங்களை இசைப்பதிலும் இச்சிறுவன் பெற்றிருக்கும் அறிவு, அனைவரையும் வியப்படையச் செய்துள்ளது. ஐந்து வயதிலேயே அபாரமாக இசைக்கருவிகளை வாசிக்கும் இச்சிறுவன், எதிர்காலத்தில் மிகச்சிறந்த இசை மேதையாக உருவெடுப்பான் என அப்பகுதி மக்கள் நம்பிக்கையுடன் கூறுகின்றனர்.
Source : Jaya news
|
|
|
| ஐ.நா. செயலாளரிடம் இலங்கை ஆட்சேபம்! |
|
Posted by: Vaanampaadi - 02-18-2005, 01:35 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (1)
|
 |
ஐ.நா. செயலாளரிடம்
இலங்கை ஆட்சேபம்!
கெளசல்யன் கொலையைக் கண்டித்ததற்காக
விடுதலைப் புலிகளின் மட்டக்களப்பு - அம்பாறை மாவட்ட அரசியல் பொறுப்பாளராகவிருந்த லெப்ரினன்ட் கேணல் இ.கெளசல்யனின் படுகொலைகளை ஐக்கியநாடுகள் சபையின் செயலாளர் நாயகம் கண்டித்ததை இலங்கை அரசு உத்தியோகபூர்வமாக ஆட்சேபித்திருக்கின்றது.
இலங்கை அரசின் ஐ.நாவுக்கான நிரந்தரப் பிரதிநிதி பேர்னாட் குணதிலக நேற்றுமுன்தினம் ஐ.நா.செயலாளர் நாயகத்தின் அலுவலகத் திடம் இலங்கை அரசின் உத்தியோகபூர்வ ஆட்சேபனையைத் தெரிவித்தார்.
மற்றைய பல நாடுகளினால் தடைசெய் யப்பட்ட ஒரு பயங்கரவாத இயக்கத்தின் உறுப் பினர்கள் கொல்லப்பட்ட சம்பவத்தை ஐ.நா.செய லாளர் நாயகம் கண்டித்து, இரங்கல் செய்தி விடுப்பது முறையற்றது என இலங்கை அரசு தனது ஆட்சேபனையில் தெரிவித்திருக்கின்றது எனத் தெரியவந்தது.
மேற்படி கொலைகளை ஐ.நா. செயலாளர் கண்டித்ததைத் தேசப்பற்றாளர்களின் தேசிய இயக்கம், ஜே.வி.பி. போன்ற பெளத்த, சிங்களப் பேரினவாத அமைப்புகளே எதிர்த்துவந்தன.
ஐ.நா. செயலாளரின் கண்டன அறிக்கையை ஆட்சேபித்து இந்த அமைப்புகளின் பிரதிநிதிகள் வெளிவிவகார அமைச்சர் லசஷ்மன் கதிர்காமரை மிக அண்மையில் அவரது அலுவலகத்தில் சந் தித்துத் தமது எதிர்ப்பைத் தெரிவித்திருந்தனர்.
அதேவேளை -
அவர்களது கருத்துக் குறித்து கவனத்தில் எடுத்து உரிய பதில் நடவடிக்கை மேற்கொள்ளப் படும் என அமைச்சர் கதிர்காமர் உறுதியளித் திருந்தார்.
அதற்கு அமையவே, வெளிவிவகார அமைச்சு தற்போது நடவடிக்கை எடுத்திருப்பதாகத் தெரி கின்றது.
வெளிவிவகார அமைச்சின் வழிகாட்டல் களுக்கு அமைய இலங்கை அரசின் ஆட்சேப னையை ஐ.நாவுக்கான இலங்கைப் பிரதிநிதி பேர் னாட் குணதிலக ஐக்கியநாடு செயலாளர் நாய கத்தின் அலுவலகத்திற்குத் தெரியப்படுத்தினார் என அறியவந்தது.
Source : Uthayan
|
|
|
| சந்திரமுகிக்காக மல்லுக்கட்டும் சன், ஜெயா! |
|
Posted by: Vaanampaadi - 02-18-2005, 01:30 PM - Forum: சினிமா
- Replies (2)
|
 |
<img src='http://thatstamil.indiainfo.com/images26/cinema/rajini380.jpg' border='0' alt='user posted image'>சந்திரமுகிக்காக மல்லுக்கட்டும் சன், ஜெயா!
சந்திரமுகி டிவி உரிமையை வாங்க சன் டிவியும், ஜெயா டிவியும் கடும் போட்டியில் இறங்கியுள்ளன.
தமிழில் பட பூஜை தொடங்கியவுடனேயே அந்தப் படத்தின் உரிமையை வாங்கும் அளவுக்கு சன் டிவியிடம் பண பலம் உள்ளது அனைவருக்கும் தெரியும். விட்டால் படங்கள் சன் டிவியிலேயே நேரடியாக ரிலீஸ் ஆகும் போலிருக்கிறது.
திரைக்கு வரும் பெரும்பாலான சமீபத்திய படங்களின் டிவி உரிமையை சன் டிவிதான் வைத்துள்ளது, தொடர்ந்து வாங்கி குவித்தும் வருகிறது. சமீப காலமாக ஜெயா டிவியும், ராஜ் டிவியும் சன்னுக்கு கடும் போட்டியைக் கொடுக்கும் வகையில் புதுப படங்களை வாங்கத் தொடங்கியுள்ளன.
இதனால் 3 பேருக்கும் இடையே கடும் போட்டா போட்டி நடக்கிறது. இடையில் ராஜ் டிவி சற்று தொய்ந்து போனதால், ஜெயாவுக்கும், சன்னுக்கும்தான் இப்போது புதுப் படங்களை வாங்குவதில் நேரடிப் போட்டி நடந்து வருகிறது.
<img src='http://thatstamil.indiainfo.com/images26/cinema/rajini380a.jpg' border='0' alt='user posted image'>
இப்போது சந்திரமுகி படத்தின் உரிமையைப் பெறுவதிலும் இரு டிவிக்களும் கடுமையாக மோதி வருகின்றன. சமீப காலத்தில் வந்த ரஜினியின் அனைத்துப் படங்களின் உரிமைகளையும் சன் டிவிதான் வாங்கி வைத்துள்ளது. இதில் கடைசியாக வந்த பாபாவும் அடங்கும்.
அதேபோல சந்திரமுகியையும் வாங்க கடும் பிரயத்தனத்தில் சன் டிவி இறங்கியுள்ளது. ஆனால் ரஜினிக்கும், திமுகவுக்கும் இப்போது நல்ல நட்பு இல்லை என்பதால் சந்திரமுகியை வாங்குவதில் சன் டிவிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
சன் டிவிக்கு சந்திரமுகியை விற்பதில் ரஜினிக்கும் விருப்பமில்லை என்று கூறப்படுகிறது. அதேசமயம் ஜெயா டிவிக்கு படத்தை விற்க ரஜினி பச்சைக் கொடி காட்டியிருக்கிறார் என்று கூறப்படுகிறது. ஆனாலும் தயாரிப்பாளர்கள் என்ற வகையில் இறுதி முடிவை சிவாஜி பிலிம்ஸ் எடுக்கலாம் என்று கூறிவிட்டு ஒதுங்கிவிட்டாராம்.
சசிகலா குடும்பத்தினருக்கு சிவாஜி குடும்பம் சம்பந்தி முறை தான் என்பதால் ஜெயா டிவி சார்பில் சுமூகமாகப் பேசியே படத்தை வாங்கிவிட முயற்சி நடக்கிறது. பிரபுவுக்கும் முதல்வர் ஜெயலலிதா மீது அதீத மரியாதை உண்டு என்பதும் அனைவரும் அறிந்ததே.
ஆனாலும் முன்னணித் தொலைக்காட்சியான சன் டிவிக்கு எப்படி நோ சொல்வது என்ற குழப்பத்தில் சிவாஜி பிலிம்ஸ் உள்ளதாம். பட ரிலீசின்போது சன் டிவி மூலமாக விளம்பரம் பக்கபலமாக இருக்குமே என்பதால் தயாரிப்பாளர்களான ராம்குமாரும் பிரபுவும் கொஞ்சம் குழப்பத்தில் தான உள்ளதாகத் தெரிகிறது.
சன் டிவியோடு திமுக தலைவர் கருணாநிதி மற்றும் திமுகவையும் பகைக்க வேண்டுமே என்ற டென்சனும் உள்ளதால் இப்போதைக்கு பட உரிமையை விற்காமல் தள்ளிப் போடுவது என்ற முடிவுக்கு வந்துள்ளார்களாம்.
இருந்தாலும் சன் டிவி தரப்பில் தொடர்ந்து சிவாஜி குடும்பத்தாரை நெருக்கி வருகிறார்களாம். படத்துக்கு மிகப் பெரிய விலையையும் பேசி வருகிறார்கள்.
அதேபோல, ஜெயா டிவியும் எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை என்று களத்தில் இறங்கியுள்ளது.
இந்த முட்டல் மோதலை ரஜினி அமைதியாக பார்த்துக்
கொண்டுள்ளாராம்.
<img src='http://thatstamil.indiainfo.com/images26/cinema/rajini-330.jpg' border='0' alt='user posted image'>
|
|
|
| மாதா அம்ரிதானந்த மாயி இலங்கை வருகை |
|
Posted by: Vaanampaadi - 02-18-2005, 11:44 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- No Replies
|
 |
<img src='http://www.amma-mass.org/images/ammaMain5.gif' border='0' alt='user posted image'>
மாதா அம்ரிதானந்த மாயி இலங்கை வருகை
இந்தியாவின் ஆன்மீகத் தலைவியான மாதா அம்ரிதானந்த மாயி இலங்கையில் ஆழிப்பேரலை அனர்த் தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 30கோடி ரூபாய் நிதி உதவியும் 300வீடுகளைக் கட்டிக்கொடுக்கவும் முன்வந்துள்ளார்.
இலங்கை அரசின் அழைப்பின் பேரில் அவர் நேற்று இலங்கை வந்து சேர்ந்தார். கிழக்கே அம்பாறை மாவட்டத்திற்கும் தெற்கில் ஹம்பாந்தோட்ட விற்கும் சென்று பாதிக்கப்பட்ட மக்களைத் தாம் சந்திக்கவிருப்பதாகவும் அவர் கூறினார். ........
Amritanandamayi announces 30 million relief to Sri Lanka
28 Hours,18 minutes Ago
[Kerala News]: THIRUVANANTHAPURAM: Spiritual leader Amritanandamayi, head of Amritanandamayi Centre, has announced Rs30 million in aid to the tsunami wrecked Sri Lanka, a release from the math said here.
Quoting a media conference addressed at Colombo by the Amma, the math said that it would also construct 300 houses for the affected in the island country.
The relief work and financial assistance was being handled through the Mata Amritanandamayi Centre in USA.
The press conference, which was aired on Sri Lanka National Television, was held at the house of Agricultral Marketing Development, Co-operative Development, Hindu Affairs and Minister Assisting Education and Vocational Training Minister KN Douglas Devananda.
The minister welcomed Amritanandamayi and her tsunami relief aid on behalf of the Sri Lankan government, saying that Sri Lanka was grateful for Amma's helping hand.
During her three day visit to the island country starting on Wednesday, Amritanandamayi would visit relief camps in the Tamil area of Ampara on February 17 and the Sinhalese area of Hambantota on February 18.
Each relief camp was currently sheltering more than 1000 families rendered homeless by the tsunami. Amritanandamayi would give darshan there, as well as distribute 10,000 saris and 10,000 dhotis.
Amritanandamayi was invited to the island country last month by the Sri Lankan government "to bless Sri Lankans of all faiths and races and to bring peace and prosperity in their lives."
Source : keralanews
|
|
|
| வாழ்ந்தவன் தாழ்ந்தால்... |
|
Posted by: shanmuhi - 02-18-2005, 11:23 AM - Forum: குறும்படங்கள்
- Replies (1)
|
 |
வாழ்ந்தவன் தாழ்ந்தால்... குறுந்திரைப்படம்.
<img src='http://www.tamilnatham.com/advert/germany20050130/issai300105/poster1.jpg' border='0' alt='user posted image'>
|
|
|
| வடக்கு கிழக்கிற்கு செல்ல மாட்டார்கள் |
|
Posted by: Vaanampaadi - 02-18-2005, 11:08 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (2)
|
 |
முன்னைநாள் அமெரிக்க ஜனாதிபதிகள் (Bill Clinton and George H.W. Bush ) இலங்கை விஜயத்தின் போதுவடக்கு கிழக்கிற்குசெல்ல மாட்டார்கள் என அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது ..........
Clinton Bush not visiting the North East
In their forthcoming visit, former presidents of the USA, Bill Clinton and George H.W. Bush would not be visiting the tsunami hit areas in the North and the East. According to a statement issued by the US embassy in Colombo, the ex-presidents will mainly be visiting the Southern areas of the island.
The statement, giving the details of the visit says, At the request of U.S. President George W. Bush,former United States Presidents Bill Clinton and George H.W. Bush will be visiting Sri Lanka February 20-21 as part of a tour of tsunami-affected countries.
This visit by Bill Clinton would be one of his last official duties on behalf of the US President before he takes up the position as the envoy of the UN Secretary General on tsunami relief. US authorities clarifies the details of the visit in their statement. President George W. Bush has asked the two former Presidents to head up private sector fundraising for relief and reconstruction.
The statement says the two presidents will meet the President of Sri Lanka. The former Presidents will arrive Sunday late afternoon and hold an evening meeting with President Chandrika Kumaratunga. On Monday morning, they Will tour tsunami-affected areas in or near Matara, in southern Sri Lanka, and then depart for the Maldives.
The visit will be limited to a tour of the tsunami affected areas in the South. The two former Presidents will visit sites in the Matara district, including a debris-clearing project near Matara Fort where USAID is providing cash-for-work and equipment to people affected by the tsunami to help expedite the clean up.
Source : BBC
|
|
|
| இசை பாடும் காதல் |
|
Posted by: Vaanampaadi - 02-18-2005, 11:02 AM - Forum: செய்திகள்: உலகம்
- Replies (3)
|
 |
இசை பாடும் காதல்
பாதுகாப்பான உடல் உறவுக்காகவும், எய்ட்ஸ் தடுப்பு சாதனமாகவும் பயன்படுத்தும் ஆண் உறையில் விதம் விதமான மாற்றங்கள் செய்யப்படு கின்றன. இப்போது புதிதாக ஒலி எழுப்பும் ஆண் உறை ஒன்றை உக்ரேனியன் நாட்டு விஞ்ஞானி கிரிகோரி சவுசோவ்ஸ்கி கண்டுபிடித்து இருக்கிறார். அவர் சிறிய எலக்டிரான்களை பொறுத்தியதன் மூலம் இந்த ஒலியை ஏற்பட செய்துள்ளார். "தாம்பத்ய உறவின்போது இந்த இசை மேலும் உள்ளக் கிளர்ச்சியை ஏற்படுத்தும். மின்சார தாக்குதல் ஏற்படும் என்று அஞ்சத் தேவை இல்லை" என்று அந்த விஞ்ஞானி கூறுகிறார்.
தினதந்தி
|
|
|
|