Yarl Forum
சாதனை ஓவியர் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள்: உலகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=14)
+--- Thread: சாதனை ஓவியர் (/showthread.php?tid=5166)



சாதனை ஓவியர் - Vaanampaadi - 02-18-2005

சாதனை ஓவியர்
<img src='http://www.jayatvnews.org/news-photos/sathanai-oviyar-web.jpg' border='0' alt='user posted image'>

சென்னை எஸ்.ஆர்.என்.எம். மெட்ரிகுலேஷன் பள்ளியில், 7-ம் வகுப்பு படித்து வரும் மாணவன் ஜனார்தனன். மின்சாரம் தாக்கியதில் கை, கால்களை இழந்த இந்த சிறுவன், நம்பிக்கையை இழக்காமல் ஓவியம் வரைவதில் ஆர்வம் காட்டி வருகிறான்.
வாயிலானல் தூரிகையைப்பிடித்து, ஓவியங்களைத் தீட்டும் ஜனார்த்தனன், இதுவரை பல்வேறு போட்டிகளில் பங்கேற்று மாநில அளவிலும், தேசிய அளவிலும் விருதுகளைப் பெற்றுள்ளான். கடந்த ஆண்டுக்கான சிறந்த குழந்தை சிந்தனையாளர் விருதும் ஜனார்தனனுக்கு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. விபத்தில், கை, கால்களை இழந்த மகனைப்பார்த்து சோகத்தில் ஆழ்ந்த தங்களுக்கு, அவனது தன்னம்பிக்கையும், ஊக்கமும் மருந்ததாக அமைந்தது என்கிறார் ஜனார்தனனின் தந்தை கேசவன். வாயால் தூரிகையைப்பிடித்து, ஓவியங்கள் வரைந்து சாதனை படைத்து வரும் ஜனார்தனன், வரும் 16-ம் தேதி, டெல்லியில் குடியரசுத்தலைவர் மாளிகையில் நடைபெறும் விழாவில் பாலஸ்ரீ விருது பெறவிருப்பது மகிழ்ச்சிக்குரிய செய்தியாகும். எதிர்காலத்தில், கணினி வரைகலை நிபுணராகத் திகழவேண்டும் என்ற கனவுடன் ஓவியங்கள் வரைந்து வரும் ஜனார்தனன், சாதனை சரித்திரத்தில் நிச்சயம் இடம்பெறுவான்.

Jaya news


- thaiman.ch - 02-18-2005

Confusedhock:


- kavithan - 02-19-2005

நன்றி.. அந்த சிறுவனுக்கு என் வாழ்த்துக்கள் <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->