Yarl Forum
மழலை மேதை - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள்: உலகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=14)
+--- Thread: மழலை மேதை (/showthread.php?tid=5169)



மழலை மேதை - Vaanampaadi - 02-18-2005

மழலை மேதை
<img src='http://www.jayatvnews.org/news-photos/malalai-methai-web.jpg' border='0' alt='user posted image'>மதுரை மாவட்டத்தில் 5 வயது சிறுவன் ஒருவன் தேர்ந்த இசையமைப்பாளரைப்போல, ஆர்கன், கீ போர்டு உள்ளிட்ட இசைக்கருவிகளை லாவகமாக வாசித்து, காண்போரை வியப்பில் ஆழ்த்தி வருகிறான்.

மதுரை திருமங்கலத்தில் உள்ள தேவாலயம் ஒன்றில், இசைக்கருவிகள் வாசித்து வருபவர் திரு.ஜெயக்குட்டி. இவர் தனது மகன் எபி தேவவரத்திற்கு சிறுவயதிலிருந்தே இசைப்பயிற்சி அளிக்கத் தொடங்கினார். மேலும், தேவாலயத்திற்கு இசைக்கருவிகள் வாசிக்கச் செல்லும்போது தன் மகனையும் உடன் அழைத்துச் செல்வதையும் இவர் வழக்கமாகக் கொண்டுள்ளார். நாட்கள் செல்லசெல்ல எபி தேவவரத்தின் பிஞ்சு கைகள் இசைக்கருவிகளை இசைக்கத் தொடங்கின. ஆர்வத்துடன் இசை பயின்ற இச்சிறுவன், 5வது வயதில் ஆர்கன், கீ போர்டுகளை நேர்த்தியாக இசைக்கத் தொடங்கியதைக் கண்டு சுற்றுப்பகுதியில் உள்ளோர் ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர். அத்துடன் நொட்டேஷன் எனப்படும் இசைக் குறிப்புகளைக் கொண்டே வாத்தியங்களை இசைப்பதிலும் இச்சிறுவன் பெற்றிருக்கும் அறிவு, அனைவரையும் வியப்படையச் செய்துள்ளது. ஐந்து வயதிலேயே அபாரமாக இசைக்கருவிகளை வாசிக்கும் இச்சிறுவன், எதிர்காலத்தில் மிகச்சிறந்த இசை மேதையாக உருவெடுப்பான் என அப்பகுதி மக்கள் நம்பிக்கையுடன் கூறுகின்றனர்.

Source : Jaya news


- vasanthan - 02-18-2005

தலைப்பை பார்த்தவுடன் நான் நினைத்தேன் எங்கட மழலை அப்படி என்ன மேதாவித்தனம் பண்ணியதென்று உள்ள வந்தப்பிறகு தான் புரிஞ்சுது உண்மையிலேயே மழலைகளைப்பற்றியது தான் என்று.


- Malalai - 02-18-2005

Quote:தலைப்பை பார்த்தவுடன் நான் நினைத்தேன் எங்கட மழலை அப்படி என்ன மேதாவித்தனம் பண்ணியதென்று உள்ள வந்தப்பிறகு தான் புரிஞ்சுது உண்மையிலேயே மழலைகளைப்பற்றியது தான் என்று.
இது நியாமா? இப்படி சொல்லிப்போட்டிங்க....நம்ம ஆழுதான் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> அதுவும்...


- kavithan - 02-19-2005

அந்த மழலைக்கு வாழ்த்துக்கள் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->