| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 537 online users. » 0 Member(s) | 534 Guest(s) Baidu, Bing, Google
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,432
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,286
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,641
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,312
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,676
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,237
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,476
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,549
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,047
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,243
|
|
|
| தயா ஜிப்ரான் கவிதைகள் |
|
Posted by: Thaya Jibbrahn - 02-19-2005, 02:53 AM - Forum: கவிதை/பாடல்
- Replies (6)
|
 |
மருத்துவம் சொன்னது!
மாரடைப்புக்கு
கொலஸ்ரோல் தான் காரணமாம்.
அப்படியெனில்
நீ எந்தவகை
கொலஸ்ரோல்?
---------------------------
யாரேனும் நினைத்தால்
தும்மல் வருமாம்.
பாட்டி இதிகாசம் சொன்னாள்.
நீயென்ன
நாள் முழுதும்
தும்மிக் கொண்டேயிருக்கிறாயா?
-------------------------------
நேற்றேனும் புரிந்ததா உனக்கு
நம் காதல் பற்றி.
நாம்
ஒன்று சேர்வதில்லை
என்ற ஒரே முடிவையே
இருவரும்
தனித் தனியாக
எடுத்திருந்தோம்.
----------------------------
உன்னை மறக்கவென
எண்ணிக் கொண்டு நிகழ்த்துகின்ற
நீ
வெறுப்பதாக கூறிய
ஒவ்வோர்
தீக்குச்சிகளின் உரசல்களிலும்
தெரியுதடி
உந்தன் நிலவு முகம்.
---------------------------
உன்னோடு இருப்பதை விடவும்
உந்தன்
நினைவுகளோடிருக்கவே
சம்மதம்.
-----------------------------
-தயா ஜிப்ரான் -
|
|
|
| என் தெமிஸ் தேவதையே! -தயா ஜிப்ரான் - |
|
Posted by: Thaya Jibbrahn - 02-19-2005, 02:46 AM - Forum: கவிதை/பாடல்
- No Replies
|
 |
என்
தெமிஸ் தேவதையே!
நம்
காதல் வழக்கின்
தீர்ப்பு எப்போது
உன்னால்
தீர்க்கப்படாத வழக்குகளால்
என்
காலம் கரைகிறது
ஆயுள் தண்டனையாய்-
பிடியாணை கொடுத்து
விழிகள் அனுப்பியவளே!
வழக்கின் கைதி
வாசலில் நிற்கின்றேன்.
தீர்ப்புகளையே
யாசிக்கின்றான்
ஓர்
மூடக்கவிஞன்.
உன்
மௌனங்கள் வரையும்
தள்ளி வைப்புத்
தீர்மானங்களையல்ல...
(தெமிஸ் -- நீதி தேவதை)
-தயா ஜிப்ரான் -
|
|
|
| குறும்படப்போட்டி |
|
Posted by: shanmuhi - 02-19-2005, 01:01 AM - Forum: குறும்படங்கள்
- Replies (5)
|
 |
நல்லூர் ஸ்தான் கலைப்பிரிவு நடாத்தும் உலகளாவிய குறும்படப்போட்டி
அன்பார்ந்த தமிழ் நண்பர்களே,
ஈழத் தமிழ்க் கலைஞர்களின் திறமைகளை வெளிக்கொணர்வதும், எமக்கான ஒரு திரைப்படத்துறையைக் கட்டியெழுப்பி வளர்ப்பதுவுமே இந்தக் குறும்படப்போட்டியின் முக்கிய நோக்கமாகும். இப்போட்டியில் திரையிடப்படும் குறுமு்படங்களிலிருந்து மூன்று சிறந்த குறும்படங்கள் பார்வையாளர்களாலும், நடுவர்களாலும் தெரிவு செய்யப்படும். அப்படித் தெரிவு செய்யப்பட்ட முதலாவது குறும்படத்திற்கு "சங்கிலியன்" விருதும், மூன்று படங்களிற்கும் ஊக்குவிப்புத் தொகையும் வழங்கி கெளரவிக்கப்படும்.
எனவே, கலைஞர்களே - குறும்பட ஆர்வலர்களே உங்கள் (இப்போட்டிக்கென்று உருவாக்கப்பட்ட) குறும்படங்களையும் அனுப்பி கலைத்திறமையை வெளிப்படுத்துங்கள்.
நிகழ்வு:
திகதி: 03.04.2005
நேரம்: 16.00 மணி
இடம்: 184 Rue De Bagnelet
75020 Paris
(France)
போட்டி விதிமுறைகள்:
அ. தமிழர்களின் நியாயமான விடயங்களிற்கு பாதகமற்றதாகவும்
ஆ. 23 நிமிடங்களிற்கு உட்பட்டதாகவும்
இ. ஏற்கனவே வெளியிடப்படாததாகவும்
இருத்தல் வேண்டும்!
1வது பரிசு: 1500 யூரோக்கள்
2வது பரிசு: 1000 யூரோக்கள்
3வது பரிசு: 500 யூரோக்கள்
விண்ணப்பங்கள் வந்துசேரவேண்டிய முகவரி:
A. Vigneswaran
7 Rue du Muguet
93000 Bobigny
France
விண்ணப்ப முடிவு திகதி:
15.03.2005
தொடர்புகளுக்கு:
தொலைபேசி எண்: 0033 609702382
0033 618450929
மின்னஞ்சல் முகவரி: nallurstainsfr@yahoo.fr
நன்றி ;- அப்பால் தமிழ்
|
|
|
| காதல்!விமர்சனம் |
|
Posted by: KULAKADDAN - 02-18-2005, 11:02 PM - Forum: சினிமா
- Replies (37)
|
 |
காதலை தீண்டாதஇ காதலின் கனவுச்சுவையை தராதஇ அதன் கற்பனை ஃபாண்டஸிக்கு வித்திடாத ஒரு தமிழ் சினிமா இருக்கமுடியாது. இத்தனை விதமாய் பேசப்பட்டும்இ காட்டப்பட்டும் இன்னும் அலுக்கவில்லை. இனியும் அலுக்கபோவதில்லை.
80 ஆண்டுகளுக்கு மேலாக வெற்றிகரமாய் இயங்கி கொண்டிருக்கும் தமிழ் சினிமாவின் ஒரு உன்னத சாதனை என்று ஒன்று உண்டெனில்இ அது காதலை சமூகத்தில் லெஜிடிமைஸ் செய்ததுதான். இன்னும் குடும்ப தளத்தில் காதல் முழுவதும் அங்கீகரிக்கபடவில்லை எனினும்இ சமூகத்தின் ஊடகங்கள்இ நிறுவனங்கள் அத்தனையிலும் காதல் அங்கீகரிக்கப்பட்ட ஒன்றாகவே இருக்கிறது. ஒரு நூற்றாண்டு காலத்தில் இது ஒரு பெரிய சமூக மாற்றமாகவே தெரிகிறது. இதற்கு மிக பெரிய உந்தும் சக்தியாய் தமிழ் சினிமா விளங்கி வருவதை மறுக்க முடியாது.
விஷயம் ஒன்றும் இல்லை. இணையத்திலிருந்து இறக்கி 'காதல்' படம் பார்தேன். வலைப்பதிவிலே பலரும் பாரட்டிவிட்ட படம். நண்பர் கார்திக் மட்டும் சில விமர்சனங்களை முன்வைத்திருந்தார். அதற்கு கடைசியில் வருகிறேன்.
எனக்கு என்னவோ இது சமீபத்திய தமிழ் திரைப்படங்களில் குறிப்பிட தகுந்ததாகவே தெரிகிறது. தமிழ் வெகுஜன சினிமாவின் வெளி அளிக்கும் சாத்தியங்களை மிக திறமையாய் பயன்படுத்திஇ மிக குறைந்த அளவு சொதப்பி எடுக்கப்பட்ட படமாகவே தெரிகிறது. முக்கியமான விஷயம் இப்படி ஒரு படம் ஹிட்டாவது. இது ஒரு ட்ரெண்ட் அமைத்து மேலும் இது போன்ற படங்கள் வெளிவர வழி வகுக்கும்.
கதை ஒரு உண்மை நிகழ்வை அடிப்படையாய் கொண்டதாகவும்இ ஒரு ரயில் பிரயாணத்தில் இந்த (தன்) கதையை சொன்ன மனித நேயம் மிக்கவரின் அனுமதியோடு படமாக்கப் பட்டதாகவும்இ படமுடிவில் எழுத்துக்கள் மேலே போகின்றன. இதையும் கதை புனைவின் ஒரு பகுதியாக கருதி வாசிக்க முடியும். அப்படி ஒரு வாசிப்பின் சாத்தியம் படம் பார்க்கும் அனைவருக்குமே இருக்கிறது என்பதை நினைவில் வைத்து கொள்ள வேண்டும். நம் மக்கள் "அப்படின்னு சொல்லுதான். எவனுக்கு தெரியும்! படம் ஓடணும்னு நேக்கா இப்படி சொல்லுதானே என்னவோ!" என்று தியேட்டரை விட்டு வெளியே வரும்போது பேசக்கூடும்.
உண்மையிலேயே உண்மை கதையின் அடிப்படையில் இருக்கும் பட்சத்தில்இ அச்சாக அதை அப்படியே எடுக்கவில்லை என்பது தெளிவு. அதற்கு பாராட்டவேண்டும் என்றுதான் எனக்கு தோன்றுகிறது. அச்சாக எடுத்திருந்தால் படம் இத்தனை பேரால் பார்க்கபட்டிருக்காது.
படத்தின் சிறப்பாக தெரிவது அதன் கச்சிதமான திரைக்கதைஇ மற்றும் யதார்த்தபடுத்துதல். சற்றும் தொய்வில்லாமல்இ எந்த இடத்திலும் அலுப்பு தராமல்இ தொடர்ந்து ஒரு ஆர்வத்தை தக்க வைத்துகொண்டே செல்லும் திரைக்கதை. எந்த கலைப்படைப்பினாலும் யதார்த்தத்தை அப்படியே படம் பிடிக்க இயலாது என்பது இன்று ஒப்புகொள்ளப்படும் உண்மை. முடிந்தவரை துல்லியமும்இ நம்பபகத்தன்மையை ஏற்படுத்துவதையுமே யாதார்த்தபடுத்துதல் என்கிறேன். அது சிறப்பாகவே செய்யபட்டிருப்பதாக தெரிகிறது. யதார்த்தமாய் எடுக்கிறேன் பேர்வழி என்று மாடு சாணி போடுவதையும்இ வைக்கோல் தின்பதையும்இ மனிதன் சாம்பார் சாதம் சாப்பிடுவதையும் நிமிடக்கணக்கில் காட்டும் இந்திய 'கலைப்படம்' போல் இல்லாமல்இ ஒரு வெகுஜன திரைப்படத்தின் சுவாரசியத்தையும். மேலோட்டத்தையும் தக்கவைத்தபடியே இதை செய்திருப்பதே தனித்தன்மை.
படத்தின் தொடக்கம் தமிழக எண்ணெய் பலகாரக்கடைஇ சர்வோதயா இலக்கிய பண்ணைஇ கோவில்இ சர்ச்இ மசூதி என்று மதுரைக்கு எளிதில் அழைத்து செல்ல படுகிறோம். படம் முழுக்க அப்படி ஒரு மிகை காட்டாதஇ சொதப்பாத ஒரு நடிப்பை அனைவரும் தந்திருக்கின்றனர். காதநாயகி நிஜமாகவே காதலிக்கிறார். உணர்ச்சி வசப்படுகிறார். அலைமோதுகிறார். காதலை பற்றியே எடுக்கப்பட்ட முழுநீள திரைப்படங்களில்இ 80களின் கதாநாயகிகள் காதலிக்கும் நடிப்பை ஒப்பிடும்போதுஇ எவ்வளவோ முன்னேறி வந்துவிட்டதாக தோன்றுகிறது. (அவர் அழகாய் இருப்பது நான் சொல்லி தெரியவேண்டியதில்லை.) இனிவரும் வருடங்களில் இவர் எப்படி எக்ஸ்ப்ளாயிட் பண்ண படுவார் என்று நினைக்க மட்டும் கொஞ்சம் கவலையாய் இருக்கிறது.
காதாநாயகன் இதைவிட இயல்பாய் நடித்திருக்கவே முடியாது. படத்தில் வரும் ஏனைய அனைவருமே அந்த பாத்திரத்தை மிகையின்றி உணர்விக்கின்றனர். மிக எளிதாக இவர்களை நடைமுறை வாழ்வில் சந்திக்கலாம் -"உங்க போதைக்கு நாங்க ஊறுகாயா?" என்று கேட்கும் சகமாணவியை ஒரு பஸ் நிலயத்தில் சந்திக்கமுடியும். கதாநாயகனின் அம்மாவின் முருகபக்தை வேடம் தமிழ் சினிமாவில் புதிது. கதாநாயகனின் அம்மாவென்று ஒரு 'ஷ்பெஷல்'தன்மை எதுவும் தராமல் ஒரு ஸபால்டர்ன் அம்மாவை காண்பித்திருக்கிறார்கள்.
தமிழில் எத்தனையோ படங்களில் கலக்கியது போல் இந்த படத்திலும் ஒரு சின்னபையன் வந்து கலக்குக்கிறார். புரியவே இல்லை. காஜா ஷெரீஃப்இ தவக்களை தொடங்கி இந்த உதாரணக்கள் எல்லாம் என்னவானார்கள்? இவரும் என்னவாவார் என்று தெரியவில்லை.
அப்பத்தா போன்ற அப்படியே உயிர்கொண்ட பாத்திரங்களை பாரதிராஜா படங்களில்தான் பார்க்கமுடியும். ஆனால் அவர் படத்தில் கதாநாயகிஃநாயகன் அசடு வழிவார்கள். சமீப கால திரைப்படங்களில் ஒரு டெரெண்டாக அமைந்துள்ள (திலி தமிழ்போல்) மதுரை தமிழ் அப்படியே எல்லோராலும் (க.நாயகஃநாயகி முதல் சீன் உட்பட) பேசப்பட்டாலும்இ திடிரெனெ கதாநாயகனின் தோழன் ஒரு கட்டத்தில் மட்டும் 'ஏலேஇ வாலே'யை மதுரை தமிழுடன் கலந்தடிக்கிறார். ஒருவேளை அவர் ராமநாதபுரம் பக்கத்திலிருந்து வந்ததாக உணர்துகிறார்களோ?
ஒரு சடங்கு நிகழ்ச்சி அத்தனை யதார்த்தங்களுடன் படமாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இது போன்ற வைபவங்களில் தவறாமல் நடைபெறும் சண்டையும் காண்பிக்கபடுகிறது. கதாநாயகியின் ஜாதியை குறிப்பால் உணர்த்திவிடுகிறார்கள். மற்றபடி கதை பெரிய விஷயமில்லை. இந்த சம்பவ கோர்வையை போட்டுஇ ஏற்கனவே சொல்லப்பட்ட சாதாரண கதையைஇ மனதை பாதிக்கும் விதமாய் எடுத்ததே படத்தின் சிறப்பு. படத்தை பார்த்த எவரும்-பொதுவாய் உணர்சிவசப்படும் தமிழ் சினிமா பார்க்கும் வெகுமனம்- ரொம்பவே பாதிப்புக்கு உள்ளாகியிருக்கும் என்று தோன்றுகிறது.
படத்தின் பல்வேறு சிறப்பை ஏற்கனவே பலர் எழுதியிருப்பதால் இத்தோடு ஜகா வாங்கிகொள்கிறேன். நான் பார்த்தது ஒரு இணணய காப்பி. இடையில் கொஞ்ச நேரம்இ இருட்டாகி ஒலிச்சித்திரமாய் கேட்க வேண்டியிருந்தது. மொத்தத்தில் தமிழ் சினிமா உலகில் உற்சாகத்தை அளிக்கும் படமாகவே என்னால் இதை பார்க்கமுடிகிறது. இனி கார்திக் முன்வைத்த குற்றசாட்டுகளுக்கு வருகிறேன்.
கதாநாயகனுக்கு புத்தியில்லாததாக சித்தரிக்கபட்டிருப்பதாக கார்திக்கை போல என்னால் வாசிக்க முடியவில்லை. ஆனால் கார்திக்கின் வாசிப்பை மறுக்கவும் வாதங்களில்லை. கதாநாயகன் வேறு வழியின்றியே நாதியற்ற தன் சென்னை தோழனை நாடி போகிறானே ஒழியஇ புத்திகுறைவினால் அல்ல என்று தோன்றுகிறது. அதே போல கிரிமினல் மூளையுடய சித்தப்பாவை நம்புவது பொதுவாய் (காதலிக்கும் ஒருவனுக்கு தேவையான) வெகுளித்தனமும்இ அப்பாவித்தனமுமே அன்றிஇ முட்டாள்தனமாய் எனக்கு தெரியவில்லை. இப்படி பார்ப்பது சரியா என்பதை விட படம் பார்த்து துய்க்க அது உதவும் என்று தோன்றுகிறது. துய்பது முக்கியமானது என்று நான் நினனக்கிறேன். அது தவிர கார்திக் நோண்டி பார்த்து சொல்லும் பல குறைகள்இ தமிழ் வெகுஜன சினிமாவை பற்றி பேசும்போது பெரிதுபடுத்த தேவையில்லாத விஷயங்களாக எனக்கு தோன்றுகிறது. அதனால் இரண்டு கருத்துக்களை அவர் சொல்வதில் முக்கியமாய் கருதி அதை மட்டும் எதிர்கொள்கிறேன்.
"இப்படம் காதல் என்பது பண்க்காரனுக்கும் ஏழைக்கும் வரவே கூடாது என்பது போல் தான் எடுக்கப்பட்டுள்ளது. அது நம் சமூகத்தில் பிச்சிகிட்டு ஓடி வெற்றி பெறுவதில் ஒன்றும் ஆச்சரியமில்லை."
முதலில் எந்த ஒரு கலைப்படைப்பும் ஒரு குறிப்பிட்ட நோக்கதுடன் எடுத்தாலும்இ அப்படி அது திகழ்வதாய் தெரிந்தாலும்இ அது நிறைவேறாது என்பது முக்கியமானது. நண்பர் ஒருவர் 50களில் வந்த ஒரு திரை விமர்சனத்தை பல வருடங்கள் முன்னால் காட்டினார். படம் பெயர் எதுவும் நினைவிலில்லை. அது இங்கே தேவையும் இல்லை. அந்த விமர்சனம் "மோசமான காட்சிகள் கொண்ட படம் என்றாலும்இ நல்ல கருத்துள்ள முடிவு" என்பதாக ஒரு தொனியுடன் நிறைவு பெறும். அதாவது படம் சற்று தூக்கலாக ஸெக்ஸ் காட்சிகள் கொண்டதுஇ ஆனால் படமுடிவில் கதாநாயகன் தனது 'லீலை'களுக்கு பாடம் கற்றுகொண்டு திருந்துவதாய் கதை இருக்கலாம்.
இப்போ விஷயம் என்னவெனில் படம் பார்க்கும் யாரும் இந்த நீதிபோதனைத்தனமான முடிவிற்காக பார்க்கபோவதில்லை. அதை கண்டுகொள்ளவே போவதில்லை. படம் பார்த்த கூட்டம் அத்தனையும் பாலியல் காட்சிகளுக்காக மட்டுமே படம் பார்த்திருக்கும். ஆக படத்தின் நோக்கம் என்று ஒன்றை சொல்லகூடும் என்றாலும்இ அது யாராலும் கண்டுகொள்ள போவதில்லை.
இதுவரை எடுக்கப்பட்ட காதல் படங்கள் பல காதல் தோல்வியை அடிப்படையாய் கொண்டாலும்இ அது காதலை போற்றுவதாகவும் காதல் குறித்த கற்பிதத்தை இன்னும் தீவிரமாக்கவுமே பயன்பட்டிருப்பதாய் தோன்றுகிறது. இது போன்ற படங்கள் மேலும் வர காதலிப்பவர்கள் இன்னும் அதிகமாக கூடுமே ஒழியஇ இது அவர்களை நம்பிகை இழக்க வைக்காது என்றே நினைக்கிறேன்.
"மேலும் சாதி விட்டு சாதி கல்யாணம் பற்றி கதை இருந்தும் கூடஇ அதை ஆதரிப்பது பற்றி ஒரு டயலாக் கூட இல்லாதது பாலாஜி சக்திவேலின் சமூகச் சிந்தனையின் அளவை தெரிந்து கொள்ள உதவுகிறது."
ஓரளவு நியாயமான விமர்சனம் என்றாலும்இ நம் வெகுஜன சினிமாவின் முக்கிய நோக்கம் படம் பிரச்சனையில்லாமல் ஒடுவதும்இ அதை ஹிட்டாக்குவதும் மட்டுமே. இதற்கு நடுவிலேயே மற்ற விஷயங்கள் பேசப்படும். அவைகள் எந்த வித தீவிரத்தன்மை அற்றதாய் இருப்பினும்இ இத்தகைய பிரம்மாண்டமான வெளியில் பிரச்சனை தொடப்படுவது முக்கியமானது.
இந்த படத்தில் ஜாதி குறித்த தகவலை முழுவதும் மறைத்து எடுத்திருக்க முடியும். ஆனால் அது சாமர்தியமாய் பேசப்படுகிறது. மெல்லியதாய் அந்த பிரச்சனையும் தொடப்படுகிறது என்பதே நல்ல விஷயம்தான். குறிப்பாய் ஒரு இடைநிலை ஆதிக்க ஜாதியின் (என்ன வென்று சொல்லவும் வேண்டுமோ) வெறி கோடிட்டு காட்டபடுகிறது. பொதுவாய் நிலப்பிரபுத்துவ ஜாதி அடையாளங்கள் மறைக்கப்பட்டு கிராம சினிமாக்கள் கூட எடுக்கப்படும் (அதில் தலித்தாக வாசிக்க கூடிய பாத்திரங்கள் கேவலப்படுத்த படும்) சூழலில்இ பாரதி கண்ணம்மா போன்ற (உண்மையில் தேவர் ஜாதிக்கு சார்பாக எடுக்கப்பட்ட ஒரு) திரைப்படத்தையே ஒடவிடாமல் செய்த பிறகும் இந்த அளவாவது பிரச்சனை தொடப்படுவது நல்லது என்றே தோன்றுகிறது.
'பாரதி கண்ணம்மா' திரைப்படத்தில் ஒரு தேவர் ஜாதி பெண்ணுடன் உறவு கொள்ளஇ தலித் ஆண் 'உடன்கட்டை' ஏறி சாகவேண்டி வந்தது. இந்த படத்தில் (தெளிவாக அடையாளங்கள் சொல்லபடவில்லை எனினும்) ஒரிரு நாள் சேர்ந்து வாழ்கிறார்கள். பார்போம்!
நன்றி....http://rozavasanth.blogspot.com
|
|
|
| மணப்பெண் பிடிக்கவில்லை மணமகன் ஓட்டம் |
|
Posted by: Vaanampaadi - 02-18-2005, 08:05 PM - Forum: செய்திகள்: உலகம்
- Replies (11)
|
 |
மணப்பெண் பிடிக்கவில்லை என தாலிகட்ட மறுத்து மணமகன் ஓட்டம்- தூத்துக்குடியில் இன்று காலை நடந்த பரபரப்பு சம்பவம்
<img src='http://www.dinakaran.com/daily/2005/Feb/18/flash/C1113_wed.jpg' border='0' alt='user posted image'>
மணமகன்- மணமகளை படத்தில் காணலாம்.
தூத்துக்குடி, பிப். 18- தூத்துக்குடி அருகே மணமகள் பிடிக்காததால் இன்று காலை திருமணம் நடைபெற இருந்த மணமகன் தாலிகட்ட மறுத்து ஓட்டம் பிடித்தார்.
தூத்துக்குடி தாளமுத்துநகர் பகுதி ஜாகிர்உசேன் நகரைச் சேர்ந்தவர் பரமசிவன். இவரது மகன் காளிராஜ; (வயது23), தச்சு வேலை செய்து வருகிறார்.
இவருக்கும் விளாத்திகுளம் பக்கம் உள்ள ராமச்சந்திராபுரத் தைச் சேர்ந்த முத்துஇளங்கோ என்பவாpன் மகள் புஷ்பவல்லி (வயது25) என்பவருக்கும் இன்று (வெள்ளி) காலை 6 மணியில் இருந்து 7 மணிக்குள் தூத்துக்குடி சிவன் கோவிலில் வைத்து திருமணம் செய்ய நிச்சயிக்கப் பட்டிருந்தது. இதற்காக பெண் வீட்டுக்குச் சென்று காளிராஜ; ஏற்கனவே பெண்ணை பார்த்து வந்ததாகவும் கூறப்படு கிறது. மேலும் 7 ஆயிரம் ரொக்கம் 7 பவுன் நகை மற்றும் மாப்பிள்ளைக்கு - பவுன் மோதிரம் எனவும் பேசி முடிக்கப்பட்ட தாம். இரு வீட்டாரும் திருமண ஏற்பாடுகளை ஜோராக செய்த னர். பத்திரிகைகள் அடித்து, உற வினர்களும் அழைக்கப்பட்டனர்.
இதையடுத்து இன்று காலை தூத்துக்குடி சிவன் கோவிலுக்கு காலையிலேயே மாப்பிள்ளை மற்றும் பெண் வீட்டாரும் வந்த னர். அனைத்து ஏற்பாடுகளும் செய்து மணவறையில் மாப் பிள்ளை இருக்க, தாலி கட்டுவதற் காக பெண்ணை அழைத்து வந்தார்களாம். அப்போதுதான் அந்த சங்கதி அங்கு நடந்தது.
பெண்ணைப் பார்த்ததும் மாப்பிள்ளை காளிராஜ; அதிர்ச்சி அடைந்தார். மணவறையை விட்டு எழுந்த அவர், ……இந்த பெண் எனக்கு வேண்டாம். என்னைவிட இவருக்கு வயது அதிகம் இருக்கும். எனக்கும் அவருக்கும் ஜோடிப்பொருத்தம் இல்லை. அவர் ரொம்ப பெரிய ஆளாக (பொம்பளைபோல்) தெரிகிறார். எனவே நான் தாலி கட்டமாட் டேன் என அங்கிருந்து ஓட முயன்றாராம். இருவீட்டாரும் மாப்பிள்ளையைப் பிடித்து எவ்வளவோ சமரசம் பேசியும் அவர் தாலிகட்ட மசியவில்லையாம்.
இந்த சம்பவம் தூத்துக்குடி வடபாகம் போலீசின் காதில் எட்டவே அவர்கள் விரைந்து வந்து விசாரித்தனர். அப்படியும் முடிவு கிடைக்கவில்லை. இதை யடுத்து தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல்நிலை யத்தில் ஒப்படைத்தனர். காதலை 9.30 மணி வரை மகளிர் போலீசில் பெரிய அதிகாரிகள் யாரும் இல்லாததால் அங்கு மணமகன் காளிராஜ், மணமகள் புஷ்பவல்லி குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் உறவினர்கள் மகளிர் காவல்நிலையத்தில் உள்ளனர்.
அங்குள்ள போலீசார் விசாரிக்கும் போது மணமகன் காளிராஜ; தனக்கு 17 வயது என்றும், அந்த பெண்ணுக்கு 25 வயது என்றும் கூறுகிறாராம். ஆனால் அவரது தந்தையோ என் மகன் வயது 23 என்று கூறுகிறாராம். எப்படி பார்க்க போனாலும் பெண்ணை விட மாப்பிள்ளை வயது குறைவு என்பதே உண்மை.
தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. பெரிய அதிகாரிகள் வந்த பின்னர்தான் இதன் முடிவு என்ன என்பது தெரியவரும்.
மணமேடை வரை வந்த பின்னர் மணப்பெண் பிடிக்க வில்லை என்று மணமகன் போரில் குதித்த இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பாக பேசப்படு கிறது.
Dinakaran
|
|
|
| நடிகர்-நடிகைகள் மரதன் ஓட்டம் |
|
Posted by: Vaanampaadi - 02-18-2005, 08:03 PM - Forum: சினிமா
- Replies (2)
|
 |
20-ந் தேதி நடிகர்-நடிகைகள் மராத்தான் ஓட்டம்
சென்னை பிப் 18- சென்னையில் நடிகர் நடிகைகள் பங்கேற்கும் மராத்தான் ஓட்டப்போட்டி 20-ந்தேதி நடக்கிறது.
சுனாமி நிதி திரட்டுவதற்காக நடிகர் நடிகைகள் பங்கேற்கும் மராத்தான் ஓட்டம் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. ……சென்னை மராத்தான் என்று அழைக்கப்படும் இந்த ஓட்டத்தை தமிழ்நாடு விளையாட்டு வளர்ச்சி துறையும், ரோட்டரி சங்கமும் இணைந்து நடத்துகிறது. இந்த ஓட்டத்தில் திரைப்பட நடிகர்கள் எஸ்.ஜே.சூர்யா, பிரபு, சிம்பு, ரிச்சர்ட், விஜய் ஆதிராஜ், அஜய் ரத்தினம், ரமேஷ் கிருஷ்ணா, நடிகைகள் குஷ்பு, அர்ச்சனா, மாளவிகா, ஸ்ரீதேவி, ரஞ்சிதா, உள்பட பலர் கலந்து கொள் கிறார்கள். இந்த ஓட்டத்தில் பங்கேற்க இதுவரை 2000-ம் பேர் விருப்பம் தெரிவித்துள்ளனர் என்று ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Dinakaran
|
|
|
| சிம்புவின் ஜோடிகள் |
|
Posted by: Vaanampaadi - 02-18-2005, 08:01 PM - Forum: சினிமா
- Replies (6)
|
 |
சிம்புவின் ஜோடிகள்: சந்தியா, ரீமா, நயனதாரா
'வல்லவன்' என்ற படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக 'காதல்' சந்தியா, ரீமா சென், நயனதாரா ஆகியோர் நடிக்கிறார்கள்.
சிம்பு கதை, திரைக்கதை எழுதி, மறைமுகமாக இயக்கிய மன்மதன் பெரும் வெற்றியைப் பெற்றதால் சிம்புவும் படபடவென முன்னணிக்கு வந்துவிட்டார். அவர் சொல்வதற்கெல்லாம் தலையாட்ட தயாரிப்பாளர்கள் காத்திருக்கிறார்கள்.
இதனால் மளமளவென புதிய படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார். முன்பே துவக்கப்பட்ட கலைப்புலி தாணுவின் தொட்டி ஜெயாவில் தற்போது கோபிகாவுடன் நடித்து வரும் சிம்பு அடுத்து எஸ்.ஜே. சூர்யாவின் படத்தில் ஆஷினுடன் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார்.
இதைத் தொடர்ந்து கமல்ஹாசனின் முன்னாள் மேனேஜர் பி.எல்.தேனப்பன் தயாரிக்கும் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
தனது திரையுலக இலக்கு குறித்து சிம்பு கூறுகையில்,
எனது அப்பாவின் வழியில் செல்ல ஆசைப்படுகிறேன். அவர் இதுவரை 22 படங்களை இயக்கியுள்ளார். அதில் 16 படங்கள் சில்வர் ஜூப்ளி கண்டன. மற்ற படங்கள் 100 நாட்கள் ஓடின. 35 படங்களுக்கு கதை, திரைக்கதை, வசனம், ஒளிப்பதிவு, இசை, பாடல்கள் என சகலத்தையும் அவரே செய்தார்.
இப்போது நானும் அந்தப் பாணியை பின்பற்றப் போகிறேன். இதுவரை 6 படங்களில் நடித்துள்ளேன். இதில் 4 படங்கள் 100 நாட்களைத் தாண்டி ஓடின.
மன்மதன் படத்திற்கு நான் கதை, திரைக்கதை எழுதியபோது பலர் கிண்டல் செய்தனர். அவற்றை முறியடித்து பெரிய வெற்றியை நான் பெற்றுள்ளேன். மன்மதன் மூலம் நான் சாதனை படைத்துள்ளேன். கோவையில் மட்டும் மன்மதன் ரூ. 1 கோடி வசூலைக் கொடுத்துள்ளது.
கலைப்புலி தாணு சாரின் தொட்டி ஜெயாவில் நடிக்கிறேன். அடுத்து தேனப்பன் தயாரிப்பில் நானே கதை, திரைக்கதை எழுதி நடிக்கப் போரிறேன். இதற்கு நான் இன்னும் பெயர் சூட்டவில்லை. அதைத் தொடர்ந்து எஸ்.ஜே. சூர்யாவின் ஏ.சி. படத்திலும் நான் நடிக்கவுள்ளேன் என்றார் சிம்பு.
ஏ.சி. படத்தில் சிம்புவுக்கு இரட்டை வேடம். ஏழுமலை, சிதம்பரம் என்று சிம்பு நடிக்கும் இரண்டு வேடங்களின் முதலெழுத்தைச் சேர்த்துதான் ஏ.சி. ஆக்கியுள்ளார் எஸ்.ஜே. சூர்யா.
மன்மதன் சென்டிமெண்டோ என்னவோ வல்லவன் என்ற படத்திலும் சிம்புவைச் சுற்றி ஏகப்பட்ட பெண்கள் வலம் வர இருக்கிறார்கள். இதில் சமீபத்திய ஹாட் கேக் ஆன சந்தியா, நயனதாரா தவிர ரீமா சென்னும் இருக்கிறார்.
மன்மதன் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக ஜோதிகா நடித்தபோது, ஜோடிப் பொருத்தம் சரியாக வருமா என்று கோலிவுட்டில் கேள்வி எழுந்தது. ஆனால் அதையும் மீறி படம் வெற்றி பெற்றது.
இந்த தைரியத்தால், மூத்த நடிகர்ளுடன் ஜோடி சேர்ந்து நடித்து வரும் ரீமா சென், நயனதாரா ஆகியோரையும் தனக்கு ஜோடியாக்கியுள்ளார் சிம்பு.
இதுவாவது பரவாயில்லை. தனக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராயை நடிக்க வைக்க சிம்பு முயற்சித்து வருகிறார் என்று கோடம்பாக்கத்தில் ஒரு பேச்சு அடிபடுகிறது.
பாலிவுட்டில் நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் ஐஸ்வர்யா ராய், அதையும் தாண்டி ஹாலிவுட்டிலும் தற்போது தடம் பதித்துள்ளார். அவரை தமிழுக்கு அழைத்து வர வேண்டுமானால் சம்பளத்தை கோடியில் கொடுத்தாக வேண்டும். இது தயாரிப்பாளரை யோசிக்க வைக்கும் விஷயம்.
ஆனால் ஐஸ்வர்யாவுடன் டூயட் பாடி விடவேண்டும் என்பதில் குறியாக இருக்கும் சிம்பு, அதற்காக தனது சம்பளத்தை கணிசமாக குறைக்கவும் முன்வந்துள்ளார். கூடிய சீக்கிரம் ஐஸ்வர்யா ராய் சிம்புவிற்கு ஜோடியாக நடிக்கிறார் என்று செய்தி வந்தால் ஆச்சரியப்படத் தேவையில்லை.
அவர்தான் ஏற்கனவே மந்த்ரா பேடி, யானா குப்தா ஆகியோரை தமிழுக்குக் கொண்டு வந்தவராயிற்றே!
இன்னொரு விஷயம் தெரியுமா? எஸ்ஜே சூர்யா நடித்து, இயக்கி வரும் பி.எப். படத்தில் சில காட்சிகளை சிம்பு இயக்கித் தந்தாராம். மன்மதன் மாதிரி சில ஹாட் சீன்களை சூர்யாவுகாக சூட் செய்து தந்திருக்கிறார் சிம்பு.
Thatstamil
படம் நீக்கப்பட்டுள்ளது --- யாழினி
|
|
|
|