![]() |
|
சிம்புவின் ஜோடிகள் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: சினிமா (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=39) +--- Thread: சிம்புவின் ஜோடிகள் (/showthread.php?tid=5164) |
சிம்புவின் ஜோடிகள் - Vaanampaadi - 02-18-2005 சிம்புவின் ஜோடிகள்: சந்தியா, ரீமா, நயனதாரா 'வல்லவன்' என்ற படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக 'காதல்' சந்தியா, ரீமா சென், நயனதாரா ஆகியோர் நடிக்கிறார்கள். சிம்பு கதை, திரைக்கதை எழுதி, மறைமுகமாக இயக்கிய மன்மதன் பெரும் வெற்றியைப் பெற்றதால் சிம்புவும் படபடவென முன்னணிக்கு வந்துவிட்டார். அவர் சொல்வதற்கெல்லாம் தலையாட்ட தயாரிப்பாளர்கள் காத்திருக்கிறார்கள். இதனால் மளமளவென புதிய படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார். முன்பே துவக்கப்பட்ட கலைப்புலி தாணுவின் தொட்டி ஜெயாவில் தற்போது கோபிகாவுடன் நடித்து வரும் சிம்பு அடுத்து எஸ்.ஜே. சூர்யாவின் படத்தில் ஆஷினுடன் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். இதைத் தொடர்ந்து கமல்ஹாசனின் முன்னாள் மேனேஜர் பி.எல்.தேனப்பன் தயாரிக்கும் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். தனது திரையுலக இலக்கு குறித்து சிம்பு கூறுகையில், எனது அப்பாவின் வழியில் செல்ல ஆசைப்படுகிறேன். அவர் இதுவரை 22 படங்களை இயக்கியுள்ளார். அதில் 16 படங்கள் சில்வர் ஜூப்ளி கண்டன. மற்ற படங்கள் 100 நாட்கள் ஓடின. 35 படங்களுக்கு கதை, திரைக்கதை, வசனம், ஒளிப்பதிவு, இசை, பாடல்கள் என சகலத்தையும் அவரே செய்தார். இப்போது நானும் அந்தப் பாணியை பின்பற்றப் போகிறேன். இதுவரை 6 படங்களில் நடித்துள்ளேன். இதில் 4 படங்கள் 100 நாட்களைத் தாண்டி ஓடின. மன்மதன் படத்திற்கு நான் கதை, திரைக்கதை எழுதியபோது பலர் கிண்டல் செய்தனர். அவற்றை முறியடித்து பெரிய வெற்றியை நான் பெற்றுள்ளேன். மன்மதன் மூலம் நான் சாதனை படைத்துள்ளேன். கோவையில் மட்டும் மன்மதன் ரூ. 1 கோடி வசூலைக் கொடுத்துள்ளது. கலைப்புலி தாணு சாரின் தொட்டி ஜெயாவில் நடிக்கிறேன். அடுத்து தேனப்பன் தயாரிப்பில் நானே கதை, திரைக்கதை எழுதி நடிக்கப் போரிறேன். இதற்கு நான் இன்னும் பெயர் சூட்டவில்லை. அதைத் தொடர்ந்து எஸ்.ஜே. சூர்யாவின் ஏ.சி. படத்திலும் நான் நடிக்கவுள்ளேன் என்றார் சிம்பு. ஏ.சி. படத்தில் சிம்புவுக்கு இரட்டை வேடம். ஏழுமலை, சிதம்பரம் என்று சிம்பு நடிக்கும் இரண்டு வேடங்களின் முதலெழுத்தைச் சேர்த்துதான் ஏ.சி. ஆக்கியுள்ளார் எஸ்.ஜே. சூர்யா. மன்மதன் சென்டிமெண்டோ என்னவோ வல்லவன் என்ற படத்திலும் சிம்புவைச் சுற்றி ஏகப்பட்ட பெண்கள் வலம் வர இருக்கிறார்கள். இதில் சமீபத்திய ஹாட் கேக் ஆன சந்தியா, நயனதாரா தவிர ரீமா சென்னும் இருக்கிறார். மன்மதன் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக ஜோதிகா நடித்தபோது, ஜோடிப் பொருத்தம் சரியாக வருமா என்று கோலிவுட்டில் கேள்வி எழுந்தது. ஆனால் அதையும் மீறி படம் வெற்றி பெற்றது. இந்த தைரியத்தால், மூத்த நடிகர்ளுடன் ஜோடி சேர்ந்து நடித்து வரும் ரீமா சென், நயனதாரா ஆகியோரையும் தனக்கு ஜோடியாக்கியுள்ளார் சிம்பு. இதுவாவது பரவாயில்லை. தனக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராயை நடிக்க வைக்க சிம்பு முயற்சித்து வருகிறார் என்று கோடம்பாக்கத்தில் ஒரு பேச்சு அடிபடுகிறது. பாலிவுட்டில் நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் ஐஸ்வர்யா ராய், அதையும் தாண்டி ஹாலிவுட்டிலும் தற்போது தடம் பதித்துள்ளார். அவரை தமிழுக்கு அழைத்து வர வேண்டுமானால் சம்பளத்தை கோடியில் கொடுத்தாக வேண்டும். இது தயாரிப்பாளரை யோசிக்க வைக்கும் விஷயம். ஆனால் ஐஸ்வர்யாவுடன் டூயட் பாடி விடவேண்டும் என்பதில் குறியாக இருக்கும் சிம்பு, அதற்காக தனது சம்பளத்தை கணிசமாக குறைக்கவும் முன்வந்துள்ளார். கூடிய சீக்கிரம் ஐஸ்வர்யா ராய் சிம்புவிற்கு ஜோடியாக நடிக்கிறார் என்று செய்தி வந்தால் ஆச்சரியப்படத் தேவையில்லை. அவர்தான் ஏற்கனவே மந்த்ரா பேடி, யானா குப்தா ஆகியோரை தமிழுக்குக் கொண்டு வந்தவராயிற்றே! இன்னொரு விஷயம் தெரியுமா? எஸ்ஜே சூர்யா நடித்து, இயக்கி வரும் பி.எப். படத்தில் சில காட்சிகளை சிம்பு இயக்கித் தந்தாராம். மன்மதன் மாதிரி சில ஹாட் சீன்களை சூர்யாவுகாக சூட் செய்து தந்திருக்கிறார் சிம்பு. Thatstamil படம் நீக்கப்பட்டுள்ளது --- யாழினி - KULAKADDAN - 02-18-2005 அப்ப மன்மதன் தான் .... ஆம இங்கை கொஞ்சபேருக்கு வயிறெரியுமே..... :mrgreen: - sinnappu - 02-18-2005 :wink: :wink: :wink: :wink: :wink: ஒரு டைம் இல சின்னப்பர் செய்தது இப்ப பெடி செய்யிது ம்ம் நடக்கட்டும் :wink: :wink: :wink: :wink: - KULAKADDAN - 02-18-2005 ஆச்சியும் நிக்கிறாவேணை கவனம்....ஆ - tamilini - 02-18-2005 Quote:அப்ப மன்மதன் தான் ....உங்களுக்குமோ..?ஃ :x <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- KULAKADDAN - 02-18-2005 எனக்கோ.....எதுக்கு.......நமக்கு தான் உந்த சகவாசமே வேண்டமெண்டச்சு பிறகென்ன................ <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- tamilini - 02-18-2005 <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :wink: |