| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 415 online users. » 0 Member(s) | 412 Guest(s) Applebot, Bing, Google
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,433
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,286
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,641
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,312
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,676
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,237
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,476
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,549
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,047
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,243
|
|
|
| இந்திய சோதிடருக்கு நீதிமன்றம் அழைப்பாணை |
|
Posted by: Vaanampaadi - 02-19-2005, 06:48 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- No Replies
|
 |
இந்திய சோதிடருக்கு நீதிமன்றம் அழைப்பாணை
சனிக்கிழமை 19 பெப்ரவரி 2005 நடேசன்
சாத்திரம் கூறுவதாக பெண்களுடன் தகாத முறையில் நடந்துகொண்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள இந்திய சோதிடர் கிஷோர் சாஸ்திரி என்பவரை எதிர்வரும் மார்ச் 9 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் அழைப்பாணை பிறப்பித்துள்ளது. இவர் கொழும்பில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்து பத்திரிகைகளில் விளம்பரம் செய்து சாத்திரம் கூறிவந்தார். இவருக்கு எதிராக கிடைத்த முறைப்பாடுகளையடுத்து கொம்பனி வீதி பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் இவரிடம் சாத்திரம் கேட்க சாதாரண உடையில் சென்றிருந்தார். அப்போது அவர் அப்பெண் பொலிஸ் கான்ஸ்டபிளுடன் முறைகேடாக நடக்க முயலவே அப்பெண் அங்கிருந்து வெளியே வந்து நடந்தவற்றை பொலிஸாருக்கு தெரிவித்தார். இதனையடுத்து இந்த இந்திய சோதிடர் கைது செய்யப்பட்டு கோட்டை நீதிவான் முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார். பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
இந்த சோதிடர் பூசை செய்வதற்கு 25 ஆயிரம் ரூபா வரை சிலரிடம் வாங்கியதாகவும் முறையிடப்பட்டுள்ளது.
Source : http://www.nitharsanam.com/?art=8897
|
|
|
| மன்னார் Bishop புலிகளுக்கு கடிதம் |
|
Posted by: Vaanampaadi - 02-19-2005, 06:47 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (1)
|
 |
விடத்தல்தீவுக்கு அருகாமையில் உள்ள கடலில் மீன்பிடி படகுகள் மீது கடற்புலிகள துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதில் மன்னார் பள்ளிமுனை மீனவர்களின் படகுகள் சேதமடைந்தன. இதனையடுத்து ஆத்திரமடைந்த மீனவர்கள் புலிகளின் மன்னார் அரசியல் துறை தலைமை அலுவலகத்தை அடித்து நொருக்கியுள்ளனர். இது சம்பந்தமாக மன்னார் பிஷப். ராயப்பு ஜோசப் இன்று விடுதலைப் புலிகளுக்கு கடிதம் எழுதி...இப்பிரச்சினையை பேச்சுவார்த்தை மூலம் சுமூகமாக தீர்க்கும்படி கேட்கப்பட்டுள்ளது.............
Mannar Bishop writes to LTTE over shooting at sea
[TamilNet, February 19, 2005 13:24 GMT]
Mannar Bishop, Rt. Rev. Rayappu Joseph, wrote to the Liberation Tigers Saturday regarding the incident at sea near Vidathaltheevu in which armed persons believed to be Sea Tigers fired on the boats of fishermen from Pallimunai, a coastal suburb of Mannar town, damaging the boats. Angered by the incident, a group fishermen from Pallimunai attacked and damaged the LTTE's political office in Mannar town Friday.
Federation of Mannar Fisheries Societies and Tamil National Alliance MP for Vanni, Mr. Selvam Adaikalanathan discussed the issue with Pallimunai fishermen and reached a consensus that steps should be taken forthwith to resolve the dispute through a dialogue with the LTTE.
Pallimunai fishermen said that they strongly objected to the sea Tigers firing on their boats and damaging their engines.
The sea Tigers had fired on Pallimunai boats in a bid to stop the fishermen from dynamiting fish in the seas off Vidathaltheevu, according to sources close to the LTTE in Mannar.
A decision was taken at a meeting held Pallimunai St. Lucias Cathedral Friday on the instruction of the Bishop of Mannar to take up the matter with the LTTE.
Mannar Bishop wrote to Mr. S.P Thamilchelvan Saturday seeking an early appointment to discuss and resolve the problem.
Mannar Bishop called an urgent meeting following the attack on the LTTE office Friday with representatives of Vidathaltheivu and Pallimunai fisheries societies. It was decided at the meeting that representatives of Pallimunai and Vidathaltheivu fisheries societies should visit Killinochchi and meet the Sea Tigers and political leaders of the LTTE to find an amicable settlement to the dispute.
Tamilnet.com
|
|
|
| இந்திய திருமகள் இலங்கையின் மருமகள் |
|
Posted by: Vaanampaadi - 02-19-2005, 12:29 PM - Forum: செய்திகள்: உலகம்
- No Replies
|
 |
<img src='http://www.dailythanthi.com/magazines/IMAGES/GIF/Sm/Hd1.jpg' border='0' alt='user posted image'>
இலங்கை கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் முரளிதரனை கரம்பிடிக்கப் போகும் சென்னைப் பெண் மலர்மதியின் வீடு இப்போதே களைகட்டிவிட்டது.
கல்யாணப் பத்திரிகையின் முதல் பிரதியை திருப்பதி கோவிலில் வைத்து விட்டு உள்ளூரில் பத்திரிகை வைப்பதிலும் பிசியாகிவிட்டார்கள். (மதிமலருக்கும் முரளிதரனுக்கும் அடுத்தமாதம் (மார்ச்) 21-ந்தேதி சென்னையில் திருமணம். இவர்களது திருமணம் பெற்றோரே பார்த்து ராஜா அண்ணாமலைபுரத்தில் தாயார் நித்யா, தங்கை திவ்யாமலருடன் வசிக்கும் மதிமலரை நாம் கடந்தவாரம் பேட்டி காணச் சென்றபோது, குங்குமப் பூ நிறத்தில் சுரிதார் அணிந்திருந்தார். கூடவே மணப்பெண்ணுக்கே உரிய நாணம்.
மதிமலர் எம்.பி.ஏ படித்தவர், ஒரு ஆஸ்பத்திரியின் இயக்குனர் (மலர் மருத்துவமனை) என்பதால் பேச்சில் மிகமென்மையான அணுகுமுறை. கேள்விகளுக்கு நன்கு யோசித்து பதில் அளிக்கிறார்.
<img src='http://www.dailythanthi.com/magazines/IMAGES/GIF/Sm/cricket.jpg' border='0' alt='user posted image'>
உங்கள் குடும்பமே டாக்டர் குடும்பமாக இருக்க நீங்கள் எம்.பி.ஏ. படிப்பை தேர்வுசெய்தது ஏன்?
"எல்லோருமே டாக்டர்கள் என்றால் ஆஸ்பத்திரியை நிர்வகித்துக் கொள்ள யாராவது ஒருவர் வேண்டுமே? அதனால் எம்.பி.ஏ படிக்கவேண்டும் என்று தீர்மானித்துத் தான் படித்தேன்."
உங்கள் கணவராக வருபவர் எப்படியிருக்கவேண்டும் என்று நீங்கள் கற்பனை செய்ததுண்டா? அந்தக் கற்பனைக்கேற்ப முரளிதரன் இருக்கிறாரா?
"எனக்கு கணவராக வருகிறவர், கடினமாக உழைப்பவராக இருக்கவேண்டும். சொந்தக் காலில் நிற்பவராக இருக்கவேண்டும் என்பதை விரும்பினேன். முரளிதரன் கடினமான உழைப்பாளிதான் என்பதை நான் சொல்லித் தெரியவேண்டியதில்லை. ஏனென்றால் பந்து வீச்சில் உலக சாதனை படைத்தவர், அவர். அதற்காக எவ்வளவு தூரம் தன்னை அர்ப்பணித்து இருப்பார் என்பதை அவரது சாதனைகளைப் பார்த்தே தெரிந்து கொள்ள முடியும். 532 விக்கெட்டுகள் என்பது சாதாரண விஷயம் அல்ல. அறுவை சிகிச்சை செய்து கொண்டதால் அவரால் கடந்த 6 மாதங்களாக விளையாட முடியவில்லை. இல்லையென்றால் ஷேன் வார்னே நெருங்க முடியாத அளவிற்கு நிச்சயம் அவர் சாதனை படைத்திருப்பார். இப்போதும் கூட காலம் கடந்து விடவில்லை. அவர் மீண்டும் களமிறங்கும்போது விரைவிலேயே வார்னேயின் உலக சாதனையை (566 விக்கெட்டுகள்) முறியடித்து விடுவார்."
பிரபல கிரிக்கெட் வீரரை கல்யாணம் செய்வதால் பொது மக்களுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு குறைந்து விடும் என்று எண்ணுகிறீர்களா?
"அவருடன் திருமணம் என்றதும் மிகப் பெரிய அளவில் விளம்பரம் கிடைத்தது உண்மை. இன்னும் சிறிது நாளில் இந்த பரபரப்பு அடங்கி விடும். தவிர திருமணத்திற்குப் பின்னர் எல்லோரது பார்வையும் அவரை நோக்கித்தான் இருக்கும். இவரோட மனைவிதான் இவர் என்ற பெயர் மட்டும் தான் எனக்கிருக்கும். மற்றபடி பொது இடங்களுக்குச் செல்லும் போது எந்தவித பாதிப்பும் ஏற்படாது."
உங்களுக்கு கிரிக்கெட் பார்க்கும் ஆர்வம் உண்டா?
"உலகக் கோப்பை போன்ற முக்கியமான போட்டிகள் நடந்தால் அதை டி.வியில் பார்ப்பதுண்டு. மற்றபடி எனக்கு கிரிக்கெட் மோகம் இல்லை. ஆனால் அப்பாவிற்கு கிரிக்கெட் என்றால் ரொம்பப் பிடிக்கும். இந்திய அணி எங்கு கிரிக்கெட் விளையாடினாலும் போய் பார்த்து விடுவார். கிரிக்கெட் பார்ப்பதற்காக நிïசிலாந்து, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து...என்று போகாத நாடுகள் கிடையாது.
அவருக்கு அவ்வளவு மோகம். அப்பா இப்போது இருந்திருந்தால் கிரிக்கெட் வீரர் ஒருவரையே நான் கல்யாணம் செய்யப் போவதை நினைத்து நிச்சயம் வெகுவாக சந்தோஷப்பட்டிருப்பார்."
உண்மையைச் சொல்லுங்கள் உங்களுக்குப் பிடித்த கிரிக்கெட் வீரர் யார்?
"பொதுவாகவே எந்த வீரரையும் குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. நல்ல ஆட்டத்தை யார் ஆடினாலும் ரசிப்பேன்.
இப்போது பிடித்தமான வீரர் என்று கேட்டால் முரளிதரன் தான்."
கிரிக்கெட் வீரர்கள் என்றால் வருடத்தில் 6 மாதங்கள் உள் நாட்டிலும் மீதி 6 மாதங்கள் வெளிநாடுகளிலும் விளையாடப் போய் விடுவார்களே?
"வெளிநாடுகளுக்கு மனைவியை அழைத்துச் செல்ல சில நேரங்களில் அனுமதிக்கிறார்கள். அப்படியான நேரங்களில் அவருடன் வெளிநாடுகளுக்குப் போவேன். மற்ற நேரங்களில் வீட்டிலேயே இருந்து குடும்பத்தைக் கவனித்துக் கொள்வேன்."
<img src='http://www.dailythanthi.com/magazines/IMAGES/GIF/Sm/malar2.jpg' border='0' alt='user posted image'>
உங்களிடம் உங்களுக்குப் பிடித்த குணம்?
"எதையாவது ஒன்றைச் செய்து முடிக்கவேண்டும் என்று தீர்மானித்து விட்டால் அதை எப்பாடு பட்டாவது முடிக்காமல் விடமாட்டேன். முதலில் அந்த வேலையை முடித்து விட்டுத்தான் மற்றவை என்ற உறுதியோடு செயலாற்றுவேன்.
எப்படியும் இருக்கலாம் என்பது எனக்குப் பிடிக்காத விஷயம். இப்படித் தான் இருக்கவேண்டும் என்று ஒரு கட்டுக்கோப்பாக இருப்பேன். அது அப்பாவும் அம்மாவும் எனக்கு கற்றுத் தந்த நல்ல பாடம். அப்பா பிள்ளையார் பட்டிக்கு அருகே பாதரக்குடி என்னும் குக்கிராமத்தில் பிறந்து மதுரையில் படித்து துபாய்க்குச் சென்று பின்னர் சென்னைக்கு திரும்பி கடுமையான போராட்டத்திற்கிடையே மருத்துவமனையைத் துவக்கினார். அதே போன்றுதான் அம்மாவும் கடுமையான போராட்டக்காரர். அப்பா இறந்தவுடன் இனி அவ்வளவுதான் அம்மாவால் ஆஸ்பத்திரியை நடத்த முடியாது என்று பலரும் சந்தேகப்பட்டனர். ஆனால் அம்மாவோ விரைவிலேயே சோகத்திலிருந்து விடுபட்டு ஆஸ்பத்திரியை திறம்பட நடத்தி வருகிறார். அவர் அப்பாவுக்கு முதுகெலும்பாகத் திகழ்ந்ததால்தான் இதையெல்லாம் சாதிக்க முடிந்தது."
பிடிக்காத விஷயம்?
"சட்டென்று கோபப்படுவது. நினைத்தது நடக்கவில்லை என்றால் உடனடியாக கோபம் வந்து விடும். ஆனால் அதுவும் கூட சிறிது நேரத்தில் மறந்து விடும். எதனால் அது நடக்காமல் போனது, அடுத்த முறை எப்படி சரியாகப் பயன்படுத்திக் கொள்வது என்று தோல்வியில் இருந்து பாடமும் கற்றுக் கொள்வேன்."
உங்களுக்கு முரளிதரனிடம் பிடித்த குணம்?
"அவரது எளிமை, உதவும் குணம். சுனாமி தாக்கிய அன்று நாங்கள் இலங்கையில் இருந்தோம். அப்போதுதான் அவரது மனிதாபிமானத்தைத் தெரிந்து கொள்ளும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. சுனாமி தாக்கிய சிறிது நேரத்தில் பாதிப்பின் கொடூரத்தை உணர்ந்து அவர் யார், யாருக்கோ போன் செய்தார். அடுத்த ஒரு மணி நேரத்தில் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மக்களுக்கு உணவு கிடைக்கச் செய்தார்.
தவிர அதோடு நிறுத்திக் கொள்ளாமல் நேரடியாகவே மக்களிடம் சென்று அவர்களது துயரத்தில் அவர் பங்கேற்றதை என்னால் மறக்க முடியாது." (முத்தையா முரளீதரன் 210 டன் அரிசியை பாதிக்கப்பட்ட மக்களுக்காக வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது)
சின்ன வயதில் ஏதாவது தமாஷ் சம்பவம்?
"நானும் மூத்த சகோதரி ரதி மலரும் இரட்டையர்கள். உருவத்தில் கூட அச்சு வார்த்த மாதிரி இருப்போம். இந்த உருவ ஒற்றுமையால் நாங்கள் இருவரும் படித்த அடையாறு ரோசரி மெட்ரிக்குலேஷன் பள்ளியில் நிறையவே குழப்பங்கள் உருவாகும்.
தவிர எங்களின் குரலும் ஒரே மாதிரியாக இருக்கும்.
இதனால் இன்னும் குழம்புவார்கள்.
ஹோம் ஒர்க் செய்யும் போது என் கையெழுத்து சரிவர இருக்காது. இதனால் வகுப்பாசிரியை என்னைக் கண்டிப்பதற்கு பதிலாக ரதி மலரைக் கண்டிப்பார். இது போல் அவள் செய்யும் சின்னத் தவறுகளுக்கு என்னைக் கண்டிப்பார்கள். இப்படி அடிக்கடி நடந்ததால் எங்கள் இருவரில் யார் ரதிமலர், யார் மதிமலர் என்பதை சுலபமாக அடையாளம் காண்பதற்கு இருவரும் அவரவர் பெயர் பொறித்த பேட்சை அணிய நேரிட்டது. இப்படி 5-ம் வகுப்பு வரை இருவரும் பேட்ச் அணிந்தோம்.
இப்போதும் கூட எங்கள் இருவரது குரலும் ஒரேமாதிரியாகத்தான் இருக்கும்.
இலங்கையில் அவரது குடும்பத்தினருடன் பேசினால் யார் ரதிமலர், மதிமலர் என்று அவர்களும் திண்டாடிப் போவார்கள். முரளியே பல தடவை இப்படி குரலை அடையாளம் காணமுடியாமல் திண்டாடி இருக்கிறார். நாங்களும் இப்படி சில நேரம் அவருடன் கண்ணாமூச்சி விளையாடுவோம்."
உங்களுக்குச் சமைக்கத் தெரியுமா?
"சமைக்கவும் தெரியும் நன்கு சாப்பிடவும் தெரியும். செட்டிநாடு அசைவ உணவுகள் என்றால் ரொம்ப இஷ்டம். நன்றாக சமைப்பேன். சைனீஷ் உணவுகளும் பிடிக்கும். ஆனால் அதை தயாரிக்கத் தெரியாது. "(மதிமலர் திருமணத்திற்கு பிறகு கணவரோடு இலங்கையில் குடியேறிவிடுவார்)
இலங்கையில் குடியேறுவதால் உங்கள் உணவுப் பழக்க வழக்கம் மாறிவிடுமே?..
"நமது தென்னிந்தியச் சமையலும் அவர்களது சமையலும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாகத்தான் இருக்கின்றன. எனவே எவ்வித பிரச்சினையும் இதில் ஏற்படாது."
<img src='http://www.dailythanthi.com/magazines/IMAGES/GIF/Sm/malar.jpg' border='0' alt='user posted image'> அம்மா நித்யா ராமமூர்த்தியுடன்...
கல்லூரியில் படித்தபோது கட் அடித்து விட்டு சினிமா பார்த்த அனுபவம் உண்டா?
"உண்டு. வகுப்பு செம போர் என்றால் நிச்சயம் கட் அடித்து விடுவோம். பக்கத்திலேயேதான் தியேட்டர். தோழிகளுடன் போய் படம் பார்ப்போம். ஆனால் வகுப்பை கட் அடித்தது பற்றி அம்மாவிடம் சொல்லிவிட்டுத்தான் படத்துக்குப் போவேன். அம்மாவிடம் எதையும் நான் மறைத்தது கிடையாது. ஆனால் எம்.பி.ஏ படித்தபோது வகுப்புகளை கட் அடித்தது இல்லை."
படிப்பில் எப்படி?
"சத்யபாமா நிகர் நிலை பல்கலைக் கழகத்தில் எம்.பி.ஏ படித்தபோது கல்லூரியிலேயே முதல் மாணவியாக வந்து தங்கப்பதக்கம் பெற்றிருக்கிறேன்."
யாருடைய சினிமா படங்கள் பிடிக்கும்?
"குறிப்பிட்ட எந்த நடிகரையும் எனக்குப்பிடிக்காது. தமிழில் காமெடிப் படங்கள் என்றால் விரும்பிப்பார்ப்பேன். தமிழ் ஆக்ஷன் படங்கள் பிடிக்காது. அந்தமாதிரிச் சண்டைப் படங்களைப் பார்த்தால் வேடிக்கையாகத்தான் இருக்கும். ஆங்கில ஆக்ஷன் படங்களை விரும்பிப் பார்ப்பேன்."
முரளிதரன் குடும்பத்தாருடன் நெருங்கிப் பழகிவிட்டீர்களா?...
"நிச்சயதார்த்தத்திற்கு பின் இலங்கைக்கு நானும் என் அம்மாவும் போய் நான்கு நாட்கள் தங்கியிருந்தோம். பச்சை பசேர் மரங்கள், அழகிய கடற்கரை என்று அந்தச் சூழல் எனக்கு ரொம்பவே பிடித்துப் போனது.
அவர்கள் குடும்பத்தினர் மிகவும் அன்பாகப் பழகி நெருங்கி விட்டார்கள். முரளிதரனுடன் பிறந்த மூவருமே சகோதரர்கள்தான். பெண் பிள்ளைகள் யாரும் கிடையாது. அதனால் குடும்பத்தின் மூத்த மகள் போல் என்னைக் கனிவுடன் கவனித்துக் கொண்டார்கள்."
முரளிதரன் உங்களுக்கு வைர மோதிரம் போட்டிருக்கிறார். நீங்கள் அவருக்கு கல்யாணப் பரிசாக என்ன கொடுக்கப் போகிறீர்கள்?
(சற்று நாணத்துடன்) "விலையுயர்ந்த கைக்கெடிகாரம் ஒன்றை வாங்கி வைத்திருக்கிறேன்."
அதென்ன ரதிமலர், மதிமலர் பெயர் புதுமையாக இருக்கிறதே?
"எங்கள் வீட்டில் இன்னொரு மலரும் உண்டு. அவர் திவ்யா மலர். எங்களின் இளைய சகோதரி.
அம்மாவை மலேசியாவில் முதல் பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதித் திருக்கிறார்கள். இங்கே அப்பா (ராமமூர்த்தி) பிரசவம் நல்லபடியாக நடந்தேறவேண்டி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் அர்ச்சனை செய்திருக்கிறார். அப்போது அர்ச்சகர் தந்த தட்டில் இரண்டு மலர்கள் இருந்திருக்கின்றன. அந்த நேரத்தில்தான் அம்மா எங்களையும் பெற்றெடுத்திருக்கிறார். அதனால் தெய்வம் தந்த வரப்பிரசாதமாக நினைத்து மலர் என்ற பெயரையே எங்களுக்குச் சூட்டிவிட்டார். எங்களுக்குப் பின் பிறந்த சகோதரிக்கும் திவ்யா மலர் என்று பெயர் சூட்டினார்கள்."
மதி மலரின் மூத்த சகோதரி ரதி மலர் டாக்டருக்குப் படித்தவர். (ரதி மலரின் கணவர் ஆனந்த்தும் டாக்டர்தான்.) இளைய சகோதரி திவ்யா மலர் சத்யபாமா என்ஜினீயரிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு பி.டெக் மாணவி. இவர்களின் தாயார் நித்யாவும் டாக்டர். மலர் மருத்துவமனையின் நிர்வாக இயக்குனராக இருக்கிறார்.
Dailythanthi
|
|
|
| மரவள்ளி கிழங்கு பொரியல் [சரியான பெயர் தெரியவில்லை] |
|
Posted by: KULAKADDAN - 02-19-2005, 11:57 AM - Forum: சமையல்
- Replies (24)
|
 |
மரவள்ளி கிழங்கு பொரியல் [சரியான பெயர் தெரியவில்லை]
1. மரவள்ளி கிழங்கை தோல் நீக்கி..சுத்தம் செய்து...
2-3 அங்குல நீள துண்டுகளாக வெட்டி
அளவுக்கு உப்பிட்டு அவித்தெடுக்கவும்.....
2. தாய்ச்சியில் எண்ணெய் விட்டு அவித்த மரவள்ளி கிழங்கு
துண்டுகளை [பெரிய துண்டுகளாகவே...] பொரித்தெடுக்கவும்.
3. இதை மென் சுட்டுடன்....அருவல் நொருவலாக
செத்தல் மிளகாய்...வெங்காயம் தேசி புளி /வினாகிரி சேர்த்து தயாரித்த கட்டு சம்பல் போன்ற ஒன்றுடன் [நல்ல சுவையாக இருக்கும்]
அல்லது ஆட்டு /மாட்டு குடலில் தயாரித்த குழம்புடன் பரிமாறுவார்கள்....
[சுவை தெரியவில்லை...]
|
|
|
| கொள்ளையடித்த பணத்தில் பங்களா கட்டி சொகுசு வாழ்க்கை |
|
Posted by: Vaanampaadi - 02-19-2005, 11:47 AM - Forum: செய்திகள்: உலகம்
- No Replies
|
 |
<img src='http://www.dailythanthi.com/images/news/20050219/police.jpg' border='0' alt='user posted image'>கொள்ளையடித்த பணத்தில் பங்களா கட்டி சொகுசு வாழ்க்கை
15 ஆண்டுகள் கலக்கிய லட்சாதிபதி கொள்ளையன் கைது
பரபரப்பு வாக்குமூலம்
சென்னை, பிப். 19-
தமிழகத்தை 15 ஆண்டு களாக கலக்கி வந்த லட் சாதிபதி கொள்ளையன் சென்னையில் கைது செய் யப்பட்டான்.
வித்தியாசமான கொள்ளையன்
துப்பாக்கி, அரிவாள், வெடி குண்டுகளை வீசி, ரத்தக் களறியை உண்டாக்கி நகை, பணத்தை கொள்ளை அடித்து கொள்ளையர்கள் பவனி வரும் இந்த நேரத் தில், கத்தி, துப்பாக்கி, வெடிகுண்டு போன்ற எந்த விதமான பயங்கர ஆயுதங்களும் இல்லாமல் ரத்தக்களறி உண் டாக்காமல் ஒரு வித்தியாசமான கொள்ளையன் கடந்த 15 ஆண்டு களாக தமிழகம் முழுவதும் வலம் வந்து கொள்ளை தொழிலையும் கன, கச்சிதமாக செய்துள்ளான்.
இன்று அவன் பிரபலமான லட்சாதிபதி. சொந்தமாக பங் களா வீடு. வீட்டு முன்பு விநா யகர் கோவில். அவன் வசிக்கும் இடத்தில் ஏழை மக்களுக்கு பணத்தை வாரி வழங்கும் வள்ள லாக, அவனை மக்கள் போற்று கிறார்கள். திருமண வீட்டுக்கும், துக்க வீட்டுக்கும், இவன் தான் முதல் ஆளாக நிற்பான்.
ஓசையில்லாமல் கொள்ளைத் தொழிலை செய்து கொண்டு, வெளி உலகத்தில் லாரி அதிப ராக, வட்டிக்கு கடன்கொடுக் கும் பைனான்சியராக வாழும் இந்த கொள்ளையன் சென் னைக்கு அருகாமையில் உள்ள திருவேற்காடு எம்.ஆர்.நகரில் தான் வசிக்கிறான்.
ரூ.50 லட்சம் கொள்ளை
இந்த கொள்ளைக்காரனின் பெயர் ராதாகிருஷ்ணன் (வயது 36). 89-ம் ஆண்டில் கொள் ளைத் தொழிலில் குதித்து, இரண்டு முறை ஜெயிலுக்குப் போய், அதன் பிறகு 91-ம் ஆண்டிலிருந்து சுமார் 14 ஆண்டுகள் போலீஸ் கையில் மாட்டாமல் கொள்ளைத் தொழிலில் ராதாகிருஷ்ணன் கொடி கட்டி பறந்தான். இது வரை 26 வழக்குகளில் சுமார் 30 வீடுகளில் திருடி இருக்கிறான்.
திருடிய நகைகளின் மதிப்பு ரூ.50 லட்சம் இருக்கும். கொள் ளைத் தொழிலில் சம்பாதித்த பணத்தில் திருவேற்காடு எம்.ஆர்.நகரில் ரூ.50 ஆயிரம் மதிப்பில் ஒரு கிரவுண்டு நிலம் வாங்கி, அதில் ரூ.6 லட்சம் செலவில் பங்களா வீடு கட்டி வசிக்கிறான்.
காதல் மனைவி
இவனது காதல் மனைவி பெயர் சுகந்தி. இவனுக்கு 2 மகன் கள், 2 மகள்கள் உள்ளனர். மூத்த மகன் யுவராஜ் 4-வது படிக் கிறான். அடுத்த மகள் இமய வல்லி 2-வது வகுப்பு படிக்கி றாள். அடுத்த மகன் முருகன் 1-வது படிக்கிறான். கடைசி மகள் சோபனா (3 வயது ).
3 குழந்தைகளும் திருவேற்காட் டில் உள்ள கான்வென்ட் பள்ளி யில் படிக்கிறார்கள்.
தனி ஆள் ஸ்டைல்
கொள்ளையன் ராதாகிருஷ் ணனின் கொள்ளை ``ஸ்டைல்" வித்தியாசமானது. தனி ஆளா கவே இந்த தொழில் செய்து வந்தான்.
மாடி வீடுகளில் ``குடிநீர் பைப்" வழியாக ஏறிச்சென்று, திறந்து கிடக்கும் ஜன்னல் கம்பி வழியாக கையைவிட்டு, அருகில் இருக்கும் கதவை திறந்து தான் வீட்டுக்குள் நுழைவான். ஆட்கள் தூங்கிக் கொண்டிருக்கும் வீடுகளில் புகுந்து ஓசையில்லாமல் பீரோவை திறந்து கொள்ளை அடிப்பது தான் இவனது குணம்.
ஆள் இல்லாத வீட்டிற்குள் நுழையமாட்டான். பூட்டை உடைப்பதையும் விரும்பமாட் டான். இப்படி கொள்ளைத் தொழிலில் தனக்கென்று தனி முத்திரை பதித்து வாழ்ந்த ராதாகிருஷ்ணனுக்கு ஒரு மோச மான குணம் இருந்தது.
ரசித்து பார்ப்பான்
கொள்ளை அடிக்க நுழையும் வீடுகளில் படுக்கை அறைக்குள் நுழைந்து, தூங்கிக்கொண்டி ருக்கும் பெண்களின் ஆடை விலகி இருந்தால் அதை ரசித்து பார்ப்பான். சில வீடுகளில் புகுந்தபோது கணவன்-மனைவி ஒன்றாக இருப்பதையும் பார்த்து ரசிப்பது இவனது மோசமான குணம்.
சமீபத்தில் சென்னை வளசரவாக்கம், திருவான்மிïர், அடையார், கே.கே.நகர் ஆகிய பகுதிகளில் திருட்டு போன 8 வீடுகளில் ராதாகிருஷ்ணனின் கைரேகை பதிவாகி இருந்தது. இதை வைத்து ராதாகிருஷ் ணனை கைது செய்ய கமிஷனர் நடராஜ் உத்தரவிட்டார். இணை கமிஷனர் சாஸ்திரி, துணை கமிஷனர் ஆயுஸ்மணி திவாரி, உதவி கமிஷனர் ராமச் சந்திரன் ஆகியோர் மேற்பார் வையில் இன்ஸ்பெக்டர்கள் எட்வர்டு, ஜான்ஜோசப், தெய்வ சிகாமணி, ஏசுபாதம் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
கோர்ட்டில் சரண்
போலீஸ் தேடுவதை அறிந்த ராதாகிருஷ்ணன் சென்னை எழும்பூர் 6-வது கோர்ட்டில் சரண் அடைந்துவிட்டான். தனிப்படை போலீசார் அவனை காவலில் எடுத்து விசாரித்தார் கள்.
விசாரணையில் திருடிய நகை களை நெல்லிக்குப்பம், கடலூர், புதுச்சேரி ஆகிய இடங்களில் மார்வாடிகளிடம் விற்று இருப் பது தெரிய வந்தது. போலீசார் மார்வாடிகளிடமிருந்து சுமார் 400 சவரன் எடையுள்ள ரூ.20 லட்சம் மதிப்பிலான நகைகளை மீட்டனர்.
மீட்கப்பட்ட நகைகள் நேற்று சென்னை, திருவான்மிïர் போலீஸ் நிலையத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. போலீஸ் கமிஷனர் நடராஜ் அவற்றை பார்வையிட்டு தனிப்படை போலீசாரை பாராட்டினார்.
வாக்கு மூலம்
திருட்டு தொழிலுக்கு வந்தது எப்படி? என்று ராதாகிருஷ்ணன் தனிப்படை போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் கொடுத் துள்ளான். அதன் விவரம் வருமாறு:-
கடலூர் மாவட்டம் நெல்லிக் குப்பம் எனது ஊர். எனது தந்தை பெயர் ஏழுமலைச் செட்டியார். தாயார் பெயர் துளசி. 2 சகோதரிகள், 2 சகோ தரர்கள் உள்ளனர். 6-வது வகுப்பு வரை மட்டும் படித்தேன். அதன்பிறகு படிப்பு ஏறவில்லை. தோட்டத்தில் புகுந்து தென்னை மரத்தில் ஏறி தேங்காய் திருடுவேன். மாமரத்தில் ஏறி மாங்காய் திருடி விற்பேன். இவ்வாறு திருட்டு தொழிலை தொடங்கிய நான், காலப் போக்கில் வீடுகளில் புகுந்து நகை, பணம் திருட ஆரம்பித் தேன். முதன் முதலாக நெல்லிக் குப்பத்தில் தென்னை மரத்தின் வழியாக ஏறி ஒரு வீட்டுக்குள் புகுந்து திருடினேன்.
மரம் ஏறி பழக்கம் இருந்ததால், குடிநீர் குழாய் வழியாக ஏறி வீடுகளுக்குள் புகுந்து செல்வது எனக்கு எளிதாக இருந்தது. இதையே எனது திருட்டு ஸ்டை லாக கடைபிடித்தேன். கூட்டு சேர்ந்து திருடுவது எனக்கு பிடிக்காது. இதனால் தான் நான் 14 ஆண்டுகளாக போலீசில் மாட்டவில்லை.
நான் திருடி சம்பாதிப்பது எனது மனைவிக்கு பிடிக்க வில்லை. தீக்குளித்து தற் கொலைக்கு கூட முயற்சித்து விட்டாள். லாரி அதிபர் என்று ஏமாற்றி தான் என் மனைவியை காதலித்து மணந்தேன். என் குழந்தைகளுக்கு நான் திருடன் என்பது தெரியாது. நான் வாழும் திருவேற்காட்டு பகுதி மக்களுக் கும் நான் திருட்டு தொழில் செய் வது தெரியாது. திருடி சம்பா தித்த பணத்தை நான் ஏழை களுக்கு கொடுத்து உதவுவேன். திருமணம் கூட செய்து வைப் பேன்.
4 காதலிகள்
நெல்லிக்குப்பத்திலும், புதுச் சேரியிலும் எனக்கு 4 காதலிகள் உள்ளனர். அவர்கள் வீட்டுக்கு எப்போதாவது சென்று உல்லாச மாக இருப்பேன். இன்னும் ஒரு வருடம் திருட்டு தொழில் செய்துவிட்டு, வேறு தொழில் தொடங்க நினைத்தேன். அதற் குள் போலீஸ் கெடுபிடி, அதிக மாக இருந்ததால் கோர்ட்டில் சரண் அடைந்துவிட்டேன்.
இவ்வாறு ராதாகிருஷ்ணன் தனது வாக்குமூலத்தில் கூறி இருக்கிறான்.
சொத்துக்களை முடக்க திட்டம்
ராதாகிருஷ்ணன் திருட்டு தொழிலில் சம்பாதித்து கட்டிய பங்களா வீட்டை பறிமுதல் செய்ய சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் கூறினார்கள்.
Dailythanthi
|
|
|
| செல்போன் ஒலித்ததால் மந்திரிக்கு ஏற்பட்ட தர்ம சங்கடம் |
|
Posted by: Vaanampaadi - 02-19-2005, 11:45 AM - Forum: செய்திகள்: உலகம்
- No Replies
|
 |
செல்போன் ஒலித்ததால்
மத்திய மந்திரிக்கு ஏற்பட்ட தர்ம சங்கடம்
புதுடெல்லி, பிப்.19_
வெளியுறவுத்துறை மந்திரி நட்வர்சிங் இங்கிலாந்து மந்திரி ஜேக் ஸ்டிராவுடன் நேற்று டெல்லியில் கூட்டாக பேட்டி அளித்தார். நட்வர்சிங் ஒரு அறிக்கையை வாசித்துக் கொண்டு இருந்தபோது செல்போன் ஒலி எழுந்தது. பத்திரிகையாளர்களிடம் இருந்துதான் செல்போன் ஒலிப்பதாக நினைத்த வெளி யுறவு அமைச்சக அதிகாரி களின் பார்வை பத்திரிகை யாளர் பக்கம் திரும்பியது.
ஆனால், தனது சட்டைப் பையில் இருந்துதான் செல்போன் `சிணுங்கு'வதை சட்டென்று புரிந்து கொண்ட நட்வர்சிங் "ஓ... இது என்னு டையது அல்லவா?" என்று கூறியதும் அங்கு கூடியிருந்த அனைவரும் சிரித்து விட்ட னர்.
பின்னர் மன்னிப்பு கோரிய நட்வர்சிங் செல்போனை `ஆப்' செய்து விட்டு அறிக்கையை தொடர்ந்து படித்தார்.
Dailythanthi
|
|
|
| இரவில் நிர்வாணமாக உலா வரும் ஆண்கள் |
|
Posted by: Vaanampaadi - 02-19-2005, 11:43 AM - Forum: செய்திகள்: உலகம்
- Replies (6)
|
 |
இரவில் நிர்வாணமாக உலா வரும் ஆண்கள்
கனடா நாட்டில் பெரேன் நகரில் இரவு நேரத்தில் ஆண்கள் ஜோடி ஜோடியாக நிர்வாணமாக தெருக்களில் நடப்பதாக போலீசுக்குப் புகார் போனது.
போலீசாருக்கு நிர்வாணமாக நடப்பவர்கள் யார் என்பதும், எதற்காக நடக்கிறார்கள் என்பதும் தெரியவில்லை. அவர்களைப் பிடிப்பதற்காகவும், இதைத்தடுப்பதற்காகவும் இரவில் கூடுதல் போலீஸ் ரோந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
குடிபோதையாலோ அல்லது உடல் நலனைப் பாதுகாப்பதற்காகவோ இப்படி நிர்வாணமாக நடக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
வெயிலுக்குப் பிறகு, உறை பனியில் நிர்வாணமாக நடப்பது உடல் நலனுக்கு நல்லது என்று நிபுணர்கள் கூறி உள்ளனர்.
Dailythanthi
|
|
|
| `ஊது'கிறாரா? `காது'கிறாரா? |
|
Posted by: Vaanampaadi - 02-19-2005, 11:43 AM - Forum: செய்திகள்: உலகம்
- No Replies
|
 |
பலூனை `ஊது'கிறாரா? `காது'கிறாரா?
பலூனை வாய் மூலம் காற்றை ஊதி நிரப்புவது வழக்கம். ஆனால் சீனாவை சேர்ந்த ஒருவர், தனது காது மூலம் காற்றை வெளியேற்றி அதைக் கொண்டு பலூனை நிரப்பும் அதிசயத்தை செய்து காண்பிக்கிறார்.
அவரது பெயர் வெய் மிங்டாங். 54 வயதான இவர், சில ஆண்டுகளுக்கு முன்பு தனது காது வழியாக காற்று வெளியேறுவதை உணர்ந்தார். இப்போது அவர் தனது காது மூலம் வெளியேறும் காற்றால் பலூன்களை ஊதிக் காண்பிக்கிறார். சமீபத்தில் குவாங்கி மாகாணம் குயிலின் நகரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் காதில் இருந்து வெளியேறும் காற்று மூலம் பலூன்களை ஊதிக் காண்பித்ததோடு 20 விநாடிகளில் 20 மெழுகு வர்த்திகளை காது காற்றால் அணைத்தும் காண்பித்து அசத்தினார்.
Dailythanthi
|
|
|
| திருமணத்துக்கு முதல் நாள் ஒரே அறையில் தங்க வேண்டாம் |
|
Posted by: Vaanampaadi - 02-19-2005, 11:42 AM - Forum: செய்திகள்: உலகம்
- Replies (1)
|
 |
<img src='http://www.dailythanthi.com/images/news/20050219/for1.jpg' border='0' alt='user posted image'>சார்லஸ்_கமீலா ஜோடிக்கு இங்கிலாந்து ராணி தடை
"திருமணத்துக்கு முதல் நாள் ஒரே அறையில் தங்க வேண்டாம்"
லண்டன், பிப். 19_
இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் _ கமீலா ஜோடி திருமணத்துக்கு முதல் நாள் தனி அறையில் தங்குவதற்கு இங்கிலாந்து ராணி எலிச பெத் தடை விதித்து இருக் கிறார். இதில் அவர் பிடிவாத மாக இருப்பதைப் பார்த்து விட்டு, சார்லஸ் தன் முடிவை மாற்றிக்கொண் டார்.
காதல் நெருக்கம்
இளவரசர் சார்லஸ், டயானா வைத் திருமணம் செய்து கொள்வ தற்கு முன்பே கமீலா பார்க்கரை காதலித்து வந்தார். டயானா இறந்த பிறகு இந்த காதல் முன்பை விட நெருக்கமானது.
ஏற்கனவே திருமணமான கமீலா, தன் கணவரை விவாக ரத்து செய்து விட்டு, இளவரசர் சார்லசுடன் காதல் வானில் சிறகடித்து பறந்தார்.
மதிப்பு உயர்ந்தது
காதல் வாழ்க்கையில் ஈடுபட்ட போதிலும் தன் மகன்கள் வில்லி யம், ஹாரி இருவரையும் பொறுப் புடன் நன்கு கவனித்துக் கொண் டதால், பொதுமக்களின் மதிப் பீட்டில் அவர் உயர்ந்தார்.
அவர் கமீலாவைத் திருமணம் செய்து கொள்வதற்கும் இங்கி லாந்து மக்கள் ஆதரவு அளித் தனர். இதனால் கமீலாவும் _ சார் லசும் திருமணம் செய்து கொள் வதற்கு தீர்மானித்தனர். இதற்கு இங்கிலாந்து ராணி எலிசபெத் தும் ஆதரவு தெரிவித்தார்.
ஏப்ரல் 8_ந்தேதி
வருகிற ஏப்ரல் மாதம் 8_ந்தேதி இவர்கள் திருமணம் நடக்கிறது. வின்ட்சர் மாளிகையில் இவர்கள் திருமணம் நடப்பதாக அறிவிக் கப்பட்டது.
திருமணம் நடத்துவதற்கான லைசென்ஸ் வின்ட்சர் மாளி கைக்கு இல்லாததால் அங்கு திருமணம் நடக்காது என்றும், அதற்குப் பதிலாக வின்ட்சர் நகர மன்றத்தில் திருமணம் நடக்கும் என்றும் அறிவிக்கப்பட்டு உள் ளது.
முதல் நாள் இரவு
திருமணத்துக்கு முதல் நாள் இரவு மணமக்கள் இருவரும் ஒரே அறையில் தங்குவதற்கு விரும்பி னர். இதுபற்றி அறிந்ததும் ராணி எலிசபெத் இதற்குத் தடை விதித்து விட்டார்.
"நாங்கள் காதலர்களாக வாழ்ந்த காலத்தில் எத்தனையோ நாட்கள் ஒரே அறையில் தனி யாகத் தங்கி இருக்கிறோம். இது எல்லோருக்கும் தெரிந்தது தானே" என்று இளவரசர் சார் பில் எடுத்து வைக்கப்பட்ட வாதம் ராணியின் தடையை தளர்த்த உதவவில்லை.
இந்த விஷயத்தில் ராணி எலிச பெத் பிடிவாதமாகவும், உறுதி யாகவும் இருந்தார். இதைப் பார்த்தபிறகு மணமக்கள் தங்கள் முடிவை மாற்றிக்கொண்டனர்.
Dailythanthi
|
|
|
| நக்மாவை தொடர்ந்து மேலும் நடிகைகள் சிக்குகிறார்கள் |
|
Posted by: Vaanampaadi - 02-19-2005, 11:40 AM - Forum: சினிமா
- No Replies
|
 |
நக்மாவை தொடர்ந்து மேலும் நடிகைகள் சிக்குகிறார்கள்: தீவிரவாதியுடன் இருக்கும் போட்டோ சேகரிப்பு
மும்பை, பிப். 19-
தீவிரவாதிகளுடன் நக்மா வுக்கு தொடர்பு இருப்பதாக வெளியான தகவல்கள் நாட்டையே உலுக்கி உள்ளது. இந்தி, தமிழ், கன்னடம், தெலுங்கு பட உலகம் நக்மாவை மிரட்சியுடன் பார்க்கிறது.
மும்பை குண்டு வெடிப் பின் பிரதான மூளையாக செயல்பட்டவன் தாதா தாவூத் இப்ராகிம். பாகிஸ்தானில் தலைமறைவாக இருக்கிறான். அவன் தம்பி அனீஸ்வுடன் நக்மாவுக்கு தொடர்பு இருந்தது என்று தாவூத்தின் கையாள் ஒருவனே வாக்கு மூலம் கொடுத்து இருப்பதால் அந்த குற்றச்சாட்டை புறக்கணிப்பதற்கு இல்லை என்று போலீஸ் கருதுகிறது.
தாவூத்இப்ராகிம் உலக கிரிமினல்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டு தேடப்படுகிறான். இவன் கூட்டாளி ஜம்போ எனப்படும் ஜமீருத் தீன் அன்சாரி கடந்த வருடம்தான் போலீசாரிடம் மாட்டினான்.
பாகிஸ்தானில் இருக்கும் தாவூத் அங்கு ஒரு குட்கா கம்பெனி ஆரம்பிக்க திட்டமிட்டதாகவும் அதற்கு தேவையான தயாரிப்பு உதிரிபாகங்களை இந்தியாவில் இருந்து துபாய் வழியாக பாகிஸ்தானுக்கு கொண்டு செல்ல அவன் திட்டமிட்டதாகவும் அதற்கு உதவும்போதுதான் ஜம்போ சிக்கினான் என்றும் போலீசார் தெரிவித்து உள்ளனர்.
ஜம்போ மீது மேலும் பல வழக்குகள் போட்டு சிறையில் அடைத்தனர்.
அந்த வழக்குகள் தொடர்பாக மும்பை மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் அவன் ஆஜர்படுத்தப்பட்டபோது அளித்த வாக்கு மூலம்தான் நக்மாவை சிக்கலில் மாட்டி விட்டது.
தாவூத்தின் தம்பி அனீஸ் இப்ராகிம் துபாயில் இருக்கிறான். அவனுக்கும் நக்மாவுக்கும் தொடர்பு உண்டு. அனீஸ் ஹவாலா முறையில் அனுப் பிய 10 லட்சம் ரூபாயை மும்பை குட்கா கம்பெனி அதி பர்கள் மூலம் பெற்று பாந்தரா பகுதியில் உள்ள பிளாட்டில் வசிக்கும் நக்மாவிடம் நானே நேரில் சென்று கொடுத்தேன் என்று ஜம்போ வாக்குமூலத்தில் கூறி உள்ளான்.
பெங்காலி மற்றும் போஜ்புரி படங்களில் நடிக்க துவங்கி உள்ள நக்மாவுக்கு இந்தவாக்குமூலம் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. தனக்கும் தீவிரவாதிகளுக்கும் தொடர்பு இல்லை என்று நக்மா மறுத்து இருக்கிறார்.
இந்த நிலையில் ஜம்போ வாக்குமூலத்தில் நக்மா பற்றி வெளிவராத மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஷார்ஜா கிரிக்கெட் போட்டி நடந்தபோது தாவூத் இப்ராகிமுடன் நெருக்கமாக அமர்ந்து சில மும்பை நடிகைகள் கிரிக்கெட் பார்த்துள்ளனர். எந்தெந்த நடிகைகள் அவனுடன் இருந்தார்கள் என்பது பற்றிய போட்டோக்களை சி.பி.ஐ. சேகரித்து வருவதாக கூறப்படுகிறது.
எனவே விரைவில் மேலும் சில நடிகைகள் சிக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. துபாய் மற்றும் பாகிஸ் தானுக்கு டெலிபோனில் பேசிய சினிமா புள்ளிகளின் டெலிபோன் பேச்சு பதிவுகளும் சேகரிக்கப்படுகிறது.
நக்மா விவகாரம் காங்கிரஸ் தலைவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எதிர்க்கட்சிகள் இதை பெரிதுப்படுத்த வரிந்து கட்டுகின்றன.
எனவே நக்மா காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கப்படலாம் என்ற பேச்சும் பரவலாக அடிபடுகிறது.
Maalaimalar
|
|
|
|