![]() |
|
செல்போன் ஒலித்ததால் மந்திரிக்கு ஏற்பட்ட தர்ம சங்கடம் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள்: உலகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=14) +--- Thread: செல்போன் ஒலித்ததால் மந்திரிக்கு ஏற்பட்ட தர்ம சங்கடம் (/showthread.php?tid=5141) |
செல்போன் ஒலித்ததால் மந்திரிக்கு ஏற்பட்ட தர்ம சங்கடம் - Vaanampaadi - 02-19-2005 செல்போன் ஒலித்ததால் மத்திய மந்திரிக்கு ஏற்பட்ட தர்ம சங்கடம் புதுடெல்லி, பிப்.19_ வெளியுறவுத்துறை மந்திரி நட்வர்சிங் இங்கிலாந்து மந்திரி ஜேக் ஸ்டிராவுடன் நேற்று டெல்லியில் கூட்டாக பேட்டி அளித்தார். நட்வர்சிங் ஒரு அறிக்கையை வாசித்துக் கொண்டு இருந்தபோது செல்போன் ஒலி எழுந்தது. பத்திரிகையாளர்களிடம் இருந்துதான் செல்போன் ஒலிப்பதாக நினைத்த வெளி யுறவு அமைச்சக அதிகாரி களின் பார்வை பத்திரிகை யாளர் பக்கம் திரும்பியது. ஆனால், தனது சட்டைப் பையில் இருந்துதான் செல்போன் `சிணுங்கு'வதை சட்டென்று புரிந்து கொண்ட நட்வர்சிங் "ஓ... இது என்னு டையது அல்லவா?" என்று கூறியதும் அங்கு கூடியிருந்த அனைவரும் சிரித்து விட்ட னர். பின்னர் மன்னிப்பு கோரிய நட்வர்சிங் செல்போனை `ஆப்' செய்து விட்டு அறிக்கையை தொடர்ந்து படித்தார். Dailythanthi |