![]() |
|
`ஊது'கிறாரா? `காது'கிறாரா? - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள்: உலகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=14) +--- Thread: `ஊது'கிறாரா? `காது'கிறாரா? (/showthread.php?tid=5143) |
`ஊது'கிறாரா? `காது'கிறாரா? - Vaanampaadi - 02-19-2005 பலூனை `ஊது'கிறாரா? `காது'கிறாரா? பலூனை வாய் மூலம் காற்றை ஊதி நிரப்புவது வழக்கம். ஆனால் சீனாவை சேர்ந்த ஒருவர், தனது காது மூலம் காற்றை வெளியேற்றி அதைக் கொண்டு பலூனை நிரப்பும் அதிசயத்தை செய்து காண்பிக்கிறார். அவரது பெயர் வெய் மிங்டாங். 54 வயதான இவர், சில ஆண்டுகளுக்கு முன்பு தனது காது வழியாக காற்று வெளியேறுவதை உணர்ந்தார். இப்போது அவர் தனது காது மூலம் வெளியேறும் காற்றால் பலூன்களை ஊதிக் காண்பிக்கிறார். சமீபத்தில் குவாங்கி மாகாணம் குயிலின் நகரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் காதில் இருந்து வெளியேறும் காற்று மூலம் பலூன்களை ஊதிக் காண்பித்ததோடு 20 விநாடிகளில் 20 மெழுகு வர்த்திகளை காது காற்றால் அணைத்தும் காண்பித்து அசத்தினார். Dailythanthi |