Yarl Forum
தயா ஜிப்ரான் கவிதைகள் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11)
+--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52)
+--- Thread: தயா ஜிப்ரான் கவிதைகள் (/showthread.php?tid=5156)



தயா ஜிப்ரான் கவிதைகள் - Thaya Jibbrahn - 02-19-2005

மருத்துவம் சொன்னது!
மாரடைப்புக்கு
கொலஸ்ரோல் தான் காரணமாம்.

அப்படியெனில்
நீ எந்தவகை
கொலஸ்ரோல்?
---------------------------



யாரேனும் நினைத்தால்
தும்மல் வருமாம்.
பாட்டி இதிகாசம் சொன்னாள்.

நீயென்ன
நாள் முழுதும்
தும்மிக் கொண்டேயிருக்கிறாயா?


-------------------------------
நேற்றேனும் புரிந்ததா உனக்கு
நம் காதல் பற்றி.

நாம்
ஒன்று சேர்வதில்லை
என்ற ஒரே முடிவையே
இருவரும்
தனித் தனியாக
எடுத்திருந்தோம்.


----------------------------

உன்னை மறக்கவென
எண்ணிக் கொண்டு நிகழ்த்துகின்ற
நீ
வெறுப்பதாக கூறிய
ஒவ்வோர்
தீக்குச்சிகளின் உரசல்களிலும்
தெரியுதடி
உந்தன் நிலவு முகம்.


---------------------------

உன்னோடு இருப்பதை விடவும்
உந்தன்
நினைவுகளோடிருக்கவே
சம்மதம்.
-----------------------------


-தயா ஜிப்ரான் -


- வியாசன் - 02-19-2005

உன்னோடு இருப்பதை விடவும்
உந்தன்
நினைவுகளோடிருக்கவே
சம்மதம்.

நீங்கள் கவிதை எழுதுவதானால் எனக்கும் உங்களுடைய கவிதைகளுடன் இருக்க சம்மதம்


- sayanthan - 02-19-2005

கவிதை என்ற பெயரில் கட்டுரைகளை வெட்டி வெட்டி ஒவ்வொரு வரியாக ஒன்றின் கீழ் ஒன்றாக எழுதுகிறதுகளை வாசிச்சு எரிச்சல் படுவன்.... ஆனால்.. நறுக்கென நாலு வரியில் தைக்கிற மாதிரி இருக்கிறது உங்கள் வரிகள்.. தொடர்க..


- shanmuhi - 02-19-2005

நறுக்கென்று தந்த நாலு வரிப் பாட்டில்
நறுக்கென்று தைக்கின்றது மனது.
வாழ்த்துக்கள்.


- KULAKADDAN - 02-19-2005

கவி வரிகள்... நனறு...
ஆனால் பிரிவின் சோகம் இளையோடுகிறதே...... <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> :?:


- Kurumpan - 02-20-2005

சொற்களில் இலகு
பொருளில் நிறைவு
நன்றி! நன்றி! வாழ்த்துக்கள்.


- kavithan - 02-20-2005

நன்று அருமையானா கவிகள் வாழ்த்துக்கள்