Yarl Forum
என் தெமிஸ் தேவதையே! -தயா ஜிப்ரான் - - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11)
+--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52)
+--- Thread: என் தெமிஸ் தேவதையே! -தயா ஜிப்ரான் - (/showthread.php?tid=5157)



என் தெமிஸ் தேவதையே! -தயா ஜிப்ரான் - - Thaya Jibbrahn - 02-19-2005

என்
தெமிஸ் தேவதையே!

நம்
காதல் வழக்கின்
தீர்ப்பு எப்போது

உன்னால்
தீர்க்கப்படாத வழக்குகளால்
என்
காலம் கரைகிறது
ஆயுள் தண்டனையாய்-

பிடியாணை கொடுத்து
விழிகள் அனுப்பியவளே!

வழக்கின் கைதி
வாசலில் நிற்கின்றேன்.

தீர்ப்புகளையே
யாசிக்கின்றான்
ஓர்
மூடக்கவிஞன்.

உன்
மௌனங்கள் வரையும்
தள்ளி வைப்புத்
தீர்மானங்களையல்ல...



(தெமிஸ் -- நீதி தேவதை)


-தயா ஜிப்ரான் -