Yarl Forum
வெலிகந்த படுகொலையும் சில கதைகளும் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4)
+--- Forum: புலம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=21)
+--- Thread: வெலிகந்த படுகொலையும் சில கதைகளும் (/showthread.php?tid=5149)



வெலிகந்த படுகொலையும் சில கதைகளும் - Vasan - 02-19-2005

எதிரிகளை விட துரோகிகளே ஆபத்தானவர்கள் என்ற தேசியத்தலைவரின் கூற்று மீண்டும் ஒருமுறை அழுத்தமாக தமிழர் போராட்டவரலாற்றில் பதியப்பட்டிருக்கிறது. தமிழீழ விடுதலைப்புலிகளின் மட்டு-அம்பாறை மாவட்ட அரசியற்துறைப்பொறுப்பாளர் கௌசல்யனும் ஏனைய 3 போராளிகளும்ää தமிழ் தேசியகூட்டமைப்பை சேர்ந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அரியநாயகம் சந்திரநேரு அவர்களும் அரச கட்டுப்பாட்டுப்பகுதியில் வைத்து எதிரிகள் துரோகிகளின் கூட்டுச்சதிக்கு களப்பலியாகியிருக்கிறார்கள்.

நிராயுதபாணிகளாகச் சென்ற போராளிகள் மீது கண்முடித்தனமான-கோழைத்தனமான தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. ஆனால் இது முதற்தடவை இல்லை. சமாதானப்பயணம் தொடங்கியதிலிருந்து தமிழர்தரப்புமீது மிலேச்சத்தனமானதும் கோழைத்தனமானதுமான தாக்குதல் பலமுறை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

நல்லெண்ண சமிக்ஞையாக புலிகள் ஒருதலைப்பட்சமாக யுத்தநிறுத்தம் அறிவித்ததில் தொடங்கிய சமாதானப் பயணம் இன்றுவரை அதே நல்லெண்ணத்துடன் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்த இடைப்பட்ட காலத்தில் தமிழர் தரப்பு தனது பொறுமையின் எல்லைவரை சென்று திரும்பியிருக்கிறது பலமுறை. இன்று அதன் உச்சத்தில் நிற்கிறது. தலைவர் தனது மாவீரர் உரையில் குறிப்பிட்டதுபோல் சமாதானமும் இல்லாமல் சரியான தீர்வும் இல்லாமல் தமிழினம் அரசியல் வெறுமைக்குள் தள்ளப்பட்டிருக்கிறது. அதன் உச்சவடிவம்தான் வெலிகந்தவில் நடந்த போராளிகளின் படுகொலை.

இனியும் இதுபோன்ற செயல்களை தமிழினம் அனுமதிக்கப்போகின்றதா... புரிந்துணர்வு உடன்படிக்கையின் சரத்துக்கள் குறித்தும் இராணுவக்கட்டுப்பாட்டு பிரதேசத்தினுள் நிராயுதபாணிகளாக செல்லும் போராளிகளின் பாதுகாப்பு குறித்தும்ää நிழல் யுத்தம் நடத்தும் புலனாய்வுத்துறையினரின் - தமிழ் துரோகிகளின் ஆயுதக்களைவு பற்றியும் இறுக்கமான முடிவுகளை எடுக்கும் நிலைக்கு தமிழர் தரப்பு தள்ளப்பட்டிருக்கிறது.

இந்தப்படுகொலைகளை முன்வைத்து நாம் சில முன் முடிவுகளுக்கு வரவேண்டியுள்ளது. இன்று தமிழ் தேசிய விரோத ஊடகங்களால் பல கதைகள் சொல்லப்படுகின்றன. இந்த சுவாரசியம் நிறைந்த கட்டுக்கதைகளின் நாயகனாக ஒருவர் சித்திரிக்கப்படுகிறாhர். அவர் பெயர் கருணா. புரிந்துணர்வு உடன்படிக்கையை கண்காணிக்க வந்ததாக சொல்லப்படும் யுத்த நிறுத்த கண்காணிப்பு குழுவும் இந்த 'கதாநாயகனை" முன்வைத்துää இது உள் முரண்பாடு யுத்த நிறுத்த மீறல் இல்லையென்று ஒரு கதையை தன் பங்கிற்கு எடுத்து விடுகிறது. சந்திரிகா அம்மையாரும் ஒரு கதை சொல்கிறார். எல்லாக் கதைகளையும் தமிழன் கேட்டுக்கொண்டிருக்கிறான்.

இப்போது நாம் மீண்டும் இக் கட்டுரையின் முதல் பந்திக்கு வருவோம். எதிரிகளை விட துரோகிகளே ஆபத்தானவர்;கள் என்றார் தேசியத்தலைவர். ஆம் இன்று எதிரிகளும் அந்நிய சக்திகளும் கருணா என்ற துரோகியை முன்வைத்து கதைகளை அவிழ்த்துவிட தயாராகிறார்கள். இலங்கை அரச எந்திரமும் அதன் புலனாய்வுத்துறையும் சில அந்நிய சக்திகளும் சமாதான காலத்தை பயன்படுத்தி தமிழர் படைக்கட்டமைப்பை சிதைத்துவிட கடும் பிரயத்தனங்களை மேற்கொள்கிறார்கள்.

இந்த முயற்சிகளுக்கு தூண்களாக நின்று தோள்கொடுப்பதற்கு தமிழர் மத்தியிலிருந்து உருவாகியிருக்கிறது ஒரு கும்பல். டக்ளஸ் தேவானாந்தாää பரந்தன் ராஜன் என்று நீளும் பட்டியலில் அண்மையில் தன்னை இணைத்துக்கொண்டவர் தான் புலிகள் அமைப்பிலிருந்து நீக்கப்பட்ட கருணா என்ற முரளீதரன். இவர் முன்ளாள் தமிழ் துரோகிகள் எல்லோரையும் தூக்கி சாப்பிட்டு விட்ட கதை ஊரறிந்தது. இனி தமிழர் வரலாற்றில் துரோகம் என்ற சொல் கருணா என்ற பெயரால் அழைக்கப்பட்டாலும் ஆச்சரியப்படத்தேவையில்லை.

இன்று வெலிகந்த படுகொலையை நடாத்தியவர்கள் சிங்கள புலனாய்வுப்பிரிவினர் தான் என்பதில் தமிழர் தரப்பிற்கு இரு வேறு கருத்துக்கள் கிடையாது. ஆனால்ää நெஞ்சுக்கு நேரே விரலை நீட்டி குற்றம் சுமத்த முடியாமல் குறுக்கே வந்து நிற்கிறார் இந்த துரோக அகராதி.

இனி இவரை வைத்து வெலிகந்த சம்பவம் போன்ற கதைகள் எழுதப்படலாம். கண்காணிப்புக்குழு உள்முரண்பாடு என்று ஒரு உபகதையையும்ää சிங்கள அரசு கண்டண அறிக்கை என்ற பெயரில் ஒரு துணைக்கதையையும் எழுதலாம். ஊடகங்கள் தம் வசதிக்கு தகுந்த படி புதுப்புது கட்டுக்கதைகள் புனையலாம். நாம் என்ன கதை சொல்லப்போகிறோம்?.

இந்த துரோகிகள் விடயம் தொடர்பாக அரசதரப்புடன் உடனடியாக பேசி சில முடிவுகள் எட்டப்பட வேண்டும். கருணாவின் நிழல் வாழ்க்கை தொடர அனுமதிக்க முடியாது - கூடாது. கருணா புலிகள் அமைப்பிலிருந்து துரத்தப்பட்டவுடன் தூங்கிப்போயிருந்த சில தமிழ்தேச விரோதிகள் தம்மை ஒருங்கிணைத்து தமது இணையத் தளங்களை தூசிதட்டி புதுப்பித்ததுடன் இன்னும் சிலவற்றை புதிதாக உருவாக்கி சிங்கள - அந்நிய உளவுத்துறையினரின் செல்லப்பிள்ளைகளாக மாறி அவர்களின் கூலிப்பணத்தில் தின்று ஊளைச்சதை வளர்க்கிறார்கள். உளவுத்துறையினரின் கைப்பொம்மைகளாக மாறி அவர்களின் தாளலயத்திற்கேற்ப ஆடி தம் பங்கிற்கு இவர்களும் தமிழர்களுக்கு துரோகக்கதைகள் சொல்கிறார்கள்.

வெலிகந்த படுகொலையை இவ் இணையத்தளங்கள் கையாண்ட விதம் மிகவும் கவனத்திற்குரியது. ஒவ்வொரு இணையத்தளமும் முன்னுக்கு பின் முரனாகவும் மாறுபட்ட விதத்திலும் செய்திகளை திட்டமிட்டு குழப்பின. ஈழப்போராட்ட வரலாற்றிலும்ää அரசியலிலும் ஆழ்ந்த அக்கறை உள்ளவர்களை விட மற்றவர்கட்கு இந்த குழப்பமான செய்திகளை இணம்கண்டு கொலையாளிகளை அடையாம் காண்பது அவ்வளவு இலகுவாக இராது.

தமிழ்தேசிய ஊடகங்கள் தவிர்ந்து சிங்களää இந்தியää சர்வதேச ஊடகங்கள் பெரும்பாலானவை இத் தாக்குதலை கருணா குழுவினரே நடத்தியதாக செய்திகளை வெளியிட்டன. இல்லாத ஒரு குழு இங்கே ஊடகங்களின் ஒரு தலைப்பட்டசமான செய்திகளினால் இருப்பதாக கட்டமைக்கப்படுகிறது. இதில் பெரும் பங்காற்றியவை உளவுத்துறையினரால் வளர்க்கப்படும் தமிழினத்துரோகிகளின் இணையத்தளங்கள் என்பதை நாம் மறந்துவிடலாகாது.

இங்கே தான் நாம் தமிழ் தேசியம் குறித்தும் அதன் சர்வதேச பரப்புரைகள் குறித்தும் ஊடகங்கள் என்ற தளத்தில் உடனடியாக தீவிரமாக செயற்பட வேண்டிய தேவவையை உணர்கிறோம். மக்களோடு மக்களாக கலந்துபோயுள்ள இந்த துரோக சக்திகளை இணம் கண்டுää புலத்திலும் தாய் நிலத்திலும் வேரறுக்க வேண்டிய பெரும் கடமை நம்முன் உள்ளது.

கருணா போன்ற துரோகிகளால் எமது பேராட்டத்தை வலுவிழக்கச்செய்யமுடியாது. ஆனால் கருணா இருப்பது போன்ற பிம்பத்தை கட்டமைத்து ஒரு மாயையை உருவாக்கி ஒரு நிழல் யுத்தத்தை புலனாய்வுத் துறையினரால் நடாத்த முடியும். வெலிகந்தவில் நடந்துமுடிந்ததும் அது தான்.

கருணா என்று தமிழீழ விடுதலைப்போராட்;டத்திற்கு துரோகமிழைத்துவிட்டு ஓடினாரோ அன்றே அவருடன் ஒட்டியிருந்த வீரமும் போர்த்திறனும் அவரை விட்டு ஓடிவிட்டது. 'கருணா குழு" என்று ஊடகங்கள் விளிக்கும் ஒரு குழு உண்மையில் கிடையாது. சிங்கள புலனாய்வுத்துறையினரின் ஒரு பிரிவினர் என்று வேண்டுமானால் குறிப்பிடலாம். அது தானே உண்மையும் கூட. இதை விட மிகவும் தந்திரமான முறையில் ஒரு வெளிநாட்டு புலனாய்வு நிறுவனம் நுNனுடுகு யும் கருணாவையும் இணைத்து தமிழீழ ஐக்கிய விடுதலை முன்னணி என்ற பெயரில் அதை ஒரு அரசியல் கட்சியாக பதிவுசெய்துள்ளது.

இது தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் என்ற பெயரிலும் இயங்கிக்கொண்டிருக்கிறது. ஆனால் இவ்விரண்டு அமைப்புக்களும் பெயரளவில் இயங்கும் அமைப்புக்களே ஒழிய எந்த விதமான வெளிச்செயற்பாடுகளும் அற்றது. செயலளவில் இவை ஒரு டுநவவநச Pயன கட்சிகள் மட்டுமே. இவ்விரு அமைப்புக்களின் இணையத்தளங்களையும் பார்த்தாலே அது புரியம். அந்நிய புலனாய்வு நிறுவனங்களின் முன்னெச்சரிக்கையான இணைப்பே இது. ஆனால் சிங்கள புலனாய்வுத்துறை சில இணையத்தளங்களினூடாக 'கருணா கும்பலை" கட்டமைக்கிறது - கதை சொல்கிறது. இங்கேதான் தமிழினம் துரோகத்தின் பலவிதமான பரிமாணங்களை எதிர்கொள்கிறது. எதிரிகளைவிட துரோகிகளை முதலில் களையவேண்டிய தேவையையும் உணர்கிறது.

சமாதான காலத்தை பயன்படுத்தி பல்வேறுபட்ட கோணங்களில் - தளங்களில் தமிழர் போராட்டத்தை சிதைக்க சிங்கள அந்நிய சக்திகள் மிக கவனமாக தந்திரமாக காய் நகர்த்துகின்றன. அதற்காக தமிழின துரோக சக்திகளை முன்வைத்து எமக்கு புதுப்புது கதைகளும் சொல்கின்றன.

எல்லாக் கதைகளையும் கேட்டுக்கொண்டு பொறுமையின் சிகரமாய் அமைதி காக்கிறார் சூரியத்தேவன். ஒரு கட்டத்தில் அவர் கதை சொல்லத்தொடங்குவார். அது தான் எல்லோருக்கும் சொல்லப்பட இருக்கும் இறுதிக்கதையாகவும் இருக்கும். ஒட்டு மொத்த உலகத்தமிழினமும் எதிர்பார்க்கும் கதையும் அதுதான்.

நன்றி: ஈழமுரசு

http://www.tamilnatham.com/articles/parani20050219.htm