![]() |
|
கண்கட்டி வித்தை - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள்: உலகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=14) +--- Thread: கண்கட்டி வித்தை (/showthread.php?tid=5128) |
கண்கட்டி வித்தை - Vaanampaadi - 02-20-2005 கண்கட்டி வித்தை திண்டுக்கல் மாவட்டத்தில், ஆந்திராவைச் சேர்ந்த மேஜிக் நிபுணர் ஒருவர், கண்களை கட்டிக்கொண்டு, இரு சக்கர வாகனத்தில் 100 கிலோ மீட்டருக்கு மேல் பயணம் செய்து சாதனை புரிந்துள்ளார். ஆந்திராவைச் சேர்ந்த மாயாஜால நிபுணரான எச்.ஜி.லே என்பவர் தனது மேஜிக் திறமைகளால் பல சாதனைகளை செய்து வருகிறார். இந்நிலையில், கின்னஸில் இடம்பெறும் முயற்சியாக, தனது கண்களை கட்டிக்கொண்டு, இரு சக்கர வாகனத்தில் சாலையில் பயணிக்கும் புதிய சாதனையில் ஈடுபட்டுள்ளார். திண்டுக்கல்லில் நேற்று அவர் நிகழ்த்திய சாதனையில், கூட்ட நெரிசல் மிகுந்த சாலைகளில், மக்கள் மீதும், வாகனங்கள் மீதும் மோதாமல், வெகு லாவகமாக இரு சக்கர வாகனத்தை ஓட்டிச்சென்று, அனைவரது பாராட்டுகளையும் பெற்றார். தொடர்ந்து இன்று பழனி மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் சாதனை பயணம் மேற்கொண்டு வரும் திரு. லே, தேசிய ஒருமைப்பாட்டை வலியுறுத்தி, இதுவரை நாடு முழுவதும் 30 ஆயிரம் கிலோ மீட்டர் பயணம் செய்துள்ளார். Jaya news |