![]() |
|
ஒரு ஊர்ல... போலீசுக்கு ஜெயலலிதா சொன்ன கதை - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள்: உலகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=14) +--- Thread: ஒரு ஊர்ல... போலீசுக்கு ஜெயலலிதா சொன்ன கதை (/showthread.php?tid=5135) |
ஒரு ஊர்ல... போலீசுக்கு ஜெயலலிதா சொன்ன கதை - Vaanampaadi - 02-19-2005 பிப்ரவரி 19, 2005 ஒரு ஊர்ல... போலீசுக்கு ஜெயலலிதா சொன்ன கதை! சென்னை: காவல்துறையினருக்கு குடியரசுத் தலைவர் மற்றும் முதலமைச்சரின் பதக்கம் வழங்கும் விழாவின்போது குட்டிக் கதை சொல்லி காவல்துறையினருக்கு ஜெயலலிதா அறிவுரை வழங்கினார். இந்த நிகழ்ச்சி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்தது. இந் நிகழ்ச்சியில் முதல்வர் ஜெயலலலிதா கலந்து கொண்டு காவல்துறையினருக்கு பதக்கங்களை வழங்கினார். நிகழ்ச்சியில் அவர் பேசும் போது சொன்ன குட்டிக் கதை: ஒரு ஊரில் கோவில் திருவிழா நடந்து கொண்டிருந்தது. பக்தர்கள் ஏராளமான அளவில் கூடியிருந்தனர். அப்போது திடீரென வானத்திலிருந்து ஒரு தங்கத் தட்டு கோவில் முன்பாக விழுந்தது. அதைப் பார்த்ததும் எல்லோரும் அதை நோக்கி ஓடி வந்தார்கள். அந்தத் தங்கத் தட்டு யாருக்கு என்பதில் சர்சசை எழுந்தது. கோவிலுக்கு சொந்தமா அல்லது பக்தர்களில் யாருக்காவது அதை கொடுக்கலாமா என்று விவாதம் எழுந்தது. அப்போது கோவில் நிர்வாகி தட்டை எடுத்துப் பார்த்தார். அதில், அன்பில் சிறந்தவர் யாரோ, அவருக்கு ஆண்டவன் பரிசு என்று எழுதப்பட்டிருந்தது. இதையடுத்து நான்தான் அன்பில் சிறந்தவன் என்று கூட்டத்தினர் மாறி மாறி கூறத் தொடங்கினர். இதையடுத்து கோவில் நிர்வாகி ஒரு முடிவுக்கு வந்தார். அடுத்த நாள் பகல் 12 மணிக்கு வந்து தாங்கள் செய்த அன்புச் செயலை சொல்லி தங்கத் தட்டைப் பெற்றுக் கொள்ளலாம் என்று பக்தர்களிடம் அறிவித்தார். அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். வீட்டுக்குப் போன ஒவ்வொருவரும் இரவில் தூங்க முடியாமல் தவித்தனர். தங்கத் தட்டை எப்படிப் பெறலாம் என்பதுதான் அவர்களது ஒரே சிந்தனையாக இருந்தது. தூக்கமே வரவில்லை அவர்களுக்கு. மறு நாள் பகல் 12 மணி. எள் போட்டால் கீழே விழாதபடி ஏகப்பட்ட கூட்டம். ஒவ்வொருவரும் தங்களது அன்புச் செயலை விவரிக்க வந்தார்கள். ஒரு பணக்காரர் வந்தார். நான் எனது சொத்தில் ஏராளமான பங்கை ஏழைகளுக்குத் தர்மம் செய்து வருகிறேன் என்றார். அவருடைய அன்பு நெஞ்சத்தை உணர்ந்த நிர்வாகி அவருக்கே தங்கத் தட்டை அளித்தார். சிலருக்குச் சந்தேகம். அதைச் செய்தேன், இதைச் செய்தேன் என்று பொய் சொல்லிக் கூட தங்கத் தட்டைத் தட்டிச் சென்று விடலாமே. இந்த பணக்காரர் ஏராளமாகத் தானம் செய்கிறார் என்பதை எப்படி நம்புவது? அதற்கு என்ன சாட்சி? இப்படி கூடியிருந்தவர்கள் தங்களுக்குள் பேசிக் கொண்டிருந்தபோதே பணக்காரர் கையில் இருந்த தங்கத் தட்டு தகரமாகி விட்டது. ஓகோ, தகுதியில்லாதவர் கைக்குப் போனால் தங்கத் தட்டு இப்படி தகரத் தட்டாகிப் போய்விடும் போலும் என்று எல்லோரும் பேசத் தொடங்கினார்கள். இதையடுத்து தங்கத் தட்டை எப்படியாவது தட்டிச் செல்ல, அந்த ஊருக்குப் பெரும் பணக்காரர்கள் எல்லாம் வந்து, அங்கே இந்த ஏழைகளுக்கு வாரி வாரி வழங்க ஆரம்பித்தார்கள். அடித்தது யோகம் பிச்சைக்காரர்களுக்கு. அந்தக் கோவிலை நோக்கி அக்கம் பக்கத்திலிருந்த பிச்சைக்காரர்களும் வரத் தொடங்கினார்கள். ஏழைகள் எல்லோருக்கும் பொருள் ஏராளமாகக் கிடைத்தது. எந்தக் குறையும் இல்லை. பாவம், பணக்காரர்கள்தான் வந்து வந்து பணத்தைத் தந்து நொந்து போனார்கள். அவர்கள் கையில் சென்றதுமே தங்கத் தட்டு தகரத் தட்டு ஆனது. நாட்கள் நகர்ந்தன, பல நாட்கள், பல மாதங்கள் ஆகி விட்டன. ஆனால் தகுதியான ஒருவர் வரவும் இல்லை, தங்கத் தட்டைப் பெறவும் இல்லை. ஆனால் தினசரி கோவிலில் கூட்டத்துக்கு மட்டும் குறைச்சலே இல்லை. ஒரு நாள் ஒரு கிராமத்தான் வந்தான். அவனுக்குத் தங்கத் தட்டு சமாச்சாரம் எதுவும் தெரியாது. கோவிலில் சாமி கும்பிட வந்தவன், வெளியில் உட்கார்ந்திருந்த பிச்சைக்காரர்கள் கூட்டத்தைப் பார்த்து, ஐயோ என் நாட்டில் இத்தனை ஏழைகளா? பார்க்கவே பரிதாபமாக இருக்கிறதே என்று சொல்லி அழுதான். கை கால் இழந்தவர்கள், கண் பார்வை இல்லாதவர்கள், ஊமைகள் இவர்களை எல்லாம் பார்த்து அவனது உள்ளம் பதறியது, உருகியது. கதறி அழுதான். உடனே கோவில் சாமியைப் பார்த்து, இந்தக் கொடுமைகளுக்கு விமோசனமே இல்லையா என்று கேட்க உள்ளே ஓடினான். அப்போது கோவில் நிர்வாகி அங்கு இருந்தார். அவரது கையில் தங்கத் தட்டு இருந்தது. கூட்ட நெரிசலில் தட்டை அவர் தவற விட்டார். கீழே நின்ற கிராமத்தான் கையில் அது விழுந்தது. உடனே ஒரு ஆச்சரியம் நிகழ்ந்தது. தங்கத் தட்டு அப்படியே இருந்தது, தகரமாக மாறவில்லை. முன்னைவிட மூன்று மடங்கு ஜொலித்தது. கோவில் நிர்வாகிக்கு மட்டற்ற மகிழ்ச்சி, ஐயா, நீ தான் உண்மையான அன்பின் வடிவம். உனக்குத்தான் இந்த தங்கத் தட்டு சொந்தம் என்று கூறி ஆனந்தக் கண்ணீர் வடித்தார். யாருடைய உள்ளம் ஏழை எளியவருக்கு உருகுகிறதோ, யாருடைய நெஞ்சம் மனிதாபிமானத்தின் ஊற்றுக் கண்ணாக இருக்கிறதோ, அவரே அன்பிற் சிறந்தவர் என்பதுதான் இக் கதையின் கருத்து. மனிதாபிமான உணர்வே தலை சிறந்தது என்பதை இக்கதை விளக்குகிறது. அந்த மனிதாபிமான உணர்வை, மனிதாபிமான செயல்பாட்டை காவல்துறையிடமிருந்து அதிகம் எதிர்பார்க்கிறேன் என்றார் ஜெயலலிதா. Thatstamil - MEERA - 02-19-2005 தனது சொந்த கதையை சொல்லியிருக்கலாம்.....! - KULAKADDAN - 02-19-2005 யார் யாருக்கு கதை சொல்வது என்ற விவஸ்தை இல்லாது போய் விட்டது. - thaiman.ch - 02-19-2005 ஏழகைள் இல்லாமல் போக வேணும் என்டு இவா கவலைப்படுறா??? இந்திய சனத்துக்கு எப்படி வேணும் என்டாலும் காது குத்தலாம என்டத அதுவள் நிருபிச்சுக்கொண்டே இருக்குதுவள். எங்க இவாட்ட இருக்கிற சொத்துக்களையும்ää நகைகளையும் தானமா குடுக்கட்டும் பாப்பம். அதுவும் மனிதாபிமானம் தானே?!?!? - Mathuran - 02-19-2005 இது குட்டி கதையா? இதுதான் சுத்த குட்டை பிடித்த கதை. நல்ல காலம் அந்த தட்டு இவாவின் கையில் கிடைக்க வில்லை. கிடைத்திருந்தால் ஆள் உடனே மாயமாக மாறி இருக்கும். இப்படி தமிழனை ஏமாத்த எத்தின கதை வச்சிருக்கிறாவோ....... :evil: :evil: :evil: :evil: :evil: :evil: - tamilini - 02-19-2005 <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> இதை யார் அப்ப படமாய் எடுக்கிறது..??
- Mathuran - 02-19-2005 அதற்கா ஆக்கள் இல்லை. கலக்கல் கமல் எடுபிடி சூரியா என நிறயபேர் இப்ப ஆதாவுக்கு பின்னால அலைஞ்சு தமிழ கொல்லுற ஆசமிகள் இருக்கினமல்லோ...... அவயள் எடுத்தா அத்தா அருளாவோ என்ன? :wink: :wink: - tamilini - 02-19-2005 சே நாங்க எடுப்பம் என்று பாத்தம் அது தான்.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Mathuran - 02-19-2005 அக்கா என்னக்கா இப்படி ஒரு விபரீத ஆசை உங்களுக்கு. அப்படி படம் எடுக்கிற ஆசை இருந்தால் சண்முகி அக்காகூட கூட்டு சேருங்கோ. அவங்களும் குறும்படம் எடுக்கிறாங்களாம். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- tamilini - 02-19-2005 இதென்ன புதுக்கதை கேள்விப்படலையே நான்..?? :| - Mathuran - 02-19-2005 என்னக்கா சண்முகி அக்கா குறும்பட போட்டி ஒண்டு நடத்துறாவாமல்லோ. அதில வெல்லுற குறும்படத்துக்கு 1500 ஐறோ வும், எடுத்தவருக்கு சங்கிலியன் பட்டமும் கொடுத்து கௌரவிக்க போகினமாம். நல்ல முயற்சி. ஆனால் ஐ. பி. சீ ரீ.ரீ.என் போன்ற ஊடகங்களிலும் அறிவித்தல் கொடுத்தால் நல்ல பயனளிக்கும். முயற்சியை பாராட்டலாம். http://www.yarl.com/forum/viewtopic.php?p=65018#65018 - tamilini - 02-19-2005 <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> அப்படியா அப்ப சரி நான் இதைக்கவனிக்கவில்லை :| தங்கதகடு - eelapirean - 02-19-2005 இந்த தங்கதகடு போல தமிழக அரசும் நல்லவர் கைக்கு கிடைக்க வேண்டும். |