![]() |
|
புஷ் _ கிளிண்டன் கண்ணீர் விட்டனர். - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள்: உலகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=14) +--- Thread: புஷ் _ கிளிண்டன் கண்ணீர் விட்டனர். (/showthread.php?tid=5121) |
புஷ் _ கிளிண்டன் கண்ணீர் விட்டனர். - Vaanampaadi - 02-20-2005 சுனாமி பாதித்த பகுதிகளில் கிளிண்டன் _ புஷ் சுற்றுப்பயணம் தாய்லாந்தில், கண்ணீர் வழிய பார்வையிட்டனர் பாங்காக், பிப். 20_ சுனாமி பாதித்த பகுதிகளில் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதிகள் புஷ்_ கிளிண் டன் ஆகியோர் சுற்றுப் பயணம் செய்து வருகிறார் கள். தாய்லாந்தில் நேற்று அவர்கள் பயணத்தைத் தொடங்கினர். தாய்_தந் தையை சுனாமி பேரலைக்கு இழந்து விட்டு அனாதை யான குழந்தைகளைப் பார்த்து அவர்கள் கண்ணீர் விட்டனர். புஷ் நியமித்தார் கடந்த டிசம்பர் மாதம் 26_ந் தேதி ஏற்பட்ட சுனாமியால் இந் தோனேசியா, தாய்லாந்து, இலங்கை, இந்தியா, மியான்மார், வங்காளதேசம் உள்பட பல நாடு களிலும் லட்சக்கணக்கானவர் கள் பலியானார்கள். சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி வழங்குவதற்கு நிதி திரட்டுவ தற்காக முன்னாள் ஜனாதிபதி கள் புஷ், கிளிண்டன் ஆகி யோரை இப்போதைய ஜனாதி பதி புஷ் நியமித்து இருக்கிறார். தாய்லாந்தில் சுனாமி பாதித்த தாய்லாந்து, இந்தோனேஷியா, இலங்கை ஆகிய நாடுகளில் அவர்கள் சுற் றுப்பயணத்தைத் தொடங்கி உள் ளனர். முதன் முதலில் தாய்லாந்து சென்ற அவர்கள் அங்கு உள்ள பான் நாம்கேம் என்ற நகருக்குச் சென்றனர். அவர்களுடன் தாய் லாந்து பிரதமர் தக்சின் சின்கா வத்ராவும் சென்றார். ஓவியம் பரிசு இந்த நகரில் 2 ஆயிரம் பேர் சுனாமிக்கு பலியானார்கள். பெற்றோரை இழந்த ஒரு சிறுமி சுனாமி பேரலை ஒரு கிராமத்தை தாக்கும் காட்சியை சித்திரமாக வரைந்து இருந்தார். அது 2 அமெ ரிக்க தலைவர்களுக்கும் வழங்கப் பட்டது. இதைப் பார்த்த புஷ், "இது என் மனதை உருகச் செய்து விட்டது என்றும் மறக்கமாட் டேன்" என்று கூறினார். [b]ஆழிப்பேரலையால் அனாதை யான சிறுவர்_சிறுமிகளைப் பார்த்ததும் இரு தலைவர்களின் கண்களிலும் கண்ணீர் வழிந்தது! வீடு கட்டும் பணி அருகில் உள்ள ஒரு கிராமத் துக்குச் சென்றனர். அந்தக் கிரா மத்தில் பாதிப்பேர் ஆழிப் பேர லையால் அடித்துச் செல்லப் பட்டு விட்டனர். அங்கு தாய் லாந்து ராணுவ வீரர்கள் இடிந்த வீடுகளை அப்புறப்படுத்திவிட்டு புதிய வீடுகளை கட்டும் பணியில் ஈடுபட்டு இருந்தனர். இதையும் அவர்கள் பார்வையிட்டனர். அதன் பிறகு 2 தலைவர்களுக் கும் பிரதமர் தக்சின் விருந்து கொடுத்தார். அதன் பிறகு அவர்கள் இந் தோனேசியாவுக்குப் புறப்பட் டனர். Dailythanthi |