Yarl Forum
ஜனாதிபதியின் மட்டு. விஜயம் ரத்து - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: ஜனாதிபதியின் மட்டு. விஜயம் ரத்து (/showthread.php?tid=5123)



ஜனாதிபதியின் மட்டு. விஜயம் ரத்து - Vaanampaadi - 02-20-2005

ஜனாதிபதியின்
மட்டு. விஜயம் ரத்து
ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் மட் டக்களப்புக்கான விஜயம் திடீரென ரத்துச் செய் யப்பட்டுள்ளது. நாளை அவர் அங்கு விஜயம் செய்வதாக இருந்தார்.
ஆழிப்பேரலையால் பாதிக்கப்பட்ட மட்டக் களப்பு மாவட்ட மக்களுக்கான வீடமைப்புத் திட் டத்திற்கு அடிக்கல் நடுவதற்காக ஜனாதிபதி மட் டக்களப்புக்கு விஜயம் செய்யத் தீர்மானித் திருந்தார். எனினும், இறுதி நேரத்தில் அவரது பயணம் ரத்துச்செய்யப்பட்டதாக அறிவிக்கப் பட்டது. அதற்கான காரணம் தெரிவிக்கப்பட வில்லை.
ஜனாதிபதியின் இந்த விஜயத்தைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப் பினர்கள் எதிர்த்திருந்தனர். அத்துடன், ஜனாதிபதிக்கு நேரில் எதிர்ப்புத் தெரிவிப்பதற்கான நட வடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன எனத் தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதியின் விஜயம் ரத்துச் செய்யப் பட்டமைக்கு இந்த எதிர்ப்புக்கள் காரணமா என்பது குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. அதேசமயம் பிறிதொரு சமயத்தில் ஜனாதிபதி யின் விஜயம் இடம்பெறலாம் என்று சில வட்டா ரங்கள் தெரிவித்தன.

Utayan (19.02.2005)