![]() |
|
மன்னாரில் புலிகள் மீனவர்கள் இடையிலான பதற்றம் தணிகிறது - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: மன்னாரில் புலிகள் மீனவர்கள் இடையிலான பதற்றம் தணிகிறது (/showthread.php?tid=5118) |
மன்னாரில் புலிகள் மீனவர்கள் இடையிலான பதற்றம் தணிகிறது - Vaanampaadi - 02-20-2005 மன்னாரில் புலிகள் மீனவர்கள் இடையிலான பதற்றம் தணிகிறது மன்னார் பள்ளிமுனை பகுதி மீனவர்களுக்கும்இ மன்னார் பிரதேச விடுதலைப் புலிகளுக்கும் இடையே நேற்று ஏற்பட்ட முறுகல் நிலைமை தணிந்துஇ அப்பகுதியில் அமைதி நிலவுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. எனினும் பள்ளிமுனை பிரதேச மீனவர்கள் இன்று கற்தொழிலுக்குச் செல்லவில்லை என மன்னார் கடற்றொழிலாளர் சங்க வட்டாரங்கள் தெரிவித்தன. மீனவர்கள் டைனமைட் பாவித்து மீன் பிடிப்பதனால் இவர்களிடையே பிரச்சினை எழுந்ததாகக் கூறப்படுகிறது. கடற்பரப்பிலும் மன்னார் நகரப்பகுதியிலும் நேற்று இடம்பெற்ற சம்பவங்களைத் தொடர்ந்து மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை மேற்கொண்ட சமரச முயற்சிகளையடுத்துஇ அங்கு நேற்று நிலவிய பதட்டம் தணிந்துள்ளது. தாக்குதலுக்கு உள்ளாகிய விடுதலைப் புலிகளின் மன்னார் சின்னக்கடை பகுதி அரசியல்துறை அலுவலகம் இன்று செயற்படத் தொடங்கியுள்ளது. இதனிடையில் வன்னிமாவட்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் மன்னார் சின்னக்கடை மற்றும் பள்ளிமுனை பகுதிகளுக்கு இன்று விஜயம் செய்துஇ விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர்களையும்இ பள்ளிமுனை பிரதேச கடற்றொழிலாளர் பிரதிநிதிகளையும் சந்தித்து நிலைமைகளை விரிவாகக் கேட்டறிந்துள்ளார். நேற்றைய வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக பள்ளிமுனை மீனவர் ஒருவரும்இ மன்னார் மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் அவர்களும் தமிழோசையிடம் வெளியிட்ட கருத்துகள் இன்றைய நிகழ்ச்சியில் இடம்பெறுகிறது. BBC தமிழோசை (19.02.2005) |