Yarl Forum
புலம் பெயந்தவர்களின் நிவாரண பொருட்கள் கொழும்பில் தேக்கம் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: புலம் பெயந்தவர்களின் நிவாரண பொருட்கள் கொழும்பில் தேக்கம் (/showthread.php?tid=5125)



புலம் பெயந்தவர்களின் நிவாரண பொருட்கள் கொழும்பில் தேக்கம் - Vaanampaadi - 02-20-2005

புலம்பெயர்ந்த தமிழ்மக்கள் அனுப்பிய
சுனாமி நிவாரணப் பொருள்கள்
கொழும்புத் துறைமுகத்தில் தேக்கம்
சுனாமி ஆழிப்பேரலை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு - கிழக்கு மக்களுக்கு வழங்கவென புலம்பெயர்ந்த தமிழர்களால் அனுப்பப்பட்ட உதவிப் பொருள்கள் அடங்கிய 50 கொள்கலன்கள் கொழும்புத் துறைமுகத்தில் தேங்கிக் கிடக்கின்றன.
தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் கொழும்பு இணைப்பாளர் சந்துரு பரராஜசிங்கம் இத்தக வலை உதயனுக்குத் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்ததா வது:-
வடக்கு - கிழக்கில் சுனாமியால் பாதிக்கப் பட்ட மக்களுக்கு அரச உதவிகள் கிட்டாத நிலை யில், புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் சேகரித்து அனுப்பும் பொருள்கள் மூலமே மக் களின் தேவைகளை நிறைவேற்றி வருகின் றோம்.
மருந்துப் பொருள்கள், சிறுவர்களுக்கான போசாக்கு உணவுப் பொருள்கள் போன்றவற் றைப் புலம்பெயர்ந்த மக்கள் சேகரித்து 50 கொள்கலன்களில் அனுப்பியுள்ளனர்.
நிவாரண உதவிப் பொருள்களுக்கு சுங்க வரி அறவிடும் நடைமுறையை அரசு திடீரென அறிவித்துள்ளது. சுங்கவரி செலுத்தி இப்பொருள் களை எம்மால் பொறுப்பேற்ற முடியாது. இத னால் - கடந்த பத்துத்தினங்களாக இந்தப் பொருள்கள் துறைமுகத்தில் தேங்கியுள்ளன.இவற்றை வெளியில் எடுத்துவந்து மக்க ளுக்கு வழங்க அரச அதிகாரிகளுடன் தொடர்ந்து பேச்சுக்களை நடத்திவருகின்றோம் - என்றார் அவர். இதேவேளை -
சுங்கவரி செலுத்த முடியாத நிலையில் 150 இற்கு மேற்பட்ட கொள்கலன்களில் உதவிப் பொருள்கள் கொழும்புத் துறைமுகத்தில் தேங் கிக் கிடக்கின்றன என்று ஒரு தகவல் தெரிவித் தது.

Uthayan