![]() |
|
தமிழ் பெண்ணுடன் திருமணம்: அம்மி மிதித்த ஆங்கில வாலிபர் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள்: உலகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=14) +--- Thread: தமிழ் பெண்ணுடன் திருமணம்: அம்மி மிதித்த ஆங்கில வாலிபர் (/showthread.php?tid=5115) |
தமிழ் பெண்ணுடன் திருமணம்: அம்மி மிதித்த ஆங்கில வாலிபர் - Vaanampaadi - 02-20-2005 பிப்ரவரி 20, 2005 ஆஸ்திரேலியா தமிழ் பெண்ணுடன் திருமணம்: 'அம்மி மிதித்த' ஆங்கில வாலிபர் <img src='http://thatstamil.indiainfo.com/images26/marriage350.jpg' border='0' alt='user posted image'> தஞ்சாவூர்: ஆஸ்திரேலியாவில் வசிக்கும் தமிழ்ப் பெண், இங்கிலாந்து வாலிபரை இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டார். மணமகள் கழுத்தில் தாலி கட்டிய மாப்பிள்ளை அம்மி மிதித்து அருந்ததி பார்த்து அசத்தினார். தஞ்சாவூர் மாவட்டம் ஈச்சங்குடியைச் சேர்ந்த ஜானகிராமன்சாந்தா தம்பதி ஆஸ்திரேலியாவில் வசித்து வருகின்றனர். இவர்களது மகள் சுசீலா. ஆஸ்திரேலியப் பிரஜையான இவர் கர்நாடக இசையில் தீராத ஆர்வம் கொண்டவர். வெஸ்டர்ன்கர்நாடக இசை கலப்பு கொண்ட ஒரு ஆல்பம் தயாரிக்கும் முயற்சியில் இறங்கினார். இந்த ஆல்பம் தயாரிப்புக்காக லண்டன் சென்றபோது கிடார் இசைக் கலைஞரான சாம் மில்ஸ், சுசீலாவுக்கு அறிமுகமானார். இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்தனர். ஆனால், இந்திய கலாச்சாரப்படியே திருமணம் செய்து கொள்ள சுசீலா விரும்பினார். அதை சாம் ஏற்றுக் கொண்டார். இதையடுத்து லண்டனில் இருந்து சாமின் குடும்பமும், ஆஸ்திரேலியாவில் இருந்து சுசீலாவின் குடும்பத்தினரும் தஞ்சாவூர் வந்தனர். தஞ்சை வெண்ணாற்றங்கரையில் ஒரு ஹோட்டலில் இருவருக்கும் இந்து முறைப்படி திருமணம் நடந்தது. மாப்பிள்ளையும் அவரது தந்தை, சகோதரர் உள்ளிட்டோரும் பட்டு வேட்டி சட்டையில் தகதகக்க, மணப்பெண் மற்றும் மாப்பிள்ளையின் சகோதரிகள், தாயார் ஆகியோர் பட்டுச் சேலைகளை அணிந்து திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றனர். <img src='http://thatstamil.indiainfo.com/images26/marriage500.jpg' border='0' alt='user posted image'> முழுக்க முழுக்க இந்து முறைப்படி நடந்த இத் திருமணத்தில் புரோகிதர் மந்திரங்கள் ஓத, மணப்பெண் கழுத்தில் தாலி கட்டினார் சாம். பிறகு மணமகளுக்கு மெட்டி அணிவித்தார், இதைத் தொடர்ந்து மணமக்கள் அம்மி மிதித்து, அருந்ததி பார்த்தனர். சாமின் பெற்றோர் அட்சதையை கொஞ்சம் டேஸ்ட் செய்து பார்த்தவாரே மணமக்கள் மீது தூவினர். இதையடுத்து தமிழ் சைவப் சாப்பாடும் பரிமாறப்பட்டது. வித்தியாசமான மாப்பிள்ளையைப் பார்க்க ஹோட்டலுக்குள் ஏராளமான பொது மக்கள் கூடினர். Thatstamil - sinnappu - 02-20-2005 பெட்டைய பாக்க தமிழ் போல தெரியேல்லை :wink: :wink: :wink: :wink: :wink: - vasanthan - 02-20-2005 தலையில் இரண்டு வாளி தண்ணீரை ஊத்திப்போட்டு பாரணை மப்புத் தெளிய பெட்டை தமிழ்போலத்தெரியும் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- tamilini - 02-20-2005 :| :| :| :mrgreen: - shanmuhi - 02-20-2005 Quote:தமிழ் பெண்ணுடன் திருமணம்: அம்மி மிதித்த ஆங்கில வாலிபர் இந்த காலகட்டத்தில் இப்படி பல திருமணங்கள் நடந்திருக்கின்றனவே...! - shiyam - 02-21-2005 புலத்தில் கன ஈழத்து பெண்கள் வெள்ளை காரர்களையும் ஈழத்து ஆண்கள் வெள்ளை காரிகளையும் செய்திருக்கிறார்கள் இது ஒரு ஆரோக்கிய மான மாற்றம்தான்கலாச்சார வித்தியாசங்களை இருவரும் நன்றாக புரிந்து கொண்டு வாழ்ந்தால் நல்லம் |