Yarl Forum
நக்மா பெயரில் இருப்பது கவர்ச்சி நடிகை மும்தாஜ்? - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8)
+--- Forum: சினிமா (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=39)
+--- Thread: நக்மா பெயரில் இருப்பது கவர்ச்சி நடிகை மும்தாஜ்? (/showthread.php?tid=5111)



நக்மா பெயரில் இருப்பது கவர்ச்சி நடிகை மும்தாஜ்? - Vaanampaadi - 02-20-2005

மும்தாஜ் தாவூத் தம்பி தொடர்பா?


மும்பை தாதா தாவூத் இப்ராகிமின் தம்பி அனீஸ் இப்ராகிமுடன் தொடர்புடைய நடிகை நான் அல்ல என்று நடிகை மு¬ம்தாஜ் மறுத்துள்ளார்.

அனீஸ் இப்ராகிமுக்கும், நடிகை நக்மாவுக்கும் தொடர்பு உள்ளதாக வெளியாகும் செய்திகளால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஆனால் அந்த நக்மா என்பது நான் அல்ல, தமிழில் இப்போது நடித்து வரும் நடிகை மும்தாஜின் ஒரிஜினல் பெயர் கூட நக்மாதான். அவரது தாயார் தபசும் கான், முன்பு வெடிகுண்டு வழக்கில் கைது செய்யப்பட்டவர்.

எனவே அவர்தான் அந்த நக்மா என்று நடிகை நக்மா தரப்பில் இருந்து புதுத் தகவலை வெளியிட்டுள்ளார்கள்.

இதை மும்தாஜ் திட்டவட்டமாக மறுத்துள்ளார். இதுகுறித்து மும்தாஜ் கூறுகையில்,

எனது ஒரிஜினல் பெயர் நக்மா கான், எனது தாயார் பெயர் தபசும்கான். 2002ம் ஆண்டு தாவூத் இப்ராகிம் தொடர்பான வழக்கில் எனது தாயாரை ¬மும்பை போலீஸார் கைது செய்ததாக நடிகை நிக்மா கூறியுள்ளது பொய்யான தகவல்.

எனது பெயர் நக்மா கான் என்பதால் இப்படி அபாண்டமாக பொய் சொல்வதா? எனக்கு தீவிரவாதிகளுடன் தொடர்பு இருந்தால், நான் ஏன் இங்கு வந்து ஆடிப் பாடி சம்பாதிக்கும் நிலையில் இருக்க வேண்டும்?

நான் மும்பையில் பந்த்ரா பகுதியில் குடியிருக்கவில்லை. அங்கிருந்து 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மல்லாட் பகுதியில்தான் வசித்து வந்தேன். அதிலும் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக சென்னையில்தான் வசித்து வருகிறேன்.

நக்மா என்ற நடிகைக்கும் தீவிரவாதிகளுக்கும் தொடர்பு இருப்பதாக தீவிரவாதி ராஜேஷ் கொடுத்துள்ள வாக்குமூலப்படி பார்த்தாலும் கூட, அந்த வருடங்களில் நான் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தேன். நடிகையாகவே இல்லை.

எனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்த இதுபோல தேவையில்லாத, சதிச் செயல் நடக்கிறது என்கிறார் மும்தாஜ்.

பாலிவுட் திரையுலகில் சைட் டேன்சராக இருந்தவர் மும்தாஜ். அவரைத் தான் டி.ராஜேந்தர் தனது மோனிஷா என் மோனலிஷா படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகப்படுத்தினார்.

Thatstamil
-------------------------------------------
தீவிரவாதிகளுடன் தொடர்பு: நக்மா பெயரில் இருப்பது கவர்ச்சி நடிகை மும்தாஜ்?

மும்பை, பிப். 20-

பிரபல நடிகை நக்மாவுக்கு தீவிரவாதி தாவூத்இப்ராகிம் கும்பலுடன் தொடர்பு இருப்பதாக புகார் கூறப்பட்டது.

பிடிபட்டவன் கொடுத்த முகவரியில் தேடியபோது நக்மா என்கிற மும்தாஜ் வசித்தது தெரிய வந்தது. இவர் தமிழ் கவர்ச்சி நடிகை. இவரது சொந்த பெயர் நக்மா.

டைரக்டர் டி.ராஜேந்தர் தனது மோனிசா என் மோனலிசா என்ற திரைப்படத்தில் அறிமுகப்படுத்தினார். குஷி படத்திலும் நடித்திருக்கிறார்.

நடிகை நக்மா வசித்த பாந்த்ரா என்ற பகுதியில்தான் இவரது வீடு உள்ளது. எனவே நடிகை மும்தாஜிக்கு தீவிரவாத கும்பலுடன் தொடர்பு உள்ளதா? என்ற சந்தேகம் கிளப்பப்பட்டு உள்ளது. இது பற்றி தற்போது விசாரணை நடக்கிறது.

மும்தாஜின் பாஸ்போர்ட்டிலும் நக்மா என்ற அவரது சொந்த பெயர்தான் இடம் பெற்றுள்ளது.

Maalaimalar

படம் நீக்கப்பட்டுள்ளது -- யாழினி