![]() |
|
சரிநிகர்சமானம் செய்த பாரதீ -தயா ஜிப்ரான் - - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: சரிநிகர்சமானம் செய்த பாரதீ -தயா ஜிப்ரான் - (/showthread.php?tid=5095) |
சரிநிகர்சமானம் செய்த பாரதீ -தயா ஜிப்ரான் - - Thaya Jibbrahn - 02-22-2005 சரிநிகர்சமானம் செய்த பாரதீ ! வெறும் விவாகரத்து பெற்றிடத் தானா உந்தன் பாடல்கள் ??? நீ மீண்டொருக்கால் வர வேண்டும். உந்தன் பாடல்களை அறம்பாட! இது கலி கடந்த காலம் பழையன கழிக்கும் வெறியில் நிர்வாணமே நாகரீகம் ஆகலாம். புதியன புகுக்கும் பணியில் தங்க விலங்கணிய கைகள் தண்டியாத்திரை நடாத்தலாம். இன்னும் எண்ணாத எதுவுமிங்கே இன்றைக்கே நிகழ்ந்தும் விடலாம். ஆனாலும் நீ நினைத்தது நிகழ நிகழ் காலமொன்று வாராமல் போகலாம். கோயில்கள் திருடிய பல்லவப் பாடல்கள் போன்றே உந்தன் நூற்றாண்டுத் தத்துவமும் மேடைப்பேச்சுக்கே உரிய தென்றாகலாம். உன் கண்ணம்மாவும் செல்லம்மாவும் எங்கள் கவிதையில் மட்டுமே அடிக்கடி வந்து போகின்றார்கள். பார்வையில் எப்போதும் பாஞ்சாலிகள் துச்சாதனர்களை கை கோர்த்தபடி. பெண்ணியம் பேசுதற்கு பெற்றோல் செலவு கேட்கிறர்கள். பார்த்தாயா? உன் பேசு பொருளெல்லாம் காசு பொருளாகி கடைவீதி வருவதை? என்னையும் ஆதிக்கவாதி என்பதாய் தீர்;மானம் போட்டிருப்பார்கள். ஆனால் நீ மட்டுமாகிலும் என்னை மன்னிப்பாய். ஏனெனில்ää நான் எண்ணுவதெல்லாம்ää ஒன்றின் முதுகில் இன்னொன்று சாவாரிப்பதையல்ல! ஒன்றின் சுமையை மற்றொன்று பகிரும் உலகத்தையே!! -தயா ஜிப்ரான் - - kavithan - 02-22-2005 <!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin--> உன் கண்ணம்மாவும் செல்லம்மாவும் எங்கள் கவிதையில் மட்டுமே அடிக்கடி வந்து போகின்றார்கள். பார்வையில் எப்போதும் பாஞ்சாலிகள் துச்சாதனர்களை கை கோர்த்தபடி. பெண்ணியம் பேசுதற்கு பெற்றோல் செலவு கேட்கிறர்கள். பார்த்தாயா? உன் பேசு பொருளெல்லாம் காசு பொருளாகி கடைவீதி வருவதை? <b>என்னையும் ஆதிக்கவாதி என்பதாய் தீர்;மானம் போட்டிருப்பார்கள்</b>. ஆனால் நீ மட்டுமாகிலும் என்னை மன்னிப்பாய். <b>ஏனெனில் நான் எண்ணுவதெல்லாம் ஒன்றின் முதுகில் இன்னொன்று சாவாரிப்பதையல்ல! ஒன்றின் சுமையை மற்றொன்று பகிரும் உலகத்தையே!! </b> <!--QuoteEnd--><!--QuoteEEnd--> உங்கள் வரிகளின் ஆழம் அருமை..... வாழ்த்துக்கள்... . நிச்சயமாக தீர்மானித்திருப்பார்கள்.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Thaya Jibbrahn - 02-22-2005 நன்றி கவிதன். உங்கள் ஊக்குவிப்பு எனக்கு உற்சாக மருந்தாகிறது. அதுவே போதையாகி விடாமலிருக்க அவ்வப்போது உங்கள் கருத்துக்களையும் முன்வையுங்கள். நட்புரிமையுடன் தயா ஜிப்ரான். - kavithan - 02-22-2005 <!--QuoteBegin-Thaya Jibbrahn+-->QUOTE(Thaya Jibbrahn)<!--QuoteEBegin-->நன்றி கவிதன். உங்கள் ஊக்குவிப்பு எனக்கு உற்சாக மருந்தாகிறது. அதுவே போதையாகி விடாமலிருக்க அவ்வப்போது உங்கள் கருத்துக்களையும் முன்வையுங்கள். நட்புரிமையுடன் தயா ஜிப்ரான்.<!--QuoteEnd--><!--QuoteEEnd--> நிச்சயமாக தயா ஜிப்ரான்.. இங்கு ஒரு சிலர் கவிதை போடுவார்கள் மிக நல்ல கவிதைகளை இட்டுவிட்டு போய்விடுவார்கள், ஆனால் அப்படியான கவிதைகளை வாசிக்க பல உள்ளங்கள் துடிக்கும். ஆனால் அதற்கு கருத்து சொல்ல மாட்டார்கள். ஆனால் அந்த கவிதையை போடுபவர் என்ன மன நிலையில் கவிதையை போடுகிறார் என எமக்கு தெரியாது. ஆனால் இங்கு நாம் அவர்கள் ஆக்கங்களுக்கு வரவேற்பு கொடுத்து ஊக்குவிக்கும் போது அவர்கள் எங்களுக்கு தொடர்ச்சியாக கவிதைகளை இடவோ கருத்துக்களை சொல்லவோ எம்முடன் இணைந்திருப்பார்கள் அல்லவா. தமது சொந்த ஆக்கங்களை இடுபவர்களை நாம் ஊக்கிவிப்பது வழமை.. அது தான் அவர்களின் வளர்ச்சியை மேலும் மேலும் உயர உதவிபுரியும். <!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->ஏனெனில் நான் எண்ணுவதெல்லாம் ஒன்றின் முதுகில் இன்னொன்று சாவாரிப்பதையல்ல! ஒன்றின் சுமையை மற்றொன்று பகிரும் உலகத்தையே<!--QuoteEnd--><!--QuoteEEnd--> இந்த வரிகள் தான் நியமானவை... எனக்கு பிடித்திருக்கின்றன Re: சரிநிகர்சமானம் செய்த பாரதீ -தயா ஜிப்ரான் - - shiyam - 02-22-2005 <!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->உன் கண்ணம்மாவும் செல்லம்மாவும் எங்கள் கவிதையில் மட்டுமே அடிக்கடி வந்து போகின்றார்கள். <!--QuoteEnd--><!--QuoteEEnd--> புதுமை பெண்களாய் அல்ல புதிய புதிய பொருட்களைவிற்கும் விளம்பர பெண்களாய் அழுதுவடியும் தொடராய் ஆண்களில் அந்த உணர்வு உண்டா இல்லையா என ஆராச்சிசெய்யும் ஆபாச நடிகைகளாய் மாதர்சங்க தலைவி மார்தட்டினார் பெண்கள் விடுதலை பெற்றுவிட்டனர் - shiyam - 02-22-2005 தொடருங்கள் தயா மருந்தை மருந்தாக பாவிப்பதும் அதையே அளவுக்கதிகமாக பாவித்து போதையாவதும் உங்களை பொறுத்தது <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> |