Yarl Forum
வெடிமருந்து கலந்த உணவை பலாத்காரமாக உண்ண வைத்தனராம்! - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: வெடிமருந்து கலந்த உணவை பலாத்காரமாக உண்ண வைத்தனராம்! (/showthread.php?tid=5071)



வெடிமருந்து கலந்த உணவை பலாத்காரமாக உண்ண வைத்தனராம்! - Vaanampaadi - 02-23-2005

வவுனியாவில் 17 படையினர் நோய்வாய்ப்பட்ட சம்பவம்
வெடிமருந்து கலந்த உணவை
பலாத்காரமாக உண்ண வைத்தனராம்!
பயிற்சியில் ஈடுபட்டிருந்த இராணுவத்தின ருக்கு அதன் பயிற்சி அதிகாரி பலாத்காரமாக வெடிமருந்து கலந்த உணவைப் பருக்கியதா லேயே வவுனியாவில் 17 இராணுவத்தினர் நோய் வாய்ப்பட்டனர் என்று கூறப்படுகின்றது.
வவுனியா இராணுவப் பயிற்சி முகாமில் அதிவிசேட பயிற்சியில் ஈடுபட்டு வந்த இராணு வத்தினரில் 17 பேர் கடந்த சனியன்று திடீர் சுகவீனமுற்று வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் ஒருவரின் உடல்நிலை மோசமாக இருந்ததால் அவர் அநு ராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
இவர்கள் 17 பேரும் திடீர் சுகவீனமுற்ற தற்கு வெடிமருந்து கலக்கப்பட்டஉணவு வழங் கப்பட்டதே காரணம் என்று பொலீஸ் விசார ணைகளின் போது தெரியவந்துள்ளதாம்.
வெடிமருந்து கலக்கப்பட்ட உணவை உண் ணுமாறு பயிற்சி வழங்கும் அதிகாரி வற்புறுத் தினார் என்று பாதிக்கப்பட்ட இராணுவத்தின ரில் சிலர் பொலீஸாரிடம் கூறியுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டது.
இவ்விடயம் குறித்து இராணுவத் தலை மையகத்திடம் வினாவியபோது வெடிமருந் துடன் தொடர்புடைய இராணுவப்பயிற்சி வழங்கப்படுவது உண்மையென்றும் உணவில் வெடிமருந்து கலக்கப்பட்டு பலாத்காரமாக அதை உண்ணக் கொடுக்கப்பட்டது என்பது பொய். அப்படியான முறைப்பாடு எதுவும் தமக்கு அறிவிக்கப்படவில்லை என்றும் தெரி விக்கப்பட்டது.

உதயன்


- tamilini - 02-23-2005

Confusedhock: Confusedhock: Confusedhock: