Yarl Forum
கடல்கோளின் பின்னர் புறப்பட்ட முதல் ரயில் மோதியதில் ..... - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: கடல்கோளின் பின்னர் புறப்பட்ட முதல் ரயில் மோதியதில் ..... (/showthread.php?tid=5066)



கடல்கோளின் பின்னர் புறப்பட்ட முதல் ரயில் மோதியதில் ..... - Vaanampaadi - 02-23-2005

கடல்கோளின் பின்னர் புறப்பட்ட முதல் ரயில் மோதியதில் அம்பலாங்கொடையில் பெண் பலி

மாத்தறையிலிருந்து கொழும்பு கோட்டையை நோக்கி வந்து கொண்டிருந்த ருகுணு குமாரி ரயில் மோதி வயோதிபப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இச் சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை காலை அம்பலாங்கொடை பொலிஸ் பிரிவிலுள்ள மாதம்பாகம ரயில் நிலையம் அருகில் இடம் பெற்றுள்ளது.

இதில், திலகாவதி (வயது 58) என்ற, ஆயுர்வேத வைத்திய அலுவலக லிகிதரான பெண்ணே பலியானார். ரயில் வந்து கொண்டிருந்த போது கவனயீனமாக இவர் ரயில் கடவை ஊடாக தனது கணவருடன் பாதை மாற முற்பட்ட போதே ரயிலில் மோதி இவர் உயிரிழந்துள்ளார்.

இதன் போது இவரின் கணவர் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளதாக அம்பலாங்கொடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஹெலெபொல தெரிவித்தார்.

கடல்கோள் அனர்த்தத்தின் பின்னர், தென்பகுதியிலிருந்து கொழும்பு நோக்கி வந்த முதலாவது ரயில் மோதியபோதே இப் பெண் உயிரிழந்துள்ளார்.

Thinakural