Yarl Forum
தீவிரவாதிகளின் துப்பாக்கிப் பிரயோகத்தில் இலங்கையர் மரணம் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: தீவிரவாதிகளின் துப்பாக்கிப் பிரயோகத்தில் இலங்கையர் மரணம் (/showthread.php?tid=5076)



தீவிரவாதிகளின் துப்பாக்கிப் பிரயோகத்தில் இலங்கையர் மரணம் - Vaanampaadi - 02-23-2005

ஈராக் தீவிரவாதிகளின் துப்பாக்கிப் பிரயோகத்தில் இலங்கையர் மரணம்
ஜ கொழும்பு நிருபர் செவ்வாய்க்கிழமை 22 பெப்ரவரி 2005 23:59 ஈழம்
ஈராக் தீவிரவாதிகளின் துப்பாக்கிப் பிரயோகத்தில் இலங்கையரான ரொகான் பெர்னாண்டோ என்ற வாகன சாரதி கொல்லப்பட்டுள்ளார்.

இலங்கையிலிருந்து குவைத்திற்கு வேலை வாய்ப்பின் நிமித்தம் சென்றிருந்த இவர் தான் பணியாற்றிய கம்பனியின் வற்புறுத்தல் காரணமாக ஈராக்கிற்கு தொழிலின் நிமித்தம் சென்ற சமயம் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அவரது உறவினர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈராக்கிற்கு இரண்டு நாட்கள் கடமைக்காக ஆரம்பத்தில் அனுப்பப்பட்ட இவர் பின்பு அது 10 நாட்கள் வரை நீடிக்கப்பட்டதாகவும் இந்த சமயத்தில் கடந்த 11 ஆம் திகதி இவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காயமடைந்து அமெரிக்க வைத்திய தளமொன்றில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இவரது உறவினரக்ளுக்கு அவரது நண்பர்கள் ஊடாகவே இந்த தகவல் தற்போது கிடைத்துள்ளது.

Puthinam


- tamilini - 02-23-2005

Cry Cry Cry Cry அந்த கம்பனி பதில் சொல்லுமா.. உயிருக்கு..??