| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 558 online users. » 0 Member(s) | 555 Guest(s) Applebot, Bing, Google
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,453
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,290
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,647
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,313
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,682
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,267
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,533
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,761
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,058
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,256
|
|
|
| ஈழத்தமிழர் விடுதலை இழுபறியாவது ஏன்? |
|
Posted by: gururaja - 03-30-2005, 01:07 PM - Forum: தமிழ் /தமிழர்
- Replies (5)
|
 |
ஈழத்தமிழர் விடுதலை இழுபறியாவது ஏன்?
-சங்கரன்-
1980இல் வீறுகொண்டெழுந்த தமிழ் இழைஞர்களின் உணர்ச்சிகளின் பிரவாகம் தமிழ் ஈழத்தை எட்டியது. தமிழீழம் தனியரசு ஒன்றே இலக்கு என்று தமிழ் இளைஞர்கள் பொங்கியதால் தமிழர் போராட்டம் விடுதலையின் சிகரத்தை எட்டியது. ஆனால் பின்னர் பலர் தமது கொள்கையில் தடம் புரண்டு தமிழர் விடுதலைக்கு தடைக்கற்களாகினர். இம் மாற்றுக் குழுக்களின் செயற்பாட்டினால் தமிழரின் விடுதலையும் சுதந்திரமும் காலம் கடந்து நீண்டு செல்கின்றது.
தமிழ் இளைஞர்களின் தலைமையில் ஏற்பட்ட தலைமைத்துவ ஒழுக்கவியல் முரண்பாட்டால் தமிழரின் உரிமைப் போராட்டத்தையும் விடுதலையையும் அதால பாதாளத்துக்குள் தள்ளியது. 'அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு" என்பது போல் தமிழ் இளைஞர்கள் ஐக்கியப்பட்டிருந்தால் தமிழீழம் என்ற தனிநாடு அன்றே உருவாகியிருக்கும்.
சிங்கள் தேசம் தமிழர் உரிமைகளை வழங்க மறுக்கின்றது அதற்கு தமிழரின் பிளவினை தமக்கு சாதகமாக பயன்படுத்தி அதனை ஊதிப்பற்ற வைக்க முனைந்து கொண்டு இருக்கின்றது. சிங்கள தேசியவாதம் தமிழர்களின் உரிமைகளை வழங்க விரும்பினாலோ விரும்பாவிட்டாலோ பரவாயில்லை தமிழ் இளைஞர்கள் ஒன்றிணைந்து ஒரு குடையின் கீழ் அணிதிரண்டு பொது எதிரியான சிங்கள பேரினவாதிகளுக்கு எதிராக போராடியிருந்தால் என்றோ சுதந்திரம் கிடைத்திருக்கும் தமிழ் இளைஞர்கள் அனைவரும் தமிழீழம் என்ற இலட்சியத்திற்காகவே போராடப் புறப்பட்டார்கள். கொள்கை வீரன் பிரபாகரன் தலைமையிலான கூட்டம் மட்டும் சுய கௌரவத்துடன் எவர் காலிலும் மண்டியிடாமல் தனித்துவத்துடன் போராடுகிறது. ஆனால் பல கூட்டங்கள் சிங்கள அரசின் இராணுவ அரசியல் வலையில் சிக்குண்டன.
மாற்றுக்குழுக்கள் பொது எதிரியின் காலில் மண்டியிட்டு தமிழரின் தனித்துவமும் தர்மமும் உடைய போராட்டத்தைச் சங்காரம் செய்ய முனைந்தமை தமிழின் வீர மரபுக்கு ஏற்பட்ட களங்கம்.
தேசத்துரோகிகளின் காட்டிக்கொடுப்புக்களினால் தமிழரின் உரிமைப்போராட்டமும் விடுதலையும் காலம் கடந்து நீண்டு செல்கின்றது. தேசநலன்ää பொதுநோக்குää மக்கள் நலன் எதுவும் இன்று சுயநலனையும் சுயலாபங்களையும் கருத்தில் கொண்டு பணத்திற்கும் பட்டத்திற்கும் சுகபோக வாழ்க்கைக்கும் அடிமையானவர்களாலேயே தமிழர் விடுதலையின் வேகம் நெருக்கடிகளை சந்தித்து தாமதமாகின்றது.
தமிழின ஒழிப்பையே இலட்சியமாகக் கொண்டு செயற்படும் ஈவிரக்கமற்ற எதிரியுடன் கொஞ்சிக்குலாவி சலுகைகளை கேட்டு அர்த்தமற்ற ஒப்ந்தங்கள் செய்வது தமிழினத்தை அழிவுப்பாதைக்கு இட்டுச் செல்லும். சிங்களப் பேரினவாத அரசின் ஆட்சியின் கீழ் தமிழர்கள் நிம்மதியாகவும் சுதந்திரப் பிரஜைகளாகவும் வாழ முடியும் என நினைப்பது முட்டாள் தனமானதும் தற்கொலைக்கு ஒப்பானதுமாகும்.
சிங்கள அரச பயங்கரவாதம் தமிழினத்தை பூண்டோடு அழிப்பதனை நோக்காக கொண்டிருக்கின்றது என்பதனை கடந்த கால கசப்பான அனுபவங்கள் மூலம் உணரலாம். இச்சிங்கள பேரினவாதத்தின் கைப்பொம்மையாக செயல்படும் மாற்றுக் குழுக்கள் தனிமனித வாழ்வுக்காக சொந்த இனத்தையே காட்டிக் கொடுக்கின்றன. இவர்களின் ஆபத்தானதும் பிற்போக்குத் தனமானதுமான தமிழின விரோதச் செயற்பாட்டில் தமிழர்கள் விழிப்பாக இருக்க வேண்டும். தமிழினத்துக்காக சுதந்திரம் வேண்டி வேலுப்பிள்ளை பிரபாகரன் தலைமையில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தமிழரின் சொத்தாக தமிழர் சேனை அடக்குமுறையாளருக்கு எதிராக சமர் செய்ய தமிழின விரோதிகள் அடக்குமுறையாளர்களுடன் கூட்டுச் சேர்ந்து செயற்படுவது தமிழனுக்கு ஏற்பட்ட சாபக்கேடாகும்.
உமாமகேஸ்வரன்ää ராகவன்ää மாத்தையாää கருணா என ஒரு கூட்டம் அதிலிருந்து வரதராஜப் பெருமாள் குழுää டக்ளஸ் தேவானந்தா குழுää சித்தார்த்தன் குழுää நுPசுடுகுஇ ராசிக் குழுää புளட் மோகன் குழுää ரெலோ வரதன் குழு போன்ற அரச படையின் தமிழ் ஒத்துழைப்பாளர்களினால் தமிழரின் உரிமைப்போராட்டம் பின்நோக்கி தள்ளப்படுகின்றது. புலிப்படையுடன் கரம் கோர்த்து அனைவரும் ஒன்றினைந்து போராடி இருந்தால் தமிழர் சேனைக்கு சிங்கள பேரினவாத படைகள் கதிகலங்கி புறமுதுகு காட்டி ஓடியிருக்கும்.
தமிழரின் சுதந்திரத்தினையும் விடுதலையினையும் நாசம் செய்யும் தமிழ் தேச விரோத குழுவினர் யதார்த்தத்தை புரிந்துகொள்ள வேண்டும் தமிழினத்தின் உரிமைகளை சங்காரம் செய்யாமல் ஒதுங்கிக் கொள்ள வேண்டும் சித்தார்த்தனின் கருத்தியலில் சிங்கள பேரினவாத அரசுடன் பேரம் பேசும் வல்லமை படைத்தவர்கள் விடுதலைப் புலிகள் என்பதனை ஏற்றுக் கொண்டிருப்பது தெரிகிறது. பேச்சு வார்த்தை மேசையில் தம்மை விட புலிகளினால் தான் தமிழ் மக்களுக்கு அதிகூடிய உரிமைகளை பெற்றுக் கொடுக்க முடியும் என்பதனையும் ஒப்புக் கொண்டிருக்கின்றார். தமிழர்களுக்கு அதிகூடிய உரிமைகளை பெற்றுக் கொடுக்கும் ஆற்றல் புலிகளைத் தவிர வேறு எந்த குழுவுக்கும் கிடையாது என்பது சித்தார்த்தனின் காலம் கடந்த ஞானம் பிறந்த தத்துவமாகும்.
மாற்றுக் குழுக்களை சிங்கள அரசு தனது தேவைகளுக்கு பயன்படுத்தும் தனது தேவைகள் முடிய தூக்கி எறிந்து விடும். இதுவே இன்று புளட் மோகனுக்கும்ää கருணா குழுவினருக்கும் நடந்தது. தமிழரின் ஆயுதக்குழுக்கள் கட்சிகள் இயக்கங்களாக பிரிந்தது மட்டுமன்றி இனம்ää சமயம்ää சாதிää வர்க்கம்ää பிரதேசவாதம் போன்ற பல்வேறு காரணங்களாலும் பிளவுண்டு போயுள்ளன. தமிழர்கள் அர்ப்பத்தனமான பிற்போக்கு மூட நம்பிக்கைகளில் சிந்தித்தே தமக்குள் தாம் முரண்படுவதை விடுத்து பொது எதிரிக்கு எதிராக போராட வேண்டும்.
தமிழர் தேசியம் பலம் பெற வேண்டும் தமிழர் தேசியத்திற்கு உறுதியான தலைவன் இருக்கிறான் தெளிவான தலைமை இருக்கிறது. தமிழரின் மூலதனமான விடுதலைப் புலிகள் இயக்கம் தமிழ் தேசியத்தின் சின்னமாக பரிணாம வளர்ச்சி பெற்று அத்துடன் தமிழர் சேனை மாபெரும் சக்தியாக மாண்புடன் இருக்கின்றது. புலிகளால் தமிழர் தன்னாட்சியினை நிறுவ முடியும் ஆனால் அரச படைகள் ஒத்துழைப்பாளர்களினால் பேரினவாதத்தின் பொம்மை அரசையே நிறுவ முடியும்.
சிறிலங்காவின் அரசியல் இராணுவ நுட்பங்களினால் தமிழரின் தேசிய விடுதலைப் போராட்டம் பின் நோக்கி சென்றதை விட தமிழர்கள் தந்தை நாடு எனவும் தாய் நாடு எனவும் வணங்கிய இந்தியாவால் தமிழர் விடுதலைப்போராட்டம் பின்தள்ளப்பட்ட வீதம் அதிகம். இந்திய அரசே தமிழர் சேனையின் ஒற்றுமையை குழப்புவதில் பெரும் வெற்றி கண்டது. தமிழினப்போர் வீரர்களை பிளவு படுத்தி பல ஆயுதக் குழுக்களை வளர்த்து விட்டது. இந்தியாவின் சதிகார நடவடிக்கையின் பலனாக தமிழர் சேனை தனக்குள் பிளவுண்டு போனதினால் தமிழர் பலம் சிதறுன்டு போனது.
அரசியல் கட்சிகள் விடையத்திலும் சரி ஆயுத இயக்கங்கள் குழுக்கள் விடையத்திலும் சரி தமிழர் ஒற்றுமையின் பலத்தை சிதைக்கும் நரி வேலையிலேயே இந்தியா ஈடுபட்டுள்ளது. அண்மையில் தமிழர் கூட்டமைப்பு கூட்டணி தமிழரசுக் கட்சியில் போட்டியிட்டு நாடாளுமன்றம் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் இந்தியா றோவிடம் பெருந்தெகையான பணத்தினை தேர்தல் காலத்தில் பெற்றதாக தகவல்கள் கசிந்திருக்கின்றன.
தமிழ் மிதவாத கட்சிகளையும் சரி தீவிரவாத இயக்கங்களையும் சரி தனக்குச் சாதகமாக மாற்றிக்கொள்ள இந்திய ராஜதந்திர வட்டாரங்கள் கடும் பிரயத்தனம் செய்து வருகின்றன. இதில் பிரபாகரன் மட்டும் சுயத்தடன் இருக்கின்றார் ஏனையவாகள் சுயம் இழந்து பொம்மைகளாகி விட்டனர். தமிழ் தீவிரவாத இயக்கங்களில் இருந்தவர்கள் சுயமாக இயங்க முடியாததினால் ஜனநாயக அரசியலில் மிதவாதம் என்று கூறிக்கொண்டு சிறிலங்கா அரச படையின் துணைப்படையாக இயங்குவது தமிழர்களுக்கு தமிழர் செய்யும் சகித்துக் கொள்ள முடியாத நம்பிக்கை துரோகமாகும்.
இவ் அரச படை ஒத்துழைப்பாளர்களினால் தமிழர்களுக்கு குறுகிய காலத்திற்கு சலுகைகளை பெற்றுக் கொடுக்க முடியுமே தவிர நீண்டகாலப் பார்வையில் உரிமைகளை பெற்றுக் கொடுக்கவோ அதனை பேணிப்பாதுகாக்கவோ முடியாது. தமிழினத்தின் அழிவுப் பாதைக்கு இட்டுச் செல்லும் கொடும் செயற்பாட்டாளர்கள் இனியாவது மனம் திருந்தி துரோகச் செயற்பாட்டுக்கு முடிவு கட்டி விட்டு ஒதுங்கிச் செல்ல வேண்டும்.
தமிழர்கள் தம் உரிமைகளை பிரபாகரன் வாழும் காலத்தில் பெற்று விடவேண்டும் இல்லையேல் தமிழர் சுதந்திரம் என்பது கேள்விக்குறியாகவே மாறும் தடம் புரளாத நிலை குலையாத தலைவன் பிரபாகரனாலேயே தமிழரின் ஐக்கியத்தை பேண முடியுமே தவிர வேறு எந்தத் தலைவனாலும் இதற்கு மேல் தமிழ் இனத்தை ஐக்கியப்படுத்த முடியாது. எண்ணற்ற தியாககங்கள் புரிந்து எத்தனையோ உயிர் பலி கொடுத்து இத்தனை ஆண்டுகளாக கண்ணீரும் இரத்தமும் வியர்வையும் சிந்தி கட்டி எழுப்பிய சுதந்திர விடுதலைப் போராட்டத்தை ஆபத்தான சுழலுக்குள் தள்ளிக் கொண்டிருக்கும் தமிழின விரோதிகள் விடையத்தில் தமிழ் மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும். காக்கை வன்னியனாகää எட்டப்பனாக. தமிழின விரோதிகளாக செயற்படும் காட்டிக் கொடுப்பாளர்கள் தமது காட்டிக்கொடுப்பு துரோகச் செயலுக்கு முடிவு கட்ட வேண்டியது அவசியம். இது தங்கள் உயிர்களை பாதுகாப்பதுடன் தமிழர் விடுதலையினையும் சுதந்திரத்தினையும் விரைவு படுத்தும்.
நன்றி.தமிழ்நாதம்
|
|
|
| ஐநா செயலாளர் கோபி ஆனானின் திருகுதாளம்? |
|
Posted by: Bond007 - 03-30-2005, 11:19 AM - Forum: செய்திகள்: உலகம்
- Replies (2)
|
 |
நம்மடை பெடியளைப்பற்றி தேவையில்லாத கதை விட்ட ஐநா செயலாளர் உண்மையில் நேர்மையானவரா? உலக உணவு திட்டத்திற்கு பொருட்களை வழங்கும் ஏலத்தில் அனானின் மகனுடைய ஸ்தாபனத்திற்கு அனுமதி கிடைத்தது எப்படி? அண்மையில் நடைபெற்ற விசாரணை பல மூடி மறைப்'புகளை செய்து அனான் இதில் சம்பந்தப்படவில்லை என்று மூடி மறைத்துள்ளனர். ஆனால் இந்த விசாரணை ஒரு நாள் மட்டும் நடந்ததாம். அத்தோடு மூன்று பேர் கொண்ட அந்த விசாரணை குழுவில் இருவர் மட்டும் அனானுக்கு சாதகமாக இருக்க முன்றாமவர் அனானனை முழுமையான சுற்றவாளி எனக் கருத முடியாத வகையில் அறிக்கை வெளியிட்டுள்ளார். இதில் வேடிக்கை என்ன வென்றால் இந்த விசாரணை சம்பந்தமான அனைத்து ஆவணங்களையும் மிக அவசர அவசரமாக விசாரணை நடந்த அடுத்த நாளே அழித்து விட்டார்கள். நெருப்பில்லாமல் புகையாது பாருங்கோ. இப்ப அனானனுக்கு விழுந்து கட்டி ஆதரவு தெரிவிச்ச முதல் நாடு அமரிக்காதான்.. உவர் எங்கட பகுதிக்கு வராமல் விட்டது ஏன் எண்டு தெரியும் தானே...
|
|
|
| நாய்களுக்கு வழங்கப்படும் |
|
Posted by: eelapirean - 03-29-2005, 05:10 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (10)
|
 |
நாய்களுக்கு வழங்கப்படும் தகரத்திலடைக்கப்பட்ட உணவுää திருகோணமலை நகரில் கடல்கோளினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விநியோகிக்கப்பட்டிருப்பதை மாகாணச் சுகாதாரத் திணைக்கள அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். இதே ரக டின் உணவுää நாட்டின் தென்பகுதியில் கடல்கோளினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கும் வழங்கப்பட்டது கடந்த வாரம் கண்டுபிடிக்கப்பட்டு அம்பலப்படுத்தப்பட்டது. இப்போது திருகோணமலை நகரிலும் சுற்றுப்புறங்களிலும் இவ்வுணவு வகைகள் விநியோகிக்கப்பட்டு வருவதாகää சுகாதாரத் திணைக்கள அதிகாரி ஒருவர் தெரிவித்தார். வீட்டுப் பிராணிகளுக்குக் கொடுக்கும் ரின் உணவை பாவிப்பது மனிதனின் உடல்நலத்தைப் பாதிக்கும் என்று சகாதார அதிகாரிகள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
நன்றி நிதர்சனம்
|
|
|
| தேசத்தின் தலைவிதியை மாற்றி அமைக்கக்கூடிய உளவுத்தொழிலில் பாலி |
|
Posted by: tamilini - 03-29-2005, 03:41 PM - Forum: அரசியல் / பொருளாதாரம்
- Replies (2)
|
 |
தேசத்தின் தலைவிதியை மாற்றி அமைக்கக்கூடிய உளவுத்தொழிலில் பாலியல் செயற்பாடுகள் -சங்கரன்
பெண்களினால் ஆக்கவும் முடியும் அழிக்கவும் முடியும் என்பது பழமொழி அதனால் பெண் பாலியல் உளவாளிகளின் வருகை உளவுத்துறைக்குள் வேகமாக அதிகரித்து வருகின்றது. பாலியல் நடவடிக்கைகளை பலம் பொருந்திய ஆயுதமாக பயன்படுத்தி உளவுத் தொழிலில் ஈடுபடும் பெண் உளவாளிகளினால் ஒரு தேசத்தின் தலைவிதியையே மாற்றி அமைக்க முடிகின்றது. உளவுத்தொழிலில் பெண்கள் மிகவும் திறமையாக பணியாற்றுகின்றார்கள் என புலனாய்வு துறையைச் சேர்ந்த நிபுணர்கள் கூறுகின்றார்கள். உடல் கவர்சியினாலும்ää கூந்தல் அழகினாலும் அதிகாரிகளையும் தலைவர்களையும் கவர்ந்திழுக்கும் ஆற்றல் உடையவர்களாக பெண் உளவாளிகள் விளங்குகின்றனர்.
கவர்ச்சியாகத் தோன்றும் பெண் உளவாளிகள் அழகு மிடுக்கினால் காதலியாகவோ வேறுவகையிலோ ஆண்களை உணர்ச்சி வசப்படுத்தும் வல்லமை உடையவர்களாக மாறுகின்றாள்.
உளவுத்தொழிலில் பாலியல் செயற்பாடுகள் இன்று மலிந்துவிட்டன அந்தவகையில் இலங்கையிலும் பாலியல் ஆயுதத்தின் செயற்பாடுகள் காணப்படுகின்றன. தமிழ் இளைஞர்களை சிங்கள புலனாய்வாளர்கள் தமது வலையில் வீழ்த்துவதற்கு பாலியல் சதிகளை விலை மாதர் ஊடாக இலவசமாக ஏற்பாடு செய்து கொடுக்கின்றனர்.
தமிழ் இளைஞர்களை புலனாய்வுத் தேவைக்கு உள்வாங்கும் நோக்குடன் பாலியல் தொழிற்பாட்டு நிலையம் ஒன்றை அனுராதபுரத்தில் அமைத்திருப்பதாக கூறப்படுகின்றது. தமிழ் மொழியில் தேர்ச்சிபெற்ற சிங்கள பெண் உளவாளிகளையும் சோரம் போன தமிழ் பெண்களையும் சிங்கள புலனாய்வுத்துறை பாலியல் உளவுச் செயற்பாட்டிற்கு பயன்படுத்துகின்றது. புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள்ளும் சிங்களப் பெண் பாலியல் உளவாளிகள் ஊடுருவலாம். அரசியல் பணிக்கென இராணுவக்கட்டுப்பாட்டு பிரதேசம் செல்லும் அரசியல் போராளிகளையும் சிங்களப் பெண் பாலியல் உளவாளிகள் தமது வலையில் வீழ்த்த முயலலாம் அரசுடன் ஒட்டுப்படையாக இயங்குவோருக்கு பாலியல் செயற்பாட்டிற்கு பூரண வசதிகளை அரசு செய்து கொடுத்துள்ளது. கவர்சிகரமான பெண் உளவாளிகள் மூலம் அவர்களை தொடர்ந்து வசப்படுத்தியும் வருகின்றதை சிங்கள உளவுத்துறையும் அண்மைக்கால நடவடிக்கையில் இருந்து அறிய முடிகின்றது.
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் குமாரிகுரே விடயமும் ஒரு புலனாய்வு ஊடுருவல் பாலியல் செயற்பாடு என்று கூற முடியும். இரண்டாம் உலக யுத்தத்தின் பாதையினையும் மாற்றியதில் சிந்தியா என்னும் பெயர் கொண்ட பெண்னின் பங்களிப்பு கனிசமானது. சிந்தியாவின் அழகினாலும் கவர்ச்சியினாலும் ஆண்கள் அவளிடம் இலகுவில் அடிமையானார்கள். சிந்தியாவின் முதல் புலனாய்வுக் களம் போலந்து நாட்டு வெளிவிவகார அமைச்சில் வேலைபார்க்கும் உயர் அதிகாரியை தனது வலையில் வீழ்த்துவதாக இருந்தது. சிந்தியாவின் அழகுக்கோலத்தை எதிர்க்க முடியாது போன போலந்து அதிகாரி அந்த அழகிய மங்கையுடன் நெருக்கமானார். இருவருக்கும் ஏற்பட்ட பாலியல் பிணைப்பால் போலந்து இரும்பு அறையில் இருந்த இரகசியங்கள் எல்லாம் கட்டிலுக்கு வந்தன. இரண்டாம் உலக யுத்தத்தின் போக்கையே மாற்றிய உலகப்பிரசித்திபெற்ற இடமே அந்தக்கட்டில்தான்.
1941ம் ஆண்டு பிரான்ஸ்ää இத்தாலி தூதரகங்களினுள் ஊடுருவக்கூடிய ஒருவர் தேவைப்பட்டது. அதன்பிரகாரம் சிந்தியா தெரிவு செய்ய்பட்டு வோசிங்டன் நகருக்கு அனுப்பப்பட்டால் அங்கு அவள் மதுபான விருந்துகளில் பங்கு கொண்டு ஆடினாள் அதனூடாக இத்தாலி நாட்டு அதிபர் முசோலினியின் கடற்படை உதவியாளரான 'லைஸ்" என்பவரை தனது காதல் வலையில் சிக்க வைத்தாள். 'லைஸ்" தலைகால் தெரியாமல் சிந்தியாவின் மேல் காதல்கொண்டார் காமலீலைகளின் ருசியால் சிந்தியாவுக்கு முகவரானார். இந்த இரண்டாவது கட்டிலில் இத்தாலிய இரும்பறையில் பூட்டிவைத்திருந்த இரகசியங்கள் அம்பலமாகின.
சிந்தியா தனது நோக்கம் நிறைவேற காதலன் லைசை கைகழுவி விட்டு மாயமாக மறைந்தால் இறுதியில் லைசின் பலவீனமும் துரோகத்தனமும் தெரிய வந்ததினால் அவர் துரோகி என்ற பட்டத்துடன் பதவி இழந்து வீடு சென்றார். சிந்தியாவின் அடுத்த இலக்கு பிரான்ஸ் தூதரகமாக இருந்தது. தூதரின் பத்திரிகைத் தொடர்பாளரான பிரேசலுடன் ஊடுருவி காதல் தொடர்பை ஏற்படுத்திக்க கொண்டார் பிரேசலும் சிந்தியாவை தனது மூன்றாவது மனைவியின் வீட்டிற்கு அழைத்துச்சென்று அங்கு தங்குவதற்கு ஒரு அறையினை ஒதுக்கினார். இருவரும் காம லீலைகளில் ஈடுபடுவதற்கு தூதரகத்தில் தங்கினார்கள்.
காவலாளியும் அவர்களின் காமலீலைகளுக்கு இடம் கொடுத்தான். காவலாளி இடம் அளித்ததற்கு உதவியாக சிந்தியா வழமையாக பணமும் மதுவும் கொடுத்து வந்தாள். உளவு வேலைகளில் ஈடுபடும் நாட்களில் காவலாளிக்கு வழங்கும் மதுவில் மயக்க மருந்தினையும் கலந்து கொடுப்பாள் காவலாளி மயங்கிவிட சிந்தியாவும் பிரேசினுடன் காமத ;திருவிளையாடல்களில் ஈடுபட பிரித்தானிய உளவாளிகள் தூதரகத்தின் பாதுகாப்பு அறைக்குள் புகுந்து சாமர்த்தியமாக பூட்டுக்களை உடைத்து அங்கிருக்கும் இரகசியத் தகவல்களை நகலெடுத்துக்கொண்டு அதே சாமர்த்தியத்துடன் பூட்டுக்களில் தடையும் ஏதும் தெரியாமல் பூட்டி விடுவார்கள்.
சிந்தியா இருந்திரா விட்டால் பிரான்சையும் நேசநாடுகளையும் பிரித்தானியா வெற்றி கொள்வது கடினமென அதன் பாதுகாப்பு அதிகாரிகளே ஒப்புக்கொண்டனர். சிறிது காலத்தின் பின் 'உடலைவிற்று உளவு வேலையில் ஈடுபடுவது பற்றி வெட்கப்படவில்லையா?' என சிந்தியாவிடம் ஒரு பத்திரிகையாளர்கேட்டபோது அவளின் பதில் 'எனது பாலியல் செயற்பாட்டால் ஆயிரக்கணக்கான பிரித்தானியää அமெரிக்க உயிர்கள் பாதுகாக்கப்பட்டுள்ளதுடன் எனது நாடும் வெற்றிவாகை சூடியதால் நான் மகிழ்ச்சி அடைகின்றேன்" என்றார்.
சிந்தியாவைப்போல் இன்னுமொரு பெண் பாலியல் உளவாளியான ரெனியாவின் வாழ்க்கைச்சரிதத்தை நோக்குவோம். இவள் கிழக்கு ஜேர்மனியில் இரகசிய சேவையில் பயிற்சி பெற்றால் கியூபாவின் புரட்சித் தலைவர்களான கஸ்ரோவினையும் சேகுவேராவினையும் கண்காணிப்தற்கும் அவர்களின் திட்டங்கள் பற்றி அறிவதற்கும் எம்.எவ்.எஸ் என்ற ஜேர்மன் உளவு நிறுவனத்தாலும் கெ.ஜி.பி என்ற ரஸ்ய உளவு நிறுவனத்தாலும் ரெனியா பணிக்கு அமர்த்தப்பட்டு இருந்தாள். ரெனியா தனது புலனாய்வுப்பணியை ஆரம்பிக்க படாதபாடுபட்டு சேகுவேராவுடன் காதல் கொண்டு அவனுக்கும் வேலை செய்தால் ஒரே நேரத்தி;ல் மூன்று நாடுகளுக்கு மூன்று பக்க முகவராக வேலைசெய்தாள். நடன நிகழ்வுகளில் அர்வம் இருந்ததினால் கலாசார பிரதிநிதியாகவும் பின்னர் கியூபாவில் கல்வி அமைச்சின் முக்கிய ஒரு அதிகாரியாகவும் பின்னர் பகுதி நேர பெண்கள் இராணுவ அமைப்பின் அதிகாரியாகவும் சேகுவேரா ரெனியாவை நியமித்தார்.
பொலிவியா நாட்டின் புரட்சிக்கான திட்டத்தை சேகுவேரா உருவாக்கியபோது உளவு வேலை பார்ப்பதற்கு பொறுப்பாளராக ரெனியா நியமிக்கப்பட்டாள் அவளின் காமலீலைகளில் சேகுவேரா மீள முடியாது போனதால் 'சே" யினை ஆட்டிப்படைக்கும் அளவுக்கு உருவெடுத்தால் ரெனியா என்ற அந்தப் பாலியல் உளவாளி. 'சே" யுக்குள் சாதுரியமாக ஊடுருவி இருந்த ரெனியா தனது உண்மையான எஜமானர்களுக்கு சேயின் திட்டங்களையும் நடவடிக்கைகள் பற்றி எல்லாம் தெரியப்படுத்திக் கொண்டிருந்தாள்.
1966ம் ஆண்டு மார்ச் மாதம் 23ம் திகதி 'சே" புரட்சிக்கான நாளை குறித்திருந்தார் ஆனால் பத்து நாட்களுக்கு முன் பொலிவியப்படைகள் சேகுவேராவின் படைகளை தாக்கி அழிக்கத் தொடங்கி விட்டன. ரெனியாவால் அனுப்பப்பட்ட புலனாய்வுத் தகவலே இத் திடீர் தாக்குதலுக்கு காரணம் எனக் கூறப்படுகின்றது. செகுவேராவின் மரணத்திற்கும் ரெனியாதான் காரணம் என ஏகாதிபத்திய நாடுகள் கூறுகின்றன ஆனால் நேசநாடுகள் அவள் ஒரு தேசபக்தை என சுட்டிக்காட்டியுள்ளனர்.
ரெனியா என்ற பாலியல் உளவாளியின் வலையில் 'சே" சிக்குண்டதால் பொலிவியாவினதும்ää கியூபாவினதும் தலைவிதியே மாற்றி எழுதப்பட்டது. உலகின் முதலாவது பாலியல் உளவாளியென வர்ணிக்கப்பட்டவள் மாற்றாக்ஹரி. இவள் ஜேர்மனிக்காக உளவு வேலை செய்தால் அவளிடம் இருந்த மிகவும் பலம் பொருந்திய ஆயுதம் தன்னிகரில்லா பாலியல் செயற்பாடும் உடல் அழகுமாகும் அதன் மூலம் தனது உளவு வேலையை இலகுவாக்கினால். யாவா நாட்டில் ஹவாய் நாட்டு நடனத்தை கற்றபின்னர் பாரிஸ் நகரத்தில் மதுபான சாலைகளில் நாட்டியக்காறி ஆனால் அங்கு அவள் இராணுவத் தளபதிகளையும் அரசியல்வாதிகளையும் முழு இரவும் தனது நடனத்தால் மகிழ்வித்து கட்டில் வரை இழுத்துச்சென்று உத்தியோகபூர்வமான இரகசியத் தகவல்களை கறந்து அவற்வை ஜேர்மனிக்கு அனுப்பிக்கொண்டிருந்தாள்.
இவள் பிரான்சின் உளவுத்துறையினரால் இனம் காணப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டால். புலனாய்வு உலகின் வெற்றிகரதமான ஊடுருவல்களை கவர்ச்சிகரமான பாலியல் உளவாளிகள் மூலம் சாதிக்க முடிகின்றது. உளவாளி பெண்களின் காதல் மொழிக்கும் காம லீலைகளுக்கும் வரலாற்றில் அடிமையானவர்களை எண்ணி கணக்கிட முடியாது. பெண் பாலியல் உளவாளிகளின் பாலியல் செயற்பாட்டால் முடிதுறந்தவர்கள் பலர். பதவி இழந்தவர்கள் பலர் துரோகி என்ற பட்டம் பெற்று தூக்கு மேடைக்கு சென்ற ஆண்கள் பலர் என்பது வரலாற்றுப்பாடமாகும்.
தமிழர் தேசமும் இவ்விடையத்தில் விழிப்பாக இருக்கவேண்டும். பாலியல் விளையாட்டுக்கள் சர்வசாதாரணமாகிவிட்ட இன்றைய உலகில் தமிழரின் உரிமைப்போராட்டத்தை அளிக்கவும் சிங்கள அரசு பாலியலை பலம் பொருந்திய ஆயுதமாக பயன்படுத்த முனையலாம். அந்த பெண் உளவாளிகளின் வலையில் எவருமே மாண்டு விடக் கூடாது.
தகவல் www.sooriyan.com
|
|
|
| இரு போராளிகள் வெட்டிக்கொலை |
|
Posted by: selvanNL - 03-29-2005, 12:15 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (11)
|
 |
<b>ºகபோராளிகளுக்கு உணவு விநியோகம் செய்துவிட்டு வானொன்றில் திரும்பிக் கொண்டிருந்த இரு போராளிகளை வழிமறித்த ஆயுத பாணிகள் அவர்களைக் கொடூரமான முறையில் வெட்டிக்கொலை செய்துள்ளனர்.மட்டக்களப்பு 5 ஆம் கட்டையடிப் பகுதியில் கடந்த சனிக்கிழமை இரவு 7 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் மேஜர் குறளமுதன் (கிருஷ்ணபிள்ளை, சிவனேசன் புதுக்குளம் கரவெட்டி), லெப்டினன்ட் இறைமாறன் (அருள்ராஜா சஞ்சயன் முனிக்கோயில் கோப்பாய் தெற்கு) ஆகிய போராளிகள் பலியானார்கள்.</b>
<b>முகாமுக்கு உணவை விநியோகித்து விட்டு இரவு 7 மணியளவில் வானில் திரும்பிக் கொண்டிருந்த வேளை, இன்னொரு வானில் வந்து வழிமறித்த கருணா குழுவினரும் இராணுவத்தினருமே இரு போராளிகளையும் கொடூரமான முறையில் வெட்டிக்கொலை செய்துவிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக விடுதலைப் புலிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
-----------------------------------------------------------------------
[b]ţú¡Å¨¼ó¾ §À¡ÃÇ¢¸Ç¢ìÌ ±ÉÐ ¬úó¾ «ïºÄ¢¸û..</b>
|
|
|
| பூவரசம் வேலியும் புலுனிக் குஞ்சுகளும் |
|
Posted by: kirubans - 03-29-2005, 12:15 AM - Forum: நூற்றோட்டம்
- Replies (7)
|
 |
கவிஞர் புதுவை இரத்தினதுரையின் "பூவரசம் வேலியும் புலுனிக் குஞ்சுகளும்" இலண்டனில் வெளியிடப்பட்டது.
போராட்ட வரலாற்றையும், போராட்ட வாழ்பனுவங்களையும் கவிதை வடிவில் தந்துள்ளார். எல்லோரும் படிக்க வேண்டிய கவிதை நூல்.
கவிதைகளில் ஒன்று
<b>வேண்டும் வரமொன்று</b>
முகிலிறங்கிக் தவழும் முலையென
கிடக்கிறது மலை.
பனிவிழுந்த பச்சை இலைகளின்மேல்
வெளிச்சம் தூவுறான் வெய்யோன்.
காலுக்கடியில் கலகலத்தவாறு
ஓடுறது நீரோடை.
குமரியழகோடு கிடக்கும் மரங்கள்தழுவி
போகும் வழியில்
ஈர இதழ்கொண்டு என்னையும் உரசி
மன்மததேசம் போகிறது மலைக்காற்று.
என்னூருக்கில்லாத எழில்கொண்டு
இலங்கிறது இவ்வூர்.
"காணக் கோடிவிழி காணாது" என
இங்கொருநாள் வாழ்ந்தவனே எழுதியிருப்பான்.
இத்தனை அழகும் எனக்குமுரியதென
எத்தனை கவிதை எழுதியிருப்பேன்.
பொய்யாகி
பொசுக்கென தீயெரித்துப்போனது
அக்கவிதையை.
வாழ்வின் இறுதியிலாயினும்
இங்கு வாழ்ந்திறக்க அவாவுற்றேன்.
என்கனவில் கல்லெறிந்து கலைத்தனர்
பாவியர்.
மீண்டுமொருமுறை பார்க்கக் கிடைத்ததே
போதுமெனக்கு.
இனி என்னூரின் நாயுருவிப் பற்றையிடையே,
இலந்தை மரத்தின் சிறுநிழலின் கீழே
படுத்தபடி உயிர்நீக்கும் பாக்கியம் தா.
நேற்றென் பூட்டனையும்,
பாட்டனையும்,
நாளை எந்தையையும் எரிக்கும் சுடலையில்
நானும் எரியும் வரம்வேண்டும்.
தருவாயா இறைவா?
|
|
|
| நீதி நிர்வாகத் துறைப் பொறுப்பாளர் திரு. பரா |
|
Posted by: eelapirean - 03-28-2005, 09:22 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- No Replies
|
 |
அந்தப் பச்சைக்கிளிகள் கறுத்தக் கொழும்பான் மாம்பழங்களை உருசித்து உருசித்து எழுப்பிய கீதத்தாலும் நேர மாற்றத்தாலும் விடிகாலையிலேயே உறக்கம் கலைந்து விட்டது. தோளில் துவாயுடன் பல்துலக்கியபடி பூத்துக் கொட்டியிருந்த நந்தியாவெட்டைப்
பூக்களையும் தங்கியிருந்த இடத்தின் காலை அழகையும் இரசித்த காலை வேளை ஒன்றில்........
வோக்கி அழைக்கிறது.... சொல்லுங்கோ.. கெனடி....
முழக்கம் வானதி அக்காவையும் திரு அண்ணையையும் ஒரு இடமும் இண்டைக்குப் போக வேண்டாம். முக்கிய சந்திப்பு இருக்கெண்டு சொல்லுங்கோ.... என்று அடுத்த முனையில் இருந்து திரு. பேரின்பம் அவர்களது அறிவுறுத்தல் வந்தது...
உற்சாக மேலீட்டாலும் காலைப் பனிக்குளிராலும் உடல் புல்லரித்துப் போயிருந்தது.... அந்தப் பரவிப் பாஞ்சானின் ஆழ்ந்த அமைதியைக் கலைத்துக்கொண்டு வண்டி ஒன்று வாசலை அண்மித்தது....
திரு அண்ணை வாங்கோ போகலாம்.... என்று துடித்தபடி வந்தார் அமல்.
வண்டியில் இலக்கியன்.....
இலக்கியனின் நேற்றைய வண்டி ஓட்டத்தில் சிறுகுடலும் பெருங்குடலும் ஒன்றாகிவிட்டது என்று சொல்லியிருந்தேன்.... அதுதானோ என்னவோ இலக்கியன் ஒருவித சிரிப்போடு ஏறுங்கள் என்றுசொல்ல வாகனம் மீண்டும் வளியைவிட வேகமாக எங்கேயோ பறந்தது......
சந்திப்பை முடித்துக் கொண்டு திரும்பிய எங்களுக்கு நாங்கள் விரும்பியவர்களைப் பேட்டி எடுக்க உதவும்படி ஊடகப் பொறுப்பாளர் அறிவுறுத்தப்பட... அவர் நாங்கள் கொடுத்த பட்டியலில் இரண்டாம் நபரைச் சந்திக்க உடனடியாக ஏற்பாடு செய்தார்.
வான் மீண்டும் பரவிப்பாஞ்சானுக்கு வந்து தமிழீழ நீதி நிர்வாகத்துறை வளாகத்தில் நின்றது.
அமல் எங்களை நீதி நிர்வாகத் துறைப் பொறுப்பாளர் திரு. பரா அவர்களுக்கு அறிமுகம்செய்து வைத்தார்.
தமிழர் பண்பாட்டுடன் பிறந்த விருந்தோம்பலைத் தவிர்ப்பார்களா புலிகள்...? விருந்தோம்பலுக்குப் பின்னர் முழக்கம் படிப்போருக்கான நேர்காணலை ஆரம்பித்தோம்.....
முழக்கம் தரப்பில் பொறுப்பாசிரியர் வானதி ஆசிரியர் திரு நண்பர்களான முருகன் மற்றும் கஜன் ஆகியோர் உடன் இருந்தனர்.
<b>திரு:</b> தமிழீழ நீதி நிர்வாகத்துறை தமிழீழ அரசுக்கான பயணத்தில் எங்கு நிற்கின்றது...?
<b>திரு.பரா: </b>தமிழீழப் பிரதேசங்களை சிறீலங்கா ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டு எடுக்கும் அதேவேளை இப்பிரதேசங்களில் சீரான நிர்வாகம் நடத்தப்பட வேண்டும் என்ற எண்ணம் தலைவர் அவர்களுக்கு உள்ளது. அதன் அடிப்படையில் பிறந்ததுதான் தமிழீழ நீதி நிர்வாகத்துறை. காவல் நிலையம் நீதி மன்று மாவட்ட நீதிமன்று மேன்முறையீட்டு நீதிமன்று சட்டக்கல்லூரி சட்டப் படிப்புத் தொடர்பான நூலகம் இவ்வாறாக இங்கு இருக்கக் கூடிய மிகவும் சொற்ப வளங்களை வைத்துக் கொண்டு நாம் முன்னேறி உள்ளோம்.
எமது சட்டக்கல்லூரியில் கல்விபயிலும் மாணவர்களின் அக்கறையையும் அதே வேளை பயிலும் இடங்களின் அசௌகரியங்களையும் பார்த்துவிட்டு பிரித்தானியா வாழ் தமிழ் சட்டத்தரணிகள் சுமார் 50 இலட்சம் ரூபாய் செலவில் எமக்கு ஒரு சட்டக் கல்லூரியைக் கட்டித் தந்து இருக்கின்றார்கள். எமது கல்லூரியில் இரண்டு விரிவுரை மண்டபங்களும் ஒரு நூலகமும் அமைந்திருக்கிறது.
இந்த வளர்ச்சியானது தலைவர் அவர்கள் தமிழீழம் என்ற இலட்சியப் பயணத்தில் வைத்திருக்கிற பெரும் விருட்சத்தின் ஒரு படிநிலைதான். இதற்கே பெரும் பாராட்டுக்கள் குவிகின்றன.
நேற்று அமெரிக்காவில் இருந்து சி.என்.என் தொலைக்காட்சி வந்தது. அவர்கள் புலிகள் ஏதோ ஒரிருவர் இருந்துகொண்டு துப்பாக்கியை வைத்துப் பயமுறுத்தி அதிகாரம் பண்ணுறாங்கள் என்ற நினைப்பில் வந்தவர்கள்போல இருக்கின்றது. எங்கள் நிர்வாகக் கட்டமைப்பைப் பார்த்ததும் அசந்துபோனார்கள்.
இத்தனைக்கும் அவர்கள் பார்த்தது சட்டக் கல்லூரியையும் நீதிமன்று நடந்து கொண்டிருக்கும் விதத்தையும்தான். அதற்கே பாராட்டுவதற்கு என்ன என்ன வார்த்தைகள் ஆங்கிலத்தில் இருக்குமோ அவ்வளவாலும் பாராட்டினார்கள்.
இந்த நீதிநிர்வாகத்துறையை வழி நடத்துவதற்கு மாதம் 25 இலட்சம் ரூபாய்கள் செலவாகின்றது. இந்தச் சுமையை இயக்கம்தான் சுமக்கிறது.
<b>வானதி:</b> தமிழீழத்தில் பிறந்து வளர்ந்து கனடியக் குடிமகனாக இருக்கும் ஒருவர் செய்யும் குற்றம் ஒன்றுக்காக அவருக்கு தமிழீழத்தில் வழக்குப் போடலாமா?
<b>திரு. பரா:</b> இதில் பாதிக்கப்பட்டவர்களில் ஒரு ஆள் இங்கு இருக்கும் என்று சொன்னால் செய்யலாம்.
எடுத்துக் காட்டாக இரண்டு வழக்குகள் தற்போது நடந்து வருகின்றன. ஒன்று கிளி நொச்சியிலும் ஒன்று முல்லைத்தீவிலும் நடந்து வருகின்றது. கனடாவில் இருந்து வந்து ஒருவர் முன்பு சட்டபூர்வமாகப் பதிவுத்திருமணம் செய்து இருந்திருக்கின்றார். பின்னர் கனடா போய்த் திரும்பி வந்து அந்தப் பெண்ணைவிட்டுவிட்டு இன்னொரு பெண்ணை பேசித் திருமணம் செய்திருக்கின்றார். இதில் முதலாவது மனைவி வழக்குப் போட்டு இருக் கின்றார்.
இவர் விடுமுறையில் வந்த இடத்தில் தான் நீதிமன்ற ஆணையின் பெயரில் காவல்துறை இவரைக் கைது செய்து விட்டது. இப்போது இவர் 25 இலட்சம் பிணையில் வெளியில் நிக்கிறார். இத்தொகை முதல் மனைவியின் பெயரில் நீதிமன்ற வைப்பில் உள்ளது.
இதே மாதிரி இன்னொரு வழக்கு புதுக்குடியிருப்பில் நடந்து வருகின்றது.. அது என்னண்டா....
திருமணம் செய்து இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள். இவர் கனடாவுக்குப்போய் 10 ஆண்டுகள் ஆகிவிட்டது. இவர் அங்கே போய் இன்னும் ஒரு திருமணம் முடித்து அங்கேயும் பிள்ளைகள் இருக்கின்றது. இவர் இங்கு இருக்கும் குடும்பத்தை கவனிக்காமல் விட்டுவிட்டார்.
இவர் இரு மாவீரர்களின் சகோதரர். தான் மாவீரர் குடும்பம் தன்னை ஒன்றும் செய்ய மாட்டார்கள் என்று இவர் இங்கு வந்திருக்கின்றார். முதலாவது மனைவி முறைப்பாடு கொடுத்து அவரைக் காவல்துறை கைது செய்துவிட்டது. பின்னர் வழக்கு நடைபெற்று பிள்ளைகளுக்கு 25 இலட்சம் கொடுக்க வேண்டும். மனைவிக்கு நட்ட ஈடாக 10 இலட்சம் கொடுக்கவேண்டும். வாழ்க்கை முழுக்க பராமரிப்புத்தொகை கொடுக்க வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
<b>வானதி:</b> இவ்வாறான சந்தர்ப்பத்தில் இவர்கள் மேன்முறையீடு செய்ய லாமா?
<b>பரா:</b> செய்யலாம். மேற்படி நபர் மேன்முறையீடு செய்தார். அதாவது ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக முதலாவது மனைவியுடன் தொடர்பு வைத்திராவிடால் சட்டப்படி மணம் முறிவடைந்துவிடும் (விவாகம் ரத்தாகி விடும்) என்று தனது மேன்முறையீட்டில் தாக்கல் செய்திருந்தார்.
அனைத்துலகச் சட்டத்தின்படி வெளியில் போனாலும் இவவுடன் இருந்துதான் வெளியில் போயிருக்கின்றார். கடிதத் தொடர்பு வைத்திருந்திருக்கின்றார். இதற்கான ஆதாரத்தை மனைவி நீதிமன்றில் சமர்ப்பித்தார். பின்னர் இம் மேன்முறையீடு தள்ளப்பட்டு இவர் 25 இலச்சம் முதலாவது மனைவிக்குக் கொடுத்து பின்னர் மிகுதிக்கு சகோதரர்கள் இருவரைப் பிணை வைத்தார். நாங்கள் பாஸ் கொடுத்து அவர் கனடாவுக்குப் போய்விட்டார்.
இப்படியாக இங்கு வந்தால் நாங்கள் நடவடிக்கை எடுக்கலாம். எதிர்காலத்தில் தமிழீழம் நாடாக வந்தபின் என்றால் கனடாவுடன் சட்டரீதியான உடன்படிக்கை கைச்சாத்திட்டுப் பல வேறு விடயங் களையும் நாம் செய்யலாம்....
<b>திரு:</b> கனடாவில் திருமணம் செய்தவர்கள் இங்கும்வந்து மணமுடித்து விட்டுப்போவதுபோன்ற சம்பவங்கள் நிறைய இடம்பெறுவதாக முழக்கத்திற்குப் பல முறைப்பாடுகள் வருகின்றன.... இது குறித்து என்ன செய்யலாம்...
<b>பரா:</b> உலகத்தமிழர் இயக்க விழிப்புக் குழுப் பொறுப்பாளர் இங்கு வந்தபோது இவ்வாறான சிக்கல்கள் குறித்துச் சொன்னார். இது குறித்து ஆலோசனை கள் நடத்திவருகின்றோம்.
எங்களைப் பொறுத்தவரையில் கனடாவில் தமிழ்ப் பண்பாடு சிதைவடைவ தினால்தான் இவ்வாறான சிக்கல்கள் அதிகரிக்கின்றன என்று நினைக்கிறோம். ஆகவே தமிழ்ப்பண்பாட்டை மேம்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டால் இவை குறையும் என்று நான் நினைக்கின்றேன்.
<b>முருகன்:</b> கனடாவில் இருந்து வந்த ஒருவர் இங்கு குற்றச்செயல்களில் ஈடுபட்டால் என்ன நடக்கும்?
கனடாவில் இருந்து இங்கு வந்து குற்றச் செயல்களில் ஈடுபட்ட ஒருவர் தப்பிச் சென்றால் நாங்கள் அந்தக் குற்றத் திற்கான தண்டனையை அறிவிப்போம். அதனை அவர் அனுபவித்தே ஆக வேண்டும். அந்தத் தண்டனையை குறைக்கக் சொல்லிக் கனடிய அரசு எங்களைக் கேட்குமே தவிர அந்தத் தண்டனையை நீக்கச் சொல்லி கேட்க மாட்டாது. அவரைத் தண்டனை அனுப விக்க எங்களிடம் கொடுத்துவிடும்.
<b>வானதி:</b> குடியமர்வு-குடியகல்வு சட்டத்தின்படி கனடாவில் தற்போது வாழும் தமிழீழ மக்களுக்கு தமிழீழக் குடியுரிமையும் வழங்குவீர்களா?
தமிழீழம் கிடைத்தவுடன் வழங்குவோம். இது உறுதி.
எப்படி நோர்வேயில் இருந்து குடிபெயர்ந்து அமெரிக்காவுக்குப் போன நான்கு மில்லியன் நோர்வே மக்களுக்கு நோர்வே குடியுரிமை கொடுத்ததோ அதே மாதிரி நாங்களும் கொடுப்போம். எங்கள் மக்கள் எங்கு வெளியில் இருந்தாலும் அவர்களுக்கு தமிழீழக் குடியுரிமை உண்டு. இங்கு சிறீலங்கா இராணுவ ஆக்கிரமிப்பால் இருக்க முடியாமல் உயிருக்குப் பயந்துதானே பெரும்பாலான மக்கள் இடம்பெயர்ந்து இருக்கிறார்கள். யதர் களுக்கு என்ன நடந்ததோ அதே மாதிரித்தானே....
<b>பொறுப்பாசிரியர் வானதி:</b> வழக்கு நடக்கும்போது ஊடகங்களைப் ஒளிப்படம் எடுக்க வீடியோ எடுக்க அனுமதிக்கின்றீர்களா...?
நாங்கள் ஊடகங்களுக்கு முழு அனுமதி வழங்கி அவர்கள் விரும்பிய கட்டமைப்பை பார்வையிடவோ புகைப்படம் எடுக்கவோ அன்றி வீடியோ எடுக்கவோ அனுமதிக்கின்றோம்.
நாங்களாக கூட்டிக் கொண்டுபோய் காட்டுவதைத் தவிர்த்து அவர்களாகவே வேண்டிய இடங்களுக்குப்போக உதவுகின்றோம். சிறீலங்கா அரசுபோல தாங்கள் தீர்மானிக்கும் இடங்களுக்கு மட்டும் அவர்களைக் கூட்டிக் கொண்டுபோய்க் காட்டுவதில்லை. அவர்களை சுயாதீனமாக செய்தி சேகரிக்கவோ அன்றி தொலைக் காட்சி ஆவணங்கள் எடுக்கவோ அனுமதிக்கின்றோம் உதவியும் செய்கின் றோம்.
<b>திரு:</b> கனடாவில் இருக்கும் மக்களின் காணிகளுக்கு வீடுகளுக்கு என்ன நடக்கிறது இங்கு?
கனடா அமெரிக்கா இலண்டன் போன்ற நாடுகளில் இருக்கும் மக்களின் காணிகள் தொடர்பான வழக்குகள் ஐம்பதுக்கு மேல் நீதிமன்றில் நடந்து வருகின்றது. கனடாவுக்குப் போனவர்களின் காணிகளுக்கு என்ன நடக்கிறது நடக்கும் என்று சொன்னால்....
அதாவது கனடா என்று மட்டும் இல்லை புலம்பெயர்ந்த மக்களின் காணிகளுக்கு என்ன நடக்கிறது என்று சொன்னால்; இங்கு வீடுகள் இருந்திருக்கிறது சொத்துக்கள் இருந்திருக்கிறது விட்டு விட்டுப் போய் இருக்கின்றார்கள். இப்ப அதனைத் தங்களுக்கு வேண்டும் என்று இங்கு வந்து கேட்கின்றார்கள்.
இவ்வாறான வழக்கு ஒன்று நடந்து முடிந்தும் இருக்கிறது. இலண்டனுக்கு 30 ஆண்டுகளுக்கு முன்னர் போன மயில் வாகனம் என்ற ஒருவருக்கு 25 ஏக்கர் காணி இருந்திருக்கிறது. அவர் இலண்டனுக்குப் போனதும் இங்கு அந்தக் காணியை ஒருவர் பிடித்து வைத்திருந்திருக்கிறார். அந்த வழக்கில் நீதிமன்றத் தீர்ப்பு வந்திருக்கிறது. உறுதி யாருக்கு இருக்கிறதோ அவருக்குத்தான் காணி சொந்தம். இவ்வளவு காலமும் பராமரித்தவருக்கு காணி உரிமையாளர் நட்டஈடு கொடுக்கவேண்டும் என்று தீர்ந்து இருக்கிறது.
<b>முருகன்:</b> வெளிநாட்டில் இருப் பவர்கள் தற்போது தமிழீழத்தில் காணி வாங்கலாமா?
வாங்கலாம். இப்ப நாங்கள் அதனை அனுமதித்து இருக்கின்றோம். எங்கள் மூலதனம் எங்கள் மக்கள். இப்போது இங்கு காணி விலை ஏறி விட்டது. முன்பு ஐந்து பத்தாயிரம் போன காணிகள் இப்போ இருபத்தைந்து இலட்சம் எல்லாம் போகிறது. ஒருகோடி ரூபாய்க்கு கூட காணி விலை போயிருக்கிறது....
இந்தக்காணிகள் எல்லாம் நாங்கள் கிளிநொச்சி பிடித்த காலத்தில் பத்தாயிரம் பதினையாயிரம் ரூபாய்க்கு சனங்கள் விற்றது. இந்த விலையேற்றத்திற்கு வெளிநாட்டு ஆட்கள்தான் காரணம். நாங்கள் இதனைக் கட்டுப்படுத்த முனையவில்லை. அவர்கள் வெளிநாட்டில் கஸ்ரப்பட்டு உழைத்து தன்னுடைய நாட்டில் காணி வாங்க ஆசைப்படுவது நல்லது....
<b>வானதி:</b> தமிழீழத்தில் வதியாது வெளிநாட்டில் வசிப்பவர்கள் காணி வாங்கும்போது வரியை உயர்த்தலாம் அல்லவா?
<b>பரா:</b> உயர்த்தி இருக்கிறோம். இருபத்தைந்து வீதம் வரி செலுத்தவேண்டும்.
வளரும் தமிழினத்தில் மிளிரும் தமிழர்
நன்றி முழக்கம்
|
|
|
| ஒருகதை |
|
Posted by: shiyam - 03-28-2005, 06:53 PM - Forum: கதைகள்/நாடகங்கள்
- Replies (69)
|
 |
.<img src='http://img294.echo.cx/img294/1599/sanstitre6hv.png' border='0' alt='user posted image'> <span style='font-size:25pt;line-height:100%'>இறுதிப் பதிவொன்று...................... </span>-சியாம்
விஜி தனது வீடியோ கமராவை எடுத்து
வரவேற்பறை முழுவதும் தெரியும்படியாக கோணம் பார்த்து பொருத்தினான்.
பின்னர் எல்லாம்சரியாக இருக்கிறதா என ஒரு தடைவைக்கு பலதடைவை பார்த்தான்.
ஏனெனில் இது அவன் எடுக்கபோகும் முக்கியமான ஒரு நிகழ்ச்சி.
வீடியோ கமறா தானாகவே இயங்கி எடுக்கவிருப்பதால் எல்லாம் சரியாக பதிய படவேண்டும் என்பதில்
அவனிற்குள் ஒருபடபடப்பு.
ஏனெனில் வீடியோ விஜி என்றால் பாரீசில் அனேகமாக தெரியாத தமிழர்கள் இல்லை.
பத்து வருங்களிற்கு மேலாக பாரீசில் தமிழர்களின் பிறந்தநாள்,
திருமணம் என்று அனைத்து, மங்களகரமான நிகழ்ச்சிகள் என்றாலும் அனைவரும் உடனே சொல்வது,
"விஜியை கூப்பிடுங்கோ,.........
அவரெண்டால் எங்கட விருப்பத்திற்கேற்றமாதிரி வடிவா எடுத்து,
அதற்கேற்றமாதிரி பாட்டுகளும் அடித்து தருவார்"என்றுதான்.
அப்படியொரு நல்ல பெயர் அவனிற்கிருந்தது.
காலப்போக்கில், வீடியோவும் அவனது பெயரில் ஒட்டி,
வீடியோ விஜியாகிவிட்டான்.
எல்லாம் சரிபார்த்து விட்டு கதிரையில் அமர்ந்து,
கிளாசில் கொஞ்சம் விஸ்கியை ஊற்றி,
இரண்டு துண்டு ஐஸ் கட்டியை போட்டு
ஒரு மடக்கில் குடித்து விட்டு நிமிர்ந்து
சுவரில் மாட்டியிருந்த படத்தை உற்று பார்த்தான்.
அவன் நினைவுகள் மூன்றுமாதங்கள் பின்நோக்கி நர்ந்தது
விஜி வீடுமாறுவதற்காக எல்லா சாமான்களையும்
பெட்டிகளில் போட்டு ஒட்டிக்கொண்டிருந்தான்.
தொலைபேசி அடித்தது, எடுத்தான்.
"கலோ வணக்கம்"
"விஜி நிக்கிறாரோ?"
" ஓம்,...... நான் விஜிதான், சொல்லுங்கோ."
"நான்மேகன் , இந்த ஞாயிற்று கிழமை ஒருகலியாண வீடு.
நீங்கள்தான் வீடியோ எடுக்கவேணும்.
அதுதான் உங்களிற்கு வசதியோ?"
"பிரச்சனையில்லை,....... ஆனால் நான் வர ஏலாது.
என்ரை சினேதனை அனுப்பிவிடுறன்.
உங்கட விலாசம் மற்றது கலியாணம் நடக்கிற இடத்து விலாசம் ரெலிபோன் நம்பர் மற்ற விபரங்களை தாங்கோ.
"இல்லை நீங்கள் வந்து எடுத்தா தான் நல்லா இருக்கும்."
" இல்லையண்ணை சனிக்கிழமை மனிசி வாறா ,
அதாலை நானும் வீடுமாறிகொணடிருக்கிறன்.
சரியானவேலை அதுதான்............."
"சரிசரி விளங்கிது, பிரச்சனையில்லை.
உங்கட சினேதனையே அனுப்புங்கோ.
இந்தாங்கோ விலாசமும் விபரமும். "
விஜி விபரங்களை குறித்து கொண்டு இணைப்பை துண்டித்தான்.
சனிக்கிழமை மனிசி வருகிது ஞாயிறு வீடியோ எடுக்க வரட்டாம்,
கோடி ருபாய் தந்தாலும் போக ஏலாது.
அடுத்ததா காரையும் ஒருக்கா நாளைக்கு கழுவ வேணும் என நினைத்து கொண்டு வேலையை தொடர்ந்தான்.
ஒருகிழமை லீவு எடுத்து, புதுவீட்டில் சாமான்கள் எல்லாம்
மாற்றி அடுக்கி.......................
அவ்வப்போது அவனது நண்பன் ரவியும் வந்து உதவிகள் செய்தது
அவனிற்கு நிம்மதியாய் இருந்தது
அன்று சனிக்கிழமை காலை 6.00மணிக்கெல்லாம் எழும்பி அவசரவசரமாக முன்று மரக்கறியுடன்
ஒரு மீன்கறியென சமையல் எல்லாம் செய்து விட்டு
விமானநிலையம் போவதற்காக தயாரானான்.
அவனது நண்பன் ரவியும் கூட வருவதாக கூறியிருந்தான்
அடிக்கடி நேரத்தை பார்த்தபடியே.
சே இந்த ரவி இப்பிடித்தான் ஒரு நாளும் சொன்ன நேரத்திற்கு வரமாட்டான்.
8.00மணியாகிது............
10.00 மணிக்கெல்லாம் விமான நிலையத்திலை நிக்கவேணும் என நினைத்தபோதே,
வீட்டு அழைப்புமணியடித்தது.
ஆ வந்திட்டான் கதவை திறந்தான்..
என்ன சமையல் எல்லாம் தடல்புடலாய் நடந்திருக்கு போலை 3ம் மாடியிலையிருந்து கீழை வரேக்கையே
மணக்கிது என்ன சமைச்சனி
உன்ரை மனிசி குடுத்து வச்சவா ம்.........
என்றபடி உள்நுழைந்தான் ரவி.
என்னத்தை சமைக்கிறது மனிசி இறைச்சி சாப்பிடுறேல்லையாம்,...... அதுதான் மரக்கறியும், மீனும் சமைச்சனான் .
தெரியும்தானே ஊரிலை விதரம் எண்டுங்கள் மாடு பண்டி சாப்பிடாதுகள்.
இஞ்சை வந்தாபிறகு கொஞ்சம் கொஞ்சமா பழக்கியெடுப்பம்.
நீயேன் பெரு மூச்சு விடுறாய்
நீயும் இஞ்சை இல்லாட்டி ஊரிலையெண்டாலும் ஒண்டை பாத்து செய்து போட்டு சமைச்சு போடன்.
சரி சரி நேரம் போட்டுது, போவம் .
பாரீஸ் விமானநிலையம் சுகியை சுமந்து வந்தவிமானம் சரியான நேரத்திற்கு தரையிறங்கியது.
அவனது ஒருவருட காத்திருப்பு தனது எதிர்காலத்தை எதிர்பார்த்து எட்டியெட்டி பார்த்தபடியிருந்தான்.
என்ன விஜி பிளேன் வந்திட்டுது எப்படியும் மனிசி வெளியிலை வந்துதானே ஆக வேணும் ஏன் அவசரபடுறாய்.
அதில்லை........ ஆ............. அந்தா வாறா.
சுகி இரண்டு பெரிய சூட்கேசுகளை வண்டிலில் வைத்து தள்ளியபடி வந்து கொண்டிருந்தாள்.
அவனிற்கும் வெள்ளை காரர்களைபோல ஓடிப்போய் கட்டியணைத்து ...........
ஆனாலும் அடக்கிகொண்டு போய் வண்டிலை வாங்கி கொண்டு
என்ன கன சாமானெல்லாம் கொண்டு வந்திருக்கிறியள்.
பயணம் எல்லாம் எப்பிடி ஒருபிரச்சனையுமில்லையோ??
இவர்தான் ரவி என்ரை சினேதன் என்னோடைதான் வேலை செய்யிறவர்.இரண்டுபேரும் சேந்துதான் வீடியோவும் எடுக்கிறனாங்கள்.
அறிமுகம் முடிந்தபின்னர் புறப்பட்டார்கள்.
புதிய மனைவி, புதியவீடு , புதியவாழ்வு, புதிய அனுபவங்கள் என இனிதாகவே அவர்கள் வாழ்வு போய்கொண்டிருந்தது.
சுகி வந்ததிலிருந்து, ஓரே தொலைபேசியும் கையும்தான்.
விஜியும் விட்டுவிட்டான்.
இப்பதானே வந்தவா ஊரிலையிருந்து வந்த புதிசிலை நானும் இப்பிடித்தான்.
ஊருக்கு ஓரே தொலைபேசி இப்ப கிழைமையிலை ஒருக்கா சிலநேரம் அதுவும் இல்லை.
சுகி, தொலைபேசியை வைத்துவிட்டு விஜியின் அருகில் வந்தாள்.
என்னப்பா இரவுக்கு என்ன சமைக்க.
புட்டு அவியும். ஒரு கறி மட்டும் வையும்.
நீர் வந்து இரண்டு கிழைமையிலை சாப்பிட்டு, சாப்பிட்டு நான் இரண்டு கிலோ கூடிட்டன்.
இனி கொஞசம் குறைக்கவேணும்.
விஜியின் தலையை கோதியபடி, அதுசரியப்பா நான் உங்களிட்டை ஒருவிசயம் கதைக்கவேணும் என்று இழுத்தாள் சுகி.
சொல்லுமன்.......... என்ன முக்கியமான விசயம்.
இல்லை, நான் சிவாவை பற்றி உங்களிற்கு ஏற்கனவே சொல்லியிருக்கிறன்.
கொழும்பிலை உங்கட ஸ்பொன்சருக்காக ஒருவருசமா நிக்கேக்கை அவன்தான் எனக்கு நல்ல உதவி...........
எம்பசிக்கு அடிக்கடி கூட்டிகொண்டு போறதிலையிருந்து
சாமான்கள் வாங்கி தாறது வரைக்கும் ஓடியோடி செய்து தாறவன்
நல்ல பெடியன் ஒருவிதத்திலை எங்களிற்கு சொந்தமும் கூட ,........ பாவம் ஒரு ஏயென்சிட்டை இங்கை வாறத்திற்கு காசு கட்டி ஏமாந்து போய் நிக்கிறான்.
அவனிற்கு வெளி நாட்டிலையும் உதவி செய்ய ஒருத்தரும் இல்லை. நீங்கள கொஞ்சம் பாத்து உதவி செய்தா நல்லது
வந்து உழைச்சு தருவான்.
உங்களிற்கும் வீடியோ வேலையளிற்கு உதவியாய் இருக்கும்.
வேணுமெண்டால் நீங்களும் ஒருக்கா அவனோடை கதையுங்கோ பாவமப்பா.
எனக்கு ஒரு தம்பிமாதிரி.
என்னப்பா, நீர் வந்ததிற்கே, வீடுமாறினது சாமான்கள் வாங்கினதெண்டு செலவு.
என்னட்டை இப்ப பெரிசா காசும் கையிலை இல்லை.
ஒருத்ரை கூப்படுறதெண்டா சும்மாவே சரியா செலவாகும்.
பாப்பம் யோசிச்சு சொல்லுறன். சரிவேலைக்கு நேரமாச்சு போட்டுவாறன்.
போகும் வழியில் சுகி சொன்னதை பற்றி யேசித்து கொண்டே போனான் எதுக்கும் உவன் ரவியிட்டை கொஞ்சம் உதவி கேட்டு பாப்பம்...........
அன்று வேலைமுடிந்து வீடு வந்தவன், உடைகளை மாற்றி கொண்டு,
சே என்ன இண்டைக்கு சரியான வேலை .
நாரிசரியா நோகுது என்று கூறிகொண்டு , ஒரு குளிசையை வாயில் போட்டு தண்ணீரை குடித்து கொண்டு வந்து கதிரையல் அமர்ந்தான் .
என்னப்பா நாரி நோகுதே, வாங்கோ விக்ஸ் போட்டு மசாச் பண்ணி விடுறன்........ உடனை மாறிவிடும்.
வந்து இதிலை படுங்கோ என்றவாறே விக்ஸ் எடுத்துகொண்டு வந்து அவனை குப்புற படுக்கவைத்து முதுகில் விக்சை தடவியவாறே,
என்னப்பா சிவாவின்ரை அலுவலைபற்றி ஏதும் யேசிச்சனீங்களே?.
ம்....ரவியிட்டைதான் கொஞ்சம் உதவி கேட்டனான். எனக்கு தெரிஞ்ச ஒரு ஏஜென்சியிட்டையும் கதைச்சனான்.
வந்தா பிறகுதான் காசாம்............ நாளைக்கு விபரம் குடுத்தா ஒரு கிழமையிலை ஆள் இஞ்சை வந்திடும்.
சுகி நன்றாக முதுகை பிடித்து மசாச் பண்ணி விட்டாள்.
ஒரு வாரத்தில் சிவாவும் வந்து சேர்ந்தான்.
விஜி அவனிற்கு விசா அலுவல் எல்லாம் பாத்து ஒரு வேலையும் பார்த்து கொடுத்து வீட்டிலேயே வைத்திருந்தான்.
அதே நேரம் கிழைமை நாட்களில் அவனிற்கு உதவியாக ரவியுடன் சிவாவையும் படப்பிடிப்புகளிற்கு அழைத்து சென்று
படப்பிடிப்பு நுணுக்கங்களை அவனிற்கு கற்று கொடுத்தான்.
இப்படியே ஒரு சில மாதங்கள் கடந்ததன.
அன்று ஒரு ஞாயிற்று கிழைமை.
விஜிக்கு ஒரு கலியாண வீட்டு படப்பிடிப்பு நாள்.
அதற்கு தாயார் படுத்தி கொண்டே ............
என்ன சிவா வெளிக்கிட்டாச்சே போவம்.
இல்லையண்ணை,
எனக்கு கொஞ்சம் உடம்பு சரியில்லாமை கிடக்கு அதுதான்........
என சிவா இழுத்தான்.
சரி , சரி பிரச்சனையில்லை.
நான் ரவியோடை போறன்.
ஏதும் தேவையெண்டா சுகியிட்டை கேளும் என்று போய்விட்டான்.
அதிகாலை ஒரு மணியளவில் படப்பிடிப்பு முடிந்து வீட்டிற்கு வந்து மெதுவாக கதவை திறந்தான்.
சுகியும் சிவாவும் நித்திரையிலிருப்பினம்,
குழப்பகூடாது என நினைத்து வழமை போல
கொண்டு வந்த சாமான்களை மெதுவாக வைத்துவிட்டு
மின் விளக்கை போட்டான்.
வரவேற்பறையில் நுழைந்து மின் விளக்கை போட்டு விட்டு
சப்பாத்தை கழற்ற போனவன்
மேசையில் இருந்த பொருளை பார்த்ததும் திடுக்கிட்டான்.
சுகியின் தாலிக் கொடியும், ஒருகடிதமும் மேசையில் இருந்தது.
அவனிற்கு தலை சுற்றுவது போல ஒரு உணர்வு.
கைகள் நடுங்க, கடிதத்தை எடுத்து படித்தான்.
விஜிக்கு,
இந்த கடிதம் உங்களிற்கு அதிர்ச்சியாக இருக்கும்.
நான் உங்களின் ஸ்பொன்சருக்காக கொழும்பில் சுமார் ஒருவருடம் காத்திருந்த வேளையில்
நான் தங்கியிருந்த விடுதியில் இருந்த சிவாவுடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது.
அதுவே காலப்போக்கில் காதலாக மாறி ,
எங்கள் உறவும் உடல்வரை ஒன்றாகிவிட்டது .
நான் இங்கு வந்ததும் கொழும்பில் நடந்த எல்லாவற்றையும் மறந்து
உங்களுடன் புதுவாழ்வு வாழலாம் என்றுதான் எண்ணினேன்.
என்னால் சிவாவை மறக்கமுடியவில்லை.
அதனால்தான் உங்கள் உதவியுடன் இங்கு சிவாவை வரவழைத்தேன்.
சிவாவும் நானும் பிரான்சை விட்டு வேறுநாடு போகிறோம்.
எங்களை தேட வேண்டாம். நாங்கள் உங்களிற்கு செய்தது துரோகம்தான்.
ஆனாலும் எனக்கு வேறுவழி தெரியவில்லை.
எங்களை மன்னித்து விடுங்கள்.
இப்படிக்கு சுகி.
விஜிக்கு தலை சுற்றி, கண்கள் இருண்டு கொண்டு வந்தது.
அப்படியே கதிரையில் சாய்ந்தான்.
யாரோ சுத்தியலால் உச்சந்தலையில் அடித்ததுபோல ஒரு உணர்வு.
சில நிமிடங்கள் அப்படியே இருந்தவன்,
சீ , இது சிலவேளை சுகியின் விழையாட்டாக இருக்கும்.
எழுந்து கடவுளே இப்படி எதுவும் நடந்திருக்ககூடாது.............
பிள்ளையாரே லூர்து மாதாவே என சில வினாடிகளில் எல்லா மதத்தின் பல ஆயிரம் தெய்வங்களை வேண்டியபடி
போய் படுக்கை அறையை திறந்தான் யாரும் இல்லை.
உடுப்பு அலமாரி திறந்திருந்தது.
சுகியின் நகைகளையும் சில உடுப்புகளையும் காண வில்லை.
சிவாவின் அறையை திறந்தான். அங்கும் யாருமில்லை.
கடவுளே என்னசெய்வேன், என்க்கேன் இப்படி?
என்ன செய்வேன் ............பொலிசுக்கு போவமா? போய்த்தான் என்ன பிரயோசனம்?
அவர்கள் விரும்பி போய் விட்டார்கள்.
விவாகரத்து கேள் என்று ஆலோசனை செல்வார்கள்.
பிறகு ஊருக்கெல்லாம் தெரிந்து பொழுது போகாதவன் வாயிலெல்லாம் என்ரை கதையாத்தான் இருக்கும்.
ரவிக்கு சொல்லலாமா ?
சொல்லி அவனால்தான் என்னசெய்யமுடியும்.
தேடிப்பிடித்து இருவரையும் ஒரே வெட்டில்...........
சே..............இப்படியே குழப்பம், கோபம், அழுகையென நித்திரையின்றி அந்த இரவு விடிந்தது.
இரவிரவாக யோசித்து ஒரு முடிவுக்கு வந்தான்.
இனி அழுதோ, ஆத்திரபட்டோ பிரயேசனமில்லை.
அடுத்ததை பாப்பம் என நினைத்து
வேலையிடத்திற்கு ஒருகிழைமை லீவுகேட்டான்.
அடுத்தாக, சிவாவை கூப்பிட ரவியிட்டை வாங்கின கடனை குடுக்க வேண்டும்.
உடனடியாக காரை விக்க ஏற்பாடு செய்தான்.
அன்று பகல் முழுதும், முதல்நாள் எடுத்த திருமண நிகழ்ச்சியை பாட்டடித்து பதிவு செய்து கையிலெடுத்தான்.
மாலையாகிவிட்டது.
திருமண கொப்பியை உரியவரிடம் சேர்த்தான்.
என்ன விஜி இவ்வளவு கெதியா கொப்பியை கொண்டு வந்திட்டியள்.
ஒமண்ணை, வேறை வேலை கனக்க இருக்கு அதுதான்.
சரி, இந்தாரும் மிச்ச காசு எண்ணிபாரும் .
தேவையில்லையண்ணை.
அவர் கொடுத்த பணத்தை பெற்று கொண்டு,
பாரீசின் புறநகர் பகுதியில் கார் விற்கும் ஒரு சந்தைக்கு வந்து,
காரிற்கு மலிவாக ஒரு விலையை காரின் மீது எழுதி ஒட்டி விட்டு காத்திருக்க,
சில நிமிட நேரத்தில் ஒருவரின் காசோலையும்
விஜியின் காரும் சில கையொப்பங்களுடன் கைமாறியது.
காரில் இருந்த சில பொருட்களை, ஒரு பையில் எடுத்துக் கொண்டு நடந்தான்.
எல்லாம் நல்லபடியா முடிஞ்சுது.
கைத் தெலைபேசியில் ரவியின் இலக்கத்தை அழுத்தினான்.
கலோ......ரவி நான்விஜி.
உன்ரை பாங் எக்கவுண்ட் நம்பரை சொல்லு,
உன்ரை காசை போட்டு விடுறன்.
என்னடா விஜி வேலைக்கும் வரேல்லை.
முதலாளி சென்னான் ஒருகிழமை லீவாம் எண்டு........
இப்ப என்னடா எண்டா...........
என்ரை காசு போடுறனெண்டுறாய் .
ஏதும் லொட்டோ விழுந்ததோ இல்லை?
குதிரை பந்தயம் ஏதும் விழையாடினனியோ?.
டேய் பகிடியை விடடிட்டு, நம்பரை சொல்லு.
ரவியின் வங்கி இலக்கத்தை வாங்கி ,
அதில் அவனிற்குரிய பணத்தை சேர்த்துவிட்டு,
கடையில் போய் ஒருபோத்தல் விஸ்கியும்
காலையிலிருந்து சாப்பிடாததால் ,
ஒரு சாண்விச்சை வாங்கி சாப்பிட்டபடி வீடுவந்து சேர்ந்தான்.
சாண்விச் சாப்பிட்டது வயிற்றிற்கு கொஞ்சம் நல்லாயிருந்தது.
ஆனால் மனதிற்கு அவன் உற்று பார்த்து கொண்டிருந்த படம்...............
அவர்களது திருமணப்படம்...............
பெரிதாக்கி வரவேற்பறையில் மாட்டியிருந்தான்.
பழைய நினைவுகளில் இருந்து மீண்டவன்.
அதுதான் எல்லாம் முடிஞ்சு போச்சுதே.
அதிலிருந்துபார்வையை விலக்கி,
மீண்டுமொரு முறை சுகியின் கடிதத்தை படித்தான்.
ஒரு தடைவையல்ல
பல தடவைகள் இன்னும் அவனால்
நடந்தவைகளை நம்பமுடியவில்லை.
விஸ்கி பாதி போத்தலுக்கு மேல் குடித்துவிட்டான்.
போதையேறி தலை கிறுகிறுத்தது.
எல்லாரும் சொல்வார்களே எதையாவது மறக்க குடிப்பதாக
ஆனால் எனக்கு சுகியின் நினைவுகளே திரும்ப திரும்ப வருகிறதே
எதுவும் மறக்கவில்லையே ..............
அப்ப மற்றவர்கள் சொல்வது பொய்யா?
வரும் போது காரிலிருந்து எடுத்துவந்த பையிலிருந்து நைலோன் கயிற்றை எடுத்து
வரவேற்பறையின் மின்விளக்கு தொங்கிய கம்பியில் கட்டி
மறுமுனையை நன்றாக இழுத்துபார்த்தான்.
எனது எழுபத்தைந்து கிலோ எடையை இது தாங்குமா
இன்னெரு முறை இழுத்துபார்த்தவன்,
திருப்தியுடன் போய் தனது வீடியோ கமறாவை இயங்க விட்டான்.
வந்து சுகி வைத்து விட்டு போன தாலியை கையிலெடுத்து பார்த்தான்.
இந்து பெண்கள் சுமங்கலியாக தாலியுடன்தான் சாக விரும்புவார்களாமே,
சரி பெண்களுக்கு மட்டுமா தாலியை தனது கழுத்தில்போட்டு
கண்ணாடியில் ஒரு முறை பார்த்தான்.
இதோ நான் சுமங்கலனாக சாக போகிறேன்.
ஒரு கதிரையை எடுத்து வந்து,
கயிற்றிற்கு நேராக வைத்துவிட்டு
அதில் ஏற போனவன், கிளாசில் இன்னும் கொஞ்சம் விஸ்கி மிச்சமிருந்ததை பார்த்து விட்டு
அதனையும் ஒரு மடக்கில் குடித்து விட்டு,
கதிரையில் ஏறினான்.
கேழைகள், வாழ தெரியாதவர்கள்தான் தற்கொலை செய்வார்களாமே?........
இல்லை என்னை பொறுத்தவரை தற்கொலைக்குதான் அதிக தைரியம் வேண்டும்.
இனி சுகியை மறந்தோ
அல்லது அவள் செய்தவற்றை நினைத்துகொண்டோ
இநத சமூதாயத்தின் கேள்விகளிற்கு பதில் சொல்லி கொண்டும் என்னால் வாழ இயலாது.
எனது இந்த மரணம் நாளை செய்திகளில் வரும்
அதை எப்படியும் சுகியும் கேள்விப்படுவாள்.
அப்போது ஒரு துளி கண்ணீர் எனக்காக விட்டால்.........
அதுவே எனக்கு போதும்.
கயிற்றை கழுத்தில் மாட்டி விட்டு,
கதிரையை கலால் தட்டிவிட்டான்.
அவனது அடங்கும் துடிப்பை வீடியோ கமறா பதிவு செய்து கொண்டிருந்தது ............................
.அஜீவனின் உதவியுடன் இக்கதை மறு சீரமைக்க பட்டுள்ளது
|
|
|
|