| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 585 online users. » 0 Member(s) | 582 Guest(s) Applebot, Bing, Google
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,447
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,289
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,647
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,313
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,681
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,266
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,531
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,761
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,058
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,256
|
|
|
| வாங்க படம் எடுக்கலாம். |
|
Posted by: Thusi - 03-28-2005, 02:51 PM - Forum: சினிமா
- No Replies
|
 |
மதன் அண்ணை நடிக, நடிகையர் தெரிவில் இறங்கியிருக்கிறார். ஏதும் படம் எடுக்கிற ஐடியவோ தெரியேல்லை. அப்பிடி ஏதும் ஐடியா இருந்தால் அதற்கான ஆலோசனையாக இவற்றை எடுத்துக்கொள்ளலாம்.
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[size=18]வாங்க படம் எடுக்கலாம்
'தமிழ் சினிமாவில இது மாதிரியான கதை இதுவரை வந்ததேயில்லை. ரொம்ப வித்தியானமான கதை. கதாநாயகனுக்கும் கதாநாயகிக்கும் இடையில ஏற்படுற காதலை புதுமையாகச் சொல்லியிருக்கோம்'
இப்படித்தான் கோடம்பாக்கத்து இயக்குனர் வட்டாரம் தங்களுடைய படங்களைப்பற்றிக் கூறுவது வழக்கம். திரையரங்குக்குப் போய் படம் பார்த்தால், 'அட அந்தப் படத்துக் கதை மாதிரியே இருக்குதுபா' என்று காசு கொடுத்து டிக்கெட் வாங்கிப் படம் பார்த்த நம்ம ரசிகசிகாமணி கமென்ற் அடித்தபடி கிளம்புவார்.
அப்படியானால் கோட்ம்பாக்கத்தின் ஹிட் பார்முலாதான் (formula) என்ன? என்று மண்டைக்குள் குடைச்சல் ஏற்படுகிறதா? உங்களுக்காக கோடம்பாக்கத்தின் ஹிட் பார்முலாக்களைத் தருகிறோம். நீங்களும் படம் எடுக்கலாம்.
1. பஞ்சாயத்து பார்முலா
இது கிராமத்துக் கதை. பதினெட்டுப்பட்டி என்ற சமாச்சாரத்தை எப்படியாவது படத்தில் ஒரு இடத்திலாவது வசனமாக வைத்துவிடவேண்டும். பதினெட்டுப்பட்டிக்கும் பஞ்சாயத்து செய்வார் கதாநாயகனின் அப்பா. அவருக்கு எதிராக வில்லனின் குடும்பம். குடும்பப்பகையைக் காட்ட ஒரு பிளாஸ்பக் அவசியம். குடும்பப் பகையையும் மீறி இரு குடும்பங்களின் வாரிசுகளும் காதல் வயப்படுவார்கள். இதனால் இரு குடும்பங்களுக்கும் இடையில் பெரிய பட்ஜெட் செலவில் அடிதடிக் காட்சிகள் இருக்கவேண்டும். சண்டைக்குப் பின் வில்லன் இறந்துவிடுவார். அல்லது மனம் திருந்திவிடுவார். கதாநாயகன் பதினெட்டுப்பட்டிக்கும் பஞ்சாயத்துச் சொல்ல தோளில் துண்டைப்போட்டபடி கிளம்பிவிடுவார். பின்னணியில் மீண்டும் டைட்டில் பாடல்.
2. காதல் பார்முலா
எப்போதும் வரவேற்புக் கிடைக்கும் காதல் கதை. இதற்காக ரொம்பவும் மினக்கெட வேண்டிய அவசியம் இருக்காது. கதைப்படி சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த ஹீரோ அல்லது ஹீரோயின். மற்றவர் பெரிய பணக்காரத் தொழிலதிபர் அல்லது தாதாவின் வாரிசாக இருக்கவேண்டும். ஹீரோவும் ஹீரோயினும் ஒரே கல்லூரியில் படிக்கிறார்கள். இருவருக்குமிடையில் ஏற்படும் சண்டையில் காதல் மலரும். இதற்காகச் சம்பந்தமேயில்லாமல் கூடுவாஞ்சேரியில் ஏற்பட்ட காதலுக்காக ஜேர்மனியில் காதல் ஜோடி டூயட் பாடவேண்டும். காதலிக்காக ஹீரோ கல்லூரியிலுள்ள எதிர்க்கூட்டணியுடன் சண்டைபோடுவார். இது போதாதென்று ஹீரோயினின் அப்பா ஹீரோவை மிரட்டுவார். இதற்குப் பிறகு திடீரென்று வில்லன் சொல்லாமல் கொள்ளாமல் மறைந்துபோய்விடுவார். யாராவது உண்மைக் காதலர்களைச் சேர்த்து வைக்க சுபம்.
3. நட்பு பார்முலா
இதுவும் காதல் கசமுசா பார்முலாதான். கல்லூரியில் படிக்கும் நண்பர்கள். அவர்களுக்கு நாலைந்து தோழிகள். இவர்கள் அனைவரும் எந்தச் சூழ்நிலையிலும் பிரியவே மாட்டார்கள். கல்லூரிப் படிப்பு முடிகிறது. இதனால் வீட்டில் பெற்றோர் தொல்லை அதிகமாகிறது. இதைச் சமாளிக்க எல்லோரும் கூட்டணியாக வீட்டைவிட்டு வெளியேறுகிறார்கள். இதற்குப் பிறகுதான் டான்ஸ் மாஸ்டருக்கு வேலையே. டூயட் பாடல்கள் இருக்கவேண்டும். திடீரென்று ஒரு குணச்சித்திர நடிகர் வந்து மனம்போன போக்கில் முத்துமுத்தாக வசனம் பேசுவார். படத்தின் பிலிம் அடி அதிகம் செலவு பிடிப்பதைப் புரிந்துகொண்டு காதலர்கள் உடனடியாக வீட்டுக்குத் திரும்பிவிடுவார்கள். அப்புறம் காதல் சக்சஸ் என்று எல்லோரும் கூட்டம் கூட்டமாக நடனமாடுவார்கள். கதை முடிகிறது.
4. போலீஸ் பார்முலா
ஹீரோ கடமை தவறாத பொலிஸ் அதிகாரி. காதலித்துத் திருமணம் செய்துகொள்ளவார்.
வில்லன் ஆட்களுடன் மோதும்போது பிரச்சினை வெடிக்கும். இதனால் வில்லனோடு நேரடியாக மோதுவார் ஹீரோ. திரைக்கதை ஆசிரியரின் அறிவுரைப்படி வில்லன் சம்பந்தப்பட்ட வழக்கு ஹீரோ வசம்வரும். வில்லனின் மோசமான தொடர்புகள் ஹரோவிற்குத் தெரியவரும். இதனால் ஹீரோவின் குடும்பத்தை அழிக்க வில்லன் தனது ஆட்களை அனுப்பி நமக்கு ரென்சனைக் கிளப்புவார். வில்லனால் பாதிக்கப்பட்ட ஹீரோ தனது பொலிஸ் அதிகாரி பதவியை ராஜினாமா செய்துவிட்டுää தனி ஆளாக வில்லனைப் புரட்டி எடுப்பார்.
5. அக்ஸன் பார்முலா
இந்த அக்ஸன் பார்முலாவில் ரசிகர்களின் காதில் எக்கச்சக்கமாகப் பூச்சுத்தலாம். இந்தியாவையோ அல்லது இந்தியப் பிரதமரையோ குறிவைத்துää பாகிஸ்தான் ஆதரவுடன் ஒரு தீவிரவாதி இந்தியாவிற்கு வருவார். அல்லது சிறையிலிருந்து தப்பித்துவிடுவார். இடையிடையே மந்திரிகளை அவரது நண்பர்கள் கடத்துவார்கள். இந்தத் தீவிரவாதி ஹிந்தி நடிகராக இருக்கவேண்டும். இவருக்கு கணீரென்று டப்பிங் குரல் கொடுப்பது மிக அவசியம். இவர் தமிழில் கொச்சையாகப் பேசியபடி அமிஞ்சிக்கரையிலுள்ள ஒரு துருப்பிடித்த குடோனில் மறைந்திருப்பார். கடமை தவறாத ஹீரோவிடம் இந்தத் தீவிரவாதியைப் பிடிக்கும் பொறுப்பை ஒப்படைப்பார்கள். தீவிரவாதியுடன் மோதும் காட்சிகளில் கிராபிக்ஸ் உதவியுடன் ஹீரோ சாகசம் செய்வார். ஆனாலும் வில்லன் அவரைப் புரட்டிப் போட்டு விடுவான். இறுதியில் இந்திய மண்ணை எடுத்து உடலில் பூசிவிட்டு சண்டைபோட்டு வில்லனை வதம் செய்வார் ஹீரோ.
அடடா! சக்சஸ் பார்முலாக்களைத் தெரிந்துகொண்டு நீங்களும் படம் எடுக்கக் கிளம்பிட்டீர்களா? நீங்களாவது கொஞ்சம் புதுசாக ஏதாவது யோசியுங்க.
சுட்டது - குமுதம்.
|
|
|
| குயிலின்பன் இராணுவத்தால் தாக்கப்பட்டார் |
|
Posted by: Mathan - 03-28-2005, 02:41 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (6)
|
 |
சிறீலங்கா அதிரடிப்படையினரின் தாக்குதலில் அம்பாறை அரசியல் துறைப் பொறுப்பாளர் படுகாயம்!
<img src='http://www.eelampage.com/images/kuyil280305.jpg' border='0' alt='user posted image'>
அம்பாறை மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளர் குயிலின்பன் உட்பட நான்கு போராளிகள் சிறீலங்கா சிறப்பு அதிரடிப்படையினரால் இன்று தாக்கப்பட்டனர்.
இந்தச்; சம்பவம் திருக்கோயில் பிரதேசத்தில் உள்ள மண்டானா அகதிமுகாமில் பிற்பகல் நடந்தது.
இன்று முற்பகல் மண்டானா அகதிமுகாமிற்கு சென்ற போராளி ஒருவரை மறித்த சிறீலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் அகதிமுகாமுக்குள் செல்லவிடாது தடுத்து நிறுத்தினர்.
இதனையடுத்து இது தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ள மண்டானா அகதிமுகாமிற்கு சென்ற குயிலின்பன் உட்பட்ட போராளிகளை சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் தடுத்து நிறுத்தி கெடுபிடிகளை மேற்கொண்டனர்.
இதனையடுத்து படையினருக்கும் முகாம் மக்களுக்குமிடையில் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதன்போது ஆத்திரமடைந்த சிறீலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் குயிலின்பன் உட்பட நான்கு போராளிகளை துப்பாக்கி முனையில் கடுமையாக தாக்கியுள்ளனர்.
காயமடைந்த போராளிகள் திருக்கோயில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்;கைகளுக்காக கல்முனை மருத்துவமனைனக்கு அனுப்பப்பட்டுள்ளதாக கல்முனை செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
puthinam
|
|
|
| விடுதலைப்புலிகளின் அரசியல் துறை அலுவலகம் மீது குண்டு வீச்;சு |
|
Posted by: வியாசன் - 03-28-2005, 11:36 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (2)
|
 |
வவுனியா: விடுதலைப்புலிகளின் அரசியல் துறை அலுவலகம் மீது குண்டு வீச்;சு-மூவர் படுகாயம்!
வவுனியாவில் தமிழீழ விடுதலைப்புலிகளின் மாவட்ட அரசியல் துறை அலுவலகம் மீது இன்று அதிகாலை 5.50 மணியளவில் கைக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது.
தொடரூந்து நிலைய வீதி வைரவபுளியங்குளத்தில் இந்த அலுவலகம் அமைந்துள்ளது.
இன்று காலை நடத்தப்பட்ட இத்தாக்குதலில் அரசியல் துறை பணிமனையின் பணியாளர்களான தாமரை செல்வன் நவாஸ் என்ற இருவரும் காயமடைந்துள்ளனர்.
அத்துடன் அருகில் உள்ள வடக்கு கிழக்கு மாகாண புடவை திணைக்களம் ஒன்றின் காவலாளியான தனபாலன் என்பவரும் காயமடைந்துள்ளார். இவர் வவுனியா பொது வைத்தியசாலையில் சிகிச்;சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வீதியின் அருகில் உள்ள மரத்தின் கீழ் நின்று மிதிவண்டியில் வந்த கும்பல் ஒன்று கைக்குண்டுகளை எறிந்துவிட்டு தப்பியோடியதாக பொலிசார் தெரிவித்தனர்.
கடந்த ஆண்டு நடுப்பகுதியிலும் இதே அரசியல் துறை அலுவலகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. இரண்டாவது முறையாக இன்றையத் தாக்குதல் நடந்துள்ளது.
இந்த கைக்குண்டுத் தாக்குதல் குறித்து பொலிசார் மேலதிக விசாரணை நடத்தி வருகின்றனர்.
சுட்டபழம்
நன்றி புதினம்
|
|
|
| தமிழில் பெயர்கள் |
|
Posted by: thamilvanan - 03-28-2005, 11:02 AM - Forum: சுமுதாயம் (வாழ்வியல்)
- Replies (17)
|
 |
[size=18]அனைவருக்கும் வணக்கங்கள்.
தற்போது அண்மைக்காலமாக என்மனதை நெருடிய விடயம் ஒன்றை பற்றி சொல்லவிரும்புகிறேன்.
முன்னர் ஒருகாலம் ஆங்கிலத்தை ஒட்டிய பெயர்கள் வைப்பது பாஷனாக இருந்தது. தற்போது தமிழில் இணையதளங்களை காண்பதில் மகிழ்வாக இருந்தது.
பின்னர் மீண்டும் ஒரு நெருடல். தற்போது பலர் பயனாளர் பெயராக தமது பெயரை பயன்படுத்துகிறார்கள் அல்லது புனைபெயரை பயன்படுத்துகிறாரகள்.
அதுபற்றித்தான் இப்பதிவு. யாழ்தளத்தின் உறுப்பினர் ஒருவரின் பெயர் சோம்பேறி.
[color=blue]எவ்வளவு அழகான தமிழ்பெயர்கள் இருக்க ஏன் இப்படி சிலர்; இவ்வாறான பெயர்களை விரும்புகிறார்கள் என நண்பர் ஒருவரிடம் கேட்டதற்கு அவர் சொன்னபதில் ஒரு கவர்ச்சிதான் என்றார்.
அப்படியென்றால் எதிர்காலத்தில் எப்படி பெயர் வைக்கப்போகிறாரகள்.
உதாரணத்திற்கு இப்படி இருக்கும்.
மடையன்
விசரன்
அரைபைத்தியம்
காட்டேரி
எருமை
பண்டி
ஏற்கனவே இப்பெயர்களை கூட வைத்திருப்பவர்கள் இருக்கலாம்.
|
|
|
| காதல்.. கனவாய்...! |
|
Posted by: kuruvikal - 03-28-2005, 08:44 AM - Forum: கவிதை/பாடல்
- Replies (49)
|
 |
<img src='http://img216.exs.cx/img216/6472/dream2lq.jpg' border='0' alt='user posted image'>
<b>காதலென்று அலைந்ததில்லை
கனவதில் மிதந்ததில்லை
என்னோடு உன்னை
கற்பனைக் கண்கள் காணும் வரை...!
காலம் உன்னை இனங்காட்ட
காரணமில்லாமல்
கரைகிறது என் மனம்
உன் நினைவில்...!
பாராத உன்னுருவம்
பார்க்கத் துடிக்குது என் பருவம்
பார்த்த விழிகள் பூத்திருக்கு
இமைகள் அசைக்காது....!
இடியே வரினும்
இசைக்காத என் செவிகள்
ஏங்குதுன் காற்றிலாடும் சொல் வாங்க...!
அர்த்தமில்லா கீதம் கூட
அற்புதமாய் காதில் விழுகுது...!
இடைவிடாது இடிக்கும் அந்த
இதயம் கூட அமைதிகாக்குது
இதமாய் உன் பெயர் உச்சரிக்க...!
இரவோடு வந்த உறக்கம் கூட
இரந்து கேட்டும் இரக்கப்படமால்
இல்லையென்று கிடக்குது....!
மோதலுக்கு வரியெழுதும்
கரங்கள் கூட
காதலுக்கு வரியெழுதத் துடிக்குது...!
நடை பயில பஞ்சிப்பட்ட கால்கள்
தடை தாண்டி ஓடுது
உன்னடிகள் தேடி....!
துன்பப்படாத மனதது
தூதுகள் செல்ல வழி சொல்லி
துவண்டு கிடக்கு...!
துரு துரு குறும்பும் அங்க
அடங்கிக் கிடக்கு
மொத்தத்தில்....
இயல்பதை இழந்து
முடங்கிக் கிடக்கு
என் உடல்
உன் நினைவால்....!
காரணமில்லாமல் உதிரும்
உன் வார்த்தைகளுள்
ஆயிரம் அர்த்தங்கள் காணுது நினைவு
காலம் அப்படி இருக்க...
கண்டபடி...வரிகளால் பேசி
வஞ்சிக்காதே வஞ்சகியே
முடிக்காதே என் ஆயுள்
விரைந்துமே...!
கண்ணியம் வேண்டி
விடை பெறும் வேளை
உணர்கிறேன்.... கலைகிறேன்
காதல்.. கனவாய்...!</b>
|
|
|
| உடலில் மின்சாரம்! |
|
Posted by: hari - 03-28-2005, 08:04 AM - Forum: செய்திகள்: உலகம்
- Replies (7)
|
 |
பார்வையில் இருந்து மின்சாரம் பாய்வதும், உடலைத் தொட்டதும் மின்சாரம் பாய்வதும் கவிதையில் பார்த்திருக்கிறோம். இதுநடைமுறையில் சாத்தியமானதா?. ஆம். இது முழுவது நடக்கக்கூடியதே.
ஒவ்வொருவரின் உடலிலும் நிலைமின்சாரம்(Static Electricity) உண்டு. பல நேரங்களில் அது மிகக்குறைந்த அளவாய் இருப்பதால் உணர இயலுவதில்லை. குறைந்த படசம் 500 ஓல்டுக்கு மேல் இந்த நிலைமின்சாரம் தேங்கியிருந்தால் அதைத் தெளிவாக உணர முடியும். ஐநூறு ஓல்ட் என்றவுடன் புருவத்தை உயர்த்த வேண்டாம். நம் உடலில் சில சமயங்களில் 20,000 volt-க்குமேல்கூட நிலைமின்சாரம் தேங்குவது சாத்தியமானதுதான். இந்த அளவுக்கு மின்சாரம் உடலில் தேங்கும்போது நீங்கள் உடலிலிருந்து தீப்பொறி பறப்பதையே காண இயலும்.
சிலநாட்களுக்கு முன்னர் எனது நண்பர் ஒருவர் தனது டி-சர்டை வேகமாகக் கழற்றினால் தீப்பொறி பறப்பதாய்க் கூறினார். இதுவும் குறிப்பிட்ட ஒரு டிசர்டுக்கு மட்டும்தான் இது நடக்கிறதாம். இது முழுக்கவும் நிலைமின்சாரத்தால் நிகழ்வதுதான்.
கார் கதவைத் திறக்கக் கையை நீட்டும்போது ஷாக் அடித்த அனுபவமோ அல்லது விரல்களில் இருந்து தீப்பொறி பறந்த அனுபவமோ யாருக்காவது உண்டா ?. இது கடுங்குளிர் சமயத்தில் நடக்கூடியது. மிகக்காய்ந்த, மிகக்குளிரான தட்பவெப்பம் உள்ள நாளில் ஷூவைத் தரைவிரிப்பில் வேகமாகத் தேய்க்கும்போது உடலில் பல்லாயிரக்கணக்கான வோல்ட் நிலைமின்சாரம் தேங்குகிறது. பொதுவாக நம்மூரில் இது நடப்பதற்கான சாத்தியம் மிகக்குறைவு. ஏனென்றால் அந்தளவுக்குக் காய்ந்த(dry weather), குளிரான தட்பவெப்பம் பொதுவாய் இருப்பதில்லை.
பட்டாசுத் தொழிற்சாலைகள் பற்றிய பரிச்சயம் உள்ளவர்களுக்கு இது தெரிந்திருக்கும். இதுபோன்ற நிலைமின்சாரத்தால் ஏற்படும் விபத்துக்களைத் தவிர்க்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சில விதிகள் உள்ளன. பட்டாசுத் தொழிற்சாலையில் வெடிமருந்தினைத் தொட்டுவேலை செய்பவர்கள் வெளியே அங்குச் சுவரில் பதிக்கப்பட்டிருக்கும் உலோகத்தகட்டில் தனது கைகளைத் தேய்த்துவிட்டு நுழைவார்கள்.
நமது உடை நிலைமின்சாரத்தைத் தேக்கிக்கொள்வதில் முன்னிலை வகிக்கிறது. கீழே சில வகை உடைகள் நம் உடலில் தேக்கும் நிலைமின்சாரத்தின் உச்சஅளவு.
பருத்தி - 7,000 வோல்ட்ஸ்
கம்பளி - 9,000 வோல்ட்ஸ்
நைலான் - 21,000 வோல்ட்ஸ் - இந்த நேரத்தில் நாம் நிஜமாகவே இரும்புக்கை மாயாவிதான் ;-)
எனது இன்னொரு நண்பர் ஒரு குறிப்பிட்ட ஷூவை அணிந்திருக்கும் நாட்களில் எதையாவது எடுக்கக்கையை நீட்டும்போது "ஷாக்" அடிக்கும் திகில் அனுபவத்தை அடிக்கடிப் பெற்றார். காரணம் அந்த ஷூ செய்யப்பட்டிருந்த செயற்கைப் பாலிமரின் கைங்கர்யம்தான்.
நண்பர்களே, உங்களில் யாருக்காவது இதுபோன்ற நிலைமின்னதிர்ச்சி அனுபவம் உண்டா ?.
நன்றி முத்து
இந்த அனுபவம் எனக்கு அடிக்கடி நிகழ்வது உண்டு! பல மணித்தியாலங்கள் கணனியுடன் இருந்துவிட்டு கதவை தொட்டால் கைவிரலில் இருந்து நெருப்பு பொறி பறப்பதை பலமுறை உணர்ந்துள்ளேன்! இது கொஞ்சம் முத்தி ஒரு தடவை கதவுடன் கை உரசுப்பட்டு கையில் உள்ள உரோமம் எரிந்து அவ்விடம் இப்பவும் கருமையாக இருக்கிறது. கொஞ்ச நாட்களாக இதற்கு காரணம் தெரியாமல் குழம்பிபோய்யிருந்தனான், இந்த கட்டுரையை பார்த்த பின் கொஞ்சம் தெளிவு ஆனால் எப்படி இதை இல்லாமல் செய்வது ? இதனால் உடலுக்கு ஏதேனும் ஆபத்து வருமா?
|
|
|
| ஐநா மனிதஉரிமைகள் ஆணைக்குழவின் 61வது கூட்டத்தொடர் |
|
Posted by: eelapirean - 03-28-2005, 05:27 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- No Replies
|
 |
ஐநா மனிதஉரிமைகள் ஆணைக்குழவின் 61வது கூட்டத்தொடர் தற்போது ஜெனீவாவில் அமைந்துள்ள ஐநா பணிமனையில் இடம்பெற்றுவருகின்றது. அனைத்துலக மனிதஉரிமைகள் சட்டங்கள்ää நெறிமுறைகள் என்பனவற்றின் அடிப்படையில் இடம்பெறும் இக் கூட்டத்தொடரின் ஆரம்பநாட்களில் சுமார் 90 நாடுகளின் உயர்மட்ட அரச அமைச்சர்கள் மற்றும் வெளிவிவகாரத்துறை செயலாளர்நாயகங்கள் உரையாற்றினார்கள். சிறீலங்கா வெளிவிவகாரஅமைச்சர் கதிர்காமர் மூன்றாவதுநாள் தனது நாட்டின் மனித உரிமைகள் பற்றிய உரையை வழங்கினார்.
அவ்வுரையில் தமது நாட்டில் சுனாமி நிவாரணங்கள் திறம்பட நடப்பதாகவும், சிவில் உரிமைகள் திறம்படப் பாதுகாக்கப்படுவதாகவும், அவசரகாலநிலை நீங்கிவிட்டதாகவும் கூறினார்.
இக்கூட்டத் தொடர்களில் பிரதானமாக சீனா, அமெரிக்கா, கியூபா, நேபாளம், ஈரான், இந்தியா, பாக்கிஸ்தான் என்பன அரச மட்டங்களில் தமக்குள் மோதிக்கொள்கின்றன. ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்தின் அங்கீகாரம் பெற்ற அனைத்துலக அரசசார்பற்ற அமைப்புக்களின் பிரதிநிதிகள் செச்சினியா, காஸ்மீர், ஆச்சே மற்றும் தமிழீழ விடயங்கள் பற்றிய கவனஈர்ப்புக்களை கோரி உரையாற்றினார்கள். அத்துடன் பெண்கள், சிறுவர்கள் மீதான உரிமைமறுப்பு விடயங்கள், பொருண்மிய கலாச்சார சமூக உரிமை மறுப்பு விடயங்கள், அரசியல் சிவில் உரிமை மறுப்புக்கள் என்பன போன்ற தலைப்புக்களில் விவாதங்கள், அறிக்கைகள் என்பன தொடர்ந்து வருகின்றன.
இந்த மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தொடர் ஐநாவை மறுசீரமைப்பது தொடர்பான செயலாளர் நாயகத்தின் புதிய கடுமையான பிரேரணைகள் மத்தியில் இடம்பெறுகின்றமையால் விறுவிறுப்பானதாகவே அமைகின்றது. அவரது புதிய திட்டத்தில் தற்போது இடம்பெறும் வடிவிலான கூட்டத்தொடர் மாற்றப்பட்டு பொதுச்சபை வடிவில் மனிதஉரிமைகள் விடயங்கள் ஆராயப்படும். இதன் மூலம் கியூபா, ஈரான், சீனா போன்ற நாடுகளின் செல்வாக்கு மனித உரிமைகள் விவாதங்களின் போது செல்லுபடியற்றதாகிவிடும். ஏனெனில் தற்போதுள்ள ஆணைக்குழு வடிவில் அமெரிக்கா அரசியல் நோக்கில் முன்வைக்கும் மனிதஉரிமைகள் கரிசனைகள் விரிவான கடுமையான விமர்சனங்களுக்குட்படுகின்றது,
எதிர்வரும் 7ம் திகதி செயலாளர் நாயகம் கொபி அனான் இங்கு உரையாற்றுவதாக தகவல்கள் வெளிவரத்தொடங்கியுள்ளமையால் இந்த மறுசீரமைப்பு விவகாரம் கடுமையாக சு10டுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
இந்த கூட்டத்தொடரில் வடக்குகிழக்கு மனித உரிமைகள் ஆணைக்குழவின் உபதலைவர் சட்டத்தரணி சிவபாலன் உயர்மட்டக்குழு உறுப்பினர் மாகாசிவம் ஆகியோர் அரசசார்பற்ற அனைத்துலக அமைப்புக்களின் பிரதிநிதிகளாகக் கலந்து கொள்கின்றனர். அத்துடன் அனைத்துலக தமிழர் கூட்டமைப்பின் 6 பிரதிகளும்ää தமிழர் மனித உரிமைகள் மையத்தின் இரு உறுப்பினர்களும் கலந்துகொள்கின்றனர்.
இவ்வாணைக்குழவின் முன் அனைத்துலக தமிழர் கூட்டமைப்பு, மனித உரிமைகள் மையம் என்பன சார்பில் இருவேறு மனுக்கள் கையளிக்கப்பட்டுள்ளது.
அனைத்துலக தமிழர் கூட்டமைப்பு, ஆணைக்குழு நிகழ்வுகளின் 9வது அட்டவணையின் கீழ் சமர்ப்பித்துள்ள மனுவில் இன்றைய வடக்குக்கிழக்கு நிலவரம் தொடர்பான விடயங்களை தொகுத்து சமர்ப்பித்துள்ளது. இதுவரை நோர்வே மத்தியத்துவத்துடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தை முயற்சிகளின் தோல்வகளை சுட்டிக்காட்டி, தமிழ் மக்கள் தமது சுயநிர்ணய உரிமையைப் பிரயோகித்துப் பிரிந்து செல்லும் தகைமைப் பெற்றுள்ளனர் என்கின்ற அனைத்துலக பிரகடனத்தின் அடிப்படையில் இம்மனு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இவ்வாணைக்குழு முன் உரையாற்றிய கதிர்காமர் சுனாமி நிவாரணங்கள் தொடர்பாக வெளியிட்ட பிழையான கருத்துக்களை மறுத்து பதிலளிக்கும் குறிப்பொன்றையும் அனைத்துலக தமிழர் கூட்டமைப்பு வெளியிட்டு பிரதிநிதிகளின் சுற்றுக்கு அனுப்பியது. அதேவேளையில் அவசரகால நிலவரம் தொடர்பாக கதிர்காமர் தெரிவித்த பொய்களை அம்பலப்படுத்தி nஐனீவா கூட்டத்தொடரில் பங்கேற்கும் வடக்குக்கிழக்கு மனிதஉரிமைகள் பணிமனையின் உபதலைவர் சட்டத்தரணி சிவபாலன் வெளியிட்ட கருத்துக்கள் பத்திரிகை செய்திக்குறிப்புக்கள் ஊடாக விநியோகிக்கப்பட்டது.
இரண்டாம் வாரம்வரை இடம்பெறுகின்றது.
சுட்டது சூரியன்இவ்வாணைக்குழு முன் உரையாற்றிய இத்தாலியை தலைமையகமாகக் கொண்ட அனைத்துலக உரிமைகள் மற்றும் விடுதலைக்கான அமைப்பின் செயலாளர் நாயகம் தமிழ் மக்கள் பிரிந்து சென்று தனிநாடு அமைக்கும் காலகட்டத்தை நோக்கி தள்ளப்படுகின்றார்கள் என்பதை மிகத் தெளிவாக கோடிட்டுக் காட்டி உரையாற்றினார். சனநாயக சட்டத்தரணிகள் அமைப்பின் சார்பில் கலந்து கொண்ட டியற்றி மக்னோல்ட் இன்றைய சிறீலங்கா நிலவரம் தொடர்பான நிலவர உரையை ஆற்றினார்.
இங்கு உரையாற்றிய அனைத்து இனப்புறக்கணிப்புக்கும்ää இனவாதத்திற்கும் எதிரான யப்பானிய அமைப்பின் சிறப்புப்பிரதிநிதிää சுனாமி நிவாரணங்களில் தமிழ் முஸ்லீம் மக்கள் புறக்கணிப்புகளுக்கு உட்பட்டது தொடர்பான கண்டனத்தை வெளியிட்டார். தெற்கில் சுனாமியால் பாதிக்கப்பட்ட சிங்கள மக்களிற்கான புதிய வீடுகளுக்கான அடிக்கற்கள் நாட்டப்பட்டு விட்டன ஆனால் வடக்கிலும்ää கிழக்கிலும் தொடர்ந்தும் மக்கள் கூடாரங்களில் நம்பிக்கையற்று வாழ்வதாக அவர் நிலைமை விபரித்தார்.
இதேவேளையில் ஐநாவின் காணமற்போனவர்களுக்கான சிறப்பு பணிக்குழு ஆணைக்குழவிற்கு சமர்ப்பித்துள்ள தனது அறிக்கையில் இலங்கையில் சிறீலங்காப் படைகளால் பிடிக்கப்பட்டு காணமல் போன 12227 பேரின் நிலவரம் தொடர்பான தமது விசாரணைகள் தொடர்வதாக அறிவித்துள்ளது. அத்துடன் தம்மால் 1991ää 1992ää 1999 ஆண்டுகளில் முன்வைக்கப்பட்ட அரசமைப்பு திருத்தங்கள்ää பயங்கரவாத தடைச்சட்டத்தினை நீக்குதல் போன்ற விடயங்களில் சிறீலங்கா செயற்பட வேண்டும் எனவும் கோரியுள்ளது. அத்துடன் காணமல் போனவர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் உதவிநிதிகளில் பாகுபாடு காட்டடப்படக் கூடாது எனவும் கோரியுள்ளது. இவ்வாண்டு சனவரிவரை ஐநாவின் சிறப்புப் பணிக்குழவின் தகவல்களின் பிரகாரம்ää 12227 காணமல் போனவர்களின் விபரங்களை ஐநா சிறீலங்கா அரசிடம் கோரியிருந்தது. அவற்றில் அரசு 5338 நபர்களின் விபரங்களை ஐநாவிற்கு சமர்ப்பித்திருந்தது. இதில் 5254 பேர் கொல்லப்பட்டுவிட்டனர்ää 24 பேர் படையினரின் கைகளில் உள்ளனர். 99பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர். மீதிவிபரங்களை அரசு ஐநாவிற்கு இன்னமும் வழங்கவில்லை. இவற்றில் செம்மணியில் கொல்லப்பட்ட தமிழர்களும் அடங்குவர். இன்றும் உலகில் காணமல் போனவர்களின் நிலுவை கூடுதாலகக் கொண்ட முன்னணி நாடாக சிறீலங்காவேயுள்ளது.
தொடர்ந்தும் கூட்டத்தொடர் ஏப்பிரல்
|
|
|
| திருவள்ளுவர் தமிழ் எழுதி |
|
Posted by: thamilvanan - 03-27-2005, 08:09 PM - Forum: இணையம்
- Replies (7)
|
 |
புதிய தமிழ் எழுதி ஒன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. இங்கு கொடுக்கப்பட்ட எந்த எழுத்துருவை பயன்படுத்தினாலும் எந்த வேறுபாடும் இன்றி தட்டெழுத முடியும். திருவள்ளுவர் தமிழ் எழுதி எனப்படும் இந்த எழுத்தோலையை பல்வேறு தேவைகளுக்கு பயன்படுத்தக்கூடியவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. இத்துடன் புதிய தமிழ் எழுத்துரு ஒன்றும் அறிமுகப்படுத்தப்படுகிறது.
இன்று எல்லோரும் ஆங்கில் எழுத்துருவுக்கு வடிவமைக்கபட்ட கீபோட்டை பயன்படுத்துகிறோம். ஆனால் தமிழ்எழுத்துருவுக்கு மாற்றுவதற்கான எழுத்துருக்களை அனைத்து இடங்களிலும் ( எல்லா கீகளிலும்) பயன்படுத்துவதால் எமக்கு தேவையான அத்தியாவசிய குறியீடுகளை இடுவதற்கு மீண்டும் ஆங்கில எழுத்துருவுக்கு மாற்றியே அதனை செய்கிறோம்.
ஆனால் வேறு எந்த குறியீடுகளையும் பயன்படுத்தாமல் ஆங்கில எழுத்துருக்கள் உள்ள 26 கீகளை மட்டும் பயன்படுத்தி (அதிலும் மீதமாக 08 இடங்கள் உள்ளன.) இப்புதிய எழுத்துரு அறிமுகப்படுத்தப்படுகிறது. ஆனால் தனியாக புதிய எழுத்துருவை நீங்கள் தரவிறக்கதேவையில்லை. உங்கள் கணனியில் இருக்கின்ற லதா எழுத்துருவை பயன்படுத்தியே இதனை தட்டெழுதமுடியும்.
திருவள்ளுவர் தமிழ் எழுதி பற்றியும் தமிழம் எழுத்துரு பற்றியும் உங்கள் கருத்துக்களை அறியதாருங்கள். தற்போது இவ் எழுதியை யாரும் பயன்படுத்தவேண்டாம். அனைவரின் கருத்துக்களை அறிந்து சரிபிழைகளை மிகவிரைவில் திருத்தம் செய்து அனைவரும் பயன்படுத்தக்கூடிய எளிய செயல் நிரலை விரைவில் தருகிறேன்.
திருவள்ளுவர் தமிழ் எழுதிக்கு செல்ல
|
|
|
|