| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 586 online users. » 0 Member(s) | 583 Guest(s) Applebot, Bing, Google
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,447
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,289
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,647
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,313
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,681
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,266
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,531
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,761
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,058
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,256
|
|
|
| தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் |
|
Posted by: Mathan - 03-27-2005, 07:53 PM - Forum: தமிழ் /தமிழர்
- Replies (8)
|
 |
தமிழின் தற்போதைய வரிவடிவம்(script) மற்ற எந்த இந்திய மொழிகளையும் விட எளிமையானது. அதிகம் நேர்க்கோடுகள், ஒன்றுடன் ஒன்று ஒட்டிக்கொள்ளாத கூட்டெழுத்துக்கள் கொண்ட எழுத்து முறை ஒரு மொழியை எளிமையாக்குகிறது. இந்தக் கூறுகளை ரோமன் வரிவடிவங்களில் காணலாம். ஒரு மொழியின் எதிர்காலம் வெறும் காகிதத்தில் எழுதப்படுவது, அச்சிடப்படுவது என்பதிலிருந்து, வாழ்க்கைக்காக பன்மொழியும் கற்கவேண்டிய மாணவர்களும் எழுத, வாசிக்க எளிதாக இருத்தல் என்ற நிகழ்கால, இயந்திரத்தால் வாசித்துணரப்படுதல் என்ற எதிர்கால, (தூரத்திலில்லை, மிக சமீபத்தில்தான் உள்ளது) தேவைகளுக்கு ஈடு கொடுப்பதில் உள்ளது. வரிவடிவத்தின் எளிமை இத்தகைய வளர்ச்சிக்கு ஒரு மொழியைத் தயாராக்குகிறது.
ஓஹோ, இன்னொரு பெரியாரெழுத்து சமாசாரம் பேச வந்துவிட்டாரா இந்த ஆள்? என்று ஒரேயடியாக ஓடிப் போக வேண்டாம். மொழி என்பது அதன் எழுத்தல்ல. எழுத்து நாம் அணியும் ஆடையைப் போன்றதே. மொழியின் ஒலிவடிவம் தான் உள்ளே இருக்கும் உடல். உடலிலே உறையும் உயிர், மனதிலே ஓடும் சிந்தனை ஆகியவற்றை வேர்ச்சொற்களுக்கும் இலக்கணக்கூறுகளுக்கும் ஒப்பிடலாம்.
நாம் நம் ஆடையின் பாணியைத் தொடர்ந்து மாற்றிக்கொண்டே இருப்பதைப் போல நம் தமிழ் மொழியே நூற்றாண்டுகளாக எப்படி தன் ஆடையை மாற்றிக்கொண்டுள்ளது என்று கீழே உள்ள படத்தைப் பார்த்தால் புரிந்துகொள்ளலாம்.
<img src='http://kasi.thamizmanam.com/wiki/media/articles/alpha_evolution1.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://kasi.thamizmanam.com/wiki/media/articles/alpha_evolution2.jpg' border='0' alt='user posted image'>
பழங்காலத்தில் படிப்படியாக தொடர்ந்து நிகழ்ந்த மாற்றங்கள், அரசு, அதிகாரம், கல்விமுறை ஆகியவை ஒரு கட்டுக்குள் வந்தபின் ஆட்சியதிகாரம் உள்ளவர்களாலேயே செய்யமுடியும் என்று ஆகிவிட்டது. இப்படியான ஒரு ஆடை மாற்றம் கடைசியாக நடந்தது 1978-ஆம் ஆண்டு முதல்வராக இருந்த எம்ஜிஆர் அவர்கள் நள்ளிரவில் பிறப்பித்த ஆணையால் நடந்தது.
அந்த ஆணையால் மாற்றியமைக்கப்பட்ட எழுத்துமுறையால் தமிழ் மாணவர்களுக்கும், அச்சுக் கோர்ப்பவர்களுக்கும், தட்டச்சு செய்பவர்களுக்கும் சிரமம் குறைந்தது. அவற்றின் முந்தைய வடிவங்களும், மாற்றியமைக்கப்பட்ட வடிவங்களும் கீழே:
<img src='http://kasi.thamizmanam.com/wiki/media/articles/first_reform.gif' border='0' alt='user posted image'>
தமிழில் 247 எழுத்துக்கள் (கிரந்தம் தவிர்த்து) என்பது நமக்குத்தெரியும், யோசித்துப் பாருங்கள், இந்த ஒவ்வொரு எழுத்துக்கும் ஒரு தனி வரிவடிவம் இருக்குமானால் கணினி விசைப் பலகையில் (ரோமன் வழியில் அல்லாமல்) உள்ளிட ஒரு விசைப்பலகை எவ்வளவு பெரிதாய் இருக்கவேண்டும்? நல்லவேளையாக அப்படியில்லை. உயிர்மெய் எழுத்துக்கள் பெரும்பாலும் கூட்டெழுத்துக்களாக இருப்பதால், 247க்குப் பதிலாக 100க்கும் குறைவான தனித்தனி வரிவடிவங்களாலேயே குறிக்க முடிந்தது. இருந்தாலும் 26+26=52 மட்டுமே உள்ள ஆங்கிலத்தோடெல்லாம் போட்டியிட இது இன்னும் எளிமைப்படுத்த முடிந்தால் நல்லதுதானே.
எப்படி எளிமைப்படுத்த முடியும்?
உயிர் 12-ம் மெய் 18-ம் ஆயுதம் ஒன்றும்தான் அடிப்படை வடிவங்கள். மற்றவை எல்லாமே இவற்றிலிருந்து வந்தவையே. ஆங்கிலம் போல உயிரையும் மெய்யையும் தனித்தனியே எழுதாமல், நாம் மெய்யெழுத்துடன் கீற்றுகள்(glyphs) சேர்த்து உயிர்மெய்யாக்கி எழுதுகிறோம். இப்படியாக, தேவைப்படும் தனித்தனி வடிவங்களின் எண்ணிக்கையைக் குறைக்க முடிகிறது. இந்தக் கீற்றுகள் எவை?
<img src='http://kasi.thamizmanam.com/wiki/media/articles/glyphs.jpg' border='0' alt='user posted image'>
மெய்யெழுத்துடன் கீற்றுகள் சேர்க்கும்போது ஒரு சில உயிர்மெய்யழுத்துக்கள் மட்டும் அவற்றின் மெய்யெழுத்தின் முன்பிருந்த வடிவம் சிதைக்கப்பட்டே கீற்றுகளை ஏற்றுக்கொண்டன. முதல் படத்தில் பழைய வடிவங்களாகக் கொடுக்கப்பட்ட மெய்யெழுத்தைப் பார்த்தால் நான் சொல்வது புலப்படும். ஆகவே வரிவடிவங்களைக் குறைக்கவும் வேண்டும், ஆனால் கீற்றுகளைக் கொண்டு அமைந்த நம் மொழியின் சிறப்பும் பாதுகாக்கப்படவும் வேண்டும் என்ற நிலைப்பாட்டிற்கு ஏதுவாக அந்த 1978 சீர்திருத்தம் அமைந்தது.
ஆனாலும் இன்னும் ஒரு 24 எழுத்துக்கள், இந்த முன்னேற்றத்துக்கு மாறாக இருக்கின்றன. அவைதான் உகர, ஊகார மெய்யெழுத்துக்கள். இன்னும் இவற்றில் பலவும் வெறுமனே கீற்றுகளைச் செர்த்துக்கொள்ளாமல் தன் மூல மெய்யெழுத்தைச் சிதைத்தே எழுதப்படுகின்றன. கீழே பார்க்கலாம்:
<img src='http://kasi.thamizmanam.com/wiki/media/articles/ukarams.jpg' border='0' alt='user posted image'>
தமிழின் 247-36=215 எழுத்துக்களுக்கும் 12 உயிர், +1 ஆய்தம், +18 மெய் (புள்ளியில்லாத வடிவம்) + 10 குறியீடுகள் ஆக வெறும் 41 வடிவங்களில் அடக்கிவிட முடிகிறபோது, இந்த 36 உயிர்மெய் எழுத்துக்களுக்காக ஒரு 36 தனி வடிவங்களை வீணாக்குவது தவிர்க்கப்பட வேண்டியதே. அதாவது கிட்டத்தட்ட பாதி வடிவங்கள் இந்த இரு குழுக்களுக்கே செலவாகின்றன.
இவற்றையும் இரு கீற்றுகள் கொண்டு குறிக்கமுடிந்தால், மொத்தம் 41+2=43 வடிவங்களில் 247-ஐயும் குறிக்கமுடியும். இதனால் விளையும் பயன்கள்:
ஆங்கிலப் படிப்பு வாழ்க்கைக்கு அவசியமாகிப் போன காலத்தில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். இரண்டாம் மொழியாகவாவது நம் பிள்ளைகள் பிழையறத் தமிழ் கற்றாலே அடுத்த தலைமுறைக்கும் தமிழ் முன்னெடுத்துச் செல்லப்படும். ஏற்கனவே எக்கச்சக்கமாக சுமை ஏற்றிவிட்ட கல்வியமைப்பில் இயன்ற அளவு மொழியை எளிமைப்படுத்தல் குழந்தைகளின் ஆர்வத்தை ஈடுபாட்டை அதிகரிக்கும். 12, 7 வயதுக் குழந்தைகளின் தந்தையாக நான் இதை அனுபவத்தில் உணர்ந்தே இருக்கிறேன்.
வரிவடிவ எழுத்துணரி(OCR-Optical Character Recognition) போன்ற நுட்பங்கள் பிழையின்றி அச்சில்/கையெழுத்தில் உள்ளதை வாசிப்பது எத்தனைக்கெத்தனை தனிவடிவங்கள் குறைவோ, எத்தனைக்கெத்தனை கூட்டெழுத்துக்களை ஒன்றுக்கொன்று ஒட்டாத எழுத்துக்கூறுகள் கொண்டு அமைக்கமுடிகிறதோ, அத்தனை எளிது, பிழையற்று அமைக்கக்கூடியது. இன்று அச்சிடும் கணினி நாளை நம் எழுத்தை வாசிக்கவும் போகிறது, அதற்கு நாம் நம் மொழியைத் தயார் செய்யவேண்டாமா?
எனவே உகர ஊகார கூட்டெழுத்துக்களின் தற்போதைய வடிவத்தை சீர்திருத்தி, அவற்றுக்கும் தனிக் கீற்றுகள் கொண்டு அமைத்து நம் மொழியைக் கையாளுவதை எளிமைப்படுத்துவோம். இது சம்பந்தமாக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் அமைத்த தமிழ்வளர்ச்சி மன்றம் என்ற உயர்மட்டக்குழு ஏற்கனவே தன் ஆய்வறிக்கையை அரசுக்கு அளித்திருக்கிறது. அந்த அறிக்கையின்மேல் இன்னும் அரசு அறிவிப்பு வராமல் இருக்கிறது. பலரும் இதன் முக்கியத்துவத்தை உணர்ந்து வலியுறுத்துவதன் மூலம் நல்ல முடிவைத் தமிழக அரசு விரைவில் எடுக்க ஆவன செய்வோம்.
--------------------------------------------------------------------------------
சமீபத்தில் மறைந்த, தமிழ்வளச்சிக்கழகம் அமைப்பின் செயலாளர், இந்த சீர்திருத்தங்களை வலியுறுத்தியவர், டாக்டர் கொடுமுடி சண்முகன் அவர்கள் நினைவாக, எழுதப்பட்டது.
இந்தக் கட்டுரைக்குத் தேவையான தகவல்களும் படங்களும் மேற்சொன்ன டாக்டர் கொடுமுடி சண்முகன் அவர்களின் கட்டுரையிலிருந்தும், யுனிவர்சிட்டி அஃப் டெக்சாஸ், டிபார்ட்மென்ட் அஃப் ஆசியன் ஸ்டடீஸ்-ஐச் சேர்ந்த பேராசிரியர் ராதாகிருஷ்ணன் அவர்கள் தயாரித்த தமிழ் கற்போருக்குக்கான கையேட்டிலிருந்தும் நன்றியுடன் எடுத்தாளப்பட்டிருக்கின்றன.
எழுதிய நாள்: 27 மார்ச், 2005
நன்றி - காசி
|
|
|
| பிடித்த நடிகர் யார்? |
|
Posted by: Mathan - 03-27-2005, 07:00 PM - Forum: சினிமா
- Replies (28)
|
 |
<span style='font-size:30pt;line-height:100%'>பிடித்த நடிகர் யார்?
இளம் தமிழ் நடிகர்களில் உங்களுக்கு அதிகம் பிடித்த நடிகர் யார்? சொல்லுங்களேன் 8)</span>
|
|
|
| அரச கட்டுப்பாட்டு பகுதியில் கருணா முகாம் |
|
Posted by: வியாசன் - 03-27-2005, 10:58 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (2)
|
 |
சிறீலங்கா ஆக்கிரமிப்புப் பகுதியில் கருணா குழு: கண்காணிப்புக் குழு விசாரணை
தமிழீழத் தாயகத்தில் சிறீலங்கா இராணுவம் ஆக்கிரமித்துள்ள பகுதிகளில் கருணா குழுவினர் முகாம்கள் அமைத்து இயங்குவது குறித்து இலங்கை போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு விசாரணை நடத்தி வருகிறது.
இது குறித்து கருத்துத் தெரிவித்துள்ள அக்குழுää சிறீலங்கா இராணுவத்தின் இத்தகைய நடவடிக்கைகள் வன்மையான யுத்த நிறுத்த மீறலே என்றும் சாடியுள்ளனர்.
போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் பேச்;சாளர் ஓலட்ஸ்டோபிர் இது குறித்து கூறுகையில் சண்டே லீடர் பத்திரிகை இந்த குழுக்களின் முகாம்கள் பற்றி அம்பலப்படுத்திய தகவல்கள் குறித்து உரிய விசாரனைகள் மேற்கொள்ளபட்டுவருவதாகத் தெரிவித்தார்.
இது போன்ற முகாம்கள் குறித்து தமிழீழ விடுதலைப்புலிகள் முன்வைத்த முறைப்பாடுகள் குறித்து போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் இரண்டு குழுக்கள் விசாரணை நடத்தி வருகின்றன என்றும் அவர் கூறினார்.
சுட்டபழம்
நன்றி புதினம்
|
|
|
| நான்கு பிள்ளைகளுக்கு தந்தையர்கள் யார்? |
|
Posted by: eelapirean - 03-27-2005, 02:47 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (15)
|
 |
நான்கு பிள்ளைகளுக்கு தந்தையர்கள் யார்? :roll: :roll: :roll:
(புளியங்குளம் நிருபர்)
நான்கு பிள்ளைகளுக்கு தந்தையர்கள் யார் என்பது நாளை வவுனியா நீதிவான் நீதிமன்றில் தெரிவிக்கப்படவுள்ளது.
வவுனியா நீதிவான் நீதிமன்றில் இடம் பெற்ற தாபரிப்பு வழக்குகளில் நான்கு இளம் பெண்கள் தமது பிள்ளைகளுக்கு இவர்கள்தான் தந்தையர் என கூறியபோது தமது பிள்ளைகள் இல்லையென அந்த நான்கு இளைஞர்களும் மறுத்து வந்தனர்.
இந்த வழக்கில் நான்கு பெண்களையும்இ அவர்களின் பிள்ளைகள் நான்கு பேரையும்இ தந்தையர்கள் என குறிப்பிடப்பட்ட நான்கு இளைஞர்களையும் என பன்னிரெண்டு பேரையும் டி. என்.ஏ. பரிசோதனைக்கு உட்படுத்துமாறும்இ இதற்கான ஒழுங்குகளை சட்டத்தரணி நடராஜா சுதர்சனை மேற்கொள்ளுமாறு நீதிபதி பணித்திருந்தார்.
கொழும்பில் உள்ள வைத்திய நிபுணர் மாயா குணசேகரவினால் டி.என்.ஏ.பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அவரது மருத்துவ அறிக்கை நாளை வவுனியாஇ நீதிவான் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இதன் போது உண்மையினை அறிந்து கொள்ள முடியும்
சுட்டது வீரகேசரி
|
|
|
| கம்பன் ஒரு வம்பன் |
|
Posted by: stalin - 03-27-2005, 01:29 AM - Forum: தமிழும் நயமும்
- Replies (96)
|
 |
இராமாயணம் வடநாட்டவர் புகழ்பாடும் ஒரு இதிகாசம். அண்ணாத்துரை அவர்கள் கம்பன் ஒரு வம்பன் எனக்கூறி கம்பராமாயணத்திலுள்ள ஆபாசங்களை கேலி செய்து கீமாயணம் என்ற புத்தகத்தை வெளியிட்டிருந்தார்------அதில் ஓர் இரு காட்சிகளை பார்க்கலாம்----சீதைக்கு இராமரை கண்டதும் காதல் ஏற்பட்டு விட்டது ஆனால் சீதையின் தந்தை விதுரனோ சுயம்வரத்தில் யார் வில்லை முறிக்கிறார்களோ அவருக்குத்தான் சீதை எனக்கூறியிருந்தான். சுயம்வரம் நடந்து கொண்டிருந்தது சீதை படபடத்துக்கொண்டிருந்தாள் அப்போது தோழி ஓடிவந்து கூறுகிறாள் இராமன் வில்லை முறித்துவிட்டானென்று அப்பொழுது கம்பன் கூறுகிறான்---இதைக்கேட்டு சீதை சந்தோசப்பட்டு பரவசப்படும்போது மேகலை அறுந்து விழுந்தது என்று முடிக்ககிறான் பி.கு--அந்த காலத்து ராணிகள் ஒவ்வொரு உடலிலுள்ள ஒவ்வொரு உறுப்புக்கும் ஒரு ஆபரணம் அணிவார்கள். அது போல் பெண் உறுப்புக்கு அணியும் நகையின் பெயர் தான் மேகலை எனும் ஆபரணம் ---கம்பன் உங்கள் ஊகத்துக்கு விடுகறான் ஏன் அவிழ்ந்து விழுந்தது என்று----------------------------------------------------------
|
|
|
| மோடியின் பயணத்தடையிலிருந்து நாம் கற்றுக்கொள்ள பலவிடயங்கள் |
|
Posted by: வியாசன் - 03-27-2005, 12:24 AM - Forum: புலம்
- Replies (5)
|
 |
குஜாராத் முதலமைச்சர் நரேந்திரமோடி இங்கிலாந்து பயணம் செய்ய மேற்கொண்டிருந்த திட்டத்தை அவர்மேல் இங்கிலாந்தில் தொடரப்பட இருந்த வழக்கினால் கைவிட்டுள்ளதாக தினகரன் இணையத்தில் செய்திகள் வந்திருக்கிறது.
குஜாராத்தில் நடைபெற்ற மதக்கலவரத்தினால் கொல்லப்பட்ட இங்கிலாந்து குடியுரிமை பெற்ற ஒருவரின் தகப்பன் இங்கிலாந்தில் வழக்கு தாக்கல் செய்ய முயன்றமையினால் மோடி தன்னுடைய பிரயாணத்îத இடைநிறுத்தியதாக சொல்கிறார்கள்.
அப்படியானால் ஏன் நாங்களும் செம்மணியில் புதைகுழிகள் நாகர்கோவில் பள்ளிக்குண்டு வீச்சுகள் போன்றவற்றை ப்பற்றிய தகவல்களை திரட்டி படைக்கல அமைச்சராக இருக்கின்ற சந்திரிகாமீது வழக்கு தொடரமுடியாது? அதுசம்மந்தமாக எங்கள் அறிஞர்கள் ஏன்முயற்சிசெய்யக்கூடாது. ஒரு முதலமைச்சரின் இங்கிலாந்து பயணத்தை ஒரு தனிமனிதன் சட்டத்தின் துணைகொண்டு நிறுத்த முடிந்தபோது இங்கு எத்தனை ஆயிரம் பேர்களின் உறவுகள் கொல்லப்பட்டும் காணாமல் போயிருக்கின்றபோதும் சட்டத்தின்துணை கொண்டு ஏதாவது செய்யமுடியாது.
முன்பு ஒரு தடவை சந்திரிகா நெதர்லாந்து வந்தபோது யாரோ அவசரஅவசரமாக ஒரு வழக்கை தொடர்ந்தனர். அவர்கள் ஆதாரங்களை இணைக்கவில்லையென்று வழக்கு தள்ளுபடிசெய்யப்பட்டது. இப்பொதிருந்தே ஆதாரங்களை திரட்டி சந்தர்ப்பம் வருகின்ற போது செயற்படுத்தலாம்.
|
|
|
| நீங்காத உன் நினைவுகளில் |
|
Posted by: Malalai - 03-26-2005, 06:40 PM - Forum: கவிதை/பாடல்
- Replies (75)
|
 |
நீங்காத உன் நினைவுகளில்
நான் வாழ - நீ மட்டும்
நிம்மதியாக உறங்குகிறாயே
பலைவனமாக இருந்த மனதை
பக்குவமாய் மாற்றிடவே
பச்சைப் பசேலென
பசுமையாக நீ வந்தாய்
கல்லும் முள்ளுமாக
தடம் புரண்ட
என் வாழ்விலே
காலணியாக நீ மாறி
காத்து வந்தாய்
புயல் காற்றினில்
உழன்ற நெஞ்சினில்
இதமான தென்றலாக - நீ
உருவாகி வந்தாய்
பாசாங்குகள் பல செய்யாது
பரிவுடனே பாசம் வைத்தாய்
அன்பு கொண்ட உன் உள்ளத்திற்கு
அடிபணிந்தது என் உள்ளம்
ஆனாலும் மீண்டும்
நான் பாலைவனமாகிறேன்
நீ பசுமையை இழந்ததால்
கல்லிலும் முள்ளிலும்
கால்கள் கிழிகிறதே
காலணியாக நீ இல்லாதமையால்
புயலிலே மீண்டும் சிக்கினேன்
தென்றல் நீ விடை பெற்றதால்
பரிவுடன் வைத்த பாசம்
பாதை மாறி செல்கிறதே
அன்பு கொண்ட என் உள்ளம்
வெறுமையாகி வெறுக்கிறதே
நீ அருகில் இருந்தும்...
|
|
|
| NTT வன்னியிலிருந்து ஐரோப்பாவுக்கு புதிய தொலைக்காட்சி |
|
Posted by: selvanNL - 03-26-2005, 04:58 PM - Forum: தமிழீழம்
- Replies (21)
|
 |
<b>தமிழீழ தேசிய தொலைக்காட்சியின் ஒளிபரப்பு சேவை தொடங்கியது</b>!
<img src='http://img196.exs.cx/img196/6699/ntt2603059dn.jpg' border='0' alt='user posted image'>
[b]ஐரோப்பாவில் ரிரிஎன் தொலைகாட்சிäடாக இன்று இரவு தாயக நேரம் 11.30 மணிக்கு தனது சேவையை தமிழீழத் தொலைக்காட்சியை ஆரம்பிக்கின்றது.
தமிழீழ தாயகத்தின் தேசியக்குரலை வெளிப்படுத்துகிற ஒளி ஊடகமாக தமிழீழத் தேசியத் தொலைக்காட்சி தன் சேவையை ஆரம்பிக்கின்றது.
தாயகத்திலிருந்து இப்போது 30 நிமிடங்களுக்கான ஓளிபரப்பு இடம்பெறும்.இதில் முதன்மையாக செய்திப் பகுதி இடம்பெறும் என தமிழீழ தேசிய தொலைக்காட்சி இயக்குனர் தெரிவித்துள்ளார்.
இந்த ஒளிபரப்பு நேரம் ஒன்றரை மணிநேரம் அதிகரிக்கப்பட உள்ளது. விரைவில் உலகின் பல்வேறு பகுதிகளிலும் தமிழீழத் தேசிய தொலைக்காட்சியின் ஒளிபரப்பு சேவை விரிவுபடுத்தப்படவுள்ளது.
ஆங்கிலத்தில் என்ரிரி என்ற சுருக்கப்பேரில் தமிழீழ தேசியத் தொலைக்காட்சி ஆரம்பமாகின்றது.
தமிழீழத் தேசியப் பூவான கார்த்திகைப் பூவை மைய்யமாகக் கொண்டு தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியின் இலச்சினை உருவாக்கப்பட்டுள்ளது
¿ýÈ¢ Ò¾¢Éõ.
-----------------------------------------------------------------------
NTT ¦¾¡¨Äì¸¡ðº¢ Å£Ú ¿¨¼ §À¡¼ ±ÉÐ ÁÉÁ¡÷ó¾ ¿ø Å¡úòÐì¸û. ·
|
|
|
| உலகத்தை சுற்றிப்பார்க்க... |
|
Posted by: hari - 03-26-2005, 10:25 AM - Forum: கணினி
- Replies (14)
|
 |
கூகுள் (Google) நிறுவனம் அண்மையில் keyhole என்ற மென்பொருளை அறிமுகம் செய்துள்ளது! இதன் மூலம் நீங்கள் கணணியில் இருந்துகொண்டே உலகத்தை சுற்றிப்பார்க்கலாம்! இவ்மென்பொருள் 7 நாட்களுக்கு இலவசமாக தருகிறார்கள்! நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்!
இணைய முகவரி: http://www.keyhole.com/index.php?m=1
<img src='http://www.keyhole.com/images/products/zoomToStreet.jpg' border='0' alt='user posted image'>
|
|
|
| கிர்கிஸ்தானில் புரட்சி. ஜனாதிபதி தப்பி ஓட்டம்.. |
|
Posted by: vasisutha - 03-26-2005, 05:39 AM - Forum: செய்திகள்: உலகம்
- No Replies
|
 |
<span style='font-size:25pt;line-height:100%'>ரஷியாவில் இருந்து பிரிந்து சென்ற நாடு கிர்கிஸ்தானில் புரட்சி..ஜனாதிபதி தப்பி ஓட்டம்.. எதிர்க்கட்சி ஆட்சியை பிடித்தது. நாடு முழுவதும் கலவரம்..</span>
<img src='http://www.dinakaran.com/daily/2005/Mar/26/others/C152_janathi.jpg' border='0' alt='user posted image'>
<b>தப்பி ஓடிய ஜனாதிபதி அகலேஷ் - புதிய ஜனாதிபதி பகியேவ்.</b>
ரஷியாவில் இருந்து பிரிந்து சென்ற நாடான கிர்கிஸ்தானில் திடீர் புரட்சி வெடித்தது. ஜனாதிபதி தப்பி ஓடினார். எதிர்க்கட்சி ஆட்சியை பிடித்தது.
சோவியத் ரஷியாவில் இருந்து பிரிந்து சென்ற நாடு கிர்கிஸ்தான். தனி நாடு ஆன பிறகு தொடர்ந்து 14 ஆண்டு களாக அஸ்கர் அகலேஷ்தான் அங்கு ஜனாதிபதியாக இருக்கிறhர். ஆனால் நாடு வறுமையில் தவிக்கிறது அங்கு தனி நபரின் ஒரு நாள் சராசரி வருமானம் 46 ரூபாய்தான். பசியிலும் பட்டினியிலும் மக்கள் வாடுகிறhர்கள்.
அங்கு சமீபத்தில் பாராளு மன்ற தேர்தல் நடந்தது. அதில் தில்லுமுல்லு நடந்ததாக எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டினார்கள். ஆட்சி மீது மக்களும் கோபம் கொண்டு பொருமிக்கொண்டு இருந்தார்கள்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் அங்கு திடீர் புரட்சி ஏற்பட்டது. 8 லட்சம் மக்கள் வசிக்கும் தலைநகர் பிஷ்கெக்கில் கலவரம், வன்முறை வெடித்தது. ஆயுதம் ஏந்திய மக்கள் அரசின் பிரதான கட்டிடங்களை கைப்பற்றினார்கள். கடைகளை சூறையாடினார்கள். தீ வைத்துக் கொளுத்தினார்கள். முக்கிய நகரங்களில் இதே போல நேற்று முன்தினம் இரவு வன்முறை சம்பவங்கள் நடந்தன. துப்பாக்கிகள் வெடிக்கும் சத்தமும் கேட்டது. பல கட்டிடங்கள், கடைகள் தீப்பிடித்து எரிந்தன.
இந்த கலவரத்தில் ஜனாதிபதி அஸ்கர் அகலேஷ் தப்பி வெளிநாடு ஓடி விட்டார். அமைச்சர்களையும் காணவில்லை. கலவரத்தில் பொது மக்களுடன் எதிர்க்கட்சியினரும் சேர்ந்து கொண்டனர். எதிர்க்கட்சி தலைவர் பகியேவ் தன்னை பிரதமராகவும், தற்காலிக அதிபராகவும் பாராளுமன்றம் நியமித்து இருப்பதாக அறிவித்தார்.
சிறையில் இருந்து மற்றெhரு எதிர்க்கட்சி தலைவர் குலோவ் விடுவிக்கப்பட்டு உள்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
தலைநகர் பிஷ்கெக் உள்பட முக்கிய நகரங்களில் கலவரம் இன்னும் ஓயவில்லை. தீப்பிடித்த இடங்களில் தீயணைப்பு படையினர் தீயை அணைத்துக் கொண்டு இருக்கிறhர்கள். உடைக்கப்பட்ட கடைகளில் உள்ள பொருட்களை மக்கள் வீடுகளுக்கு தூக்கி செல்கிறhர்கள். நாடு முழுவதும் ஒரே குழப்பமாக இருக்கிறது.
இந்த கலவரம் வன்முறை தீ வைப்பில் 2 பேர் பலியாயினர். 31 போலீசார் உள்பட ஏராள மானவர்கள் காயம் அடைந்தனர்.
அமெரிக்காவுக்கான கில்கிஸ்தான் தூதர் அட்ரிசேவ் இதுபற்றி கூறும் போது, <i>இது சட்ட விரோத புரட்சி </i>என்றhர்.
கிர்கிஸ்தானில் புரட்சி மூலம் அமைந்து உள்ள புதிய அரசை எந்த நாடும் இதுவரை அங்கீகரிக்க வில்லை.
ரஷிய அதிபர் புதின் இந்த புரட்சி பற்றி கூறுகையில், <i>கிர்கிஸ்தானில் அமைந் துள்ள எதிர்க்கட்சி ஆட்சியின ருடன் ஒத்துழைக்க தயார். கிர்கிஸ்தானில் இருந்து தப்பி ஓடிய அதிபர். அகலேஷ் ரஷி யாவில் அடைக்கலம் கேட்டால் கொடுப்பேன்</i>. என்றhர்.
கிர்கிஸ்தான் உடனான எல்லையை சீனா மூடிவிட்டது.
தப்பி ஓடிய கிர்கிஸ்தான் ஜனாதிபதி அகலேஷ் அண்டை நாடான கஜகஸ்தானில் தஞ்சம் அடைந்து உள்ளார். அவர் அளித்த பேட்டியில் <i>கிர்கிஸ்தானில் நடந்தது அரசியல் சட்டத்திற்கு விரோத மான புரட்சி. நான் ஜனாதிபதி பதவியை ராஜpனாமா செய்யவில்லை </i>என்றhர்.
நன்றி: தினகரன்
|
|
|
|