Posts: 564
Threads: 22
Joined: Feb 2005
Reputation:
0
இராமாயணம் வடநாட்டவர் புகழ்பாடும் ஒரு இதிகாசம். அண்ணாத்துரை அவர்கள் கம்பன் ஒரு வம்பன் எனக்கூறி கம்பராமாயணத்திலுள்ள ஆபாசங்களை கேலி செய்து கீமாயணம் என்ற புத்தகத்தை வெளியிட்டிருந்தார்------அதில் ஓர் இரு காட்சிகளை பார்க்கலாம்----சீதைக்கு இராமரை கண்டதும் காதல் ஏற்பட்டு விட்டது ஆனால் சீதையின் தந்தை விதுரனோ சுயம்வரத்தில் யார் வில்லை முறிக்கிறார்களோ அவருக்குத்தான் சீதை எனக்கூறியிருந்தான். சுயம்வரம் நடந்து கொண்டிருந்தது சீதை படபடத்துக்கொண்டிருந்தாள் அப்போது தோழி ஓடிவந்து கூறுகிறாள் இராமன் வில்லை முறித்துவிட்டானென்று அப்பொழுது கம்பன் கூறுகிறான்---இதைக்கேட்டு சீதை சந்தோசப்பட்டு பரவசப்படும்போது மேகலை அறுந்து விழுந்தது என்று முடிக்ககிறான் பி.கு--அந்த காலத்து ராணிகள் ஒவ்வொரு உடலிலுள்ள ஒவ்வொரு உறுப்புக்கும் ஒரு ஆபரணம் அணிவார்கள். அது போல் பெண் உறுப்புக்கு அணியும் நகையின் பெயர் தான் மேகலை எனும் ஆபரணம் ---கம்பன் உங்கள் ஊகத்துக்கு விடுகறான் ஏன் அவிழ்ந்து விழுந்தது என்று----------------------------------------------------------
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
கம்பன் சொன்னதில் தப்பில்லை... மருத்துவத்துறை அல்லது மனித உயிரியலில் மனித உடலமைப்பியலும் தொழிற்பாடும் எனும் நூலில் ஆண் பெண் பாலியல் கிளர்ச்சிகளைத் தூண்டும் நிகழ்வுகளின் போது ஏற்படும் உடல் மாற்றங்கள் குறித்து விஞ்ஞான ரீதியான ஆய்வு முடிவுகள் இருக்கின்றன...! அதன் பிரகாரம் கம்பனின் கூற்றை வம்பென்று கொள்ள முடியாது...!
இருந்தாலும் அந்த ஆபரணத்தின் வடிவமைப்பு... அணியப்பட்டிருந்த விதம் எதுவும் தெரியாத ஒருவர்...அண்ணாத்துரைக்கு ஏன் தேவையில்லாத கற்பனை...! கம்பன் கம்பராமாயாணத்தில் கவிஞனாகப் புளுகியதுகள் பலதிருக்க அண்ணாத்துரைக்கு கம்பன் தொட்ட மேகலையின் பால் கருத்துச் சென்றது ஏன்..???! கம்பனைவிட வம்பன் அண்ணாத்துரை...தனித் தமிழ்நாடு கேட்டு..பின் அதே வட நாட்டவரின் பசப்பு வார்த்தைகளுக்கு மயங்கி கொண்ட கொள்கையை பாதியில் விட்டோடிய கோழை...! :wink: <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 852
Threads: 18
Joined: Mar 2004
Reputation:
0
அது சரி. நடுவீட்டுக்கள் நடப்பவை சில ஏன் நடு ரோட்டில் நடாத்தப்படுவதில்லை.
சிலதுக்கு பண்பாடு, கலாச்சாரம், சமூகக்கட்டுப்பாடு, இங்கிதம், என்பன தடையாக உள்ளது. சிலவற்றை விலக்கப்பட்டவை (taboo) என்று நாம் விவாதிப்பதேயில்லை. ஒரு சமூகப் பொறுப்புள்ள எழுத்தாளன் சிலவற்றைத் தவிர்க்க வேண்டும்.
கம்பன் சமூகப் பொறுப்புள்ளவனா அல்லது பொன்முடிப் பரிசல்களுக்காகப் பாடியவனா என்று நாம் விவாதிக்கலாம்தான். என்ன பிரயோசனம்?
அண்ணத்துரை சமூகப் பொறுப்புடன் கம்பரசம் எழுதினார் என்று நம்பவில்லை. கம்பனைத் தோலுரிக்க வெளிக்கிட்டு தன்னை அம்மணமாக்கியிருக்கிறார்.
பன்னாடைகள் போல் நாங்கள் கம்பராமாயணத்திலுள்ள குப்பைகளை மட்டுமே பிடித்துக் கொண்டிருக்கிறோம். நல்ல விடயங்களை விலக்குவதுதானே நமது பழக்கம்.
<b> . .</b>
Posts: 852
Threads: 18
Joined: Mar 2004
Reputation:
0
ஏன் சுந்தர காண்டத்தையும் (அதில்தானே கம்பனின் காமக் குழம்புகள் நிறைய உள்ளன), நள வெண்பாவிலுள்ள காம ரசனையைத் தூண்டும் பாடல்களையும் தமிழ் மொழிப் பாடத்திட்டத்தில் (இலங்கையில்தான்) வைத்தார்கள் என்று யாருக்காவது தெரியுமா?
<b> . .</b>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
நளவெண்பா படிச்சுத்தான் வந்தம் அதில...காம ரசமும் இல்ல மல்லி ரசமும் இல்ல.. காதல் ரசம் கொஞ்சம் இருந்திச்சு..... அதுவும் 15 - 16 வயதில படிச்சது... பிரித்தானியாவில... 16 வயசில ஒரு ஆணும் பெண்ணும் இனக்கலப்புச் செய்ய சட்டம் இடமளிக்குது... பாலியல் கல்வி பாலர் வகுப்பிலையே கொடுக்கிறாங்க... இதுகளக் காட்டிலும் கம்பராமாயாணம்...நளவெண்பா ஒன்றும் பெரிசாச் சொல்லேல்ல...அதுவும் பாடல்களுக்குப் பொருள் விளங்க தமிழ் அகராதி தேட வேணும்...அப்படியான நிலைகள்....அதுமட்டுமன்றி நாகரிகமான முறையில் தேவையான பாலியல் கல்வியை வழங்குவதும் தப்பில்ல...அவசியம்...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 1,053
Threads: 78
Joined: Jun 2003
Reputation:
0
எனக்கொரு சந்தேகம்.
கம்பனுக்கு மனைவி இருந்தாரா? :wink:
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
கம்பனுக்கு மகனே இருக்கார்..இளங்கோ...! :wink: <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 31
Threads: 4
Joined: Jan 2005
Reputation:
0
குருவிகள் சொல்வதுதான் சரி. பண்பாடு பண்பாடு என்று சொல்லிக்கொண்டு எம்மை நாமே மடமைக்குள் புகுத்துகின்றோமேயொழிய அதைவிட்டு வெளிவர முயற்சிக்கவில்லை. இதிகாசம் ஒன்று எழுதப்படும்போது அதிலே பலதரப்பட்ட விடயங்கள் எழுதப்படத்தான் செய்யும். அதிலே போய் ஏன் பாலியலை மட்டும் தூக்கிப்பிடித்துக்கொண்டு கூத்தாட வேண்டும். காதலில் சரிபாதியிருப்பது காமம்தான். காதலில் காமம் இல்லையாயின் ஏன் காதலர்கள் திருமண பந்தத்தையும் அதன்பின்னான கணவன் மனைவி என்ற உறவையும் விரும்புகின்றார்கள். இந்தவகையில் இராமன் மீது சீதை கொண்ட காதலிலும் பாதியளவுக்கு காமம் இருந்திருக்கும். ஆகையால் இராமன்மீது கொண்ட காதலால் அவன் வில்லை உடைத்ததைக் கேள்வியுற்ற சீதையின் உள்ளம் பரவசப்பட்டதுபோல் அவளது உடலும் பரவசப்பட்டிருக்கும். இதைச்சொன்ன கம்பனை ஏன் வம்பன் என்று சொல்ல வேண்டும்.
Posts: 564
Threads: 22
Joined: Feb 2005
Reputation:
0
குருவிகள் கூறியது போல் அண்ணா போராட்டத்தை இடையில் விட்டுப்போனது உண்மை தான் டிஎம்கேயின் கொள்ளவு அவ்வளவு தான். ஒன்றை மறக்ககூடாது அன்றைய காலகட்டத்தில் பிராமணியத்தின் ஆதிக்கம் எல்லாத்துறைகளிலுமிருந்தது. கம்பராமாயணம் கோயில்களில் பாராணயம்பட்டது. இராவணன் வதம் விழாவாக கொண்டாடப்பட்டது இந்த இராவணன் திராவிடன் என்பது குறிப்படத்தக்கது மேலும் தென் பகுதியில் வாழ்ந்தவர்கள் குள்ளமானவர்கள் கறுப்பானவர்கள் கிட்டதட்ட குரஙகுகள் மாதிரிக்கே ஆக்கிவிட்டார்கள் இராமயணத்தில்------பிராமணியப்பண்டிதர்ளை எதிர்வாதம் செய்யவுமும் பல்கலைகழக மாணவர்களை இளைஞர்களை திராவிடயிக்கத்தின்பால் இழுக்க அனறைய காலகட்டத்தில் இப்பிடியான எழுததுக்கள் நாடகங்கள் பேச்சுக்கள் தேவையாய் இருந்தது.----குருவிகள் அவர்களே எனக்கொரு சந்தேகம் கம்பனின் மகன் பெயர் அம்பிகாபதி என்று---------ஸ்ராலின்
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
இதென்னய்யா வம்பாய் போச்சு பாவம் கம்பன். நாங்கள் இந்த பாடங்கள் எல்லாம் படிக்கலை (அங்கின கொஞ்சம் படிச்ச நினைவிருக்கு). படிச்ச பெருந்தகைகள் எடுத்துவிடுங்க.. வாசிக்கிறம். :mrgreen:
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
[quote=stalin]குருவிகள் கூறியது போல் அண்ணா போராட்டத்தை இடையில் விட்டுப்போனது உண்மை தான் டிஎம்கேயின் கொள்ளவு அவ்வளவு தான். ஒன்றை மறக்ககூடாது அன்றைய காலகட்டத்தில் பிராமணியத்தின் ஆதிக்கம் எல்லாத்துறைகளிலுமிருந்தது. கம்பராமாயணம் கோயில்களில் பாராணயம்பட்டது. இராவணன் வதம் விழாவாக கொண்டாடப்பட்டது இந்த இராவணன் திராவிடன் என்பது குறிப்படத்தக்கது மேலும் தென் பகுதியில் வாழ்ந்தவர்கள் குள்ளமானவர்கள் கறுப்பானவர்கள் கிட்டதட்ட குரஙகுகள் மாதிரிக்கே ஆக்கிவிட்டார்கள் இராமயணத்தில்------பிராமணியப்பண்டிதர்ளை எதிர்வாதம் செய்யவுமும் பல்கலைகழக மாணவர்களை இளைஞர்களை திராவிடயிக்கத்தின்பால் இழுக்க அனறைய காலகட்டத்தில் இப்பிடியான எழுததுக்கள் நாடகங்கள் பேச்சுக்கள் தேவையாய் இருந்தது.----குருவிகள் அவர்களே எனக்கொரு சந்தேகம் கம்பனின் மகன் பெயர் அம்பிகாபதி என்று
அம்பிகாபதிதான்...அதைச் சொன்னது கம்பன் அல்ல.. இளங்கோவடிகள் என்று நினைக்கிறம்.. அம்பிகாபதி அமராவதி காதல் கதை...சொன்னது....அவர்தானே....??! அதுதான் அங்கே இளங்கோ என்று போட்டிருக்கம்...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
kirubans Wrote:kuruvikal Wrote:அம்பிகாபதிதான்...அதைச் சொன்னது கம்பன் அல்ல.. இளங்கோவடிகள் என்று நினைக்கிறம்.. அம்பிகாபதி அமராவதி காதல் கதை...சொன்னது....அவர்தானே....??! அதுதான் அங்கே இளங்கோ என்று போட்டிருக்கம்...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
அப்ப சிலப்பதிகாரம் அம்பிகாபதி, அமராவதி கதையா :?: :?:
நீங்கள் சொன்னால் சரிதான். :wink:
இளங்கோவடிகள் சிலப்பதிகாரம் மட்டுந்தான் எழுதினா என்று உங்களுக்கு யார் சொன்னது...??! :?: <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
அப்ப அம்பிகாபதி அமராவதி காதல் செப்பினது...யாரென்று சொல்லுறீங்களா.... அதில கேள்விக் குறியோடதான் பதில் எழுதி இருக்கு... சரியா ஞாபகம் வரேல்ல...என்ற படியால்...!:wink:
பிழையிருந்தாத் திருத்திறது...அதைவிட்டிட்டு...ஒரு நக்கல்...அதில உங்களுக்கே சரியா விடை தெரியல்ல...இதைத்தான் சொல்லுறது தானும் கொடுக்கான் கொடுக்கிறவனையும் விடான் நிலை என்று....! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 48
Threads: 12
Joined: Feb 2005
Reputation:
0
நண்பர் இஸ்டாலின் இராமாயணத்தின் அடிப்படை கூட தெரியாதவராக இருக்கிறார்
முதலில் சீதையின் தந்தை விதுரன் என்பது அவரின் இராமாயன அறிவை காட்டுகிறது. இராமாயண காவியத்தை மதசார்பாகவோ அல்லது ஒரு இனத்துக்கு உரியது என்ற கண்ணேட்டத்தில் நோக்காது தமிழுக்கு கிடைத்த தலைசிறந்த மகாகவி
கம்பனின் காவியமாக நோக்கி அதனால் தமிழ் எவ்வாறு சிறப்படைகின்றது என்று பார்க்கவேண்டும். கம்பராமாயணத்தில் அனைத்தும் உண்டு. நோக்கரின் பார்வையில் தான் அது வேறுபடுகிறது.
Posts: 1,965
Threads: 19
Joined: Oct 2004
Reputation:
0
கம்பன் கற்பனைவளம் நிறம்பிய ஒரு சிறந்த கவிஞன். கண்ணதாசன் முதல் வைரமுத்து வரை அவரின் உவமானங்களிலிருந்து கவி புனைந்தே பெயர் பெற்றனர். கவிதைக்கு பொய் அழகு என்று வைரமுத்துவே ஒத்துக்கொண்டுள்ளாரே. பின்பு ஏன் கம்பனை வம்புக்கிழுப்பான்.
:roll: :wink: :roll: :wink:
Posts: 564
Threads: 22
Joined: Feb 2005
Reputation:
0
மன்னிக்கவும் சீதையின் தந்தையின் பெயர் ஜனகன் நன்றி கற்றது கையளவு கல்லாதது உலகளவு. கம்பராமாயாணம் வடநாட்டு வால்மிகியால் எழுதப்பட்ட ராமயணத்தின் தழுவல் தான் என்னைப் பொறுத்தவரையில் நிச்சியமாக ஆரியர் புகழ்பாடும் இதிகாசம் தான் உதராணத்துக்கு கேட்கிறேன் மாகவம்சத்தை தமிழில் ஒருவர் அழகிய தமிழ் நடையுடன் மொழி பெயர்க்கிறார் என வைததுக்கொள்வோம் அதற்காக மாகவம்சத்தின் உள் கருத்தை தமிழர்களாகிய நாம் ஆதரிக்கமடியுமா-----ஸ்ராலின்