![]() |
|
அரச கட்டுப்பாட்டு பகுதியில் கருணா முகாம் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: அரச கட்டுப்பாட்டு பகுதியில் கருணா முகாம் (/showthread.php?tid=4660) |
அரச கட்டுப்பாட்டு பகுதியில் கருணா முகாம் - வியாசன் - 03-27-2005 சிறீலங்கா ஆக்கிரமிப்புப் பகுதியில் கருணா குழு: கண்காணிப்புக் குழு விசாரணை தமிழீழத் தாயகத்தில் சிறீலங்கா இராணுவம் ஆக்கிரமித்துள்ள பகுதிகளில் கருணா குழுவினர் முகாம்கள் அமைத்து இயங்குவது குறித்து இலங்கை போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு விசாரணை நடத்தி வருகிறது. இது குறித்து கருத்துத் தெரிவித்துள்ள அக்குழுää சிறீலங்கா இராணுவத்தின் இத்தகைய நடவடிக்கைகள் வன்மையான யுத்த நிறுத்த மீறலே என்றும் சாடியுள்ளனர். போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் பேச்;சாளர் ஓலட்ஸ்டோபிர் இது குறித்து கூறுகையில் சண்டே லீடர் பத்திரிகை இந்த குழுக்களின் முகாம்கள் பற்றி அம்பலப்படுத்திய தகவல்கள் குறித்து உரிய விசாரனைகள் மேற்கொள்ளபட்டுவருவதாகத் தெரிவித்தார். இது போன்ற முகாம்கள் குறித்து தமிழீழ விடுதலைப்புலிகள் முன்வைத்த முறைப்பாடுகள் குறித்து போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் இரண்டு குழுக்கள் விசாரணை நடத்தி வருகின்றன என்றும் அவர் கூறினார். சுட்டபழம் நன்றி புதினம் - eelapirean - 03-27-2005 பாப்பம் எப்பதான் வெளிப்படையாக சொல்லப் போகிறார்கள் அரச கட்டுப்பாட்டு பகுதியில் கருணா முகாம் - eelapirean - 03-27-2005 அரச கட்டுப்பாட்டு பகுதியில் கருணா முகாம்; அம்பலமாகியுள்ள இராணுவ வியூகங்கள்! ழூ இராணுவ முகாம்களினதும் இராணுவ தொடர் காவலரண்களினதும் பாதுகாப்புக்கு மத்தியிலுள்ள தீவுச்சேனை பொலநறுவை மாவட்டத்தில் வெலிக்கந்தைக்கு மேற்கே தீவுச்சேனை தமிழ் கிராமத்தில் கருணா குழுவின் முகாம் இருப்பது அம்பலத்திற்கு வந்துள்ளது. இராணுவக் கட்டுப்பாட்டிலுள்ள இந்தக் கிராமத்தில் கடந்த ஏழு மாதங்களுக்கும் மேலாக இந்த முகாம் இருப்பதை கடந்த வாரம் ஹசண்டேலீடர்' ஆங்கில வார இதழ் அம்பலப்படுத்தியுள்ளது. கருணா குழுவைச் சேர்ந்த ஐந்தாறு பேரும் அப்பாவி மக்கள் மற்றும் வறியவர்களும் அங்கிருந்துள்ளனர். பணம் தருவதாகக் கூறியே இந்த அப்பாவி மக்களையும் வறியவர்களையும்இ கருணா குழுவும் இராணுவ புலனாய்வுப் பிரிவும் இந்த முகாமில் அமர்த்தியிருந்தது. இதனையேஇ இங்கு 60 க்கும் மேற்பட்ட கருணா குழுவினர் இருப்பதாக இராணுவ புலனாய்வு த் தரப்பு கூறி கருணா குழுவில் இந்த முகாமில் மட்டும் இவ்வளவு பேரென்றால் வேறு பகுதிகளிலும் சேர்த்து பெருமளவானோர் இருப்பதாக ஒரு தோற்றப்பாட்டை ஏற்படுத்துவதே நோக்கமாகும். ஹபரணை- வாழைச்சேனை வீதியில் செவனப்பிட்டியவுக்கு வடக்கே பத்து கிலோ மீற்றர் தூரத்தில் தீவுச்சேனை தமிழ் கிராமம் உள்ளது. இங்குள்ளோரின் தொகை 80 க்கும் குறைவாகும். இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியிலுள்ள இந்தத் தீவுச் சேனையை சுற்றி வளைத்து இராணுவ முகாம்களும் இராணுவ தொடர் காவலரண்களும் வளையம் போலிருந்ததால் தீவுச்சேனை கிராமம் பலத்த பாதுகாப்பின் மத்தியில் உள்ளது. வெலிக்கந்தைக்கு வடமேற்கே பத்து கிலோமீற்றர் தூரத்தில் பிரதான வீதியில் அல்லாது நீண்டதூரத்தில் தீவுச்சேனை இருப்பதால்இ இங்கு வெளியார் எவராவது சென்றால் உடனடியாகவே தெரியவந்துவிடும். அதேநேரம்இ தீவுச்சேனை கிராம முகப்பிலுள்ள காவலரணில் சக்திமிக்க துப்பாக்கியுடன் 12 வயதிற்கும் குறைந்த சிறுவனொருவன் நிற்பதை இந்த ஆங்கிலப் பத்திரிகையாளர் அவதானித்துள்ளார். யார் இந்த ஹமங்களன்'? மங்களன் ஆரம்பத்தில் சாதாரண போராளிஇ சம்பவமொன்றில் காயமடைந்து வன்னியில் சிகிச்சை பெற்று வந்தார். வன்னியில் போராளிகளின் சிறப்புப் பணிக்காக பஸ்கள் ஓடுவது வழமை. அந்த பஸ்ஸில் போராளிகள் மட்டுமே பயணம் செய்வர். அந்த பஸ்ஸின் சாரதியும் நடத்துநரும் போராளியே. இவ்வாறானதொரு பஸ்ஸில் மங்களன் நடத்துநராக விருந்தவர். ஹஜெயசிக்குரு' முறியடிப்புச் சமர்கள் மற்றும் புலிகளின் ஹஓயாத அலைகள்' தாக்குதல்கள் முடிவடைந்து கருணா மட்டக்களப்புக்கு திரும்பிய போது அவர்களுடன் திரும்பிய அணியில் மங்களனும் இடம்பெற்றிருந்தார். மட்டக்களப்பு திரும்பிய பின்னர்இ ஐவர் கொண்ட குழுவாக இயங்கும் அணி யொன்றுக்கும் பொறுப்பாகவிருந்தார். கருணாவின் கிளர்ச்சிவரை இவ்வாறே யிருந்தார். தற்போதுஇ கருணா குழுவில் எஞ்சியிருக்கும் சிலரில் இவரும் ஒருவர். இராணுவ முகாம்களினாலும் இராணுவ தொடர் காவலரண்களாலும் தீவுச்சேனை வளையம் போல் சுற்றிவளைக்கப்பட்டுள்ளதால் தீவுச்சேனை கிராமத்திற்கு சமீபமாக படைமுகாம்களெதுவுமில்லை. ஆனால்இ நீண்ட தூரத்திலிருந்து தீவுச்சேனை கிராமத்தையும் கருணா குழுவின் முகாமையும் படையினர் அவதானித்துக் கொண்டேயிருப்பர். மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து கருணா குழுவில் எஞ்சியிருந்தவர்களும் படிப்படியாக விரட்டப்பட இவர்களை மட்டக்களப்பு-பொலநறுவை எல்லைப் பகுதிக்கு இராணுவ புலனாய்வுப் பிரிவினர் கொண்டு சென்றனர். ஆரம்பத்தில் இவர்கள் வெலிக்கந்தையில் இராணுவ புலனாய்வுப் பிரிவினரின் முகாம்களுக்கு அருகிலிருந்து செயற்பட்டபோதும்இ புலிகளின் அதிரடித் தாக்குதல்களுக்கு இவர்கள் இலக்கானதால் வெலிக்கந்தை பகுதியிலும் இவர்களுக்கு பாதுகாப்பு இல்லாது போய்விட்டது. கருணா குழுவில் எஞ்சியிருப்பவர்களைப் பாதுகாக்க வேண்டிய கட்டாய தேவை படையினருக்கு ஏற்பட்டதால்இ வெலிக்கந்தையிலிருந்த இவர்களை வேறொரு பாதுகாப்பான இடத்திற்கு மாற்ற வேண்டிய தேவையேற்பட்டது. கருணாவின் சகோதரரான ரெஜியும் அவரது சகாக்கள் இருவரும் வெலிக்கந்தை பகுதியிலிருந்து செயற்பட்ட போதே புலிகளினால் இலக்கு வைக்கப்பட்டனர். அதேநேரம்இ மட்டக்களப்பிலிருந்து வெளியேறி கருணா குழுவினர் வெலிக்கந்தைக்கு வந்ததும் புலிகளும் இவர்களுக்கெதிரான நடவடிக்கையை வெலிக்கந்தையிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் முடுக்கிவிட்டனர். பொலனநறுவை மாவட்டத்திற்கு சமீபமாக அதன் எல்லையில் மட்டக்களப்பினுள்ளிருக்கும் வாகரைப் பகுதிக்கு புலிகளின் கமாண்டோ அணிகள் நகர்த்தப்பட்டன. கேணல் பால்ராஜ் தலைமையில் வாகரையிலிருந்து புலிகளின் சிறப்புக் கமாண்டோ படையணிகள் கருணா குழுவை இலக்கு வைத்து செயற்பட்டு வருகின்றன. இதேநேரம்இ வெலிக்கந்தை பகுதியில் இவர்களுக்கெதிரான நடவடிக்கைகளை புலிகள் முடுக்கி விட அதற்கு சவால்விடும் வகையில் புலிகளின் மட்டு. அம்பாறை மாவட்ட அரசியல்துறை பொறுப்பாளர் லெப். கேணல் கௌசல்யன் மீது வெலிக்கந்தையில் வைத்து தாக்குதல் நடத்தப்பட்டது. கௌசல்யன் போன்ற புலிகளின் முக்கிய தலைவர்களை இலக்கு வைக்குமளவிற்கு கருணா குழு சக்திமிக்கதாயிருக்கின்றதெனக் காட்டும் நோக்கமே இதுவாகும். ஆனாலும்இ இராணுவப் புலனாய்வுப் பிரிவேஇ கருணா குழுவில் எஞ்சியவர்களைப் பயன்படுத்தி இந்தத் தாக்குதலை நடத்தியதாக புலிகள் அப்பட்டமாகவே குற்றஞ்சாட்டினர். எனினும்இ இராணுவம் இதனை மறுத்ததுடன் புலிகளுக்கு சவால்விடும் வகையில்இ தாக்குதலை நடத்துமளவிற்கு கருணா குழு இருப்பதை ஏற்றுக்கொள்ள மறுக்கும் புலிகள்இ தங்கள் மீது பழிசுமத்த முற்படுவதாகவும் கூறியிருந்தது. இந்த நிலையில் கருணா குழுவினரின் பாதுகாப்பு குறித்து இராணுவப் புலனாய்வுப்பிரிவு மேலும் கவனம் செலுத்தியது. வெலிக்கந்தையில் இவர்களது பாதுகாப்பிற்கு புலிகளால் பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டதை உணர்ந்த இராணுவ புலனாய்வுப்பிரிவுஇ வெலிக்கந்தைக்கு வடமேற்கே பிரதான வீதியிலிருந்து நீண்டதூரம் உள்ளே செல்லும் தீவுச்சேனை தமிழ் கிராமமே கருணா குழுவின் பாதுகாப்பிற்கு உகந்த இடமெனக் கருதியது. இப்பகுதியில் படையினரின் முகாம்கள் பலவும் அவற்றின் பாதுகாப்பிற்காக தொடர் காவலரண்களும் இருப்பதால் தீவுச்சேனையில் கருணா குழுவினருக்கு முகாம் அமைக்கப்பட்டது. மங்களன் என்பவரது தலைமையில் இங்கு ஐந்தாறு கருணா குழுவினர் இருந்தபோதுஇ இவர்களது பாதுகாப்பிற்காகவும் இந்த முகாமில் பலர் இருப்பது போன்றதொரு தோற்றப்பாட்டை ஏற்படுத்துவதற்காகவுமே அப்பாவி மக்களும்இ வறியவர்களும் இங்கு கொண்டுவரப்பட்டுஇ பணத்தாசை காட்டப்பட்டு தங்கவைக்கப்பட்டனர். இந்த நிலையிலேயே இராணுவக் கட்டுப்பாட்டிலுள்ள தீவுச்சேனை பகுதியில் கருணா குழுவின் முகாமிருப்பதை ஆதாரங்களுடன் கடந்தவாரம் ஹசண்டே லீடர்' பத்திரிகை அம்பலப்படுத்தியது. இந்தச் செய்தி வந்ததும்இ தீவுச்சேனை பகுதி இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திலில்லை என்றும் இது இராணுவக் கட்டுப்பாடற்ற பகுதியே என்றும் இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் தயாரத்ன கூறினார். எனினும்இ மறுநாள் அதிகாலை திங்கட்கிழமை இங்கு இடம்பெற்ற தாக்குதலையடுத்துஇ ஹசண்டே லீடர்' செய்தி உண்மையானதென்றும் இராணுவ பேச்சாளரின் மறுப்பு அப்பட்டமான பொய்யென்பதும்இ தெரிய வந்தது. இந்தத் தாக்குதலை நடத்தியோருக்கு முகாம் பொறுப்பாளரான மங்களனை சுடுவதே நோக்கமாயிருந்தது. தங்களது தாக்குதலில் மங்களன் கொல்லப்பட்டு விட்டதாகக் கருதி அவர்கள் தாக்குதலை நடத்திவிட்டுச் சென்றுவிட்டனர். பத்து நிமிடங்களுக்கும் குறைவாகவே இந்தத் தாக்குதல் நடைபெற்றதை அப்பகுதி மக்களும் உறுதிப்படுத்தியிருந்தனர். அதேநேரம்இ தாக்குதல் நடைபெற்ற சில நிமிடங்களில் அங்கு வந்த படையினரும் பொலிஸாரும்இ முகாமுக்கு அருகே படுகாயங்களுடன் கிடந்த மங்களனையும் மற்றும் இருவரையும் உடனடியாக பொலனறுவை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். தீவுச்சேனை கிராமம் இராணுவக் கட்டுப்பாடற்ற பகுதியென்றால்இ கருணா குழுவின் முகாம் மீது தாக்குதல் நடைபெற்ற சில நிமிடங்களில் படையினரும் பொலிஸாரும் எப்படி புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் செல்ல முடியும். அதேநேரம்இ புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் இந்த இடத்தில்தான் தாக்குதல் நடந்ததென்பதை படையினரால் எப்படி அறிந்திருக்க முடியும். போர்நிறுத்த உடன்பாட்டின் படி ஒருவர் பகுதிக்குள் மற்றவர் செல்வதாயின் கண்காணிப்புக் குழுவினூடாக அனுமதி பெறப்பட்டு நிராயுத பாணிகளாகவல்லவா மற்ற மற்றப் பகுதிக்குள் செல்ல முடியும். அதேநேரம் தீவுச்சேனை கிராமம் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் இருக்கிறதென்றால்இ தாக்குதல் நடைபெற்றதும் அவ்விடத்திற்கு படையினர் சென்ற போது அங்கு புலிகளல்லவா நின்றிருப்பார்கள். ஆனால் இவையொன்றும் நடைபெறவில்லையே! தீவுச்சேனையில் தாக்குதல் நடைபெற்றவுடன் படையினர் அவ்விடத்திற்கு சென்றுள்ளார்களென்றால் அந்த இடம் இராணுவத்தின் கட்டுப்பாட்டிலேயே இருந்துள்ளது. அதனால் தான் சம்பவம் நடைபெற்றதும் அவ்விடத்திற்குச் சென்ற படையினர்இ படுகாயமடைந்தவர்களை உடனடியாக ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் செல்ல முடிந்தது. இதன் மூலம் கருணாவின் முகாம் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் இருப்பது உறுதியாகி விட்டது. முதல் நாள் வெளியாகிய பத்திரிகைச் செய்தியை மறுநாள் தாக்குதல் சம்பவம் உறுதிப்படுத்தி விட்டது. அதேநேரம் தாக்குதல் நடத்தச் சென்றோரின் நோக்கம் மங்களனைக் கொல்வது மட்டுமாகவே இருந்ததால் அங்கிருந்து ஏனைய அப்பாவிகளை அவர்கள் தாக்கவில்லை. இந்தத் தாக்குதலில் உயிரிழந்த இருவரும் கருணா குழுவைச் சேர்ந்தவர்களாக அல்லது அங்கிருந்தவர்களாக இருக்க வேண்டுமெனவும் தெரிவிக்கப்படுகிறது. இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் கருணா குழுவினரின் முகாம்கள் எதுவுமேயில்லை எனப் படைத்தரப்பு தொடர்ந்தும் கூறி வருகையில்இ கடந்த ஏழு மாதங்களுக்கும் மேலாக இராணுவக் கட்டுப்பாட்டிலுள்ள தீவுச்சேனையில் கருணா குழுவின் முகாமிருந்ததை ஹசண்டே லீடர்' செய்தியும் மறுநாள் நடைபெற்ற தாக்குதலும் அம்பலப்படுத்தியுள்ளன. இதேநேரம்இ மங்களன் மீதான தாக்குதலைஇ கருணா குழுவுக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையே பெரும் மோதல் நடைபெற்றதாகக் காட்ட படைத்தரப்பும் சிங்களஇ ஆங்கில ஊடகங்களும் முற்பட்டுள்ளன. பத்து நிமிடங்களுக்கும் குறைவாகவே இந்தத் தாக்குதல் நடைபெற்ற போதும் இருமணிநேரம் இந்த மோதல் நடைபெற்றதாக இவர்கள் கூற முற்படுகின்றனர். கருணா குழுவின் முகாமை புலிகள் தாக்கிய போதும் இ இரு மணிநேரத்திற்கும் மேலாக அதற்குப் பதிலடி கொடுத்து புலிகளின் தாக்குதலை கருணா குழுவினர் வெற்றிகரமாக முறியடித்தது போன்றதொரு மாயையை ஏற்படுத்துவதே இவர்களது நோக்கமாகும். அதேநேரம் கனரக ஆயுதங்கள் சகிதம் வந்து தாக்குதலை நடத்திய புலிகளைச் சமாளித்துஇ அவர்களது தாக்குதலை முறியடித்துஇ அவர்களை திருப்பி விரட்டும் அளவிற்கு கருணா குழுவில் ஆட்பலமும் ஆயுத பலமும் இருப்பது போன்றதொரு தோற்றப்பாட்டை ஏற்படுத்துவதும் இவர்களது நோக்கமாகும். இதேநேரம்இ சண்டே லீடர் இசெய்திப்படிஇ கருணா குழு அப்பகுதியை அல்லது வேறெங்காவது பகுதியைச் சேர்ந்த 12 வயதுக்கும் குறைந்த சிறுவர்களை பிடித்து வந்து ஆயுதங்களை கொடுத்து முகாம்களின் காவல்களுக்கு நிறுத்தியுள்ளதும் அம்பலத்திற்கு வந்துள்ளது. சிறுவர்களைப் புலிகள் வலுக் கட்டாயமாக படைகளில் சேர்ப்பதாக குற்றச்சாட்டுக்களை அரசு சுமத்தி வருகையில் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் இராணுவத்தின் பாதுகாப்புடனிருக்கும் கருணாவின் முகாமில் 12 வயதுச் சிறுவன் ஆயுதத்துடன் காவலிருக்கின்றானென்றால்இ அதற்கு படையினரும் முழு உடந்தை என்பதும் அம்பலத்திற்கு வந்துள்ளது. புலிகளுக்கெதிராக கருணா குழுவையும் தமிழ்க் குழுக்களையும் பயன்படுத்தி இராணுவ புலனாய்வுப் பிரிவு நிழல் யுத்தத்தில் ஈடுபடுவது தொடர்ந்தும் அம்பலத்திற்கு வருகையில்இ இராணுவப் புலனாய்வுப் பிரிவின் இந்த நிழல் யுத்தத்தை புலிகளும் வெற்றிகரமாகவே எதிர்கொண்டு வருகின்றனர். இடையிடையே சில இழப்புக்களை எதிர்கொண்டாலும் நிழல்யுத்தத்திற்கு முகம் கொடுக்க அவர்கள் பழகிவிட்ட அதே நேரம்இ இந்த நிழல் யுத்தத்திற்கெதிரான முறியடிப்பு யுத்தத்தில் இராணுவப் புலனாய்வுப் பிரிவு பேரிழப்புகளைச் சந்தித்து வருகின்றது. இராணுவ உளவாளிகள்இ தமிழ் குழுக்களின் உறுப்பினர்கள்இ கருணா குழுவினரெனப் பலரையும் இராணுவப் புலனாய்வுப் பிரிவு இழந்துவிட்டது. இதனைத் தடுப்பதற்கான பல்வேறு திட்டங்களையும் வகுத்து இராணுவம் செயற்படுகின்றது. கிழக்கில்இ குறிப்பாக மட்டக்களப்பு - பொலநறுவை எல்லை மற்றும் மட்டக்களப்பில் பாதுகாப்பு பெருமளவில் பலப்படுத்தப்பட்டுள்ளது. வீதிச் சோதனை நிலையங்கள் அதிகரிக்கப்பட்டு திடீர் தேடுதல்கள்இ திடீர் சோதனைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன. புலிகளின் முக்கியஸ்தர்கள் கொல்லப்பட்ட போது இருந்த நிலைமையை விட தற்போது இந்தப் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன. இராணுவ உளவாளிகளும் இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் தமிழ்க் குழு உறுப்பினர்களும் அடுத்தடுத்து கொல்லப்பட்டதையடுத்து பாதுகாப்பு நடவடிக்கைகள் இந்தளவிற்கு முடுக்கிவிடப்பட்டுள்ளன. இராணுவ உளவாளிகளையும் தமிழ்க் குழு உறுப்பினர்களையும் பாதுகாப்பதே இந்த நடவடிக்கைகளுக்கான பிரதான நோக்கமாகும். புலிகள் மீது தாக்குதல்களை நடத்தும் தமிழ் குழுக்களையும் அவர்களது முகாம்களையும் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வைத்துக் கொண்டுஇ அவர்களைப் பயன்படுத்தி புலிகள் மீது தாக்குதல்களை நடத்திக் கொண்டுஇ புலிகள் மீதான தாக்குதல்களைத் தடுக்கவே இவ்வாறு பாதுகாப்பு நடவடிக்கை தீவிரமாக்கப்பட்டுள்ளதாக அரசும் படைத்தரப்பும் கூறுகின்றன. எனினும்இ புலிகளுக்கெதிரான நிழல் யுத்தத்தை படைத்தரப்பு எப்படியெப்படியெல்லாம் நடத்துகின்றதென்பது எப்படியோ அம்பலத்திற்கும் வந்து கொண்டேயிருக்கின்றது. கிழக்கை குழப்பி விட படைத்தரப்பு மேற்கொள்ளும் முயற்சிகளுக்கெல்லாம் புலிகள் பதிலடி கொடுக்கின்றனர். எஞ்சியிருக்கும் கருணா குழுவைப் பயன்படுத்தி எவற்றையெல்லாம் செய்ய முடியுமோ அவற்றையெல்லாம் அவர்கள் செய்கின்றனர். ஆனால் புலிகள் செய்யும் தவறுகளை ஊதிப்பெரிதாக்கும் முயற்சியில் அரசு ஈடுபட்டிருக்கையில் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள்ளிருந்த கருணா குழுவின் இந்த முகாம் விடயத்தில் போர் நிறுத்த கண்காணிப்புக் குழு என்ன செய்யப் போகின்றது என்பதே அடுத்த கேள்வியாகும். சுட்ட தினக்குரல் |