![]() |
|
கிர்கிஸ்தானில் புரட்சி. ஜனாதிபதி தப்பி ஓட்டம்.. - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள்: உலகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=14) +--- Thread: கிர்கிஸ்தானில் புரட்சி. ஜனாதிபதி தப்பி ஓட்டம்.. (/showthread.php?tid=4667) |
கிர்கிஸ்தானில் புரட்சி. ஜனாதிபதி தப்பி ஓட்டம்.. - vasisutha - 03-26-2005 <span style='font-size:25pt;line-height:100%'>ரஷியாவில் இருந்து பிரிந்து சென்ற நாடு கிர்கிஸ்தானில் புரட்சி..ஜனாதிபதி தப்பி ஓட்டம்.. எதிர்க்கட்சி ஆட்சியை பிடித்தது. நாடு முழுவதும் கலவரம்..</span> <img src='http://www.dinakaran.com/daily/2005/Mar/26/others/C152_janathi.jpg' border='0' alt='user posted image'> <b>தப்பி ஓடிய ஜனாதிபதி அகலேஷ் - புதிய ஜனாதிபதி பகியேவ்.</b> ரஷியாவில் இருந்து பிரிந்து சென்ற நாடான கிர்கிஸ்தானில் திடீர் புரட்சி வெடித்தது. ஜனாதிபதி தப்பி ஓடினார். எதிர்க்கட்சி ஆட்சியை பிடித்தது. சோவியத் ரஷியாவில் இருந்து பிரிந்து சென்ற நாடு கிர்கிஸ்தான். தனி நாடு ஆன பிறகு தொடர்ந்து 14 ஆண்டு களாக அஸ்கர் அகலேஷ்தான் அங்கு ஜனாதிபதியாக இருக்கிறhர். ஆனால் நாடு வறுமையில் தவிக்கிறது அங்கு தனி நபரின் ஒரு நாள் சராசரி வருமானம் 46 ரூபாய்தான். பசியிலும் பட்டினியிலும் மக்கள் வாடுகிறhர்கள். அங்கு சமீபத்தில் பாராளு மன்ற தேர்தல் நடந்தது. அதில் தில்லுமுல்லு நடந்ததாக எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டினார்கள். ஆட்சி மீது மக்களும் கோபம் கொண்டு பொருமிக்கொண்டு இருந்தார்கள். இந்தநிலையில் நேற்று முன்தினம் அங்கு திடீர் புரட்சி ஏற்பட்டது. 8 லட்சம் மக்கள் வசிக்கும் தலைநகர் பிஷ்கெக்கில் கலவரம், வன்முறை வெடித்தது. ஆயுதம் ஏந்திய மக்கள் அரசின் பிரதான கட்டிடங்களை கைப்பற்றினார்கள். கடைகளை சூறையாடினார்கள். தீ வைத்துக் கொளுத்தினார்கள். முக்கிய நகரங்களில் இதே போல நேற்று முன்தினம் இரவு வன்முறை சம்பவங்கள் நடந்தன. துப்பாக்கிகள் வெடிக்கும் சத்தமும் கேட்டது. பல கட்டிடங்கள், கடைகள் தீப்பிடித்து எரிந்தன. இந்த கலவரத்தில் ஜனாதிபதி அஸ்கர் அகலேஷ் தப்பி வெளிநாடு ஓடி விட்டார். அமைச்சர்களையும் காணவில்லை. கலவரத்தில் பொது மக்களுடன் எதிர்க்கட்சியினரும் சேர்ந்து கொண்டனர். எதிர்க்கட்சி தலைவர் பகியேவ் தன்னை பிரதமராகவும், தற்காலிக அதிபராகவும் பாராளுமன்றம் நியமித்து இருப்பதாக அறிவித்தார். சிறையில் இருந்து மற்றெhரு எதிர்க்கட்சி தலைவர் குலோவ் விடுவிக்கப்பட்டு உள்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். தலைநகர் பிஷ்கெக் உள்பட முக்கிய நகரங்களில் கலவரம் இன்னும் ஓயவில்லை. தீப்பிடித்த இடங்களில் தீயணைப்பு படையினர் தீயை அணைத்துக் கொண்டு இருக்கிறhர்கள். உடைக்கப்பட்ட கடைகளில் உள்ள பொருட்களை மக்கள் வீடுகளுக்கு தூக்கி செல்கிறhர்கள். நாடு முழுவதும் ஒரே குழப்பமாக இருக்கிறது. இந்த கலவரம் வன்முறை தீ வைப்பில் 2 பேர் பலியாயினர். 31 போலீசார் உள்பட ஏராள மானவர்கள் காயம் அடைந்தனர். அமெரிக்காவுக்கான கில்கிஸ்தான் தூதர் அட்ரிசேவ் இதுபற்றி கூறும் போது, <i>இது சட்ட விரோத புரட்சி </i>என்றhர். கிர்கிஸ்தானில் புரட்சி மூலம் அமைந்து உள்ள புதிய அரசை எந்த நாடும் இதுவரை அங்கீகரிக்க வில்லை. ரஷிய அதிபர் புதின் இந்த புரட்சி பற்றி கூறுகையில், <i>கிர்கிஸ்தானில் அமைந் துள்ள எதிர்க்கட்சி ஆட்சியின ருடன் ஒத்துழைக்க தயார். கிர்கிஸ்தானில் இருந்து தப்பி ஓடிய அதிபர். அகலேஷ் ரஷி யாவில் அடைக்கலம் கேட்டால் கொடுப்பேன்</i>. என்றhர். கிர்கிஸ்தான் உடனான எல்லையை சீனா மூடிவிட்டது. தப்பி ஓடிய கிர்கிஸ்தான் ஜனாதிபதி அகலேஷ் அண்டை நாடான கஜகஸ்தானில் தஞ்சம் அடைந்து உள்ளார். அவர் அளித்த பேட்டியில் <i>கிர்கிஸ்தானில் நடந்தது அரசியல் சட்டத்திற்கு விரோத மான புரட்சி. நான் ஜனாதிபதி பதவியை ராஜpனாமா செய்யவில்லை </i>என்றhர். நன்றி: தினகரன் |