![]() |
|
விடுதலைப்புலிகளின் அரசியல் துறை அலுவலகம் மீது குண்டு வீச்;சு - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: விடுதலைப்புலிகளின் அரசியல் துறை அலுவலகம் மீது குண்டு வீச்;சு (/showthread.php?tid=4650) |
விடுதலைப்புலிகளின் அரசியல் துறை அலுவலகம் மீது குண்டு வீச்;சு - வியாசன் - 03-28-2005 வவுனியா: விடுதலைப்புலிகளின் அரசியல் துறை அலுவலகம் மீது குண்டு வீச்;சு-மூவர் படுகாயம்! வவுனியாவில் தமிழீழ விடுதலைப்புலிகளின் மாவட்ட அரசியல் துறை அலுவலகம் மீது இன்று அதிகாலை 5.50 மணியளவில் கைக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது. தொடரூந்து நிலைய வீதி வைரவபுளியங்குளத்தில் இந்த அலுவலகம் அமைந்துள்ளது. இன்று காலை நடத்தப்பட்ட இத்தாக்குதலில் அரசியல் துறை பணிமனையின் பணியாளர்களான தாமரை செல்வன் நவாஸ் என்ற இருவரும் காயமடைந்துள்ளனர். அத்துடன் அருகில் உள்ள வடக்கு கிழக்கு மாகாண புடவை திணைக்களம் ஒன்றின் காவலாளியான தனபாலன் என்பவரும் காயமடைந்துள்ளார். இவர் வவுனியா பொது வைத்தியசாலையில் சிகிச்;சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். வீதியின் அருகில் உள்ள மரத்தின் கீழ் நின்று மிதிவண்டியில் வந்த கும்பல் ஒன்று கைக்குண்டுகளை எறிந்துவிட்டு தப்பியோடியதாக பொலிசார் தெரிவித்தனர். கடந்த ஆண்டு நடுப்பகுதியிலும் இதே அரசியல் துறை அலுவலகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. இரண்டாவது முறையாக இன்றையத் தாக்குதல் நடந்துள்ளது. இந்த கைக்குண்டுத் தாக்குதல் குறித்து பொலிசார் மேலதிக விசாரணை நடத்தி வருகின்றனர். சுட்டபழம் நன்றி புதினம் - வியாசன் - 03-28-2005 வவுனியா தாக்குதல் பாரதூரமான விடயமாகும்: நேரில் பார்வையிட்ட நீதிபதி எம்.இளஞ்செழியன் வவுனியாவில் குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்ட விடுதலைப் புலிகளின் அரசியல் துறை அலுவலகத்தை நீதிபதி எம்.இளஞ்செழியன் நேரில் சென்று பார்வையிட்டார். அவருடன் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் பிரதிநிதிகளும் பொலிசாரும் சென்றனர். இந்தத் தாக்குதல் பாராதூரமான விடயமாகும் என்றும் அரசியல் பணிகளுக்காக பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் மாவட்ட அலுவலகத்தை நடத்தி வருகின்றவர்கள் மீது நடத்தப்பட்டுள்ள விடயம் குறித்து பொலிசார் துரிதமான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் நீதிபதி அப்போது கேட்டுக்கொண்டார். காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களுடைய வாக்குமூலங்களையும் நீதிபதி தலைமையிலான குழுவினர் பெற்றனர். Re: விடுதலைப்புலிகளின் அரசியல் துறை அலுவலகம் மீது குண்டு வீச்;சு - MUGATHTHAR - 03-28-2005 viyasan Wrote:வவுனியா: விடுதலைப்புலிகளின் அரசியல் துறை அலுவலகம் மீது குண்டு வீச்;சு-மூவர் படுகாயம் சைக்கிலிலை வந்து எறிஞ்சதை சரியா பாத்துக் கொண்டுநிண்டிருக்கினம் நம்மன்ரை பொலிஸ்காரர்....துவக்கு தூக்கி சுடப்பிடாது எண்டு சத்தியம் எதாச்சும் செஞ்சிருக்கினமோ தெரியேலை?????? |