| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 557 online users. » 0 Member(s) | 554 Guest(s) Applebot, Bing, Google
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,453
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,290
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,647
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,313
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,682
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,267
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,533
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,761
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,058
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,256
|
|
|
| ராமேஸ்வரம் கடலில் முளைத்த திடீர் தீவு |
|
Posted by: selvanNL - 03-30-2005, 08:35 PM - Forum: செய்திகள்: உலகம்
- Replies (3)
|
 |
<b>திருச்செந்தூர், தூத்துக்குடியில் இன்றும் கடல் உள்வாங்கியது</b>
<img src='http://img124.exs.cx/img124/7360/tiruchendurtsuna5005eq.jpg' border='0' alt='user posted image'>
மேஸ்வரம் அருகே கடல் பகுதியில் சுமார் 20 சதுர கி.மீட்டர் பரப்பளவுக்கு கடல் நீர் வடிந்து போய் திடீரென தீவு உருவாகியுள்ளது.அதே போல தூத்துக்குடி, திருச்செந்தூர் உட்பட பல பகுதிகளில் இன்றும் கடல், பல மீட்டர் தூரத்திற்கு உள்வாங்கியது. இதனால் இப்பகுதிகளில் இன்றும் சுனாமி பீதி ஏற்பட்டது. பாண்டிச்சேரியில் பல பகுதிகளில் மீன்கள் குவியல் குவியலாக செத்து கரையொதுங்கின.
நேற்று மாமல்லபுரம், திருச்செந்தூர், தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் பகுதிகளில் கடல்நீர் பல மீட்டர் தூரத்திற்கு உள்வாங்கியது.இதே போல இன்றும் தூத்துக்குடி துறைமுகம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் கடல் நீர் 500 அடி தூரத்திற்கு உள் வாங்கியது.
àத்துக்குடி தவிர, திருச்செந்தூர், ராமநாதபுரம் ஆகிய பகுதிகளில் கடல்நீர் பல மீட்டர் தூரத்திற்கு உள்வாங்கிச் சென்றது. இதனால் இப்பகுதிகளில் இன்றும் மக்களிடையே பீதி பரவியுள்ளது. தூத்துக்குடியில் இன்று காலை 11 மணியளவில் கடல் நீர் திடீரென உள்வாங்கியது. துøமுறகம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 500 அடி தூரத்திற்கு கடல் நீர் உள்ளே சென்றதால் தூத்துக்குடி மக்களிடம் பெரும் பீதி ஏற்பட்டது.
<img src='http://img124.exs.cx/img124/5939/ponditsunami5002px.jpg' border='0' alt='user posted image'>
நீர் உள் வாங்கியதால் கடலடித் தரைப் பகுதி, பாறைகள், கடல் தரையில் வளரும் செடிகள் ஆகியவை வெளியில் தெரிந்தன. திருச்செந்தூரில் பல மீட்டர் தொலைவுக்கு கடல் உள்ளே சென்றுவிட்டதால், கடல் தாவரங்கள், பாசி படிந்த பாறைகளை மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்துச் செல்கின்றனர்.ராமேஸ்வரத்தில் பாக் ஜலசந்தியில் உள்ள 21 கண்டத் திட்டுகளின் அருகே உள்ள கடல் பகுதியில் ஒரு இடத்தில் சுமார் 20 சதுர கி.மீட்டர் அளவுக்கு கடல் நீர் வடிந்து போய் திடீரென தீவு உருவாகியுள்ளது. இது குறித்து மன்னார் வளைகுடா தேசியப் பூங்காவின் வார்டன் நாகநாதன் கூறுகையில்,
அலைகள் குறைகிற காலத்தில் 4, 5 மீட்டர் அளவுக்கு சில இடங்களில் கடல் நீர் வடிந்து தீவுகள் தோன்றும். ஆனால், இப்படி 20 சதுர கிமீ சுற்றளவுக்கு மிகப் பெரியே தீவே தோன்றும் அளவுக்கு கடல் நீர் வடிந்து போனது இதுவே முதல் முறை என்றார்.திருச்செந்தூரில் கடல் நீர் உள்வாங்குவதும் வெளியில் வருவதுமாக உள்ளது.
--------------------------------------------------------------------------------
¿ýÈ¢ ¾ðоÁ¢ú.. THATSTAMIL..
|
|
|
| ஐ.நா. செயலாளர் நாயகம் பதவிக்கு |
|
Posted by: eelapirean - 03-30-2005, 05:17 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (6)
|
 |
ஐ.நா. செயலாளர் நாயகம் பதவிக்கு இலங்கை சார்பில் தனபால போட்டி
அரசு நேற்று உத்தியோகபூர்வமாக அறிவிப்பு :roll: :roll: :roll:
2006 ஆம் ஆண்டிறுதியில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் தேர்தலில் இலங்கை சார்பில் ஜயந்த தனபால போட்டியிடுகிறார்.
இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை இலங்கை அரசு நேற்று வெளியிட்டுள்ளது.
ஜயந்த தனபாலவுக்கு ஆதரவு திரட்டுமாறு தனது தூதரகங்களுக்கு இலங்கை அரசு தகவல் அனுப்பியுள்ளது.
2006 ஆம் ஆண்டு இறுதியில் நடைபெறவுள்ள தேர்தலுக்கு தற்போதே ஆதரவு திரட்டுவது என்பது மிகவும் முந்தைய காலமாக இருந்தாலும் அப்பணிகளை உடனே தொடங்க அரசு அறிவுறுத்தியுள்ளது.
ஐ.நா. சபையில் முக்கிய பொறுப்பு வகித்த ஜயந்த தனபாலவின் பெயரை பாராளுமன்றத்தில் நிதிநிலை அறிக்கை விவாதத்தின் போது வெளியுறவுத்துறை அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் அறிவித்தார்.
தற்போதைய ஐ.நா. செயலாளர் நாயகம் கொபி அனானின் பதவிக் காலம் 2006 ஆம் ஆண்டிறுதியில் முடிவடைகிறது.
|
|
|
| ஈ.பி.டி.பி மீது தாக்குதல் |
|
Posted by: வியாசன் - 03-30-2005, 03:45 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (5)
|
 |
<b>மட்டக்களப்பில் ஈ.பி.டி.பி வாகனம் மீது தாக்குதல்: ஒருவர் காயம்</b>
மட்டக்களப்பு - வாழைச்;சேனை வீதி ஆறுமுகத்தான் குடியிருப்பு என்னுமிடத்தில் ஈ.பி.டி.பியினர் பயணம் செய்த வாகனத்தின் மீது இனந் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.
பாதுகாப்பு கடமைக்குச்; சென்ற பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு ஈ.பி.டி.பி. அலுவலகத்திலிருந்து செங்கலடியிலுள்ள அலுவலகத்திற்கு வாகனம் ஒன்றில் பயணம் செய்து கொண்டிருந்த செங்கலடி அலுவலக ஈ.பி.டி.பி. பொறுப்பாளர் ரவி எனப்படும் தர்மலிங்கம் இளமாறன் என்பவரை இலக்கு வைத்து இந்த தாக்குதல் மேற்கொள்ளபட்டதாகக் கூறப்படுகின்றது.
தாக்குதலை மேற்கொண்ட நபர்கள் பதுங்கியிருந்து முதலில் கைக்குண்டை வீசிய பின்பு துப்பாக்கிப் பிரயோகம் செய்ததாகவும் இந்த துப்பாக்கிப் பிரயோகத்திலேயே குறிப்பிட்ட பொலிஸ் சார்ஜன்ட் காயமடைந்ததாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவத்தையடுத்து அப் பிரதேசத்தில் தேடுதல் மேற்கொண்ட பொலிசாரினாலும் இராணுவத்தினராலும் கைவிடப்பட்ட நிலையில் ரி-56 ரக துப்பாக்கியொன்று மகசீனுடன் கைப்பற்றப்பட்டுள்ளது
|
|
|
| பூமி அதிர்ச்சி வந்தும் வராத சுனாமி...! |
|
Posted by: kuruvikal - 03-30-2005, 02:54 PM - Forum: விஞ்ஞானம் - தொழில்நுட்பம்
- Replies (3)
|
 |
<img src='http://newsimg.bbc.co.uk/media/images/40973000/gif/_40973801_earthquake_marc_map416.gif' border='0' alt='user posted image'>
முன்னைய தற்போதைய பூகம்ப மையங்களும் அவை ஏற்பட்ட இடங்களில் பூமித்தட்டுக்களின் நிலையும்...!
மார்கழித் திங்கள் 26ம் நாள் இந்து சமுத்திரத்தில் ஒரு டசின் நாடுகளைத் தாக்கி பேரழிவுகளைத் தந்த சுனாமியைத் தந்த 9.3 ரிக்ரர் அளவுடைய இந்தோனிசிய சுமாத்திராத் தீவுக்கருகில் மையம் கொண்டெழுந்த பூகம்பத்தோடு ஒப்பிடும் போது கடந்த 28ம் திகதி எழுந்த பூகம்பம் 12 - 15 மடங்கு சக்தி குறைவானதாகவும் அதன் உற்பத்தி மையம் பூமியின் மேற்பரப்பில் இருந்து ஒப்பீட்டளவில் ஆழம் கூடியதாக இருந்ததாலும் பாரிய பூமித்தட்டுக்கள் ஒன்றுக்கு ஒன்று கீழ் செருகலுக்கு உட்பட்டு பாரிய அளவு கடல்நீர் இடப்பெயர்ச்சிக்கு இடமளிக்காததாலும் சுனாமி உருவாவது தடுக்கப்பட்டுள்ளது...!
அநேகமாக பூமி அதிர்ச்சிகள் ஒப்பீட்டளவில் சிறிய பூமித்தட்டுக்கள் பலவீனமாக மேற்பொருந்தும் அல்லது செருகி இருக்கும் இடங்களில் தான் நேரும்... ஆனால் மார்கழித்திங்கள் பூமி அதிர்ச்சி பாரிய இந்திய பூமித்தகடு யுரேசியன் (பர்மா மைக்குறோ ) தகடு நோக்கி கீழ்முகப் பெயர்ச்சியைக் காண்பிக்கும் வகையில் அசையத்தக்கதாக மையம் கொண்டு சக்தியும் கூடியதாகவும் இருந்ததால் பாரிய அளவு கடல்நீர் இடப்பெயர்ச்சிக்கு வழி வகுத்து சுனாமியைத் தோற்றிவித்தது...!
ஆனால் கடந்த 28ம் திகதி பூகம்பம் அப்படியன்றி.. அது மையம் கொண்டிருந்த இடத்தில் பலவீனத்தட்டுகளில் ஒப்பீட்டளவில் சிறிய அளவிலான அசைவுகளை ஏற்படுத்தியதாலும் அது பாரிய அளவு கடல்நீர் பெயர்ச்சிக்கு வழி வகுக்காத படியாலும் சுனாமி உருவாகாமல் சிறிய அளவிலான் கடல் கொந்தளிப்புடன்... (0.5 மீற்றர் வீச்சமுடைய அலைகள் மட்டுமே உருவாகியதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன... ஆனால் மார்கழித்திங்கள் சுனாமியின் போது 10 மீற்றர்கள் வீச்சமுள்ள அலைகள் கரையை எட்டியிருந்தன..!)... அந்தப் பூகம்பத்தின் விளைவு அடங்கிவிட்டது...! இருப்பினும் பூமி அதிர்ச்சியின் போது வெளியிடப்பட்ட சக்தியின் நேரடித்தாக்கத்துக்கு இலக்காகி அதிர்வைக் கண்ட Sunda trench fault சார்ந்த பகுதியில் அழிவுகள் நேர்ந்துள்ளன...!
தகவல் - http://news.bbc.co.uk/1/hi/sci/tech/4389633.stm[/size]
|
|
|
| Hard disk Fotmat செய்வது எப்படி? |
|
Posted by: வியாசன் - 03-30-2005, 02:15 PM - Forum: கணினி
- Replies (4)
|
 |
Format command இல்லாமல் Hard disk ஐ பூரணமாக அழிப்பதற்கு ஏதாவது மென்பொருள் இருக்கின்றதா? எப்படி அதைச் செய்வது என்று சற்று விளக்கமாக கூறமுடியுமா?
யாராவது வந்து சொல்லுங்களேன்.
|
|
|
| சந்திரமுகியும் ஜெயிக்கட்டும் - கமலின் உயர்ந்த உள்ளம் |
|
Posted by: Kalai - 03-30-2005, 01:45 PM - Forum: சினிமா
- Replies (2)
|
 |
By Amalan
'ரூபா நோட்டில் காந்தி தாத்தா போல நாம் சிரிப்போம்' காதலா காதலா படத்தில் காதல் இளவரசன் பாடும் இந்த பாட்டு நிஜமாக இருந்தால் எப்படியிருக்கும் என்று கற்பனை செய்து பார்த்தவர்கள் நேற்று கண்ணாலேயே பார்க்க முடிந்தது.
<img src='http://cinesouth.com/images/new/29032005-TTCF0image1.jpg' border='0' alt='user posted image'>
பிரசாத் ஸ்டுடியோவில் மும்பை எக்ஸ்பிரஸ் டிரைலரை அறிமுகப்படுத்தும் விழாவில்தான் அந்த காட்சி. கமல் பத்திரிக்கையாளர்களை சந்திப்பதற்காக அமைக்கப்பட்டிருந்த சிறிய மேடையில் மெகா சைஸ் 500 ரூபாய் நோட்டு. வித்தியாசமாக தெரிகிறதே என நோட்டை 'நோட்' பண்ணிய போது ரூபாய் தாளின் மேலே 'Raajkamal Bank of India' என்றும் கீழ்புறம் 'குடும்பமே குதூகலிக்க உறுதியளிக்கும் அன்பன்' என்ற வாசகமும் அதற்கு கீழே அவரது கையெழுத்தும் இருக்க காந்தி தாத்தா இருக்கும் இடத்தில் நெற்றியில் ஏற்றிவிடப்பட்டிருந்த கண்ணாடி- சற்றே சிரிப்புடன் கமல்ஹாசன் அட்டகாசமாய் போஸ் கொடுத்துக் கொண்டிருந்தார்.
<img src='http://cinesouth.com/images/new/29032005-TTCF0image2.jpg' border='0' alt='user posted image'>
அந்த வித்தியாசமான ரூபாய், மீடியாக்காரர்களின் கண்களுக்கும், காமிராக்களுக்கும் இரை போட்டுக் கொண்டிருக்க இளமைத்துள்ளலுடன் மேடைக்கு வந்த கமல் சர் சர்ரென கிளம்பிய கேள்வி கணைகளுக்கு சரளமாக பதில் தர ஆரம்பித்தார். தமிழ், இங்கிலீஸ், இந்தி, தெலுங்கு என எந்த மொழியில் கேள்வி கேட்டாலும் அவரவர் பாஷையில் பதில் சொன்னது அமர்க்களம்.
<img src='http://cinesouth.com/images/new/29032005-TTCF0image3.jpg' border='0' alt='user posted image'>
<b>கொஞ்சநேரம் கமல் உங்களுடன் பேசுவதாக கற்பனை செய்துகொள்ளுங்களேன்...</b>
"இந்த சந்திப்பு கொஞ்சம் முன்பே நிகழ்ந்திருக்க கூடிய ஒன்று என்றாலும் சரியான தருணத்திலேயே சந்திப்பதாக நான் நினைக்கிறேன். இது படத்திற்கான விழா மட்டுமல்ல புதிதாக நான் ஆரம்பித்திருக்கும் ஆடியோ நிறுவனத்தின் அறிமுக விழாவாகவும் கருதலாம்.
இத்தனை வருடம் செய்யாததை இப்போது ஏன் செய்தீர்கள் என்ற கேள்வி எழலாம். அதற்கான எண்ணம் இப்போதுதான் தோன்றியது எனவேதான் இப்போது இதனை ஆரம்பித்துள்ளேன், இளையராஜா இருக்கும் தைரியத்தில்.
வழக்கமாக பாடல் கேசட் விற்பனைக்காக அதற்கு வெளியிட்டு விழா ஒன்று வைப்பார்கள். இதனை சற்று வித்தியாசப்படுத்தி பார்க்கவேண்டும் என்பதற்காக நாங்கள் முன்பே பாடல் கேசட்டை விற்று விட்டு வந்துள்ளோம் என்ற சந்தோஷத்தை பகிர்ந்து கொள்ள இப்போது விழா எடுத்துள்ளோம். எனவே இவ்விழா நவீன விழாவாக எனக்கு தோன்றுகிறது. உங்களுக்கும் தோன்றும் என்று நம்புகிறேன்.
ஆடியோ கேசட் வாங்குபவர்களுக்கு சூரியன் எப். எம். மூலம் பரிசுத்திட்டம் ஒன்றையும் அறிவித்துள்ளோம். கேசட்டில் இருக்கும் ரகசிய எண்ணை தொலைபேசிமூலம் தெரிவிப்பவர்களிடம் நான் சில கேள்விகள் கேட்பேன். அதற்கு சரியான பதிலை தருபவர்களுக்கு ரூபாய் 5,000 முதல் 50,000 வரை பரிசுத்தொகை கொடுக்கப்படும்.
மும்பை எக்ஸ்பிரஸ் முழுக்க முழுக்க டிஜிட்டல் முறையில் எடுக்கப்பட்டுள்ளது. வழக்கமான பிலிம் ரோலிலும் இதனை மாற்றிக்கொள்ளலாம். டிஜிட்டல் முறையில் படத்தை பார்கக சென்சார் அதிகாரிகளும் ஒப்புக்கொண்டுவிட்டனர். அரசாங்கம் இதற்கு ஈடுகொடுத்து சில சட்ட திருத்தங்களை செய்ய வேண்டும்.
தமிழ், இந்தியில் தயாராகியுள்ள மும்பை எக்ஸ்பிரஸ் நிஜமாகவே குழந்தைகளுடன் பார்கக்கூடிய படம். கைக்குழந்தை முதல் கைத்தடி வைத்த தாத்தா வரை ரசிக்கும் படமாக இருக்கும். படத்தைப் பார்த்த தொழில்நுட்ப கலைஞர்கள் பலர் தினமும் இரண்டு முறையாவது மும்பை எக்ஸ்பிரஸை பாராட்டிக் கொண்டு இருக்கின்றனர்.
கதை என்ன என்று கேட்பவர்களுக்கு சுருக்கமாக எளிமையாகச் சொன்னால் இது ஒரு பணக்கார பள்ளிச்சிறுவனை கடத்தும் கதை. சின்ன கருதான். புல்லையே ஆயுதமாக்குவது வல்லவரின் வேலையல்லவா! அப்படியான வல்லவர்கள் சேர்ந்து உருவாக்கிய இந்த மகவின் பெயர் மும்பை எக்ஸ்பிரஸ்" என்று கொஞ்சம் இடைவெளி விட்ட நேரத்தில் கிளம்பிய கேள்விகளும் அதற்கு கமல் அளித்த பதில்களும் தொடர்கின்றன....
<b>சந்திரமுகி, மும்பை எக்ஸ்பிரஸும் ஒரே நேரத்தில் வருகிறதே?</b>
வரட்டுமே! நானும் ரஜினியும் நடித்த படங்கள் முப்பது முறை ஒரே சமயத்தில் வந்துள்ளன. வெற்றி தோல்வி முன்னே பின்னே இருந்தாலும் இருவரும் நல்ல புரிதலோடுதான் இருந்தோம், இருக்கிறோம். பாகிஸ்தானின் கேப்டன் இன்ஸமாமும், இந்திய கேப்டன் கங்குலியும் நேரில் சந்தித்தால் பேசிக்கொள்ளாமலா இருப்பார்கள். அதுமாதிரிதான் நானும் ரஜினியும். எங்களுக்குள் போட்டி இருக்கலாம். ஆனால் அது யாரையும் காயப்படுத்தாத ஆரோக்கியமான போட்டி. வர்த்தக ரீதியில் இரண்டு படமும் வெற்றி பெற வேண்டும். அதுதான் தொழில்துறைக்கு நல்லது.
<b>கையில் அடிபடும் அளவிற்கு ரிஸ்க் எடுத்து நடித்துள்ளீர்கள் போல உள்ளது?</b>
ஏதாவது தவறு நடந்துவிட்டால் உடனே ரிஸ்க் எடுத்து விட்டதாக இங்கே நினைத்துக் கொள்கிறார்கள். அடிபட்டால்தான் ரிஸ்க் எடுத்ததாக அர்த்தமாகாது. அடிபடாவிட்டாலும் ஒவ்வொரு படத்திலும் ரிஸ்க் எடுத்துதான் நடிக்கிறேன்.
<b>ஆரம்பத்திலிருந்தே டைட்டில் பிரச்சனை இருக்கிறதே?</b>
இது இப்போது மட்டுமல்ல தொடக்க காலத்திலிருந்தே உள்ளது. சிறுவனாக இருந்தபோதே என் பெயரை மாற்றச் சொன்னார்கள். வடச்சொல் பெயராக இருப்பதாக அதற்கு காரணமும் சொன்னார்கள். நானும் ஆரம்பத்தில் மாற்றிவிடலாம் என்றுதான் நினைத்தேன். ஒரு கட்டத்தில் யோசித்து பார்த்தபோதுதான் ஏன் மாற்ற வேண்டும் என்ற கேள்வி எழ, வீம்புக்காகவே எனது பெயரை மாற்றிக்கொள்ளவில்லை.
மும்பை எக்ஸ்பிரஸ் பிரச்சனைக்கு ரொம்ப நாளாகவே எதுவும் சொல்லவேண்டாம் என்று நினைத்திருந்தேன். இப்போது சொல்கிறேன். ஞானக்கூத்தன் கவிதை ஒன்று உள்ளது. 'தமிழ்தான் என் மூச்சு அதை பிறர்மேல் விடமாட்டேன்' என்பதாக அந்த கவிதை இருக்கும். எனக்கு கூட அதுமாதிரியான மூச்சுதான். ஆங்கிலேயரால் செய்யமுடியாத காரியத்தையா கமல் செய்துவிடப்போகிறான். இன்னும் சொல்லப்போனால் தமிழுக்காக நடைபயணம் செய்தவர்களுடன் நானும் கலந்து கொள்ள ஆசைப்பட்டவன். மும்பை எக்ஸ்பிரஸ் தமிழுக்கு இழுக்கான விஷயமே இல்லை".
<b>நடிகர்திலகம் வீட்டின் மூத்தமகனாக நீங்கள் கருதப்படுகிறீர்கள் அப்படியிருக்கும் போது சிவாஜி புரொடகஷ்ன்ஸ் தயாரிப்பில் ரஜினி நடிக்கிறாரே. இதில் உங்களுக்கு வருத்தம் ஏதும் உண்டா?</b>
இது வம்புக்கு இழுக்கும் கேள்வி போல் தெரிகிறது. யார் நடித்தாலும் எனக்கு சந்தோஷமே. அப்படிப்பார்த்தால் சிவாஜி புரொடக்ஷன் தயாரிப்பில் நான்தானே முதலில் நடித்தேன். 'வெற்றி விழா'வந்தபோது ரஜினி வருத்தப்படவில்லையே?
<b>மும்பை எக்ஸ்பிரஸில் நீங்கள் சொல்ல வரும் விஷயம் என்ன?</b>
விஷயம் என்பதை காட்டிலும் இந்த படம் முழுக்க அன்பும், பாசமும் தொடர்ந்து இழையோடுவதை காணலாம்.
<b>ஏற்கனவே 'வானம் வசப்படும்' படத்தில் பி.சி. ஸ்ரீராம் டிஜிட்டல் முறையை அறிமுகப்படுத்தியுள்ளார். அதற்கும் மும்பை எக்ஸ்பிரஸூக்கும் என்ன வித்தியாசம்?</b>
கேமராமேன்தான் (சிரிக்கிறார்). நிறைய வித்தியாசங்கள் உள்ளன. முதல் முறை என்பதைவிட முறையாக செய்ய வேண்டும் என்பதுதான் எனது எண்ணம். வித்தியாசங்களை இங்கு சொல்லி விளக்கமுடியாது.
<b>உங்களுக்கு மும்பை எக்ஸ்பிரஸ் திருப்தியை தந்துள்ளதா?</b>
நான் சந்தோஷமாக சிரித்து பேசுவதிலிருந்தே நீங்கள் புரிந்து கொள்ளலாமே.
<b>அடுத்து என்ன படம்?</b>
ரோஜா கம்பைன்ஸ் தயாரிப்பில் கெளதம் இயக்கும் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறேன். அது முடிந்ததும் மீண்டும் ராஜ்கமல் தயாரிப்பில் நடிப்பேன்.
நன்றி: சினிசௌத்.கொம்
|
|
|
| உலக நாயகனின் மும்பை எக்ஸ்பிறஸ்- முன்னோட்டம் |
|
Posted by: Kalai - 03-30-2005, 01:35 PM - Forum: சினிமா
- No Replies
|
 |
மும்பை Xபிரஸ்
By JBR
நடிப்பு: கமல்ஹாசன், மனிஷா கொய்ராலா
இயக்கம்: சிங்கீதம் சீனிவாசராவ்
இசை: இளையராஜா
<img src='http://cinesouth.com/images/new/29032005-TPV0image1.jpg' border='0' alt='user posted image'>
<b>கதை </b>
சூரியன் கூட மாளிகைகளை சூடேற்றிவிட்டே சேரிக்குள் நுழைகிறது என்ற சோஷலிச கருத்தை சாப்ளின் தேன் தடவி எடுத்திருக்கிறார் கமல். கிட்நாப்பும் ஆள் மாறாட்டமுமே கதை.
<b>நடிப்பு</b>
கமல்ஹாசன், மனிஷா கொய்ராலா, நாசர், பசுபதி, ரமேஷ் அர்விந்த், கோவை சரளா, வையாபுரி, மாஸ்டர் ஹார்த்திக், சௌகத் சுக்லா, ராக்கி சாவன்த்.
<b>சிறுதுளிகள் </b>
* ராஜ்கமல் இன்டர்நேஷனல் சார்பாக கமல் தயாரிக்கும் இருமொழி (தமிழ், இந்தி) படம் 'மும்பை Xபிரஸ்'
* கமல் சர்க்கஸ் மரணக்கிணற்றில் மோட்டார் சைக்கிளில் சாகஸம் புரியும் வீரராக நடித்திருக்கிறார்.
* இவரது ஜோடி மனிஷா கொய்ராலா. பத்து வயது பையனுக்கு அம்மா கேரக்டரில் நடித்திருக்கிறார்.
* 'விருமாண்டி'யில் வில்லனாக நடித்த பசுபதி விலா நோக வைக்கும் காமெடி செய்திருக்கிறார்.
* படத்தில் காட்சிகள் இயற்கையாக அமைய வேண்டும் என்பதற்காக டூப் போடாமல் ரிஸ்க் எடுத்திருக்கிறார் கமல். விளைவு, ஆக்சிடெண்டாகி கையில் கட்டுடன் இருக்கிறார்.
* காமெடி படம் என்றாலும் நல்ல சமூக கருத்தையும் கமல் இந்தப் படத்தில் சொல்லியிருக்கிறார். ராக்கி சாவன்த், மூன் மூன்-ன் கவர்ச்சி நடனமும் படத்தில் உண்டு.
* பாஸிகர் என்ற பெயருள்ள குதிரை படத்தில் பிரமாதமாக நடித்திருக்கிறது.
* படத்தில் இடம்பெறும் இன்னொரு கதாபாத்திரம் ரயில்!
* இளையராஜா இழைத்து இழைத்து டியூன் போட்டிருக்கிறார். பாடல்கள் கண்டிப்பாக 'ஹிட்' என்பது Xபிரஸ் வட்டார தகவல்.
* முழுக்க முழுக்க டிஜிட்டல் முறையில் எடுக்கப்பட்டு டிஜிட்டல் புரொஜக்டர் மூலம் திரையிடப்படும் முதல் இந்திய திரைப்படம் 'மும்பை Xபிரஸ்'.
நன்றி: சினி சௌத்.கொம்
|
|
|
|