![]() |
|
உலக நாயகனின் மும்பை எக்ஸ்பிறஸ்- முன்னோட்டம் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: சினிமா (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=39) +--- Thread: உலக நாயகனின் மும்பை எக்ஸ்பிறஸ்- முன்னோட்டம் (/showthread.php?tid=4636) |
உலக நாயகனின் மும்பை எக்ஸ்பிறஸ்- முன்னோட்டம் - Kalai - 03-30-2005 மும்பை Xபிரஸ் By JBR நடிப்பு: கமல்ஹாசன், மனிஷா கொய்ராலா இயக்கம்: சிங்கீதம் சீனிவாசராவ் இசை: இளையராஜா <img src='http://cinesouth.com/images/new/29032005-TPV0image1.jpg' border='0' alt='user posted image'> <b>கதை </b> சூரியன் கூட மாளிகைகளை சூடேற்றிவிட்டே சேரிக்குள் நுழைகிறது என்ற சோஷலிச கருத்தை சாப்ளின் தேன் தடவி எடுத்திருக்கிறார் கமல். கிட்நாப்பும் ஆள் மாறாட்டமுமே கதை. <b>நடிப்பு</b> கமல்ஹாசன், மனிஷா கொய்ராலா, நாசர், பசுபதி, ரமேஷ் அர்விந்த், கோவை சரளா, வையாபுரி, மாஸ்டர் ஹார்த்திக், சௌகத் சுக்லா, ராக்கி சாவன்த். <b>சிறுதுளிகள் </b> * ராஜ்கமல் இன்டர்நேஷனல் சார்பாக கமல் தயாரிக்கும் இருமொழி (தமிழ், இந்தி) படம் 'மும்பை Xபிரஸ்' * கமல் சர்க்கஸ் மரணக்கிணற்றில் மோட்டார் சைக்கிளில் சாகஸம் புரியும் வீரராக நடித்திருக்கிறார். * இவரது ஜோடி மனிஷா கொய்ராலா. பத்து வயது பையனுக்கு அம்மா கேரக்டரில் நடித்திருக்கிறார். * 'விருமாண்டி'யில் வில்லனாக நடித்த பசுபதி விலா நோக வைக்கும் காமெடி செய்திருக்கிறார். * படத்தில் காட்சிகள் இயற்கையாக அமைய வேண்டும் என்பதற்காக டூப் போடாமல் ரிஸ்க் எடுத்திருக்கிறார் கமல். விளைவு, ஆக்சிடெண்டாகி கையில் கட்டுடன் இருக்கிறார். * காமெடி படம் என்றாலும் நல்ல சமூக கருத்தையும் கமல் இந்தப் படத்தில் சொல்லியிருக்கிறார். ராக்கி சாவன்த், மூன் மூன்-ன் கவர்ச்சி நடனமும் படத்தில் உண்டு. * பாஸிகர் என்ற பெயருள்ள குதிரை படத்தில் பிரமாதமாக நடித்திருக்கிறது. * படத்தில் இடம்பெறும் இன்னொரு கதாபாத்திரம் ரயில்! * இளையராஜா இழைத்து இழைத்து டியூன் போட்டிருக்கிறார். பாடல்கள் கண்டிப்பாக 'ஹிட்' என்பது Xபிரஸ் வட்டார தகவல். * முழுக்க முழுக்க டிஜிட்டல் முறையில் எடுக்கப்பட்டு டிஜிட்டல் புரொஜக்டர் மூலம் திரையிடப்படும் முதல் இந்திய திரைப்படம் 'மும்பை Xபிரஸ்'. நன்றி: சினி சௌத்.கொம் |