![]() |
|
கதை அறிமுகம் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கதைகள்/நாடகங்கள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=53) +--- Thread: கதை அறிமுகம் (/showthread.php?tid=4631) Pages:
1
2
|
கதை அறிமுகம் - Mathan - 03-30-2005 யாழ் கள உறுப்பினர்கள் இருவரின் சிறுகதை அறிமுகம் [size=14]<b>சிலுவை மனம் - அஜீவன்</b> http://www.yarl.com/articles.php?articleId=485 <b>பாதை மாறிய பயணங்கள் - ஷண்முகி </b> இவற்றை படித்து உங்கள் விமர்சனங்களை எழுதுங்கள் - kuruvikal - 03-30-2005 பாதை மாறிய பயணங்கள்... எங்கட சண்முகி அக்காவினது கதையா.. யதார்த்ததைச் தொட்டுச் செல்லும் நல்ல கதை... இதில் மேலைத்தேய நடத்தைக் கோலமும் கீழத்தேய நடத்தைக் கோலமும் வெளித்தோற்றத்துக்கு மட்டுமல்ல மனதளவில் கூட இருவேறு பயணப் பாதைகள் வழி பயணிக்கின்றன என்பது அழகுறச் சொல்லப்பட்டுள்ளது...! கீழைத்தேயத்தோடு ஒட்டியவர்கள் மேலையத்தேயத்துள் காண்பதையெல்லாம் அசிங்கம் என்று பார்க்கும் நிலையில் தான் அதிகமாக இருக்கின்றார்கள்...! அதேவேளை மேலைத் தேயத்தவர் கீழைத்தேயத்தவரை...அவர்கள் மேலைத்தேயத்தவரை நோக்குவது போல் நோக்குவது குறைவு...! அவர்கள் எல்லோரையும் அரவணைக்கக் கூடியவர்களாக ஒரு சாதாரண விடத்தை பூதாகாரமாக்காது...சாதாரணமாக நோக்கி அந்த இடத்திலையே அதைப் புரிந்துகொள்பவர்களாக...இருப்பதை கீழைத்தேயத்தவர்கள் உணர்ந்து கொள்வது நல்லம்...அதற்காக கீழைத்தேய நடத்தைகளை முழுமையாகக் கைவிட்டு மேலைத் தேயத்தோடு இரண்டறக் கலந்துவிடச் சொல்லவில்லை... மேலைத்தேய நல்லவற்றைத் தெரிந்தெடுக்க பின்பற்ற கீழைத்தேயத்தவர்கள் தயங்கக் கூடாது...! அதில் தவறும் இல்லை...அதுவும் மேலைத்தேயத்திலேயே வாழும் போது சமூகங்கள் கலந்து ஒற்றுமையாக வாழ அது அவசியமும் கூட....! இக் கதையில் இரண்டு விடயங்கள் முக்கியமாக தேன்மொழிக்குப் பிடிக்கவில்லை... ஒன்று கணவன் குடிப்பதும் புகைப்பிடிப்பதும்... மற்றையது மேலைத்தேயப் பெண்களோடு நடனமாடுவது... இதில் முதலாவது தேன் மொழிக்கு புதிதல்ல...அது இலங்கையிலும் தான் நடக்குது.... ஆனால் குடிக்காத மாப்பிள்ளை என்று சொல்லி வைச்சுப் பின் குடிப்பது தவறுதான்...அதை ஏற்றுக்கொள்ள மனம் தயங்குந்தான்...ஆனால் சூழ்நிலைகளைப் புரிந்து கொண்டு விட்டுக் கொடுத்துப் பார்க்க வேண்டும்...அந்தப் பழக்கம் தொடர்வதை தடுக்கக் கூடிய வழிவகைகளை அன்பால் புரிந்துணர்வால் சொல்லி புரிய வைக்க முற்பட வேண்டும்...! அதையே ஒரு குறையாக தூக்கிப் பிடிக்கக் கூடாது...அது புரிந்துணர்வை நோக்கி வருவதை குறைக்கும்...! இரண்டாவது நடனம்... ஆடுதல்... இதையும் கூட பாரதூரமான விசயமாக நோக்கத்தேவையில்லை... ஒரு பெண்ணோடு நடனமாடிவிட்டால் அது ஆணின் கற்பு ஒழுக்கம் என்பவற்றை எந்தளவில் பாதிக்கக்கும் என்பது புரியாத ஒரு புதிர்தான்.... சரி அதைக் கூட சகித்துக் கொள்ளத் தயங்கும் பெண்கள்....சிலவற்றைச் செய்யலாம் இப்படியான சகிக்க முடியாத சங்கடமான சூழ்நிலைகள் ஏற்படுவதைத் இயன்றவரை தவிர்க்க முயல வேண்டும்...அதற்கு இப்படியான விருந்துகளுக்குப் போவதைத் தவிர்க்கலாம்..இயலும் வரை...! இல்ல கணவனுடன் மனைவியே சேர்ந்து நடனம் ஆடலாம்..மேற்கத்தையவர்களில் திருமணமானவர்கள் பெரும்பாலும் கணவன் மனைவியே நடனம் ஆடுவார்கள்...ஏன் தேன்மொழி அதைக் கூடச் செய்ய முயலவில்லை...! சும்மா கணவனை மனதுக்குள் பூஜிப்பதாக கீழைத்தேயப் பெண்கள் சொல்கிறார்களே தவிர அவர்கள் ஆண்களின் நாகரிமான எதிர்பார்ப்புக்களைக் கூட புரிந்து கொள்ள முயலாதவர்களாகத் தான் அதிகம் இருக்கின்றனர்...! இப்படிப் பார்க்கையில் மேலைத்தேயக் கணவன் மனைவியருக்கிடையில் புரிந்துணர்வு அதிகம்...ஆனால் கீழத்தேயத்தில் அதற்குப் பதிலாக பய பக்திதான் அவர்களை ஒரு சேர பிடித்து வைத்திருக்கிறது...கணவனுக்குப் பயந்த மனைவியும் மனைவிக்குப் பயந்த கணவனும் சமூகத்துக்குப் பயந்த ஆணும் பெண்ணும் என்றுதான் அவர்கள் வாழ்க்கை கழிகிறதே தவிர புரிந்துணர்வின்பாலானதாக இருப்பது மிக மிக மிகக் குறைவு...! தேன்மொழி கூட அப்படிப்பட்ட பெண்களுக்கு நல்ல உதாரணம்... மேற்கில் அதன் கலாசாரத்துக்குள் ஓரளவேணும் கலந்தால் தான் அவர்களுடன் இணைந்து வாழ முடியும்...அதற்காக தனிநபர் ஒழுக்கத்தையோ பண்பாட்டையோ இழக்க வேண்டும் என்பதல்ல அர்த்தம்... அவற்றை இழக்காமலே எங்கள் தனித்துவங்களை காப்பாற்றிய படியே பலவற்றைச் சாதிக்கலாம்... சிறீலங்காவுக்கு விமானத்தில் மீள்வதைக் காட்டிலும்...! :wink:
- shanmuhi - 03-31-2005 எனது கதையினை அருமையாக விமர்சித்தது கண்டு <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> மகிழ்ச்சிகள்.... மனம் நிறைந்த நன்றிகள்கூட...<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin--> சும்மா கணவனை மனதுக்குள் பூஜிப்பதாக கீழைத்தேயப் பெண்கள் சொல்கிறார்களே தவிர அவர்கள் ஆண்களின் நாகரிமான எதிர்பார்ப்புக்களைக் கூட புரிந்து கொள்ள முயலாதவர்களாகத் தான் அதிகம் இருக்கின்றனர்...! இப்படிப் பார்க்கையில் மேலைத்தேயக் கணவன் மனைவியருக்கிடையில் புரிந்துணர்வு அதிகம்...ஆனால் கீழத்தேயத்தில் அதற்குப் பதிலாக பய பக்திதான் அவர்களை ஒரு சேர பிடித்து வைத்திருக்கிறது...கணவனுக்குப் பயந்த மனைவியும் மனைவிக்குப் பயந்த கணவனும் சமூகத்துக்குப் பயந்த ஆணும் பெண்ணும் என்றுதான் அவர்கள் வாழ்க்கை கழிகிறதே தவிர புரிந்துணர்வின்பாலானதாக இருப்பது மிக மிக மிகக் குறைவு...! <!--QuoteEnd--><!--QuoteEEnd--> வாழ்வியலில் காணும் நிகழ்வை நன்றாக சுட்டிக் காட்டியிருக்கிறீர்கள். - tamilini - 03-31-2005 இந்தக்கதையை நான் முதலில் படிச்ச நினைவு.. புதிசோ என்று நினைச்சன். அக்கா நல்லாய் ஒருவிடயத்தைச்சொன்னியள். பெண்கள் எப்படி கற்புடன் ஒழுக்கத்துடன் இருக்க வேணும்எ ன்று ஆண்கள் நினைக்கிற மாதிரி ஏன் தன் கணவன் கற்புடையவன் ஒழுக்கமுடையவன் என்று ஒரு பெண் நினைக்க கூடாது...??? பார்ட்டிகளில் நடனமாடுவது நமது கலாச்சாரம் இல்லையே. அதை வேறு பெண்களும் சேர்ந்து செய்யலாம் தா|னே என்று குருவி சொல்லுறது நல்லாய் இருகு;கு..?? பொதுவாய்.. வெளிநாட்டில இருக்கிற ஆண்கள் நான் குடிக்கிறதில்லை புகைப்பிடிப்பதில்லை என்ற சொல்லை நம்பி அவனிற்கு பெண் கொடுக்கிறவர்களும் நம்பி வாறவைகளுக்கும் அறிவு ஒன்றும் வேண்டாமா?? இந்தக்காலத்தில இலங்கையிலையே இது சாதாரனமாய் போட்டுது. ஆக மொத்தம் புதிசாய் மணம் முடிச்சவை.. அதுவும் அந்தப்பெண் ஊரில் இருந்து வந்தது இருந்தும் இன்னொரு பெண்ணுடன் டான்ஸ் ஆட அவருக்கு மனது வரவேணும் எல்லோ..?? சரி இப்படி மணம் முடிச்சு வந்த ஒரு ஆண் தன் மனைவி இன்னொரு ஆணுடன் நடனமாட பாத்துக்கொண்டிருப்பானா..?? அது இயற்றை அது மேலைத்தேயம் கீலைத்தேயம் என்றில்லை. எங்கையும் இந்தப்பிரச்சனை இருக்கத்தான் செய்யும். அதை புரி;ந்து நடந்து கொள்ள வேண்டியது அவர்கள் தான். :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- tamilini - 03-31-2005 அஜீவன் அண்ணா கதை நன்றாய் இருந்தது. சென்னையைப்பிரிந்து புறப்பட்ட பகுதி உருக்கி எடுத்திச்சு. சில சமயங்களில் துயரம் அதிகமாகும் போது வார்த்தைகள் வராது என்பது உண்மை தான். அதை பல தடவை நேரில் கண்டிருக்கிறேன். :? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- kuruvikal - 03-31-2005 தமிழினி...நிச்சயமா தன் மனைவியைக் கற்புக்கரசியாக பார்க்க விரும்பும் ஆண் கற்புக்கரசனாகத்தான் இருக்க வேண்டும்...இல்லை என்றால் அவர் அப்படி எதிர்பார்க்க முடியாது....! மேலைத்தேயத்துக் கலாசாரத்துள் ஊறிவிட்டவர்கள் நிச்சயமாக பாட்டிகளின் போது கணவன் வேறொரு பெண்ணோட நடனமாடுவதைப் பெரிதுபடுத்திப் பார்க்கமாட்டார்கள்...அது அவர்களுக்கு நாம் கட்டித்தழுவி "போயிட்டு வாரம்" சொல்வது போல...! ஒன்று செய்திருக்கலாம் தேன்மொழி போன்ற பெண்ணை பாட்டிக்கு கூட்டிக் கொண்டு போகும் முன்னரே நிலைமைகளை எடுத்துச் சொல்லி கூட்டிப் போயிருந்தால் கலாசார அதிர்ச்சிகளால் அவருக்கு ஏற்பட்ட மனத்தாக்கங்களைத் தவிர்த்திருக்கலாம்...அல்லது அவரும் மனைவியுடன் சேர்ந்து நடனமாடாமலே இருந்திருக்கலாம்..அல்லது நிலைமையைப் புரிந்து மனைவி கணவனை அழைத்துக் கொண்டு ஆட்டங்கள் ஆரம்பிக்க முதலே பாட்டியை நிறைவு செய்திருக்கலாம்...எங்கும் கட்டாயப்படுத்தி நடனம் ஆட யாரும் அழைப்பதில்லை...குறிப்பாக திருமணமானவர்களை...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- tamilini - 03-31-2005 ம் கதை நல்ல உயிரோட்டமாய் தான் இருந்திருக்கு.. அது சரி மனைவியைப்பக்த்தில வைத்துக்கொண்டு இன்னொரு பெண்ணுடன் நடனம் ஆட வேண்டிய தேவை என்ன வந்திச்சு....???? ஆனால் இது தான் இப்ப நம்ம ஆக்களிட்ட நடக்குதோ என்னவோ..?? :wink: - kuruvikal - 04-01-2005 tamilini Wrote:ம் கதை நல்ல உயிரோட்டமாய் தான் இருந்திருக்கு.. அது சரி மனைவியைப்பக்த்தில வைத்துக்கொண்டு இன்னொரு பெண்ணுடன் நடனம் ஆட வேண்டிய தேவை என்ன வந்திச்சு....???? <!--emo& இதை எங்கள் விமர்சனத்தை வைத்த போதே எதிர்பார்த்தம்... ஆனா யாரும் கேட்கல்ல... நீங்க கேட்டுட்டீங்க... அதுதானே மனைவியை... காதலியை வைச்சுக்கொண்டும் பலர் பிற பெண்களுடன் இப்படி ஆடுற ஆட்டமிருக்கே.. அது அவசியமில்லை... அதுபோக எப்படித்தான் அசிங்கம் உணராமல் அந்நியமான பெண்களைத் தொட்டு ஆடுகிறார்களோ... ஆடிப்பழகினவைக்குத்தான் அது இலகுவாக அமையும்....! மற்றவைக்கு மனம் அப்படி ஆட இடமளிக்காது...! எனவே ஆரம்பத்தில் இருந்தே தங்களின் செயற்பாடுகளை தாங்களே கண்காணிக்கும் இளைஞர்கள் இப்படியான தவறுகளைச் செய்யமாட்டார்கள்....! அவர்கள் மேற்கில் பிறந்து வளர்ந்திருந்தால் கூட...! அது உறுதி...! :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- tamilini - 04-01-2005 Quote:எனவே ஆரம்பத்தில் இருந்தே தங்களின் செயற்பாடுகளை தாங்களே கண்காணிக்கும் இளைஞர்கள் இப்படியான தவறுகளைச் செய்யமாட்டார்கள்....! அவர்கள் மேற்கில் பிறந்து வளர்ந்திருந்தால் கூட...! அது உறுதி...!அப்படியிருப்பாங்களா என்ன..?? இல்லீங்க.. எல்லாரும் சொல்லுவினம் செயலில இருக்கா என்றால் கிடையாது. இந்த மனிசாளைப்பத்தி குருவிகள் உங்களுக்கு தெரியாது.. :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- kuruvikal - 04-01-2005 tamilini Wrote:Quote:எனவே ஆரம்பத்தில் இருந்தே தங்களின் செயற்பாடுகளை தாங்களே கண்காணிக்கும் இளைஞர்கள் இப்படியான தவறுகளைச் செய்யமாட்டார்கள்....! அவர்கள் மேற்கில் பிறந்து வளர்ந்திருந்தால் கூட...! அது உறுதி...!அப்படியிருப்பாங்களா என்ன..?? இல்லீங்க.. எல்லாரும் சொல்லுவினம் செயலில இருக்கா என்றால் கிடையாது. இந்த மனிசாளைப்பத்தி குருவிகள் உங்களுக்கு தெரியாது.. :wink: <!--emo& நிச்சயமாக அப்படி இருக்கினம்...! குருவிகளே அறியுங்கள்...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- tamilini - 04-01-2005 சே சே அப்படியிருக்காது குருவி.. இருக்கிறம் என்று சொல்லுவினம். இருக்கிறமாதிரி மற்றவையை நம்பவைப்பினம். சே சே இதெல்லாம் குருவிகளிற்கு தெரியாது. புரியாது. மனிசாள் நாங்களே புரிய கஸ்டம் பட்டம் பாவம் குருவி நீங்கள். அது சரி இப்படி சொல்லுறவையை நம்பாதீங்க.. எல்லாம் சும்மா றீல். :wink: :mrgreen:
- kuruvikal - 04-01-2005 tamilini Wrote:சே சே அப்படியிருக்காது குருவி.. இருக்கிறம் என்று சொல்லுவினம். இருக்கிறமாதிரி மற்றவையை நம்பவைப்பினம். சே சே இதெல்லாம் குருவிகளிற்கு தெரியாது. புரியாது. மனிசாள் நாங்களே புரிய கஸ்டம் பட்டம் பாவம் குருவி நீங்கள். அது சரி இப்படி சொல்லுறவையை நம்பாதீங்க.. எல்லாம் சும்மா றீல். :wink: இருக்கிறவைக்கே தெரியாதா தாங்கள் எப்படி இருக்கினம் என்று.... அந்த வகையில் குருவிகள் அறியுங்கள்... அப்படிப்பட்டவர்கள்...றீல் விடாதவர்கள் இருக்கிறார்கள்....! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- tamilini - 04-01-2005 :mrgreen: :mrgreen: :mrgreen: :mrgreen: - kuruvikal - 04-01-2005 குருவிகள் காண்பதால் உணர்வதைச் சொன்னால் ஏன் பச்சையாகச் சிரிச்சுப் பயமுறுத்துறீங்க...! நிச்சயமா றீல் விடாதவர்கள் இருக்கிறார்கள்...! :wink:
- sunthar - 04-01-2005 நிச்சயமா றீல் விடாதவர்கள் இருக்கிறார்கள் 8) - Mathan - 04-25-2005 <span style='font-size:25pt;line-height:100%'>ஷண்முகி அக்காவின் இன்னுமொரு கதை யாழ் களத்தில்</span> அக்கினிப் பிரவேசம் >>> http://www.yarl.com/articles.php?articleId=490[/size] - Mathan - 08-19-2005 <span style='font-size:21pt;line-height:100%'>மற்றுமொரு சிறுகதை அறிமுகம்</span> சிறுகதை - அழுகுரல் கேட்கிறதா ... ஷண்முகி எனக்கு இந்த உலகத்தை நிறைய பிடித்திருக்கின்றது. அழகாக இருக்கின்றது. மனிதர்களை பிடித்திருக்கின்றது. எனக்கு நீண்ட நாட்கள் வாழ ஆசை. அதிலும் என் அம்மா, அப்பா, தம்பி ஜனாவுடன் எப்போதும் இருக்க வேண்டும் போல் ஒர் ஆசை... அடிக்கடி எனக்குள் எழும். ஆனால் மனதில் உள்ளதை எல்லாம் சொல்லவேண்டும் போல் ஒர் துடிப்பு உத்வேகம் எனக்குள். "ஆ... ஆ..." முயற்சி செய்து பார்க்கிறேன் என்னால் பேச முடியவில்லை. என் ஆத்மாவின் அழுகுரல் எனக்குள் மட்டும் ஒலித்து அமைதியாக அடங்கிப் போகின்றது. என் வயது பன்னிரண்டுதான் ஆகிறது. மனம் வளர்ச்சி அடைந்த அளவுக்கு என் உடலில் வளர்ச்சி இல்லை. ஊனமாகிப்போன ஒரு கால் அதை இழுத்து இழுத்து நடக்கும்போது என் மனதின் தாக்கத்தை வெளியே சொல்லமுடியாத பேசமுடியாத நிலை. இறுதியில் கண்கள் தான் கலங்கிப்போய் நிற்கும். எனக்கு என் அம்மாவைத்தான் அதிகம் பிடிக்கும். எப்போதும் என்னைப்பற்றியே நினைத்தபடியே இருப்பாள். எந்த நேரத்தில் மருந்து தரவேண்டும், சாப்பாடு தரவேண்டும் எந்த எந்த நேரத்தில் நான் என்னென்ன செய்ய வேண்டும் என்பதெல்லாம் என் அம்மாவுக்குத்தான் தெரியும். சிலசமயங்களில் அம்மாவைக் கட்டிக் கொண்டு "ஓ..." வென்று அழவேண்டும் போலிருக்கும். "அம்மா நீயில்லாமல் நான் எப்படியம்மா இந்த உலத்தில் வாழப் போறேன் அம்மா..." எனக்குள் நித்தம் எழும் கேள்வி. ஆனால்... கொஞ்சநாளாக அம்மா என்னிடம் அன்பாக இல்லை. தம்பி ஜனா பிறந்ததில் இருந்து அவனுடன் தான் அதிக நேரம் செலவிடுகிறாள். என்னைவிட்டு விலகிய மாதிரி ஒர் நினைப்பு எனக்குள் எழுந்து கொள்கிறது. அந்த நினைப்பை ஜனாவிடம் காட்டி என் கோபத்தை காட்ட முயன்றபோது அவனது சிரித்த முகம் என்னை அவன்பால் ஈர்த்தது. என் அன்பையும் சேர்த்து ஜனாவை இருக அணைக்க முற்படும் போது, அவனை ஏதும் செய்து விடுவேனோ என்ற பாதுகாப்பு முனைப்பில் அம்மா என்னை விலக்க நினைப்பது என் மனதை முள்ளாய் தைக்கின்றது. "அம்மா என் தம்பியை ஒன்றும் செய்ய மாட்டேன்..." என்று கேட்க வேண்டும் போலிருக்கிறது. எனக்கு என் அப்பாவையும் நிறைய பிடிக்கும். அம்மாவின் கவனம் என்மீது படாத சமயங்களில் அப்பாவின் கவனம் என்மீது பதிந்து இருக்கும். எனக்கு மற்ற பிள்ளைகளுடன் சேர்ந்து விளையாட நிறைய விருப்பம். ஆனால்... மற்ற பிள்ளைகள் என்னை ஒர் வேடிக்கை பொருளாக, கேலியாக நகைப்பது எல்லாம் பிடிக்காது. இது மனதினுள் ஒர் தாக்கத்தை வெளிப்பட, வெளியே சென்று விளையாடுவதிலும் ஆர்வமே இல்லாமலே போய் விட்டது. இப்படித்தான் ஒருமுறை எங்கள் வீட்டிற்கு மாமா, அத்தை, பிள்ளைகள் எல்லோரும் வந்து இருந்தார்கள். எனக்கு மனம் முழுவதும் சந்தோஷம். என் வயதுப் பசங்களோடு விளையாடுவது என்றால் சொல்லவும் வேண்டுமா? என் மீது இருந்த கவனம் சற்றே விலக என்னை மீறிக் கொண்டு வந்த செய்கைகள் குழப்படிகளாக… உருவெடுத்துக் கொண்டிருக்க... அம்மா தீடிரென்று ஓடி வந்து, என் முதுகில் இரண்டு சாத்து சாத்திவிட்டு என்னை அறையினுள் பூட்டிவிட்டாள். யாராவது எப்போதும் கண்காணித்துக் கொண்டு இருந்தால் அவர்களின் கவனம் விலகிக் கொள்ளும் போது குழப்படிகள் அதிகமாகும் என்பதை அன்றுதான் அறிந்து கொண்டேன். மற்றவர்களுக்கு அது புரியாதே. அன்று நான் அழுத அழுகைக்கு அளவே இல்லாமலே போய் விட்டது. "அம்மா என்னை மன்னித்து விடம்மா. இனிமே குழப்படி பண்ணாம சமத்தாயிருப்பேன்" என்று ஆத்மா ஒலமிட கண்களில் கண்ணீர் வடிய அப்படியே தரையில் நித்திரையாகி விட்டேன். கண்விழித்த போது அம்மா என்னை அன்பாக தடவி விட்டுக் கொண்டு இருந்தாள். அம்மாவைக் கண்டவுடன் கழுத்தைக் கட்டிப்பிடித்துக் கொண்டேன். "என்னுடைய செல்லத்தை அடித்துவிட்டேனே..." என்றபடியே அம்மா என்னை தூக்கி இரு கன்னங்களிலும் மாறி மாறி கொஞ்சினாள். எனக்கு சந்தோஷமாக இருந்தது. ஒரு தேரில் பவணி வருவது போன்ற சந்தோசம் எனக்குள் இருந்தது. அம்மா அடித்தது கூட வலிக்கவில்லை. அம்மா அம்மா சந்தோஷத்தில் ஏதோ சொல்ல வேண்டும் போல் துடிக்கின்றேன். என் துடிப்பு உனக்கு கேட்கிறதா..? அம்மா எனக்காக எத்தனை நாட்கள் விரதமிருந்து, கோயில் கோயிலாக அலைகிறாய். உன்னை உருக்கி எத்தனை தியாகங்களை எனக்காக செய்கிறாய். உன் செயலை நினைக்கும் போது என் மனம் நொந்து போகிறது. வீட்டுக்கு வந்து போவோரிடம் எல்லாம் சொல்லிக் கொள்கிறாய் "இப்போது அவன் சுகமாகிக் கொண்டு வருகிறான் நான் வணங்கும் முருகன் கைவிட மாட்டான்" என்று எத்தனை நம்பிக்கை தரும் வார்த்தைகளை உதிர்க்கிறாய். ஆனால் எனக்கு என்மீது நம்பிக்கை இல்லையம்மா. எத்தனை மருந்துகள் குடித்தாலும், எத்தனை கோயில் படிகள் ஏறி இறங்கினாலும் எழுதி வைத்த விதிப்படிதானே நடக்கும். எனக்கு ஒன்றே ஒன்று தான் வேண்டும் எப்போதும் என்னை உன் மடிமீது உறங்க வைக்க வேண்டும். உன் கரங்களால் என் தலையை தடவியபடியே, அதில் என் உறக்கம் நிரந்தரமாக இருக்க வேண்டும். அம்மா என் ஆத்மாவின் ஆசை அழுகுரலாய் உனக்கு கேட்கின்றதா...? - வெண்ணிலா - 08-19-2005 நல்லாக இருக்கு சிறுகதை. எழுத்துருவாக்கம் ஷண்முகி அக்காவா? வாழ்த்துக்கள் அக்கா. நன்றி மதன் அண்ணா. இங்கு பதிந்தமைக்கு - Niththila - 08-19-2005 கதை நல்லாயிருக்கு ஷண்முகி அக்கா இணைத்தமைக்கு நன்றி மதன் அண்ணா - shanmuhi - 08-19-2005 கதையை இணைத்த மதனுக்கும் மற்றும் வெண்ணிலா, நித்திலாவுக்கும் நன்றிக்ள்... |