பாதை மாறிய பயணங்கள்... எங்கட சண்முகி அக்காவினது கதையா..
யதார்த்ததைச் தொட்டுச் செல்லும் நல்ல கதை... இதில் மேலைத்தேய நடத்தைக் கோலமும் கீழத்தேய நடத்தைக் கோலமும் வெளித்தோற்றத்துக்கு மட்டுமல்ல மனதளவில் கூட இருவேறு பயணப் பாதைகள் வழி பயணிக்கின்றன என்பது அழகுறச் சொல்லப்பட்டுள்ளது...!
கீழைத்தேயத்தோடு ஒட்டியவர்கள் மேலையத்தேயத்துள் காண்பதையெல்லாம் அசிங்கம் என்று பார்க்கும் நிலையில் தான் அதிகமாக இருக்கின்றார்கள்...! அதேவேளை மேலைத் தேயத்தவர் கீழைத்தேயத்தவரை...அவர்கள் மேலைத்தேயத்தவரை நோக்குவது போல் நோக்குவது குறைவு...!
அவர்கள் எல்லோரையும் அரவணைக்கக் கூடியவர்களாக ஒரு சாதாரண விடத்தை பூதாகாரமாக்காது...சாதாரணமாக நோக்கி அந்த இடத்திலையே அதைப் புரிந்துகொள்பவர்களாக...இருப்பதை கீழைத்தேயத்தவர்கள் உணர்ந்து கொள்வது நல்லம்...அதற்காக கீழைத்தேய நடத்தைகளை முழுமையாகக் கைவிட்டு மேலைத் தேயத்தோடு இரண்டறக் கலந்துவிடச் சொல்லவில்லை... மேலைத்தேய நல்லவற்றைத் தெரிந்தெடுக்க பின்பற்ற கீழைத்தேயத்தவர்கள் தயங்கக் கூடாது...! அதில் தவறும் இல்லை...அதுவும் மேலைத்தேயத்திலேயே வாழும் போது சமூகங்கள் கலந்து ஒற்றுமையாக வாழ அது அவசியமும் கூட....!
இக் கதையில் இரண்டு விடயங்கள் முக்கியமாக தேன்மொழிக்குப் பிடிக்கவில்லை... ஒன்று கணவன் குடிப்பதும் புகைப்பிடிப்பதும்... மற்றையது மேலைத்தேயப் பெண்களோடு நடனமாடுவது... இதில் முதலாவது தேன் மொழிக்கு புதிதல்ல...அது இலங்கையிலும் தான் நடக்குது.... ஆனால் குடிக்காத மாப்பிள்ளை என்று சொல்லி வைச்சுப் பின் குடிப்பது தவறுதான்...அதை ஏற்றுக்கொள்ள மனம் தயங்குந்தான்...ஆனால் சூழ்நிலைகளைப் புரிந்து கொண்டு விட்டுக் கொடுத்துப் பார்க்க வேண்டும்...அந்தப் பழக்கம் தொடர்வதை தடுக்கக் கூடிய வழிவகைகளை அன்பால் புரிந்துணர்வால் சொல்லி புரிய வைக்க முற்பட வேண்டும்...! அதையே ஒரு குறையாக தூக்கிப் பிடிக்கக் கூடாது...அது புரிந்துணர்வை நோக்கி வருவதை குறைக்கும்...!
இரண்டாவது நடனம்... ஆடுதல்... இதையும் கூட பாரதூரமான விசயமாக நோக்கத்தேவையில்லை... ஒரு பெண்ணோடு நடனமாடிவிட்டால் அது ஆணின் கற்பு ஒழுக்கம் என்பவற்றை எந்தளவில் பாதிக்கக்கும் என்பது புரியாத ஒரு புதிர்தான்.... சரி அதைக் கூட சகித்துக் கொள்ளத் தயங்கும் பெண்கள்....சிலவற்றைச் செய்யலாம் இப்படியான சகிக்க முடியாத சங்கடமான சூழ்நிலைகள் ஏற்படுவதைத் இயன்றவரை தவிர்க்க முயல வேண்டும்...அதற்கு இப்படியான விருந்துகளுக்குப் போவதைத் தவிர்க்கலாம்..இயலும் வரை...! இல்ல கணவனுடன் மனைவியே சேர்ந்து நடனம் ஆடலாம்..மேற்கத்தையவர்களில் திருமணமானவர்கள் பெரும்பாலும் கணவன் மனைவியே நடனம் ஆடுவார்கள்...ஏன் தேன்மொழி அதைக் கூடச் செய்ய முயலவில்லை...!
சும்மா கணவனை மனதுக்குள் பூஜிப்பதாக கீழைத்தேயப் பெண்கள் சொல்கிறார்களே தவிர அவர்கள் ஆண்களின் நாகரிமான எதிர்பார்ப்புக்களைக் கூட புரிந்து கொள்ள முயலாதவர்களாகத் தான் அதிகம் இருக்கின்றனர்...! இப்படிப் பார்க்கையில் மேலைத்தேயக் கணவன் மனைவியருக்கிடையில் புரிந்துணர்வு அதிகம்...ஆனால் கீழத்தேயத்தில் அதற்குப் பதிலாக பய பக்திதான் அவர்களை ஒரு சேர பிடித்து வைத்திருக்கிறது...கணவனுக்குப் பயந்த மனைவியும் மனைவிக்குப் பயந்த கணவனும் சமூகத்துக்குப் பயந்த ஆணும் பெண்ணும் என்றுதான் அவர்கள் வாழ்க்கை கழிகிறதே தவிர புரிந்துணர்வின்பாலானதாக இருப்பது மிக மிக மிகக் குறைவு...!
தேன்மொழி கூட அப்படிப்பட்ட பெண்களுக்கு நல்ல உதாரணம்... மேற்கில் அதன் கலாசாரத்துக்குள் ஓரளவேணும் கலந்தால் தான் அவர்களுடன் இணைந்து வாழ முடியும்...அதற்காக தனிநபர் ஒழுக்கத்தையோ பண்பாட்டையோ இழக்க வேண்டும் என்பதல்ல அர்த்தம்... அவற்றை இழக்காமலே எங்கள் தனித்துவங்களை காப்பாற்றிய படியே பலவற்றைச் சாதிக்கலாம்... சிறீலங்காவுக்கு விமானத்தில் மீள்வதைக் காட்டிலும்...! :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>