Yarl Forum
காதல்.. கனவாய்...! - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11)
+--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52)
+--- Thread: காதல்.. கனவாய்...! (/showthread.php?tid=4653)

Pages: 1 2 3

காதல்.. கனவாய்...! - kuruvikal - 03-28-2005

<img src='http://img216.exs.cx/img216/6472/dream2lq.jpg' border='0' alt='user posted image'>

<b>காதலென்று அலைந்ததில்லை
கனவதில் மிதந்ததில்லை
என்னோடு உன்னை
கற்பனைக் கண்கள் காணும் வரை...!
காலம் உன்னை இனங்காட்ட
காரணமில்லாமல்
கரைகிறது என் மனம்
உன் நினைவில்...!

பாராத உன்னுருவம்
பார்க்கத் துடிக்குது என் பருவம்
பார்த்த விழிகள் பூத்திருக்கு
இமைகள் அசைக்காது....!
இடியே வரினும்
இசைக்காத என் செவிகள்
ஏங்குதுன் காற்றிலாடும் சொல் வாங்க...!
அர்த்தமில்லா கீதம் கூட
அற்புதமாய் காதில் விழுகுது...!

இடைவிடாது இடிக்கும் அந்த
இதயம் கூட அமைதிகாக்குது
இதமாய் உன் பெயர் உச்சரிக்க...!
இரவோடு வந்த உறக்கம் கூட
இரந்து கேட்டும் இரக்கப்படமால்
இல்லையென்று கிடக்குது....!
மோதலுக்கு வரியெழுதும்
கரங்கள் கூட
காதலுக்கு வரியெழுதத் துடிக்குது...!
நடை பயில பஞ்சிப்பட்ட கால்கள்
தடை தாண்டி ஓடுது
உன்னடிகள் தேடி....!

துன்பப்படாத மனதது
தூதுகள் செல்ல வழி சொல்லி
துவண்டு கிடக்கு...!
துரு துரு குறும்பும் அங்க
அடங்கிக் கிடக்கு
மொத்தத்தில்....
இயல்பதை இழந்து
முடங்கிக் கிடக்கு
என் உடல்
உன் நினைவால்....!

காரணமில்லாமல் உதிரும்
உன் வார்த்தைகளுள்
ஆயிரம் அர்த்தங்கள் காணுது நினைவு
காலம் அப்படி இருக்க...
கண்டபடி...வரிகளால் பேசி
வஞ்சிக்காதே வஞ்சகியே
முடிக்காதே என் ஆயுள்
விரைந்துமே...!
கண்ணியம் வேண்டி
விடை பெறும் வேளை
உணர்கிறேன்.... கலைகிறேன்
காதல்.. கனவாய்...!</b>

- hari - 03-28-2005

அருமையான கவிதை
வாழ்த்துக்கள் குருவியாரே!

Re: காதல்.. கனவாய்...! - thivakar - 03-28-2005

kuruvikal Wrote:காரணமில்லாமல் உதிரும்
உன் வார்த்தைகளுள்
ஆயிரம் அர்த்தங்கள் காணுது நினைவு
காலம் அப்படி இருக்க...
கண்டபடி...வரிகளால் பேசி
வஞ்சிக்காதே வஞ்சகியே
முடிக்காதே என் ஆயுள்
விரைந்துமே...!
கண்ணியம் வேண்டி
விடை பெறும் வேளை
உணர்கிறேன்.... கலைகிறேன்
காதல்.. கனவாய்

குருவிகள் கனவாய்தான் இதைக் காண்கிறீர்களா???
நாங்கள் நிஜத்தில் அனுபவிக்கிறோம்..

- kuruvikal - 03-28-2005

நன்றி மன்னா உங்கள் வாழ்த்துக்கு...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

திவாகர்...குருவிகளுக்கு முன் பின் காதல் அனுபவம் எல்லாம் இல்லை... வசந்தத்தோடு மலர்ந்த மலர் மீது காதல்...கனவுக் காதல்... பேசா மலரைப் பேச வைச்சது பிழையாப் போச்சு... கண்டபடி பேசுதா..அதுதான்...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- hari - 03-28-2005

kuruvikal Wrote:நன்றி மன்னா உங்கள் வாழ்த்துக்கு...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

உங்களுக்கு காதல் அனுபவம் இல்லை! ஆனால் பலரின் காதல் அனுபவங்கள் உங்களுக்கு தெரியும் என நினைக்கின்றேன்! :wink:

- kuruvikal - 03-28-2005

hari Wrote:

சரியாச் சொன்னீர்கள்... குறிப்பாக நண்பர்கள் சிலரின் சோகக் காதல்கள் உள்ளடங்கலாக....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea

இப்ப குருவிகளுக்கு மலர் மீதுதான் காதல் வந்தாச்சே...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- thivakar - 03-28-2005

மன்னா...நீங்கள் சொல்வது உண்மைதான்....குருவிகள் கன காதலுக்கு தூது போய் இருக்கின்றனதானே...அதனால் அனுபவங்கள் நிறைய இருக்கும் என்ன.....அது சரி உங்கள் அரண்மனையில் எப்பிடி இப்பவும் புறாக்கள்தானா???? அல்லது நவீன யுக்திகளா?????

- shobana - 03-28-2005

கவிதைக்கு வாழ்த்துக்கள் குருவிகளே அருமையான கவிதை கவிதையின் வார்த்தைகள் மிகச்சரியானவை...காதல் அனேகமானேருக்கு கனவு தான் ... ஆனாலும் அதுவும் ஒரு இனிமையான கனவு அல்லவா???
:evil:

- kuruvikal - 03-28-2005

shobana Wrote:கவிதைக்கு வாழ்த்துக்கள் குருவிகளே அருமையான கவிதை கவிதையின் வார்த்தைகள் மிகச்சரியானவை...காதல் அனேகமானேருக்கு கனவு தான் ... ஆனாலும் அதுவும் ஒரு இனிமையான கனவு அல்லவா???
:evil:

கனவுக் காதல் புனிதமானது... நிஜக் காதலை விட.... அதுதான் அது மனதுக்கு இதமானதாக இருக்கிறது போலும்...! நன்றி சோபனா உங்கள் வாழ்த்துக்கு...! :wink:

- sompery - 03-28-2005

வணக்கம்

Re: காதல்.. கனவாய்...! - வியாசன் - 03-28-2005

kuruvikal Wrote:<img src='http://img216.exs.cx/img216/6472/dream2lq.jpg' border='0' alt='user posted image'>

<b>

காரணமில்லாமல் உதிரும்
உன் வார்த்தைகளுள்
ஆயிரம் அர்த்தங்கள் காணுது நினைவு
காலம் அப்படி இருக்க...
கண்டபடி...வரிகளால் பேசி
வஞ்சிக்காதே வஞ்சகியே
முடிக்காதே என் ஆயுள்
விரைந்துமே...!
கண்ணியம் வேண்டி
விடை பெறும் வேளை
உணர்கிறேன்.... கலைகிறேன்
காதல்.. கனவாய்...!</b>

பார்வையினாலே சிறைப்பிடித்து
வஞ்சிக்கவென்றெ இந்த
மாரீசமான்கள் திரிகின்றன
கண்களால் தூண்டில்போட்டு
உன்னை அழிக்வென்றே இந்த
சூர்ப்பனகைகள் படையெடுப்பு

நீ காதலென்ற இரைக்கு
ஆசைகொண்டு தூண்டிலில்
மாட்டிக்கொண்டு துடிக்காதே
நீ ஆக்கத்திற்காய் அவதரித்தவன்
அழிந்துபோகாதே இராமனாய்
சூர்ப்பனகைகள் மூக்கை
அறுத்துவிடு
நீ சாதித்துககாட்டு இந்த
மாயமான்கள் தானாகவே
தேடிவரும்

- shobana - 03-28-2005

உங்கள் கருத்துக்களை முழுமையாக ஏற்றுக்கொள்ள இயலாது தற்போதும் பல இராவணன்கள் இருக்கிறார்கள் தானே???

- shobana - 03-28-2005

பொய் உண்மையை விட அழகானது நம்பிவிடாதே...
அனுதாபம் மன்னிப்பு தயக்கம் ஆண்களிடம் மட்டும் காட்டி விடாதே உன் சிரிப்பை பறித்துவிடுவார்கள்...
பயித்தியக்காறர்களின் கூடம் அது தான் காதல்.... தப்பியும் அந்தப்பக்கம் போய்விடாதே... --- இது என்னுடைய கருத்து அல்ல உங்கள் அனைவலுக்கும் பரீட்சயமான ஆதி அண்ணாவினுடைய கருத்து
நன்றி

- THAVAM - 03-28-2005

அருமை....அருமை
கனவு நினைவுகளை
கவி நடையில் அழகாக
களத்தில் களம் இறக்கியதற்கு
தவத்தாரின் சிரம் தாழ்ந்த நன்றிகள்

- Vasampu - 03-28-2005

எனக்கென்னவோ இதுவரை பல காதல் அனுபவங்;களை கேட்ட குருவிகளுக்கு இது சொந்த அனுபவம் போலுள்ளது.

அது சரி முக்கியமான ஒரு ஆளின் விமர்சனத்தை இன்னும் காணவில்லையே????

:roll: :roll: :roll: :roll:

- Vasampu - 03-28-2005

shobana Wrote:பொய் உண்மையை விட அழகானது நம்பிவிடாதே...
அனுதாபம் மன்னிப்பு தயக்கம் ஆண்களிடம் மட்டும் காட்டி விடாதே உன் சிரிப்பை பறித்துவிடுவார்கள்...
பயித்தியக்காறர்களின் கூடம் அது தான் காதல்.... தப்பியும் அந்தப்பக்கம் போய்விடாதே... --- இது என்னுடைய கருத்து அல்ல உங்கள் அனைவலுக்கும் பரீட்சயமான ஆதி அண்ணாவினுடைய கருத்து
நன்றி

இன்னொருவரின் கருத்தை நீங்களும் ஏற்றுக் கொண்டபடியால்த்தானே களத்திற்கு எடுத்து வந்தீர்கள். பிறகென்ன பிற்பாட்டு?? இது குருவிகளின் கவிதை பற்றிய விமர்சளப் பக்கம். தேவையில்லாமல் ஆண்களை விமர்சிக்காதீர்கள். அப்போ பெண்கள் எல்லோரும் பேடிகளோ?? தேவையாயின் பிறிதொரு தலையங்கத்தில் வாரும் பதிலடி தருகின்றோம்
:oops: :oops: :oops: :oops:

- kuruvikal - 03-28-2005

Vasampu Wrote:எனக்கென்னவோ இதுவரை பல காதல் அனுபவங்களை கேட்ட குருவிகளுக்கு இது சொந்த அனுபவம் போலுள்ளது.

அது சரி முக்கியமான ஒரு ஆளின் விமர்சனத்தை இன்னும் காணவில்லையே????

:roll: :roll: :roll: :roll:

குருவிகளின் கிறுக்கல் கண்டு கவிதைகளாலும் கருத்துக்களாலும் விமர்சனங்கள் தந்த வியாசன் தவத்தார் மற்றும் வசம்பு ஆகியோருக்கு குருவிகளின் நன்றிகள் உரித்தாகும் அதேவேளை... வசம்புவின் சந்தேகம் என்பது குருவிகள் - மலர் கற்பனைக் காதலால் பிறந்த கற்பனையைக் குறிப்பதாகவும் இருக்கலாம்...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- shobana - 03-28-2005

வசம்பு அண்ணா இங்கு குருவிகளின் கவிதை பக்கத்தில் நான் அப்படி எழுதி இருக்ககூடாது தான்.. ஏன் குருவிளின் கவிதையிலேயே பெண்கள் மாயக்காரர்கள் தான் என கூறப்பட்டு உள்ளது... அப்படி அனைத்துப்பெண்களையும் கூற முடியாது அதே போல அதே போல எல்லா ஆண்களும் ராமனும் இல்லை அதே போல இராவணனும் இல்லை
இதற்கு முதல் நான் இப்பக்கத்தில் எழுதியது ஒரு ஆணின் கருத்து அதாவது ஆதி அண்ணாவினுடைய கருத்து அதை ஒரு பெண் எழுதவில்லை ஆண் தான் எழுதினார்...
குருவிகள் மீண்டும் மன்னிக்கனும் உங்கள் கவிதைப்பக்கத்தில் இக்கருத்தை எழுதியதற்கு....
நன்றி

- kuruvikal - 03-28-2005

shobana Wrote:வசம்பு அண்ணா இங்கு குருவிகளின் கவிதை பக்கத்தில் நான் அப்படி எழுதி இருக்ககூடாது தான்.. ஏன் குருவிகளின் கவிதையிலேயே பெண்கள் மாயக்காரர்கள் தான் என கூறப்பட்டு உள்ளது... அப்படி அனைத்துப்பெண்களையும் கூற முடியாது அதே போல அதே போல எல்லா ஆண்களும் ராமனும் இல்லை அதே போல இராவணனும் இல்லை
இதற்கு முதல் நான் இப்பக்கத்தில் எழுதியது ஒரு ஆணின் கருத்து அதாவது ஆதி அண்ணாவினுடைய கருத்து அதை ஒரு பெண் எழுதவில்லை ஆண் தான் எழுதினார்...
குருவிகள் மீண்டும் மன்னிக்கனும் உங்கள் கவிதைப்பக்கத்தில் இக்கருத்தை எழுதியதற்கு....
நன்றி

காதலனுக்கு காதலி மயக்கம் தருபவளாக... காதலிக்குக் காதலன் மயக்கம் தருபவனாக... இருப்பதுதான் இயல்பு... மனிதரில் மட்டுமன்றி காதல் உணர்வை வெளிப்படுத்தும் அனைத்து ஜீவன்களிலும்...! கனவென்றாலும் கொஞ்சம் இயற்கையாய் அமையும் இயல்புத் தன்மை இருக்கத்தான் செய்யும்...! அதற்காய் பெண்களையோ ஆண்களையோ எந்த வகையிலும் இக்கிறுக்கல் சாடவில்லை...! :wink: Idea

- tamilini - 03-28-2005

கவிதை நல்லாய் இருக்கு குருவிகளே.. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->