Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஒருகதை
#1
.<img src='http://img294.echo.cx/img294/1599/sanstitre6hv.png' border='0' alt='user posted image'> <span style='font-size:25pt;line-height:100%'>இறுதிப் பதிவொன்று...................... </span>-சியாம்


விஜி தனது வீடியோ கமராவை எடுத்து
வரவேற்பறை முழுவதும் தெரியும்படியாக கோணம் பார்த்து பொருத்தினான்.

பின்னர் எல்லாம்சரியாக இருக்கிறதா என ஒரு தடைவைக்கு பலதடைவை பார்த்தான்.

ஏனெனில் இது அவன் எடுக்கபோகும் முக்கியமான ஒரு நிகழ்ச்சி.

வீடியோ கமறா தானாகவே இயங்கி எடுக்கவிருப்பதால் எல்லாம் சரியாக பதிய படவேண்டும் என்பதில்
அவனிற்குள் ஒருபடபடப்பு.

ஏனெனில் வீடியோ விஜி என்றால் பாரீசில் அனேகமாக தெரியாத தமிழர்கள் இல்லை.
பத்து வருங்களிற்கு மேலாக பாரீசில் தமிழர்களின் பிறந்தநாள்,
திருமணம் என்று அனைத்து, மங்களகரமான நிகழ்ச்சிகள் என்றாலும் அனைவரும் உடனே சொல்வது,

"விஜியை கூப்பிடுங்கோ,.........
அவரெண்டால் எங்கட விருப்பத்திற்கேற்றமாதிரி வடிவா எடுத்து,
அதற்கேற்றமாதிரி பாட்டுகளும் அடித்து தருவார்"என்றுதான்.

அப்படியொரு நல்ல பெயர் அவனிற்கிருந்தது.
காலப்போக்கில், வீடியோவும் அவனது பெயரில் ஒட்டி,
வீடியோ விஜியாகிவிட்டான்.

எல்லாம் சரிபார்த்து விட்டு கதிரையில் அமர்ந்து,
கிளாசில் கொஞ்சம் விஸ்கியை ஊற்றி,
இரண்டு துண்டு ஐஸ் கட்டியை போட்டு
ஒரு மடக்கில் குடித்து விட்டு நிமிர்ந்து
சுவரில் மாட்டியிருந்த படத்தை உற்று பார்த்தான்.

அவன் நினைவுகள் மூன்றுமாதங்கள் பின்நோக்கி நர்ந்தது

விஜி வீடுமாறுவதற்காக எல்லா சாமான்களையும்
பெட்டிகளில் போட்டு ஒட்டிக்கொண்டிருந்தான்.

தொலைபேசி அடித்தது, எடுத்தான்.

"கலோ வணக்கம்"

"விஜி நிக்கிறாரோ?"

" ஓம்,...... நான் விஜிதான், சொல்லுங்கோ."

"நான்மேகன் , இந்த ஞாயிற்று கிழமை ஒருகலியாண வீடு.
நீங்கள்தான் வீடியோ எடுக்கவேணும்.
அதுதான் உங்களிற்கு வசதியோ?"

"பிரச்சனையில்லை,....... ஆனால் நான் வர ஏலாது.
என்ரை சினேதனை அனுப்பிவிடுறன்.
உங்கட விலாசம் மற்றது கலியாணம் நடக்கிற இடத்து விலாசம் ரெலிபோன் நம்பர் மற்ற விபரங்களை தாங்கோ.

"இல்லை நீங்கள் வந்து எடுத்தா தான் நல்லா இருக்கும்."

" இல்லையண்ணை சனிக்கிழமை மனிசி வாறா ,
அதாலை நானும் வீடுமாறிகொணடிருக்கிறன்.
சரியானவேலை அதுதான்............."

"சரிசரி விளங்கிது, பிரச்சனையில்லை.
உங்கட சினேதனையே அனுப்புங்கோ.
இந்தாங்கோ விலாசமும் விபரமும். "

விஜி விபரங்களை குறித்து கொண்டு இணைப்பை துண்டித்தான்.

சனிக்கிழமை மனிசி வருகிது ஞாயிறு வீடியோ எடுக்க வரட்டாம்,
கோடி ருபாய் தந்தாலும் போக ஏலாது.
அடுத்ததா காரையும் ஒருக்கா நாளைக்கு கழுவ வேணும் என நினைத்து கொண்டு வேலையை தொடர்ந்தான்.

ஒருகிழமை லீவு எடுத்து, புதுவீட்டில் சாமான்கள் எல்லாம்
மாற்றி அடுக்கி.......................
அவ்வப்போது அவனது நண்பன் ரவியும் வந்து உதவிகள் செய்தது
அவனிற்கு நிம்மதியாய் இருந்தது

அன்று சனிக்கிழமை காலை 6.00மணிக்கெல்லாம் எழும்பி அவசரவசரமாக முன்று மரக்கறியுடன்
ஒரு மீன்கறியென சமையல் எல்லாம் செய்து விட்டு
விமானநிலையம் போவதற்காக தயாரானான்.

அவனது நண்பன் ரவியும் கூட வருவதாக கூறியிருந்தான்

அடிக்கடி நேரத்தை பார்த்தபடியே.

சே இந்த ரவி இப்பிடித்தான் ஒரு நாளும் சொன்ன நேரத்திற்கு வரமாட்டான்.

8.00மணியாகிது............
10.00 மணிக்கெல்லாம் விமான நிலையத்திலை நிக்கவேணும் என நினைத்தபோதே,
வீட்டு அழைப்புமணியடித்தது.

ஆ வந்திட்டான் கதவை திறந்தான்..

என்ன சமையல் எல்லாம் தடல்புடலாய் நடந்திருக்கு போலை 3ம் மாடியிலையிருந்து கீழை வரேக்கையே
மணக்கிது என்ன சமைச்சனி
உன்ரை மனிசி குடுத்து வச்சவா ம்.........
என்றபடி உள்நுழைந்தான் ரவி.

என்னத்தை சமைக்கிறது மனிசி இறைச்சி சாப்பிடுறேல்லையாம்,...... அதுதான் மரக்கறியும், மீனும் சமைச்சனான் .
தெரியும்தானே ஊரிலை விதரம் எண்டுங்கள் மாடு பண்டி சாப்பிடாதுகள்.
இஞ்சை வந்தாபிறகு கொஞ்சம் கொஞ்சமா பழக்கியெடுப்பம்.
நீயேன் பெரு மூச்சு விடுறாய்
நீயும் இஞ்சை இல்லாட்டி ஊரிலையெண்டாலும் ஒண்டை பாத்து செய்து போட்டு சமைச்சு போடன்.

சரி சரி நேரம் போட்டுது, போவம் .

பாரீஸ் விமானநிலையம் சுகியை சுமந்து வந்தவிமானம் சரியான நேரத்திற்கு தரையிறங்கியது.

அவனது ஒருவருட காத்திருப்பு தனது எதிர்காலத்தை எதிர்பார்த்து எட்டியெட்டி பார்த்தபடியிருந்தான்.

என்ன விஜி பிளேன் வந்திட்டுது எப்படியும் மனிசி வெளியிலை வந்துதானே ஆக வேணும் ஏன் அவசரபடுறாய்.

அதில்லை........ ஆ............. அந்தா வாறா.

சுகி இரண்டு பெரிய சூட்கேசுகளை வண்டிலில் வைத்து தள்ளியபடி வந்து கொண்டிருந்தாள்.

அவனிற்கும் வெள்ளை காரர்களைபோல ஓடிப்போய் கட்டியணைத்து ...........

ஆனாலும் அடக்கிகொண்டு போய் வண்டிலை வாங்கி கொண்டு

என்ன கன சாமானெல்லாம் கொண்டு வந்திருக்கிறியள்.
பயணம் எல்லாம் எப்பிடி ஒருபிரச்சனையுமில்லையோ??

இவர்தான் ரவி என்ரை சினேதன் என்னோடைதான் வேலை செய்யிறவர்.இரண்டுபேரும் சேந்துதான் வீடியோவும் எடுக்கிறனாங்கள்.

அறிமுகம் முடிந்தபின்னர் புறப்பட்டார்கள்.

புதிய மனைவி, புதியவீடு , புதியவாழ்வு, புதிய அனுபவங்கள் என இனிதாகவே அவர்கள் வாழ்வு போய்கொண்டிருந்தது.

சுகி வந்ததிலிருந்து, ஓரே தொலைபேசியும் கையும்தான்.

விஜியும் விட்டுவிட்டான்.
இப்பதானே வந்தவா ஊரிலையிருந்து வந்த புதிசிலை நானும் இப்பிடித்தான்.
ஊருக்கு ஓரே தொலைபேசி இப்ப கிழைமையிலை ஒருக்கா சிலநேரம் அதுவும் இல்லை.

சுகி, தொலைபேசியை வைத்துவிட்டு விஜியின் அருகில் வந்தாள்.

என்னப்பா இரவுக்கு என்ன சமைக்க.

புட்டு அவியும். ஒரு கறி மட்டும் வையும்.
நீர் வந்து இரண்டு கிழைமையிலை சாப்பிட்டு, சாப்பிட்டு நான் இரண்டு கிலோ கூடிட்டன்.
இனி கொஞசம் குறைக்கவேணும்.

விஜியின் தலையை கோதியபடி, அதுசரியப்பா நான் உங்களிட்டை ஒருவிசயம் கதைக்கவேணும் என்று இழுத்தாள் சுகி.

சொல்லுமன்.......... என்ன முக்கியமான விசயம்.

இல்லை, நான் சிவாவை பற்றி உங்களிற்கு ஏற்கனவே சொல்லியிருக்கிறன்.
கொழும்பிலை உங்கட ஸ்பொன்சருக்காக ஒருவருசமா நிக்கேக்கை அவன்தான் எனக்கு நல்ல உதவி...........
எம்பசிக்கு அடிக்கடி கூட்டிகொண்டு போறதிலையிருந்து
சாமான்கள் வாங்கி தாறது வரைக்கும் ஓடியோடி செய்து தாறவன்
நல்ல பெடியன் ஒருவிதத்திலை எங்களிற்கு சொந்தமும் கூட ,........ பாவம் ஒரு ஏயென்சிட்டை இங்கை வாறத்திற்கு காசு கட்டி ஏமாந்து போய் நிக்கிறான்.
அவனிற்கு வெளி நாட்டிலையும் உதவி செய்ய ஒருத்தரும் இல்லை. நீங்கள கொஞ்சம் பாத்து உதவி செய்தா நல்லது
வந்து உழைச்சு தருவான்.
உங்களிற்கும் வீடியோ வேலையளிற்கு உதவியாய் இருக்கும்.
வேணுமெண்டால் நீங்களும் ஒருக்கா அவனோடை கதையுங்கோ பாவமப்பா.
எனக்கு ஒரு தம்பிமாதிரி.

என்னப்பா, நீர் வந்ததிற்கே, வீடுமாறினது சாமான்கள் வாங்கினதெண்டு செலவு.
என்னட்டை இப்ப பெரிசா காசும் கையிலை இல்லை.
ஒருத்ரை கூப்படுறதெண்டா சும்மாவே சரியா செலவாகும்.
பாப்பம் யோசிச்சு சொல்லுறன். சரிவேலைக்கு நேரமாச்சு போட்டுவாறன்.

போகும் வழியில் சுகி சொன்னதை பற்றி யேசித்து கொண்டே போனான் எதுக்கும் உவன் ரவியிட்டை கொஞ்சம் உதவி கேட்டு பாப்பம்...........

அன்று வேலைமுடிந்து வீடு வந்தவன், உடைகளை மாற்றி கொண்டு,

சே என்ன இண்டைக்கு சரியான வேலை .
நாரிசரியா நோகுது என்று கூறிகொண்டு , ஒரு குளிசையை வாயில் போட்டு தண்ணீரை குடித்து கொண்டு வந்து கதிரையல் அமர்ந்தான் .

என்னப்பா நாரி நோகுதே, வாங்கோ விக்ஸ் போட்டு மசாச் பண்ணி விடுறன்........ உடனை மாறிவிடும்.

வந்து இதிலை படுங்கோ என்றவாறே விக்ஸ் எடுத்துகொண்டு வந்து அவனை குப்புற படுக்கவைத்து முதுகில் விக்சை தடவியவாறே,

என்னப்பா சிவாவின்ரை அலுவலைபற்றி ஏதும் யேசிச்சனீங்களே?.

ம்....ரவியிட்டைதான் கொஞ்சம் உதவி கேட்டனான். எனக்கு தெரிஞ்ச ஒரு ஏஜென்சியிட்டையும் கதைச்சனான்.
வந்தா பிறகுதான் காசாம்............ நாளைக்கு விபரம் குடுத்தா ஒரு கிழமையிலை ஆள் இஞ்சை வந்திடும்.

சுகி நன்றாக முதுகை பிடித்து மசாச் பண்ணி விட்டாள்.

ஒரு வாரத்தில் சிவாவும் வந்து சேர்ந்தான்.

விஜி அவனிற்கு விசா அலுவல் எல்லாம் பாத்து ஒரு வேலையும் பார்த்து கொடுத்து வீட்டிலேயே வைத்திருந்தான்.

அதே நேரம் கிழைமை நாட்களில் அவனிற்கு உதவியாக ரவியுடன் சிவாவையும் படப்பிடிப்புகளிற்கு அழைத்து சென்று
படப்பிடிப்பு நுணுக்கங்களை அவனிற்கு கற்று கொடுத்தான்.

இப்படியே ஒரு சில மாதங்கள் கடந்ததன.

அன்று ஒரு ஞாயிற்று கிழைமை.
விஜிக்கு ஒரு கலியாண வீட்டு படப்பிடிப்பு நாள்.
அதற்கு தாயார் படுத்தி கொண்டே ............

என்ன சிவா வெளிக்கிட்டாச்சே போவம்.

இல்லையண்ணை,
எனக்கு கொஞ்சம் உடம்பு சரியில்லாமை கிடக்கு அதுதான்........
என சிவா இழுத்தான்.

சரி , சரி பிரச்சனையில்லை.
நான் ரவியோடை போறன்.
ஏதும் தேவையெண்டா சுகியிட்டை கேளும் என்று போய்விட்டான்.

அதிகாலை ஒரு மணியளவில் படப்பிடிப்பு முடிந்து வீட்டிற்கு வந்து மெதுவாக கதவை திறந்தான்.

சுகியும் சிவாவும் நித்திரையிலிருப்பினம்,
குழப்பகூடாது என நினைத்து வழமை போல
கொண்டு வந்த சாமான்களை மெதுவாக வைத்துவிட்டு
மின் விளக்கை போட்டான்.

வரவேற்பறையில் நுழைந்து மின் விளக்கை போட்டு விட்டு
சப்பாத்தை கழற்ற போனவன்
மேசையில் இருந்த பொருளை பார்த்ததும் திடுக்கிட்டான்.

சுகியின் தாலிக் கொடியும், ஒருகடிதமும் மேசையில் இருந்தது.

அவனிற்கு தலை சுற்றுவது போல ஒரு உணர்வு.

கைகள் நடுங்க, கடிதத்தை எடுத்து படித்தான்.

விஜிக்கு,
இந்த கடிதம் உங்களிற்கு அதிர்ச்சியாக இருக்கும்.
நான் உங்களின் ஸ்பொன்சருக்காக கொழும்பில் சுமார் ஒருவருடம் காத்திருந்த வேளையில்
நான் தங்கியிருந்த விடுதியில் இருந்த சிவாவுடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது.
அதுவே காலப்போக்கில் காதலாக மாறி ,
எங்கள் உறவும் உடல்வரை ஒன்றாகிவிட்டது .
நான் இங்கு வந்ததும் கொழும்பில் நடந்த எல்லாவற்றையும் மறந்து
உங்களுடன் புதுவாழ்வு வாழலாம் என்றுதான் எண்ணினேன்.
என்னால் சிவாவை மறக்கமுடியவில்லை.
அதனால்தான் உங்கள் உதவியுடன் இங்கு சிவாவை வரவழைத்தேன்.
சிவாவும் நானும் பிரான்சை விட்டு வேறுநாடு போகிறோம்.
எங்களை தேட வேண்டாம். நாங்கள் உங்களிற்கு செய்தது துரோகம்தான்.
ஆனாலும் எனக்கு வேறுவழி தெரியவில்லை.
எங்களை மன்னித்து விடுங்கள்.

இப்படிக்கு சுகி.

விஜிக்கு தலை சுற்றி, கண்கள் இருண்டு கொண்டு வந்தது.

அப்படியே கதிரையில் சாய்ந்தான்.

யாரோ சுத்தியலால் உச்சந்தலையில் அடித்ததுபோல ஒரு உணர்வு.

சில நிமிடங்கள் அப்படியே இருந்தவன்,

சீ , இது சிலவேளை சுகியின் விழையாட்டாக இருக்கும்.
எழுந்து கடவுளே இப்படி எதுவும் நடந்திருக்ககூடாது.............
பிள்ளையாரே லூர்து மாதாவே என சில வினாடிகளில் எல்லா மதத்தின் பல ஆயிரம் தெய்வங்களை வேண்டியபடி
போய் படுக்கை அறையை திறந்தான் யாரும் இல்லை.

உடுப்பு அலமாரி திறந்திருந்தது.
சுகியின் நகைகளையும் சில உடுப்புகளையும் காண வில்லை.

சிவாவின் அறையை திறந்தான். அங்கும் யாருமில்லை.

கடவுளே என்னசெய்வேன், என்க்கேன் இப்படி?
என்ன செய்வேன் ............பொலிசுக்கு போவமா? போய்த்தான் என்ன பிரயோசனம்?
அவர்கள் விரும்பி போய் விட்டார்கள்.
விவாகரத்து கேள் என்று ஆலோசனை செல்வார்கள்.
பிறகு ஊருக்கெல்லாம் தெரிந்து பொழுது போகாதவன் வாயிலெல்லாம் என்ரை கதையாத்தான் இருக்கும்.
ரவிக்கு சொல்லலாமா ?
சொல்லி அவனால்தான் என்னசெய்யமுடியும்.

தேடிப்பிடித்து இருவரையும் ஒரே வெட்டில்...........
சே..............இப்படியே குழப்பம், கோபம், அழுகையென நித்திரையின்றி அந்த இரவு விடிந்தது.

இரவிரவாக யோசித்து ஒரு முடிவுக்கு வந்தான்.

இனி அழுதோ, ஆத்திரபட்டோ பிரயேசனமில்லை.
அடுத்ததை பாப்பம் என நினைத்து
வேலையிடத்திற்கு ஒருகிழைமை லீவுகேட்டான்.

அடுத்தாக, சிவாவை கூப்பிட ரவியிட்டை வாங்கின கடனை குடுக்க வேண்டும்.
உடனடியாக காரை விக்க ஏற்பாடு செய்தான்.

அன்று பகல் முழுதும், முதல்நாள் எடுத்த திருமண நிகழ்ச்சியை பாட்டடித்து பதிவு செய்து கையிலெடுத்தான்.

மாலையாகிவிட்டது.
திருமண கொப்பியை உரியவரிடம் சேர்த்தான்.

என்ன விஜி இவ்வளவு கெதியா கொப்பியை கொண்டு வந்திட்டியள்.

ஒமண்ணை, வேறை வேலை கனக்க இருக்கு அதுதான்.

சரி, இந்தாரும் மிச்ச காசு எண்ணிபாரும் .

தேவையில்லையண்ணை.

அவர் கொடுத்த பணத்தை பெற்று கொண்டு,
பாரீசின் புறநகர் பகுதியில் கார் விற்கும் ஒரு சந்தைக்கு வந்து,
காரிற்கு மலிவாக ஒரு விலையை காரின் மீது எழுதி ஒட்டி விட்டு காத்திருக்க,
சில நிமிட நேரத்தில் ஒருவரின் காசோலையும்
விஜியின் காரும் சில கையொப்பங்களுடன் கைமாறியது.

காரில் இருந்த சில பொருட்களை, ஒரு பையில் எடுத்துக் கொண்டு நடந்தான்.

எல்லாம் நல்லபடியா முடிஞ்சுது.

கைத் தெலைபேசியில் ரவியின் இலக்கத்தை அழுத்தினான்.

கலோ......ரவி நான்விஜி.
உன்ரை பாங் எக்கவுண்ட் நம்பரை சொல்லு,
உன்ரை காசை போட்டு விடுறன்.

என்னடா விஜி வேலைக்கும் வரேல்லை.
முதலாளி சென்னான் ஒருகிழமை லீவாம் எண்டு........
இப்ப என்னடா எண்டா...........
என்ரை காசு போடுறனெண்டுறாய் .
ஏதும் லொட்டோ விழுந்ததோ இல்லை?
குதிரை பந்தயம் ஏதும் விழையாடினனியோ?.

டேய் பகிடியை விடடிட்டு, நம்பரை சொல்லு.

ரவியின் வங்கி இலக்கத்தை வாங்கி ,
அதில் அவனிற்குரிய பணத்தை சேர்த்துவிட்டு,
கடையில் போய் ஒருபோத்தல் விஸ்கியும்
காலையிலிருந்து சாப்பிடாததால் ,
ஒரு சாண்விச்சை வாங்கி சாப்பிட்டபடி வீடுவந்து சேர்ந்தான்.

சாண்விச் சாப்பிட்டது வயிற்றிற்கு கொஞ்சம் நல்லாயிருந்தது.

ஆனால் மனதிற்கு அவன் உற்று பார்த்து கொண்டிருந்த படம்...............

அவர்களது திருமணப்படம்...............
பெரிதாக்கி வரவேற்பறையில் மாட்டியிருந்தான்.

பழைய நினைவுகளில் இருந்து மீண்டவன்.

அதுதான் எல்லாம் முடிஞ்சு போச்சுதே.

அதிலிருந்துபார்வையை விலக்கி,
மீண்டுமொரு முறை சுகியின் கடிதத்தை படித்தான்.
ஒரு தடைவையல்ல
பல தடவைகள் இன்னும் அவனால்
நடந்தவைகளை நம்பமுடியவில்லை.

விஸ்கி பாதி போத்தலுக்கு மேல் குடித்துவிட்டான்.

போதையேறி தலை கிறுகிறுத்தது.

எல்லாரும் சொல்வார்களே எதையாவது மறக்க குடிப்பதாக
ஆனால் எனக்கு சுகியின் நினைவுகளே திரும்ப திரும்ப வருகிறதே
எதுவும் மறக்கவில்லையே ..............

அப்ப மற்றவர்கள் சொல்வது பொய்யா?

வரும் போது காரிலிருந்து எடுத்துவந்த பையிலிருந்து நைலோன் கயிற்றை எடுத்து
வரவேற்பறையின் மின்விளக்கு தொங்கிய கம்பியில் கட்டி
மறுமுனையை நன்றாக இழுத்துபார்த்தான்.

எனது எழுபத்தைந்து கிலோ எடையை இது தாங்குமா
இன்னெரு முறை இழுத்துபார்த்தவன்,
திருப்தியுடன் போய் தனது வீடியோ கமறாவை இயங்க விட்டான்.

வந்து சுகி வைத்து விட்டு போன தாலியை கையிலெடுத்து பார்த்தான்.

இந்து பெண்கள் சுமங்கலியாக தாலியுடன்தான் சாக விரும்புவார்களாமே,
சரி பெண்களுக்கு மட்டுமா தாலியை தனது கழுத்தில்போட்டு
கண்ணாடியில் ஒரு முறை பார்த்தான்.

இதோ நான் சுமங்கலனாக சாக போகிறேன்.

ஒரு கதிரையை எடுத்து வந்து,
கயிற்றிற்கு நேராக வைத்துவிட்டு
அதில் ஏற போனவன், கிளாசில் இன்னும் கொஞ்சம் விஸ்கி மிச்சமிருந்ததை பார்த்து விட்டு
அதனையும் ஒரு மடக்கில் குடித்து விட்டு,
கதிரையில் ஏறினான்.

கேழைகள், வாழ தெரியாதவர்கள்தான் தற்கொலை செய்வார்களாமே?........
இல்லை என்னை பொறுத்தவரை தற்கொலைக்குதான் அதிக தைரியம் வேண்டும்.

இனி சுகியை மறந்தோ
அல்லது அவள் செய்தவற்றை நினைத்துகொண்டோ
இநத சமூதாயத்தின் கேள்விகளிற்கு பதில் சொல்லி கொண்டும் என்னால் வாழ இயலாது.

எனது இந்த மரணம் நாளை செய்திகளில் வரும்

அதை எப்படியும் சுகியும் கேள்விப்படுவாள்.

அப்போது ஒரு துளி கண்ணீர் எனக்காக விட்டால்.........
அதுவே எனக்கு போதும்.

கயிற்றை கழுத்தில் மாட்டி விட்டு,
கதிரையை கலால் தட்டிவிட்டான்.
அவனது அடங்கும் துடிப்பை வீடியோ கமறா பதிவு செய்து கொண்டிருந்தது ............................

.அஜீவனின் உதவியுடன் இக்கதை மறு சீரமைக்க பட்டுள்ளது
; ;
Reply
#2
Cry
; ;
Reply
#3
º¢Â¡õ.. À¡Åõ «ó¾ Å¢ƒ¢.. ¯ñ¨Á¢ø §ÁüÌĸ ¿¡Î¸Ç¢ø ¯ûÇ ±ÁÐ ¼Á¢Æ÷¸Ç¢ý ¦Ä¡ûÙìÌ «Ç§Å þøÄ¡Áø §À¡ö¦¸¡ñÎ þÕ츢Ⱦ¡¸ ±ÉÐ ÒÖÉ¡.. ¯ôÀÊ §Â÷Áɢ¢ø «Êì¸Ê ¿¨¼¦ÀÚž¡¸ §¸ûÅ¢ Àð§¼ý.. :evil:
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
Reply
#4
இந்த உண்மைச்சம்பவத்தை நான் ஏற்கனவே அறிந்திருக்கிறேன்.
சம்பவத்தை கதையாக அருமையாக எழுதியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்....
பந்தி பந்தியாக எழுதியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
வாசிப்பதற்கு ஆர்வத்தினையும் ஏற்படுத்தும்.
Reply
#5
நன்றிகள் டக்லஸ் மற்றும்சணமுகியக்கா .சண்முகியக்கா உங்கள் ஆலோசனைக்கு நன்றி இதுதான் இணையத்தில் எனது முதல் கதை எழுதியபின் என்னாலேயே வாசிக்க முடியாமல் போய்விட்டது உங்கள் ஆலோசனையின் பின் கொஞ்சம் மாற்றியமைத்திருக்கிறேன் இப்ப ஓரளவு பரவாயில்லை யென நினைக்கிறேன் இனிவரும்காலங்களில் இலகுவில் படிக்ககூடியமுறையில் தருகிறேன் 8)
; ;
Reply
#6
<!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Reply
#7
Cry Cry உண்மைச்சம்பவமா..?? றொம்ப மோசமாய் இருக்கு.. பாவம் விஜி.
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#8
Cry Cry
Reply
#9
உண்மைச் சம்பவத்தின் முடிவு எனக்கு தெரியாது...ஏன் சியாம் விஜியை கோழைதனமான முடிவை எடுக்கவிட்டீர்கள்...இதில் விஜியின் காதலா? சுகியின் காதலா? உண்மையானது என கூறமுடியாது....ஆனாலும் ஒரு ஆணை ஏமாத்திதான் தன்னுடைய காதலை நிறைவேற்ற வேண்டும் என்ற சுகியின் முடிவு முற்றிலும் தவறானது..........
...............
Reply
#10
சியாம் நீங்கள் கதையை தந்த விதம் சம்பவத்தை நேரில் பார்ப்பது போலிருந்தது. இப்படி பல சம்பவங்கள் இப்போதும் நடந்த வண்ணமேயிருக்கின்றது.

Cry Cry Cry Cry
Reply
#11
thivakar Wrote:உண்மைச் சம்பவத்தின் முடிவு எனக்கு தெரியாது...ஏன் சியாம் விஜியை கோழைதனமான முடிவை எடுக்கவிட்டீர்கள்...இதில் விஜியின் காதலா? சுகியின் காதலா? உண்மையானது என கூறமுடியாது....ஆனாலும் ஒரு ஆணை ஏமாத்திதான் தன்னுடைய காதலை நிறைவேற்ற வேண்டும் என்ற சுகியின் முடிவு முற்றிலும் தவறானது..........

இதில் எங்கே காதல் இருக்கின்றது. காமம் தானிருக்கின்றது.

:roll: :roll: :roll: :roll:
Reply
#12
கணணியில் கன்னிக் கதையை உண்மைக் கதையாச் சொல்லி இருக்கிறியள்...வாழ்த்துக்கள்.. சண்முகி அக்கா சொன்னதுகளையும் எழுத்துப் பிழைகளையும் எதிர்காலத்தில் கவனியுங்க...!

சுகி எனும் இக்கதையின் பெண் கதாப்பாத்திரம்... பெண்ணல்ல... சுயநலப் பிசாசு.... ஒரு ஆணின் வாழ்வை அல்ல இரண்டு ஆண்களின் வாழ்வைக் கெடுத்து அவர்களிடம் நயவஞ்சகமாக நடந்து தன் காமக்களியாட்டத்துக்கு தீனி தேடிக் கொண்ட காமப் பிசாசு... இவள் பெண்ணின் சமூக இழிநிலையான விபச்சாரி என்ற நிலைக்கு ஒப்பானவள்...! அது சமூகத்துக்கு அவசியமில்லாத ஒன்று.. பூண்டோடு ஒழிக்கப்பட வேண்டியது...!

ஒரு விபச்சாரிக்காக ஒரு ஆணின் மரணம் என்பது அர்த்தமற்றது.... கதையை வேறு விதமாக அவன் அவளைப் பழிவாங்குவதாக இல்லாமல் அவளைச் சமூகத்துக்குத் தோலுரித்துக் காட்டும் ஒரு ஆணாக ஒரு சமூக விழிப்புணர்வுவாதியாக மாற்றியதாக முடித்திருக்கலாம்..அல்லது ஒரு குறும்பட தயாரிப்பளானாக காட்டி அவளையும் அவள் போன்ற பெண்களையும் சமூகத்துக்கு வெளிப்படுத்த முனையும் ஒரு படைப்பாளியாகக் காட்டி முடித்திருக்கலாம்...அல்லது இப்படியான பெண்கள் தொடர்பில் சமூகத்தை எச்சரிப்பவனாக...பல விதங்களில் காட்டி இருக்கலாம்...!

அதைவிடுத்து ஒரு விபச்சாரியுடன் அறியாமல் வாழ்ந்ததற்காய் சமூகத்திற்கு பயந்து ஒரு ஆண் சுருக்குக் கயிறிற்கு வாழ்வு கொடுத்ததாகக் காட்டியது... சமூகத்துள் இவளைப் போல பெண்கள் இருந்தால் அவர்களுக்கு ஒரு உற்சாகத்தை அளிப்பதாகவே இருக்கும்... அது உண்மைகள் உறங்கவும் போலிகளும் பொய்களும் நடமாடவுமே உற்சாகம் அளிக்கும்...! Idea Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#13
கதை நல்லாயிருக்கு சியாம் அண்ணா. அநேகமாய் சோகமான கதைகள் மனதிற்குப் பிடிக்கும் தான். என்றாலும் கதைக்கரு உண்மையானது என்பதை அறியும்போது மனது வலிக்கிறது. <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
--
--
Reply
#14
thivakar Wrote:
Quote:உண்மைச் சம்பவத்தின் முடிவு எனக்கு தெரியாது...ஏன் சியாம் விஜியை கோழைதனமான முடிவை எடுக்கவிட்டீர்கள்...இதில் விஜியின் காதலா? சுகியின் காதலா? உண்மையானது என கூறமுடியாது....ஆனாலும் ஒரு ஆணை ஏமாத்திதான் தன்னுடைய காதலை நிறைவேற்ற வேண்டும் என்ற சுகியின் முடிவு முற்றிலும் தவறானது....
......
அது நான் எடுத்த முடிவல்ல விஜி எடுத்த முடிவு நான் சம்பவம்நடந்த நாட்டையும் பாத்திரங்களின் பெயரையும்தான் மாற்றியிருக்கிறேன்
; ;
Reply
#15
Thusi Wrote:கதை நல்லாயிருக்கு சியாம் அண்ணா. அநேகமாய் சோகமான கதைகள் மனதிற்குப் பிடிக்கும் தான். என்றாலும் கதைக்கரு உண்மையானது என்பதை அறியும்போது மனது வலிக்கிறது.(

தம்பி நானும் உன்ரை கற்பனைக் கதை எண்டுதான் வாசிச்சன்..ஆன உண்மையிலை நடந்தது என்னும் போது சத்தியமாத் தம்பி மனசுக்கு கவலையாக் கிடக்கு.....இதுக்கு ஒரு அரைபோத்தில் அடிச்சாத்தான் சரி..

நல்லா எழுதியிருக்கிறாயப்பு வாழ்த்துக்கள்.......
Reply
#16
shiyam Wrote:
thivakar Wrote:
Quote:உண்மைச் சம்பவத்தின் முடிவு எனக்கு தெரியாது...ஏன் சியாம் விஜியை கோழைதனமான முடிவை எடுக்கவிட்டீர்கள்...இதில் விஜியின் காதலா? சுகியின் காதலா? உண்மையானது என கூறமுடியாது....ஆனாலும் ஒரு ஆணை ஏமாத்திதான் தன்னுடைய காதலை நிறைவேற்ற வேண்டும் என்ற சுகியின் முடிவு முற்றிலும் தவறானது....
......
அது நான் எடுத்த முடிவல்ல விஜி எடுத்த முடிவு நான் சம்பவம்நடந்த நாட்டையும் பாத்திரங்களின் பெயரையும்தான் மாற்றியிருக்கிறேன்

அதையேன் கதையிலும் தொடர்ந்தீர்கள்... ஆண்கள் என்ன பெண்கள் என்ன வஞ்சகர்களின் வலையில் தெரியாமல் சிக்கிக் கொண்டால் அதற்கு மரணம் அல்லத் தீர்வு...எதிர்பார்த்தது கிடைக்காமல் விட்டால் மரணம் அல்லத் தீர்வு.. கிடைக்காததை மறந்து கிடைப்பதைக் கொண்டு வாழ்வை மகிழ்வாக்கி வாழ வேண்டியதுதான் அவசியம்...!

எதிர்பாராமல் சமூகக் கொடிய அனுபவங்களை சந்திப்பவர்கள்...அல்லது வலிந்து கொடுமைகளைச் சந்திக்க முனையும் இளையவர்கள்...தங்கள் கொடிய அனுபவங்களை போல் அனுபவங்கள் மற்றவர்களையும் பாதிக்காதிருக்க சமூகத்தை வழிகாட்டுபவர்களாக இருப்பதே அவர்களை சிந்தனையுள்ள மனிதனாகக் அடையாளம் காட்டும்....எதிர்பாராமல் சந்திக்கும் கொடுமைகளுக்காக மரணத்தால் தன் வாழ்வை பாதியில் முடிப்பவன் போராடத் திராணியற்ற கோழை...அவன் மனிதனோ அல்ல....ஜிவராசியோ அல்ல...!

எறும்பைக் கூட அடிக்க முனைந்தால் எதிர்த்துப் போராடும்...<b>உயிரிக்கு மரணம் இயற்கையானது...அதைத் தடுக்க முடியாது எனும் போது அதை ஏன் வலிந்து அழைக்க வேண்டும்... மரணம் உறுதி என்று தெரிந்தும் பிறப்பு என்பது ஏன் அமைக்கிறது...??! இயற்கையாய் அது வரும் வரை வாழ்வை வாழத்தானே ஒழிய..இடை நடுவில அழிக்கவல்ல...! </b>

மனிதன் உருவாக்கிய சொந்தங்களும் பந்தங்களும் சொத்துகளும் சுகங்களுமே வாழ்வல்ல.. இயற்கை எமக்களித்ததை பாவித்தே எமது வாழ்வை வாழ்ந்து முடிக்கலாம்... மற்றைய உயிரினங்கள் போல...! மனிதன் படைத்தது கிடைக்காது எனும் போது வாழ்வை முடிப்பதல்ல... இயற்கை எழுதிய தீர்ப்பு....!

இதைச் சமூகத்துக்குச் சொல்லுங்கள்... தற்கொலை என்பதைக் காட்டி மனிதனை மற்றைய உயிரினங்களை விடக் கோழையாக்கி அவனிடம் இயற்கையாக உள்ள போராடும் ஆற்றலை மழுங்கடிக்காதீர்கள்..குறிப்பாக எழுத்தாளர்களும் பத்திரிகையாளர்களும் இதைக் கருத்தில் கொள்ள வேண்டும்...! Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#17
தேவையான எத்தனையோ உண்மைகளை மறைத்து பொய் முகத்தைக் காட்டும் மனிதன் சமூகமாக இன்றுள்ள நிலையில் இந்தக் கதையை இப்படி முடித்திருக்கலாம்...

சுருக்குக் கயிறுவரை வந்தவன்....அந்தக் கணத்தில் சிந்திக்க முனைகிறான்... அவனுக்கு உதவ ஆதரவளிக்க சமூகமாக உள்ள மனித உறவுகள் இன்னும் இருப்பதை உணர்கிறான்..அவன் தனித்துவிடவில்லை எனும் நிலையை உணர்கிறான்...அதன்பால் அவன் தனது முடிவை மாற்றுவதாக... பயனுள்ளதாகக் கூட முடித்து உண்மைச் சம்பவத்துக்கு சுருக்குக் கயிறின் மூலம் ஒரு அடையாளமும் இட்டு அதேவேளை ஒரு சிந்திக்கத் தூண்டும் முடிவை கதையில் தந்திருந்தால் உண்மைக் கதையை சமூகத்துக்குத் தருவதால் வரும் விழிப்புணர்வின் அளவை அதிகரிக்கச் செய்திருக்கலாம்...! எது எப்படியோ உங்கள் கதை வெறும் கதையல்ல... மூடி வைக்காமல்... பலரும் அறிய வேண்டிய உண்மையை அறியத் தந்தமைக்கு மீண்டும் பாராட்டுக்கள் பல...! :wink: Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#18
நான் கதையை சுமுகமாக மாற்றி முடித்திருந்தால் உங்கள் போன்றவர்களின் ஆலோசனைகளும் இனி வரும்காலங்களில் இப்படியொரு முடிவை எடுக்துணிபவர்களிற்குதன்நம்பிக்கை தர இந்த சமூகத்தில் பலபேர் இருக்கிறார்கள் என்கிற உண்மையும் பலநூறு பேர்பார்க்கிற இந்த களத்தினூடாக போய் சேராதே? ஏனெனில் இப்படியான முடிவெடுப்பவர்கள்80 வீதம்பேர் சமூதாயத்திற்கு அஞ்சி வெட்கபட்டே இப்படியான முடிவை எடுக்கிறனர் என்பதே உண்மை
; ;
Reply
#19
ரொம்பக்கொடுமை
Reply
#20
shobana Wrote:
Quote:ரொம்பக்கொடுமை
எது எனது எழுத்தா?? <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
; ;
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)