Yarl Forum
நாய்களுக்கு வழங்கப்படும் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: நாய்களுக்கு வழங்கப்படும் (/showthread.php?tid=4639)



நாய்களுக்கு வழங்கப்படும் - eelapirean - 03-29-2005

நாய்களுக்கு வழங்கப்படும் தகரத்திலடைக்கப்பட்ட உணவுää திருகோணமலை நகரில் கடல்கோளினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விநியோகிக்கப்பட்டிருப்பதை மாகாணச் சுகாதாரத் திணைக்கள அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். இதே ரக டின் உணவுää நாட்டின் தென்பகுதியில் கடல்கோளினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கும் வழங்கப்பட்டது கடந்த வாரம் கண்டுபிடிக்கப்பட்டு அம்பலப்படுத்தப்பட்டது. இப்போது திருகோணமலை நகரிலும் சுற்றுப்புறங்களிலும் இவ்வுணவு வகைகள் விநியோகிக்கப்பட்டு வருவதாகää சுகாதாரத் திணைக்கள அதிகாரி ஒருவர் தெரிவித்தார். வீட்டுப் பிராணிகளுக்குக் கொடுக்கும் ரின் உணவை பாவிப்பது மனிதனின் உடல்நலத்தைப் பாதிக்கும் என்று சகாதார அதிகாரிகள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
நன்றி நிதர்சனம்


- tamilini - 03-29-2005

Confusedhock: Confusedhock: அடப்பாவிகளா..??? :twisted: :evil:


- shiyam - 03-29-2005

இலங்கையரசிற்கு மக்கள் நாய்கள் தானே இதில் கவலைப்பட என்ன இருக்கு


- Nilavan - 03-29-2005

சரியாத்தான் செய்திருக்கிறாங்கள்..
எங்கட சனம் கொஞ்சம்(என்ன புரியுதோ உவன் டக்கிளசு. முரளி. சங்கரி.சித்தார்தர்.வரதர்) நாய் மாதிரி அவனிட்ட போய் வாலாட்டி நிக்கினம் தானே அதான் அவன் அவையளை மாதிரி எல்லாரையும் நினைச்சிட்டான்
நிலவன்


- eelapirean - 03-29-2005

பிழை பிடிக்கிற வெளி நாட்டு குழுக்கள் இவை பற்றி ஒன்றும் கண்டு கொள்வதில்லையோ? :evil: :evil: :evil:


- வியாசன் - 03-29-2005

வெளிநாட்டுக்காரர் புலிகள் செய்கிறதை பிழைபிடிக்க பூதக்கண்ணாடியுடன் திரிவினம் அரசு செய்யிறதை கண்டுகொள்ளாயினம்
:oops: :oops: :oops:


- kuruvikal - 03-29-2005

இவற்றை சிறீலங்காவுக்கு வழங்கியது யார்..சிறீலங்காவில் பெற் பூட் என்று தனிய விற்பனையாவதில்லையே...நாம் அங்கிருக்கும் காலம் வரை....???! :twisted: Idea


- jeya - 03-30-2005

Confusedhock: காணிப்பு குழு என்ன சொல்லப்போது???????????


- Vasampu - 03-30-2005

நிச்சயமாக இந்த உணவை ஏதோ ஒரு வெளிநாடு தானே வழங்கியிருக்க வேண்டும். ஐரோப்பிய நாடாகவிருந்தால் நிச்சயமாக பாசத்தால் தான் வழங்கியிருப்பார்கள். ஏனெனில் அவர்களுக்கு மனிசரை விட நாய்களில் தானே பாசம் அதிகம்.
:roll: :?: :roll: :?:


- MUGATHTHAR - 03-30-2005

shiyam Wrote:இலங்கையரசிற்கு மக்கள் நாய்கள் தானே இதில் கவலைப்பட என்ன இருக்கு

தம்பி பிழைவிட்டுட்டாய் இலங்கை மக்களிலும் தமிழ் மக்களைதான் நாய்கள் போல நினைக்கினம்....நாய்களிலிலும் பல சாதி இருகெண்டு அவைக்கு தெரியேலை....வேட்டைநாய்கள்களுக்கு கோவம் வந்தா என்ன நடக்கும் தெரியும்தானே.....


- மகேசன் - 03-30-2005

நாய் சாப்பாட்டை சாப்பிட்டு விட்டாவது தமிழர்கள் தங்களுக்கு வால் ஆட்டுவார்கள் என்று நிநைத்து இருப்பார்கள்