![]() |
|
பூவரசம் வேலியும் புலுனிக் குஞ்சுகளும் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4) +--- Forum: நூற்றோட்டம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=23) +--- Thread: பூவரசம் வேலியும் புலுனிக் குஞ்சுகளும் (/showthread.php?tid=4643) |
பூவரசம் வேலியும் புலுனிக் குஞ்சுகளும் - kirubans - 03-29-2005 கவிஞர் புதுவை இரத்தினதுரையின் "பூவரசம் வேலியும் புலுனிக் குஞ்சுகளும்" இலண்டனில் வெளியிடப்பட்டது. போராட்ட வரலாற்றையும், போராட்ட வாழ்பனுவங்களையும் கவிதை வடிவில் தந்துள்ளார். எல்லோரும் படிக்க வேண்டிய கவிதை நூல். கவிதைகளில் ஒன்று <b>வேண்டும் வரமொன்று</b> முகிலிறங்கிக் தவழும் முலையென கிடக்கிறது மலை. பனிவிழுந்த பச்சை இலைகளின்மேல் வெளிச்சம் தூவுறான் வெய்யோன். காலுக்கடியில் கலகலத்தவாறு ஓடுறது நீரோடை. குமரியழகோடு கிடக்கும் மரங்கள்தழுவி போகும் வழியில் ஈர இதழ்கொண்டு என்னையும் உரசி மன்மததேசம் போகிறது மலைக்காற்று. என்னூருக்கில்லாத எழில்கொண்டு இலங்கிறது இவ்வூர். "காணக் கோடிவிழி காணாது" என இங்கொருநாள் வாழ்ந்தவனே எழுதியிருப்பான். இத்தனை அழகும் எனக்குமுரியதென எத்தனை கவிதை எழுதியிருப்பேன். பொய்யாகி பொசுக்கென தீயெரித்துப்போனது அக்கவிதையை. வாழ்வின் இறுதியிலாயினும் இங்கு வாழ்ந்திறக்க அவாவுற்றேன். என்கனவில் கல்லெறிந்து கலைத்தனர் பாவியர். மீண்டுமொருமுறை பார்க்கக் கிடைத்ததே போதுமெனக்கு. இனி என்னூரின் நாயுருவிப் பற்றையிடையே, இலந்தை மரத்தின் சிறுநிழலின் கீழே படுத்தபடி உயிர்நீக்கும் பாக்கியம் தா. நேற்றென் பூட்டனையும், பாட்டனையும், நாளை எந்தையையும் எரிக்கும் சுடலையில் நானும் எரியும் வரம்வேண்டும். தருவாயா இறைவா? - shobana - 03-29-2005 வணக்கம் இதன் விலை எங்கு பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிப்பீர்களா??? - hari - 03-29-2005 இங்கு பெற்றுக்கொள்ளலாம் என நினைக்கின்றேன் http://www.eelamweb.com/shop/ - Nilavan - 03-29-2005 பொறுத்திருங்கள் கனடாவில் வெளியிட்ட பிறகு சொல்லுறன்.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> நிலவன் - kirubans - 03-29-2005 shobana Wrote:வணக்கம் இதன் விலை எங்கு பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிப்பீர்களா??? இங்கிலாந்தில் 10 பவுண்டுகள்தான். கடைகளில் விற்பனைக்கு வைப்பார்கள் என்று நம்புகிறேன். ரூட்டிங் அம்மன் கோவிலில் கட்டாயம் இருக்கும். மற்றைய நாடுகளைப் பற்றித் தெரியவில்லை. விரைவில் http://www.eelamstore.com/ இல் விற்பனைக்கு வரலாம். தேசியக்கவிஞரின் நூல் வெளியீடு; - சிலந்தி - 03-31-2005 சிவயோகம் மன்றத்தில் கவிஞர் புதுவை இரத்தினதுரை அவர்களின் " பூவரசுவேலியும் புழுனிக்குஞ்சுகளும்...கவிதைத்தொகுதி அண்மையில் வெளியிடப்பட்டது. மிகச்சிறப்பான நிகழ்வாக அமைந்தது; வெளியீட்டுரை நிகழ்த்தவிருந்த ஊடகவியலாளர் திருபொ.ஐங்கரநேசன் அவர்கள் கொழும்பிலிருந்து வருவதில் தவிர்க்கமுடியாத காரணம் ஏற்பட்டதாக தெரியப்பட்டது; எழுத்தாளர்.புதுசு திரு அ.இரவி அவர்கள் வெளியீட்டுரை நிகழ்த்தினார். நாடகஆசான்.பிரபல ஊடகவிளலாளர் ஐபிசி தந்தை என அன்பாக அழைக்கப்படும் திரு.ஏ.சிதாசீசியஸ் அவர்களும் சமூகமளிக்கவில்லை..;; எனவும் அறியப்படுகிறது; தேசியக்கவிஞரின் கவிதைத்தொகுதி வெளியீடு மகச்சிறப்பாக இடம்பெற்றது. அனைத்து தமிழர்களும் தரிசிக்க வேண்டிய ஒரு சுகமான அனுவத்தோப்பு என்றே சொல்லத்தோன்றுகிறது. - gururaja - 03-31-2005 வணக்கம் சிலந்தியாரே!. தகவலுக்கு நன்றி லண்டனில் வெளியிடப்பட்ட 'பூவரசம் வேலியும் புலுனிக் குஞ்சுகளும்" நூல் வெளியீட்டு நிகழ்வின் படத்தொகுப்பு தமிழ்நாதம்.கொம் ல் உள்ளது.பார்க்கலாம்.வணக்கம் - kasthori - 03-31-2005 தேசியக் கவிஞன்????????????????????????????????? |