Welcome, Guest
You have to register before you can post on our site.

Username
  

Password
  





Search Forums

(Advanced Search)

Forum Statistics
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244

Full Statistics

Online Users
There are currently 626 online users.
» 0 Member(s) | 622 Guest(s)
Applebot, Baidu, Bing, Google

Latest Threads
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,454
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,290
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,650
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,313
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,682
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,267
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,548
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,762
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,058
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,256

 
  கடற்படைப்படகு மீது புலிகள் தாக்குதல்!
Posted by: thamilvanan - 04-05-2005, 05:21 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (18)

<b>புலிகளின் பகுதிக்குள் ஊடுருவித்தாக்கிய கடற்படைப்படகு மீது புலிகள் தாக்குதல்! </b>ஜ திருமலை நிருபர் ஸ ஜ செவ்வாய்க்கிழமைää 05 ஏப்பிரல் 2005ää 20:34 ஈழம் ஸ

விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள திருகோணமலை உப்பாறு பிரதேசத்தில் விடுதலைப்புலிகளின் முகாமுக்கு 200 மீற்றர் தொலைவு வரை நுழைந்த சிறீலங்கா கடற்படைப் படகு மீது விடுதலைப்புலிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து விடுதலைப்புலிகளின் திருகோணமலை அரசியல் துறைப்பொறுப்பாளர் எழிலன் போர்நிறுத்த கண்காணிப்புக்குழுவிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

தமது முறைப்பாடு குறித்து எழிலன் தெரிவிக்கையில்

'இன்று முற்பகல் திருகோணமலை துறைமுகப் பகுதியிலிருந்து சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்ட சிறீலங்கா கடற்படைப் படகு ஒன்று உப்பாறுப்பகுதிக்குள் நுழைந்தது.

'அப்போது கடலில் பலத்த சத்தம் ஒன்று கேட்டது. அப்பகுதி முகாமிலிருந்த போராளிகள் என்ன நடந்தது என்பதை பார்ப்பதற்கு கடற்கரைக்கு வந்தனர்.

'அங்கு சிறீலங்கா கடற்படைப் படகை அவர்கள் கண்டனர். போராளிகளைக்கண்ட கடற்படையினர் தமது படகை கரையை நோக்கிச் செலுத்தினர். இதனையடுத்து போராளிகள் தமது முகாமை நோக்கி ஓடினர். அவ்வேளை போராளிகளை நோக்கி கடற்படையினர் துப்பாக்கிச்;சூடு நடத்தினர்.

'முகாமுக்கு வந்த போராளிகள் கடற்படைப்படகு கரையிலிருந்து சுமார் 200 மீற்றர் தூரத்துக்குள் வந்து தம்மீது தாக்குதல் நடத்திய கடற்படைப்படகு மீது துப்பாக்கிப்பிரயோகம் செய்தனர்.

இதனையடுத்து கடற்படைப்படகு திரும்பிச்;சென்றது. விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதிக்குள் - கரையிலிருந்து சுமார் 200 மீற்றருக்குள் - இந் நடவடிக்கையானது போர்நிறுத்த மீறல் சம்பவமாகும்.

இச்;சம்பவம் தொடர்பாக போர்நிறுத்த கண்காணிப்புக்குழுவிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது"- என்றார்.

இதேவேளை இத்தாக்குதலில் தமது படகு சேதமடைந்ததாகவும் இதில் கடற்கண்காணிப்பாளர் ஒருவர் வந்ததாகவும் சிறீலங்கா கடற்படையினர தெரிவிக்கின்றனர்.

கடற்படைப்படகு அத்துமீறி நுழைந்து துப்பாக்கிப்பிரயோகம் செய்த போர்நிறுத்த மீறலின் போதுதான் போராளிகள் சுட்டனர் என்றார்.


நன்றி
புதினம்.

Print this item

  சாதாரணதரப் பரீட்சை முடிவுகள் நாளை
Posted by: hari - 04-05-2005, 05:06 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (16)

2004 சாதாரணதரப் பரீட்சை முடிவுகள் நாளை (06/04/2005) வெளியிடப்படும் என்று பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது!

இணையத்தில் பரீட்சை முடிவுகளை அறிய http://www.doenets.lk/

2004 O/L results will be released on 6th Wednesday,April 2005

W.A.M.Wijayasiri,
Commissioner General Of Examinations

Print this item

  மனிதரைப் போல சிரிக்கும் விலங்குகள்...?!
Posted by: kuruvikal - 04-05-2005, 11:36 AM - Forum: விஞ்ஞானம் - தொழில்நுட்பம் - Replies (4)

<img src='http://newsimg.bbc.co.uk/media/images/40985000/jpg/_40985779_dog_bbc_203.jpg' border='0' alt='user posted image'>

இவ்வளவு காலமும் மனிதனுக்கு மட்டுமே தனித்துவம் என்று எண்ணப்பட்டிருந்த சிரிப்பு எனும் பழக்கம்... விலங்குகளினுள் கூட வெவ்வேறு வடிவங்களில் வெளிப்படுவதாக அமெரிக்க நரம்பியல் நிபுணர்கள் சிம்பன்சி நாய் மற்றும் எலிகளில் மேற்கொண்ட ஆய்வு மூலம் கண்டறிந்துள்ளனர்...!

குறிப்பாக நாய்கள் சிம்பன்சிகள் எலிகள் தமக்குள் தாமே விளையாடும் போது மனிதன் சிரிப்பை பிரதியீடு பண்ணக் கூடிய ஒலியை எழுப்புவதோடு... மனித மூளையில் சிரிப்புக்கு இடமளிக்கும் மூளைப்பகுதிகள் விலங்குகளின் மூளையிலும் அவதானிக்கப்பட்டுள்ளன..! அதுமட்டுமன்றி அவை மனித சிரிப்புச் செயன்முறையின் போது ஏற்படும் மூளை இரசாயன மாற்றத்துக்கு ஒத்த மாற்றத்தைக் காண்பிப்பனவாகவும் இருக்கின்றன...!

இதன் மூலம் விலங்குகளுக்கும் தனித்துவமான முறையில் சிரிக்கும் இயல்புகள் அமைந்திருக்கலாம் என்பது உணரப்பட்டுள்ளது...!


தகவல் : http://kuruvikal.blogspot.com/

Print this item

  வெள்;ளைக்காரத் தமிழர்!
Posted by: thambythasan - 04-05-2005, 04:45 AM - Forum: கவிதை/பாடல் - Replies (13)

வெள்;ளைக்காரத் தமிழர்!

இடைகளின்
பகுதிகளில்
இலக்கணம் பேசும்
என் தேசத்து
ஆண் மக்களின்
அறியாமையும்

தம்
பெண்மையின்
விடுதலைக்கு
விலைபேசும்
மாந்தர்களின்
மேற்கத்தைய
மோகத்தையும்

ஒன்றாக்கி

சுதந்திரம்
என்று
எல்லை மீறும்
பண்பாட்டின்
கருவறைகளை
சிதைத்திடுவோர்

டிஸ்கோ என்கின்ற
காமக் களியாட்டத்துக்கு
சுதந்திரம் என்கின்ற
வழிதனை
தம்
குறுக்கு பாதைக்கு
பயன்படுத்துகிறார்!

பெண்ணின் மேனியை
நிகழ்வின் வரவேற்புரையாய்
அலங்கரிக்கும்
இவர்கள்
தம் சோற்று வண்டியை
ஒரு போதேனும்
அவித்துவிடார்!
கவர்ச்சிக்கும்
கருவுக்கும்
மட்டுமே பெண்
அவை
கலைக்கப்படுவதற்காகவே
கருவடைகின்றன
இங்கே போலும்!

வெள்ளைத்தோல்
மேனியின்
தோற்றம் .. கவர்ச்சியின்
வரவு..இதற்காகவேனும்
இவர்கள் முன்னேறிவிட்டதாய்
தம்பட்டம் அடிக்கலாம்!

காட்டக்கூடாததை காட்டிப்
பிளைப்போரை
பின்னர்
நடன விருந்தில்
குடித்து கும்மாளம் போட்டு
வரும் பெண்களை
புன்சிரிப்பில் மயக்கி
தமிழ் வளர்ப்பார்!

பின்னாள் நண்பர்களோடு
அவள் அங்கங்களை
ஒரு பட்டியலில்
போட்டு அங்கலாய்ப்பார்.
புதிய நூற்றாண்டின்
தமிழர் தம் பண்பாடு
காக்கும்
எங்கள் அன்புத் தம்பிமார்!

ஆனால் திருமணம்
என்றதும்
குடும்பப் பெண்ணாய்
ஊரு விட்டுப்போய்
தேடியலைவார்.
இதற்காகவேனும்
பெண்கள் சிந்திக்கக்
கற்றுக்கொள்ளலாம்.

அழகு ராணிப்
போட்டியில்
அறிவிக்குத்தான்
போட்டியன்றி
வடிவுக்கல்ல என்பர்!
நான் சொன்னேன்
என் அம்மம்மாவிற்கு
உலக அறிவு
மேன்மை என்றேன்!
அதற்கு வயது தடையென்றார்!
அப்போ வயதுக்கும்
அறிவுக்கும் என்ன
தொடர்பு?

அடக்குமுறை
குணம் கொண்ட
ஆண்களின்
உள்நோக்கம்
புரியாத பெண்களுக்கு
விடிவு இல்லை..தொடர்
பல வேதனையே அன்றி
வேறு ஒன்றும் அல்ல

இதைச்சொன்னால்
எனக்கு செருப்படிக்கிடைக்கும்
பிற்போக்குவாதியென்று
பிற்போக்குத்தனமான தம்
செயல்களைப் புதைத்துவிட்டு
எம்மை முத்திரையிடுவார்
இந்த நூற்றாண்டின்
தமிழ் வளப்போர்!

இப்போ
வடக்கு இந்தியரின்
சாயலில் தனக்கு ஒரு
பொண்ணும்
அவளோ
வடக்கு இந்தியனின்
சாயலில்
தனக்கு ஒரு
ஆண் மகனும்
தேவையென்போர்
தடுமாறும் பொழுதிலும்
நிலைமாற
எங்கள்
பெண்ணை
என் தாயின் மகளை
தாம்பத்தியம் என்கின்ற
கூட்டு முயற்சிக்கு
அரணாக நிற்கும்
அன்புப் பெண்ணை
நினைத்துப்பார்க்க
அவன் பார்க்கும்
கற்பனைப் பெண்
தடைபோடுகிறாள்!

மனதில் மட்டுமே
கருவுற்ற
காதலுக்காய்
வாழும்
எங்கள்
ஆண் மகனை
வெறுக்கும் இப்பெண்
வடக்கு ஆண்மகனின்
உயரத்தில் மயங்குகிறாள்!

அந்த பசுமை நிறைந்த
வயல்வெளிகளில்
புல்லுப்பிடிங்கி
வெய்யிலில் நின்று
மேனி கருத்தது
உண்மைதான்!
ஆனாலும்
சுட்டெரித்த
வெய்யிலானாலும்
உள்ளே பக்குவமாய்
பாதுகாக்கப்படும்
குணத்துக்கு
எங்கே இங்கு
மதிப்பு?
அரிதாரம் பூசும்
முகத்துக்கள்ளவோ
இங்கே மதிப்பு!
எங்கள் கடைக்குட்டி
இப்போது தமிழ்
டிவியை பார்த்துப்போட்டு
கேக்கிறான்
ஏனப்பா
எங்கட சனம் எல்லாம்
டிவியில் முகத்துக்கு
வெள்ளைப்
பவுடர் போட்டிரிக்கினம்
என்டு!

அதற்கு நான் சொன்னேன்

வெள்ளைக்காரன் கண்டுபிடிச்ச
டி.வியில நாங்க முகம்
காட்டேக்க அவங்கட
நிறத்திலதான் காட்ட வேண்டும்!
தமிழை தடக்கி கதைப்போரும்
தமிழனின் நிறத்தை
மாற்றுபவனும் தான்
இன்று
தமிழ் வளர்க்கிறான்!


தமிழை தமிழாகவும்
பண்பாட்டை பண்பாடாயும்
காக்கு நினைப்போர்
இனி கல்லறைகளில்
தங்கள் கண்ணீரால்
மடல் எழுதவேண்டியதுதான்!
அதையாவது தமிங்கிலத்தில்
மாற்றாமல் இருந்தால்
சரி இந்த
புலம்பெயர் தமிழர்!

கனடாவிலிருந்து தம்பிதாசன்

Print this item

  :: நாமும் விழித்திருப்பது நன்று ::
Posted by: Kurumpan - 04-05-2005, 02:26 AM - Forum: கவிதை/பாடல் - Replies (17)

அட.. கெட்டிக்கார பிள்ளை.... சமத்தா, கீழேயுள்ள லிங்க் அழுத்திட்டீங்களே...! <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
http://www.yarl.com/forum/music_page.php?song_id=29

[b]<span style='font-size:25pt;line-height:100%'>கருத்து எழுத மறக்க மாட்டியள்தானே?!</span>

Print this item

  நல்லூர் ஸ்தான் குறும்பட போட்டி முடிவுகள்
Posted by: AJeevan - 04-05-2005, 01:44 AM - Forum: குறும்படங்கள் - No Replies


<img src='http://www.yarl.com/forum/files/dsc01185.jpg' border='0' alt='user posted image'>


பரிஸில் உள்ள நல்லூர் ஸ்தான் 03-04-2005 ல் நடாத்திய குறும்பட போட்டியின் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இப்போட்டியில் ஏழு குறும்படங்கள் கலந்துகொண்டன.

<span style='color:brown'><b>01. நீ நான் எல்லோரும் - நெறியாளர்:: ரூபன்
02. மறுமுகம் - நெறியாளர்:: வினாகாண்டி
03. நதி - நெறியாளர்:: பாஸ்கரன்
04. விடுதலை - நெறியாளர்:: டிசூபன், சதா பிரணவன்
05. எதுமட்டும் - நெறியாளர்:: I.V.ஜனா
06. வடலி - நெறியாளர்:: முத்தமிழ்ச் செல்வன்
07. கேள்விக்குறி ? - நெறியாளர்::ஹரிபிரசாத்</b>

இவற்றில் சிறந்த முதலாமிட விருதினையும், சிறந்த ஒளிப்பதிவிற்கான விருதினையும் <b>"எதுமட்டும்"</b> குறும்படம் பெற்றுக்கொணடது.
இது பிரான்சில் வதியும் இலங்கைத் தமிழ்க் குடும்பத்திற்கும் ஆபிரிக்க தேசமொன்றின் இளைஞனுக்கும் இடையேயான உறவைப்பற்றிப் பேசுகின்றது.

சிறந்த இரண்டாமிட விருதினையும், சிறந்த நெறியாளர், சிறந்த நடிகர் ஆகியவற்றிற்கான விருதினையும் <b>"நதி"</b> என்னும் குறும்படம் பெற்றுக்கொண்டது. இது பிரான்சில் அகதியாக வந்து சேரும் இளைஞன் ஒருவனின் புகலிடத்தின் வாழ்வியல் நெருக்கடி பற்றி பேசுகின்றது.

சிறந்து மூன்றாமிட விருதினை <b>"விடுதலை"</b> என்னும் குறும்படம் பெற்றுக்கொண்டது.

பெருமளவிலான பார்வையாளர்கள் கலந்து சிறப்பித்த இக்குறும்பட போட்டி நிகழ்வு புலம்பெயர் கலை-இலக்கிய செயற்பாட்டின் ஓர் அங்கமாய் புலம்பெயர் சினிமா வளர்வதற்கான நம்பிக்கையையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியது.

எழுதியவர்: குணா
Monday, 04 April 2005</span>

http://www.appaal-tamil.com/index.php?opti...d=275&Itemid=63

Print this item

  காசு குடுத்து பட்டம் வாங்களாம் வாங்கோ
Posted by: thambythasan - 04-04-2005, 09:40 PM - Forum: கவிதை/பாடல் - Replies (5)

கல்வி 150 டொலர்கள் மட்டுமே!!!

பட்ட கடன்
அடைக்க
நாம் படும் பாடு
பெரும்பாடு..

அதிகாலை விழித்து
இரவில்
நித்திரை தொலைத்து
இயற்கையின்
கொடைகளை
மறுத்து
வாங்கியதது
இந்தப் பட்டம்..

பட்டம் பெற்றிட
சென்று
மனநொய் பிடித்து
இறந்தவர் பலர்..

பாடங்களை
கஸ்டப்பட்டு
அந்நிய
மொழியினை
அரவணைக்
முடியாமல்
உதைக்கவும்
முடியாமல்..
எமக்குள்ளே
கட்டயாமாய்
புகுத்தி
பட்டங்கள் பல
பெறுவதற்கு...
நித்திரைகள்
பல தொலைத்தவர்கள்
நாம்...

கணடாவந்தபோது
தமிழனுக்கு
இருந்தது..
கோவணமும்
கல்வி மீதினிலே
ஒரு வெறியும்...

கல்வியாண்டில்
இறதியில்
நுஒயஅ ஆயசமள
பார்ப்பதற்காய்..
லைனில் நின்றால்
இதயம்
படபடக்கும்..
நல்லாய் செய்தவர்
பெயில் ஆக
ஏனோ தானாய்
செய்தவர் வெற்றி
பெற..இப்படியே
எமது வாழ்வு
நகர்ந்தது...

தந்த கடனில்
தங்கையில்
திருமணத்துக்கு
கொஞ்சம்
அம்மாவில் அஸ்பத்திரிக்கு
அரைவாசி அனுப்பிய
பின்னால் மிஞ்சி
பணத்தில் ரொட்டி
கூட வாங்கமால்
படித்தகாலங்கள்
பல...ரொட்டி
மட்டுமே சாப்பிட்டு
இறந்தவர் பல இங்கே!!

நல்லாய் செய்தப்
படம் பெயிலாக..
தற்கொலை
செய்துகொண்ட
நண்பனில்
செத்தவீட்டில்
குமிறிய அவன்
அம்மாவின்
நிலமையினை
மனதுக்குள்ளே..
வைத்து..
முன்னேறினோம்..

இத்தனையும்
பெற்றும் என்ன
பயன்...

வெறும் 150 டொலருக்கு
வாங்கவேண்டிய பட்டத்துக்காய்
இவ்வளவு;
தூரம் போயிருக்கத்தேவையில்லை..


நன்றி

தம்பிதாசன்

நகர்த்தப்பட்டுள்ளது - இராவணன்

Print this item

  விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள
Posted by: eelapirean - 04-04-2005, 04:50 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (5)

விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள முல்லைத்தீவில் ஒரு பஸ் சாரதி தனது வாகனத்தில் ஏறுவதற்கு முன் ஒருவரிடம் சென்று வாயால் ஊதினார். அவர் தலையை அசைத்து "நீங்கள் பஸ்ஸை செலுத்தலாம்." என்று அனுமதி கொடுத்தார்.

பயணிகள் பஸ்ஸை செலுத்தும் சாரதி மதுபோதையில் இருக்கிறாரா என்று அங்கு பரிசோதிக்கிறார்கள். மது அருந்தியிருந்தால்இ சாரதிய லைசென்ஸை பறித்துக் கொண்டு அவர் பஸ்ஸை செலுத்தத் தடை விதித்து விடுகிறார்கள்.

முல்லைத்தீவிற்குச் சென்று திரும்பிய ஒருவர் தான் நேரில் கண்ட இந்தக் காட்சியை விவரித்து வெகுவாகப் பாராட்டினார்.

இந்த நடைமுறை நாட்டின் ஏனைய பகுதிகளிலும் கடைப்பிடிக்கப்படுமாயின்இ எத்தனையோ வாகன விபத்துகளைத் தவிர்த்துக் கொள்ளலாம். சம்பந்தப்பட்டவர்கள் காதில் இது ஏறுமா
சுட்டது தினகுரல்

Print this item

  உன் நினைவதில் ஓர் வானம் அமை...!
Posted by: kuruvikal - 04-04-2005, 04:21 PM - Forum: கவிதை/பாடல் - Replies (75)

<img src='http://img109.exs.cx/img109/3143/birdflower9pr.jpg' border='0' alt='user posted image'>

<b>பருவத்தில்
பறக்கும் அந்த நினைவுகள்
சிறகொடித்து சிறை வைத்தேன்
பாடம் பயில்கையில்
சித்தமது சிதையக் கூடாதென்று...!

விவேகானந்தரும் ஜேசுவும்
எனக்குள் வந்ததாய்
என்னை நானே பெருமைப்படுத்தினேன்
எடுத்த கொள்கை தவறா
சுதந்திரப் பறவையாய் வாழவென்று....!

தொட்டது கெட்டதாக
ஒரு கூட்டம் சமூகம் என்று
விட்டது தனித்துப் போனேன்
என் வழி தனி வழி என்று
அது கண்டு சுற்றம் கூட
சுதாகரிக்கத் தயங்கியது...!

காலக் கண்ணாடி
காட்டியது ஒரு வசந்தம்
மலராய் வந்தது தந்தது அன்பு
மனதெங்கும் நினைவாய் பதிந்தது
கொடுமை பண்ணி
ஆளுது நினைவது
என்னை அடிமையாக்கி...!

அன்பென்றாலும் அடிமை வாழ்வு
கெஞ்சலும் வழிதலும்
அன்புக்குப் பரிசாய்....!
ஆர்ப்பரிக்குது மனசு
சுதந்திரப் பறவையே
உனக்கேன் இந்த நிலை...?!

எடுத்தேன் முடிவு
மலரவள் அன்பின்
அடிமை நினைவுகள் அறுக்க..!
ஓர்மத்து வாளெடுத்து
கொட்டினேன் போர் முரசு
மலரவள் நினைவோடு...!

ஓர் விடியலுக்குள்...
தோல்வியுள் துவண்டேன்
கனவோடு கலந்து
மலரவள் நினைவது வென்றது
அன்பு யுத்தம்...!
மீண்டும் நான்
மீளமுடியா அடிமையாகி
மலரவள் நினைவோடு அலைகிறேன்....!

காலம் எனக்கு விலங்கிட்டு
உன்னோடு கட்டி வைக்குமோ என்ற பயம்
மலரே மண்றாடுகிறேன்...
குருவி நான்
சுதந்திரப் பறவையாய் சிறகடிக்க
உன் நினைவதில்
ஒரு வானம் அமை...!
அதுபோதும்...
உன் அடிமையாகினும்
கொள்கை காத்ததற்கு சான்றாக...!</b>

Print this item

  மருத்துவ தகவல்கள்..!
Posted by: tamilini - 04-04-2005, 12:58 PM - Forum: மருத்துவம் - Replies (11)

வெந்நீரின் பயன்கள்
வெந்நீர் குடித்தால் என்னென்ன உபாதைகள் தீருமென்று தன் அனுபவத்தை வைத்துச் சொல்கிறார் குமுதம் சினேகிதி வாசகி மகாலட்சுமி

யாருக்காவது சமையல் சுத்தமாக தெரியாவிட்டால், ‘‘அவளுக்கு நல்லா வெந்நீர் போட வரும்...’’ என்று நம்மில் பலர் நக்கல் அடிப்பதுண்டு. உண்மையில் நாம் வெந்நீரின் மகிமை தெரியாமல்தான் அப்படி கிண்டல் செய்திருக்கிறோம். இதோ பாருங்கள்... வெந்நீரால் எத்தனை பலன்கள் என்று!

ஏதாவது எண்ணெய்ப் பலகாரம், சுவீட், அல்லது பூரி சாப்பிட்ட பிறகு நெஞ்சு கரித்துக் கொண்டிருக்கிறதா? உடனே எடுங்கள் ஒரு டம்ளர் வெந்நீரை.... மெதுவாகக் குடியுங்கள். கொஞ்ச நேரத்தில் நெஞ்சு எரிச்சல் போயே போச்சு!

வெந்நீர் குடித்தால் உங்கள் உடலில் போடும் அதிகப்படி சதை குறையவும் வாய்ப்பிருப்பதாகச் சொல்கிறார்கள்.

காலையில் சரியாக மலம் கழிக்க முடியவில்லை என்று ஃபீல் பண்ணுகிறீர்களா? எடுங்கள் வெந்நீரை! குடியுங்கள் உடனே! இம்மீடியட் எஃபெக்ட் கிடைக்கும். (நிறையப் பேர், ‘‘அட, காலையில் எங்க வீட்டில் காபி என்று பெயர் சொல்லி தினம் அதைத்தானே கொடுக்கிறார்கள்’’ என்று புலம்புவது கேட்கிறது!)

உடம்பு வலிக்கிற மாதிரி இருக்கிறதா? உடனே வெந்நீரில் கொஞ்சம் சுக்குத்தூள், பனங்கற்கண்டு போட்டு குடியுங்கள். இதன் மூலம் பித்தத்தினால் வரும் வாய்க்கசப்பு மறைந்து விடும். மேலும், உடல் வலிக்கு, நன்றாக வெந்நீரில் குளித்துவிட்டு, இந்த சுக்கு வெந்நீரையும் குடித்துவிட்டுப் படுத்தால், நன்றாகத் தூக்கம் வருவதோடு, வலியும் பறந்துவிடும்.

எங்காவது அலைந்துவிட்டு வந்து கால் பாதங்கள் வலிக்கிறது என்றால், அதற்கும் நமது வெந்நீர்தான் ஆபத்பாந்தவன். பெரிய பிளாஸ்டிக் டப்பில் கால் சூடு பொறுக்குமளவுக்கு வெந்நீர் ஊற்றி அதில் உப்புக்கல்லைப் போட்டு, அதில் கொஞ்ச நேரம் பாதத்தை வைத்து எடுங்கள். காலில் அழுக்கு இருப்பது போல் தோன்றினால், வெந்நீரில் கொஞ்சம் டெட்டால் ஊற்றி அதில் பாதத்தை வைத்தால், கால் வலி மறைவதோடு, பாதமும் சுத்தமாகிவிடும்.

மூக்கு அடைப்பா? நம்ம வெந்நீர்தான் டாக்டர்! வெந்நீரில் விக்ஸ் அல்லது அமிர்தாஞ்சனம் போட்டு அதில் முகத்தைக் காண்பித்தால், மூக்கடைப்பு போயிந்தி!

வீட்டில் வேலைக்கு ஆட்கள் இல்லாமல் தாங்களே பாத்திரம் தேய்த்து, துணி துவைக்கும் பெண்கள், வாரத்திற்கு ஒரு முறையேனும் உங்கள் கைகளை வெந்நீரில் கொஞ்ச நேரம் வைத்திருங்கள். இதன் மூலம் நக இடுக்கில் இருக்கும் அழுக்குகள் போய், உங்கள் கைகள் ஆரோக்கியமாக இருக்கும்.

வெயிலில் அலைந்து விட்டு வந்து உடனே சில்லென்று ஐஸ்வாட்டர் அருந்துவதைவிட, சற்றே வெதுவெதுப்பான வெந்நீர் அருந்துவது, தாகம் தீர்க்கும் நல்ல வழி.

ஈஸினோபீலியா, ஆஸ்துமா போன்ற உபாதைகள் இருப்போர், உங்களுக்கு தாகம் எடுக்கும் போதெல்லாம் கண்டிப்பாக வெதுவெதுப்பான வெந்நீர் குடியுங்கள். அதுபோலவே, ஜலதோஷம் பிடித்தவர்களும் வெந்நீர் குடித்தால், அது அந்த நேரத்துக்கு நல்ல இதமாக இருப்பதோடு சீக்கிரம் குணமாவதையும் என் அனுபவத்திலேயே உணர்ந்திருக்கிறேன்.

இதையெல்லாம் தவிர, வீட்டில் நெய், எண்ணெய் பாட்டில் இருந்த பாத்திரங்களைக் கழுவும்போது கொஞ்சம் வெந்நீரை ஊற்றி ஊற வைத்து, அப்புறம் கழுவினால் பிசுக்கே இல்லாமல் பளிச்சென்று சுத்தமாகும்.

அதுபோலவே தரை துடைக்கும் போது, குறிப்பாக குழந்தைகள், நோயாளிகள் இருக்கும் வீட்டின் தரைகளை வெந்நீர் உபயோகப்படுத்தி துடையுங்கள். கிருமி இல்லாத சுத்தமான தரை உங்களுடையதாகும்!

வெந்நீரின் மஹாத்மியம் லிஸ்ட் போட்டு மாளாது... என்னது?! வெந்நீருக்கு இனி உங்கள் வீட்டில் தனியாக ஒரு பெரிய பாத்திரமே போடப் போகிறீர்களா...? குட் குட்!

நன்றி - குமுதம்-சினேகிதி

http://maruththuvam.blogspot.com/2005/04/b...og-post_04.html

Print this item