| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 570 online users. » 0 Member(s) | 567 Guest(s) Applebot, Bing, Google
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,454
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,290
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,648
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,313
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,682
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,267
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,542
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,762
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,058
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,256
|
|
|
| REGEDIT TIPS |
|
Posted by: manmadhan - 04-04-2005, 12:30 PM - Forum: கணினி
- Replies (5)
|
 |
To Disable CD autoplay, completely, in Windows XP Home
Click Start, Run and enter REGEDIT Then go to:
HKEY_CURRENT_USER\SOFTWARE\Microsoft\Windows\CurrentVersion\Policies\Explorer
Create a new value called: NoDriveTypeAutoRun
Type is: DWORD
Value is: 0x000000b1 (177)
You may need to log off/log on or reboot for the change to take effect. Additionally, you may need Administrator privileges to edit the Registry.
To undo this change, set the NoDriveTypeAutoRun value back to 91 (145) instead of B1 (177)
|
|
|
| நாள், எந்நாளோ! |
|
Posted by: hari - 04-04-2005, 06:23 AM - Forum: கவிதை/பாடல்
- Replies (10)
|
 |
<b>நாள், எந்நாளோ!</b>
என்னுயிர்த்தாய் ஈன்றெடுத்த ஈழத்துச் சோதரனின்
எண்ணமெலாம் ஈடேறும் நாள் எந்நாளோ!
கண்ணிடையே நீர்பெருகக் காத்திருக்கும் அன்னவனின்
கனவெல்லாம் நனவாகும் நாள் எந்நாளோ!
வாழையடி வாழையென வாழ்ந்திருந்த யாழ்தரணி
வண்டமிழார் வசமாகும் நாள் எந்நாளோ!
ஈழமகன் வீறுடனே எழுந்தருள, இப்புவியின்
எண்டிசையும் புகழ்முழங்கும் நாள் எந்நாளோ!
சமன்செய்து சீர்தூக்கும் தமிழனுக்குத் தாய்மண்ணில்
சமஉரிமை வாய்க்கின்ற நாள் எந்நாளோ!
அமைதியெனும் நதிவெள்ளம் பெருக்கெடுக்க, அந்நதியில்
அருந்தமிழர் நீராடும் நாள் எந்நாளோ!
நெஞ்சினிலே ஈழமெனும் நெடியதொரு குடியிருப்பு
நிரந்தரமாய் வேரூன்றும் நாள் எந்நாளோ!
நஞ்(சு)இனத்தை வேரறுக்கும் நற்றமிழர்க் குடிப்பிறந்த
நம் சினத்தை ஊரறியும் நாள் எந்நாளோ!
கச்சத்தீ(வு) என்பதொரு தமிழ்நெய்தல் மண்ணின்கண்
காடையனைப் பழிதீர்க்கும் நாள் எந்நாளோ!
உச்சிவரை எதிரிகளை உதறலுற வைத்திடத்தான்
ஒருதருணம் நமக்குவரும் நாள் எந்நாளோ!
பீடுடைய தமிழருக்குப் பிழைசெய்த தீயவர்தம்
பிடரிமிசைப் பேரிடிவீழ் நாள் எந்நாளோ!
நாடுடையோம் நாமென்னும் நற்செய்தி கோலோச்ச,
நாற்புறமும் தமிழ்மணக்கும் நாள் எந்நாளோ!
அந்நியனாய் அலைந்துழலும் நிலைமாறி அருந்தமிழன்
அரசாட்சி புரிகின்ற நாள் எந்நாளோ!
பொன்ஈழம் மலர்கின்ற பொழுதொன்று கருக்கொண்டு,
புதுக்காற்று எமைத்தீண்டும் நாள் எந்நாளோ!
இறப்புதனை முத்தமிட்டும் இறவாதார் சந்ததியார்
ஈழத்தை முத்தமிடும் நாள் எந்நாளோ!
மறப் படையார் மாற்றார்முன் இறப்படையார் என்பதொரு
மணிமகுடம் வென்றெடுக்கும் நாள் எந்நாளோ!
தென்னிலங்கை மண்டலத்தில் செந்தமிழன் குரலுக்குத்
தென்றலும்தன் செவிசாய்க்கும் நாள் எந்நாளோ!
தன்இளங்கை தனைத்தன்றன் தாய்பிடிக்க, சுதந்திரமாய்த்
தமிழ்மழலை நடைபயிலும் நாள் எந்நாளோ!
என்தாயும் என்சேயும் எனைச்சார்ந்த எல்லாரும்
ஈழத்தைத் தரிசிக்கும் நாள் எந்நாளோ!
குன்றாத பொலிவோடு பறக்கின்ற யாழ்நாட்டின்
கொடிவணங்கி மெய்சிலிர்க்கும் நாள் எந்நாளோ
தொ.சூசைமிக்கேல் ( tsmina2000@yahoo.com )
|
|
|
| ஜேர்மனி தமிழ்ப்பெண் வெட்டிக்கொலை இருவர் ஆபத்தானநிலையில். |
|
Posted by: Vaanampaadi - 04-04-2005, 01:34 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (19)
|
 |
ஜேர்மனி சுட்காட் மானிலத்தில் கிறீஸ்தவதேவாலயத்திற்குள் மோதல் - தமிழ்ப்பெண் வெட்டிக்கொலை இருவர் ஆபத்தானநிலையில்.
திங்கள் 04.04.05 - 1:28 மணி தமிழீழம் ஜயேர்மனியிலிருந்து செந்தூரன்ஸ
யேர்மனி ஸ்ருட்காட் நகரில் தேவாலயம் ஒன்றினுள் வாள்வீச்சு. தமிழர் ஒருவர் அந்த இடத்திலே பலி. மூவரின்நிலை கவலைக்கிடம்.
யேர்மனி ஸ்ருட்காட் நகரில் தமிழ் மக்களால் அல்லலோயா என அழைக்கப்படும் மதத்தினைச் சார்ந்த இரு குடும்பத்தினுள் ஏற்பட்ட பிரச்சினைää அவர்களது தேவாலயத்தில் வாழ்வீச்சில் முடிவடைந்துள்ளது. இச்சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.
தேவாலயத்தினுள் 60 மேற்பட்ட மக்கள் பிராத்தனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த சமயம் பிராத்தனையில் ஈடுபட்டிருந்தவர் மற்றவர் மீது வாளால் வீசி கண்டதுண்டமாக வெட்டப்பட்டு தமிழர் ஒருவர் அந்த இடத்திலேயே பலியாகி உள்ளார்.மேலும் தமிழர்கள் மூவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அனுமதிக்கப்பட்டவர்களில் இருவரின் நிலை மிகவும் மோசமாகவுள்ளது. குடும்பப் பிரச்சினையே இவர்களது வாழ்வெட்டுக்கு காரணமாக இருக்கலாம் சில ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அதேவேளை எந்தவொரு காரணமும் இன்றிதேவாலயத்தினுள் புகுந்து வெட்டப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.
25 வயது உடையவரே இக்கொலையைச் செய்துள்ளார். இவர் 9 மில்லிமீற்றர் கைத்துப்பாக்கி வைத்திருந்ததாகவும் அதனை அவர் பாவிக்கவில்லை எனவும் செய்திகள் வெளியாகி உள்ளன. யேர்மனி காவல்துறையினர் விசாரணைகளை தொடர்ந்தும் மேற்கொண்டு வருகின்றனர்.
Pathivu
<img src='http://newsimg.bbc.co.uk/nol/shared/img/nav/v3_banners/v3_ifs_banner_rb.gif' border='0' alt='user posted image'>
<img src='http://www.nitharsanam.com/public/gallery/new123/991021_germany203.jpg' border='0' alt='user posted image'> <img src='http://www.nitharsanam.com/public/gallery/new123/427.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://www.nitharsanam.com/public/gallery/new123/430.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://www.nitharsanam.com/public/gallery/new123/80800.jpg' border='0' alt='user posted image'>
<b>
'Bloodbath' at church in Germany </b>
Police say the attack was motivated by personal problems.
A man wielding a sword has killed a woman and injured at least three other people during a service at a church in southern Germany.
Police said they found "grisly" scenes, including severed limbs, at the scene of the attack in Stuttgart.
A 25-year-old suspect was overpowered by officers and arrested.
He is an ethnic Tamil, as were most of the congregation. Police say the attack was not politically motivated and was probably prompted by personal problems.
The man stormed into the church just before 1600 (1400 GMT) waving a sword before going on the rampage, according to eyewitnesses.
He killed a 43-year-old woman and seriously injured three other people, including one whose hand was hacked off, police said.
Police described the scene as a "bloodbath".
About 65 people - half of them children - are believed to have been in the church at the time.
Counselling has been offered to those who witnessed the attack.
Tamils are a predominantly Hindu minority in Sri Lanka and southern India.
The group regularly rented the Stuttgart church to hold its services.
.
|
|
|
| காதல்தோல்வி |
|
Posted by: adimuttal - 04-04-2005, 01:00 AM - Forum: கவிதை/பாடல்
- Replies (1)
|
 |
கண்களை விற்று ஓவியம் வாங்கினேன்
அவள் பார்பதற்காக,,
கால்களை விற்று காலடி வாங்கினேன்
அவள் நடப்பதற்காக,,
உடலை விற்று நிழலை வாங்கினேன்
அவள் இளைப்பாற,,
இதயம் விற்று அவள் காதல் வாங்கினேன்
அவளை மணக்க,,,
அவளோ என்காதல்விற்று தனக்கொரு
கணவன் வாங்கிக் கொண்டாள்
நானோ உதிரம் விற்று மதுவை வாங்கினேன்
அவளை மறக்க,,,,
,
அடிமுட்டாள் எழுதியது
|
|
|
| பாப்பரசரின் மறைவுப்படங்கள் |
|
Posted by: Vaanampaadi - 04-03-2005, 11:15 PM - Forum: செய்திகள்: உலகம்
- Replies (1)
|
 |
பாப்பரசரின் மறைவுப்படங்கள்
<img src='http://us.news2.yimg.com/us.yimg.com/p/afp/20050403/capt.sge.dlu17.030405121308.photo00.photo.default-234x384.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://us.i1.yimg.com/us.yimg.com/i/us/nws/th/afp_lo_1.gif' border='0' alt='user posted image'>
The body Pope John Paul II is pictured at the Clementine Hall in the Vatican City. Pope John Paul II's body was put on display before the world as more than 100,000 people packed St Peter's cobblestoned square for a huge open-air mass in memory of their 'father and shepherd'.(AFP-Pool/Massimo Sambucetti)
<img src='http://us.news2.yimg.com/us.yimg.com/p/ap/20050403/capt.lon10404031212.vatican_pope_lon104.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://us.i1.yimg.com/us.yimg.com/i/us/nws/p/ap120a.gif' border='0' alt='user posted image'>
Pope John Paul II's body is displayed in the Clementine Hall at the Vatican's Apostolic Palace Sunday April 3, 2005, as Cardinal Eduardo Martinez Somalo, left, sprays holy water on the body in this image taken from television. Pope John Paul II died at the Vatican on Saturday. (AP Photo/ Vatican TV via APTN)
<img src='http://us.news2.yimg.com/us.yimg.com/p/nm/20050403/mdf917822.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://us.i1.yimg.com/us.yimg.com/i/dn/reuters5.gif' border='0' alt='user posted image'>
The body of Pope John Paul II lies in state in the Clementina hall at the Vatican April 3, 2005. The world mourned the late Pope John Paul II on Sunday and thousands of grieving pilgrims converged on Rome to pay homage to the Pole who helped topple Communism in Europe but left a divided Roman Catholic Church. (Pool/Reuters)
<img src='http://us.news2.yimg.com/us.yimg.com/p/ap/20050403/lthumb.xqui20404031652.vatican_pope_xqui204.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://us.i1.yimg.com/us.yimg.com/i/dn/ap4.gif' border='0' alt='user posted image'>
In this picture made available by the Italian Presidency, Cardinal Miloslav Vlk of the Czech Republic, left, and Cardinal Francesco Marchisano of Italy mourn Pope John Paul II, lying out in state in the Clementine Hall at the Vatican, Sunday, April 3, 2005. The Pope died on Saturday at the Vatican after a 26-year pontificate. He was 84. (AP Photo/Italian Presidency, Enrico Oliverio)
<img src='http://us.news1.yimg.com/us.yimg.com/p/nm/20050403/lthumb.mdf917822.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://us.i1.yimg.com/us.yimg.com/i/dn/reuters5.gif' border='0' alt='user posted image'>
The body of Pope John Paul II lies in state in the Clementina hall at the Vatican April 3, 2005. The world mourned the late Pope John Paul II on Sunday and thousands of grieving pilgrims converged on Rome to pay homage to the Pole who helped topple Communism in Europe but left a divided Roman Catholic Church. (Pool/Reuters)
<img src='http://us.news1.yimg.com/us.yimg.com/p/nm/20050403/lthumb.mdf917515.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://us.i1.yimg.com/us.yimg.com/i/dn/reuters5.gif' border='0' alt='user posted image'>
<img src='http://us.news2.yimg.com/us.yimg.com/p/ap/20050403/capt.lon10504031215.vatican_pope_lon105.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://us.i1.yimg.com/us.yimg.com/i/us/nws/p/ap120a.gif' border='0' alt='user posted image'>
|
|
|
| கொடி அசைந்ததும் காற்றுவந்ததா |
|
Posted by: pattusingam - 04-03-2005, 10:36 PM - Forum: அறிமுகம்
- Replies (49)
|
 |
கொடி அசைந்ததும் கார்றுவந்ததா
கார்றுவந்ததும் கொடி அசைந்ததா
உங்கள் கருத்துக்களை சொøலுங்களேன் பாப்பம்
வணக்கம் வணக்கம் பல முறை சொன்னேன் சபையினர் முன்னே
யாராவது வாருங்கோ வந்து வண்ண கருத்தை வையுங்கோ பாப்பம்
|
|
|
| குடிகாரரும் குடியாதவரும் |
|
Posted by: stalin - 04-03-2005, 10:17 PM - Forum: சுமுதாயம் (வாழ்வியல்)
- Replies (75)
|
 |
மது பாவிப்பவர்கள் கெட்டவர்கள் மது பாவியாதோர் நல்லவர் என்ற அளவு கோல் சமுதாயத்தில் இருந்து வருகிறது இந்த அளவு கோல் சரியா மதுபாவிப்போரில் நல்ல குணம் கொண்டோர் உள்ளனர் மது பாவியாதோர் பலர் கெட்ட குணம் உள்ளவர் உள்ளனர். திருமண பேச்சின் போது இந்த அளவு கோலை பெண்கள் இன்றும் பார்க்கிறார்கள். இன்றைய வெளி நாட்டுச்சூழலில் தவிர்க்க முடியுமா அல்லது இந்த மது வார இறுதிநாட்களின் மாலை பொழுதை சந்தோசமாய் கழிக்க உதவுகிறதா ஒரு சிறியளவு மது பாவிப்பது உடல் நல்லது என்று கூறுகிறார்கள் அல்லது குடி குடியை கெடுக்குமா-----------------------ஸ்ராலின்
|
|
|
| ஜேர்மனியில் தயாராகும் குறும்படங்கள் |
|
Posted by: shanmuhi - 04-03-2005, 09:55 PM - Forum: குறும்படங்கள்
- Replies (3)
|
 |
<b>ஜேர்மனியில் தயாராகும் புதிய குறுந்திரைப்படம் இப்படியுமா?</b>
ஜேர்மனியின் முன்ஸ்ரர் நகரில் நாச்சிமார்கோவிலடி இராஜனின்ஆக்கமாக உருவாகியுள்ள
இப்படியுமா என்ற படம் எதிர்வரும் யூன் மாதத்தில் ஈழவர் திரைக்கலைமனற் வெளியீடாக வெளியிடத்தயாராக உள்ளது.
இக் குறும்படத்தில் மதி சாந்திää கவிஞர் மட்டுவில் ஞானகுமாரன்ää பெனடிற்றா, ஞானசெல்வம், ரகுநாதன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தை பிறேமன் ரமேஷ் ஒளிப்பதிவு செய்து தொகுத்தும்
இருக்கிறார்.
இப்படத்தின் பின்னணி இசையை பிராங்போட்டைச் சேர்ந்த 15 வயதான நடிகமணி வைரமுத்துவின் பேரன் இசையமைக்க எஸ்.ஜே.ஜோசப் நாச்சிமார் கோவிலடி இராசன் ஆகியோர் தயாரிக்கிறார்கள்
<b>
ஈழத் தமிழரின் சீட்டுப் பிரச்சனையைச் சித்தரிக்கும் படம் பொறி !</b>
ஜேர்மன் பிறீமன் தமிழ்க்கலை மன்றம் ஈரோ சினி ஆர்ட்ஸ் கிரியேசன்சுடன் இணைந்து தயாரித்துள்ள படம் பொறி !
ஈழத் தமிழரின் இன்னல்களில் ஒன்றான சீட்டுப் பொறிக்குள் சிக்குப்படுவதால் உண்டாகும் அவலங்களை இது பேசுகிறது.
சுவிசைச் சேர்ந்த அஜீவன் ஒளிப்பதிவு செய்யää ஜேர்மனி ரமேஷ் தொகுக்க நாச்சிமார் கோவிலடி ராஜனின் கதை வசனம்
நெறியாள்கையில் தயாராகியுள்ளது.
ராமகிருஷ்ணன் (கொலண்ட்) தங்கராசா, சித்திரா பெனடிற்றா, நவரட்ணராஜா, யோகநாதன், பிரசன்னா மோகன் ஞானச்செல்வன் ஜர்மி ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கிறார்கள் இப்படியுமா ? நீர்க்கோலம், பொறி ஆகிய மூன்று படங்களும் யூன் வெளிவருகின்றன.
|
|
|
| இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற நட்சத்திரம் |
|
Posted by: Vaanampaadi - 04-03-2005, 09:23 PM - Forum: தத்துவம் (மெய்யியல்)
- Replies (1)
|
 |
இருபதாம் நூற்றாண்டின்
இணையற்ற நட்சத்திரம்
<img src='http://www.puthumai.com/images/stories/commen/paul09.jpg' border='0' alt='user posted image'>
காலதேவன் சாதி. மதம் பார்ப்பதில்லை. ஏழை பணக்காரன் என்ற வித்தியாசத்தை நோக்குவதில்லை. உயர்ந்தவன் தாழந்தவன் என்று தரம் பிரிப்பதில்லை.
அவன் கணக்கு முடிந்து விட்டால் மரணம் மனிதனைத் தேடி வந்துவிடுகின்றது.
வளர்ந்து விட்ட விஞ்ஞானத்தால் சாவைத் தள்ளிப்போட முடிகிறதே ஒழிய. சாவைத் தடுக்க முடிவதில்லை. இங்கேதான் இறைவன் ஒருவன் மேலே இருக்கின்றான். அங்கிருந்து கொண்டு எம்மை ஆட்டுவிக்கின்றான் என்ற ஞானோதயம் மனிதனுக்குத் தெரிய வருகின்றது. என் சக்தியையும் மீறிய ஒருவர் இருக்கிறார் என்பது அவனுக்குப் புரிகின்றது. புதிய புதிய கண்டுபிடிப்புகளால் இறுமாப்புடன் நிற்கும் விஞ்ஞானத்திற்கும் தன்னை மீறிய சக்தியொன்று இருப்பது தெளிவாகத் தெரிகின்றது.
26 வருடங்கள் சிம்மாசனத்தில் இருந்தவர் உலகெங்கும் வாழும் 110 கோடிக்கு மேற்பட்ட மக்களுக்கும் ஓர் ஆன்மீகத் தலைவராக வாழும் கடவுளாகத் திகழ்ந்த பரிசுத்த பாப்பரசர் இறைவனடி சேர்ந்திருக்கின்றார்.
மரணம் அவரையும் விட்டு வைக்கவில்லை.
பிறந்தவரெல்லாம் இறந்தேயாக வேண்டும் என்ற வாழ்வின் நியதியில் ஓர் ஒப்பற்ற ஆன்;மீகத் தலைவரையும் காலதேவன் கவர்ந்து கொண்டு சென்றிருக்கின்றான்.
455 ஆண்டுகால இத்தாலியர்களின் இராஜயத்தை கவிழ்த்து ஓர் இரும்புத்திரை நாட்டில் இருந்து கொண்டு ஒருவர் இந்த இராஜ்யத்தின் சிம்மாசனத்தில் ஏறி உட்கார்வது என்பது ஒரு சாதாரண விடயமல்ல.
<img src='http://www.puthumai.com/images/stories/commen/paul08.jpg' border='0' alt='user posted image'>
வத்திக்கான் நகரில் 265வது பாப்பரசராக அரியாசனம் ஏறிய இந்த நிகரற்ற ஆன்மிகத் தலைவர் பற்றிய கடந்த காலங்களை இங்கு நினைவு கூர்வது அவசியமாகின்றது.
Karol Jozef Wojtyla என்பதுதான் இவர் இயற்பெயர். இரும்புத்திரை நாடாக அப்பொழுது திகழந்த போலந்து நாட்டில் 1920ம் ஆண்டு மே மாதம் 18ந்திகதிதான் இவர் பிறந்தார். இவருடைய தந்தை ஓர் இராணுவ அதிகாரியாகப் பணியாற்றியிருக்கின்றார். சிறு வயதிலேயே காலதேவன் இவர் குடும்பத்தில் பலரின் கணக்கை முடித்திருக்கின்றான்.. தந்தை தாய் சகோதரன் என்று மூவரையும் இவர் சிறுவயதிலேயே இழந்திருக்கின்றார். கருவில் மரித்த குழந்தையொன்றை பிரசவித்து விட்டு தாய் மரணத்தை அணைத்தபோது இவருக்கு வயது ஒன்பது. பன்னிரண்டு வயதில் அன்புச் சகோதரனையும் இழந்திருக்கின்றார்.
இழப்புகளின் தாக்கத்திலும் ஒரு நாடக ஆசிரியராக நடிகனாக விளையாட்டு வீரனாக பல்மொழி வல்லுனராக இவர் பிரகாசித்தது பலரையும் வியக்க வைத்தது. இளம் வயதிலேயே 11 மொழிகளைச் சரளமாகப் பேசும் திறன் இவரிடம் இருந்திருக்கின்றது.
திறமைகள் பல இருந்தும் அந்தத் திறமைகளைத் தந்த இறைவன்பால் இவருக்கு நாட்டம் அதிகமாக இருந்திருக்கி;னறது. இறை சேவையில் இருந்த அதீத ஈடுபாடு 1946இல் குருத்துவப் பட்டம் பெறுமளவிற்கு உயர்த்தியது. போலந்தின் இரு பல்கலைக்கழங்களில் ஆன்மீக விரிவுரையாளராகப் பணியாற்றும் வாய்ப்புகளும் இவரைத் தேடிவந்தன.
1963ம் ஆண்டின் இறுதியில் இவரின் வாழ்வு இன்னுமொரு உன்னத நிலையை எட்டிப் பிடித்தது. Archbishop என்ற ஆன்மீகப் பதவி இவருக்கு வழங்கப்பட்டது.
இங்கே இந்தப் பதவிகள் பற்றிய ஒரு சிறு விளக்கம் தருவது ஒரு சிலருக்கு ஏற்படும் மயக்க நிலையைத் தவிர்க்க உதவியாக இருக்கலாம்.
ஒரு மதகுருவாக தன் ஆன்மீகப் பணியை ஆரம்பிக்கும் ஒரு கத்தோலிக்க குருவானவர் பல நிலைகளைத் தாண்டி இறுதியில் பாப்பரசராக வரும் வாய்ப்பைப் பெற முடிகின்றது. பாப்பரசர் என்ற நிலை பல கோடிகளில் ஒருவருக்கு என்ற நிலையாக இருந்தாலும் மற்றைய முக்கிய நிலைகளை எட்டிப் பிடிக்கும் வாய்ப்பு பலருக்கு இருக்கின்றது.
திருமணத்தைத் துறந்து குருத்துவத்தை ஏற்கும் ஒருவர் தனது அப்பழுக்க சேவையினால் பல படிகளைத் தாண்டி விடுகின்றார். குருவானவர் ஒருவருக்கு கிடைக்கக் கூடிய முக்கிய நிலைகளில் ஒன்றுதான் Bishop என்பது. இதையும் கடந்து இவர் தன் திறமையால் பலரையும் ஈர்க்க ஆரம்பிக்கும்போது Archbishop என்ற நிலைக்கு உயருகின்றார். இதையடுத்து கிடைக்கும் நிலைதான் Cardina என்று அழைக்கப்படுகின்றது. உரோம கத்தோலிக்க ஆலயத்தில் பாப்பரசருக்கு அடுத்த நிலையில் இருப்பது இவர்கள்தான்.இவர்கள் 80 வயதுக்கு உடப்ட்டவர்களாக இருக்க வேண்டும் என்பது இங்குள்ள ஒரு விதிமுறையாக இருக்கின்றது.
கார்டினல் கல்லூரி என்று ஒரு கல்லூரி இயங்குகின்றது. இதில் 183 பேர் அங்கத்தவர்களாக இருக்கின்றார்கள். இதில் 117 பேருக்கு இந்தத் தடவை புதிய பாப்பரசரைத் தெரிவு செய்யும் பணி காத்திருக்கின்றது. பாப்பரசரின் ஆலோசகர்களாக வத்திக்கான் நிர்வாகிகளாகப் பணியாற்றும் பொறுப்பு இவர்களிடமே விடப்படுகின்றது. வத்திக்கானின் இளவரசர்கள் என்று இவர்கள் அழைக்கப்படுகின்றார்கள்.
இந்த விளக்கத்துடன் மேலே தொடரும்போது தெளிவு அதிகமாக இருக்கலாம்.
இன்றைய பாப்பரசருக்கு அன்று Archbishop பதவி வழங்கியது அப்பொழுது பாப்பரசராக இருந்த ஆறாவது சின்னப்பர் என்று அழைக்கப்பட்ட பாப்பரசர்தான். 1967இல் இதே பாப்பரசர் இப்பொழுது உயிர்நீத்துவிட்ட பாப்பரசருக்கு கார்டினல் என்ற பதவியை வழங்கினார்.
இவர் கார்டினல் என்ற நிலையை அடைந்து விட்டதால் புதிய பாப்பரசரைத் தெரிவு செய்யும் வாய்ப்பு ஆகஸ்ட் 1978இல் இவரைத் தேடிவந்தது. எனவே இவர் வத்திக்கானுக்குப் பயணமாகினார். Albino Luciani என்ற இத்தாலியர் ஒருவர் பாப்பரசராகத் தெரிவாகும் வாக்கெடுப்பு நிகழ்வில் இவரும் பங்குபற்றினார். பாப்பரசராகத் தெரிவாகிய இவர் தனக்குத் தேர்ந்தெடுத்த பெயர் முதலாவது சின்னப்ப பாப்பரசர் என்பதுதான். 65 வயதில் இந்த இத்தாலிய மதகுரு பாப்பரசராகத் தெரிவாகியபோது மிக இளம் வயதில் ஒரு பாப்பரசர் தெரிவாகி விட்டதாக கருத்துக்கள் வெளிவந்தன. காரணம் பொதுவாக 70 வயதை எட்டிப் பிடித்தவர்களே பாப்பரசராக வருவது வழமையில் இருந்திருக்கின்றது.
ஆனால் யாருமே எதிர்பாராத ஒரு நிகழ்வு அப்பொழுது சம்பவித்தது.
பதவியில் 33 நாட்கள் மாத்திரமே இருந்த புதிய பாப்பரசர் திடீரென மரணமாகி உலகை அதிர வைத்தார்.
இருதய அதிர்ச்சிதான் மரணத்திற்குக் காரணம் என்று சொல்லப்பட்டது. என்றாலும் இவர் மரணத்திற்கான காரணம் பற்றி இணையப் பக்கங்களில் பல கதைகள் சொல்லப்படுகின்றன.
இயற்கையான மரணம் இல்லை என்றும் சந்தேகம் கிளப்பப்படுகின்றது. விஷமூட்டிக் கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் சில இணையப் பககங்கள் சந்தேகப்படுகின்றன. ஆனால் அது இங்க நமக்கு ஓர் அவசியமற்ற விவாதம்.
33 நாட்களில் புதிய பாப்பரசர் இறந்தது மட்டும் நிஜம்.
புதிய பாப்பரசரை மீண்டும் தெரிவு செய்தாக வேண்டுமே.
மீண்டும் ஒக்டோபர் 78இல்-அதாவது இரண்டு மாதகால இடைவெளியில் இவர் வத்திக்கானுக்கு விஜயம் செய்தார். இந்தத் தடவை இத்தாலியர்களே மீண்டும் தெரிவாகும் வாய்ப்புகள் நிறைய இருந்தாலும் பலரையும் ஆச்சரியத்திற்கு உள்ளாக்கி இரண்டாவது சின்னப்ப பாப்பரசராக ஒக்டோபர் 16ந்திகதி இவர் நியமனம் பெற்றார்.
அப்பொழுது இவருக்கு வயது 58.
தொலை நாட்டில் இருந்து வந்தவர் என்று இனம் காணப்பட்ட இவர் ஆட்சி ஆரம்பமாகிற்று. பாப்பரசர் ஆட்சியில் இருந்த பல விதிமுறைகளும் உடைக்கப்பட்டன.
இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற ஆன்மீக நட்சத்திரம் ஒன்று சுடர்விடடு ஒளிர ஆரம்பித்தது.
ஆறாவது சின்னப்ப பாப்பரசர் 12வது பயஸ் என்றழைக்கப்பட்ட பாப்பரசர் 22வது ஜோன் என்று அழைக்கப்பட்ட பாப்பரசர் போன்றவர்கள் இதுவரை நியமிக்க பாப்பரசர்களில் பெரிதாகப் பேசப்பட்டவர்கள். ஆனால் இவர்கள் எல்லோரையும் மிஞ்சும் வண்ணம் இப்பொழுது நம்மை விட்டு மறைந்துள்ள பாப்பரசர் இரண்டாம் ஜோண் போல் என்பவரின் சேவை அமைந்துள்ளதாக அவதானிகள் கருதுகின்றார்கள்.
உலக நாடுகளெங்கும் பயணிப்பதில் இவரை இனி யாரும் மிஞ்ச முடியாது. இதுவரையில் 117 நாடுகளுக்கு பயணித்த சாதனை இவரையே சாருகின்றது. தன் ஆட்சிக் காலத்தில் 1167000 கி.மீறறருக்கு அதிகமாகப் பயணித்தவர் இவர் ஒருவர்தான் இதுவரையில் ஏனைய பாப்பரசர்கள் சந்தித்தராதவர்களை இவர்தான் நேரில் சந்தித்து இருக்கின்றார். உதாரணமாக பிரிட்டனின் எலிசபெத் மகாராணியாரை முதலில் சந்தித்தது இவரேதான். பிரான்ஸ் நாட்டுப் பயணமே இவரது இறுதி வெளிநாட்டுப் பயணமாக அமைந்தது.
மதசார்பற்ற இவரது விஜயங்கள் உலகைக் கவர்ந்தன. முதற்தடiவாக ஒரு பாப்பரசர் யூதர்களின் பிரார்த்தனை மண்டபத்திற்குள் நுழைந்திருக்கின்றார். அது வேறுயாருமல்ல. 1986இல் இவர்தான் அதை ரோமில் சாதித்து இருக்கின்றார். 2001ம் ஆண்டு மே மாதம் முஸ்லீம்களின் பள்ளிவாசல் ஒன்றிற்குள் கால்வைத்த முதல் பாப்பரசரும் இவர்தான்.
இப்படியொரு உன்னதமானவரை கொல்லும் முயற்சிகளும் இடம்பெற்றிருப்பது விந்தையானதுதான். 1981ம் ஆண்டு மே மாதம் 18ந் திகதி ஒரு துருக்கி நாட்டவன் பீட்டர் சதுக்கத்தில் நுழைந்து துப்பாக்கியால் சுட்டிருக்கின்றான் மயிரிழையில் காயத்தோடு உயிர் தப்பியிருக்கின்றார் பாப்பரசர். அன்றைய சோவியத் ஒன்றியத்தின் உளவு அமைப்புத்தான் இந்தக் கொலை முயறசியின் பின்னணியில் இருந்துள்ளது என்கிறார்கள். தன்னைக் கொல்ல வ்நதவனை இவர் பின்பு சிறையில் நேரில் சென்று சந்தித்து உரையாடி மன்னிப்பும் வழங்கி இருக்கின்றார்.
அடுத்த கொலை முயற்சி 1982 மே மாதம் 12ந் திகதி இடம்பெற்றிருக்கின்றது. நடந்த இடம் போர்த்துக்கல். கத்தியால் குத்திக் கொல்ல முயன்ற ஒருவன் பாதுகாப்பு அதிகாரிகளால் மடக்கப்பட்டு இருக்கின்றான்.
அடுத்த பாப்பரசர் எப்படித் தெரிவாகப் போகின்றார்?
பாப்பரசர் ஒருவர் மரணித்தால் இரு வாரங்களில் புதிய ஒரு பாப்பரசரைத் தெரிவு செய்ய வேண்டும் என்பதே வழமையில் உள்ள விதிமுறை. இறந்தவருக்காக 9 நாட்கள் துக்க அனுஷ்டானமும் இடம்பெறுவதுண்டு.
ஒரு பாப்பரசர் இறந்ததும் உடனடியாக சகல அதிகாரங்களும் வததிக்கானின்
இராஜாங்க அமைச்சரிடம் சென்று விடுகின்றன. இவரை Camerlengo என்றே அழைக்கின்றார்கள். எதுர்டோ மார்ட்டினஸ் என்பவர்தான் இன்றைய இராஜாங்க அமைச்சராக இருக்கிறார். பாப்பரசர் இறந்ததும் இவர் செய்ய வேண்டிய சடங்குகள் சில இருக்கின்றன.
இறந்த பாப்பரசரின் பிறப்புப் பெயரான Karol என்ற பெயரைச் சொல்லி இவர் மூன்று தடவைகள் அழைப்பார். அதற்குப் பதில் வராதபோது பாப்பரசருக்குரிய சின்னங்கள் அழிக்கப்படும். வேறு யாருமே உபயோகிக்காத வகையில் இந்தப் பாப்பரசரின் பாவனையில் இருந்த பிரத்தியேக இலச்சினையும் அழிக்கப்படும் கையில் அணிந்துள்ள மீனவனின் மோதிரம் என்று அழைக்கப்படும் மோதிரமும் அழிக்கப்படும். சென்ட் பீட்டர்ஸ் தேவாலயததின் வெண்கலக் கதவுகளும் இழுத்து மூடப்படும்.
மரணச் சடங்கு ஏற்பாடுகளைக் கவனிக்கும் பணி இவரிடம் விடப்படுகின்றது. அடுத்த பாப்ரசரைத் தெரிவு செய்யும் பொறுப்பும் இவர் தலையிலேயே விழுந்து விடுகின்றது.
ஒரு பாப்பரசர் இறந்ததும் அவரின் கீழ் பணியாற்றிய அனைத்து வத்திகான் அதிகாரிகளும் தமது பதவிகளை இழந்து விடுவதுää இங்கு கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டிய விடயமாகின்றது.
117 கார்டினல்கள் புதிய பாப்பரசரைத் தெரிவு செய்யும் தகுதியைப் பெற்றுள்ளார்கள். வத்திக்கானில் இடம்பெறும் இரகசிய தேர்தலில் பதிய பாப்பரசரை இங்கு தெரிவு செய்வார்கள். வெளியார் யாருமே வாக்கெடுப்பு நடக்கும் பகுதியில் அனுமதிக்கப்பட மாட்டார்கள்;. கதவுகள் சாரளங்கள் எல்லாமே பூட்டப்பட்டு விடும். யாருக்கு மூன்றில் இரண்டு மடங்கு ஆதரவு கிடைக்கின்றதோ அவரே புதிய பாப்பரசராக நியமனம் பெறுவார். முதல் வாக்கெடுபபில் இப்படி ஆதரவு கிடைக்காவிட்டால் அது தொடரும். இப்படி 30 தடவைகள் தொடர்ந்தால் 31 வது தடைவ பாதித் தொகைக்கு ஒன்று அதிகமாக யார் பெறுகிறாரோ அவரே புதிய ஆன்மீகத் தலைவராகின்றார்.
புதிய பாப்பரசர் தெரிவாகி விட்டால் வத்திக்கானிலிருந்து வெண்மையான புகை வெளியேறும். வெளியே காத்திருக்கும் பார்வையாளர்கள் தகவலை அறிந்து ஆர்ப்பரிப்பார்கள். தெரிவாகாவிடின் கரும்புகை வெளியேற்றப்படும்.
இஸ்ரவேலில் தொடரும் கலவரங்கள் அடங்க வேண்டும் என்பதில் தீவிரம் காட்டிய இவர் மத்திய கிழக்கிலும் நன்மதிப்பைப் பெற்றிருக்கின்றார். கம்யூனிஸ வீழச்சிக்கு மறைமுகமாக இருந்த ஒரு சக்தி இந்தப் பாப்பரசர் என்று அன்றைய சோவியத் ஒன்றியத்தின் அதிபர் மிக்கெயில் கோர்பச்சேவ் ஒரு தடவை குறிப்பிட்டுள்ளார்.
கருச் சிதைவுக்கு போர்க்கொடி ஓரினச் சேர்க்கைக்கு சிவப்பு விளக்கு கம்யூனிஸத்திற்கு ஆப்பு நாஸீயவாதிகளுக்கு சவுக்கடி என்று துணிச்சலாகத் தன் கருத்துக்களை வெளிப்படுத்தி மதசார்பற்ற ஒரு நிலையில் வேற்று மதத் தலைவர்களைச் சந்தித்து புரட்சிகரமான ஓர் ஆட்சியாளராக ஒளிர்ந்து இன்று அவர் மறைந்திருப்பது உலகிற்கு ஒரு பெரிய இழப்புத்தான்.
ஒரு சிறந்த கத்தோலிக்க தலைவராக மாத்திரமல்ல சமாதானத்தின் பாதகாவலாராகவும் செயற்பட்ட இவர் நாற்காலியில் இனி யார் உட்காரப் போகின்றார்கள்?
அறுவர்களின் பெயர்கள் பிரஸ்தாபிக்கப்படுகின்றன.
78 வயதை எட்டிப் பிடித்துள்ள இன்றைய இராஜாங்க அமைச்சர்(இத்தாலியர்) 71 வயதான மிலான் நகரின் Archbishop, 60 வயதான வியன்னா நகரின் Archbishop,
72 வயதான நைஜீரிய நாட்டவர் ஒருவர் 62 வயதான Hondura நாட்டவர் Sao Paulo நகரின் Archbishop (70 வயது) ஆகியோரே இவர்களாவார்கள். இத்தாலிய நாட்டவர் ஒருவரே இப் பதவிக்கு வரவேண்டும் என்பதே பல கர்டினல்களின் எதிர்பார்ப்பாக இருக்கின்றது. இந்தியாவின் மும்பாய் நகரக் கார்டினல் ஒருவருக்கும் இந்த வாய்ப்பு வரலாம் என்ற எதிர்பார்ப்பும் இருக்கின்றது.
மறைந்தும் மறையாதவராகி இருக்கின்றார் பரிசுத்த பாப்பரசர். இவருடைய அசாத்திய துணிச்சலோடு வெளிப்படையாகவே கருத்துக்களை சொல்லும் ஆற்றலோடு இவர் நாற்காலியில் யார் அமரப் போகின்றார்கள்.?
சில வாரங்களில் தெரியத்தானே போகின்றது
|
|
|
| மீண்டும் தலை தூக்கியுள்ள காட்டுமிராண்டித்தனமான பகிடிவதைகள் |
|
Posted by: eelapirean - 04-03-2005, 05:42 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (17)
|
 |
மீண்டும் தலை தூக்கியுள்ள காட்டுமிராண்டித்தனமான பகிடிவதைகள்
ழூ முதலாமாண்டு மாணவர்கள் 14 பேர் நிர்வாணமாக்கப்பட்டு புகைவண்டி ஓட்டுமாறு நிர்ப்பந்திக்கட்டனர்
ழூ வவுனியா தேசிய கல்வியியல் கல்லூரியில் சம்பவம்
ழூ இரண்டாம் வருட மாணவர்கள் 6 பேர் இடைநிறுத்தம்
-கனகரவி-
வவுனியா பூந்தோட்டத்தில் உள்ள தேசிய கல்வியியல் கல்லூரியில் இரண்டாம் வருட ஆசிரிய மாணவர்களால் முதலாம் வருட ஆசிரிய மாணவர்கள் பகிடி வதைக்குட்படுத்தப்பட்டது தொடர்பில் இரண்டாம் வருட ஆசிரிய மாணவர்கள் 6 பேர் இடைநிறுத்தப்பட்டார்கள்.
இதனையடுத்து இரண்டாம் வருட ஆசிரிய மாணவர்கள் பகிடி வதை செய்தார்களென்ற குற்றச்சாட்டை தம் மீது காரணமின்றி சுமத்தி தமது சக மாணவர்களை இடைநிறுத்தம் செய்துள்ளார்கள். ஆகவே.... அவர்களை கல்வியியல் கல்லூரிக்குள் உள்வர அனுமதிக்கக் கோரி 26 ஆம் திகதி சனிக்கிழமை மாலை ஐந்து மணி தொடக்கம் கவனயீர்ப்பு போராட்டமெனக் கூறி பிரதான வாயில் பகுதியில் சத்தியாக்கிரகமிருந்தனர். பின்னர் கல்வியியல் கல்லூரியின் ஆணையாளரின் விசாரணையினைத் தொடர்ந்து இரண்டாம் வருட ஆசிரிய மாணவர்களின் சத்தியாக்கிரகம் கைவிடப்பட்டது.
நிர்வாகம் அழைத்தும் திசைமுகப்படுத்தல் நிகழ்விற்கு இரண்டாம் வருட ஆசிரிய மாணவர்கள் வராததுஇ அறிவிக்காமல் விரிவுரைகளை புறக்கணித்து போராட்டமென்று பிரதான வாயிலில் சத்தியாக்கிரகமிருந்தது போன்றவை தம்மை அவமானப்படுத்திய செயலாகும். ஆகவே.... தகுந்த முறையில் இரண்டாமாண்டு ஆசிரிய மாணவர்கள் நடக்கவில்லை என்பதனால் மன்னிப்பு கேட்க வேண்டுமெனக் கூறி விரிவுரையாளர்கள் விரிவுரைகளை நடத்தாமல் உள்ளனர். இது 31 ஆம் திகதி வியாழக்கிழமை வரை தொடர்ந்தது.
ஆனால்.... சிங்கள மொழி மூல ஆசிரிய மாணவர்கள் இரண்டு பிரிவினருக்கும் விரிவுரைகள் நடந்தன. தமிழ்மொழி மூல முதலாமாண்டு ஆசிரிய மாணவர்களுக்கும் விரிவுரைகள் நடந்தன.
ஒரு உயர் கல்வி நிறுவனத்தில் இப்படியான பிரச்சினைகள் நடப்பதை எந்த மனதுடன் பார்த்துக் கொண்டிருப்பது? ஆகவே.... உண்மை நிலையினை அறிந்து கொள்ள பல தரப்பினருடனும் தொடர்பு கொண்டோம்.
இரண்டாமாண்டு மாணவர்கள் தாங்கள் பகிடிவதை செய்யவில்லை என வலியுறுத்திய போதும் ஒருமித்து அனைவராலும் உறுதியாக மறுக்க முடியவில்லை. சின்னச் சின்னச் சம்பவங்களென சிலவற்றை ஒத்துக் கொள்கின்றார்கள். அத்துடன் குறிப்பிட்ட சிலர்தான் முன்னின்று பகிடிவதை செய்துள்ளனர். நேர்மையாக இவர்களால் எதுவுமே செய்யவில்லை என மறுக்க முடியாது. ஆகவே தான் இப்பொழுது பகிடிவதை தொடர்பான விவகாரத்தை விட்டுவிட்டு நிர்வாகத்தில் பிழை கண்டுபிடித்துள்ளனர். நிர்வாகம் பிழையென நீங்கள் கூறுவதை முற்று முழுதாக தவிர்த்து நிர்வாகம் புனிதமானதென சொல்லுங்கள் என நான் சொல்லவில்லை. உங்களுடைய பிரச்சினை வெளிக்கொண்டு வரப்படும் போது நிர்வாகம் செய்தது பிழையென அடுக்கிக் கொண்டு போவதில் அர்த்தமில்லை.
இரண்டாமாண்டு மாணவர்களின் முக்கியமான குற்றச் சாட்டுகளாக உப பீடாதிபதி முன்னறிவித்தலின்றி பெண்களின் விடுதிக்குள் சென்றாரெனவும்இ மலக்குழி விவகாரத்தில் முன்னின்ற மாணவர்கள் பகிடிவதை செய்யாமலே செய்தார்களெனவும் நிர்வாகம் வெளியேற்றியதாகவும் தமிழ்ப் பிரிவு மாணவர்களுடன் கடுமையாக நடப்பது போல் சிங்களப் பிரிவு மாணவர்களுடன் நடப்பதில்லை எனவெல்லாம் சொன்னார்கள். ஆனால்... பெண்களின் விடுதிக்குள் உப பீடாதிபதி வந்தாரென பெண்கள் எவரும் சொல்லவில்லை.
இன்னுமொரு விடயமாக பதவி உயர்விற்காகவும்இ பதவியை தக்கவைத்துக் கொள்வதற்காகவுமே நிர்வாகம் காரணமின்றி தம்மில் நடவடிக்கை என்ற போர்வையில் பழிவாங்குவதாகவும் இரண்டாமாண்டு ஆசிரிய மாணவர்கள் சொன்னார்கள். ஆனால்இ தற்போது பகிடிவதை விவகாரமே முக்கியமானது. ஆனால்இ
வெளிப்படுத்த முடியாத வகையில் மிகவும் கீழ்த்தரமாக செயற்பட்டுள்ளனர். மூத்த விரிவுரையாளர் ஒருவரிடம் இது பற்றி பேசுகின்ற போதுஇ கல்வியியல் கல்லூரி தொடங்கிய காலத்திலும் இந்த முறைதான் .இது போன்ற செயல்கள் தான் நடந்துள்ளதெனக் கூறினார்.
பகிடி வதை செய்வோரே! கல்வி நிறுவனங்களில் பகிடிவதையையும் வேறு வகையான வன்செயல்களையும் தடைசெய்தல் தொடர்பான 1998 ஆம் ஆண்டின் 20 ஆம் இலக்கச் சட்டம் பற்றி முழுமையாக அறிந்து கொண்ட பின்னர் உங்களுடைய ஆட்டத்தை ஆடுங்கள்.
1998 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சட்டம்இ பிரிவு (2) இல் பகிடிவதை புரிகையில் கல்வி நிறுவனமொன்றின் மாணவருக்கு அல்லது பணியாட்தொகுதி உறுப்பினரொருவருக்கு பாலியல் தொந்தரவை அல்லது பாரதூரமான காயத்தினை ஏற்படுத்துகின்ற எவரேனும் இச் சட்டத்தின் கீழ் தவறொன்றுக்கு குற்றவாளியாதல் வேண்டும் என்பதுடன்இ நீதிவானொருவர் முன்னிலையில் சுருக்கமுறையிலான விளக்கத்தின் பின்னர்இ குற்றத் தீர்ப்பளிக்கப்படுவதன் மூலம் பத்து ஆண்டுகளை விஞ்சாதவொரு காலப்பகுதிக்கு மறியற்றண்டனைக்கு ஆளாதல் வேண்டும் என்பதுடன்இ எந்த ஆளுக்கெதிராக தவறு புரியப்பட்டதோ அந்த ஆளுக்கு விளைவிக்கப்பட்ட ஊறுகளுக்கு நீதி மன்றத்தால் தீர்மானிக்கப்பட்ட தொகையொன்றினை நட்ட ஈடாக செலுத்துமாறும் கட்டளையிடப்படலாம். இதனை மட்டுமல்ல அதன் முழு விபரங்களையும் கற்றுக் கொள்ளுங்கள்.
ஆகவே... எங்களை மதிக்காவிட்டால் நாங்கள் பகிடிவதை செய்வோமென எண்ணுவதைப் போன்ற முட்டாள் தனமான செயலெதுவும் இருக்க முடியாது. கல்வியியல் கல்லூரியில் ஆசிரிய மாணவர்களாக இருப்பவர்கள் உலகம் மதிக்கும் ஆசிரியத் தொழிலை சேவையாக செய்பவர்கள். அந்தச் சேவை செய்யும் ஆசிரிய மாணவர்கள் பகிடிவதையென மோசமாக நடக்கக் கூடாது.
இதனால் ஒட்டுமொத்த மாணவர்களும் பாதிப்படைய வேண்டிய நிலைமை ஏற்படும்
நன்றி தினக்குரல்
|
|
|
|