Yarl Forum
காதல்தோல்வி - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11)
+--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52)
+--- Thread: காதல்தோல்வி (/showthread.php?tid=4568)



காதல்தோல்வி - adimuttal - 04-04-2005

கண்களை விற்று ஓவியம் வாங்கினேன்
அவள் பார்பதற்காக,,
கால்களை விற்று காலடி வாங்கினேன்
அவள் நடப்பதற்காக,,
உடலை விற்று நிழலை வாங்கினேன்
அவள் இளைப்பாற,,

இதயம் விற்று அவள் காதல் வாங்கினேன்
அவளை மணக்க,,,
அவளோ என்காதல்விற்று தனக்கொரு
கணவன் வாங்கிக் கொண்டாள்
நானோ உதிரம் விற்று மதுவை வாங்கினேன்
அவளை மறக்க,,,,
,
அடிமுட்டாள் எழுதியது


- hari - 04-04-2005

Quote:நானோ உதிரம் விற்று மதுவை வாங்கினேன்
அவளை மறக்க,,,,
அடிமுட்டாள் என்று எழுத்தினது சரியாகத்தான் இருக்கு!
வாழ்த்துக்கள்!