| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 444 online users. » 0 Member(s) | 441 Guest(s) Applebot, Bing, Google
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,453
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,290
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,648
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,313
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,682
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,267
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,533
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,762
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,058
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,256
|
|
|
| பயங்கரவாதிகளிலும்விட அபாயமானவர்கள் |
|
Posted by: spyder12uk - 04-02-2005, 04:48 PM - Forum: அரசியல் / பொருளாதாரம்
- Replies (3)
|
 |
இஸ்ரேல் குறிப்புகளின் மீது அவசரக்குறிப்பு
ரோஸாவசந்தின் பலஸ்தீனியர் குறித்த பதிவிலே தங்கமணி சொல்லவந்ததை மிகவும் பதியக்கூடியவிதத்திலே சொல்லவேண்டுமென்று "ஹிட்லர் ஜெயிக்கவில்லையே என்று இப்போது நான் வருத்தப்படுகிறேன்" என்று சொல்லியிருக்கின்றார் என்று படுகிறது. ஆனால், வேடிக்கைக்குக்கூட இப்படியாகச் சொல்லியிருக்கவேண்டாம் என்பது என் கருத்து. ஹிட்லரின் செய்கை எந்த விதத்திலுமே நியாயப்படுத்த முடியாதது - ஹிட்லருக்குத் தோன்றிய காரணங்கள் எவையாகவும் இருக்கட்டும். நோம் ஸோம்ஸ்கி, ஸுஸன் ஸொடன்பேர்க், அமி குட்மென் போன்று பலஸ்தீனியர்களுக்காகக் குரல் கொடுக்கின்ற யூதர்கள் இருக்கின்றார்கள். ஓரிரு ஆண்டுக்கு முன்னாலே ஸலூன் வலைஞ்சிகையிலே எவ்வாறு நியூ யோர்க்கின் அதி பழமைவாத யூதர்கள் இஸ்ரேல் என்பதாக ஒரு யூத நாடமைந்திருப்பது குறித்து மத ரீதியான எதிர்ப்பினைக் கொண்டிருப்பதைச் சுட்டியிருந்தார்கள்.
மிகுதிப்படி, பலஸ்தீனியர்களின் துயரத்தினையும் நியாயத்தினையும் டோண்டு போன்றவர்களின் சிந்தனை வழி இயங்குகின்றவர்கள் என்றேனும் ஏற்றுக்கொள்வார்களென நான் நம்பவில்லை. சோவினை விமர்சனமின்றித் தாங்குகின்ற ஒருவரிடம் வேறு எதனைத் தங்கமணியும் ரோஸாவசந்தும் எதிர்பார்க்கின்றார்கள்? ஐதீகங்களையும் வரலாற்றினையும் தன் விருப்புவெறுப்புகளையும் கலந்து தும்புமுட்டாய்ப்பதிவுகள் செய்துகொண்டிருக்கின்றார். ஆனால், இவரின் பதிவுகள், இதே நிலைப்பாட்டினைக் கொண்டிருந்தும் வெளியே சொல்லச் சங்கடப்பட்டிருக்கும் பலருக்கு, ஒரு வெளிக்காட்டாக இருக்கின்றது என்பதை அவருக்குச் சொருகப்பட்ட நட்சத்திரங்களிலே காணலாம். :-) ஏதோ ஒரு வகையிலே, சமூகத்திலே தனக்கு உரித்தானதை, கிடைக்கவேண்டியதினைப் பிடுங்கிக்கொண்டு கலைக்கப்பட்டு, ஒடுக்குதலை உணராத ஒருவருக்கு, அதுபோன்ற நிலைமைகளை உணர்த்துதல் கடினம். பாரம்பரிய பூமியிருந்து அடித்து ஓட்டப்பட்டு, அகதி முகாமிலே அந்தரிக்கவிடப்பட்டவன் பற்றிய கதையை அடித்து ஒடுக்குவது ஆண்மையும் வீரமுமென்று நியாயப்படுத்துகின்ற "We kicked the shit out of them" சித்தப்போக்கினைக் கொண்டவர்களுக்கு உணரச்செய்யமுடியாது.
இஸ்ரேலுக்குக் கொண்டுவரப்பட்ட, யூதர்களிலும் எந்தவிதத்திலே அவர்கள் வந்த இடம் குறித்த பாகுபாடு நிலவுகின்றது என்பதை இஸ்ரவேலின் நடைமுறைவரலாற்றினைக் காண்கின்றவர்கள் உணரலாம். ஐரோப்பா, அமெரிக்காவிலிருந்து சென்றவர்கள் ரஷ்யா,எதியோப்பியாவிலே இருந்து வந்தவர்களையும் கூடவே காலாகாலமாக அரபுலகிலே வாழ்ந்திருக்கின்ற யூதர்களையும் இரண்டாம் மூன்றாமிடங்களிலே வைத்து நடத்துகின்றார்கள் என்பதை நீங்கள் ஆதாரங்களுடன் வலையிலே (குறிப்பாக, பிபிஸி இணையத்தளத்திலே தேடினீர்களென்றால், காண்பீர்கள்). வாசித்திருக்கலாம். (இதற்குள்ளே கிழக்கு இந்தியாவிலேயிருந்து இப்போது, இன்னொரு தொலைந்த இஸ்ரவேலிகுழுமத்தைனைக் கண்டெடுத்து அழைத்துப்போக இருக்கின்றார்கள் ;-)) எத்தனை முன்னைய சோவியத்திலிருந்து வந்த இரஷிய யூதர்கள் மீண்டும் ரஷ்யா சென்றிருக்கின்றார்கள் என்பதையும் அவர்கள் இஸ்ரேலிலே எவ்வகையான தொழில்களிலே ஈடுபடுத்தப்பட்டிருந்தார்களென்பதையும் பிபிஸியின் அண்மைய நிகழ்ச்சி ஒன்று தந்தது. இஸ்ரவேல் அமைச்சர்களிலே எத்தனை பேர், ஐரோப்பிய-அமெரிக்க யூத வழி வராதவர்களென்று பார்த்தால், அதிகமில்லை. இளம்பெண்களைப் பாலியற்றேவைகளுக்கான பண்டநிலையிலே பயன்படுத்தும் நாடுகளிலே இஸ்ரேல் இன்றைய காலகட்டத்திலே முக்கியமானதொன்று. அமெரிக்காவிலேயிருந்து அண்மையிலே சென்ற யூதக்குடியேறிகள், காலகாலமாக அகதி முகாம்களிலே வாழ நிர்ப்பந்திக்கப்பட்ட பலஸ்தீனியர்களுக்கு "இஃது எங்கள் ஆண்டவன் காட்டிய நாடு; நீங்கள் ஜோர்டானிலோ அல்லது வேறெங்கோ அரபு நாட்டிலோ போய்க் குடியேறுங்கள்" என்று சொன்ன அவலத்தை பிபிஎஸ்-பிபிஸியின் frontline நிகழ்ச்சியிலே இரண்டு ஆண்டுகளுக்கு முன்னாலே பார்க்க நேர்ந்தது. இன்னொரு நிகழ்ச்சியிலே, இஸ்ரேலிருந்து, 1967 இலே அல்ல, ஆனால், 1948 இலே விரட்டப்பட்டு, இன்னமும் அகதி முகாமிலே வாழும் ஒரு பாலஸ்தீனியக்கிழவி தனது அந்தக்காலவீட்டின் திறப்புக்கோர்வையினைச் செவ்வி காண்கின்றவருக்கு எடுத்துக்காட்டும் காட்சியை டில்லியிலே இருந்து கொண்டு சென்னையிலே தான் வாழ்ந்த - எந்த நேரமும் தான் வாழ வழியுள்ள- தன் வீடு குறித்து கனவினைத் தொடர்ந்து கண்ட டோண்டு பார்த்தால், புரிந்து கொள்ளமுடியுமென்று நம்புகிறேன். அப்படியாக தன் சொந்த வீட்டைப் பறிகொடுத்த ஒரு பாலஸ்தீனியர் பற்றி வாசித்தோ ஏதோ விதமான சமாந்திர அனுபவத்திலோ உணர வசதியில்லாதவர்களுக்கு, Costa-Gavras இன் Hanna K. இனைப் பார்க்க நான் பரிந்துரைக்கின்றேன்.
அரபு நாடுகளுக்கு எதிரான இஸ்ரேலின் வெற்றி, தனியே இஸ்ரேலினாலே மட்டும் பெற்றுக்கொள்ளப்பட்டதல்ல என்பதை வரலாற்றின் நிகழ்வுகளைத் தொகுத்துப் பார்க்கும் சின்னப்பிள்ளைக்குக்கூடப் புரிந்துகொள்ளமுடியும்; அமெரிக்காவின் இஸ்ரேலுக்கான குரலாக இருக்கின்றவர்கள், அரசியல், பொருளாதார, ஊடகபலம் வாய்ந்தவர்கள்; இங்கே பட்டியல் போட்டு அண்டாது. இஸ்ரேல் ட்ரான்ஸ்-ஜோர்டானிலே அமைவதிலே அமெரிக்காவிலேயிருந்த செல்வாக்கு மிக்க யூதர்களுக்கு எந்தளவு பங்கிருந்தது என்பதையும் ட்ரூமனுக்கு அமெரிக்க அரசிற்கான பண நெருக்கடியிலே எப்படியாக முடிவெடுத்தார் என்பதையும் அதிலே பிரிட்டனின் பங்கு குறித்தும் End of Empire புத்தகம் ஓரளவுக்கு நடுநிலையாகச் சொல்லியிருக்கின்றது. இது குறித்து வெளிப்படையாகவே அமெரிக்க யூத அழுத்தத்தினைச் சுட்டி, ஹொலிவுட் படம் ஒன்று 1980 களிலே வந்து பார்த்திருக்கின்றேன். இன்னும் உதாரணங்களுக்குச் சம்பவங்கள் இரண்டு; அமெரிக்காவின் அரசுள்ளேயே மேல்நிலையிலே இஸ்ரேலின் உளவுகாரர் இருப்பதாக சென்ற ஆண்டு ஒரு செய்தி வந்தது. அப்படியே அடங்கிவிட்டது; ஈரானின் அணுவாயுத உற்பத்தி, (ஈராக்கினதும் கூடவே) இஸ்ரேலுக்குக் குந்தகமாகிவிடும் என்பது வெளிப்படையாகவே, ஊடகங்களிலே அமெரிக்காவின் அரசுசார் அதிகாரிகள் சொல்லி வருவது; ஆனால், எவருமே இஸ்ரேலின் ஏற்கனவே இருக்கின்றதென்று சொல்லப்படும் அணு ஆயுதங்களையோ இஸ்ரேலின் அணு ஆயுதம் குறித்த செய்தியை வெளியிட்டாரென்று சொல்லப்பட்டு கைது செய்யப்பட்டு, விடுதலை செய்யப்பட்டு, மீண்டும் கைது செய்யப்பட்டிருக்கும் மொடேசாய் வனுனு பற்றியோ அமெரிக்க ஊடகங்களிலே பேசுவதில்லை.
பலஸ்தீனியர்களின் செயற்பாடுகளை முன்வைத்து அவர்களைப் பயங்கரவாதிகளென்று சொல்லிவிடுவது 'பயங்கரவாதப்புலி வருகுது! வருகுது" நாடுகளிலே மிகச்சுலபமான விடயம்; அரச பயங்கரவாதம், அரசு, சட்டம் என்பதன் போர்வைகளின்கீழே நியாயப்படுத்தப்பட்டுப்போகின்றது. இஸ்ரேலின் செய்கை குறித்தும் இதுவே "புலி வருகுது வருகுது!!" பயத்தின்கீழே நெறி பற்றி பேசுகின்றவர்களின் செய்கை இருக்கின்றது. இஸ்ரேலின் பலஸ்தீனியர் மீதான அரசபயங்கரவாதம் குறித்து எந்த விமர்சனமோ, குரியனின் சாதாரண மக்களுடனான விடுதிகளைக் குண்டுவைத்துத் தகர்த்தது குறித்து எந்த விமர்சனமோ, ஆஜெர்ண்டீனாவுக்குள்ளே புகுந்து அதன் பிரஜையை - அவன் நாட்ஸி குற்றவாளியாகத்தான் இருக்கட்டும்- மொஸாட் கடத்திவருவது குறித்து எந்த விமர்சனமோ இல்லாதவர்கள் இப்படியானவர்கள். இணையத்திலே சில ஆண்டுகளுக்கு முன்னாலே கண்டிருந்தேன். ஹிந்துத்துவா குழுவொன்று யாரோடு கூட்டுச்சேர்ந்து முஸ்லீம்களை ஒழிக்கவேண்டுமென்று சொல்கின்றார்களென்று பார்த்தீர்களானால், அதிவலதுசாரி யூதர்களின் ஹனேன்குழுவுடனாம். ;-)
இஸ்ரேலின் ஆதரவாளர்களாக இருப்பது ஒன்று; ஆனால், நிகழ்வுகளைத் திரிப்பதும் சொந்த விருப்புவெறுப்புகலந்த புனைவினை வரலாறென்று பதிவதும் நியாயமானதல்ல; பலஸ்தீனியர்களிலே எத்துணை குறைகளோ இருக்கலாம்; ஆனால், தமது பூமியைத் தமது என்று போராடுவது அவற்றிலே ஒன்றல்ல. குறைந்தபட்சம், யசீர் அரபாத்தின் அடிப்படை நோக்குக்கும் ஒஸாமா பின் லேடினின் அடிப்படைவாத நோக்குக்குமிடையே வித்தியாசம் பிரியாமல், இஸ்ரேலுக்காக ஆதரவு தெரிவிக்கின்றவர்களை எண்ணி வெறுமனே புரியாதவர்கள் என்று எண்ணிக்கொண்டு பரிதாபப்பட்டுவிட்டுமட்டுமே போய்விடமுடியாது; இவர்கள், தாம் சாடும் பயங்கரவாதிகளிலும்விட அபாயமானவர்கள்.
நன்றி:புலம்
|
|
|
| சாவகச்சேரியில் மாணவி மீது மோதியது சிங்களப் படையின் மோட்டார் |
|
Posted by: hari - 04-02-2005, 04:17 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (11)
|
 |
சாவகச்சேரியில் மாணவி மீது மோதியது சிங்களப் படையின் மோட்டார் சைக்கிள்!!
ஜ யாழிலிருந்து இ.கீரன் ஸ ஜ சனிக்கிழமை 02 ஏப்பிரல் 2005 18:25 ஈழம் ஸ
சிறீலங்காப் படையின் மோட்டார் சைக்கிள் மோதியதில் சாவகச்;சேரி தமிழ் மாணவி ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனால் படையினருக்கும் மக்களுக்கும் இடையில் அப்பகுதியில் கடுமையான முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.
படுகாயமடைந்துள்ள மாணவியின் பெயர் சுஜிதா விஜயக்குமார் என்று வைத்தியசாலை தகவல்கள் கூறுகின்றன.
இன்று மாலை 4.50 மணியளவில் சாவகச்;சேரி பிரதான வீதியில் மருத்துவமனைக்கும்ää சங்கத்தானைச்; சந்திக்கும் இடையில் பேரூந்தில் இருந்து இறங்கிய அம்மாணவி மீது வீதிய10டாக வந்த படையினரின் மோட்டார் சைக்கிள் மோதியது.
இதனால் அந்த மாணவி படுகாயம் அடைந்த நிலையில் சாவகச்;சேரி வைத்தியசாலைக்கு எடுத்துச்; செல்லப்பட்டார்.
இச்;சம்பவத்தை அடுத்து அப்பகுதியில் திரண்ட மக்கள் படையினரின் மோட்டார் சைக்கிளுக்கு தீயிட்டுள்ளனர்.
உடனடியாக அங்கு குவிக்கப்பட்ட சிறீலங்காப் படையினர் மக்களை அச்;சுறுத்திவிட்டு மோட்டார் சைக்கிளை எரிந்த நிலையில் மீட்டுச்; சென்றனர்.
மக்கள் மீதான தாக்குதலை நடத்துகிற வகையிலான இந்த படை குவிப்பால் அப்பகுதியில் அச்;சநிலை ஏற்பட்டுள்ளது.
இதே பகுதியில் அண்மையில் சிறீலங்காப் படை வாகனம் மோதி ஒருவர் படுகாயம் அடைந்ததை அடுத்து அப்பகுதியில் மக்களுக்கும் படையினருக்கும் இடையில் மோதல் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.
நன்றி புதினம்
|
|
|
| கரேஜஸ் கப்பல்: சீன உதவிபெற அமெ. ஆட்சேபம் |
|
Posted by: spyder12uk - 04-02-2005, 03:34 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (1)
|
 |
தான் வழங்கிய போர்க் கப்பல் தொடர்பாக சீனாவின் உதவியை இலங்கை நாடுவதற்கு அமெரிக்கா ஆட்சேபனை தெரிவித்துள்ளது. இலங்கைக் கடற்படையினருக்கு அமெரிக் காவினால் வழங்கப்பட்ட கரேஜஸ் போர்க்கப் பலுக்கு சுடுகலன்களைப் பொருத்துதல், கப்பலைப் பராமரித்தல் மற்றும் பழுதுபார்த்தல் என்பவற்றுக்காக சீன அரசுடன் இலங்கைக் கடற்படை யினர் ஒப்பந்தம் செய்துகொள்ளவுள்ளனர்இந்த ஒப்பந்தத்திற்கே அமெரிக்கா கடுமையான ஆட் சேபனையைத் தெரிவித்திருப்பதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.
ஆயுத விவகாரம் தொடர்பில் சீனா குறித்து அமெரிக்கா கொண்டிருக்கும் கொள்கைரீதியான தீர்மானமே இதற்குக் காரணமெனக் கூறப்படு கிறது.
கரேஜஸ் கப்பல் தொடர்பில் மேற்கொள்ளப் படும் எந்தவொரு நடவடிக்கைக்கும் அமெ ரிக்காவிடமிருந்தே ஆலோசனைகளும், ஒப்பந் தங்களும் பெறப்படவேண்டுமென்று அமெரிக்கா வலியுறுத்தியிருப்பதாகவும் தெரிவிக்கப்படு கின்றது.
ஏற்கனவே இந்தக் கப்பலில் பணியாற்றுவ தற்காக இலங்கைக் கடற்படைக் குழுவொன்றுக்கு அமெரிக்கா பயிற்சியளித்துள்ளமை குறிப்பிடத் தக்கது.
Jaffna Uthayan
|
|
|
| How can i delete the MSN Messenger privacy list |
|
Posted by: manmadhan - 04-02-2005, 12:56 PM - Forum: கணினி
- No Replies
|
 |
நண்பர்களே....
எப்படி MSN MESSENGER PRIVACY LIST DELETE பண்ணுறது என்று யாருக்காவது தெரியுமா? நானும் முடிந்த வரை முயற்சித்து விட்டேன்... முடிய வில்லை net இலும் தேடிப்பார்த்தேன்.... தகவல் ஏதும் கிடைக்கவில்லை........ யாருக்காவது தெரிந்தால் அறிய தாருங்கள்........ :?:
|
|
|
| வெனிலா ஐ!;கிரீம் செய்வது எப்படி |
|
Posted by: sompery - 04-02-2005, 12:41 PM - Forum: சமையல்
- Replies (3)
|
 |
தெவையானவை
பால் - 1 லிட்டர்
க்ரீம் - 200 கிராம்
சர்க்கரை 250 கிராம்
டிவனிலா எடிசன்!; - 1 ஷழ
டிகாக்கொ - 1 ழு!;ப{ன்
டிசய்முறை- பாலை நன்றாகக் காய்ச்சிக் குளிர வைக்க வெண்டும். இத்துடன் சர்க்கரை யையஜம் செர்க்க வெண்டும். க்ரீமைக் கடைந்து பாலுடன் செர்க்க வெண்டும். டிகாக்கொவையஜம்ஃ டிவனிலா எடிசன்சை யஜம் செர்த்து நன்றாகக் கடைந்து தட்ழல் விட்டுப் ப்ரிகூ;கூpல் வைத்து எடுத்து ஐ!;க்ரீம் ஆனவஜடன் பரிமாற வெண்டும்.
வாiர்ப்பர் ஐ!;கிரீம்
தெவையானவை
நன்றாக பபுத்த வாiர்ப்பர்ம் - 8
பால் - 200 கிராம்
சர்க்கரை - 100 கிராம்
பால்பவஜடர் - 100 கிராம்
எலுமிச்சம்பர்ம் - அரை ஷழ
டிசய்முறை
பால் பவஜடரில் சிறிது நீர் செர்த்துக் கலக்கிக் டிகாண்டு காய்ச்சி ஆற வைத்த பாலுடன் செர்த் துக் டிகாள்ளவெண்டும். இத்துடன் சர்க்கரையையஜம் செர்த் துக் கலக்கிக் டிகாள்ளவெண்டும். வாiர்ப்பர்த்தை மசித்து வுர்hக்கி எலுமிச்சம்பர்ச் சாற்றையஜம் செர்த்து டிகாண்டு பாலுடன் கலக்கிக் டிகாள்ளவெண்டும். இப்பர்ப் பால் கலவையை குளிர் சாதனப் டிபட்ழயில் வைத்து ஐ!;கிரீமாக உறைய விட்டு மெலெ திராட்சை வைத்து பரிமாறலாம்.
|
|
|
| காரட் சம்பல்/சலட் |
|
Posted by: தூயா - 04-02-2005, 11:21 AM - Forum: சமையல்
- Replies (21)
|
 |
வணக்கம்,
மீண்டும் ஒரு "யாழ் சமையல் கள நிகழ்ச்சியில்" உங்களை சந்திப்பதையிட்டு மிக்க மகிழ்ச்சி.
அதிகம் பேசாமல், அதிகம் சாப்பிடுவதற்கு என்ன செய்ய வேண்டுமோ அதை கவனிப்போம்.
இன்றைய சமையல் "காரட் சம்பல்/சலட்"
தேவையானவை:
கரட் - 1
தக்காளி - 1 [சின்னது,தேசிக்கய் அளவு]
மிளகாய் - 1
வெங்காயம் 1/3
உப்பு
மிளகு தூள்
பால் - 1 தே.க
1. காரட்டின் தோலை சீவி, துறுவவும்.
2. தக்காளிநை சிறு துண்டுகளாக நறுக்கவும்.
3. வெங்காயம், மிளகாயையும் சிறிதாக அரியவும்.
4. அனைத்தையும் ஒன்றாக போட்டு, உப்பு, மிளகு தூள் சேர்த்து ஒரு அகப்பையால் நன்றாக ஒன்றுடன் ஒன்று சேருமாறு பிரட்டவும்.
இதோ உங்கள் காரட் சம்பல் ரெடி !!!!!
போன நிகழ்ச்சியை உண்மையில் பயன்படுத்தியமையால் எங்கள் அபிமான நேயர் கவிதனுக்கு இந்த சம்பலை அனுப்புகிறோம்.
விமர்சனங்களை அனுப்ப வேன்டிய முகவரி :Click HERE!!
இன்னுமோர் நிகழ்ச்சியில் உங்களை சந்திக்கும் வரை "பபா" தூயா.
நன்றி.
வணக்கம்.
|
|
|
| தமிழீழம் தமிழகம் உட்பட உலகமெங்கும் |
|
Posted by: eelapirean - 04-02-2005, 05:29 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (1)
|
 |
தமிழீழம் தமிழகம் உட்பட உலகமெங்கும் பரந்து வாழும் தாயக உறவுகளே!
ஈழநாதம் பத்திரிகையின் மட்டக்களப்பு பதிப்பின் மூலமாக உங்களைச் சந்திப்பதில் பெரும் மகிழ்ச்சியடைகின்றோம்.
அதிகாலை வேளை தாயகத்தில் வெளியாகும் பத்திரிகையினை அதன் மூலமாக தமிழீழத் தாயகத்தின் நிலைவரத்தினைத் தெரிந்து கொள்வதற்கு ஈழநாதத்தின் இந்த இணையப்பதிப்பு பெரிதும் உதவும் என நம்புகின்றோம்.
தேசியம்ää சுயநிர்ணய உரிமைää மரபு வழித்தாயகம் என்பவற்றை பற்றுறுதியாகக் கொண்டுää மாவீரர்களின் தியாகங்களின் வழி நடக்கும் எமது போராட்டத்தின் தலைமையினை மனங்கொண்டு நாளும் தமிழீழத் தாயகத்தில் இருந்து வெளியாகும் ஈழநாத்தின் சகோதரப் பதிப்பான மட்டக்களப்பு பதிப்பை வெளிக் கொண்டு வருவதில் எதிர்நோக்கும் நெருக்கடிகள் அதிகம். சிறிலங்கா இராணுவத்தின் மறைமுக யுத்தம் ஒன்றை எதிர்கொண்டபடி நாளாந்த வாழ்வைக் கொண்டு செல்லும் மக்களோடு ஒன்றித்திருக்கும் நாளிதழாக ஈழநாதம் வெளிவருகின்றது.
இதனை தொடர்ந்து வெளியிட உதவும் தமிழீழத் தாயகத்தின் அனைத்து நெஞ்சங்களுக்கும் எமது நன்றிகள். முதலாம் ஆண்டில் மட்டக்களப்பு பதிப்பு கால் வைக்கும் தருணத்தில் இணையத்திலும் பதி;ப்பிக்கப்படத் தொடங்குவது மகிழ்ச்சியளிக்கின்றது.
புலம்பெயர்ந்து வாழும் உறவுகள்ää படைப்பாளர்கள்ää ஆய்வாளர்கள் விமர்சகர்கள் போன்றோரிடம் இருந்து ஈழநாதத்துக்கான ஆக்கங்களை எதிர்பார்க்கின்றோம். அத்துடன் கருத்துக்களையும் விமர்சனங்களையும்; எதிர்பார்த்து நிற்கின்றோம். தேச விடுதலை உணர்வில் நாம் கலந்து எமது அறிவுää ஆற்றல்ää மனம் என்பவற்றை வளர்க்கும் படியான எழுத்துக்கள் நமது பத்திரிகைக்கு வலுச்சேர்க்கும்.
நாளும் இணையம் வழியாகவும் உங்களோடு இணைவோம்.
நன்றி
|
|
|
| தயா ஜிப்ரான் கவிதைகள் பதின்மூன்று - தயா ஜிப்ரான்- |
|
Posted by: Thaya Jibbrahn - 04-02-2005, 02:18 AM - Forum: கவிதை/பாடல்
- Replies (2)
|
 |
நான்
நான்
இன்னமும்
உயிரோடு தானிருக்கிறேன்
உந்தன்
உயிரான நட்பை
இழந்து விட்ட
இற்றை நாட் பொழுதுகளிலும்.
-------------------------------------------
உன்னைக் கண்டறிந்து
மகிழ்வதற்கு
காரணங்கள் ஏதுமில்லைத்தான்
ஆனாலும்
உனக்கான..
உனக்கான எந்தன் கவிதைகளில்
ஒன்றையேனும்
ஒன்றாக அமர்ந்து
படித்துப் பார்க்க வேண்டும்.
-------------------------------------------
கவிதைகளை
வரைய வைத்தாய் - நட்பு
கவிதைககளை
எழுத வைத்தாய் - காதல்
கவிதைகளை
கிறுக்குகின்றேன் - குடும்பம்
-------------------------------------------
காத்திருக்க வைத்து
வருவது காதலென்றால் ...
காத்திருந்து காத்திருந்து
களைத்துப் போனதை
என்ன சொல்ல????
-------------------------------------------
சிநேகிதியே
உன்னை பிரிந்ததை விட
அதிகம்
அதிகமாய் வலிக்கின்றது....
நீ
சொல்லாமல் பிரிந்தது.
-------------------------------------------
நீ
நீ நினைத்துக் கொண்டுதான்
இருப்பாயா?
ஆனாலும்
நான்
தும்மிக் கொள்ளும் போதெல்லாம்
உந்தன்
உந்தன் நினைவுவந்து
சிக்கிக் கொள்கிறது
மழைப் பொழுதின்
மண்வாசம் போல.
-------------------------------------------
ஒரு
நல்ல கவிதை எழுதி
பகிர்வதற்கு கூட
எங்கள்
நட்பின் பொழுதுகள்
அவகாசமின்றி
முடிந்து போயின.
-------------------------------------------
நம் நட்பை பறைசாற்றும்
அந்த
மழைப் பொழுதுகளை
மறக்கடிக்க...
பாவமிந்த
சின்னஞ்சிறு துளிகளுக்கு
ஏது வலிமை.??
-------------------------------------------
விளம்பரங்கள்
என்று
வானொலிகளை அலட்சியம் செய்யாதே!
எந்த வேளையிலும்
ஒலிபரப்பாகலாம்
உனக்கான
எந்தன் கவிதை.
-------------------------------------------
எத்தனை பனித்துளிகளை
வானம்
எனக்குத் தந்தது
அத்தனையையும்
நீயே
அள்ளிக் கொண்டாய்
கதிரவனே.
-------------------------------------------
உன் பெயரை
உரத்து
கத்திப் பார்க்கவேனும்
எனக்கொரு
சுதந்திரப் பொழுது
வேணும்.
-------------------------------------------
நேசிப்பில் குறைவில்லாமல்
எந்த
யாசிப்புகளும் இல்லாமல்
சேர்திருக்கவும்
பிரிந்து போகவும்
நம்
நட்புக்கு மட்டுமே முடிந்ததடி.!
-------------------------------------------
இந்த
பௌதீகத்தை உணர்ந்து கொள்
நீ
மலையுச்சியிலும்
நானோ
மலையடிவாரத்திலுமாய்
அதனால்தான்
நம் நிழல்கள்
நாள் தோறும்
சந்தித்துக் கொள்கின்றன.
நிஜங்கள்
நெருங்க நெருங்க
நிழல்களின் சங்கீதம்
செத்துவிடுகின்றது.
-------------------------------------------
- தயா ஜிப்ரான்-
|
|
|
|